Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்....!*
*மௌனம் 21(i)*
*சில வருடங்களுக்கு முன்...*
தோழனின் கூற்றை வெறும் புன்னகையுடன் தான் ஏற்றுக் கொண்டான்,
ஆடவன்.
கை வசம் சிக்கி விட்டானே.
இல்லையென்றால்,
இன்னும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் மறைத்து வைத்திடும் ரகமே அவன்.
"லவ் பண்றியா தேவா..?" நக்கலாய் இழுவை மிகுதியாய் கேட்டான்,பாலா.
தோழர்கள் இருவரும் கட்டிலில் அமர்ந்திருக்க ஒரு மூலையில் ஒற்றைக் காலை நீட்டி மறுகாலை மடக்கி அதில் கரத்தை ஊன்றிய படி சாய்ந்திருந்த ஆடவனின் இதழ்களில் ஏனோ அந்த கேள்வியில் புன்னகை உதித்தது.
சர்வ நிச்சயமான பதில் "ஆம்.." என்பதே.
அதை சொன்னால் அது தேவா இல்லையென்று ஆகிவிடாதா..?
தலையை கொஞ்சம் தாழ்த்தி இதழ்களில் உறைந்த அதே புன்னகையுடன் தலையாட்டி சிரித்தவன் தெரியாது என்பது போல் உதடு பிதுக்க அப்படியே எட்டி அவனின் கழுத்தைப் பிடித்திருந்தான்,
கிஷோர்.
அவன் செயலில் ஆடவனின் இதழ்களில் இருந்த புன்னகை மேலும் விரிந்தது.
"இப்பவாச்சும் ஒத்துக்குரானா பாரேன்..ரொம்பத் தான் அழுத்தம்.." கடுப்புடன் கையை எடுக்க அப்படியே தன் கரங்களை தூக்கி சோம்பல் முறித்தான்,
தேவா.
மெல்ல தொண்டையைக் கணைத்து குரலைச் செரும தோழர்களின் பார்வை எதிர்ப்பார்ப்புடன் அவன் மீது தாவியது.
அதைக் கண்டவனோ வேண்டுமென்றே எதுவும் பேசாது ஆகிட சப்பென்று ஆனது,
இருவருக்கும்.
நக்கலாய் ஒரு பார்வை பார்த்து விட்டு அவனோ அறையில் இருந்து வெளியேறிட தலையில் அப்படியே முட்டிக் கொள்ளும் எண்ணம் தான் தோழர்களுக்கு.
மறுநாள் கல்லூரியில் வழமையாய் தான் அமரும் இடத்தில் அமர்ந்திருந்த தேவாவின் தோற்பட்டையை சுரண்டிய தோழனை முறைத்து பார்த்தன,
அவன் விழிகள்.
"மச்சான்...நாளக்கி அந்த பொண்ணு கிட்ட லவ்வ சொல்லிரேன்.." என்றிட உறுத்து விழித்தான்,தோழனை.
அவர்கள் மூவர் மட்டுமே அந்த மரத்தடியில் இருந்திட
கிஷோருக்கும் ஆடவனின் கோபம் கொஞ்சம் வியப்பைத் தந்தது.
"லவ்ல சொல்லனுமா..?"
"ஆமா..அத தான சொல்றோம்.." என்றனர்,இருவரும் ஒருசேர.
"அப்போ லவ் பண்றியாடா..?" கண்கள் மின்ன கேட்டான் பாலா.
இதற்கு மேலும் அவர்களை திண்டாட விட அவனுக்கும் மனம் வரவில்லை,போலும்.
ஆம் என்பதாய் விழிகளை மூடித் திறக்க சட்டென பாய்ந்து கட்டிக் கொண்டனர்,
தோழர்கள்.
அவன் பதில் சொல்வான் என்று அவர்கள் எதிர்பாராதிருக்க அவர்கள் இப்படி கட்டிக் கொள்வார்கள் என்று அவனுமே எதிர்பார்க்கவில்லை.
"டேய்..டேய் விடுங்கடா.."
"ஹப்பாடா..எப்டியோ லவ்வ ஒத்துகிட்டான்.." பெருமூச்சுடன் சொன்ன படி இருவரும் விலகி அமர ஆடவனின் கடையிதழில் கீற்றுப் புன்னகையொன்று.
"சரி...எப்படா லவ் சொல்லப் போற.."
"இப்போவே சொல்லுற ஐடியா இல்ல.."
"எதேஏஏஏஏஏஏஏஏஏ.."
"ஷாக்க கொறங்கடா ரெண்டு பேரும்..ஒரு மாதிரி ரியாக்ஷன் கொடுத்துகிட்டு.."
"பின்ன..என்ன டா சொல்ற..?"
"ஆமா..நமக்கு இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் முடிய போகுது..ஆனா அவங்க அப்டியா..படிக்க வேணா..படிக்கிற பொண்ணு மனச கெடுக்க சொல்றியா..?"
"..........."
"என்ன தான் பார்ட் டைம் வேல பாத்தாலும் அதுல வர்ர காசு என்ன பாத்துக்கவே பத்த மாட்டேங்குது..பர்ஸ்ட் லைப் நா நல்லதொரு எடத்துக்கு வரனும்..அவங்கப்பா கிட்ட போய் பொண்ணு கேக்கற தகுதிய உருவாக்கிக்கனும்..அதுக்கப்றம் தான் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணனும்.."
"அப்போ லவ் பண்ணத சொல்ல மாட்டியா..?"
"அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் சொல்லிக்கலாம்..தேவாக்கு லவ்னாலே அலர்ஜி..கட்ர புருஷன தான் லவ் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நிக்கற பொண்ணு..அவங்க கிட்ட எப்டி போய் லவ்வ சொல்றது.."
"இதெல்லாம் உனக்கு எப்டி டா தெரியும்..?"
"அதெல்லாம் எனக்கு தெரியும்..நா தான் அவங்க ப்ரெண்ட் கிட்ட கேட்டுட்டேனே எல்லாத்தயும்..அது மட்டுல்ல..தேவா என்ன கண்டாலே பத்தடி தள்ளி நிக்கற ஆளு..இதுல லவ் சொல்றது மட்டும் தான் கொறச்சல்.."
"சரி நீ உன்னோட லவ்வ.. லாகர்ல பூட்டி வச்சிக்க..இதுவே சான்ஸ்னு அந்த பொண்ணுக்கு வேற யார் மேலயாவது காதல் வந்துச்சுன்னா என்னடா பண்ணுவ..?"கொஞ்சம் கோபம் தொனித்தது,பாலாவின் குரலில்.
அவன் கேள்வியில் நியாயம் இருந்ததால் தான் ஆடவனும் அமைதியாக இருந்ததே.
இல்லையென்றால் பாலாவுக்கு அடித்தே விட்டிருப்பான் என்பதில் ஐயமில்லை.
"தேவாவப் பத்தி எனக்கு தெரியும்..அவங்க வீட்ல பாக்குற மாப்ள ய ஓகே சொல்லுவாங்களே தவிர..தேவாக்கு லவ் எல்லாம் வராது..எனக்கு அது கண்டிப்பா தெரியும்..
அவங்க மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல..அதனால டோன்ட் வொரி மச்சான்..நல்ல எடத்துக்கு வர்ரேன்..அப்றம் போய் பொண்ணு கேக்கறேன்.."
"சரி டா..உனக்கு பிடிச்ச வேலய நீ தேடிகிட்டு வரும் போது ஒரு அஞ்சு வருஷம் ஆயிராது..
அதுக்குள்ள அவங்க வீட்ல மாப்ள பாக்க மாட்டாங்களா..?"
"அத யோசிக்காம விடுவேனா..அவங்க வீட்லே ஆள் செட் பண்ணி தான் இருக்கு..தேவாக்கு மாப்ள பாக்குறங்கன்னா அடுத்த நிமிஷமே எனக்கு தகவல் கெடச்சிடும்.."
"யார்ரா அது..?"
"தேவாவோட ப்ரெண்ட்.."
"யாரு அந்த உன் அத்தப்பொண்ணு..அதான் ஆர்த்தி பொண்ணா..?"என்றிட ஆமோதிப்பாய் தலையசைத்தான்,
ஆடவன்.
சிரித்துக் கொண்டே தோழனின் தோளைத் தட்டினான் கிஷோர்.
அவனிடம் இருந்து இப்படி ஒரு தெளிவை எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பதை அப்படியே பறை சாற்றி நின்றன,
அவன் விழிகள்.
ஏதோ ஓர் கூடுதல் அழகு அவன் காதலில்.
முழுக்க முழுக்க அவளைப் பற்றி மட்டுமே யோசித்து மருகும் அந்த மௌனமான காதல் ஏனோ பேரழகாய்த் தான் தோன்றிற்று,
தோழர்களுக்கு.
"தேவா ரொம்ப லக்கீ மாப்ள.." உள்ளிருந்து தான் சொன்னான், பாலா.
"தேவா இல்ல தர்ஷினி.." அழுத்தமாய் அவன் சொல்லிட "பார்ரா.." எனும் படி ஒற்றைப் பார்வை தோழர்களிடம் இருந்து.
"ஆனாலும் அது நெஜந்தான்..இந்த தேவா ரொம்ப லக்கீ தான்.." இதழ்களில் மொழிந்திட விழிகளில் அப்படி ஒரு காதல்.
"அந்த சரண்யா பொண்ணு பேச்ச நம்பி மாம் வீட்ட விட்டு துரத்துரப்போ என்னடா வாழ்க்கனு தோணுச்சு..நமக்குன்னு யாருமே இல்லாம அநாத மாதிரி தோணுச்சு..அதுவும் டாட் கைய கட்டி வேடிக்க பாத்தப்போ மொத்தமா ஒடஞ்சே போய்ட்டேன்.."
"அதுக்கப்றம் தான் அங்க வீட்ல வேல செய்ய இருந்த பாட்டியோட இந்த வீட்டுக்கு வந்தேன்..ரொம்பவே மாறிப் போயிருந்தேன் அந்த நேரம்..என்ன தான் என்னோட தேவய நானே பாத்துகிட்டாலும் மனசு முழுக்க ஒரே வெறும யா இருக்கும்..வாழ்க்கயே வெறுத்த மாதிரி இருந்துச்சு..அடிக்கடி சொல்லுவாங்கல ப்ரே பண்ணுங்க மிராகில் நடக்கும்னு.."
"என்ன அதுல நம்பிக்கயே இல்ல..காதல் கல்யாணம் எதுவும் இல்லாம என் வாழ்க்க அப்டியே போய்ரும்னு நெனச்சேன்..எனக்கு அந்தளவு பக்குவம் இருக்குன்னு தோணுச்சு அந்த டைம்.." கூறிக் கொண்டே எழுந்து நின்று இடுப்பில் கையைக் குற்றிக் கொண்டான்,அவன்.
"ஆனா..இப்போ டோட்டலா மாறி நிக்கறேன்..ஆன என் வாழ்க்கை நடந்தது மொத்தமும் மிராகில் மாதிரி இருக்கு..எங்கயோ இருந்த என்ன ஒரு ப்ராளத்த உண்டாக்கி இங்க வர வச்சு..அதுவும் அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே வர வச்சு.."
"இங்க வீடு பாக்குறதுல கூட பெரிய ப்ராப்ளம் வந்துச்சு..நானும் பாட்டியும் இங்க வரும் போது வேற வீடு தான் பாத்திருந்தோம்..கடைசி நிமிஷத்துல அங்க வீடு தர முடியாதுன்னு மறுத்துட்டாங்க..அதுக்கு கூட குடுத்து வக்கலியேன்னு ரொம்ப கோவத்தோட தான் இங்க வந்தேன்..ஆனா பாரேன் கடவுள் எவ்ளோ அழகா கைட் பண்ணி இருக்காருனு.."
"அப்டியே இங்க வந்து யாரோ ஒரு பொண்ணு எழுதுன லெட்டர அவங்க எழுதுனது நெனச்சு அப்டியே கவனிச்சு என்னென்னமோ ஆச்சு.."
"இப்போ யோசிக்கும் போது அதெல்லாம் அப்டியே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு..எங்கயோ இருந்தவன இங்க வர வச்சு மொத்த வாழ்க்கயும் இங்கன்னு ஆக்கிட்டார்ல கடவுள்..மேஜிக் மாதிரி இருக்கு இதெல்லாம்..லைப்ல அப்பப்போ நடக்குறத பாத்தா என்னடான்னு இருக்கும்..ஆனா அத கோர்த்து பாக்கும் போது தான் புரியும் அதெல்லாம் மேஜிக்னு.." இரசனை மிகு குரலில் சொல்லிக் கொண்டிருந்தவனௌ இமைக்க மறந்து தான் பார்த்துக் கொண்டிருந்தனர்,
தோழர்கள்.
தோழனின் மாற்றம் வெகுவாகப் பிடித்துப் போனது.
இப்படியெல்லாம் மனம் திறந்து பேசும் ரகமில்லை, அவன்.
ஏனோ இன்று அதிக உணர்ச்சி வசப்பட்டிருப்பான் என்கின்ற எண்ணம் தான் இருவருள்ளும்.
குறுக்கே எதுவும் பேசிடவில்லை.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்ததன் காரணம் வெகு நாட்களுக்கு பின் மனம் திறந்திருப்பதாலேயே.
கொஞ்ச நேரம் மௌனத்தை இறுகப் பற்றியவனின் மௌனம் கலையும் முன் கேட்டது,
பாதச் சுவடுகளின் சத்தம்.
எதிர்பார்ப்புடன் திரும்பியவனின் எதிர்ப்பார்ப்பு பொய்யாகிடவில்லை.
அந்த மரத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள்,
தர்ஷினி.
அவனை சந்திக்கத் தான்.அவனிடம் தகவல் சொல்லச் சொல்லி வம்படியாய் அவளை மட்டுமல்லவா அனுப்பி வைத்திருந்தனர்,
இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.
அவளோ அவனைப் பார்ப்பதும் பின் தயங்குவதுமாய் நடந்து வர பாலாவும் கிஷோரும் கொஞ்சம் அப்பால் சென்றனர்.
அவளோ அவனருகே வந்து ஒரு எட்டடி தூரத்தில் நிற்க ஆடவனுக்கு துடிக்கும் இதழ்களை அடக்கத் தான் பெரும்பாடு பட வேண்டி இருந்தது.
அதிலும் அவள் இன்னும் ஓரடி முன்னே வைத்திருந்தாலும் அவனே தடுத்தி நிறுத்தி இருப்பானே.
எகிறும் இதயத் துடிப்புக்கு பயந்து.
"சீனியர்.."அவள் கொஞ்சம் சத்தமாக அழைத்து அவனை நேரப் பார்வை பார்க்க அந்த விழிகளில் தெரிந்த பயமும் தயக்கமும் அவனை ஏதோ செய்தன.
பட்டென பார்வையைத் திருப்பி யவனின் விரல்களோ எப்போதும் போல் இடது புற நெஞ்சை நீவ தோழனின் நடவடிக்கைகளை பார்த்த பாலாவுக்கு தான் சிரிப்பு பீறிட்டது.
எங்கே தன் மீதான கோபத்தில் தான் விழிகளை திருப்புகின்றானோ என்றெண்ணி மீண்டும் ஒரு முறை அழைத்திட தன் உணர்வுகளை மறைத்தவாறு நிமிர்ந்து அவள் விழிகளை தன் கூரிய விழிகளால் உரசினான்,அவன்.
அவளுக்கு சட்டென பொறி தட்டியது.
"அந்த தேவாவோட கண்ணும் இப்டி தான இருக்கும்.." சொல்ல வந்த விடயத்தை மறந்து அவன் விழிகளை ஆராய்ந்திட ஆடவனுக்குத் தான் தன் விழிகளை ஸ்பரிசிக்கும் அவள் விழிகளில் இருந்து பார்வையைத் திருப்புவது பெரும் பாடாய் இருந்தது.
ஒருவாறு சுதாரித்து அவன் தொண்டையைச் செருமவே தான் செய்த காரியம் உரைக்க பட்டென மீண்டவளோ அவனைப் பார்த்து திருதிருவென விழிக்க ஐயோடா என்றிருந்தது,அவனுக்கு.
"இப்போ இந்த முட்டக்கண்ணால முழிச்சு பாக்கனுமா..?"தனக்குள் பேசியவனோ இன்னுமே அவள் மௌனம் காத்தால் தன் நிலை தான் தடுமாறிப் போகும் என்று உணராது இல்லையே.
"என்ன விஷயம்..?" என்று அவன் எப்போதும் அழுத்தமான குரலில் கேட்டிட அவன் கேட்ட விதமே இவளுக்குள் பயத்தை ஏற்றியது.
கைகள் நடுங்க தன் பையில் இருந்த இரண்டு கவரை எடுத்து அதை பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டு அவனிடம் ஒன்றை நீட்ட புருவம் சுருக்கி பார்த்தான்,
அவன்.
அவள் கரங்களோ நடுங்கிக் கொண்டிருக்க முகமோ வெளிறிப் போயிருந்தது,
பயத்தின் உச்சயில்.
அவனின் முன் மட்டும் தன் மொத்த தைரியமும் ஆட்டம் காணும் மாயம் என்னவென்று இதுவரை அவளுக்கு புரிந்ததே இல்லை.
"என்ன இது..என்விலாப்..?" அதே போல் தான் கேட்டான்.
அவளுக்குத் தான் எகிறுவது போல் தான் இருந்தது.
"லவ் லெட்டர்.." சத்தமாய் துவங்கி பாதியிலேயே நின்று போனது,அவள் குரல்.
"வாட்ட்ட்ட்..லவ் லெட்டரா..?"அவனும் திகைத்து கேட்டிடவே தன் மடத்தனம் புரிந்தது அவளுக்கு.
"நா..நா இல்ல..நா இல்ல..சத்தியமா நா இல்ல..அங்க சீனியர் அக்கா தான் கொடுத்து விட்டாங்க..சத்தியமா என்னோடது கெடயாது..வேணுன்னா எழுத்த பாருங்க..சத்தியமா நா இல்ல.." அவள் தன்பாட்டில் உளற கரம் நீட்டி அவளின் பேச்சை தடுத்திருந்தான்,
ஆடவன்.
"யார் கொடுத்தா..?" அவன் விழிகளில் கோபக்கனல்.
அதைப் பார்த்தவளோ தன்னாலே எச்சிலைக் கூட்டி விழுங்கி பேய் முழி முழிக்க சத்தியமாய் அவள் முகம் வெளிப்படுத்திய பாவனையில் தொலைந்து தான் போனான்,அவனும்.
"அது..அது..அவங்..வங்க பேர்..சரி..சரியா தெரியல..தீ..தீபான்னு நெனக்கிறேன்.." என்றிட இது யார் வேலை என்று புரியாமல் போய் விடுமா அவனுக்கு.
கடுகடுவென்று ஆகிற்று,அவன் வதனம்.
இன்னுமே அவள் நீட்டிக் கொண்டிருந்ததை அவன் பற்றாதிருக்க அவளுக்குத் தான் ஐயோவென்றானது.
"சரி தா அந்த கவர.." என்று அவன் வாங்க முற்படும் போதே தன் பையில் இருந்து புத்தகமொன்று எடுத்து அதன் மீது வைத்து ஒரு கரத்தால் அதைப் பிடித்து மறு கரம் கொண்டு புத்தகத்தை பிடித்திருந்த கையைப் பிடித்தவாறு அவள் நீட்டிட அவளின் செய்கையில் அவனின் இதழ்கள் சிரிக்க மறுத்தாலும் விழிகள் சிரித்தன.
அவன் வாங்கியதும் தான் மூச்சு வந்தது,
அவளுக்கு.
"சீனியர்.."
"ஆமா நீ மத்தவங்கள எப்டி கூப்டுவ..ஐ மீன் மத்த சீனியர்ஸ.."
"அ..அது..அதுவும் சீனியர்னு தான்.."
"ஈஸ் இட்..அப்போ இனிமே என்ன சீனியர்னு கூப்டாத.." கடிதத்தை பிரிப்பதில் கவனமாய் இருந்தவனோ விழி நிமிர்த்தி கேட்க குழப்படத்துடனேயே தலையை ஆட்டினாள்,
தர்ஷினி.
"சரி..எதுக்கு இன்னும் நின்னுகிட்டு இருக்க..கெளம்பு..யாராவது பாத்தா தப்பா நெனச்சிப்பாங்க.." இறுக்கமான குரலில் அவன் சொன்னாலும் அதற்கு முழுமுதற் காரணம் அவள் மீதான அக்கறை தான் என்பதை அவள் உணர வாய்ப்பில்லையே.
"சீனியர்.." என்று மீண்டும் அவள் அழைத்திட உறுத்து விழித்தன,அவன் விழிகள்.
"சாரி...சாரி..இனிமே அப்டி சொல்ல மாட்டேன்..அ..அது அந்த அக்கா கிட்ட இனிமே என் கிட்ட லெட்டர் கொடுத்து விட வேணான்னு சொல்றீங்களா..?" தயங்கித் தயங்கிக் கேட்டிட எங்கனம் மறுப்பான் அவனும்.
"சரி.." என்றாவாறு தலையசைத்திட "தேங்க்ஸ் சீனியர் அண்ணா.." எனும் அழைப்பில் இவனுக்கு விழி பிதுங்கி புரையேறிற்று.
"வாட்ட்ட்ட்ட்.." அதிர்ந்த படி அவன் கேட்டிட ஏன் இத்தனை அதிர்ச்சி என்று புரியவில்லை,
அவளுக்கு.
"நீங்க..நீங்க தானே மத்..மத்தவங்களுக்கு மாதிரி சீனியர் னு கூ..கூப்ட வே..வேணான்னு சொன்னீ..ங்க.." பயத்துடன் அவனைப் பார்த்த படி அதிர்வு போய் இப்போது விழிகளில் முழுக்க இரசனை.
"அதுக்குண்ணு..அண்ணான்னு கூப்டுவியா..இருக்குற ஒரு தங்கச்சி போதும் எனக்கு..வேற தங்கச்சி எல்லாம் வேணா..புரியுதா..?"
அவன் அழுத்திக் கேட்டாலும் இதழ்கள் துடித்தது அவனுக்கு மட்டுமே தெரியும்.
"அப்றம் எப்டி கூப்டுவ..?" ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிட அவளுக்குத் தான் அவனின் செயலில் அடியும் புரியவில்லை,நுனியும் புரியவில்லை.
"சீனியர் சார் னு கூப்டுறேன்..சீனியர் சார்.." அவள் இயல்பாகவே சொல்ல பக்கென சிரித்து விட்டிருந்தான்,
ஆடவன்.
ஒரு நொடி தான் மீண்டும் அவன் இயல்பான இறுக்கத்தை பூட்டிக் கொள்ள அவளுக்கு கனவு கண்டோமா என்கின்ற எண்ணம் தான் வியாபித்தது,
மனம் முழுவதும்.
"ம்ம்..குட்..அது என்ன இன்னொரு கவர்..?" அவளின் கரத்தில் இருந்த மற்றையதை விழிகளால் சுட்டி அவன் கேட்டிட அவளுக்கு ஏன் அவனிடம் சொல்ல வேண்டும் என்கின்ற எண்ணம் தான்.
"உன்னத் தான் கேக்றேன்..அது என்ன..?"அவன் அதட்டவும் கொஞ்சம் பயந்து விட்டிருந்தாள்,
அவளும்.
"அ..அது..எனக்கு தெரிஞ்ச அண்ணா ஒருத்தர்..இதுல ஒரு கவித எழுதி இருக்கேன்..ஏதோ கம்படிஷன்கு அனுப்ப இருக்காராம்..அது தான் படிச்சு பாத்து எப்டி இருக்குன்னு சொல்ல சொல்லி தந்தாரு.."
"ஓஹ்ஹ்ஹ்ஹ்..ஓகே ரைட்ட்ட்ட்..அத தா.." என்றவனுக்கு அதைப் பார்த்திட வேண்டும் என்கின்ற ஆவல்.
"இ..இல்ல.." அவள் மறுக்க அவனின் அழுத்தமான பார்வை அதே அவனிடம் நீட்ட வைத்திருந்தது.
"நீ போ..நா காலேஜ் விடும் போது தர்ரேன்..இல்லன்னா உன் தம்பி கிட்ட கொடுத்து விட்றேன்.." என்க மறுத்திடும் தைரியம் ஏது அவளுக்கு..?