• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 20 ❤️

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
chap – 20




“நைஸ் புட் பை தி வே அண்ட் ஐ லைக்ட் யுவர் ஹாஸ்ப்பிட்டாலிட்டி, யுவர் பேமிலி வாஸ் ஸ்வீட் (சாப்பாடு ரொம்ப அருமை, அதே மாதிரி உங்களோட வரவேற்பும் கூட. உங்க பேமிலி உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட்)” அனைத்தையும் ஒரு தலை அசைபோட்டு வாங்கிக்கொண்டான் உதய். இருவரும் நடக்க நடக்க அவர்களுக்கு பின்னால் மிஸ்டர் பிரவுன் ஆட்கள்.

“யூ க்நோ மிஸ்டர் மாதவன், மோர் தான் யுவர் கிரேட்டிவ், இன்னோவேட்டிவ் அண்ட் அட்வான்ஸ்ட் ஐடியாஸ் ஐ வாஸ் க்ரேட்டலி இன்ஸ்பயர்ட் பார் யுவர் க்கைன்ட் கேரக்டர் (உங்களுக்கு ஒன்னு தெரியுமா மிஸ்டர் மாதவன்? உங்களோட அறிவு, ஆற்றல், புதுமை, மேம்படுத்தப்பட்ட யோசனைகளை விட உங்க அமைதியும் அடக்கமும் புடிச்சிருக்கு)” ஐம்பதுகளின் இடைப்பகுதியில் இருந்தவர் நடையில் இருபதுகளிலிருந்தார். சில நொடிகளே நடந்தவர்கள் இப்பொழுது லிப்ட் முன் நின்றனர்.

“திஸ் ஏஜ் வாஸ் நாட் சிம்பிள் டு ஸ்டாண்ட் பிஹைன்ட் எ பிஸ்னஸ் எம்ப்பயர் லைக் யூர்ஸ் பட் யூ ஆர் பார் ப்ரம் ஆல் தோஸ் நார்மல் பீப்பில்ஸ் (இவ்வளவு பெரிய ஒரு தொழில் சாம்ராஜ்யம் பின்னாடி உங்கள மாதிரி இவ்வளவு சின்ன வயசுல இருக்கவங்க அவ்ளோ ஈஸியா இருந்துட்ட முடியாது, ஆனா நீங்க எல்லாரையும் மாதிரி சாதாரண ஆள் இல்ல)” அவன் தோள் தட்டி பாராட்டினார்.

“பட் வென் கம்மிங் டு மை எம்ப்லாய்ஸ் தெயர் சேப்டி வில் ஆல்வேஸ் பீ மை பர்ஸ்ட் ப்ரியாரிட்டி. லெட் தி இன்பர்மேஷன் பி பேக் ஹோப் யூ மேக் இட் ரைட் (ஆனா என்னோட ஊழியர்கள் பாதுகாப்புன்னு வரப்ப நான் எதையும் விட்டுகுடுக்க தயாரா இல்ல, அவங்க சேப்டி தான் எனக்கு முக்கியம். இந்த தகவல் எல்லாம் தப்பா இருக்கட்டும். எல்லாத்தையும் சரி பண்ணுங்க வேகமா)” என்றவர் அவனுடன் கை குலுக்கி அந்த லிப்ட்டில் நுழைந்துகொண்டார்.

பிரௌனை அனுப்பி வைக்க உதய் சென்ற பொழுது அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் உதய்யின் மூளையில் இப்பொழுது கூட ஓடிக்கொண்டே இருந்தது. அடங்காத ஆத்திரமும், இயலாமையும் உடல் மொத்தத்தையும் விறைப்பாக மாற்றியிருந்தது எத்தனை முயன்றும் தூக்கம் அருகில் கூட வரவேயில்லை.

வீட்டின் ஒரு மூலையிலிருந்து மறு மூளைக்கு மாறி மாறி நடந்தவன் என்ன முயன்றும் தன் மூளையில் ஓடிக்கொண்டிருந்த ஒரு எண்ணத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் பிடிபடாமல் போக வேறு வழியே இல்லாமல் அதையே அரை மனதாய் நடத்த முடிவெடுத்தான்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் உடற்பயிற்சி முடித்தவன் ஜெயனுக்காக கூட காத்திராமல் தானே காலை ஏழு மணிக்கெல்லாம் பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மென்ட் சென்று ஏஜன்சி எக்சிக்யூட்டிவை பார்க்க வேண்டும் என்று ப்யூன் கூட வராத நேரம் சென்று அமர்ந்துகொண்டான்.

அடுத்த அரை மணி நேரம் ஆள் அரவமற்ற அந்த இடத்தில் தன்னுடைய காரிலே அமர்ந்தவன் ப்யூன் வந்து கதவைத் திறப்பதைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கிச் சென்ற உதய், “உன் ஏஜன்சி எக்சிக்யூட்டிவ் எப்ப வருவார்?” என்றான் மிடுக்காக.

உதய்யை நிமிர்ந்து பார்த்தவன் அவனுடைய பார்மல் ஷர்ட், பாண்ட்டின் தரத்தைக் கவனித்து, “சார் எதுவும் பைசா மேட்டர் பத்தி பேச வந்துருக்கீங்களா? பார்ட்டி கறார் டைப் நயா பைசா வாங்கமாட்டாரு, அதுவுலாம கவெர்மென்ட்ல ரொம்ப கெடுபுடி எதுவும் பண்ண முடியல” என்றவன் கதவைத் திறந்து கையில் வைத்திருந்த ஒரு மூட்டை பண்டிலை அருகிலிருந்த மேஜையில் வைத்து அதன் கீழிருந்த ஒரு துடப்பத்தைக் கையில் எடுத்தான்.

“அதையும் மீறி நீங்க ஏதாவது பேசணும்னா பத்து மணிக்குத் தான் வருவாரு, அப்ப வாங்க” தன் வேளையில் மூழ்கிப்போனான்.

“உன் சார கால் பண்ணி வர சொல்லு” இன்னும் வெளியிலேயே நின்று பேசினான் உதய்.

அலுவலகத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த அந்த ப்யூன் அப்படியே வேலையை நிறுத்தி, “ம்ம்ம் சொன்னா கேக்க மாட்டிக்கிறீங்க சரி அப்டியே உள்ள வந்து அந்த பெஞ்ச்ல உக்காருங்க கூட்டிவிட்டுட்டு பேன் போட்டுவிட்றேன்” என்றவன் உதய்க்காக வேக வேகமாகக் கூட்ட, உதய் மாதவனோ அவன் பேச்சைக் கேட்டு உள்ளே வந்து அவன் கூறிய அந்த அசைந்தாடும் மர இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

ஜெயனிடமிருந்து ஒரு பக்கம், ஆதவனிடமிருந்து ஒரு பக்கம் அழைப்பு வந்துகொண்டே இருந்தாலும் தன்னுடைய அலைபேசியை சைலென்டில் போட்டு தனக்கு அருகில் வைத்துவிட்டான் கண்ணில் படாதவாறு. நேரம் வழக்கத்தை விட மெதுவாகச் செல்ல அந்த ப்யூன் சக்கரமாய் சுழன்றுகொண்டிருந்தான்.

“சார் ஜூஸ்?” தன்னை விட வேகமாக வந்தவன் நிச்சயம் உண்டிருக்க மாட்டான் என்று நிச்சயம் தெரிந்து தான் அவன் கேட்டது.

தரையிலிருந்து பார்வையை அவன் மீது பதித்த உதய், “சுக்கு காபி கிடைக்குமா?” தலைக்கு நேராக மின்விசிறி முழு வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்தாலும் எ.சியில் அமர்ந்தே பழகியவனுக்குத் தலையில் தண்ணீரை ஊற்றியது போல் இருந்தது, சட்டை காலர் எல்லாம் அவன் வேர்வையால் நனைந்திருந்தது.

“என்ன சார் இப்டி வேர்துருக்கு இதுல சுக்கு காபி கேக்குறீங்க. இருங்க சில்லுனு ஒரு ஜூஸ் வாங்கிட்டு வர்றேன்” கையில் வைத்திருந்த துடப்பத்தை எடுத்த இடத்திலே போட்டவன் வாசலை நோக்கி நடக்க, “இந்தாங்க” இரண்டாயிரம் தாள் ஒன்றை அவரிடம் நீட்டினான் உதய்.

முதலில் யோசித்தாலும் பிறகு அதை வாங்கி, “ஆபீஸ பாத்துக்கோங்க சார் இஃதோ வந்துர்றேன்” என்று சென்றவரை நினைத்துச் சிரிப்பு தான் வந்தது உதய்க்கு. ஒரு சிறு வேலைக்காக வாட்ச்மன் ஆகிவிட்டதை எண்ணி...

மெதுவாக இருக்கையிலிருந்து எழுந்தவன் கைக்குட்டை கொண்டு முகத்திலிருந்த வேர்வை துளைகளைத் துடைத்தவாறே தனக்கு எத்திரிலிருந்த திறந்த அறைக்குள் நுழைந்தவன் கண்டது மொத்தமும் நீண்ட நெடிய இரும்பு நாலா பக்கமும் திறந்த அலமாரிகள், அவை அனைத்தும் கோப்புகளாலும், மூட்டை போல் கட்டி வைக்கப்பட்டிருந்த காகிதங்களாலும் நிரம்பி வழிந்தது. அனைத்தையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தவனுக்கு ப்யூனின் சத்தம் கேட்டு வெளியில் வந்தான்.

“சார் அங்க ஏன் போனீங்க? அங்கலாம் போக கூடாது” கறாராகக் கூறி உதய் கையில் ஜூஸ் கிளாசை கொடுத்தான்.

“அவருக்கு கால் பண்ணி வர சொல்லுங்க. ரொம்ப முக்கியமான விசியம் பேசணும்-னு சொல்லுங்க” ஜூஸை அருந்திக்கொண்டே உதய்.

“சார் அவரெல்லாம் ஆபீஸ்க்கு ஒரு போன் வீட்டுக்கு ஒரு போன் யூஸ் பண்றவரு, ஆபீஸ்க்கு வந்து தான் போன் எடுப்பார். பெர்ஸ்னல் நம்பர் கூட என்கிட்ட எல்லாம் தர மாட்டாரு, பெரிய புள்ளிககிட்ட மட்டும் தான் இருக்கும். அட்ரஸ் வேணா இருக்கு சார் பொய் பாருங்க எப்படியும் இன்னும் ஒன்றை மணி நேரம் ஆகும்” அவன் கையில் மீத பணத்தை வைத்தான் ப்யூன்.

“பரவால்ல வச்சுக்கோங்க”

அவன் கையிலே பிடிவாதமாக அதைக் கொடுத்த ப்யூனைப் பார்த்து, “சர்கார் ஆளுங்களுக்கு எப்பையுமே தனி கெத்து தான? வாழட்டும் விடுங்க. எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க. 1995-2008 சென்னை சிட்டில நடந்த கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க்ஸ், பிளஸ் புதுசா அத்தாரிட்டி ரைட்ஸ் வாங்குன சின்ன, பெரிய என்ஜினீயர்ஸ், டிப்ளமோ க்ரஜூவேட்ஸ், கம்ப்ளீட் டீடெயில்ஸ் வேணும். அதுவும் நாளைக்கு...??!!” தெளிவாக நிதானமாக பேசினான் உதய்.

அது கட்டளையா? கேள்வியா? தெரியவில்லை அவனுக்கு.

“நல்லா தமாஷா தான் பேசுறீங்க சார் ஏ.இக்கு தெறிஞ்சா எனக்கு வேலை போச்சு... புள்ளகுட்டி காரன் சார் நான். இந்த ஜூஸ் குடிச்சிட்டு அப்டியே போய் உக்காருங்க” மீண்டும் வேலையைப் பார்க்கச் சென்றவன் மீது பார்வையை வைத்துக்கொண்டே அதே பெஞ்சில் அமர்ந்தான் உதய்.

“வெறும் இருவதாயிரத்தி ஐநூத்தி முப்பது ருபாய் சம்பளம் வாங்கிட்டு ஒருத்தன் அம்பது லட்சத்துக்கு சிங்கிள் பேமன்ட்ல ஓல்ட் மஹாபலிபுரம் ரோட்டுல ஒரு பிளாட் வாங்க முடியுமாங்க?” செய்துகொண்டிருந்த வேலை அப்படியே பாதியில் நின்றது ப்யூனுக்கு.

சாதாரணமாக அமர்ந்திருந்தான் உதய். மிகவும் சாதாரணமாக. வேர்வையில் நனைந்திருந்த நெற்றியைத் துடைத்து அந்த ப்யூன்னை பார்த்து, “இப்டி பக்கத்துல வந்து உக்காருங்க” என்றான்.

“இல்ல இருக்கட்டும்” அந்த ப்யூன் குரல் மொத்தமாக உள்ளே சென்றிருந்தது.

“வாங்க சும்மா... வேற்குது பாருங்க” அப்பொழுது தான் தன் நெற்றியிலிருந்த வேர்வை துளிகளைக் கவனித்தான், வேகமாக அதைத் துடைத்து, “அது... அது எப்படி சார் இவ்ளோ கம்மியான சம்பளத்துல இப்டி இருக்க முடியும்? அதுவும் இங்க எல்லாம் ஒர்க் பண்ணிட்டு வாய்ப்பே இல்ல சார்...” என்றான் போலியாகச் சிரித்துக்கொண்டே தூசியில்லாத மேஜைகளைத் துடைத்து.

அழுத்தமான பூட்ஸ் சத்தம் அந்த நிசப்தமான அறையில் கேட்க, உதய் எழுந்து தன்னை நோக்கி வருவது அந்த ப்யூனுக்கு தெளிவாக கேட்டு திரும்பி பார்க்க உதய் அவனைப் பார்த்து சிரித்த முகமாக நின்றான்.

“நான் இங்க ஒர்க் பண்றவங்கள பத்தி சொன்னேன்னு நினைச்சீயா நீ?” என்ன இந்த கண்களில் உள்ளது, என்ன அந்த மூளை சிந்திக்கின்றது என்ற எந்த பதிலும் தெரியவில்லை.

ஏதோ பிடிபட உதய் ஆபத்தானவன் என்று உணர்ந்த சில நொடிகளில், “சார் நீங்க என்ன சார் இங்க?” ப்யூன் இடது பக்கத்தில், வாசலிலிருந்து பதட்டமாக வந்தது எ.இ குரல், மூச்சு வாங்க நின்றிருந்தார், சரியாக வாராத தலை, பாதி கசங்கியிருந்த சட்டை என அவர் அவசரத்தைக் கூறியது.

“இப்ப தான் நீங்க இங்க வந்தது தெருஞ்சது. ஒரு கால் பண்ணிருக்கலாமே சார் நானே வந்துருப்பேன்”

பின் அந்த ப்யூன் பக்கம் திரும்பிய எ.இ, “என்னையா இங்க நிக்க வச்சிருக்க? என் ரூம்ல எ.சி போட்டு ஒக்கார வச்சிருக்கலாம்ல?” காண்டாகப் பேசியவர் உதய்யை தன் அறைக்கு அழைத்தார்.

“இல்ல இருக்கட்டும் ஒரு பார்ம் வாங்க தான் வந்தேன் இவர் தந்துட்டாரு” அந்த எ.இயிடம் கை குலுக்கிய உதய் செல்லும் பொழுது ப்யூனை ஒரு செய்தி கூறும் பார்வை பார்த்து வெளியேறினான்.

“யார் சார் இவரு?” வெளியில் சென்றவனை பார்த்து பதட்டத்தை வெளியில் காட்டாமல் கேட்டான்.

“இந்தியாவோட ரெண்டாவது பணக்காரன்” இதயமே நின்று துடித்தது அவனுக்கு, “அந்த மனுசனை நீ இப்டி அசால்ட்டா ஒக்கார வச்சிருக்கயா? என்னமோ அவன் திமிரு இல்லாம இருக்குறனால அமைதியா போய்ட்டான். நியூஸ் பேப்பர் அப்ப அப்ப படியா மூளையாவது வளரும்... அவன் கேட்டது எல்லாம் எடுத்...”

அந்த எ.இ கூறிய எந்த வார்த்தையும் அவன் காதில் விழவில்லை உதய் கேட்ட உதவியைத் தவிர... அது உதவியா? உத்தரவா? மனதில் உரையாடும் நிலையில் அவன் இல்லை.

“யோவ் ஒரு தோசை, டீ கேட்டேன். நீ நின்னுட்டே இருக்க?” திடுக்கிட்டு விழித்தவன், “இந்தா போறேன் சார்” அவன் வெளியில் சென்ற நேரம் உதய் வந்த அதே கார் நின்றது ஆனால் உதய் இல்லை, அவனுக்குப் பதில் கோட் சுய்ட் சகிதம் விறைப்பாக நின்றான் ஜெயன்.

காரையும் அதைச் சுற்றியும் பார்த்தவன் தயக்கத்தோடு அதைக் கடந்து செல்ல அவன் முன் ஒரு விசிட்டிங் கார்டு ஒன்றைக் கொடுத்த ஜெயன் காரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

“ஏன் சார் ஏதாவது டீடெயில்ஸ் வாங்கணும்னா என்கிட்டையே சொல்லிருக்கலாம்ல நீங்க எதுக்கு ரிஸ்க் எடுக்குறீங்க?” ஜெயனுக்கு பதில் கூறாமல் சாலையைப் பார்த்துச் சிரித்தவன் அமைதியும் சிரிப்பும் ஜெயனை அதற்கு மேல் பேச விடவில்லை.

கூட்ட நெரிசல் அதிகம் இருந்தாலும் ஜெயன் வாகனத்தைச் செலுத்தும் வேகம் எப்பொழுதும் மிதமான வேகம் தான். அது ஆதவனின் கட்டளை. உதய் என்ன கூறினாலும் வேகத்தைக் குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் அதிகரிக்கக் கூடாதென்று.

காலை சென்னை மாநகருக்கே உண்டான கூட்டமும், சலசலப்பும், ஹார்ன் சத்தமும் வெளியில் உள்ளவர்களை எரிச்சலாகியது அவர்கள் முகத்திலே தெரிந்தது. ஆனால் அந்த உயர் ரக ரோல்ஸ் ராய்ஸ் காரில் அமர்த்திருந்தவன் காதில் எந்த விதமான சத்தமும் இல்லை, அவை அனைத்தையும் சேர்த்து அவன் மனதில் பல பல சத்தங்கள், கோவங்கள், ஏக்கங்கள், கேள்விகள் என புதையல் போல் ஆழம் புதைந்து கிடந்தன.

டிராபிக் தாண்டி வாகனம் செல்ல திடீரென உதயின் அவசர குரல், “ஜெயன் ஸ்டாப்” ஜெயன் வேகத்தைக் குறைத்து நிறுத்தும் நேரத்தில் தங்களுக்கு நேர் மறுபுறம் கால் நொண்டி நொண்டி அடிக்கடி சிந்திய வியர்வையைத் துடைத்தபடி தன்னால் இயன்ற அளவிற்கு வேகமாக நடந்துகொண்டிருந்தால் சஹானா.

ஆதி கேசவன் தங்கை.

ஜெயன் மூலம் சில நாட்களுக்கு ஆதியின் தன்கவலை வாங்கி பார்த்த உதய்க்கு ஒரே பார்வையில் அது சஹானா என்று பார்த்த நொடியே தெரிந்துவிட்டது.

வாகனம் முழுதாக கூட நிற்கவில்லை, அதற்குள் பின்னால் எந்த வாகனம் வருகின்றதா என்று கூற பார்க்காமல் அவசரமாகக் கதவைத் திறந்தவன், “யூ டர்ன் போட்டு அங்குட்டு வாங்க ஜெயன்” விரைவாகச் சாலையைக் கடந்து சஹானா இருக்கும் இடத்திற்கு வந்து நின்றான்.

“காலுக்கு என்ன ஆச்சு?” தனக்கு வெகு அருகில் கேட்ட ஒரு ஆணின் குரலில் திடுக்கிட்டு நெஞ்சில் கை வைத்துத் திரும்பிய சஹானா மீண்டும் கால் இடற அவள் கை பற்றி நிறுத்தினான் உதய்.

நொடியில் நடந்த நிகழ்வில் இன்னும் பீதியுற்ற சஹானாவிற்கு மூச்சு வாங்க உதயைப் பயந்த விழிகள் கொண்டு பார்த்த அந்த பார்வையே அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை என்று காட்டியது.

“ஹே கூல்... ரிலாக்ஸ்” என்று ஓரடி பின்னால் சென்று அவளை நிதானமாக்கினான் உதய்.

‘அண்ணன் ஊரையே விக்கிறான், தங்கச்சி ஹலோ சொன்னாலும் பயப்புடுறா’ மனதில் ஆதியை வசைபாடினான் உதய்.

“சா... சாரி” என்று சஹானா மீண்டும் திரும்பி தன் பாதையில் செல்ல பார்க்க, “ஒன் மினிட் மா... கால்ல என்ன ஆச்சு? ஏன் இப்டி நடக்குற?” உதய் கண்கள் அவள் காலில் மட்டுமே இருந்தது.

சஹானாவிற்கோ அவன் முன் பின் தெரியாத ஆண்.

“இல்ல ஒண்ணுமில்ல” பேச்சை வெட்டிவிட்டுச் செல்ல மீண்டும் முயன்றாள். அப்படியே விட்டுப் போக மனம் வருமா உதய்க்கு? தன்னுடைய சகோதரி போல் அல்லவா இவளையும் நினைத்திருந்தான்?

அழுத்தமாக அவளுக்கு உதவி செய்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “நான் உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன்மா. பயப்புடாத... உன் அண்ணன் மாதிரி நெனச்சுக்கோ” நிதானமாக எடுத்துரைத்தான். இவர்களைக் கடந்து சென்றவர்கள் சிலர் இருவரையும் பார்த்துக்கொண்டே சென்றாலும் அதைக் கவனிக்கும் மனநிலையில் உதய் இல்லை. சரியாக ஜெயன் வாகனத்தைத் திருப்பி வந்து இவர்கள் முன் நிறுத்தினான்.

“ஜெயன் வாட்டர்” என்கவும் உடனே அவனும் காரிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் வந்து கொடுத்தான். “இந்தாமா குடி” என்றான் அவளிடம் நீட்டி.

“இல்ல வேணாம்” பயம் அவள் கண்ணில் தாண்டவமாடியது.

அந்த தண்ணீரைத் திறந்து முதலில் தான் குடித்த உதய், “இப்ப போதுமா? இதுல எதுவும் நான் மிக்ஸ் பண்ணல. தாகத்துக்கு நீ குடிக்க வேணாம் பட படப்பு போக ஒரு சிப் குடி போதும்” நா வறண்டிருக்க வழி இல்லாமல் தயக்கத்துடனே உதயிடம் வாங்கி குடித்தாள்.

“கால்க்கு என்ன ஆச்சு? உன் அண்ணனா நினைச்சு சொல்லு”

“இல்ல பஸ்ல இருந்து எறங்குறப்ப கால் இடறிடுச்சு, அது தான் வலிக்கிது” என்றாள் சஹானா.

“கால் வலிக்கிதுல அப்றம் ஏன் இவ்ளோ வேகமா அவசரமா போகணும்?”

“இல்ல என் ப்ரன்ட் அண்ணா ஒருத்தருக்கு ஆக்சிடன்ட் ஆகி ப்ளட் தேவ படுத்து அதுக்கு தான் அவசரமா போறேன்”

“அதுக்குன்னு கால் வலியோட அப்டியே போவியா? ஒரு ஆட்டோ புடிச்சு போகலாம்ல?” அவஸ்தையாக உதய்யை பார்த்தவள் எதுவும் பேசாமல் தரையை வெறித்தாள், மூன்றாம் நபரிடம் இவ்வளவு பேசியதே அரிது அதற்கு மேல் தன்னிடம் வீட்டிற்குச் செல்லும் அளவிற்குத் தான் பணம் இருக்கிறதென்று கூறவா முடியும்? அமைதியாகிவிட்டாள் சஹானா.

என்ன நினைத்தானோ, “சரி வந்து வண்டில ஏறு நான் ட்ரோப் பண்றேன் ஹாஸ்பிடல்ல”

“இல்ல... இல்ல பரவால்ல இருக்கட்டும் நான் அப்டியே போயிருவேன்”

“ப்ச்... சரி உன் மொபைல்ல இருந்து உன்னோட லோகேஷன் உன் பேமிலி யாருக்காவது அனுப்பி விடு”

குழம்பிப் போன சஹானா, “எதுக்கு?” என்றாள் கால் ஊன்ற கடினப்பட்டு.

“அப்படியாவது தைரியமா என் கூட வர முடியும்ல?”

இப்பொழுதும் சஹானாவிடம் சந்தேகமே பதிலாய் கிடைக்க, “உன் அண்ணனை விட உன்ன நல்லா பாத்துக்குவேன்மா... அந்த நம்பிக்கை இருந்தா வா” அத்தனை உயிர்ப்பு இருந்தது அந்த குரலில். இதைக் கேட்ட சஹானாவிற்கு மொத்த உலகமே நின்றது போல் இருந்தது, இந்த வார்த்தைகளுக்கு அவள் மிகவும் பரிட்சியமானவள்.

சிறு வயதில் ஸ்விமிங், சைக்கிள், ட்ராயிங் என சஹானா கற்றுக்கொண்ட அனைத்தையும் உதய் சொல்லிக் கொடுத்த பொழுது அவன் கூறிய அதே வார்த்தைகள், ஆதிக்கு தன்னுடைய லோகேஷன் அனுப்பவில்லை, தன் கண்ணை மட்டுமே பார்த்துப் பேசிய, தனக்கு எதிரில் நின்ற சகோதரன் மீது குருட்டு நம்பிக்கையில், “மேன்கைன்ட் மெடிகேர் ஹாஸ்பிடல் ண்ணா”

அவள் பதிலில் மனதிலிருந்த மொத்த சிக்கல்களின் முடிச்சு அவிழ்ந்தது போன்ற நிம்மதி. அவளுக்காகச் சார் கதவைத் திறக்க சென்ற ஜெயனை வேண்டும் என்று கண் ஜாடை காட்டி தானே அவளுக்குக் கதவைத் திறந்துவிட்டான். பிறகு அவள் கை பிடித்து மெதுவாக உள்ளே அமர வைத்தவன் மருத்துவமனை வரும் வரை அவன் என்ன படிக்கிறாள்? அவள் குடும்பத்தைப் பற்றித் தெரியாமல் கேட்பது போல் ஆதியைப் பற்றிக் கேட்பது என அவளிடம் என்ன என்ன பேச முடியுமோ அத்தனையும் கேட்கும் சாக்கில் அவளுடன் பேசிக்கொண்டான், முதலில் தயக்கம் காட்டிய சஹானா பிறகு அவனுடன் பதட்டம் இல்லாமல் பேசினாள்.

“தேங்க்ஸ் ண்ணா” என்றாள் சஹானா சிரிப்புடன் மருத்துவமனையில் இறங்கும் பொழுது.

எத்தனை வருடங்கள் கடந்துவிட்டது இந்த அமைதியான சிரிப்பைப் பார்த்து? மனதில் தோன்றிய உணர்வுகளை மறைத்து அவள் கை பிடித்து ரத்தம் தர வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றவன், ஜெயன் ஒரு முக்கியமான மீட்டிங் உள்ளது என்பதைக் கூறியும் அனைத்தையும் ஒதுக்கி வைத்து அவளுடனே இருந்துவிட்டேன்.

சஹானா ரத்தம் கொடுத்து அவள் தோழியின் குடும்பத்தினரைப் பார்த்து வரும் வரை வெளியிலே நின்றவன் சஹானா வெளியில் வந்த பொழுது அப்படியே அவளை மீண்டும் அதே மருத்துவமனையிலிருந்த ஆர்த்தோ ஒருவரிடம் அவள் எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் காலை எக்ஸ்-ரே செய்து பார்க்கக் கூறினான். அதில் கணுக்காலில் சவ்வு வீங்கியிருப்பதாக கூறி ஒரு மாதம் அதிகம் நடக்கக்கூடாதென்று கூறி ஒரு பேண்ட் ஒன்றை கட்டி விட்டார் மருத்துவர்.

“சாரி என்கிட்ட காசு இல்ல. உங்க அக்கௌன்ட் நம்பர் தாங்க நான் அப்றம் அனுப்பி விட்றேன்” என்றாள் தயக்கத்துடன்.

அவளை உற்றுப் பார்த்த உதய், “உன் அண்ணா உனக்கு ஹாஸ்பிடல் பில் குடுத்தாலும் இப்டி தான் சொல்லுவியா மா?”

“என் அண்ணனுக்கு குடுக்க தேவையில்லை ஆனா உங்களுக்கு குடுக்கணும் தான?”

மின்னல் வேகத்தில் வந்த சஹானாவின் பதிலில் உதயின் முகம் வாடிவிட அவள் இல்லத்தில் இறக்கி விடுவதாகக் கூறி வம்படிக்க இறக்கிவிட்டே சென்றான் ஆனால் மருத்துவமனை செல்லும் பொழுது இருந்த அவன் இலகுவான முகம் இப்பொழுது மொத்தமும் இறுகி இருந்தது.

“தேங்க்ஸ்... உங்க அக்கௌன்ட் நம்பர்...” என்றாள் மீண்டும், உதய் சிறு சிரிப்புடன் தலையை ஆட்ட ஜெயனிடம் கண் அசைத்து வாகனத்தைக் கிளப்பக் கூறினான்.

வீட்டிற்குள் சென்ற சஹானாவிற்கு அன்று முழுதும் உதயின் முகம் தான் கண் முன் வந்து வந்து மறைந்தது, எதற்காக தனக்காக அவன் இவ்வளவு நேரம் காத்திருந்து உதவி செய்ய வேண்டும்? அதுவும் அவன் செய்த உதவிக்குப் பணம் கூட வாங்க வில்லை, அவள் கையில் ஒரு மாதத்திற்குரிய மாத்திரைகள் மொத்தமும் இருந்தது. குழப்பம் மட்டுமே சஹானாவிற்கு.

மாலை களைத்துப் போய் இல்லம் வந்த ஆதி, ஏதோ சிந்தனையிலிருந்த சஹானாவைப் பார்த்துப் பேச வந்தவன் அவள் காலை பார்த்து, “கால்க்கு என்னடா ஆச்சு?” பதட்டமாக வந்து தரையில் அமர்ந்து அவள் காலை ஆராய்ந்தான்.

“ஒண்ணுமில்ல ண்ணா. பஸ்ல இருந்து எறங்குறப்ப கால் இடறிடுச்சு அதுல கொஞ்சம் சவ்வு வீங்கிடுச்சு”

“ஏண்டா பாத்து இறங்க மாட்டியா? ஆமா நீ எதுக்கு பஸ்ல போன? எனக்கு கால் பன்னிருந்தா நானே உன்ன கூட்டிட்டு போயிருப்பேனேடா... இப்ப பாரு உனக்கு தான் வலி”

தன் காலை பிடித்தது அமர்ந்திருந்த சகோதரனை எழ வைத்து அவன் கையில் ஒரு ஒரு காபியையும் கொடுத்து ஹாலில் அமர வைத்து அவன் அருகில் அமர்ந்துகொண்டாள்.

“எதுக்கு நீ இப்டி மூஞ்சிய வச்சிருக்க? எனக்கு ஒண்ணுமில்ல ண்ணா. கவி அண்ணாக்கு ஆக்சிடன்ட் அதுக்கு பிளட் குடுக்க போனேன். நீ ஒரு பக்கம் பிஸ்னஸ்க்கு அலைஞ்சிட்டு இருக்க உன்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் நானே போனேன். சின்ன ஜவ்வு வீக்கம் தான். சரியாகிடும் டாக்டர் சொன்னாரு ண்ணா... பயப்புடாத” அவன் தோள் தொட்டு மெதுவாக எடுத்துரைத்தாள்.

“ஹாஸ்பிடல் போக மனி இருந்ததா?” என்றான் விரைவாக.

அவன் கேள்வியில் அமைதியாகிவிட்டாள் சஹானா உதய்யை நினைத்து, “என்ன நீ திட்டாத... நான் கால் வலில ரோட்டுல நடந்துட்டு இருந்தப்ப திடீர்னு ‘கால்ல என்ன அடி’னு ஒரு குரல் ண்ணா... அப்டியே நீ பேசுன மாதிரி இருந்தது. அந்த
செகண்ட் எனக்கு யாரோ ஒரு ஆள்ன்னு தோணுச்சு ஆனா இப்ப யோசிச்சு பாத்தா தான் அந்த வாய்ஸோட பீல் புரியுது என்னமோ இருக்கு ண்ணா அந்த வாய்ஸ்ல” தீவிரமாக யோசித்துக்கொண்டே பேசினாள் சஹானா.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93

குடித்துக்கொண்டிருந்த காபியை ஒரு நொடி நிறுத்தியவன் மீண்டும் அதை அருந்திக்கொண்டு சகோதரியின் முகத்திலிருந்த சந்தேகத்தை உள்நோக்கி பார்த்தான்.

“என்ன கம்பெல் பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பிளட் டொனேட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணி, ஆர்த்தோ டாக்டர்ட்ட சஜெஸ்ட் பண்ணி மாத்திரை எல்லாமே வாங்கி குடுத்தாரு. அவ்ளோ நேரம் நல்லா பேசுனவரு. அக்கௌன்ட் நம்பர் தாங்க அமௌன்ட் அனுபிர்ரேன்னு சொன்னேன் ண்ணா. உன் அண்ணன் கிட்ட இப்டி தருவியான்னு கேட்டாரு.

என் அண்ணனுக்கு தர தேவையில்லை ஆனா உங்களுக்கு தரணும்ல-னு சொன்னேன். அவ்ளோ தான் ண்ணா... அவ்ளோ நேரம் அவர் முகத்துல இருந்த அந்த பிரைட்நெஸ் மொத்தமா போச்சு...”

“எதுல கூட்டிட்டு போனான்?” பழக்கமில்லாத ஒரு ஆணுடன் ஏன் சென்றாய் என்ற கண்டிப்பான கேள்வியை ஆதியிடமிருந்து சஹானா எதிர்பார்க்க அவனோ மொத்தமாக அவள் எண்ணத்தை மாற்றியிருந்தான்.

ஆதியைப் புரியாத பார்வை பார்த்த சஹானா, “வைட் ரோல்ஸ் ராய்ஸ் கார்” என்றாள்.

‘அவனே தான்’ அடித்துக் கூறியது ஆதியின் உள்ளம்.

“ஓஓ...” அதோடு நிறுத்திக்கொண்டான் ஆதி.

“அண்ணா நான் இப்டி யார்கூடையோ போனது கோவமா? சாரி இனி நான் அப்டி போக மாட்டேன்... நீ கோவ படாத ப்ளீஸ்” கோபத்தினால் தான் அமைதியாக இருக்கிறானோ என்ற பயத்தில் சஹானா அவனை அணுகினாள்.

“இல்லடா நீ சொல்றத பாத்தா நல்லவன் தான் போல... ஆனா இனி வேற யார் கூடையும் இப்டி எல்லாம் போகாத டா”

வெளியில் அவளைப் பார்த்துச் சிரித்தாலும் உள்ளுக்குள் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை இது என்ன வகையான நட்பு என்று?

தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தங்களை விட்டு வெளியில் எடுத்து தன் குடும்பத்தையும், அவன் குடும்பத்தையும் நோகடிக்க விரும்பவில்லை, அமைதியாக இருந்துவிட்டான். உதய்யை போல் எந்த காரணத்திற்கொண்டும் உறவுகளை அவமதிக்கும் நோக்கம் மட்டும் தனக்கு வர கூடாதென்று. ஆதிக்குத் தெரியும் உதய், சஹானா மீது சிறு வயதிலே அதிகம் அக்கறை வைத்திருப்பவன் என்று, அதில் அவனுக்குக் கர்வம் என்று கூட கூறலாம்.

சஹானாவும் சரி என்று தலையை ஆட்ட, “நான் கொஞ்சம் வெளிய போயிடு வர்றேன். நைட் சாப்பிட வெளிய வாங்கிட்டு வர்றேன். நீ ரிஸ்க் எடுக்காம ஒரு இடத்துல ஒக்காரு டா” என்றவன் நேராக கெளதம் இல்லத்திற்குச் சென்று அவனிடம் கேட்காமலே, ஏன் அவனைக் கூட பார்க்காமல் திறந்திருந்த வீட்டினுள் நுழைந்து சாவியை எடுத்துக்கொண்டு அவன் காரில் பறந்துவிட்டான்.

அதன் பிறகு நேராக வந்து நின்றது மணிமேகலையின் இல்லத்திற்குச் சற்று தள்ளி. அவளை எப்படி அழைப்பது என்று சில நிமிடங்கள் யோசித்தவன் ஒரு சிரிப்புடன் காரின் கதவைத் திறந்து வைத்து எவ்வளவு சத்தமாக ஒலிபெருக்கியை வைத்தான்.

காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு

அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும்
அலையே என்னைத் தொடுவாய்
மெதுவாய்ப் படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே

ஆதி அந்த காரில் சாய்ந்து நிற்க, ஆள் அரவமே இல்லாத அந்த தெருவில் சென்ற ஒரு நபர் அவனையும் அந்த காரையும் ஒரு சந்தேக பார்வையுடன் கடந்து செல்ல அவரை பார்த்து உதட்டைச் சுளித்து மணிமேகலையின் இல்லத்தையே ஆசையாகப் பார்த்து நின்றான்.

பாடல் தொடங்கிய சில நொடிகளிலேயே கதவை வேகமாகத் திறந்துகொண்டு சரியாக அவன் அன்று வந்து நின்ற அதே இடத்தில் வந்து மணிமேகலை பார்க்க எப்பொழுதும் அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பு இல்லை.

மேல்மாடம் வந்து நின்ற மணிமேகலை சுற்றிலும் பார்வையைப் படரவிட்டு எவரும் இல்லை என்றதும் தன்னையே பார்த்து நின்ற ஆதியிடம் சைகையாலே பாட்டை நிறுத்த கூறினாள்.

அவனும் தோளை மெதுவாகக் குலுக்கி சிறு சிரிப்புடன் அப்படியே நின்றான். மணிமேகலை கண்களைச் சுருக்கி சுருக்கி ‘ப்ளீஸ்’ என்றாள்.

மனமிறங்கி ஒலிபெருக்கியை அனைத்தவன் அங்கேயே நின்று அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் மான் குட்டி மீண்டும் சைகையாலேயே ‘போங்க’ என்றாள்.

அவன் பிடிவாதமாக இடத்தைவிட்டு அகல மறுக்க மணிமேகலைக்கு அவள் தந்தை எப்பொழுது வேண்டும் என்றாலும் வந்துவிடும் பயம். அவர் பார்த்தால் அவ்வளவு தான்...

வேகமாக வீட்டிற்குள் ஓடிச் சென்று அன்று போல் ஒரு காகிதத்தை எடுத்து ஏதோ எழுதி ஆதியிடம் தூக்கி எறிந்தால். சரியாக அவன் காருக்கு அருகில் வந்து விழுந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தான். பத்து எண்கள். அவள் கைப்பேசி எண்.

உள்ளுக்குள் சிரித்தவன் அதை மனப்பாடம் செய்து அந்த காகிதத்தை அப்படியே மீண்டும் சுருட்டி அருகில் தூரப் போட்டான் தனக்கு அது தேவையில்லை என்று. மீண்டும் அவள் மேல் பார்வையைச் செலுத்தியவன் அவளைக் கீழே வருமாறு சைகை செய்தான். காலை தரையில் இரண்டு முறை உதைத்து சிறு பிள்ளை போல் அடம் பிடித்தவள் அவனுடைய பிடிவாதத்தை கையை கட்டி நின்று அவனை சில நொடிகள் முறைத்து அவனுக்குப் பதில் கூறாமல் உள்ளே சென்றுவிட்டாள்.

“கொஞ்சம் ஓவரா தான் போறோமோ?” தீவிரமாக யோசித்த ஆதி அவள் நிச்சயம் வர மாட்டாள் என்று வீட்டை மீண்டும் ஒரு முறை பார்த்து காரினுள் சென்று அமர, வீட்டின் நுழைவாயில் திறந்து மணிமேகலை அவளுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து நின்று ஆதியை ஒரு முறை பார்த்து அவன் தன்னை பார்த்துவிட்டான் என்று உறுதி செய்தவள் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டாள்.

“பாரேன் சேட்டையை”

அவளை பின் தொடர்ந்து சென்றவன், “ஓய் ரோலக்ஸ்” சத்தமாக அழைத்தான்.

அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் செல்ல நிச்சயம் அவளைச் சீண்ட வேண்டும் என்று மீண்டும் ஒரு பாடலை ஒலிபெருக்கியில் தனக்கு முன்னால் செல்பவளுக்குக் கேட்கும் வகையில் சத்தமாகப் போட்டான்.

ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு
எதுக்கு உனக்கு இத்தன லொள்ளு
என் நெஞ்சுல குத்தாதே முள்ளு
காயா பழமா சொல்லு சொல்லு

உடனே தன்னுடைய வாகனத்தை நிறுத்தி தனக்கு அருகில் வந்து காரை திருத்திய ஆதியை பார்த்து, “ப்ளீஸ் பாட்டு போடாதீங்க... மெயின் ரோட்ல இருக்க சாலட் அண்ட் சீஸ் ஸ்டோர்க்கு வந்து பேசுறேன். ப்ளீஸ்”

“அங்க வேணாம்” என்றான் ஆதி.

“அப்ப அதுக்கு பக்கத்துல இருக்க பரோட்டா கடைக்கு போகலாமா. என்ககு அங்க சாப்புடனும்னு ஆசை” என்றாள் வந்த வேலையை மறந்து.

“அங்கையும் வேணாம். இப்படியே நாலு தெரு தள்ளி ஒரு சில்ட்ரன்ஸ் பார்க் இருக்குல்ல அங்க வா”

Why Doesn’t She Talk to Me வா வா சின்னக்கா
லவ்வ கொஞ்சம் சொல்லக்கா
Why Doesn’t She Walk with Me
இவன் தான் உனக்கு பக்கம் கொஞ்சம் வாக்கா

தன்னுடைய வேலையை செவ்வனே அந்த ஒலிபெருக்கி பார்த்துக்கொண்டிருக்க, “ப்ளீஸ் சவுண்ட் கம்மி பண்ணுங்க...” போகட்டும் என்று ஆதி குறைக்க, “பார்க் எல்லாம் வேணாம். நாம பார்க்கு வெளிய இருக்க பாணி பூரி கடைல நின்னு பேசலாமா?”

சோறு சோறு-னு இருக்குற இத எப்படி மடக்குறது? யோசித்தவன், “பார்க் தான். அதிகம் பேசுனா பின்னாடி வர்ற உன் அப்பன்கிட்ட சொல்லிடுவேன்”

பதறிய மணிமேகலை, “அப்பா...” என்று பின்னால் திரும்பி பார்க்க எவரும் இல்லை. நிம்மதியாக முன்னே திரும்பிப் பார்க்க ஆதியின் வாகனம் அந்த சாலையில் இல்லை. தந்தையிடம் சிக்கிவிடக் கூடாதென்று அவர் வீட்டை அடையும் முன் செல்வதே மேல் என்று வேகமாக ஆதி கூறிய பூங்காவிற்கு வந்து சேர்ந்தாள்.

நேரம் மாலை ஆறு முப்பதை நெருங்க வானம் இருட்டத் துவங்கியிருந்தது. அந்த இருளை மறைக்க மொத்த பூங்காவையும் சுற்றி மின்விளக்குகள் மிளிரியது. ஒரு வித பயத்துடனே உள்ளே நுழைந்தவளை சில அடி தூரத்திலே ஆதி பார்த்துவிட்டான் கையில் ஒரு முட்டைவிடும் கருவியுடன் (Bubble Liquid) “வா அப்டியே நடந்துட்டே பேசலாம்”

அவன் கையிலிருந்ததைப் பார்த்தவள் அவனை மீண்டும் பார்த்து, “வேகமா சொல்லுங்க அப்பா வந்துடுவார்”

“அப்பா தவற உன் வாயில இருந்து எதுவுமே வராதா?” முட்டையிட்டு முட்டையிட்டு விளையாடிக்கொண்டே இருந்தான்.

“அதெல்லாம் வரும்... இந்த பப்புல் ஊதுறத ஸ்டாப் பண்ணுங்க. என்ன விசியம்ன்னு சொல்லுங்க ப்ளீஸ்”

“அப்ப நான் இப்ப என்ன பேச வந்துருக்கேன்னு உனக்கு தெரியல?” பாண்ட் பின் பாக்கெட்டில் அந்த பப்புல் லிக்குய்டை வைத்து அவளைப் பார்த்தான்.

எதுவும் தெரியாமல் விழித்தவள், “இல்லையே எனக்கு சைக்காலாஜி தெரியாதே”

“ஓ ஹோ... கிண்டல் எல்லாம் உனக்கு பண்ண தெரியும் ஆனா நான் உன் மாமனை பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியாது” நடந்துகொண்டிருந்தவன் நின்று அவளைப் பார்த்து கேள்வி கேட்டான்.

அவன் கூறியது அப்பொழுது தான் புரிய, “உதய் மாமாவை பத்தி சொல்றிங்களா?” என்றாள் சிரிப்புடன் முகமெல்லாம் பல்லாக.

“அவனை பத்தி பேசுனா மட்டும் உனக்கு ஏன் முகத்துல இப்டி பல்பு எரியுது” பொறாமையை மறைக்க பாடுபட்டு தான் போனான் ஆதி கேசவன்.

முகத்தைத் தொட்டுப் பார்த்தவள், “இல்லையே அப்டிலாம்... ஆனா உதய் மாமா தான் என்னோட ஃபேவரேட் மாமா. ரொம்ப நல்லவரு, உங்களுக்கு கூட தெரியுமே நீங்க தான் அவங்க ப்ரன்ட் ஆச்சே”

“ஆமா ரொம்ப நல்லவன்... அதுக்காக நீ என்ன அவனை தொட்டு தொட்டு பேசுற?” என்ன முயன்றும் கோவத்தை சற்று வெளியில் காட்டிவிட்டான்.

“நான் தொட்டு தொட்டா பேசுனேன்? அப்டியே தொட்டாலும் என்ன அவரு என்னோட மாமா தான?” கோவம் வந்ததோ அந்த மென்மையான பெண்ணிற்கும்.

“அப்டிலாம் பேச கூடாது... முக்கியமா நூறு மாமா போடாத” இது ஆதியின் உத்தரவு.

அவனை மிரண்ட பார்வை பார்த்தவள், “நான் அப்டி தான் என் மாமா கிட்ட பேசுவேன்... அவரை அப்டி சொல்லாம வேற யாரை சொல்லுவேன்?” என்றாள்.

“நான் தான் இருக்கேன்ல என்ன சொல்லு” மணிமேகலை அப்படியே விக்கித்து நின்றுவிட்டாள் அவன் பதிலில், உடனே அதிலிருந்து மீண்டு, “உங்கள எல்லாம் அப்டி கூப்பிட முடியாது” ஆதியைப் போலவே தானும் பிடிவாதமாய் நின்றாள் மணிமேகலை. அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன், “ஏன் கூப்பிட மாட்ட?”

“அவரு என் மாமா... என்ன கல்யாணம் பண்ணிக்க கூட அவருக்கு உரிமை இருக்கு” என்றாள் மாமனை விட்டு கொடுக்காமல்.

“ஆஹ் பண்ணுவான் பண்ணுவான்... நான் விட்டா தான உன் மாமா கூட நீ டூயட் ஆடுவ?”

ஒருவாறு சாய்ந்து நின்று ஆதி அவளுக்குச் சவால் விட்டான். அவன் மான்குட்டியும் அவனைப் போலவே நின்று, “அவர் கூட ஆடாம உங்க கூடையா ஆட முடியும்?”

அவள் கேள்வியில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன் அவளை நோக்கி மேலும் சில இன்சஸ் இடைவெளியைக் குறைத்து, “ஏன் ஆடு யார் வேணாம்னு சொன்னாங்க”

விழி தானாய் விரிந்தது பெண்ணிற்கு. அவன் கண்களிலிருந்து காதலைக் கூட அறியாமல் இருக்கவில்லை ஆனால் இந்த திடீர் தாக்குதலை நிச்சயம் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. உடலைச் சிலையாகி தலையை மட்டும் பயத்தில் பின்னுக்குக் கொண்டு சென்றவள் கண்களைச் சிமிட்டி சிமிட்டி இது நிஜம் தானா என்ற வாக்குவாதத்திலிருந்தாள்.

கண்கள் அவன் கண்களையும் தன்னை நெருங்கி வந்து நின்ற அவனையும் மாறி மாறி பார்த்து “என்... என்ன இப்... இப்டி பேசுறீங்க?” வார்த்தைகள் தந்தியடித்தது.

அவள் பயத்தைப் பார்த்தவன் இவ்வளவு நெருக்கத்திலிருக்கும் தன்தானவளை உரிமையோடு கூட பார்க்கத் தோன்றவில்லை, அவள் அனுமதியில்லாமல்.

“நல்லா தெளிவா தான் பேசுறேன். ஏன் உனக்கு தெரியாதா நான் ஏன் இப்டி பேசுறேன்னு?” சிரிப்புடன் மெதுவாக தன் காதலை அவளிடம் கூறினான்.

அவளோ மருண்ட விழிகளோடு காதில் அணிந்திருந்த குண்டு கம்மல் ஜிமிக்கி ஆட தலையை இட வலமாக ஆட்டி, “ம்ம்ஹ்ம்ம் தெரியாது”

“இங்க பாரு ரோலக்ஸ் எனக்கு தெரியும் உனக்கு எல்லாமே தெரியும்னு... இத்தன நாள்ல ஒரு நாள் கூட உன் பின்னாடி ஏன் சுத்துனேனு உனக்கு தெரியாது? நடு ராத்திரி அன்னைக்கு உன்ன தேடி வந்தப்ப நான் எதுக்காக வந்தேன்னு உனக்கு தெரியாது?

சரி இதெல்லாம் விடு, நேத்து பார்ட்டி நடந்தப்ப உன் கண்ணு நான் உங்கிட்ட பேச மாட்டேனா-னு எதுக்காக உன்ன கிராஸ் பண்ணி போனப்ப எல்லாம் என்னையே பாத்துட்டே இருந்துச்சு? இன்னைக்கு இந்த பாட்டு நான் போடப்ப எதுக்கு பதறியடிச்சு அன்னைக்கு நான் வந்து நின்ன அதே இடத்துல நீ பாத்த... ஏன் அந்த பாட்டுக்கு நீ ரியாக்ட் பண்ற?” ஆதி அடுக்கிக்கொண்டே போக மணிமேகலை முழி பிதுங்கி நின்றாள்.

“நீ... நீங்க இப்டி பேசிக்கிட்டே போனா நான் எப்படி பதில் சொல்ல முடியும்? ஒவ்வொரு கொஸ்டினா கேளுங்க” அவள் பேச்சு ஆதிக்கு உள்ளத்தையே மெல்லிசாக்கியது.

அவன் மனதை மேலும் இலகுவாக்க அவள் முகத்தில் ஒரு பக்கம் மஞ்சள் விளக்கின் ஒளி பட்டு அவள் சருமத்தின் மென்மையைக் கூறி அவன் பொறுமையைச் சோதனை செய்தது.

“சரி உனக்கு என்ன புடிக்குமா புடிக்காதா?” நேரடியாகக் கேட்டுவிட்டான் ஆதி.

“புடிக்காது” உடனே வந்தது பதில் பெண்ணிடமிருந்து. சிரிப்புடன், “அப்ப எதுக்காக எனக்காக இந்த ஜிமிக்கி போட்டுட்டு வர்ற மேகா?”

தன் பெயரை இதுவரை எவருமே அலைத்திராத விதம் அவன் நாவிலிருந்து வர உடல் சில்லிட்டது ஆனால் அதையும் வெளிக் காட்டாமல், “உங்களுக்காக எல்லாம் நான் போடல” என்றாள்.

பொய் தான்.

“ஓஓ... பால்கனில வந்து நின்னப்ப போட்ருந்த அதே டிரஸ், அதே ஹேர் ஸ்டைல் கலைஞ்சிருந்தாலும் அதை நீ மாத்தல ஆனா நீ மாடில நினைப்ப டாலடிச்ச அந்த வைர தோட மாத்திட்டு இந்த சாதாரண ஜிமிக்கி எதுக்கு போடணும்? உன் ஜிமிக்கிய ரசிக்கிற எனக்காகன்னு நான் நெனச்சுக்கவா?” எங்கிருந்து தான் இந்த சிரிப்பைக் கற்றுக்கொண்டானோ, அவன் மான் குட்டியை நொடியில் மயக்கிவிடும் அது இப்பொழுதும் தோற்கவில்லை.

“போங்க அதெலாம் பதில் சொல்ல முடியாது... நான் வீட்டுக்கு போறேன்”

ஆதியைத் திரும்பிப் பார்க்காமல் சென்றவளைக் குறையாத சிரிப்புடன் பார்த்தவன், “ஏய் ரோலக்ஸ்...” சத்தமாக அழைத்தான்.

கார்ட்டூனை போல் ஏதோ புலம்பிக்கொண்டே நடந்தவள் ஆதியின் குரல் கேட்டு அவனைத் திரும்பிப் பார்த்து, “ஹ்ம்ம்...” என்றாள்.

“பதில் சொல்லாமயே போற?” என்றான்.

விறுவிறுவென ஆதியை நோக்கி வந்தவள் ஒரு கை நீட்டி, “தாங்க” என்றாள் அவன் முகம் பார்க்காமல்.

அவன் குழம்பி, “என்ன தர?” என்றான் கேள்வியாக.

“நீங்க வச்சிருந்திங்கள்ல? பப்புல் லிக்யூட் தான்” தன் முன் நிற்கும் சிறு பிள்ளையைப் பார்த்து சத்தமாகச் சிரித்து விட்டான் ஆதி.

அவள் கையில் கொடுத்து, “போதுமா இல்ல இன்னொன்னு வாங்கி தரவா?”

வராத கோவத்தை இழுத்துப் பிடித்து வைத்தவள், “வேணாம் போதும். உங்ககிட்ட தூக்கி போட்ட அந்த பேப்பர்ல இருந்த என் போன் நம்பர் மனப்பாடம் பன்னலல?” முகத்தைச் சிரித்த தடையமே இல்லாமல் வைத்து ஆதி இல்லை இன்று தலையை ஆட்டினான்.

“ம்ம்ம் குட். அப்டியே நியாபகம் இருந்தாலும் மறந்துடுங்க. ஓகேவா?”

மேலும் கீழும் தலையை ஆட்டினான், “ம்ம்ம் மறந்துடுங்க... ஏனா நான் கோவமா போறேன்...” முகத்தை ஒரு வெட்டு வெட்டி நடந்தவளைப் பார்த்து மீண்டும் மீண்டும் அவனுக்குச் சிரிப்பு தான் அதிகம் வந்தது.

“ஏய் ரோலக்ஸ்...” அவள் திரும்பவில்லை.

“மான்குட்டி இங்க பாரேன்...” அவள் பின்னே நடந்து கெஞ்சினான் ஆதி.

திரும்பி நின்று அவனை பார்த்து சிணுங்கி காலை தரையில் மாறி மாறி உதைத்தவள், “நான் கோவமா இருக்கேன். அகைன் அண்ட் அகைன் பேசாதீங்க.
முக்கியமா எனக்கு கால் பண்ணாதீங்க” அவள் செய்தியைப் புரிந்துகொண்டவன் அதே வற்றாத சிரிப்புடன் நின்றுவிட அவனைத் திரும்பிப் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள் ஆதியின் மான்குட்டி.
 
Top