• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 2

Messages
31
Reaction score
13
Points
8
சஹானா 29 வயது நிறை பெண்ணவள். திராவிட நிறத்துடன் ஆளை அசரடிக்கவில்லையெனினும் முகம் சுழிக்க வைக்காது ,180cm க்கு 80கிலோ எடை கொண்ட சாதாரண பெண். ஊட்டி தக்காளிக்கு திராவிட நிறம் கொடுத்து பிடித்து வைத்தது போன்ற கொழுகொழு கன்னம், பார்வையாலே எதிரில் நிற்பவரை தடுமாற வைக்கும் கண்கள் அவளது பாசிடிவ் என்றால் தவறல்ல...

33 வயது நிறைந்த ஆடவனே சமர்ஜித். திராவிட நிறத்தில் உடற்பயிற்சியால் மேம்பட்ட கட்டுடல் மேனி கொண்ட கண்ணியவான் ...

விபச்சார விடுதியில் இருந்த விபச்சாரியாய் இருந்த ஒருவரின் கருப்பையில் கரு தங்கி ஐந்தாவது மாதமே கண்டறிந்து, அதன் பின்னர் குழந்தையை அழித்தால் பெரிய உயிருக்கு ஆபத்து என்பதால் குழந்தையைப் பெற்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து சென்று விட்டார். அந்த வழியே வந்த ஒரு கன்னியர் எடுத்துச் சென்று சுத்தம் செய்து போலீஸிற்குத் தகவல் சொல்லி விட்டு இல்லத்தில் சேர்த்தார். அங்கிருந்த நிர்வாகி சமர்ஜித் என்று பெயரிட்டு வளர்த்தனர். 12வரை அங்கு தங்கி படித்தவன் மேற்படிப்பை அரசு உதவியுடன் படித்து வேலையில் சேர்ந்து விட்டான். இது சமர் பற்றியது...

சஹானாவைப் பற்றிச் சொன்னால் அவளது 8 வயதில் தாய் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேற தந்தை குழந்தையை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு வேறு திருமணம் செய்து கொண்டார். ஆசிரமத்தில் வந்த நாளில் மாலை வேளையில் வந்தவளே அஹானா. முதிய காமுகன் ஒருவனால் கற்பழிக்கப்பட்டு குழந்தையை சுமந்த 16 வயது சிறுமிக்குப் பிறந்தவளே அஹானா. அரசாங்க உத்தரவின் பெயரில் குழந்தை இங்கும் தாய் மற்றொரு விடுதியிலும் சேர்க்கப்பட்டாள். பிறந்த மலராய் அரசாங்க உத்தரவுடன் வந்து சேர்ந்தாள்.
தனித்து நின்ற சனாவிற்கு அஹானா மகளாய் மாறிப்போனாள்.

ஒரு தாயாய் இருந்து சிறுசிறு காரியமும் செய்தாள் . தோழியாய் தமக்கையாய் தாயாய் என யாவுமாய் மாறியவள்.

இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க, ஆசிரமம் விட்டு வெளியேறி இருவரும் தனி வீட்டில் வாடகைக்கு இருந்தனர். கிடைக்கும் இடங்களில் வேலைக்குச் சென்று அஹானாவை சனா படிக்க வைத்துக் கொண்டிருந்தாள். சமரின் கண்களில் சஹானா பட, அவளது அப்பழுக்க அன்பில் தனது இதயத்தைத் தொலைத்தவன், ஒரு டிரஸ்ட் மூலம் அவர்கள் படிக்கவும் ஏற்பாடு செய்தான்.

காதல் திருமணம் என்று மேற்கொண்டு சஹானா யோசிக்காதிருக்க, அஹானா உதவியோடு காதலை ஏற்றுக் கொண்டாள். ஒரு சுபநாளில் திருமணமும் முடிந்து சமரோடு இருவர் சேர, புது உறவு உருவானது. அதன் பின்னர், படிப்பு முடிந்து வீட்டிலேயே அமர்ந்திருந்த சனாவை கட்டாயப்படுத்தி ஆட்சியர் பணிக்கு தேர்வெழுத வைத்து இன்று ஆட்சியராகவும் மாற்றி விட்டான்.


ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒருவழியாக மக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று விட்டு அலுவலகத்தில் நுழைந்தவள் முதலில் தனது பர்சில் இருந்த சிறிய கிருஷ்ணர் சிலையை வணங்கி விட்டு வேலையில் மூழ்கினாள்.

நேரம் போனதே தெரியாமல் கோப்புகளில் மூழ்கினாள் . நிமிர்ந்து பார்க்கும்போது மணி 10.00 தாண்டியிருந்தது. தலையை நீட்டி வெளியே எட்டிப் பார்க்க, காவலிற்கு நிற்கும் ரவியைக் காணவில்லை. அவருக்கு மாற்றாக வேறு யாரோ நின்றிருந்தார். தலையை ஒருமுறை உலுக்கி , மீண்டும் கோப்புகளைப் பார்த்து சிலவற்றைத் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக் கொண்டாள்.

நேரம் 11.00 ஐ நெருங்க, வெளியில் சமரின் வண்டி வரும் சத்தம் கேட்டது. எதாவது விடயம் இல்லாது வெளியே சென்ற சமர் மீண்டும் வர மாட்டான். தனது குறிப்பேட்டைப் பார்க்க, 11.30 மணிக்கு ஒரு மீட்டிங் உள்ளது தெரிய வந்தது.

அடுத்த சில நிமிடங்களில் உரியவர் வந்து காரியத்தை சொல்ல வர முடிந்த மட்டும் முறைத்து வைத்தாள் சஹானா.

" என்ன மிஸ். அரசி உங்களுக்கு நினைவு படுத்த நான் இருக்கேனா இல்ல எனக்கு நினைவுபடுத்த நீங்க இருக்கீங்களா... முதல் ல உங்க ரூம் ல சிசிடிவி வைக்கணும் .... வேலைக்கு வந்தா கவனம் வேலை ல இருக்கணும்... அதவிட்டு வேற எங்கேயோ இருந்தா எப்படி?... "என்று கடுமையாய் பேசியவள், சில நொடிகள் விடுத்து, " சரி போய் எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டு கூப்டுங்க... வர்றேன்... " என்றிட, அரசி என்ற பெயருக்குரியவர் தலையசைத்துவிட்டு சென்ற உரிய வேலையை கவனித்தார்.


குறிப்பிட்ட நேரத்தில் மீட்டிங் தொடங்க , அனைவரும் ஆயத்தமாகினர். தனக்கான நாற்காலியில் மிடுக்குடன் கம்பீரமாக அமர்ந்து கொண்டாள் சஹானா . பின்பக்கம் நின்றிருந்த அவளின் பி. ஏ அரசியிடம் , " நீங்களும் உக்காருங்க " என்று ஒரு நாற்காலியைக் காட்ட, நன்றியுடன் ஒரு பார்வை இட்டு இருந்தாள்.

" குட் மார்னிங் ஆல்... சென்னைல விபசாரம் பெருகி வர்றது பத்தி ஏற்கனவே பேசியிருந்தோம்... அதைப் பற்றி எனக்கு ரிப்போர்ட் தர சொல்லியிருந்தேன்... வெல்... விசாரித்தது , நீங்க பார்த்தது எல்லாம் ரிப்போர்ட்ஸ் கேட்டிருந்தேன்.

நேற்று காலை வரை வெறும் 2 ஃபைல்ஸ் தான் வந்துச்சு... இப்ப பாத்தா 40 ஃபைல்ஸ் இருக்கு... எப்படி... நான் நேற்றைக்கு கேட்டேனா இல்ல இன்னைக்கு கேட்டேனா ... நேத்து சாப்பாட சாப்பிடல னு இன்னைக்கு சாப்பிடுவீங்களா... ஹான்...

சொன்னத சொன்ன டைம்க்கு முடிக்க முடியாது னா டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிட்டே இருங்க .. வேலை நேரத்துல வைன் ஷாப்புல குவாட்டர் அடிக்கவும் பாய் கடைல பிரியாணி திங்கவும் தானே நேரம் உங்களுக்கு...

வேலை ல ஒழுங்கா இல்ல னு உங்க பெயர் ல என்னால கம்ப்ளைன்ட் பண்ண முடியும்.. பண்ண வச்சிடாதீங்க... காட் இட் " என்று மொத்த கடுப்பையும் வெளிக்காட்ட, அனைவருக்கும் முழி பிதுங்கியது ...

" போலீஸ்காரன் தலை நிமிர்ந்து இருக்கணும்... இப்படி கவிழ கூடாது... எப்படி தடுக்கப்படும்?... இங்கேயே சிலர் இதுக்கு துணை போறீங்களே... இதைப்பற்றி பேசி முடித்த பத்தாவது நொடி எனக்கு கொலை மிரட்டல் வரும்... பிகாஸ் இங்கேயே சிலர் லைவ் டெலிகாஸ் பண்ணுறீங்க " என்றிட, சிலர் முழி பிதுங்கி நின்றனர்.

அவள் பேசி முடித்த மறுநொடி பத்து பேர் கொண்ட குழு திடுதிப்பென்று வந்து அனைவரின் அலைபேசிகளை சோதனையிட, சில கருப்பாடுகள் மாட்டிக் கொண்டன...

" வாவ்... கேவலமா இல்ல... டிப்பார்ட்மென்ட் ரகசகயத்தை பெத்த பிள்ளை கிட்ட கூட சொல்ல கூடாது னு சொல்வாங்க... ஆனா நீங்க **** க்கு தான் வியாபாரம் பண்ணுறீங்க... நீங்க எல்லாம் போலீஸ் இல்ல... மாமா வேலை பாக்க தான் லாயக்கு.. இரிட்டேட் பண்ணாம வெளியேறுங்க...

மிஸ். அரசி இவங்க பெயர் ல இன்னைக்கே கேஸ் ஃபைல் பண்ண ஏற்பாடு பண்ணுங்க... SPக்கு கம்ப்ளைன்ட் அனுப்பி டிஸ்மிஸ் பண்ண ஏற்பாடு பண்ணுங்க... இது எல்லாம் மீட்டிங் முடிஞ்ச உடனே நடக்கணும்...

லுக் கைஸ்... என்னால ஒழுங்கா இருக்க முடியாது னு நினைக்கிறவங்க டிரான்ஸ்பர் வாங்கி கிழம்பலாம்... இல்லனா தக்க ஆதாரத்தோடு டிஸ்மிஸ் & சஸ்பென்சன் அடிக்கடி நடக்கும்.. எனிவே இட்ஸ் யுவர் விஸ்... " என்றவள் சாய்வாய் தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்...

சிறிது அமைதி நிலவ, தண்ணீர் குடித்து தன்னை நிதானப்படுத்தியவள், அடுத்ததில் கவனம் செலுத்தினாள் ...

" ஓகே கைஸ்... விஷயத்துக்கு வருவோம்... ரெக்காட்ஸ் ல உள்ளத சொல்ல ஆரம்பிங்க... "என்று சஹானா மீண்டும் தொடங்கி வைத்தாள்.

மேற்கொண்டு மீட்டிங்கில் பேச ஆரம்பித்தனர். " மேம் இப்ப என்ன னா சென்னை ல பத்தாயிரம் பிரோக்கர்ஸ் இருக்குறதா ஒரு தகவல் இருக்கு... ஒரு பிரோக்கர் கீழ குறைந்தபட்சம் பத்து பெண்கள் என்ற அடிப்படைல சொல்றாங்க... இப்ப பொண்ணுங்க பார்ட் டைம் ஜாப் போகுறது போல தாங்களாகவே பார்ட் டைம் அ விபசாரம் பண்ணி காசு சேக்குறாங்க என்பதுதான் வருத்தமான காரியம்...

இதைத்தாண்டி திருந்நங்கைகள் சாப்பாட்டிற்காக விபச்சாரம் பண்ணுறாங்க ... அப்புறம் " என்று பேசிக் கொண்டிருக்கையில் வெளியே ஒரு பெண்மணியின் அதீத கோபமான வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன...

வெளியே காவலர்கள் அந்தப் பெண்மணியை துரத்த முயற்சிக்க, அறையிலிருந்து வாயில் காவலருக்கு அழைத்து அவரை வெளியேற்றாதபடி செய்தாள் . அறையிலிருந்து வெளியே வந்து அந்தப் பெண்மணி முன் வந்து நின்றாள் .

" சொல்லுங்க அம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை... எதுக்காக இப்படி கத்துறீங்க ... பப்ளிக் நியூசன்ஸ் னு யாராவது கம்ப்ளைன்ட் ஃபைல் பண்ணுனா உங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் " என்று பொறுமையாக கையாண்டாள் சஹானா .

ஆனால் தன்னைத் தான் மிரட்டுகிறாள் என்று தவறாய் புரிந்து கொண்டவர், " என்னமா மிரட்டுறியா ... தப்பில்ல தூக்கி உள்ள வைப்பியா வை... அப்படி தானே என் புருஷன உள்ள வச்சீங்க. என்ன வச்சாலும் குத்தம் இல்ல...

உனக்கெல்லாம் புள்ள பெத்த வலி தெரியுமா... பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளய தெருவுல போற கண்ட கருமத்துக்கும் தின்ன குடுக்கவா மாடா உழைச்சு வளத்தோம்... நீ மலடி னு எல்லாரையும் நீ அப்படி நினைச்சா எப்படியாக்கும்... " என்று கத்த, சஹானாவின் கண்கள் கலங்கிக் கொண்டது. சலேரென திரும்பி சமரை ஒருமுறை பார்த்து வைத்தாள் பெண்ணவள்...


தலை நிமிர்ந்து வெளிவரத் துடித்த சில துளி கண்ணீரையும் உள்ளிழுத்து பேச ஆரம்பித்தாள் ...

" இங்க பாருங்க மா ... சாயந்திரம் 6.00 மணிக்கு மேல கலெக்டர் என்ற அதிகாரத்தை கழட்டி வைத்து சாதாரண பெண்ணா இருப்பேன். அப்போ முடிஞ்ச அளவு என்னைய திட்டுங்க... முக்கியமான மீட்டிங் ல இருந்து வந்து பேசிறேன்... உங்க பிரச்சனை தான் என்ன... " என்று கேட்க, அவரது கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. தனது கர்சீப்பினால் அவரது கண்ணீரை துடைத்து விட, அவருக்கு பக்கென்றானது.

கண்ணீரை தனது சேலை முந்தியில் துடைத்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

அப்புறம் வழிபோக்கா போகும்போது விளையாட்டிட்டு நின்ன என் மூணு வயசு குழந்தைய ஒரு கட்டை ல போன தெருநாயு கடிச்சு குதறிருச்சு " என்றவரின் வார்த்தைகளும் கண்களும் உடைந்து விழுந்தன. இதைக் கேட்டுக் கொண்டிருந்த சஹானாவிற்கு பகீரென்றிருந்தது.

" புள்ளைய எங்கெல்லாமோ நாங்க தூக்கிட்டு போனோம். அந்த பட்டிக்கு ( நாய் ) என்னமோ நோயாமே... அந்த சீக்கு என் புள்ளைக்கு வந்து என் புள்ள அந்த பட்டிய போலமே இறந்துட்டு.... என் ஒரே புள்ள போயிடுச்சு ... அந்த பட்டிய கல்லெடுத்து எறிஞ்சு எம் புள்ளைய காப்பாத்த பாத்தாரு னே ஊருல உள்ள ஒரு எடுபட்ட பய எவனுக்கோ ஃபோனி போட்டு போட்டுகுடுத்து எவனோ வந்து அவரை பிடிச்சு போய் ஜெயில் ல போட்டான்... நான் என்ன பணக்காரனா... ஜெயில் ல போட்ட அடுத்த நிமிஷத்துல பெயில் ல எடுக்க... அன்னன்னைக்கு சம்பாத்தியத்து ல ஆகாரம் திங்குற சாதா ஜனம்... " என்று அழுக, சஹானாவின் இதயமும் மௌனமாய் அழுதது...


உண்மை தானே... தெருவில் செல்லும் நாய்க்குட்டியை காக்க இருக்கும் blue cross போன்ற அமைப்பு மனிதனைக் காக்க இல்லாதது ஏன்...

இதற்கு நம் சஹானாவின் நடவடிக்கை தான் என்ன...

தொடரும்...

மக்களே... எபியோடு வந்துட்டேன்... கதையை படிச்சுட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க... உங்க யூகம் என்ன என்பதை தவறாமல் சொல்லுங்க 😍🤗 .


- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿
 
Top