• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 19

Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
Chap - 19




க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ் – மாலை 4.30 மணி. அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சுற்றி சுமார் ஐந்து கிலோமீட்டர் பரப்பளவில் எந்த சிறு கட்டிடம் கூட இல்லாத வகையில் மொத்தமும் அந்த தங்கும் விடுதிக்குச் சொந்தமானதாக இருந்தது. சென்னை மாநகரின் முக்கியமான முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் தொழிற்சந்திப்புகளை அவ்விடம் தான் வைப்பர். அந்த விடுதியில் தான் இன்று உதய் மாதவனின் தந்தை பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாடுவது ரகுநந்தனுக்கு பிரியமில்லாத ஒன்று ஆனால் தொழில் பழக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ளவும் புதிதாகச் செயல்திட்ட பணிகளைப் பெறவும் இது போன்ற கொண்டாட்டங்கள் அவசியமாகிவிட மார்க்கம் வேறு இல்லாமல் இன்முகமாய் ஏற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சரிலிருந்து உலகின் முன்னணி தொழிலதிபர்கள் எல்லாம் பங்கேற்கப்போகும் இந்த விழாவிற்குப் பாதுகாப்பு மட்டுமே அத்தியாவசியமாக இருக்க மொத்த விடுதியையும் ஆய்வு செய்து இப்பொழுது நுழைவாயிலில் ரிபில்லிருந்து, கேர்பின், க்ரேனேட் லான்ச்சர், சூசட் வரை ரக ரகமாகக் கையில் துப்பாக்கியுடன் நின்ற பாதுகாப்புப் படை வீரர்களைப் பார்த்தே அச்சம் எழுவது உறுதி.

வெண்மை ரோல்ஸ் ராய்ஸ் வளாகத்தினுள்ளே நுழைந்த பொழுதே அவனுக்கான வழியைவிட்டு காவலர்கள் நின்றிட, வாகனத்திலிருந்து இறங்கிய உதய் மாதவனின் வேகத்திற்கு ஜெயனும் பின்னாலே ஓடினான்.

“ப்ரிப்பரேஷன்ஸ் ஒன்ஸ் செக் பண்ணிட்டிங்க தானே?”

“எவ்ரிதிங் இஸ் பேர்பக்ட்லி சார்டட் சார். நீங்க ஒருதடவை பாத்துட்டு கான்பர்ம் பண்ணிட்டிங்கனா பெட்டெர்-னு எனக்கு தோணுச்சு” என்றான் ஜெயன் தன் கையிலிருந்த டாக்குமெண்ட் ஒன்றை தனக்கு பின்னாளிருந்த தன்னுடைய அசிஸ்டென்ட் கையில் கொடுத்தவாறே.

“ம்ம் எந்த ஃப்லோர்?”

“7th Floor சார்”

ரிசப்ஷன் டெஸ்க்கை தாண்டி அந்த நீண்ட வைட்டிங் பகுதியில் இருந்த 1000 சதுரடி இடத்தில், கிரேக்கர்களை ஒத்து அதன் வடிவமைப்பில் ஏரிக்கரையில் படுத்திருந்தவாறே ஒரு வாத்துடன் விளையாடிக்கொண்டிருக்கும் தன் இரு குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தைகளின் சிலையே வெர்சாய்ல்லேஸ் பவுண்டைன் வகையில் அமைத்திருந்தனர். அதைத் தாண்டி சென்ற எந்த மனிதருக்கும் நிச்சியம் அதன் நேர்த்தியான வடிவத்தையும், அதன் நீரால் எ.சி காற்றையே மிஞ்சிடும் குளுமை உடலில் பட்டு உரசுவதை உணருவர், அதில் உதய் மாதவன் என்ற சாதாரண மனிதனும் விதிவிலக்கல்ல.

கண் கவரும் செயற்கை அருவி போல் வழிந்துகொண்டிருந்த தண்ணீர் என்ன தான் பார்த்துப் பார்த்து கீழே விழாமல் டிசைன் செய்திருந்தாலும் குழந்தையைப் போல் அமைதியாகக் காட்சியளிக்கும் இயற்கையின் கணிப்புகளை நிர்ணயிக்க இயலாதே. தன்னை கண்டுகொலாமல் செல்பவனின் பார்வையை தன் பக்கம் ஈர்க்க அவன் மேல் பட்டும் படாமலும் சில துளிகளையே தெளிக்கவிட, தன் மேல் விழுந்த நீரின் குளுமையை உணர்ந்த நொடி வேகத்தை குறைக்காமல் அந்த பவுண்டைன் பக்கம் திரும்பி, தன்னை கண் சிமிட்டி சிரிக்கும் அதன் அழகில் அவன் இதழ் கடையோரம் புன்னகை வந்ததோ? வாய்ப்பு அதிகம் தான்.

லிப்ட் வந்ததும் அதன் வலது பக்கம் Welcome என்ற ஆங்கில சொல்லும் அதன் கீழ் சிறிதாக 7 Floor லூஸிடியா கேல்லிகிராபி வடிவில் கைகளால் பொறிக்கப்பட்டிருந்த அழகிய எழுத்துக்களைத் தாங்கிய போர்டில் சுற்றிலும் ஆர்ச்சிட், கர்னேஷன், ரோஸ் மற்றும் ஐவி, மைர்ட்லே மற்றும் க்ரேவிள்ளே இலைகள் கொண்டு கச்சிதமாகக் கண் பறிக்கும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தாலே தெரிந்தது தன் தந்தையின் பிறந்த நாள் விழாவிற்குத் தான் இந்த ஏற்பாடுகள் என்று.

லிப்ட்டில் நுழைந்தவன் ஏழாவது தளத்திற்கான பட்டனை அழுத்தி பாண்ட் பாக்கெட்டில் கை விட்டு, “ஈவென்ட் ஆர்கனைஷர் யாரை சொல்லிருக்கீங்க”

“லாஸ்ட் டைம் ஃபோஷ் ஃபோனி ஈவென்ட்ஸ் கொஞ்சம் இஸ்யூ பண்ணிட்டாங்க அதுனால இந்த தடவை எல்லாமே ஹரி, விஷ்ணு சார் தான் ஃப்லுட்ஸ் & பைனீஸ் ஈவென்ட் ப்லானர்ஸ் கம்பெனி அவங்க ஃப்ரன்டோட ஸ்டார்ட் அப்-னு ஒரு ச்சான்ஸ் கேட்டாங்க...” எல்லா முடிவையும் உதயிடம் ஒரு தரம் கேட்டு முடிவெடுத்துச் செய்பவன் ஸ்டார்ட் அப் கம்பெனி ஒன்றை நம்பி இவ்வளவு தூரம் அலட்சியமாய் இருந்துவிட்டோமோ என்ற பயத்தில் குரலை இறுதியில் குறைத்துவிட்டான்.

அவன் தயக்கத்தை உணர்ந்து ஜெயனைத் திரும்பிப் பார்த்த உதய், “தப்பே பண்ணிருந்தாலும் பயம் குரல்ல தெரிய கூடாது ஜெயன். அண்டர்ஸ்டாண்ட்?”

தன்னுடைய முதலாளியின் அழுத்தமான குரலில் அவன் தலை தானாக அசைந்தது, “அந்த ஈவென்ட் பிளானர்ஸ் பத்தி விசாரிச்சீங்களா?”

“பண்ணிட்டேன் சார் இது வரைக்கும் வெட்டிங், பேபி நேமிங் செரிமோனி அப்றம் கொஞ்சம் சின்ன சின்ன ஈவென்ட் ஆர்கனைஸ் பண்ணிருக்காங்க. பர்ஸ்ட் டைம் பெரிய ஈவென்ட் பன்றாங்க” என்றான் தேக்கி வைத்திருந்த தைரியம் அனைத்தையும் கொட்டி.

“லெட் மீ ஸ்பீக் ஸ்ட்ரெயிட் ஜெயன். மேல போய் நான் பாத்து ஏதாவது ஒரு மிஸ்டேக் கண்டுபுடிச்சாலும் உங்களோட போஸ்டிங்க்கு நீங்களே ஒருத்தர அசைன் பண்ணிட்டு போகலாம்” அவன் கோவப்பட்டிருந்தால் கூட ஜெயனுக்கு பெரிதாக உதறியிருக்காது, இவனோ வழக்கம் போல் ஒரு பார்வையில் தன்னுடைய மொத்த அபாய அறிக்கையை வாசித்துவிட்டான்.

‘டிங்’ லிப்ட் அவர்கள் வர வேண்டிய தளம் வந்ததை உணர்த்தத் தான் அணிந்திருந்த பிரௌன் நிற கூலர்ஸை கழட்டாமல் வெளியேறியவன், “டென் ரூம்ஸ் தனியா அலாட் பண்ணியாச்சா?”

“யா சார். உங்களுக்கும் ரகுநந்தன் சார்க்கும் ஸ்பெஷல் சுய்ட், ஜெயநந்தன் சார்க்கு ஒரு நார்மல் சுய்ட், உங்க சிஸ்டர்ஸ்க்கு ஒரு சுய்ட், அப்றம் ஹரி, விஷ்ணு சார்க்கு ஒரு சுய்ட். மத்த அஞ்சு சுய்ட் கெஸ்ட்ஸ்க்கு சுச்சுவேஷன் பாத்துட்டு குடுத்துக்குறேன் சார். இந்த ப்லோர்ல 9 ரூம்ஸ் மட்டும் தான் சார் அவைளப்பிலா இருந்துச்சு சோ எய்ட்த் ப்லோர்ல ஒரே ஒரு ரூம் மட்டும் அலாட் பண்ணிருக்கேன்”

பேசிக்கொண்டே செல்ல செல்ல அந்த மாளிகையின் பாதையும் நீண்டுகொண்டே செல்லும் எண்ணம். உள்ளுக்குள் இருப்பவர்களுக்கு அந்த இரவு போலவே காட்சியளிக்கும், அதற்குக் காரணம் கட்டிடத்தினுள் அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த மஞ்சள் விளக்குகளின் பிரகாசத்தை அந்த பளபளக்கும் தாஸோஸ் மார்பிலும் க்ரானைட் கற்கள் பதித்த தரையில் பட்டு எதிரொலித்து சுவர்களில் பாதியும் மேற்கூரையில் ஆங்காங்கு தொங்கும் கோஃகேட் மற்றும் கேப்பிடல் லைட்டிங் வகை சண்டிலீயர் விளக்குகளில் பட்டு கண்களைக் கூசாத வகையில் பளபளத்தது.

“எய்ட்த் ப்லோர்ல இருக்க ரூம் நான் யூஸ் பண்ணிக்கிறேன்” என்றான் உதய்.

“சார் அது நார்மல் சுய்ட் ரூம் தான், உங்களுக்கு கீழ இருக்க ஸ்பெஷல் லக்சுரி சுய்ட்”

“வேணாம் ஜெயன் தம்பிகளுக்கு குடுங்க. அவங்க தான் ஆசைப்படுவாங்க. எனக்கு நார்மல் ரூம் போதும். இன்னும் ஒன் ஹௌர்ல வீட்டுல இருந்து எல்லாரும் வந்துடுவாங்க, கி அவங்கிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிடுங்க”

பேசிக்கொண்டே வலது புறமாகத் திரும்ப, அந்த நீண்ட தளம் முழுதும் அந்த ஒரே ஒரு பார்ட்டி ஹால்க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே தெரிந்தது அந்த வட்ட வடிவிலான வெல்க்கம் கார்டு. முற்றிலும் ஆர்டிபிசியல் இலைகள் அடைந்திருக்க அதன் நடுவே பொன்னிற எழுத்துக்களால் வெல்க்கம் டு ரகுநந்தன்’ஸ் பர்த்டே பார்ட்டி என்ற எழுத்துக்கள் அழகாய் மின்னியது.

அதில் இடதுபக்க மேல் மூலையிலும், வலது பக்கத்தின் கீழ் மூலையிலும் வைட் மற்றும் கோல்டன் நிற பலூன்கல் சிறிதும் பெரிதுமாய் அலங்கரித்திருக்க வலது புறம் கீழே கோல்டன் ஸ்டாண்டில் வகை வகையாக கேன்டில்கள் சரியான நேரத்திற்கு ஏற்ற தயாரான நிலையிலிருந்தது. மொத்தத்தில் பேர்பக்ட். மெச்சும் பார்வையோடு உள் நுழைந்தான் உதய் மாதவன்.

மெல்லிய கிரீம் கலர் எண்ணப்படும் நிறத்தில் பிலௌன்ஸ் துணிகளும் அதற்குப் பின்னால் வண்ண விளக்குகளும் ஆங்காங்கு மிளிரி எளிமையான, அதே நேரம் பார்வைக்கு விருந்தாகவே இருந்தது.

அந்த நீண்ட ஹாலின் நடுப்பகுதி மொத்தத்தையும் ஆக்கிரமித்து ஒரு நீண்ட நெடிய இருநூறிலிருந்து முந்நூறு மனிதர்கள் அமரும் வகையில் டைனிங் டேபிள். அதிலிருந்த நாற்காலிகளுக்கு எல்லாம் கவர் அணிவிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. அப்படியே அந்த மேஜைக்கு இடது புறம் வட்ட வடிவில் குறைந்தது நாற்பது சிறிய டைனிங் டேபிள், அதைச் சுற்றி அழகிய நாற்காலிகள் ஏழு.

அந்த மேஜைகள் மேல் வெண்மை நிற டேபிள்கிலாத். அதன் நடுவில் கண்ணாடிக் குடுவைகளில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி ஒவ்வொரு மேஜையில் ஒவ்வொரு வித வண்ண மலர்க் கொத்துகளால் அலங்கரித்திருந்தனர். அதனூடே விலையுயர்ந்த கிரிஸ்டல் தட்டுகள் அதன் மேல் பூ வடிவில் டவல் ஒன்றும், அதன் இரு பக்கங்களிலும் கத்தி, போர்க், ச்சாப்ஸ்டிக், லைடில் வகை ஸ்பூன், சால்ட் என்று சகலமும் நேர்த்தியாக இருந்தது. வலது புறம் ஃபப்ட் வகை உணவிற்குப் பாத்திரங்கள் அனைத்தும் தயாராக இருந்தது.

அந்த அரை முழுதும் கொத்து கொத்தாகப் பூக்கள் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் அலங்கரித்திருக்க, அதன் நறுமணம் செயற்கை நறுமணத்திற்கு அதிகம் வேலை வைக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி பெரிதாய் அமைக்கப்பட்டிருந்த மேடையில் வண்ண விளக்குகள், பூக்கள் மட்டுமே வைத்து அவ்வளவு அழகாய் கண்களை வேறு எங்குமே மாற்ற இயலாத வகையிலிருந்தது.

“டேய் கைய எடுங்கடா” ஆக்ரோஷமாய் கத்தி பேசிய யாழினியின் பேச்சு தான் உதய் மாதவனின் நினைவைத் திருப்பி கொடுத்தது, அவளுக்கு ஏதோ என்று பயத்தில் உதய் திரும்ப அங்கு அவளைப் பார்த்து அப்படியே உறைந்துவிட்டான்.

மின்ட் நிற பட்டுப் புடவையில் வெள்ளி நிற ஜரிகை மின்ன, அதே வெள்ளி நிற ரவிக்கை அணிந்து தன் கூந்தலைச் சிறு கிளிப் கொண்டு முடிந்து வைத்திருக்க, அவள் அசைந்தாடும் செயல்களுக்கு எல்லாம் அவளைப் போலவே அடங்காத அவள் கூந்தலைக் கூட அடக்க விரும்பாமல் தன் கையிலிருந்த பெரிய தட்டையே ஹரி, விஷ்ணு மற்றும் ஒரு சிலரிடமிருந்து பாதுகாப்பதில் மும்முரமாய் இருந்தாள்.

“யாழினி, டேஸ்ட் பண்றதுக்கு தான எடுத்துட்டு வந்த அப்றம் ஏன் குடுக்க மாட்டிக்கிற?” என்றான் விஷ்ணு ஆனால் அந்த கூட்டத்தில் எவரும் தங்களுக்குச் சற்று தொலைவிலிருந்த உதய்யை பார்க்கவில்லை.

“சார், இது நமக்கு கொண்டு வரல, உங்க உம்மனான் மூஞ்சி அண்ணன் வருவாருன்னு உளவு துறைல இருந்து தகவல் வந்துச்சு”

மொறு மொறுவென பொறித்திருந்த சிக்கன் லாலிபாப் ஒன்றில் கை வைக்க வந்த ஹரியின் கையில் ஒரு அடி போட்டு முறைத்தவள், அந்த சிக்கன் அருகிலிருந்த ட்ரை குலாப் ஜாமுன் ஒன்றை எடுத்து வாயில் போட்டு, “அதுக்கு தான் அவருக்கு டெஸ்டிங் குடுக்க எடுத்துட்டு வந்துருக்கேன்” என்றாள் இன்னும் ஒன்று எடுத்து வாயில் போட்டு பேசினாள்.

“எங்க வீட்டுல கூட என் அண்ணனுக்கு நாங்க சாப்பிட்டது குடுத்தது இல்ல. இங்க நீ அசால்ட்டா எடுத்து சாப்பிட்டு அவனுக்கு குடுக்குற?” என்றான் ஹரி சகோதரனுக்காக சற்று கோவம் கூட அவன் குரலிலிருந்தது.

“எதுக்கு சார் கோவ படுறிங்க. இந்தாங்க எல்லாத்தையும் ஒரு நாள் மாத்தி தான ஆகணும்? இன்னைக்கு மாத்திடலாம். உங்க சார் என்ன மஹாராஜாவா? அண்ணன் தம்பி சாப்பிட எச்சிலை சப்புடா மாட்டாராமா?” இப்பொழுது அவள் வாயில் சுழற்றி சுழற்றி தள்ளியது சைனீஸ் கிரீமி ராமன்.

அவள் பேசுவதைத் தெளிவாகக் கேட்ட உதய் அமைதியாக நின்று அவளைப் பார்க்க, அவனுக்குப் பின்னால் நின்று அனைத்தையும் ஒரு பதட்டத்துடன் கேட்ட ஜெயன் அவளை நோக்கி நடக்கவிருக்க அவனைப் போக வேண்டாம் என்று தடுத்து நிறுத்தினான் உதய்.

“இன்னைக்கு சாப்பிடட்டும் சார். சார்ர்ர்ர்... இந்த நூடுல்ஸ் அப்டியே பால் குடிக்கிற மாதிரி சூப்பரா இருக்கு ஆனா என்ன எங்க தெரு முக்குல இருக்க நூடுல்ஸ் கடை தான் டாப், ஒரு நாள் வாங்க சாப்பிடலாம்...” தலையில் அடித்து, “பாருங்களேன் எங்க இருந்து எங்க போய்ட்டேன். ம்ம்ம் நான் எல்லாம் என் தங்கச்சிகிட்ட இருந்து ஒரு வாயாவது வாங்கினா தான் என்னோடதுல கை வைப்பேன், அதோட ருசியே தனி சார். இன்னைக்கு உங்க அண்ணனை சாப்புட வச்சிடலாம்.

இதுக்கே அந்த சமையல் மாஸ்டர் என்ன பாத்து மொறைச்சான் இன்னொரு தடவ எல்லாம் கேக்க முடியாது. இதுலையே ஆளுக்கு ஒரு பீஸ் எடுத்துக்கோங்க வேகமா சாப்புடுங்க சார்... அப்றம் உங்க மார்டன் இந்தியன் ஹிட்லர் கிட்ட பேச்சு எல்லாம் வாங்க முடியாது” என்று ஆளுக்கு ஒன்றைக் கையிலே எடுத்துக் கொடுத்தாள். “உண்மை தான் யாழினி, இப்ப வேலை பாக்காம நாம சாப்புடுறத பாத்தாலும் ரெண்டு நாள் கிளாஸ் எடுப்பான். ஆனா அவனுக்கு எங்க நான் திருட்டு மாங்கா வச்சு சாப்புடுறது எல்லாம் தெரிய போகுது? இந்த மலாய் சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கு” என்று கூறி விஷ்ணு சிரிக்க, யாழினியும் அவனுடன் இணைந்து சிரித்தாள்.

“யாழினி எப்படி இங்க? நான் இன்னைக்கு லீவு தான குடுத்தேன்” ஹரி, விஷ்ணு, யாழினி மூவரின் இந்த நெருக்கமான பேச்சு உதய்க்குச் சற்று ஆச்சிரியம் தான்.

“லீவு வேணாம்னு சொல்லிட்டு யாழினி தான் சார் என்கிட்டே பார்ட்டி அரேஞ்மென்ட்ஸ் பாக்கணும்னு என்கிட்டே கேட்டாங்க. நான் தான் ரொம்ப ஆசையா கேக்குதுன்னு பாஸ் குடுத்தேன்” இன்று ஏன் அனைத்தும் என் தலையில் விழுந்தது என்ற வருத்தம்.

இந்த பார்ட்டி ஹாலினுள் நுழைந்ததிலிருந்து அதன் அழகைக் கூட முழுமையாகக் காணாமல் உதய் முகத்தில் கோவமோ, புன்னகையோ, அதிருப்தியோ ஏதோ ஒன்று தெரியாதா என்று ஆராய்வதிலே பொழுதைச் செலவழித்தான், இப்பொழுது யாழினி...

“ம்ம்ம் சார் நெஜமாவே டேஸ்ட் பிச்சு உதறுது. உங்க சார்.... சீய் உங்க அண்ணனுக்கு புடிக்குமா?” போக்காச்சியா என்ற இத்தாலியன் வகை உணவை வாயில் போட்டு கேட்டாள் யாழினி.

“குடுங்க டேஸ்ட் பாத்துட்டு சொல்லிர்றேன்” சில நொடிக்கு முன் உண்ட உணவின் ருசியைப் பற்றிப் புகழ்ந்து தள்ளலாம் என்று வாயைத் திறந்த யாழினிக்கு அவன் குரல் தொண்டையை அடைத்துவிட்டது.

திடுக்கிட்டு தன்னை திரும்பி பார்த்த யாழினியை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி உதய் என்ன என்று கேட்ட நொடி அனைத்தும் அவ்வளவே... என்னமோ ஆகிவிட்டது அவளுக்கு.

அசடு வழிந்து அந்த பெரிய தட்டிலிருந்து ஒரே ஒரு சிறு பௌல் எடுத்து உதய் முன் நீட்டி, “இது மஸ்ரூம் கிரேவி, ஏதோ மெக்ஸிகன் குசைன்-னு சொன்னாங்க சார் சாப்பிட்டு பாருங்க” என்றாள்.

“ஏன் யாழினி உங்களுக்கு இது புடிக்காதோ?” முதலில் உண்மையை மறைக்காமல் அவள் தலை ஆமாம் என்று ஆட பிறகு வேகமாக இல்லை இல்லை என்று ஆட்டிவிட்டாள்.

“எலி புலிகிட்ட சிக்கிடுச்சு” அமைதியாக இருந்த தடையாமே தெரியாமல் ஆளுக்கு ஒரு பக்கம் நழுவ முயன்ற ஹரி விஷ்ணுவை கண்டு கொண்ட உதய் யாழினியிடமிருந்து தலையை திருப்பி, “ஹரி” அந்த அழைப்பிலே இருவரும் நின்றனர்.

“ஜெயன் கிட்ட கீ வாங்கிட்டு ரூம்க்கு போ” சகோதரன் மேல் இன்னும் கோவமிருந்த விஷ்ணு ஜெயனிடம் சென்று சாவியை வாங்க, ஹரியும் அவனிடம் கை நீட்டினான்.

“ஒரு ரூம் தான் சார்” என்றான் ஜெயன்.

“அண்ணா எனக்கு ரூம் இல்லையா?” சகோதரனிடம் கேட்டான் ஹரி.

“ஒரு ரூம் தான் இருக்கு. கெளம்பு நேரமாச்சு” இருவரும் சென்றால் நிச்சயம் பெண்களை விட தயாராக நேரமெடுப்பார்கள் என்று அறிந்து தான் முதலில் அவர்களை அனுப்ப எத்தனிக்கிறான் உதய் ஆனால் அதற்கு மற்றொரு காரணம் ஒரே அறையிலிருந்தால் இருவரும் பேசிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்று தான் இந்த வழி. மறுப்பு எதுவும் கூற முடியாமல் வேகமாக முகத்தை வெட்டி விஷ்ணு செல்ல, ஹரி தலையை வேண்டா வெறுப்பாக அசைத்துவிட்டு சென்றான்.

அவர்கள் இருவரும் சென்றவுடன் வேகமாக தன் கையிலிருந்த அந்த பெரிய தட்டை அருகிலிருந்த மேஜையில் வைத்து கையை கூட துடைக்காமல் அவனைப் பார்த்து நிமிர்ந்து, “சார் எல்லா அரேஞ்மென்ட்ஸ் பண்ணியாச்சு. ஒருத்தர ஒக்கார விடல சார், வெரைட்டி வெரைட்டி வேலை வாங்குனேன். இங்க பாருங்களேன் இந்த டேபிள் ஆர்டர் கூட நான் தான் சொன்னேன்”

அப்படியே நடந்தவள் சுவரைச் சுட்டிக்காட்டி, “இங்க அவங்க பலூன் வித் ப்லவர் வைக்கலாம்னு சொன்னாங்க. நாம என்ன குழந்தையோட பர்த்டேவ செலிப்ரேட் பண்ணையா வந்துருக்கோம்? ஆசை தான் எல்லாரும் பலூன் பாத்தா நல்லா தான் இருக்கும் ஆனா இங்க சார்க்கு தான பர்த்டே அதுக்கு தான் போதும் சுத்தி பூவா வச்சு விடுங்கனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன்.

பாருங்க இதுல கூட கொஞ்சம் வளைஞ்சு கோணலா இருக்கு” என்றவள் அந்த பூங்கொத்தினை சரியாக வைக்க எக்கி முயல, அவள் உயரத்திற்கு அது எட்டவில்லை ஆனால் அவளை மொத்தமாய் உதய் பார்க்க வழி செய்து கொடுத்தாள். எப்பொழுதும் அடக்கி பின்னியிருக்கும் அவள் வளர்ந்து நீண்டிருந்த கூந்தல் இப்பொழுது அவள் இடையைத் தொட்டு விரிந்து படர்ந்திருந்தது.

செய்த தவற்றை மறைக்கப் போராட அவள் படும் பாடை அவள் கழுத்தில் பூத்திருந்த வேர்வை துளிகள் கூற, அதை இன்னும் வலுக்கும் பொருட்டு அந்த பூவை சரி செய்கிறேன் என்று சற்று குதித்து முயன்றும் தோல்வியே. ஆனால் அவன் கண்களுக்கு விருந்தாக, அவள் இடுப்பு மடிப்பு விலகி அவள் அப்பழுக்கற்ற இடையைக் காட்ட, அவளிடம் ஏற்கனவே மயங்கி நின்றவன் இப்பொழுது உரிமையோடு கண்கள் அவளைத் தொடர்வதைத் தவிர்க்க முடியாமல் நின்றான்.

ஜெயனிடம் திரும்பி, “இத அரேஞ் பண்ண சொல்லுங்க ஜெயன், என் கீ தாங்க” சாவியை வாங்கி, “யாழினி மிஸ்டர் பிரவுன் பைல் வச்சிருக்கீங்களா?” சில மணி நேரங்களாகச் சற்று கலைத்திருந்தவள் சேலை இப்பொழுது அவள் குதித்ததில் மொத்தமாகக் கலைந்திருந்தது, அவள் உடனடியாக அதைச் சரி செய்திருந்தாலும் இன்னும் சீராகவில்லை.

“ஜெயன் அண்ணா கிட்ட தான் சார் இருக்கும்” ஜெயனும் உடனே அதை உதையிடம் கொடுக்க, அதை வாங்கி யாழினியைப் பார்த்து “கம் வித் மீ” சுற்றிலும் ஆண்கள் கூட்டமே இருக்க அவளை அவ்விடம் விட்டு அழைத்துச் செல்லத் தான் அந்த கோப்பு ஒரு காரணம்.

நிச்சயம் ஒரு மாரல் கிளாஸ் உள்ளது என்று தன்னையும் தன் நாக்கையும் கருவிக்கொண்டே அவன் பின்னால் சென்றாள். வேகமாகச் சென்றவன், மார்பில் கல்லில் அவள் பிம்பம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே படியை நோக்கிச் செல்ல, “சார் லிப்ட்” என்றாள் வேகமாக.

“ஒரு ப்லோர் தான் வாங்க” என்று மேலும் நடக்கலானான்.

“சார் கால் வலிக்கிது” அதற்குமேல் போவானா? லிப்ட் இருந்த பக்கமே நடந்தான்.

லிப்ட் கதவு திறந்ததும் அதில் முதலில் உதய் மாதவன் செல்ல அவனைத் தொடர்ந்து யாழினி அவனுக்கு முன்னால் நிற்க, அவளுடைய தெளிவான இடை மேலும் அவன் கண்களுக்கு விருந்தானது. நல்ல வேலை லிப்ட் வெகு சீக்கிரமே அடுத்த தளத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து உதய் அவனுடைய அறைக் கதவைத் திறந்து உள்ளே செல்ல ஒரு தயக்கத்தோடு நெளித்துக்கொண்டு வெளியிலே நின்றாள் யாழினி.

உள்ளே சென்று ஹோட்டல் கீ கார்டை மாட்ட அந்த மொத்த அறையுமே வெளிச்சத்தில் மின்னியது, அதன் பிறகு தான் உதய் யாழினி இல்லாததை உணர்ந்து பார்க்க அவள் அப்டியே வெளியிலேயே தன்னுடைய ஹாண்ட் பாக்கை கெட்டியாகப் பிடித்து நின்றாள்.

“என்ன உள்ள வாங்க” என்றான் உதய்.

“சார் நான் இங்கையே நிக்கிறேனே...” என்றாள் சங்கடமாக.

அவள் தயக்கத்தை உணர்ந்த உதய், “உள்ள வாங்க யாழினி” கதவை அப்படியே திறந்து உள்ளே சென்றுவிட்டான். யாழினிக்கு வேறு வழியே இல்லாமல் உள்ளே சென்று கதவை மூடாமல், “கதவு தொறந்தே இருக்கட்டும் சார், வேற்குது காத்து வரும்ல” இவள் எதற்காகக் கூறுகிறாள் என்று உணர்ந்தவன், பேசாமல் சென்று கதவை அடைத்து எ.சியை உயிர்ப்பித்து முதலில் அவளை ஆராய்ந்து அவள் கால்களைத் தான்.

“கால் வலி இன்னும் இருக்கா?”

அவனுக்கு பின்னாளிருந்த கதவையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், “ம்ம்ம் நல்லா இருக்கு சார்” புடவையைச் சற்று தூக்கிக் காட்டினாள்.

‘ம்ம்ம்ஹ்ம்’ மனதிலே பெரும் மூச்சு விட்டு, “போய் ரெப்ரெஸ் ஆகிக்கோங்க” சேலையைச் சரி செய்யுமாறு நேரடியாகக் கூற முடியாமல் மறைமுகமாய் ஆணையிட்டான்.

“தேவையில்லை சார். நான் கீழ போகவா?” நின்ற இடத்திலே நெளிந்துகொண்டே பேசினாள்.

அவள் தன் மேல் நம்பிக்கையில்லாமல் தான் இப்படி வெளியில் செல்ல துடிக்கிறாள் என்றதைப் புரிந்து அவனுக்கு கோவம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது, “நம்பிக்கை இல்லனா அப்டியே வெளிய போ, எதுக்கு பெர்மிஷன் கேட்டுட்டு நிக்கிற? டிஸ்கஸ்டிங்” மொத்த கோபத்தையும் குரலில் கொட்டி வேகமாக அங்கிருந்த மேஜை ஒன்றில் அமர்ந்து கோட் சுய்ட்டை கழட்டி மெத்தையில் எரிந்து தான் கொண்டு வந்த கோப்பை எடுத்து அமர்ந்துவிட்டேன்.

“எப்ப பாரு முட்டையை பாதுகாக்குற டிராகன் மாதிரி நெருப்பை கக்கிக்கிட்டே இருக்குறது. ஒரு பொண்ணு தனியா ஒரு ரூம்குள்ள கூட்டிட்டு வந்து கதவை சாத்த இது என்ன அவரு ஆபீஸா இல்ல நான் தான் அவரு பொண்டாட்டியா? பாக்குறவன் என்ன பேசுவான்னு ஒரு நெனப்பு வேணாம்?” உரிமையாய் அவனைத் திட்டிக்கொண்டே குளியலறை நோக்கிச் சென்று அதன் அழகில் மொத்தமாய் தன்னை மறைந்து நின்றாள்.

அந்த குளியலறையை அவள் வீட்டின் பாதி அளவிலிருந்தது, அத்தனை ஆடம்பரம், அதையும் தாண்டி வார்டிரோப் அந்த குளியலறையை விடப் பெரிது, அதில் அயர்ன் பாக்ஸ், ஹேர் ட்ரையர், ஐந்தாறு டவல், பாத்ரோப் எனச் சகலமும் இருந்தது, வியப்பாக அனைத்தையும் பார்வையிட்டவள் முகத்தைக் கழுவி, சேலையைச் சரி செய்து, தன் பையிலிருந்த சீப்பை வைத்து தலை வாரி அனைத்தையும் முடித்து வெளியில் வந்தாள். அவள் வெளியில் வந்த பொழுது ஏதோ புத்துணர்ச்சியாக உதய்யின் மணம், அவன் இப்பொழுது தான் குளித்து வந்துள்ளன என்று கூறியது.

‘எப்படி குளிச்சாறு?’ கேள்வி ஒரு பக்கம் மறு பக்கம் வெளியில் செல்லலாமா என்ற தயக்கம். மெதுவாக எட்டிப் பார்த்தவளுக்கு, கருப்பு நிற சட்டையை அணிந்துகொண்டிருந்தவன் தெரிய, நிம்மதியாக வெளியில் வந்தாள். அவள் கொலுசொலியை அறிந்தும் திரும்பாமல் வுட் அண்ட் மேடொவ் வைட் சுய்ட்டை அறிந்தவனை பின்னாலிருந்து வெறித்து வெறித்துப் பார்த்தாள்.

“சார் கோவமா?” தன்னுடைய முதலாளியிடம் பேசுகிறோம் என்ற எண்ணமே மறந்து போனது அவனது உரிமை கோவத்தில்.

மௌனம்.

“சார்ர்ர்ர்...”

மீண்டும் மௌனம்.

“பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க சார். உங்களுக்கு ஒன்னும் அது பெருசா அபக்ட் பண்ணாது ஆனா நான் தான் தான் தப்பே பண்ணாம எல்லா போரையும் வாங்கிக்கணும். அதுக்கு தான் சார் வெளியவே நின்னேன், உங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தா வெறும் ஸ்கிரீன் க்லாத் மட்டும் மூடி இருக்குற வாஷ்ரூம்ம யூஸ் பண்ணிருக்க மாட்டேன்”

எத்தனை அழகாய் அவன் மேல் இருக்கும் நம்பிக்கையைக் கூறிவிட்டாள் ஆனால் அவனுக்குத் தான் பதில் பேச முடியவில்லை. அமைதியாகத் திரும்பி தன்னை ஆழ்ந்து பார்த்தவன் கம்பீர தோற்றத்திலும் உடை தேர்விலும் யாழினிக்குப் பெருமூச்சு தான் வந்தது.

“நீங்க கீழ போங்க” என்றான் எதுவும் நடக்காதது போல்.

உடனே அவள் குரலின் தீவிரத்தை மொத்தமாய் மாற்றி, குறும்பாய், “அப்ப நீங்க என் மேல கோவமா இல்ல தான?”

அந்த சிரித்த முகத்தைப் பார்த்து தன் இதழில் வந்த சிரிப்பை அடக்கியவன், “நாளைக்கு உங்க ஒர்க்க ரெண்டு மணி நேரம் எக்ஸ்டெண்ட் பண்றேன்” என்றான் சீரியஸாக.

அவன் கூறியதில் சற்று துள்ளிக் குதித்துச் சிரித்தவள், “மூணு விசியம் சொல்லணும் சார்...”

ஏதோ சொல்ல வருகிறாள் என்று அவன் பார்க்க, “ஒன்னு இந்த மாதிரி பனிஷ்மென்ட் கூட நல்லா தான் இருக்கும் நீங்க இருந்து லக்சர் கொடுத்துட்டே இருந்தா... ரெண்டு, போங்க வாங்க வேணாம். கோவத்துல பேசுனீங்கள்ல நீ, போ-னு அப்டியே கூப்புடுங்க. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்” அவள் கண்கள் அவன் சீராக வாரிய தலை முதல் கிரிஸ்ப் சுய்ட்டை அணிந்த கால்கள் வரை பார்த்து, “நீங்க ரொம்ப ஹாண்ட்சமா இருக்கீங்க” சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்.

“உன்ன விட கம்மி தான் யாழி” ஓடி சென்ற பெண்ணை பார்த்து மனதிலே பேசி சிரித்தான்.

யாழினி சிரிப்பு செய்த சிறிய மாயத்தில் அகம் மகிழ்ந்து புத்துணர்ச்சியோடு சிறிது வேலைகளைப் பார்த்து விழா தொடங்க அறை மணி நேரம் முன்பு வந்தவனை நிறுத்தி யாழினி சில சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருக்க, “மாமா” என்ற உற்சாகமான குரலில் உதய் இதழ்கள் பெரிதாக விரிந்து புன்னகை சிந்தியது.


யாழினிக்கோ அதிர்ச்சி, இவனா சிரிப்பது என்று? சிரிப்பிற்குக் காரணமான குரலைப் பார்த்து அவளுக்கு மேலும் அதிர்ச்சி. அழகாய் சிறு குழந்தையின் முகம், அதில் அப்படி ஒரு சாந்தம்.
 
Administrator
Staff member
Messages
997
Reaction score
2,809
Points
93
ஆஷ் கலர் எ லைன் பார்ட்டி கவுன் அணிந்து அழகாய் காட்சியளித்த அந்த பெண் உதய் அருகில் வந்து, “மாமா நீங்க வழக்கம் போல ஹாண்ட்சமா இருக்கீங்க” உதய் திரும்பி யாழினியைத் தான் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான்.

“தேங்க்ஸ் மணி. சென்னைக்கு வந்த இத்தனை நாள்ல உனக்கு இப்ப தான் என்ன பாக்குற நேரம் வந்துச்சா?”

வேகமாகத் தலையைத் தலையை ஆட்டி, “இல்ல மாமா எனக்கும் உங்கள பாக்கணும்னு ஆசை தான் ஆனா அப்பா தான் உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்க” ஆம் அதே மணிமேகலை தான். ஆதியின் மான்குட்டி.

“மாமா கைக்குள்ள இருந்து நீயும் வர மாட்ட அவரும் விட மாட்டாரு, எப்ப உனக்காக நீ வாழுறன்னு நானும் பாக்றேன்”

“அதெல்லாம் இருக்கட்டும் எங்க எங்க எடுங்க” என்று அவன் முன் கையை நீட்டி உரிமையாய் கேட்க யாழினி கண்ணைச் சிமிட்டி சிமிட்டி பார்த்தாள் நம்ப முடியாமல்.

அவனும் சிரித்துக்கொண்டே, “என்ன எடுக்கணும்?”

அவளைச் சீண்ட உதய்க்கு மிகவும் பிடிக்கும். சிணுங்கிக்கொண்டே, “ம்ம்ஹ்ம்ம் மாமாஆஆ...” கால்களை உதைத்து உதைத்து அவனிடம் வேண்டினாள்.

“சரி அழுகாத” தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து அவள் வருவாள் என்று அறிந்து ஒரு பெரிய டைரி மில்க் ப்ரூட் அண்ட் நட்ஸ் சாக்லேட் ஒன்றையும் அதோடு ஒரு டைரி மில்க்கின் கூப்பனையும் கொடுத்தான். இது அவர்களுக்குள் இருக்கும் சிறு வயது பழக்கம். எப்பொழுதெல்லாம் உதய் மணிமேகலையை பார்க்கிறானோ அப்பொழுதெல்லாம் அவளிடம் சாக்லேட் பார் ஒன்றைக் கொடுத்துவிடுவான்.

“அய்ய்ய்ய்... தேங்க் யூ சோ மச்” என்றவள் அவன் கைகளை கெட்டியாக பிடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆனால் இதை பார்த்த யாழினி தான் உதட்டை சுளித்து பொறாமையை வெளிப்படுத்தினாள்.

“பை மாமா. அப்பா தேடுவாங்க” என்றவள் யாழினியையும் பார்த்து விரிந்த புன்னகையுடன், “பை” என்று சிட்டாய் பறந்துவிட்டாள்.

“பாக்கெட்ல எப்பையுமே சாக்லேட் வச்சிருப்பீங்களோ சார்?” பொறாமை இல்லை, ஆனால் சிறு பொறாமை தான்.

“ஏன் உங்களுக்கு வேணுமா?”

“ச்ச ச்ச நான்லாம் சாக்லேட் சாப்புடுற ரகம் இல்ல சார். சூடா, காரணமா வகை வகையா சாப்புடுவேன்”

கண்களில் கனவு மின்னப் பேசிய அவளைக் கண் திருப்பாமல் பார்த்தவன் பிறகு சுற்றம் உணர்ந்து, “கேக் ஒரு தடவ செக் பண்ணிட்டு வாங்க” என்று திசை திருப்பி அனுப்பி வைத்தான்.

அதே நேரம் ஜெயன் உதய்யிடம், “சார் மிஸ்டர் பிரவுன் ஹோட்டல் இன்னும் பிப்டீன் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவாரு”

“ஓகே நான் தம்பிகளை போய் ரிசிவ் பண்ண சொல்றேன். மாமா வந்துட்டாரா?”

“யா சார் ரகுநந்தன் சார் கூட அவர் ரூம்ல இருக்காங்க”

“ஓகே அப்பாவையும் சித்தப்பாவையும் முன்னாடி வந்து நிக்க சொல்லுங்க கெஸ்ட் எல்லாரும் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. முக்கியமா மிஸ்டர் பிரவுன் பக்கத்துலயே நீங்க இருங்க இன்னைக்கு ஒரு நாள் அவர் மட்டும் தான் உங்க போக்கஸ் என்ன நான் பாத்துக்குறேன்” என்றவன் ஜெயனை அனுப்பி வைத்து ஹரியை அழைத்தான்.

“பிரவுன் கீழ வந்துடுவார் போய் ரெண்டுபேரும் ரிசிவ் பண்ணிட்டு வாங்க”

“சரி ண்ணா” என்று நடக்கவிருந்தவனை மீண்டும் அழைத்து, “ட்ரிங்க்ஸ் பக்கம் ரெண்டுபேரும் போகவே கூடாது அவன்கிட்ட முக்கியமா சொல்லிடு” எச்சரிக்கையாக கூறினான்.

“நீங்களே அவன்கிட்ட சொல்லிடுங்க” என்றான் ஹரி முகத்தைச் சுருக்கி வைத்து.

“இது பிஸ்னஸ் நம்மளோட சொந்த விருப்பு வெறுப்பை தள்ளி வச்சுக்கணும்” மேலும் அவனை நெருங்கி வந்து அவன் ப்லேஷரை சற்று தளர்த்திவிட்டு டையை அவிழ்த்தான், “இன்னும் டை ஒழுங்கா கட்ட தெரியலல? ஸ்கூல் பழக்கம் இன்னும் உன்ன விட்டு போகல” என்றான் மெலிதாக புன்னகைத்து.

அவன் பாசத்தில் மொத்தமாய் கரைந்த ஹரி இன்னும் தயக்கத்தோடு கேள்வி எழுப்பினான் “எங்க மேல உனக்கு கோவமா ண்ணே?”

ஹரியின் கேள்வியில் உடனே முகத்தை உணர்ச்சிகளற்று மாற்றி, “பொறந்ததுல இருந்தே ஒண்ணா ஒட்டி வளந்தவங்கள தூரத்துல வச்சு பாக்குறதோட வலி உயிரோட நெருப்புல நிக்கிறதுக்கு சமம்” டையை மாட்டி விட்டு காலரையும் சரி செய்து தங்களையே ஏக்கமாகத் தூரத்தில் நின்று பார்த்த விஷ்ணுவைத் தலையை அசைத்து அருகில் அழைத்தான் உதய்.

“வில்லியம் பிரவுன்ன ரிசிவ் பண்ணிட்டு வாங்க வித் ஆல் ரெஸ்பெக்ட்” விஷ்ணு சரி என்று மட்டும் தலையை அசைத்து முன்னே நடக்க, தன்னை பற்றி எல்லாம் துளியும் கவலை இல்லாமல் இப்பொழுதும் விஷ்ணுவிற்காகப் பேசுபவனை எந்த கேட்டகிரியில் சேர்ப்பதென்று தெரியாமல் விஷ்ணுவை பின் தொடர்ந்தான் ஹரி.

அடுத்த சில நிமிடங்களில் அவன் தந்தை, சித்தப்பா வரவும் வில்லியம் பிரௌனை தக்க மரியாதையோடு வரவேற்று உபசரித்தனர். அதன் பிறகு, முக்கிய பிரபலங்கள், திரைத் துறையினர், அரசியல் பிரமுகர்கள், தொழில் துறை நண்பர்கள் என அந்த மொத்த பார்ட்டி ஹாலும் நிரம்பி வழிந்தது. நிற்கவே நேரமில்லாமல் ரகுநந்தனும், ஜெயநந்தனும் முதலமைச்சரிலிருந்து, சிறிய தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் கவனிப்பு சரி சமமாகக் கொடுக்க, மற்றொரு புறம் தன் சகோதரர்கள் இருவரையும் எந்நேரமும் அருகிலே வைத்து அங்கிருந்த அத்தனை மனிதர்களுக்கும் இருவரையும் அறிமுகம் செய்து வைத்து, தன் பேச்சில் இருவரையும் கட்டிப்போட்டு வைத்தான்.

அந்த நீண்ட ஹாலின் முன் இருக்கையிலிருந்து பேச்சும் அறிமுகமும் தொடர்ந்து, அவர்கள் அந்த ஹாலின் கடைகோடியில் இருந்த சமயம் அவன் அலைபேசி சிணுங்க அதில் வந்த ஆதவனின் எண் என்பதால் அழைப்பை ஏற்று, “ஒரே ஹால் குள்ள இருக்கறப்ப எதுக்கு கால் நேர்ல வா” என்றான்.

“உதய் கொஞ்சம் பிரச்சனை” என்றான் ஆதவன். அவன் குரலிலிருந்த தீவிரத்தினை புரிந்து, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று கூட்டத்தை விட்டு சற்று விலகி வந்து, “யார்?” என்றான்.

“ஆதி” அழைப்பைத் துண்டித்து வேகமாக உதய் மேடை பக்கம் செல்ல அங்குச் சரியாக வில்லியம் பிரவுன் அருகில் அமர்ந்து எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தான் ஆதி கேசவன்.

அவனுக்கு சற்று தள்ளி ஜெயன் நிற்க உதய்யை கண்டதும் அவன் அருகில் வந்து எதுவும் பேசாமல் நின்றுகொண்டான்.

முகத்தில் வளர்ந்திருந்த தாடி இல்லாமல் இரண்டு நாள் பியர்ட் வைத்து, திருத்திய முடி, பார்மல் ஸ்கை ப்ளூ ஷர்ட் எனக் கச்சிதமாக அமர்ந்திருந்தான். அந்த நீல மேஜையில் உதயைப் பார்த்து ஆதி அமர்ந்திருக்க, வில்லியம் பிரவுன் முதுகு புறம் உதய்யை நோக்கி இருந்தது. வில்லியத்திடம் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்த ஆதி கண்கள் எதார்த்தமாக மேலே உயரும் பொழுது உதய்யை பார்க்க, அங்கு ஒருவன் அப்படி இல்லாதது போல் மீண்டும் அவரிடம் பேசும் தீவிரத்தில் மூழ்கினான்.

“உதய்” என்று ஆதவன் அவன் அருகில் வந்து நிற்க, “இவன் எப்படி ஆதவா இங்க வந்தான்?” கோவம் மட்டுமே இப்பொழுது உதையின் குரலிலும் கண்களிலும்.

“தெரியலடா இன்விடேஷன் இருந்தா மட்டும் தான் உள்ள அலோவ் பண்ணனும்னு சொல்லி தான இருந்தோம்?” ஆதவனுக்கும் ஒன்று புரியவில்லை, “ஆனா இவன் எதுக்கு உன்னோட கிளைன்ட் கிட்ட பேசணும்? அந்த நீரஜ் கூட அமைதியா தானடா இருக்கான்”

“அது ஆதி கேசவன் தான உதய்?” தன அருகில் வந்து நின்ற தந்தையைப் பார்த்தவன் எதுவும் பேச முடியாத நிலையில், ‘ஆம்’ என்று தலையை மட்டும் ஆட்டினான்.

“எதையாவது எங்ககிட்ட மறைக்கிறீயா உதய்?” அவனுக்கு மற்றொரு பக்கம் வந்து நின்றார் ஜெயநந்தன், “கொஞ்ச நாளாவே நீ சரியில்ல உதய். வீட்டுலையும் சரி ஆபீஸ்லயும் சரி”

அவர் பக்கம் திரும்பியவன், “அப்டில்லாம் இல்ல சித்தப்பா. கொஞ்சம் ஒர்க் அதிகமாகிருக்கு அதுனால தான் நான் வீட்டுக்கு வரல. நான் பாத்துக்குறேன்” தன் பிரச்சனைகள் எப்பொழுதும் என்னுடனே முடியட்டும் என்று நினைப்பவன் இதையும் பெரியவர்களிடம் மறைத்தான்.

“அந்த ஒரே ஒரு நம்பிக்கைல தான் உதய் ஆபீஸ்க்கு கூட நாங்க வர்றது இல்ல. முப்பது வருஷம் உழைப்பு. அந்த உழைப்பையும் எங்க நம்பிக்கையையும் வீணாக்கிடாத” அழுத்தமாய் மகனிடம் கூறி அவ்விடம் விட்டு அகன்றார் ரகுநந்தன்.

“நீ செத்தா கூட பிஸ்னஸ் பாத்துட்டு சாவுன்னு சொல்லுவாங்க போல. என்னடா இப்டி இருக்காங்க” வருத்தத்தை மறைக்க கோவமாய் பேசினான் ஆதவன்.

“ஆதவா...” கண்டிக்க உதய் குரலுயர்த்த, “போடா எதுக்கு எடுத்தாலும் என் வாய அட. தோ அடுத்து ரெண்டு டிக்கெட் வருது. பக்கிங் இரிடேட்டிங்” தங்களுக்கு இடதுபுறம் வந்து நின்றனர் ஹரி, விஷ்ணு.

“என்ன பிரச்னை” என்று வந்த விஷ்ணுவை அப்படியே நிறுத்தி, “நீ தான்டா பிரச்சனை அப்டியே கீழ குதிச்சு செத்து போறியா? வந்துட்டான் பஞ்சாயத்தை தீக்க சொம்பை தூக்கிட்டு” ஆதவனின் கோவத்தில் வாயைத் திறவாமல் இருவரும் வந்த வழியே சென்று ஓரமாக நின்றுகொண்டனர்.

அப்பொழுது ஆதி ஒரு ஆவணத்தை எடுத்து அவர் முன் நீட்டி ஒவ்வொரு பக்கத்தையும் பார்த்து ஒன்று சொல்ல, உதய் தான் நின்ற இடத்திலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து அவன் ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்தான்.

“இது உன் மாமா அன்னைக்கு ஆதியை பாக்க போறப்ப அவன்கிட்ட வச்சிட்டு வந்த பைல் தான?” உதய் ஆமாம் என்று ஆட்டினான் ஆனால் கண்கள் ஆதியை விட்டு அகலவில்லை.

“கண்டிப்பா ஏதோ சரி இல்ல ஏதாவது பண்ணுடா” உதய்யை விரட்ட முயன்றான் ஆதவன்.

“அவனை போய் தடுக்க முடியாதுடா அதையும் மீறி போனா நமக்கு தான் கெட்ட பேர். எவ்ளோ தூரம் அவன் போக முடியுமோ போகட்டும்” அமைதியான குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது.

“அதுக்குன்னு சும்மா இருக்க போறியா உதய்?”

“அவன் அறிவாளிடா, அத விட என்ன நல்லா படிச்சவன். இந்த ப்ராஜெக்ட் எனக்கு எவ்ளோ முக்கியம்ன்னு தெரிஞ்சு தான் என்னோட பலத்தோட மோத வந்துருக்கான். அதுக்கு தான் என்னோட கோவத்தை தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறான். இந்த இடத்துல நான் கோவப்பட்டு அவனை ஜெயிக்க வைக்கணுமா?” மென் சிரிப்பு ஒன்றுடன் விளக்கத்தை கொடுத்தான் உதய்.

எரிமலையை அடக்கி அடக்கி வைத்தால் அதன் சீற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர இயலா நிலை வரும். அதை போலவே தன் கோவத்தை கட்டுப்படுத்தி நிற்கும் உதய் மாதவனின் சிரிப்பு கூட ஆதவனுக்கு திகிலை உருவாக்கியது.

“அவன் ஏதோ கோவத்துல பன்றான்டா” ஆதியை காப்பாற்ற தன்னால் இயன்ற முயற்சியை எடுத்துக்க துடித்தான் ஆதவன்.

“கைல பென்ன ஒழுங்கா புடிக்க முடியல, கழுத்து வலி அதிகமா இருக்கு, முதுகுல வாங்குன கத்தி குத்து கூட இப்பையும் வலிக்கிறனால கழுத்து வலிக்கு சார்ல சாஞ்சு கூட அவனால ஒக்கார முடியல. இவ்வளவு வலியோட இருக்கறவன் கோவத்துல வந்துருப்பான்னு நனைக்கிறியா ஆதவா? நிறுத்தி நிதானமா யோசிச்சு வெறில இந்த அடிய எடுத்து வச்சிருக்கான். அவன் ஓன் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ற மாதிரி ஐடியா இருக்கானு விசாரி அடுத்த அடிய நான் எடுத்து வைக்கிறேன்” என்றான் தீர்க்கமாக.

“இல்லடா...”

“வேணாம் ஆதவா. தப்பே பண்ணாம அதோட பழியை ஏத்துக்குற அளவு நான் நல்லவன் இல்ல. இங்க இருக்குற எல்லாரையும் பொறுத்த வரைக்கும் நான் கெட்டவன் தான? அப்டியே இருந்துட்டு போறேன், அது அவனுக்கும் சேத்து தான்”

“உங்களுக்குள்ள எதுக்குடா ஈகோ எல்லாம்? நீங்க அப்டி இல்லடா” ஆதவனால் இவர்கள் இருவரையும் இப்படி பார்க்க முடியவில்லை. எந்நேரமும் ஒன்றாக, ஒருவருக்கு ஒருவர் துணையாக, தன்னுடைய தாய் தந்தையை விட அதிகம் நேசம் கொண்டது நண்பன் மேல் தான், அப்படி இருந்தவர்களை இந்நிலையில் பார்க்க வேதனையாக இருந்தது.

“ஒரு வேலை நாங்க அப்டி தான் போல, அது இப்ப தான் எங்களுக்கு புரிஞ்சிருக்கலாம். ஊர் உலகமே அவனை பத்தி என்கிட்டே தப்பா சொல்லிருந்தாலும் என் மனசுக்கு தெரிஞ்சிருக்கும்டா அவனோட குணம். அப்றம் ஏண்டா அவனுக்கு என்ன பத்தி தெரியாம போச்சு? நான் அவனோட அப்பா பிஸ்னஸ் பேர கெடுத்துருப்பேனா? அதுவும் அவர் இந்த உலகத்துலயே இல்லாத சமயம்? அத விட போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னான் பாரு, அவனை கொல்ல டாக்டர் கூட்டிட்டு வந்தேனாம்” தோள் குலுங்க சிரித்தான், “ம்ம்ம் நடக்கட்டும்” என்றவன் அதே சிரித்த முகத்துடன் பார்வையை மாற்றினான்.

ஆதி மற்றும் பிரவுன் இருவரின் பேச்சு அடுத்த சில நிமிடங்கள் தொடர அவர் எழுந்து ஆதியிடம் கை குலுக்கி அவன் தோளில் தட்டி பிறகு உதய் நோக்கி வந்து, “வில் காண்டாக்ட் யூ சூன் மிஸ்டர் உதய்”

“லெட் மீ வாக் வித் யூ சார்” என்று அவருடன் ஹாலை விட்டு வெளியில் நடந்தவன் ஜெயனை வர வேண்டாம் என்று சைகை செய்து சென்றான்.

அவர் செல்லும் வரை காத்திருந்தவன் சிறிது நேரம் அங்கிருந்த ஒரு இருக்கையில் முகத்தை மூடி அமர்ந்தவன் சில நிமிடங்கள் தன்னையே ஆசுவாசப்படுத்தி மீண்டும் பார்ட்டி ஹால் சென்றவன் நுழைவாயிலை நெருங்கிய பொழுது தன் சட்டையிலிருந்த ஒரு மாத்திரையை எடுத்து உண்டவன் உள்ளே நுழைந்ததும் ஒரு கண்ணாடி டம்ளரிலிருந்த தண்ணீரை எடுத்து அருந்தி ஆதி எங்கிருக்கிறான் என்று ஆராயத் துவங்கினான்.

“அங்க இருக்கான் பாரு” பின்னாலிருந்து வந்த ஆதவன் அவர்களுக்கு வலது பக்கத்துக்கு மூலையில் நின்று யாழினியுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

“அவ கூட இவனுக்கு என்னடா பேச்சு?” “அவன் எங்க பேசுறான் உன் ஆளு தான் பேசுது... ஆதியை ஒருத்தன் பேச விடாம தானே பேசி பாத்துருக்கியா? அங்க பாரு சரக்கு எடுக்க போறேன்னு போனவனை பத்து நிமிசமா வச்சு செஞ்சிட்டு இருக்கா” அந்த நிலையிலும் உதய் மாதவனுக்கு சிரிப்பு வரவில்லை. உள்ளுக்குள் அத்தனை ஆதங்கம், கோவம், ஏமாற்றம். எதுவும் பேசாமல் ஒரு ஜூஸ் ட்ம்பர் எடுத்து அந்த நீண்ட சமையல் மேஜையின் முண்மை நாற்காலியில் அமர்ந்துகொண்டான், அந்த மொத்த ஹாலையும் பார்க்கும் வண்ணம்.

ஷார் ஹோல்டர்ஸ் மீட்டிங்கில் நாகரிகமே இல்லாமல் இப்படியா வந்து பேசுவாய் அதுவும் என் முதலாளியிடம் வந்து என்று உதய்யின் பி.எ என்று நிரூபித்துவிட்டாள். அவளிடமிருந்து தப்பித்து வந்தவனுக்கு நேராக மணிமேகலை நிற்க, தன்னை ஓரக்கண்ணால் பார்த்தவளைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளைத் தாண்டி நின்றிருந்த நளியிடம் சென்றான்.

அவரிடம் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு பின்னாளிருந்த மதுபானத்தை எடுத்த ஆதிக்குத் தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த உதய் கண்ணில் பட்டான்.

தன்னை போலவே ஒரு கண்ணாடி கோப்பையைக் கையில் வைத்திருந்தவனிடம் ‘சியர்ஸ்’ என்று புன்சிரிப்புடன் வாயசைத்தான். உதயிடமிருந்து எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை, உயிரியைப் படிக்கும் பார்வையைத் தவிர. புருவத்தை உயர்த்தி ஏளன சிரிப்புடன் மீண்டும் நளினியிடம் திரும்பினான்.

அதன் பிறகு ரகுநந்தனிடம் சென்று இரண்டு வார்த்தை பேசியவனுக்கு அவரது ஓட்டுதல் இல்லாத பேச்சில் ஏதோ புரிய மெதுவாக நழுவி உதய்க்கு பத்து நாற்காலிகள் தள்ளி அவனைப் பார்த்து அமர்ந்துவிட்டேன், கையில் ஒரு மதுக்கோப்பையுடன்.

மெதுவாக கூட்டம் களைய உதய் ஆதியை பார்ப்பதும், ஆதி மதுவை பார்ப்பதும் என அடுத்த ஒரு மணி நேரம் சென்றது.

மெதுவாக கூட்டம் எல்லாம் களைய ரகுநந்தன், ஜெயநந்தன், நளினி மற்றும் இரட்டை சகோதரிகள் அனைவரையும் ஆதவன் பேசி இல்லம் அனுப்பி வைத்தான். இப்பொழுது அங்கு இருப்பது உதய், ஆதி, ஆதவன், யாழினி, விஷ்ணு, ஹரி, ஜெயன் மற்றும் உதய்யின் ஆட்கள் சிலர் மட்டுமே. மொத்த இடமும் நிசப்தமாக இருந்தது.

இவ்வளவு நேரம் தன்னையே ஏளனமாய் சிரித்தபடி அமர்ந்திருந்த ஆதியை ஒரு சிரிப்புடன் கடந்து நாற்காலியிலிருந்து எழுந்தவன் அப்படியே அந்த நீண்ட டைனிங் டேபிள் வலது பக்கம் சென்று ஹரி, விஷ்ணு அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தான்.

சாதாரணமாக நின்றிருந்த விஷ்னு அருகில் வந்தவன் நொடி நேரத்தில் அவன் கன்னத்தில் ஓங்கி அரை ஒன்றை கொடுக்க இரண்டடி தள்ளி கால் தடுமாறி நின்றான் விஷ்ணு. யாழினி தனக்கே அந்த அடி விழுந்தது போல் கன்னத்தில் கை வைத்து நின்றுவிட்டாள்.

“உதய்...” ஆதவன், கெளதம் ஒரு சேர கத்தினர் பதட்டத்தில். ஆனால் அவன் முழு ஆளுமையான பார்வையில் வேறு எதுவும் அவர்களால் பேச முடியவில்லை.

“உன்னால ஜெயிலுக்கு போனான்னு விஸ்வாசமா இருக்கீங்களோ?” சத்தமாக பேசவில்லை, அதிகம் கோபப்படவில்லை ஆனால் அவன் குரல் அத்தனை அழுத்தமாய் வந்து விழுந்தது.

“ஆமா, அவர் மேல தப்பே இல்லனு நான் சொல்லியும் நீ போலீஸ் ஸ்டேஷன் அனுப்புனல?” ஆங்காரமாக குரலை உயர்த்தி தன்னுடைய கோவத்தை வெளிப்படுத்தினான் விஷ்ணு.

“என்கிட்ட சொன்னியாடா நீ? ஆஹ்... என்கிட்டே நீ சொன்னியா இல்ல என் ஆளுங்ககிட்ட சொன்னியா... இல்ல இவன நான் தான் போலீஸ் ஸ்டேஷன் அனுப்புனேன்னு நீ பாத்தியா?”

மேலும் மேலும் விஷ்ணுவை நோக்கி உதய் கோவத்தில் அடியெடுத்து வைக்க ஆதவன் உதய்யின் கையை பிடித்தான், உதய் பின் திரும்பி ஆதவனை முறைக்க, “வேணாம்டா...” என்றான் ஆதவன் மெதுவாக.

அவன் கையை உதறி அதே கோவத்தை மீண்டும் விஷ்ணு மீது காட்ட உதய் முன்னேற இப்பொழுது விஷ்ணுவை தனக்குப் பின்னால் தள்ளி ஹரி அவன் முன் வந்து நின்றான், “அண்ணா அவன் என்னன்னே தெரியாம பண்ணிட்டான். இந்த ஒரே ஒரு தடவ விட்டுடுங்க” கண்களைச் சுருக்கி கெஞ்சினான் ஹரி.

“சரி அவனை மன்னிக்கிறேன் எனக்கு ப்ராஜெக்ட் வாங்கி தர சொல்லு” நிதானமாக உதய் கூறினான்.

“அண்ணா...” அதற்குமேல் பேச முடியவில்லை ஹரியாலும் ஆனாலும் விஷ்ணுவைக் காக்கத் துளியும் அசையவில்லை.

“ஜெயன்... நடுல யாரும் வர கூடாது” கோவமும் ஏமாற்றமும் அவன் குரலில் சரி விகிதத்திலிருந்தது, உடனே ஜெயன் ஹரியை விஷ்ணுவை விட்டுப் பிரித்து நிறுத்த, ஹரி எவ்வளவு முயன்றும் ஜெயனின் பாலத்தின் முன்னால் ஹரி பூஜ்யமானான்.

“ம்ம்ம் சொல்லு எனக்கு நாளைக்கே அந்த ப்ராஜெக்ட் உன்னால வாங்கி தர முடியுமா?” மீண்டும் மீண்டும் அதிலே வந்து நின்றான் உதய் ஆனால் இம்முறை விஷ்ணுவைக் காத்தது ஆதி.

“கோவம் என் மேல தான்டா எதுக்கு அவன்கிட்ட குதிச்சிட்டு இருக்கனும்?” தானும் கோவமாய் விஷ்ணுவைப் பாதுகாக்க முன் வந்தான், காரணம் உள்ளே நுழையும் இன்விடேஷன் மட்டுமே ஏதேதோ சமாளித்து வாங்கினான் ஆதி வேறு எதுவும் விஷ்ணுவிற்குத் தெரியாது.

“நீ இதுல நடுல வராத. நான் என் தம்பிகிட்ட தான் பேசுறேன்” பல்லைக் கடித்து ஆத்திரத்தை அடக்கி வைத்தான்.

“உன் தம்பியா இருந்தாலும் என்னால அவன் அடி வாங்குறப்போ பாத்துகிட்டு சும்மா இருக்க முடியாது, நான் இப்டி தான் வந்து நிப்பேன்... என்ன பூச்சாண்டி காட்டுறியா? என்னடா பண்ணிடுவ பண்ணுடா பாப்போம்” என்று ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்த ஆதியின் சட்டையைக் கொத்தாகப் பிடித்த உதய் ஒரே அழுத்தத்தில் ஆதியை சுவரில் மோதவிட்டு நிறுத்தினான்.

“உன்னால தான்டா உன்னால மட்டும் தான் இவ்ளோ பிரச்சனையுமே” ஆதியின் நெஞ்சில் ஒற்றை விரலைக் குத்தி கோவத்தை வெளிப்படுத்தினான், “எனக்கு எந்த ப்ராபிட்டும் இருக்க கூடாது அது தான உன்னோட ஆசை, சரி எனக்கு அந்த ப்ராஜெக்ட்ல இருந்து ஒரு பைசா கூட காசு வேணாம். என் கம்பெனிக்கு ப்ராபிட் வேணாம். என்னோட எம்பிளாய்ஸ்க்கு சாளரி மட்டும் கரெக்ட்டா வந்தா போதும்டா. உன்னால அத திருப்பி வாங்கி தர முடியுமா? ஆஹ்...” நிதானமாகத் துவங்கியவன் இறுதியில் ஆக்ரோஷமாகக் கத்தினான் உதய் மாதவன்.

தன்னை பிடித்திருந்த உதய்யின் கையை உதறித் தள்ளிய ஆதி கோணலாகச் சிரித்து வைத்தாலும் அவன் நெற்றி நரம்பு புரிந்து அவன் கோவத்தை உரைத்தது, “என்னது ப்ராபிட் இல்லாம மிஸ்டர் மாதவன் பிஸ்னஸ் பன்றாரு? காதுல பூ சுத்த பாக்குறியோ...” உதயின் முகம் மொத்தமும் ரௌத்திரத்தால் சிவந்திருந்தது.

“சரி ப்ராபிட் விடு. இந்த ப்ராஜெக்ட் பண்ணுனா உன் கம்பெனிக்கு எவ்ளோ பெரிய பேர்-னு எனக்கு தெரியும். ஏண்டா நீ கொஞ்சம் கொஞ்சமா சரியிறத பாக்கணும்னு ஆசை படுற நான் எப்பிடிடா உன்ன நல்ல பேர் எடுக்க விடுவேன்? என் அப்பா பேர் கெட்டு போனப்ப நான் எவ்ளோ துடிச்சேனோ, என் தங்கச்சி எவ்ளோ அழுதாலோ அத விட பத்து மடைந்து நீ கதரனும்”

“ஆதி அவன் அப்டிலாம் பன்னலடா...” அவசர அவசரமாக வந்தது ஆதவனின் குரல்.

பார்வையை உதயிடமிருந்து மாற்றாமல் கையை மட்டும் ஆதவன் பக்கம் நீட்டி எச்சரிக்கை செய்தவன் மீண்டும் உதய்யிடம், “உன் குடும்பமே உன்ன தூக்கி எரியனும்... எரிய வைப்பேன். நான் என் தங்கச்சியோட நடு தெருவுல நின்ன அந்த நிமிஷம் அனுபவிச்ச வலிய நீயும் அனுபவிப்ப. அது வரைக்கும் ஓயமாட்டேண்டா...”

“என்னடா மிரட்டுறியா?” உதய்யின் உஷ்ண மூச்சுக் காற்று ஆதியின் கன்னத்தைத் தொட்டுச் சென்றது.

“ம்ம்ம் இருக்கலாம்... மிரட்டல், எச்சரிக்கை...” ஒரு நொடி நிறுத்தியவன், “பயம்” அழுத்தமாய் பயத்தைக் கூறி, “இதுல எதுவா வேணாலும் நீயே முடிவு பண்ணிக்கலாம்” ஆதியின் கேலியில் இன்னும் இன்னும் சினம் ஏறியது, அதிலும் பயம் என்னும் வார்த்தை அவன் ஆங்காரத்தை மொத்தமாய் தட்டி எழுப்பிவிட்டது.

“நடு தெருவுல உன்ன நிக்க வச்சது நானா இல்ல உன்னோட அப்பாவா?” தன்னுடைய தந்தையைப் போல் எண்ணிய மனிதரை அவ்வாறு இளக்காரமாய் பேச உதய்க்கும் கசந்தாலும் அவன் கோவம் அத்தனை நிதானத்தையும் விழுங்கி தின்றது.

இப்பொழுது ஆத்திரத்தில் உதய்யின் சட்டையைப் பிடிப்பது ஆதியின் முறையானது. “என் அப்பா பத்தி பேச கூட அருகதை இல்லாதவன்டா நீ”

எரிச்சலாக அவன் கையை தட்டி விட்ட உதய், கசங்கியிருந்த தன் சட்டையைக் கூட சரி செய்யாமல், “உனக்கு என்ன இப்ப நீயா நானான்னு தெரியணும் அப்டி தான? தப்பு செஞ்சவன் கூட தோல்விய ஒத்துக்க மாட்டான், இங்க தப்பே செய்யாம என்னோட கனவை ஒடச்ச உன்ன சும்மா விட்ருவேனா? வா டா. வா... ஆடலாம் நீ உன் ஆட்டத்தை ஆரமிச்சு விட்டுட்ட அடுத்து என்னோட ஆட்டத்தை பாரு”

“என்னடா படம்காட்டுறியா உன்னோட உருட்டல் மெரட்டலுக்கெல்லாம் இம்மியளவும் அசருற ஆளு நான் இல்ல... நல்லா நிறுத்தி நிதானமா பிளான் போட்டு வை. எப்படியும் உன் பிளான் நீ குடுத்த சரக்கு மாதிரி கிக்கே இருக்காது... இருந்தாலும் பரவால்ல பாத்து ஷாக் ஆகுற மாதிரி நடிக்கிறேன்”

உதய் தோள் தட்டி, “என்ன வர்ட்டா... உதயா” உதய்யை எப்பொழுதும் எரிச்சலூட்ட ஆதி பயன்படுத்தும் அதே குரல், அதே பெயர் உச்சரிப்பு... சிரிப்புடன் உதய்யின் கோட் சுய்ட்டில் அவன் மாட்டி வைத்திருந்த கூலர்ஸை எடுத்துத் தான் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்கம்
திரும்பியவன், “வர்றேண்டா அரை போதை நாயே...” அந்த அரங்கமே கேட்கும் வண்ணம் ராகமாகப் பாடி வெளியேறினான்.


Podunga comments ah…



Plz share with yur frnds if u like the story
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Enna ma epadi pannidiga birthday celebration happy ya irukum nu paatha epadi sandai poturaga 2 payrum enna challenge la pandraga ayooo 😞😞
Mani udhai mama poonu athan munadi guess pannidom la 🤭yazhini jealous yuuu🤣🤣
Vishnu va enn da adikura paravailla Hari vanthudan avanuga ga pesa nalla iruku 🤩🤩
Aadhavan kojam paavom tha 2 frds yum sandai poturatha pakka mudiyala 😞😞
Sikirama friends ya seythuruga 🥰🥰🥰
 
Top