• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 19(ii)

Messages
47
Reaction score
2
Points
8
*சொல்லாமல்....!*

*மௌனம் 19(ii)*

*இன்று...*

இரண்டு நாட்கள் கடந்திருந்த பெரிதாக அறையை விட்டு வெளியே வந்திடவில்லை,
தேவேந்திரன்.

தம்பியோ அவனை எள்ளலாய் பார்த்திட தாய் தான் கொஞ்சம் மகனின் வலியை உணர்ந்தவராய் நடந்து கொண்டார்.

தம்பி யோகேந்திரனுக்கு அண்ணனின் காதல் விவகாரம் முன்பே தெரிய வர பல முறை அவனுக்கு அறிவரை கூறியிருக்க அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தான கோபம் தான்.

சிலருக்கு அவன் வலி புரியும்.
சிலருக்கு மடத்தனம் என்று நினைக்கும்.
ஆனால்,சிறிதாயினும் பெரிதாயினும் அவரவர்க்கு அவரவர் உணர்வுகள் எப்போதும் பெரிது தான்.
அதை யாரிடமும் நிரூபிக்கும் தேவையும் யாருக்கும் இல்லை.

கலைந்த சிகையும் கருவளையம் சூழந்த விழிகளுமாய் வந்த மகன் இரவு முழுக்க அழுது இருக்கிறான் என்பதை அவனின் வீங்கிய விழிகள் காட்டிக் கொடுத்திட உள்ளுக்குள் நொந்து கொண்டாலும் வெளியில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை,
தாய் மனம்.

எதையும் கடந்து போவது தானே வாழ்க்கை.
பிடித்தது கிடைக்காவிடின் கிடைப்பது அதை விட பிடித்துப் போகும் என்று அவன் மனம் உணரத்துவங்கியதா என்று தெரியவில்லை.

ஆனால்,முன்பை விட அவனுக்குள் கொஞ்சம் மாற்றங்கள் துளிர்விடத்து துவங்கி இருந்தது சத்தியமான உண்மை.

முகத்தில் எதையோ இழந்த பாவம் மறைக்க முடியாது வெளிப்பட்டாலும் மனது இப்போது கொஞ்சம் தேறி இருந்தது.

இழுத்து இறுக்காமல் சிலதை ஏற்று அப்படியே அதன் போக்கில் விட்டு விடுவது சிறந்தது.

காலத்தின் மாற்றங்கள் காயங்களை ஆற்றிவிடும்.

குளியலறைக்குள் நுழைந்து குளித்து விட்டு வந்து வெளியே சென்று தன் வண்டியை துடைத்தான்,
தேவேந்திரன்.

அந்த வண்டி என்றால் அவனுக்கு உயிர் தான்.தனது சொந்த சம்பாத்தியத்தில் முதன் முதலாய் தனக்கென வாங்கியது.

வண்டியோட்டுவதில் தனக்கு இருந்த பயத்தை உடைத்து தகர்த்து வெளியே வந்து தனியாக வண்டியோட்டப் பழகிடும் போது அவன் வேலைக்குச் செல்லும் வயது தான்.

அமைதியாய் தன் வேலையை முடித்து விட்டு நிமிர்ந்தவனுக்கு தர்ஷினியின் தாய் அவளை அழைப்பது கேட்டிட அப்படியே தன்னை கட்டுப்படுத்தியவனாய் வீட்டினுள் நுழைந்தான்,விடுவிடுவென.

என்ன தோன்றியதோ சட்டென தன் உடைகளில் மூன்றை எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு வீட்டில் இருந்து கிளம்பி இருந்தான்,
பாட்டி வீட்டுக்குச் செல்வதாக கூறிக் கொண்டு.

அவனின் அதிகமான நினைவுகளை சுமந்து கொண்டு நிற்கும் இடம் அதுவல்லவா.
அது தான் மனம் தேற வேண்டி துவங்கியது அவன் பயணம்.

அதே நேரம்..
தன் வீட்டில் கட்டிலில் சாய்ந்து ஒரு வித கலக்கமான மனநிலையுடன் அமர்ந்து இருந்தான்,
குரு.

நேற்று சரியாக அவனின் அண்ணன் இறந்து ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க அண்ணியின் வாழ்க்கை பற்றிய விடயம் பூதாகரமாய் மாறி மனதை அழுத்தியது.

அதிகம் படிக்காதவர் என்பதால் இன்னும் மறுமணத்துக்கு ஒத்துக் கொள்ளாதிருப்பவரை எப்படி சம்மதிக்க வைப்பதென்பது தெரியவில்லை,
அவனுக்கு.

அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்வது சிரமம் என்றாலும் ஓரிரு இடங்களில் யதார்த்தம் அனைத்தையும் பின்னே தள்ளி விட்டு முன் நிற்கும் அல்லவா..?

அதுவும் இன்னொரு பெண்ணைத் தேடிப் போன தன் அண்ணனை நினைத்து அவர் தன் வாழ்க்கையை வீணாக்குவதில் துளியும் விருப்பமில்லை,
அவனுக்கு.

தோழனின் முகத்தில் வந்திட்ட மாற்றங்களை உள் வாங்கியவாறு அமர்ந்து இருந்தான்,
யாதவ்.

"என்னடா யோசன..?" அவனின் கலக்கம் பொறுக்காது கேட்டிருந்தான்.
யாதவ்வின் இயல்பு கொஞ்சமாய் தணிந்து போவது குருவிடம் மட்டும் தான் போலும்.

"இல்ல மச்சீ..அண்ணியோட வாழ்க்கய நெனச்சி பாக்கும் போது பாவமா இருக்கு.."

"யேன் உங்கண்ணி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்றாங்களா..?"

"ம்ம்..அதான்..அவங்களுக்கு யார் மேலயும் நம்பிக்க வராத மாதிரி தான செஞ்சுட்டு போயிருக்கான் எங்க அண்ணன்..ஆனா அண்ணி ரொம்ப நல்லவங்க டா.."

"ம்ம்..அப்போ யாராவது கொஞ்சம் எடுத்து சொன்னா தான் என்ன..?"

"அவங்க ரொம்ப அழுத்தமான கேரக்டர் டா..அந்தளவுக்கு யாரு சொல்றதயும் கேட்டுக்க மாட்டாங்க..ரொம்ப விஷயத்துல தன்னோட மனசுக்கு பட்றத தான் செய்வாங்க..ஆனா அது ரொம்ப கரெக்டா இருக்கும்..யாரவும் காயப்படுத்தாததா இருக்கும்..அதான்."

"........."

"அது மட்டுல்ல யாதவ்..அவங்க ரொம்ப நல்ல டைப்..பாக்குறதுக்கு கொஞ்சம் ரப் ஆ தெரிஞ்சாலும் ரொம்ப ரொம்ப நல்லவங்க அவங்க.."

"அப்போ பேசாம நீயே கல்யாணம் பண்ணிக்கோயேன் குரு.." இப்போது அதிகம் நடக்கும் விடயம் என்பதால் மனதில் பட்டதை அப்படியே சொல்ல குருவின் பொறுமை காற்றோடு கரைந்தது,அவனின் வார்த்தைகளில்.

"யாதவ்..அறிவிருக்கா டா..உனக்கு..உனக்கு எப்டியோ..எனக்கு அண்ணின்னா இன்னொரு அம்மா மாதிரி..நீ தான் அத மறந்துட்டு கண்ட கிறுக்குத்தனம் பண்ணுவன்னா அத என் கிட்டயும் சொல்லிட்டு வராத.." கத்தி விட்டு விடுவிடுவென வெளியேறிட அவன் கூறியது சுரீரென குத்தியது அவனுக்குள்.

இத்தனை நாள் தான் செய்வதில் எந்த வித தவறும் இல்லை என்கின்ற இறுமாப்பில் திரிந்து கொண்டவனை முதன் முதலாக அசைத்து உறைய வைத்திருந்தது,
குருவின் வார்த்தைகள்.

அசைய மறுத்து அப்படியே அமர்ந்திருந்தான்,யாதவ்.
மனதல் தான் செய்த தவறுகளும் செய்து கொண்டிருக்கும் தவறுகளும் விஷ்வரூபம் எடுத்தது.

●●●●●●

தோழனின் பர்ஸில் இருந்த அவன் காதலியின் புகைப்படத்தை பார்த்த விஷ்ணுவின் மனம் பாரமானது.

இத்தனை நாட்களில் அவன் மறந்திருப்பான் என்று நினைத்திருக்க இன்னும் மறவாது இருப்பவனை பற்றி எப்படி தேற்ற என்பது தெரியவில்லை,
அவனுக்கு.

"கௌதம்ம்ம்ம்..இன்னுமே நீ கவிதாவ மறக்கல..?"

"எப்டி டா மறக்க சொல்ற..? மூணு வருஷ லவ்..அவ யெறந்துட்டான்னதும் வேற யாராச்சும் உடனே மனசுக்குள்ள வந்துருவாங்களா என்ன..?" என்றவனின் விழிகளில் கொஞ்சம் நீரும் சேர்ந்து கொண்டது.

அதற்கு மேல் விஷ்ணுவும் அமைதியாகி விட்டான்.
தோழன் தன் வாழ்வை பற்றி யோசியாது இருப்பது அவனுக்குள் கொஞ்சம் வருத்தத்தை தந்திருக்கவே அப்படி கேட்டிருந்தான்.

"சரி..அந்த ஆளுக்கு என்னாச்சு இப்போ..?" கூறியவாறு வேறு பேச்சுக்கு தாவியிருந்தான்,
தோழனின் மனநிலையை மாற்றிடவே.

"யார கேக்கற..?"

"அதான் உன்ன வந்து பாத்துட்டு போனாரே..அவரு தான்.."

"டேய் யாரடா கேக்கற..?" சத்தியமாய் தோழன் யாரைப் பற்றி கூறுகிறான் என்பது பற்றி சரியான எண்ணம் இல்லை,
அவனுக்கு.

"அதான் டா..அந்த கோட் அங்கிள்.."

"அவருக்கு தலைல ஒரு சர்ஜரி இருக்கு..அதான் வர்ராரு..இன்னும் பத்து நாள்ல சர்ஜரி.."

"வீக் லி வன்ஸ் உன்ன பாக்க டான்னு நைட் பத்து மணிக்கு வர்ரது ஒருத்தர் தான..அவரு பேரு கூட.."

"ஓஹ்ஹ்ஹ்ஹ்..நீ அவர கேக்கறியா..? அவருக்கு ப்ரெய்ன் ட்யூமர் மச்சீ..இன்னும் கொஞ்ச நாள்ல ஆப்ரேஷன் பண்ணனும்..அதுக்கு தான் அடிக்கடி வர்ராரு..டென் பர்சன்ட் தான் சான்ஸ் இருக்கு ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆக.." இயல்பாய் சொன்னவனுக்கும் உணர்வுகள் இல்லாமல் இல்லை.
மருத்துவன் ஆயிற்றே,
அடக்கப் பழகியிருந்தான்,
அனைத்தையும்.

"பாவம்ல.."

"ம்ம்ம்ம்.."

"ஆமா..இன்னொரு லேடி வருவாங்களே..மாசத்துக்கு ஒரு தடவ...அவங்களுக்கு..?"

"அவங்களுக்கு ஒரு தடவ ஆக்சிடன்ட் ஆனப்போ தல அடிபட்ருக்கு..அதனால இப்போ தலவலி வந்தா அவங்களுக்கு பயம்..அதான் அடிக்கடி வந்து செக் பண்ணிப்பாங்க..பட் அவங்களுக்கு ஒன்னும் கெடயாது.."

"சரி டா..அந்த தீபிகா பொண்ணு என்னடா பண்ணுது..?"

"அவளா...லவ் பண்ணிகிட்டு திரியுறா..யார் பேச்சயும் கேக்க மாட்டா..அவ இஷ்டத்துக்கே விட்டுட்டாங்க.." முகத்தில் மட்டுமல்ல அகத்திலும் கோபம் தாண்டவமாடச் சொன்னான்,
அவன்.

"இன்னும் அந்த பையனவா டா லவ் பண்றா..?" சிறு புன்னகையுடன் அவன் கேட்டிட சிறு தடுமாற்றம் ஆடவனின் மனதில்.

"கௌதம்..அந்த பையனா தான் லவ் பண்ணு தா..?" மீண்டும் தோழன் அழுத்திக் கேட்டிட நாலாப்புறமும் தலையசைத்திருந்தான்,அவன்.

எப்படி அவன் உண்மையைச் சொல்வான்..?
தனக்கு இன்னொரு வாழ்க்கையை அமைக்கத் துடிக்கும் தோழனிடம்..?

"என்னடா பதில் பேச மாட்டேங்குற..?" கௌதமின் நடத்தையில் ஏனோ விஷ்ணுவின் விழியோரம் சிறு சந்தேகக் கீற்று.

"அ..அ..ஆ..ஆமா..ஆமா.." எங்கோ பார்த்த படி அவன் சொல்லிட இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டான்,விஷ்ணு.
அவனுக்குத் தான் எல்லா உண்மையும் தெரியுமே.தீபிகா அவனைச் சந்தித்து மொத்த உண்மைகளையும் போட்டுடைத்தது,கௌதமுக்கு தெரியாதே.

"அப்டியா..?" இரு புருவமுயர்த்தி கேட்ட தோழனின் கேள்விக்கு பொய்யாய் பதில் சொன்னாலும் அவனுள்ளுக்குள் பெரும் தடுமாற்றம்.

நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

கட்டிலின் அருகே போடப்பட்டிருந்த சோபாவின் அருகே அமர்ந்து விழியெடுக்காது கட்டிலில் அயர்ந்து உறங்கும் கணவனைத் தான் பார்த்திருந்தாள்,
சிறு புன்னகையுடன்.

மதியம் அவன் சொல்லிக் கொள்ளாமல் வீடு வருவான் என்று அவள் எதிர்பாராதிருக்க அவன் வரவில் அவள் விழிகள் விரிய அதைக் கண்டு கொண்டவனின் புன்னகை எப்போதும் போல் இதழ்களுக்குள் ஒளிந்து கொண்டது.

உண்டு முடித்து விட்டு எப்போதும் அவன் வந்துறங்க அவளுக்குத் தான் பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை.

அவன் முகத்தில் இருக்கும் வாட்டமும் விழிகளில் தெரிந்திடும் அலைப்புறுதலும் என்னவென்று அவனிடம் கேட்க உந்தினாலும் ஏதோ ஒன்று அவளையும் தடுத்து நிறுத்தியது.

துப்பட்டா நுனியை ஆட்டிய வண்ணம் விழிகளால் அவனையே உரசிக் கொண்டிருந்தவளுக்கு ஏனோ அவனை இன்னும் இன்னும் பிடித்தது.

"இந்தாளு மட்டும் எப்டி தான் இவ்ளோ அம்சமா பொறந்துச்சோ.." தனக்குள் எண்ணியவள் சிரித்துக் கொண்டிட அவனிடம் சிறு அசைவு.

சத்தம் காட்டாமல் எழுந்து அவள் வெளியே சென்று பத்து நிமிடங்களின் பின் மீண்டும் அறைக்குள் நுழைந்திட எழுந்து அமர்ந்திருந்தான்,
அவன்.

எப்போதும் போல் உள்ளுக்குள் தடுமாறினாலும் அதைக் காட்டிக் கொண்டிடாது அவள் அலுமாரியில் எதையோ தேட அவனின் பார்வை ஒரு வித தவிப்புடன் அவள் மீது படிந்ததை உணர்ந்திடவில்லை,
அவள்.

மனம் அவளைத் தேடுவதை தடுக்கும் வழி அவனுக்கு தெரியவில்லை.
ஒருவேளை விவாகரத்து நாட்கள் நெருங்கி வருவதாலோ..?

ஏதோ ஒரு உந்துதலில் திடுமென தலைதூக்கி பார்த்தவளின் செயலை முன்னமே உணர்ந்து கண நேரத்தில் சுதாரித்து பார்வையை வேறு புறம் திருப்பியிருந்தான் அவன்,என்றும் போல்.

அடிக்கடி தன் வேலையில் மூழ்கி இருந்தவளை தடுமாற்றத்துடன் பார்த்தவாறு அடிகளை எடுத்து வைத்தவனுக்கு ஏனோ என்றுமில்லாமல் இன்று அவளுக்கும் அவனுக்கும் மூன்றடி தூரம் இருக்கையில் கால்கள் பின்னிக் கொண்டு சதி செய்திட்டது.

ஏதோ அதே நேரத்தில் தலை தூக்கி பார்த்தவளுக்கு அவன் விழப்பார்ப்பது புரிந்திட சட்டென ஈரடி எடுத்து வைத்து ஒரு கரத்தால் அவனின் உள்ளங்கையை கெட்டியாகப் பற்றி மறு கரத்தால் அவனின் மறு கரத்தின் முழங்கையை மேற்பகுதியை பிடித்து விழவிடாதிருக்க பார்த்திட அவனோ கால்களை பின்னிருந்த சுவற்றுக்கு முட்டுக் கொடுத்து சமநிலையை எய்திருக்க ஏனோ அவனின் கரமும் அவனின் அவளின் உள்ளங்கையை கெட்டியாக பற்றிக் கொண்டிருந்ததை அவள் உணரவில்லை.

அவளின் விழிகளில் பயமும் தவிப்பும் அப்பட்டமாய் பரவியிருக்க இரு முறை விழி சுழற்றி அதை தனக்குள் நிரப்பிக் கொண்டான்,
அவன்.

முதலில் சுதாரித்தது அவன் தான்.
பட்டென விலகிக் கொள்ள தன்னை நொந்தவாறு ஒரு வித அசட்டுப் புன்னகையுடன் அவனைப் பார்த்தாலும் அவனுக்கு எங்கேனும் அடிபட்டிருக்கிறதா என்று அவளின் விழிகள் பரபரவெனத் தேடத் தான் செய்தது.

அதை அப்படியே படம் பிடித்துக் கொண்டன,
அவன் விழிகள்.

முன்பெல்லாம் அவள் கேட்கும் கேள்விகளுக்கே அவன் பதில் சொல்வதில்லை.
ஏனோ இன்று அவளின் விழிமொழியை படித்து விட்டு பதில் சொல்லாது இருக்க முடியவில்லை,
அவனால்.

"ஐம் ஓகே..அடியெதுவும் படல.." என்றுமில்லாது தன்மையாய் மொழிந்து விட்டு குளியலறைக்கு நடந்தான் என்பதை விட ஓடினான் என்பதே பொருத்தம்.

அவளுக்கு அதுவே திருப்தியைத் தந்திட தன்னில் எழுந்த தடுமாற்றத்தை மறைத்த படி மீண்டும் வேலையில் கவனமானாலும் அவன் பொய் சொல்கின்றானா என்கின்ற எண்ணம் தான்.

குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்து அதில் சாய்ந்தவனின் இதயம் அதி வேகமாக துடித்தது.

தன் நெஞ்சில் கையை வைத்து ஆழமாய் சுவாசித்தவனுக்கு மூச்சு வாங்கியது,
வெகுவாகவே.

"என்ன டா இது..இப்டி துடிக்கிது..?" கொஞ்சம் சத்தமாக கேட்டவாறு நெஞ்சைத் தடவினாலும் அத்தனை எளிதில் அடங்க மறுத்ததே அவளின் முன் தோன்றிட்ட அவனின் தடுமாற்றம்.

கதவில் காதை வைத்துக் கொண்டு அவன் என்ன பேசுகிறான் என்று கேட்க முயன்று கொண்டிருந்தாள்,
தர்ஷினி.

இப்படி கதவை வேகமாக அடைத்தால் தனக்குள் அவன் முணகுவது தெரிந்து மெல்ல அடியெடுத்து வைத்து வந்து கதவில் செவியை பொருத்தி கேட்க முயன்று கொண்டிருந்தாள்,
அவள்.

ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு நிமிர்ந்தவனுக்கு அவள் ஒட்டுக் கேட்கிறாளோ என்கின்ற எண்ணம் தோன்றிட பட்டென கதவைத் திறந்தவனின் செயலை எதிர்பாரா அதிர்வு அவள் விழிகளில்.

படக்கென்று நிமிர்ந்து நின்றவளோ அவனைப் பார்த்து அசடு வழிய அதில் தடுமாறும் மனதை அடக்கியவனாய் எந்த வித உணர்வுகளையும் என்றும் போல் இன்றும் விழிகளில் வெளிக்காட்டாது கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிய என்னவென்று கேட்டான் விழிகளாலேயே.

புருவங்களும் உயர்ந்து வார்த்தையின்றியே அவன் கேள்வியை உறுதி செய்தன.

"ட..ட..டவ..டவல்..தர..வ..வந்தேன்.." திக்கலுடன் சொன்னவளின் கரத்தை கூர்மையாக அளவிட்டது,
அவன் விழிகள்.

"டவல் எங்க...."

"அங்..அங்க இருக்கு.." கட்டிலின் ஓரமாய் கிடந்த துவாயைக் காட்டிட்டவளுக்கு புரியாமல் இல்லை, தன் மடத்தனம்.

"அதவா தர வந்த..?" இயல்பாய் கேட்டாலும் அதில் துடுக்கு இருந்தது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

ஆம் என்பதாய் தலையசைத்து திருதிருவென விழித்தவளின் முகத்தில் இருந்து ஒரு நொடி அவனுக்கும் விழிகளை எடுக்க முடியாமல் தான் போனது.

"சரி..எடுத்து தா.." என்று அவன் கூறியது தான் தாமதம் பட்டென நகர்ந்து எடுத்து வந்து அவனின் கையில் கொடுத்திட்டு அசடு வழிய புன்னகைத்தவளுக்கு வேண்டுமென்று வரவழைக்கப்பட்ட முறைப்பை அவளுக்கு பதிலாக தந்து விட்டு கதவை அடைத்தவனோ மீண்டும் கதவில் சாய்ந்து நின்றான்.

திருதிருவென விழித்ததும் தன்னைப் பார்த்து அசடுவழிய சிரித்ததுமான அவளின் முகபாவங்களே அவன் கண் முன் வந்து போனது.

அவள் இப்படி நடந்து கொள்வதென்றால் அவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்களாக தான் இருக்க வேண்டும் என்பது அவனுக்கு தெரியாதா..?

"கண்ண வச்சே நம்மள சாகடிக்கிறா..ராட்சசி.." தனக்குள் முணகியவாறு முகத்தில் நீரை அடித்துக் கொண்டான்,
அவன்.

தொடரும்.

🖋️அதி....!
2024.01.25
 
Top