• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 18

Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
அத்தியாயம் - 18



அவருக்கு சமாதானம் கூறி விட்டாலும் தன்னை தானே சமாளிக்க முடியவில்லை. அவரின் கண்ணீர் உறங்கியிருந்த அவனது குற்றவுணர்ச்சியை தட்டி எழுப்பியது. அவனது கண்களுக்கு அகப்படாமல் இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் இவ்வளவு பாதிப்பு அவனுள் எழுந்திருக்காது. ஆனால் தன் கண் முன்னால் தன்னால் இவ்வளவு துடிக்கிறார் என்பது அவனை வதைத்தது.



நேரடியாக இல்லையென்றாலும் மறைமுகமாக தான் தான் காரணம் என்ற எண்ணமே அவனை வாட்டியது. அவருடன் உரையாட முடியாமல் ஒரு தவிப்பு எழ, "ஒரு நிமிஷம், வந்திடுறேன் ஆன்ட்டி" என்று வெளியே வந்தவன் தன்னை நிலைப்படுத்துவதற்குள் வெகு சிரமப்பட்டு விட்டான்.

மீனுவை தவிர்த்து கைலாஷ்நாத் அவனுடைய தொழிலில் அதிகளவு உதவி செய்திருக்கிறார். இன்னும் இவ்வளவு சிறப்பாக இருக்கிறான் என்றால் அது அவருடைய அடித்தளம் மட்டுமே என்பதை கண்டிப்பாக அவனால் மறுக்க இயலாது.



அப்படியே நாற்காலியில் அமர்ந்து தன் தலையை கோதிக் கொண்டவன் கண்களில் பட்டது என்னவோ தன் முன்னிருந்த காபி கோப்பையை வெறித்த படி அமர்ந்திருந்த மீனலோஷினி தான்.


எதோயோ இழந்தது போன்றதொரு சோகத்தை தாங்கியிருந்த அவளது வதனம் வாடி கசங்கி இருந்தது. அவளை பார்த்துக் கொண்டே அருகில் சென்றவன் அவளெதிரில் அமர அதை கூட உணரவில்லை.


கண்கள் இரண்டிலும் நீர் தேங்கி இருந்தது வழிவதற்கு தயாராக. அவளும் தன்னை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்துகிறாள். சூழலோ அவளது கண்ணீரை வெளி கொணர்வதே குறியாய் செயல் புரிந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் அழுபவர்களை கண்டாள் எரிச்சலாக வரும் அவளிற்கு. ஆனால் தான் இப்படி அழுது வடிந்து கொண்டிருப்போம் என்று யாராவது கூறியிருந்தால் இல்லை என்று மறுத்து சவால் விடுத்திருப்பாள்.


அவளை அவ்வளவு தைரியமாக கைலாஷ்நாத் வளர்த்திருந்தார். அவர் இருந்த வரை எதற்கும் சுணங்க விட்டதில்லை. இல்லாத ஒன்றை கேட்டு மறுகுவதே மனதின் இயல்பு போல். தந்தை தோளில் சாய்ந்து கண்ணீர் விட வேண்டும் போலிருந்தது. 'ஏன்ப்பா எங்களை விட்டு போனீங்க?' என்று சத்தமாக கத்த வேண்டும் என்றே தோன்றியது.


ஒவ்வொரு இடத்தில் இடறிடும் பொழுதும் எழுந்து விட தான் நினைக்கிறாள். ஆனால் மனதோ வரவே முடியாது என மறுத்து முரண்டு பிடிக்கிறது.



"மீனு" என்ற அவனது குரலை கேட்ட பின் வழிந்து விட்டது கண்ணீர்.


"ரிலாக்ஸ் மீனு" என்றவன் அவளது கண்ணீரை துடைப்பதற்காக கைகளை நீட்ட தன் தலையை பின்னால் இழுத்துக் கொண்டாள்.


அவனை காணும் பொழுதெல்லாம் தன்னுள் கொளுந்தெழும் நெருப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆத்திரம் கோபம் எல்லாம் ஒரு சேர பொங்குகிறது. அவளை அவளே தண்டித்துக் கொள்ள முனைகிறாள் இல்லை இல்லை அவளது மனதை உந்துகிறது.



தானே சென்று திருமணம் செய்து கொள் என்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவித்து விடு என மண்டிட்ட பொழுதும் அவன் எதுவுமே செய்திட விழையவே இல்லை என்ற எண்ணம் அவனை விலக்கி வைக்குமாறு கூறுகிறது.

எழுந்து கொண்டாள் நகரும் எண்ணத்துடன்.


கைகளை பிடித்துக் கொண்டவன், "உட்கார் மீனு" என்று சற்று அதட்டலாகவே கூற முடியாது என்ற பார்வை பார்த்து நின்றாள்.



"ப்ளீஸ் டி, கொஞ்சம் பேசணும்" என்று கெஞ்சலில் இறங்க சற்று இளகியவள் அமர அவளது கையை விட்டான்.


"கல்யாணம் பண்ணிக்கலாம் மீனு" என்று அவள் அன்று கேட்டது மீண்டும் அவளிடம் வேண்டி நின்றான். நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாக கூறி மூச்சை இழுத்து சமன் செய்த படி.


அவனும் நன்றாக யோசித்து விட்டான். இதற்கு மேல் இந்துமதியை கண்ணீர் சிந்த வைக்க அவனுக்கு விருப்பமில்லை. அன்றே உறுதியாக கூறிச் சென்று விட்டாள் உன்னையன்றி யாரையும் ஏற்கவியலாது என்றே. இதற்கு மேல் அவளை சமாதானம் செய்வது என்பது இயலாத காரியம் என உணர்ந்திருந்தான்.

இதற்கு மேலும் தாமதம் செய்து அவருக்கு எதாவது நிகழ்ந்தாலே இல்லை உடல் நிலை மேலும் மோசமடைந்து விட்டாலோ அவனையே அவனால் மன்னித்திட இயலாது. ஏற்கனவே அவளை விட்டு விட்டே குற்றவுணர்ச்சியால் வெந்து துடித்து கொண்டிருக்கிறான். மீண்டும் தன்னால் அவர்களுக்கு எந்த இடையூறும் எழுந்து விடக் கூடாது என்பதே அவனுடைய பிரதான எண்ணம்.


மீனு ஒரு பொழுதும் மேகாவை விடவும் மட்டாள் தன் மீதான கோபங்களையும் அவளிடம் வெளிப்படுத்த மாட்டாள் என்பதை அவன் அறிவான். கண்டிப்பாக ஷாம்லியை விடவே ஒரு படி அதிகமாக அவளை கவனித்துக் கொள்வாள் என்பதில் அவனுக்கு துளியளவேணும் ஐயமில்லை.




அவனது வார்த்தையை கேட்டவளுக்கு இன்னும் கோபம் பிரவாகமாக பொங்கியது.

"நீங்க என்னை கல்யாணம் பண்ண ஒத்துக்கணும்னா எங்கம்மா ஹாஸ்ப்பிட்டல்ல வந்து படுக்கணும். அப்ப தான் சார் சம்மதம் கொடுப்பீங்க. ஐயம் ரைட்" என்று சற்று சூடான குரலில் வினவ,


"லூசு மாதிரி பேசதா மீனு" என்றான்.



அவனை முறைத்தவள் எழுந்து செல்ல அவள் பின்பே வந்தான். "ஆன்ட்டி பாவம், ரொம்ப பீல் பண்றாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மீனு" என்று கூறிக் கொண்டே வர அதையெல்லாம் காதில் வாங்காமல் இந்துமதியின் அறைக்குள் நுழைய அவனும் அவளுடனே சென்றான்.



அவர்களுக்கு பின்பே மருத்துவர் அறைக்குள் வந்தார்


அவரை பார்த்த திரிலோகேஷ் மேகாவை தூக்கிக் கொள்ள

"எப்படி இருக்கீங்கம்மா?. உடம்புல வேற ஏதாவது தொந்தரவு இருக்கா?" என்று வினவிய படி அவரை பரிசோதிக்க, "இல்லை டாக்டர்" என்று மறுத்தார் இந்துமதி.


"டாக்டர் அம்மாவ எப்ப வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்" என்று மீனு கேட்க, "இன்னைக்கே கூட்டிட்டு போகலாம்ம்மா, ஷிஸ் இஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்" என்று கூற,

"ஓகே டாக்டர்" என தலையசைத்தாள்.


"சரிம்மா, நீங்க என்னை வந்து பாருங்க, டிஸ்சார்ச் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்" என்றவர் வெளியேறி செல்ல மீனுவும் அவருடன் சென்றாள்.


மேகாவை இந்துமதியிடம் அமர வைத்த திரிலோகேஷும் அவளுடன் மருத்துவர் அறைக்கு சென்றான்.


"மீனலோஷினி, இவங்களுக்கு ரெண்டாவது ஹட்டாக். ஏற்கனவே அப்பா இறந்தப்ப ஒரு தடவை வந்திருக்குல்ல" என்று புருவம் உயர்த்தி வினவ, "ஆமாம்" என தலையாட்டினாள்.


"சரிம்மா, நான் கொடுக்கிற டேப்லெட் எல்லாம் கொடு. அப்புறம் பூட் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க. இன்னும் கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோம்மா. ரொம்ப டென்ஷன் பண்ணாதீங்க. அதிகமா எமோஷனல் ஆகக் கூடாது" என்று அரைமணி நேரமாக பேச எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டவளை அமைதியாக பார்த்தப்படி அமர்ந்திருந்தான் திரிலோகேஷ்.


"சரிம்மா, இப்ப வீட்டுக்கு அழைச்சுட்டு போ. எமர்ஜென்ஸினா உடனே கால் பண்ணு" என்று மருந்துச் சீட்டு மற்றும் அவரின் மருத்துவ அறிக்கையை அளிக்க பெற்றுக் கொண்டவள் எழுந்து வெளியேற அவள் பின்பே வந்தவன், "குடு மீனு, நான் போய் பே பண்ணீட்டு வரேன். நீ ஆன்ட்டியை கூட்டிட்டு வா" என்றிட,


அவனை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் கூறாது மருந்தகத்தை நோக்கி செல்ல,

"மீனுனு..." என பல்லைக் கடித்தவன் அவளது கையை தடுப்பதற்காக பிடிக்க அப்படி ஒரு முறை முறைத்தாள்.

அதிலே கையை விட்டவன், "சாரி, நான் வாங்கிட்டு வரேன்" என்று மீண்டும் இறைஞ்சுதலாக வேண்ட,


"பெரிசா அக்கறை எல்லாம் இருக்க மாதிரி எல்லாம் நடிக்க வேண்டாம். உங்க வேலை என்னமோ அதை மட்டும் பார்ங்க. எங்கம்மாவ எனக்கு பார்த்துக்க தெரியும்" என்று அனல் தெறிக்க கூறியவள் நகர்ந்து செல்ல முனைய இம்முறை அவளது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான் நகர முடியாத படி.


"லோகேஷ் கையை எடு" என்று அடிக்குரலில் சீற, "ப்ரிஸ்க்ரிப்ஷனை கொடு" என்றான் கடினமான குரலில்.

சுற்றும் முற்றம் பார்த்த மீனுவிற்கு அங்கிருப்பவர்களுக்கு காட்சிப் பொருளாக விருப்பமில்லை.


"நீ சொல்றதை தான் நான் கேட்கணும்" என்று முணுமுணுத்தவளின் கையிலிருந்ததை ஏறக்குறைய பிடுங்கி சென்றான்.


கோபப் பெருமூச்சு விட்டவளுக்கு இந்துமதி நினைவு வர வேகமாக அறையை நோக்கி சென்றாள்.


"டாக்டர் என்னம்மா சொன்னாங்க மீனும்மா" என்று இந்துமதி வினவ,

"வீட்டுக்கு அழைச்சுட்டு போக சொல்லீட்டாங்கம்மா" என்றவள் தங்களுடைய பொருட்களை பையில் எடுத்து வைத்து விட்டு, "வாங்கம்மா, முதல்ல உங்களை கார்ல உட்கார வைச்சுட்டு வரேன்" என்று கைப் பிடித்து இறக்கி அழைத்துச் செல்ல மேகாவோ அந்த பையை பிடித்து இழுத்து கையில் எடுத்துக் கொண்டாள்.


"மேகா, நீ வை நான் எடுத்துக்கிறேன்" என்று அவளின் நிலையை பார்த்து மீனு புன்னகைத்துக் கூற இந்துமதிக்கும் சிரிப்பு வந்து விட்டது.
"இல்லை நானே கொண்டு வரேன்" என்றவள் ஏறக்குறைய அதை இழுத்து வர பாதியிலே வந்த திரிலோகேஷ் வந்து மேகாவை தூக்கி அவளிடமிருந்ததை வாங்கிக் கொண்டான்.


அனைவரும் காரில் ஏற திரிலோகேஷ் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான். மேகா அவ்வ பொழுது ஏதாவது கேள்விக் கேட்க இந்துமதி அவளுக்கு புன்னகைக்கையுடன் பதில் அளித்தப் படியே வந்தார். ஒரு வாரத்திற்கு பிறகான அவரது புன்னகையையும் முகமலர்ச்சியையும் பார்த்தப்படி மீனு அமர்ந்திருக்க அவளது மடியில் மேகா அமர்ந்திருந்தாள். அந்த சூழலில் அனைவருக்குமே சற்று இதமாக இருந்தது.




அப்படியே வீட்டிற்கு வர, "இரு லோகேஷ் காபி குடிச்சுட்டு போலாம்" என்றவர், "மீனு" என்றிட, "போறேன்ம்மா" என அடுப்பறை நுழைந்து அனைவருக்கும் காபி போட்டு எடுத்து வந்தாள்.


"அடிக்கடி மேகாவை அழைச்சுட்டு வாப்பா. அவ இருந்தா வீடே கொஞ்சம் கலகலப்பா இருக்கும்.அவளுக்கும் தனியா இருக்கதை விட இங்க இருக்கிறது பொழுது போகும்" என்றிட, "கண்டிப்பா ஆன்ட்டி, நீங்களும் உடம்பை பார்த்துக்கோங்க. எல்லாமே சீக்கிரமே சரியாகிடும்" என்றிட தலையசைத்து புன்னகைத்தார். சிறிது நேரத்தில் மீனு காபியை எடுத்து வந்து கொடுத்தாள்.

மேலும் சில நிமிடங்கள் லோகேஷ் அவரிடம் பொதுவாக பேசிக் கொண்டிருக்க மீனுவே சற்று தள்ளி அமர்ந்து மேகாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். அவளோ பள்ளியில் மீனு வராத பொழுது நிகழ்ந்தவற்றை விவரிக்க அவளும் புன்னகையுடன் தலையசைத்து கேட்டு கொண்டிருந்தாள்.




இந்துமதிக்கு சிறிது நேரத்திற்கு பிறகு உட்கார முடியாமல் அசௌரியமாக இருக்க முகத்தை சுளித்தார். அதை கண்டு கொண்டவன், "சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன்" என எழுந்து கொள்ள அதை கண்ட மீனலோஷினி அவர்கள் அருகில் வந்து இந்துவை அழைத்துச் சென்று அறையில் விட்டு வெளியில் வந்தாள்.


"போய்ட்டு வரேன் மீனு" என்றவன் முன் கையில் பணத்துடன் நின்றவள், "ஹாஸ்பிட்டல்ல கட்டினது" என்று நீட்டினாள்.


வாங்க மறுத்து தலையாட்டியவன், 'ஆன்ட்டிக்கு சரியாகட்டும். சீக்கிரமே வரேன்" என்று அவளது கன்னத்தை உரிமையாக தட்டி விட்டு மேகாவை தூக்கிக் கொள்ள, "பாய் மீனுக்குட்டி" என்று மேகா கூறிட கிளம்பி விட்டான்.


அதற்கு பின் எந்த பிரச்சனையுமின்றி நாட்கள் நகர்ந்தது. நான்கு நாட்கள் இந்துமதியுடன் இருந்தவள் வழக்கம் போல் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தாள். திரிலோகேஷூம் இந்துமதிக்கு அழைத்து நலம் விசாரித்துக் கொள்வதோடு சரி மீனலோஷினை பார்க்கவோ பேசவோ முயற்சி செய்திடவும் இல்லை.


ஆகி விட்டது இரண்டு மாதங்கள், இந்துமதியின் உடல்நிலையும் பூரண குணமாகியிருக்க தற்பொழுது அவரின் முன் தான் திரிலோ
கேஷ் அமர்ந்திருந்தான்.


"சொல்லுப்பா, என்ன விஷயம்" என்றிட, "ஆன்ட்டி, மீனுவ எனக்கு கல்யாணம் பண்ணி தருவீங்களா?" என்று நேரடியாக கேட்க அவருக்கு சற்று அதிர்ச்சி தான்.
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Lokesh meenu va marriage panna ok nu sollitan meenu why kovam lokesh pathupan vidu free ya indhu amma ku sari aagadum varuvan
Indhu amma shock aagama lokesh solluratha keluga
 
Top