Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்....!*
*மௌனம் 18(i)*
*சில வருடங்களுக்கு முன்...*
மறுநாள் என்றும் கல்லூரிக்கு வந்த ஆடவனின் முகத்தில் ஒரு வித குறுநகை ஒட்டிக் கொண்டே இருக்க அதைக் கண்டு தொண்டையைச் செருமினான்,
கிஷோர்.
சிற்றுண்டிச்சாலைக்கு செல்லாமல் அவர்களுடன் சேர்த்து இன்னும் ஓரிரு மாணவர்கள் மட்டுமே மீதமிருந்தனர்,
அவர்களின் வகுப்பறையில்.
"என்ன மச்சான்..பேஸ் எல்லாம் டாலடிக்கிது..?"
"அந்த ஒன்னுல்ல கிஷோர்..அவனுக்கு அந்த தர்ஷினி பொண்ணு மேல இன்பாக்ஷுவேஷன் ல அதான்..உள்ளுக்குள்ள சந்தோஷம்.."
"அப்போ இன்னுமே இன்பாக்ஷுவேஷன் தான.." என்று விட்டு ஆடவனின் முகத்தை பார்த்திட அவனோ பதிலேதும் பேசாது இயல்பாய் இருவரின் முகத்தையும் பார்த்திருந்தான்,
என்றும் போல்.
"எங்கடா..லவ்வும் இல்ல..யெழவும் இல்லங்குற ட்ரேட் மார்க் டயலாக காணோம்.."
"அதான்..அப்ப இருக்கா தேவா..?" ஆர்வமாய் கிஷோர் கேட்டிட இருபுறமும் தலையாட்டி சிரித்தான்,ஆடவன்.
ஏனோ அவன் புன்னகையில் அத்தனை உயிர்ப்பு.
"என்ன பாலா இவன்..ஒன்னும் சொல்ல மாட்டேங்குறான்..அப்போ இல்லியா தேவா..?" மீண்டும் கேட்டிட தோழனின் கூற்றில் ஆடவனின் ஆட்காட்டி விரல் புருவத்தை உராய்ந்தது.
"நமக்கிட்டா இருக்கான்னு கேட்டு பதில் சொல்லனா இல்லன்னு அர்த்தமா..?" சிறு சிரிப்புடனேயே மொழிந்திருந்தான்,
ஆடவன்.
"அப்போஓஓஓ..இருக்காடா..?" கண்கள் விரிய கேட்டான், பாலா.
ஏனோ தோழனின் எதிர்க்கேள்வி அவன் ஒத்துக் கொண்டதை ஒப்புவிக்கும் படியல்லவா இருந்தது.
"பதில் சொல்லலனா இருக்குன்னும் அர்த்தம் எடுத்துக்க முடியாதே.." ஒரு கையால் மேசையில் இருந்த காபி டம்ளரை சுழற்றியவாறு
மறுகையை விரித்தான்,ஆடவன்.
தோழர்களுக்கு மண்டை காய்ந்தது.
"நீ இப்போ இருக்குன்னு சொல்றியாஆ...? இல்லன்னு சொல்றியா..?"
"அதான்..பாலா கேக்கறதுக்கு பதில் சொல்லுடா.."
"நா எதுவும் சொல்லல..நீங்க என்ன வேணா நெனச்சிக்கோங்க..
யெஸ் ஆர் நோ..சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.." தோழர்களை தெளிவாக குழப்பி விட்ட திருப்தி ஆடவனிடத்தில்.
நேற்றிரவு தான் தனது மனதை முழுதாக உணர்ந்து தன் பிடிவாதத்தை தகர்த்து அதை ஏற்கவும் செய்திருந்தான்.
தர்ஷினியின் மீது வந்திருப்பது ஈர்ப்பல்ல..
காதல் என்பதை உணர்ந்து தான் ஏற்றுக் கொண்டாலும் தோழர்களிடம் உடனே சொல்ல ஏதோ ஒரு தயக்கம்.
அதனால், தான் பதிலேதும் சொல்லாமல் மழுப்பி அவர்களை குழப்பி விட்டிருந்தான்.
தன்னைப் பார்ப்பதும் தமக்குள் யோசிப்பதுமாய் இருந்த தோழர்களை கண்டும் காணாதது போல் வெளியே வந்தவனுக்கு தர்ஷினியை கண்டிட வேண்டும் என்கின்ற எண்ணமே சிந்தை முழுவதும்.
ஏனோ அவள் நினைவுகள் தந்த இதத்தில் விழிகளோ இலக்கின்றி அலைய இதழ்களில் இரசிப்பான புன்னகை தேங்கியிருக்க ஆடவனின் கரங்களோ பின்னங்கழுத்தை கோதிக் களைத்தன.
பின்னங்கழுத்தில் கரத்தை பதித்தவாறே கீழே விழுந்திருந்த காலியான சிறு குளிர்பான கேன் ஒன்றை அவன் உதைத்திட அதுவோ சற்றுத் தள்ளி இருந்த மரத்தில் பட்டு மீண்டிட அதைக் கண்டவனின் இதழ்களோ ஏனென்றே தெரியாமல் இன்னும் விரிந்தன.
ஏனோ மனம் முழுதும் அப்படி ஒரு நிறைவு.
இருகை விரல்களையும் கோர்த்து அப்படியே நெற்றியின் மேற்பகுதியில் வைத்து விழிகளை மூடி கொஞ்சமாய் அவற்றை சுருக்கி ஆழ்ந்த மூச்சொன்றை அவன் உள்ளிழுத்தாலும் இதழ்களில் இருந்த புன்னகை இன்னுமே உறைநிலையில் தான்.
கடந்து சென்ற ஓரிருவர் அவனை வித்தியாசமாக பார்த்துச் சென்றதை உணர்ந்திடவில்லை,
ஆடவன்.
முப்பது நொடிகள்.
முப்பது நொடிகள் கடந்திருக்கும்.
விழி திறந்தவனோ அந்த மரத்தின் அருகே வந்து நசுங்கியிருந்த அந்த காலி கேனை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு நிமிர்ந்திட அவன் முன்னே வந்து நின்றான்,பாலா.
"என்னடா ஆச்சு உனக்கு..?" தெரியாதது போல் கேட்ட தோழனுக்கு ஒத்து ஊதினான்,கிஷோர்.
"என்னென்னமோ ஆச்சு.."
"டேய்..உள்ளுக்குள்ள யோசிக்காம பதில் சொல்லுடா.."
"ஒன்னுல்லியே.."
"அப்றம் யேன்டா இப்டிலாம் பண்ணிட்டு இருக்க.."
"சும்மா..ஒரு வெளயாட்டுக்காக தான் மச்சான்..மத்த படி ஒன்னுல்லயே..யேன் ஏதாச்சும் மாற்றம் தெரியுதா..?" உதடு பிதுக்கி ஆடவன் கேட்டிட நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்,
கிஷோர்.
"இவ்ளோ நாளா உலகம் அழிஞ்ச மாதிரி சுத்திகிட்டு இருந்த...இப்போ என்னன்னா மொத்த உலகமும் உன் கைலங்குற மாதிரி போஸ் கொடுக்குற..நெஜமாவே காத்து கருப்பு அடிச்சிருச்சா மச்சான்..?" தோழனின் நடத்தை தந்த குழப்பத்தில் கேட்டுவிட்டிருக்க புன்னகையை இழுத்து தன்னுள்ளே புதைத்துக் கொண்டன,ஆடவனின் இதழ்கள்.
"சரி..எனக்கு வேல இருக்கு..நா அப்றமா க்ளாஸுக்கு வர்ரேன்.." என்று விட்டு ஆடவன் திரும்பி நடந்திட பாலாவின் தோளில் கரத்தை போட்டான்,
கிஷோர்.
"என்னடா இவன் இப்டி நடந்துக்குறான்..?"
"பயபுள்ள காதல் வலைல சிக்கிருச்சு.."
"எதேஏஏஏஏ.."
"அதான் தர்ஷினிப் பொண்ணு..அவனோட தேவா..நம்ம தங்கச்சி..அவள..ச்ச்..சாரி..சாரி..அவங்கள லவ் பண்றான்னு நடுமண்டைல நச்சுன்னு ஆணி அடிச்ச மாதிரி பயலுக்கு புரிஞ்சுருச்சு..அது தான் இப்டி நடந்துக்குறான்..ஆனாலும் பயல பாரேன்..நம்ம கிட்டயே மழுப்புறான்..ஆடு சிக்காமயா போய்டும்.." கூறிய பாலாவுக்கு தோழன் மாற்றம் அத்தனை உவகையை தந்திட அதன் வெளிப்பாடு கிஷோரின் முகத்திலும்.
தோழர்களிடமிருந்து தப்பித்து ஒருவாறு நூலகத்துக்கு வந்து சேர்ந்தான்,தேவா.
இப்போது தர்ஷினி இங்கு தான் இருப்பாள் என்பது அவன் அறிந்த விடயம் ஆயிற்றே.
ஒருவித புன்னகையுடன் கடகடவென படிகளை ஏறியவனின் பாதங்களோ ஒவ்வொரு முறையும் நிலத்தை தொட்டதும் க்ஷண நேரமே.
ஆடவனின் சிகையும் பாதத்தின் தாளத்துக்கேற்ப துள்ளி மீண்டன.
என்ன தான் ஆவலுடனும் எதிர்ப்பார்ப்புடனும் துள்ளிக் கொண்டு வந்தாலும் வாசற்கதவின் அருகே அவன் பாதங்கள் தரிக்கத் தான் செய்தது.
ஏனோ இதயம் படபடத்தது.இனம் புரியா ஒரு வித ஆர்வம் திரளடைந்தாலும் ஏனோ ஒரு குறுகுறுப்பு அவனுள்ளுக்குள்.
தன் மனதை உணர்ந்த பின் முதன் முதலாக தானாக அவளைப் பார்க்க வந்ததால் எழுந்ததாய் இருக்கும் என தனக்கே பதில் சொல்லி தேற்றிக் கொண்டவனின் வலது கரமோ இடது புற நெஞ்சை தொட்டது.
"காம் டவுன் தேவா..ரிலாக்ஸ்..அன்னிக்கி மாதிரி மயங்கிரப் பாத்துடாத.." தனக்குள் சொல்லிக் கொண்டவனின் இதயத் துடிப்பு கொஞ்சமாய் ஏறி இருக்க நெஞ்சைத் தொட்டுக்கொண்டிருந்த விரல்களோ மென்மையாய் தாளம் போட்டன.
"காம் டவுன் தேவாஆஆஆஆ.." ஒரு முறை சொல்லிக் கொண்டு ஆழமாய் சுவாசித்தவனின் முகமோ இயல்பாய் மாறிட இதழ்களை அழுந்த மூடிக் கொண்டிட ஏனோ அந்த விழிகளில் மட்டும் அப்படி ஒரு துள்ளல்.
நூலகத்தினுள் நுழைந்தவனோ பரபரவென அவளைத் தேடாமல் எப்போதும் போன்ற தன் வேக நடையுடன் புத்தக அடுக்குகளின் அருகே சென்று புத்தகைத்தை தேடுவது போன்று நடித்துக் கொண்டிருக்க அவனை ஓரவிழிகள் தான் அவளின் விம்பத்தை தேடி ஓடிக் கொண்டிருந்தன.
இரண்டு புத்தகங்களை வைத்து விட்டு மூன்றாவதாய் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி நின்று விழி சுழற்றியவனிடம் சிக்கினாள்,தர்ஷினி.
நூலகத்தின் வலது புறம் போடப்பட்டிருந்த மேசையொன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள்,சுற்றம் உரைக்காமல்.
கருமணியில் விம்பம் நிறைந்த தருணமதில் அவன் இதழ்களில் இரசிப்பான புன்னகை ஒன்று ஒட்டிக் கொள்ள தன்னைக் கட்டுப்படுத்தியவனாய் தலையை குனிந்து கொண்டே உட்கார்ந்தான்,ஓரிடத்தில்.
மனம் முழுவதும் வார்த்தைகளில் வரிக்க முடியாத ஒரு வித மகிழ்ச்சிப் பிரவாகம்.
எப்படி அதை அடக்கிக் கொள்வதென்பது தெரியவில்லை,
அவனுக்கு.
புத்தகத்தில் விழிகளை பதித்து ஆடவன் அமர்ந்திருந்தாலும் இடையிடையே அவனைக் கேளாமலே அவள் விம்பத்தை உரசிவிட்டு தான் மீண்டன, அவன் விழிகள்.
தனக்குள் சிரித்துக் கொண்டிட அதன் வெளிப்பாடாய் இதழரோம் கசிந்து ஒட்டிக் கொண்டிருந்தது,
துளிப்புன்னகை.
அடுத்த பாடவேளைக்கான மணி அடிக்க பரபரவென்று எழுந்து புத்தகத்தை அந்த அடுக்கில் இல்லாது வேறோரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டு கடகடவென வெளியேறியிருந்தாள்,தர்ஷினி.
ஏனோ அவசரசத்தில் ஆடவன் தன்னைப் பார்த்த வண்ணம் இருந்ததை அவள் கவனித்திடவில்லை.
கணக்கெடுப்பு காரணமாக நூலகத்தில் புத்தகம் தர மறுத்து விட்டிருக்க கொஞ்சம் வருத்தம் தான் அவளுக்கு.
எப்படியும் அடுத்த முறை வரும் போது எங்கிருக்குமோ..?
மீதிப் பாதியை எப்படியாவது படித்திட வேண்டும் என்கின்ற ஆர்வம் மேலோங்கி இருக்கவே இந்த பதுக்கல்.
அவளை மட்டுமே அவதானித்துக் கொண்டிருந்த அவன் விழிகளில் அவளின் செயல் தப்புமா என்ன..?
அவன் நகர்ந்து சென்றவுடன் அவனோ அந்தப் புத்தகத்தை கையிலெடுக்க ஏனோ தெரியவில்லை,
இதழ்கள் விரிந்தன.
நேற்று தான் இருந்த விதமும் இன்று தான் இருக்கும் நிலையையும் எண்ணிடும் போது அவனுக்கே புதிர் தான்.
அழுத்தக்காரன் அவனையும் அழகாய் மாற்றி விட்டு அமைதியாய் கடந்திடுகிறாள் அவள்,ஏதும் அறியாமலே.
கல்லூரி நேரம் முடிவடைந்திருக்க பேரூந்தில் ஏறி நின்று கொண்டிருந்தாள்,
தர்ஷினி.
ஆட்கள் நிரம்பினும் பேரூந்தை இன்னும் கிளப்பியபாடில்லை.
சலிப்புடன் பார்த்தவளுக்கு புழுக்கத்தில் வியர்த்துக் கொட்டியது.
அவளுக்கு கொஞ்சம் முன்னே தான் நின்றிருந்த ஆடவனின் விழிகளோ அடிக்கடி அவளைத் திரும்பி பார்த்த படி தான் இருந்தது.
பேரூந்து நகர்ந்து கொண்டிருக்க உரசல் பேர்வழியொன்று தர்ஷினியின் பின்னே வந்து நிற்க அத்தனை எளிதாய் அவள் உணரவில்லை.
அவள் கவனம் முழுவதும் வேறெங்கவல்லவா இருந்தது.
ஓரிரு நிமிடங்கள் கடந்த பின்னரே அசௌகரியம் உரைக்க அப்படியே முழங்கையால் பின்னே நின்றிருந்தவனின் வயிற்றில் ஒரு குத்து
விட்டு காலை ஓங்கி மிதித்த படி நகர்ந்திருந்தாள்,தள்ளி.
கூட்டத்தில் அவன் செயல் ஒருவனைத் தவிர மற்ற யாருக்கும் புலப்படாமல் தான் போனது.
கண்டிருந்தாலும் எத்தனை பேர் கேள்வி கேட்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறி தான்.
தள்ளி நகர்ந்தவளுக்கு நல்ல வேளையாக இருக்கையொன்று கிடைத்திட படக்கென்று அமர்ந்து கொண்டாலும் அத்தனை எளிதில் அந்த நிகழ்வில் இருந்து வெளியே வந்திடவில்லை,
அவளால்.
ஒரு வித சங்கடத்துடன் தன்னை குறுக்கி கொண்டு அமர்ந்து கொண்டிருந்தவனின் நுண்ணிய உணர்வுகள் அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தேவாவுக்கு புரியாமல் இல்லை.
அவன் கண்களில் அப்படி ஒரு ரௌத்திரம்.
அடுத்ததாய் இருந்த இடத்தில் அந்த உரசல் பேர்வழி இறங்கிக் கொள்ள அவன் பின்னூடு இறங்கியிருந்தான்,
ஆடவன்.
விரல்களோ சட்டைக் கையை இன்னும் மடித்து விட விழிகளின் அனல் தெறித்தது.
அந்த உரசல் பேர்வழியை அப்படியே பின் தொடர்ந்து நடந்தவனுக்கு அவன் யாருமில்லா ஒற்றையடிப் பாதையில் நடந்தது அத்தனை எளிதாயிற்று.
பின்னாலிருந்து அவன் முகத்தை அமுக்கி பிடித்து முட்டியை தூக்கி ஒரு உதைவிட்டான்,
அவனின் முதுகில்.
எதிர்பாரா நிகழ்வில் திமிறிய அந்த உரசல் பேர்வழிக்கு ஆடவனின் உதை பெரும் வலி தான்.
போட்டு புரட்டி எடுத்து விட்டான்,அவனை.
அப்படி ஒரு ஆத்திரம்.
ஏனென்று தெரியவில்லை, பெரும் கோபம் கனன்று கொண்டிருந்தது,
மனதில்.
தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவனுக்கு அது அத்தனை எளிதில் தீராது என்பது புரிந்திட ஓங்கி ஒரு உதை கீழே விழுந்திருந்தவனின் தொடையில்.
அவனுக்கு வலியில் விழிகள் கலங்கிற்று.
"இனிமே..அவங்க பின்னாடி வந்து நின்ன..கில் யூ டேமிட்.." கத்திக் கொண்டு ஓங்கி மிதித்திருந்தான்,
பாத்ததை.
உரசல் பேர்வழிக்கோ அவனின் ஆத்திரத்துக்கான காரணம் புரிந்து கோபம் எழுந்தாலும் அதைக் காட்டிடும் திராணி ஏது..?
தீப்பிளம்பாய் மின்னிய விழிகளுடன் கீழே குனிந்த ஆடவனோ அவனின் கையை முறுக்கி விட்டு கன்னத்தில் ஓங்கி ஒரு அரையை வைத்து விட்டே மீண்டும் திரும்பி நடந்தான்,
விட்டால் அவன் உயிருக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்றும் தோன்றிற்று.
முயன்று விட்டு விட்டு வந்தான்.
ஆனால், கோபம் இன்னும் தீர்ந்த பாடில்லை.
●●●●●
கல்லூரி முடித்து விட்டு நன்றாக ஒரு குளியலை போட்டு விட்டு தலையை துவட்டிய படி வீட்டுக்கு வெளியே வந்தவளின் தோளில் துப்பட்டா தொங்கிக் கொண்டிருந்தது.
இன்னும் அவள் பேரூந்தில் நடந்த சம்பவத்தில் இருந்து மீண்டிருக்கவில்லை.
தன் மனதை கொஞ்சம் சமப்படுத்த அவள் வெளியே வந்திருக்க அந்த நேரம் தான் அவள் வீட்டைக் கடந்து சென்றான்,
ஆடவன்.
ஆத்திரம் தீராதிருக்க தன் சிந்தனையில் உழன்றவனின் விழிகள் அவளைக் கண்டு கொள்ளவில்லை.
ஏதோ யோசனையுடன் தன் தலையை கோதிய அவன் நடந்திட தர்ஷினியோ என்றுமில்லாமல் ஒரு கணம் தரித்து அவனைத் தான் பார்த்திருந்தாள்,
தன்னை மீறி.
செந்நிற குருதியை பூசிக் கொண்ட அவனின் கரங்களோ..
கசங்கிப் போய் மண்ணைத் தேய்த்துக் கொண்டிருந்த அவன் சட்டையோ..
தீப்பிளம்பு விழிகளுடன் தலையைக் கோதிக்கொடுக்கும் அவன் செயலோ..
ஏதோ ஒன்று தன்னை மறந்து அவள் புறம் பார்வையைப் பதித்து அவளை நிற்க வைத்திட அவளின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.
அவன் மறைந்தது தான் தாமதம்,
தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு தன் மீதே கோபம் எழ இப்போது சிந்தனை முழுவதும் ஆடவனை சுற்றியல்லவா ஓடிக் கொண்டிருந்தது.
"என்னாச்சு..? இந்த சீனியர் யேன் இப்டி இருக்கு..? அடிதடிக்கெல்லாம் போனாலும் இவ்ளோ கோபம் இருக்காதே மொகத்தல..என்னாச்சு..?" அவனைப் பற்றியே சிந்தனை எழுவதை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
அன்று நாள் முழுக்க கடந்து சென்ற தேவாவின் தோற்றமும் அவனின் செயல்களுமே அவனை ஆக்கிரமிக்க தன்னை நொந்து கொண்டவளாய் அலைபேசியில் மூழ்கினாள்,
அவள்.
அதற்குள் தோழியிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
"தர்ஷினி..ஒரு கேள்வி பா..நீ தான் நெறய புக்ஸ் படிப்பல..இல்லன்னா தேடியாச்சும் சொல்லு..நாம ஒருத்தர பத்தி நெனச்சுகிட்டு இருந்தா அவங்களுக்கு நம்ம நெனப்பு வருமா..?
அப்டின்னா யாராச்சும் நம்மல பத்தி நெனச்சாங்கன்னா அவங்க நெனப்பு நமக்கு அடிக்கடி வருமா பா..?" யோசனை செய்யும் எமோஜியுடன் அவள் அனுப்பி இருக்க இவளுக்கும் நெற்றி சுருங்கியது.
"தெரியல.."என்று தட்டச்சு செய்தவளோ அழித்து விட்டு "அதெல்லாம் பொய்.." என்று அனுப்பி இருந்தாள்,
கண்ணடிக்கும் எமோஜியுடன்.
"யேன் பொய்னு சொல்ற..?" கேள்வி எழுப்பியது,மனசாட்சி.
"இவ்ளோ நேரம் அந்த சீனியர பத்தி தான் நாம யோசன பண்ணிட்டு இருந்தோம்..அதுக்கு ரீசன் அது என்ன பத்தி நெனச்சுகிட்டு இருந்ததா..? இல்லைல.." என்று மனசாட்சியை தட்டி அடக்கியவளாய் புத்தகமொன்றை எடுத்து அதில் ஆழ்ந்திட அவளுக்கு எங்கே தெரியப் போகிறது..
தேவாவின் சிந்தனை முழுவதும் அவளைச் சுற்றி தான் என்பது.