• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 17

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 17


எழுபதாவது மாடியின் விளிம்பில் அமர்ந்து கால்களை இலகுவாக கீழே தளர விட்டு அசட்டையோடு மேலிருந்து கீழே
வேடிக்கை பார்த்திருந்தவனுக்கு பயமென்பது சிறிதும் இருந்திருக்கவில்லை. மனம் முழுவதும் ஒரு வித இயலாமையோடு கூடிய வலி. ஏதோ வாழ்க்கை தன்னை மிகவும் மோசமாக வஞ்சித்து தோற்கடித்து விட்டதாக ஒரு எண்ணம். எதையும் யாரையும் பார்க்க பிடிக்கவில்லை பேச பிடிக்கவில்லை. எத்தனை நாட்களுக்கு முன்பு உண்டான் என்று கேட்டால் தெரியாது, ஒரு மாதமாக மழிக்கப்படாது புதர் போல் அடர்ந்த தாடி, வாடி வதங்கி உயிர்ப்பே இல்லாது எதையோ பறிகொடுத்தது போன்ற விழிகள் என்று எதை தின்றால் பித்தம் தெளியும் என்றே புரியாத நிலையில் அமர்ந்திருந்தான். வாணி மீது கோபத்தில் இருந்தான் என்றால் யாஷ்வி மீது கொலைவெறியிலே இருந்தான். அவ்வளவு ஆற்றாமை பொங்கி வழிந்தது. ஆக, 'போங்கடா நீங்களும் உங்க வாழ்க்கையும்' என்று எல்லாத்தையும் எல்லாரையும் விட்டு வந்திருந்தான். அக்ஷியையும் ஹர்ஷித்தையும் நினைக்கும் பொழுது மனதின் ஓரத்தில் விஸ்வரூபமெடுத்து குற்றவுணர்ச்சி தாண்டவமாடினாலும் யாஷ்வியை பார்த்து விட்டு அக்ஷியுடன் இயல்பாக இருக்க முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை, அது அவனுக்கே அவன் கொடுத்துக் கொள்ளும் ஆகப்பெரும் தண்டனை அல்லவா? அதற்காக அக்ஷியையும் ஹர்ஷித்தையும் விட்டு விடுவதா? நினைக்க நினைக்க தலையே வெடித்து விடும் போல் தோன்றியது. 'அப்படி யாருக்கு என்ன தீங்கு செய்து விட்டேன். வாழ்க்கை இப்படியொரு சூழலில் தன்னை நிறுத்தியிருக்க வேண்டாமே' என்று எண்ணியவனுக்கு அச்சூழலின் கணத்தை தாங்க இயலவில்லை. ஏதோவொன்று கழுத்தை அழுத்தி நெறிப்பது போல் உணர்வு. மூச்சு விடவே இப்பொழுதெல்லாம் மிகவும் அசௌகரியமாகவே உணர்ந்தான்.



யாஷ்வியை கண்டு அன்று, அடக்கப்பட்ட கோபத்துடன் சவிதா முன் அமர்ந்திருந்த நவீன் சிறிது விட்டால் கூட வெடித்து சிதறி விடும் அபாயம் உண்டு. ஆனால் இழுத்து பிடித்த பொறுமையோடு, "பதில் சொல்லுங்க" என்று ஏறக்குறைய மிரட்டிக் கொண்டிருக்க தூரத்தில் அமர்ந்திருந்த கேசவனும் சரி மனோவும் அவர்கள் அருகில் வர முனையவில்லை. சவிதாவும் கண்களாலே, 'வராதீர்கள்' என்ற குறிப்பை கொடுக்க அமைதியாய் பார்வையாளராய் அமர்ந்திருந்தனர். ரூபா அறையில் குழந்தையை உறங்க வைத்துக் கொண்டிருக்க ஷமீயோ எப்பொழுதோ உறங்கி இருந்தாள். அதற்கடுத்த அறையில் யாஷ்வி சுவற்றில் சாய்ந்து இரயிலை விட வேகமாக தடதடக்கும் இதயத்தை கையில் பிடிக்க முனைந்து கொண்டிருந்தாள். அவளின் மடியில் அமர்ந்திருந்த ஶ்ரீயோ தாயின் கழுத்தை இறுக கட்டிக் பிடித்தபடி மார்பில் சாய்ந்தமர்ந்திருந்தாள். மகள் அருகிலிருக்க வழிய முனையும் கண்ணீரை இழுத்து பிடிப்பது ஆகச்சிறந்த கொடுமையாக இருக்க இதழை அழுத்தி கடித்து உமிழ்நீரோடு உணர்வு பிழம்புகளையும் உள்ளிறக்க முயன்றாள். நவீனின் அரவம் கேட்கிறது, அவன் உள்ளே வந்ததில் இருந்து அவதனித்து கொண்டிருக்கிறாள் ஆனால் எழுந்து சென்று அவனை நேருக்கு நேராக சந்திக்கும் அளவுக்கு துளியும் திராணி இல்லை. அவனுக்கு மட்டுமா வருத்தம், கோபம், ஆற்றாமை எல்லாமே, அவளுக்கு இல்லையா என்ன?


இரண்டு மாதங்களுக்கு முன் ஹர்ஷித் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நவீனோடு அக்ஷியும் ஹர்ஷித்தும் இணைந்து நின்றிருந்த புகைப்படத்தை கண்டு சவிதா மடியில் படுத்து எத்தனை கதறல் கதறினாள். "என்னால முடியலைம்மா, என்னோட நவீன்ம்மா அவர். ரொம்பவே வலிக்குது, அக்சப்ட்டே பண்ண முடியலை. எனக்கு நவீன் வேணும். அவரில்லாம என்னால இருக்க முடியாது. ப்ளீஸ் அவரை வரச் சொல்லுங்க" என்றவளின் கண்ணீரில் சவிதாவிற்குமே கண்ணீர் துளிர்த்து போனது. அவரும் என்ன தான் செய்வார், மகளை தோளோடு அணைத்து வருடி சமாதானம் செய்தவர் அடுத்த நாளே ரிதனோடு பேசியிருந்தார். "நானும் அப்பாவும் யாஷோட அமெரிக்கா வந்திடுறோம். எப்படி நாங்க அவாய்ட் பண்ணாலுமே நவீனை பத்தின நியூஸ் யாஷை டிஸ்டர்ப் பண்ணிடுது. அவ அழுறதை என்னால கண் கொண்டு பார்க்க முடியலைடா ரிதன்" என்று கண்ணீர் விட்டிருக்க, "சரிம்மா, ஒரு டூ மந்த்ஸ் பொறுத்துக்கோங்க. நான் உங்களுக்கு வீடு பார்த்து எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன். யாஷ்க்கிட்டயும் பேசுறேன்" என்றிருந்தான். அவனும் வேலைமாற்றத்தின் காரணமாக தற்பொழுது அருகிலுள்ள மற்றொரு மாகணத்திற்கு இடம்பெயர்ந்திருக்க இரண்டு மாதம் கேட்டிருந்தான். சவிதாவும் எப்படியாவது நவீனை சந்திக்காமல் யாஷை அமெரிக்கா அழைத்து சென்றிடலாம் என்று எண்ணியிருக்க அதுவோ எல்லாமே தலைகீழாய் நடந்தேறியிருந்தது. நவீன் அமர்ந்திருந்திருந்த நிலையே, 'நீங்கள் வாயை திறக்காது நான் நகர மாட்டேன்' என்றதொரு குறிப்பை கொடுத்திருந்தது சவிதாவிற்கு. அப்படியொரு சீற்றதோடு அந்நியப்பார்வை பார்த்து அமர்ந்திருந்தான். பெருமூச்செடுத்து தன்னை சமன் செய்திருந்தவர் எல்லாவற்றையும் கூறியிருந்தார்.



நான்கு மாதங்களுக்கு முன்பு, அது கேரளா மாநிலத்தில் இன்னும் நவீனத்தை முழுமையாக தழுவாத கிராமத்தின் மத்தியில் அமைந்திருந்த இயற்கை வைத்தியசாலை. அதோடு அருகிலே கைவிடப்பட்டவர்களை பாதுகாப்பதற்கென ஆசிரமும் உண்டு. வயதான தம்பதிகளால் ஏழைகளுக்காக இலவச மருத்துசிகிச்சை கிடைப்பதற்காக துவங்கப்பட்டு நூற்றாண்டுகளை கடந்து பிரமாண்ட முறையில் பரந்து விரிந்து அமைந்திருந்தது.
அங்கிருந்த அறையில் சீரான சுவாசத்துடன் படுக்கையில் இருந்தாள் யாஷ்வி. ஆகிற்று நான்கு வருடங்கள். காட்டாற்று வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கியவளை இங்கு தூக்கி வரும் பொழுது உயிர் இல்லை என்றே அனைவரும் எண்ணியிருக்க நவீனிற்காகவும் தன் வயிற்றிலிருக்கும் சிசுவிற்காகவும் உயிரை இழுத்து பிடித்திருந்தாள் போலும்!... உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்திட்டாலும் அது நவீனின் செவியை சென்றடையாதது தான் மிகவும் பரிதாபம். அங்கொருவனோ உயிரை விழியில் தேக்கி தீவிர தேடுதல் வேட்டை செய்து கொண்டிருக்க பாவையோ சுகமாக படுக்கையில் ஆழ்ந்த நித்திரையில் விழுந்திட்டாள். ஆம், கோமா எனப்படும் உணர்விழந்த மயக்கநிலை. மருத்துவர்கள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு இப்பெண்ணிற்கு நடந்து விட்ட விபத்தில் மூளையில் காயமேற்பட்டு இரத்த கசிவினால் நினைவிழப்பு ஏற்ப்பட்டுள்ளது ஆனால் அதிஷ்டவசமாக குழந்தை மட்டும் தப்பியுள்ளது. குணமாக நாட்கள் அல்லது வருடங்களாகலாம் இல்லையென்றால் அப்படியே மயக்கத்திலே கூட மரணிக்க வாய்ப்புண்டு என்று கூறியிருந்தனர். அவள் அசைவின்றி இருந்தாலும் குழந்தை வளர்ந்து பிரசவமும் நடைபெற பெண் மகவு பிறந்திட்டது. அப்பொழுதாவது
கண் விழித்திடுவாளா என்று பார்த்திருக்க அதோ இதோவென்று நான்கு வருடங்கள் கடந்திட்டது. அவர்களும் அவளின் உறவினர்களை குறித்து தேட முற்பட்டு தோல்வியடைந்து அவள் எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டனர்.

அவளின் அருகில் அமர்ந்திருந்தது ஒரு இளம்சிட்டு. எப்பொழுதாவது வந்து அமர்ந்து கொள்வாள் அன்னையின் அருகில். அங்கிருக்கும் பெண்மணி ஒருவர் தான் தாயையும் மகளையும் கவனித்து கொள்வார். அவரின் விருப்பப்படி அக்குட்டியின் பெயர் ஜெயஶ்ரீ ..ஆனால் அழைப்பது ஶ்ரீ.

"ஶ்ரீ, நீ இன்னும் சாப்பிட போகலையா" என்று கடிந்த படி அருகில் வர யாஷின் கன்னங்களை வருடியபடி அமர்ந்திருந்தவள் சட்டென்று முளைத்த புன்னகையுடன் அவரை பார்த்து கண் சிமிட்ட, "ஓடு நான் பார்த்துக்கிறேன் உன் மம்மியை" என்று துரத்தி விட எழுந்து உணவுண்ணும் இடத்தை நோக்கி விரைந்தாள் அச்சிட்டு. வயதென்னவோ நான்கு, ஆனால் அத்தனை தெளிவும், முதிர்ச்சியும் உண்டு, வளரும் சூழலை பொறுத்தே நம்முடைய குழந்தைதனமும் முடிவாகிறது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட. யாஷை போல் வாயிற்கு வலிக்காது அத்தனை பாந்தமாய் பேசினாலும் உருவம் மட்டும் நவீனை அச்சில் வார்த்தது போல். அப்பெண்மணி அவள் வளரும் பொழுதே யாஷை காட்டி கூறியே வளர்க்க அக்குட்டியும் அவ்வப்பொழுது அன்னையின் அருகில் அமர்ந்து அவளின் தலையை வருடுவது, கையை பிடித்திழுப்பது, காலை சுரண்டுவது சில சமயம் அவளிடம் பேச முயற்சிப்பது என்று ஏதாவது ஒன்றை செய்திடுவாள் புன்னகை முகமாக.

அன்று ஶ்ரீ உணவு முடித்து யாஷிடம் மீண்டும் வரும் பொழுது அவ்விடம் சற்று கூச்சலோடு மருத்துவர்களால் சூழப்பட்டிருந்தது. ஆம், யாஷ் எழுந்து அமர்ந்திருந்தாள். எதுவும் நினைவில்லை. சுற்றியிருந்தவர்களை கண்டு மலமலங்க விழிக்க அவளை பரிசோதித்த மருத்துவர் இயல்பாக்க முயல கடைசியாய் நவீன் புன்னகை முகம் நினைவெழ அன்னிச்சையாக கரங்கள் அடிவயிற்றிற்கு சென்றது. "உன்னோட பெயர் நினைவிருக்காமா? நீ எந்த ஊர், கடைசியா உங்க நினைவில என்ன இருக்கு?" என்ற் தொடங்கிய கேள்வி கணைகள் இரண்டு நாட்களாகவே தொடர்ந்திட்டது. ஆம், அவள் மெது மெதுவாக ஒவ்வொன்றாக நினைவில் கொண்டு வந்து அசைபோட்டு மருத்துவரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். இடையில் அவளின் மகள் என்று யாரும் கூறாமலே நவீனின் உருவத்தோடு ஒப்பிட்டு ஶ்ரீயை மூளைகாட்டிக் கொடுக்க லேசாக தேங்கிய நீர் துளிகளோடு அப்பிஞ்சினை கைகளில் அள்ளிக் கொண்டாள். மருத்துவர் முழுவதுமாக பரிசோதித்து அவளின் நலத்தை உறுதி செய்த பின்பே கிளம்ப அனுமதியளித்தார். அவளுடன் துணைக்கு வேறு இரண்டு பேர் கிளம்பியிருந்தனர் சென்னையை நோக்கி. அவ்வப்பொழுது மடியில் அமர்ந்திருந்த ஶ்ரீயின் தலையை வருடிய யாஷ்வியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. எப்படியெல்லாம் பிறந்து சீராடி வளர வேண்டியவள் அனாதையாய் போன மாயமென்ன?..நவீன், அவனை நினைத்தாலே உள்ளமெல்லாம் சில்லிட்டது. இத்தனை வருடத்திற்கு பிறகு தங்களை கண்டவுடன் எப்படி அதிர்வான். அணைத்துக் கொள்வானா, அல்லது கதறி அழுதிடுவானா, அவனுடைய மகள், இதோ..எப்படியெல்லாம் அன்றைய ஒரு நாளுக்கே என்னை படுத்தினான் என்றவளுக்கு அன்றைய நாளின் நினைவுகள் தாக்க அப்படியே கண்களை இறுக மூடிக் கொண்டாள். வலியின் சாயல் முகத்தில் பிரதிபலிக்காமல் இருக்க வெகு பிரயதனப்பட வேண்டியிருந்தது பாவைக்கு.


'இதோ நவீனின் வீடு இன்னும் ஐந்து நிமிடத்தில் வர போகிறது. அந்த சாலையில் நுழைந்து விட்டோம்' என்று ஒவ்வொன்றாய் மனதோடு பேசி அத்தனை ஆர்பரிப்போடும் உற்சாகத்தோடும் வந்தவள் இறுதியில் ஏமாந்து போய் தான் நின்றாள். 'நான் வந்துட்டேன் நவீன், எங்கயுமே போகலை' என்று உரக்க கத்தி அவனை அணைக்க பரபரத்த கைகளை அடக்குவதற்குள் மூச்சடைத்தது. வாயிலில் நின்ற காவலாளிக்கோ இவளை அடையாளம் தெரியவில்லை. ஆம், புதிதாக ஒரு வருடத்திற்கு முன்பாக தான் சேர்ந்திருந்தான்.


நவீன் ஊரில் இல்லை, ஹைதராபாத்தில் குடியேறி விட்டான் என்ற தகவலை மட்டும் கொடுத்தவன் அவனின் எண்களை கூட தர மறுத்து விட்டான். "யாரென்று தெரியாதவர்களிடம் நான் எப்படி என் முதலாளியின் எண்களை பகிர்வேன்" என தன்னுடைய தொழில் தர்மத்தை கூறி.

உடைய முயன்ற மனதை இழுத்து பிடித்து அடுத்ததாக தேடிச் சென்றதென்னவோ சவிதாவை தான். அவளை கண்ட நொடி மயங்கியே சரிந்தார். தண்ணீர் தெளித்து எழுப்ப மகளை கட்டிக் கொண்டு அவர் நடத்திய பாசப் போராட்டத்தை வார்த்தையில் வடிக்க இயலாது. அப்படியொரு அழுகை பெண்மணிக்கு. யாஷ்வியும் அப்படி தான் கண்ணீரோடு நிற்க கேசவனோ பேத்தியை அணைத்து உச்சி முகர்ந்தார். மனோ, அவளுடன் வந்தவர்களை அமர வைத்து உபசரித்து நன்றி நவிழ சவிதாவும் அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டு அத்தனை நன்றிகளை வாரி வழங்கினார்.


"யாஷ், முதல்ல ரிப்ரெஷ்ஷாகு நீ" என்று அவளை சவிதா அறைக்குள் அனுப்பிய ரூபா ஶ்ரீயை வாங்கி அவளுக்கும் உடை மாற்றி உணவு கொடுத்து அமர வைத்தாள். யாஷ், அன்றைக்கு முழுவதுமே சவிதாவை இடையோடு கட்டிக் கொண்டு அவரின் மடியிலே தான் படுத்திருந்தாள். தாய் நிறையவே பேசினார் கேட்டார், அத்தனை பூரிப்பு, நடக்கவே நடக்காத ஒன்று நடந்து விட்ட ஆனந்தம்.



இறுதியில் மகள், "ம்மா, நவீன்க்கிட்ட பேசணும், அவர் என்ன பண்றார்,வாணித்தை என்ன பண்றாங்க" என்று ஆரம்பிக்க, "இப்ப தான வந்திருக்க யாஷ், மெதுவா பேசலாம்" என்று தாய் அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க அக்கணங்களில் அமைதியாகி போனாள். ஆனால் சவிதா வெகுவாகவே கலங்கி தான் போனார். மகளிடம் நவீனின் திருமணத்தை எவ்வாறு பகிர்வது, அவள் எப்படி எடுத்துக் கொள்ளவாள், கேட்டு திரும்பவும் அதிர்ச்சியில் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்றெல்லாம் எண்ணியவருக்கு மனதை பிசைந்தது.



மனோ, தங்கையை தனக்கு தெரிந்த மருத்துவரிடம் அழைத்து சென்று பரிசோதித்து அவனின் நலத்தை உறுதி செய்ய ரூபாவும் சவிதாவும் அவளை விழுந்து விழுந்து தான் கவனித்தனர். முதலில் ஒதுங்கி நின்ற ஷமீயோ அவளை கண்டு கொண்டு, "யாஷ்த்தை" என்று அவளின் கழுத்தை கட்டிக் கொண்டாள் புன்னகையுடன்.



இரண்டு நாளாகியும் நவீனை குறித்து அவள் பேசினாலே எல்லாரும் கத்தரிக்கவே செய்ய லேசாக பயபந்து உருள தான் துவங்கியது. ஏனோ மனது ஆடவனின் அருகாமைக்கும் அணைப்பிற்கும் ஏங்க இன்று கண்டிப்பாக நவீனிடம் பேசியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் தன் மடியில் உறங்கிய மகளை படுக்கையில் படுக்க வைத்து சவிதா அறைக்கு சென்றாள் அந்த இரவு வேளையில்.


சவிதா ஓய்வறையில் இருக்க கேசவனோ உண்டு விட்டு உடனே படுக்க கூடாதென்பதால் மாடியில் சற்று உலாவ அவருடன் ஷமீயும் சென்றிருந்தாள். நீரின் சத்தத்தைக் கொண்டு அப்படியே படுக்கையில் அமர்ந்து விட்டாள் அவருக்காக. சவிதாவின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழும்ப பார்த்தாலும் யாஷ் அதை எடுக்க முனையவில்லை. அடுத்து அழைப்பு வந்தது, ஒரு முறை அடித்து ஓய சிந்தனையோடு அடுத்த அழைப்பில் கையில் எடுக்க, "வாணி" என்ற பெயரொடு மின்ன யாஷிடமும் உற்சாகம் தொற்றியது. அழைப்பை ஏற்று யாஷ் வாயை திறப்பதற்குள்ளே, "சவி ஹர்ஷித் பர்த்டே போட்டோ அனுப்பியிருக்கேன் பாருங்க, கண்டிப்பா நீங்க ஒரு நாள் வீட்டுக்கு வரணும், நானும் எத்தனை தடவை கூப்பிடுறேன். நவீன் கல்யாணத்துக்கு கூட நீங்க வரலை அட்லாஸ்ட் இதுக்காகவாவது வருவீங்கனு நினைச்சேன்" என்று தன் பாட்டிற்கு பேசிச் செல்ல அவரின் செய்தியில் விக்கித்து போன யாஷின் கரங்களை அழைப்பை சட்டென்று துண்டிக்க அவசரமாய் புலனத்தை ஆராய்ந்தாள். ஹர்ஷித்தோடு நவீனும் அவனோடு அக்ஷிதாவும் குடும்பாக பொங்கிய புன்னகையோடு நின்றிருந்த புகைப்படங்கள் பளிச்சிட யாஷின் இதயம் தன் துடிப்பை மறந்து போனது அக்கணங்களில். அலைபேசியை கீழே நழுவ விட்டவள் முகத்தை மூடிக் கொண்டு அப்படியொரு அழுகையில் கரைந்தாள். ஓய்வறையில் இருந்து வெளியில் வந்த சவிதா மகளின் கதறலில் பதறி, "யாஷ்" என்று அருகில் விரைய அவள் கூறாமலே, 'நான் தான்' என்று அவரின் அலைபேசியில் உள்ள புகைப்படம் மின்னியது.


"யாஷ் இங்க பார், எதுக்கு அழுகுற நீ? யார் இல்லைனாலும் அம்மா உன் கூட இருக்கேன். நானும் அப்பாவும் இருக்கோம் உன்னை எப்பயுமே விட்டுட மாட்டோம்" என்று மகளை இறுக்கி அணைத்துத் கொண்டவர் மறந்தும் நவீனை குறை கூறவில்லை. அவருக்கும் மகளுக்கு பின் அவன் இருந்த நிலை தெரியுமே, அதிலிருந்து வெளிக் கொண்டு வர வாணி எப்படி போராடினார் என்றும் பார்த்திருக்கிறாரே. ஆக, எல்லோரும் சூழ்நிலை கைதிகள் தானே!



யாஷ் ஒன்றும் சுலபத்தில் சமனடைந்திடவில்லை. நவீன் தனக்கில்லை என்பதை உள்வாங்கி ஜீரணிக்கவே முழுதாக ஒரு வாரங்கள் பிடித்தது. சவிதா எல்லாவற்றையும் எடுத்து கூற நிதர்சனத்தை உணர்ந்தாலும் நவீன் என்றொருவனை கடப்பதொன்றும் அத்தனை சுலபமாக யாஷ்விக்கு இருந்திடவில்லை. "அவருக்கு குழந்தை இருக்கு யாஷ், திடீர்னு நீ போய் குழந்தையோட நின்னா என்ன பண்ணுவார் பாவம் தான? அப்படி ஒரு இக்கட்டான சூழல்ல அவரை நீ நிறுத்தணுமா, நல்லா யோசி. நம்மால யாரும் கஷ்டப்பட்டிடக் கூடாது" என்று பேசியிருந்தாலும் பொங்கிய ஆற்றாமையில் வாணிக்கும் அழைத்து பேசியிருந்தார்.

உண்மையிலே வாணிக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அழைத்து யாஷிடம் பேசினார் தான் ஆனால் சவிதாவை போல் தான் அவரின் எண்ணமும் இருந்தது. மகன் இப்பொழுது தான் சற்று தேறி மீண்டிருக்கிறான். இப்பொழுது மீண்டுமொரு பூகம்பத்தை கிளப்பிட வேண்டுமா, யாஷ் வந்து விட்டால் அக்ஷியின் நிலை. அதற்கடுத்து மகனின் மனநிலை, அக்ஷியை விட்டு விட்டால் இறுதிவரை குற்றவுணர்விலே மடிந்தல்ல போவான், யாஷை விட்டு விடு என்றால் மரித்தே போய் விடுவான், என்றெல்லாம் உறக்கத்தை தொலைக்க துவங்கியவர் நேரடியாக யாஷிடம் பேசும் திராணியின்றி சவிதாவிடம் பேசினார். இது ஆகப்பெரும் பாவமென்று தெரியும், நவீனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் பிரளயத்தையே உருவாக்கிடுவான் என்றும் தெரியும் ஆனால் என்ன செய்ய, வேறு வழியில்லையே! ஆக, யாஷ் மீண்டதை கூற வேண்டாம் என்று யாசித்தவருக்கு மகனின் உயிரொன்று அவளிடம் இருப்பது தெரியாது. யாஷூம் வாணியிடம் கூற விழையவில்லை. நவீனுக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்பதே யாஷை மொத்தமாக உடைத்திருந்தது. இதில் ஶ்ரீ இருப்பதை எதற்கு கூற வேண்டும், கூறி என்ன ஆக போகிறதென்ற ஆற்றாமை. அச்சூழல் பெண்ணினுள் ஆகப்பெரும் பிரளயத்தை தோற்றுவிக்க மயங்கி சரிந்து ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தாள். ஆனால் மெல்ல மெல்ல சூழலை உணர்ந்தவள் ஶ்ரீயை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அமிழ்ந்து விட்ட ஆழத்திலிருந்து மேலேற முயன்றாள்.

'அதான் அவனே உன்னை கடந்தொரு வாழ்க்கையில் நுழைந்து விட்டானே!' என்று மனதிடம் போராடி ஓய்ந்தே போனவள் மகளுக்காக இயங்க துவங்கினாள். அதோடு ஷமீயும் புதிதாக பிறந்திருந்த இளம் சிட்டும் கைகளை தூக்கிக் கொண்டு யாஷிடம் ஆர்வமாய் பாய கவனத்தை நவீனிலிருந்து
அவர்கள் புறம் திருப்பினாள். அவனொருவனை கொண்டு தனக்காகவே இயங்கும் தாய் தந்தையையும் அண்ணனையும் வதைக்க பெண்ணிற்கு விருப்பமில்லை. வெளிப்படையாய் இல்லையென்றாலும் மனதினுள்ளே அதிகமாக மருகுவாள். மற்றவர்களுக்கு புரியாவிட்டாலும் மகளை உணர்ந்த சவிதா, "நம்ம ரிதன்கிட்டவே போய்டலாம் யாஷ், நீ அங்க போய் வேலைக்கு போ, இல்லை மேல படி. உனக்கு பிடிச்சதை எதையாவது செய். ஶ்ரீயையும் ஸ்மிருதி படிக்கிற ஸ்கூல்ல சேர்த்திடலாம்" என்று மகளிடம் யாசித்திருந்த அவளுக்கும் சென்னை நவீனின் நினைவுகளோடு மூச்சு முட்டுவதாய் தோன்ற அமெரிக்கா கிளம்ப ஆயத்தமாகி விட்டாள்.


ரிதன் தங்கையிடம் பேசியிருந்தான் மனிஷாவின் அலுவலகத்திலும் மேலும் இரண்டு அலுவலகங்களிலும் வேலை காலியாக இருப்பதாகவும் நேர்முக தேர்விற்கு தயாராகு என்றும். பெண் சற்று தெளிந்தாள், அடுத்து என்ன? என்று சிந்தித்து மெதுவாக மனோவின் உதவியோடு படிக்க துவங்கியவள் இரண்டு முறை தோல்விக்கு பிறகு தேர்ச்சி பெற்றாள். "கிளம்புவதற்கான பயணசீட்டுடன் அனுமதி இசைவும் ஒரு மாதத்தில் வந்து விடும் தயாராய் இருங்கள்" என்று அலுவலகத்திலிருந்து தகவலும் வந்திருந்தது.



எல்லாவற்றையும் கேட்டு முடித்து தாடையோடு சேர்ந்து நவீனுமே இறுகி போயிருந்தான். கோபக்கனல் விழிகளில் பொங்கி வழிய ஆத்திரத்தில் தன் முன்னிருந்த டேபிளை எட்டி உதைத்து சவிதாவை பார்க்காமல் மனோவிடம் திரும்பி, "யாஷ் ரூம் எது?" என்றான் சிவந்து போயிருந்த விழிகளுடன் தலையை கோதியபடி அதிகார தொனியில். உலுக்க வேண்டும் கன்னம் கன்னமாய் அறைய வேண்டும், 'நான் உனக்கு வேண்டாமா, அடுத்தவர்கள் கூறினால் உனக்கெங்கு போச்சு டி புத்தி, என்னை விட்டு செல்லுமளவிற்கு உனக்கு தைரியமுண்டா? என் மகளை அழைத்துச் செல்லும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது, நானும் நீயும் அவ்வளவு தானா? உன்னை விட்டு விடுவேன் என்றா நினைத்தாய்? அவர்களுக்கு தான் என்னை தெரியாது ஆனால் உனக்கு?' என்று இன்னும் இன்னும் ஆயிரமாயிரம் கேள்வியால் பாவையை துளைக்க மனது துடித்தது. ஆம், எதார்த்தமாக அவளை காண விட்டால்?...ப்பா நெஞ்சே வெடித்து விடுமளவிற்கு வலித்தது. இன்றல்ல வருடங்கள் கடந்தாவது அவனுக்கு தெரிந்தால் சத்தியமாக அந்த நொடியே மூச்சு நின்றே போகும் என்பதில் ஐயமில்லை.


மனோ காட்டிய அறையை அத்தனை ஆக்ரோஷமாய் தட்டினான், "கதவை திற யாஷ்" என்ற பெருங்குரலோடு. அவனது விளிப்பில் உடலே அதிர்ந்து நடுங்கினாலும் மகளை மார்போடு அணைத்து பிடித்துக் கொண்டவள் துடிக்கும் இதழை தவிப்புடன் கடித்தப்படி அமர்ந்திருந்தாள் நகர விழையாது. ஆம், முடிந்து விட்டதிற்கு காற்புள்ளி போட விருப்பமில்லை. நவீன் வேண்டும் தான் ஆனால் அக்ஷி, அவளை குழந்தையோடு துரத்தி விடவா முடியும் அல்லது எல்லாரும் இணைந்தா வாழ முடியும் அதெல்லாம் சாத்தியமில்லை என்று மனது கூக்குரலெழுப்ப வழியும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் கூறியதற்காக மட்டுமில்லை யாஷூமே அதிகமாகவே சிந்தித்து தான் இப்படியொரு முடிவை எடுத்தாள்.



கதவை தட்டும் அரவத்தில் ஶ்ரீ வேறு, "ம்மா.." என்ற சிணுங்கலோடு கதவை நோக்கி கைக்காட்டா, "ஒண்ணுமில்ல ஶ்ரீம்மா.." என்று மகளின் முகத்தை மார்பில் வைத்து அழுத்தி தலையை வருடி சமாதானம் கூறுவது போல் தனக்கு தானே கூறிக் கொண்டாள். மீண்டுமொரு முறை நவீனை நேரில் காணும் தைரியம் துளியளவேணும் இருந்திருக்கவில்லை. முழுவதுமாக உடைந்தே போய் விடுவாள். ஆம், நவீனை கண்டு, 'நான் உன்னை விட்டு செல்கிறேன்' என்று கூறி விடுவாளா என்ன?


நவீனின் செயலை யாரும் கட்டுப்படுத்த முயலவில்லை. இரண்டு நிமிடங்கள் தட்டி ஓய்ந்தவன் அதற்கு மேல் பொறுமையில்லாது, 'போடி, நீ என்னை தாண்டி எங்கே போகிறாய் என்று நானும் பார்க்கிறேன்' என்ற எண்ணத்தில் திரும்பி சவிதாவை ஒரு பார்வை பார்த்து, 'எங்களை குறித்து முடிவெடுக்க நீங்கள் யார்? நானென்ன செத்தா போய் விட்டேன் என் மனைவியையும் மகளையும் நீங்கள் பார்க்க?' என்று கேள்வியை கொடுத்தான். அவருக்கும் புரிகிறது எச்சிலை விழுங்கியபடி அவனை பார்ப்பதை தவிர்த்து விழிகளை தாழ்த்த, மனோ புறம் சொடக்கிட்டவன், "என் பொண்ணை எங்கயாவது உங்க தங்கச்சி கூட்டிட்டு போகணும் நினைச்சா பழைய நவீனை பார்ப்பீங்க நீங்க? நான் என்ன செய்வேன் எனக்கே தெரியாது" என்று சட்டையின் கையை மடித்து விட்டு பொங்கி வரும் ஆற்றாமையை கட்டுப்படுத்த இயலாது தலையை கோதியபடி வெளியேறிவன் தான். அத்தோடு அனைவரின் தொடர்பையும் துண்டித்து சென்று விட்டான். சவிதாவையாவது முறைத்தான் ஆனால் வாணி, அவரிடம் பேசவேயில்லை இதுவரை..



தொடரும்....


விமர்சனம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி மக்களே❤️❤️❤️....அடுத்த அப்டேட் திங்கள் அல்லது செவ்வாய் வந்து விடும்....
 
Member
Messages
45
Reaction score
31
Points
18
Ada ponga sis ipti oru situation enaku padika padika ea heart tha ninnuru pola romba romba kastam avaloda husband Vera oru ponnu kuta pakkarathu Yash inu evlo tha thanguva avale ithula iruntha veliya vara evlo kastam intha naveen puriyalaiya ni marriage pannita ava epti vanthu nippa Un munnadi evlo kastam padurupa
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Intha situation ah ninacha romba romba kastama irukku
Naveen Yash akshi moonu perum paavam, Enna nadakka pogutho
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Ithula yaru mela korai sollurathu ellarumey situation ah la mattikitu than muzhikiranga yash ivolo nall coma la irupa nu yarumae nenachi pakkaliyae naveen ku solli irukkalam than aana vazhkai la innoru ponnu um kozhandhai yum irukum pothu yarum ethuvum panna mudiyathu yae
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Naveen yash aashi ellarum pavom thaa 😒😒yaru enna panna mudiyum oru situation la epadi nadathuruju yash epadi naveen ku marriage oru payan irukan theriyuju poe ninappa naveen ku valikurara mari thaana yash ku valikum💔💔 naveen summaavaay kovam varum eva eppo America kelampuna avalayuthaan enna panna poran so emotional episode 🥺🥺🥺
 
Top