Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்....!*
*மௌனம் 17(ii)*
*இன்று....*
எதிர்பாராது உணர்ந்த ஸ்பரிசத்தில் முற்றிலும் உறை நிலை தான்,
அவனுக்கு.
கைகளை இறுகப்பொத்திய படி நின்றவனுக்கு அவள் நிலை கண்டு அவளை விலக்கிவிடும் எண்ணமும் இல்லை,
துளியும்.
நொடிகள் நிமிடங்களாகி கரைந்த பின்னரே சுயம் உரைத்தது,
தர்ஷினிக்கு.
பட்டென தலை தூக்கி விழி நிமிர்த்தி அவனின் விழிகளை ஏறிட அவனோ வேறெங்கோவல்லவா பார்வையை அலையவிட்டிருந்தான்.
அவன் முகத்தில் ஏறயிருந்த அழுத்தம் அவளுக்கு புரிந்திட சட்டென விலகி நின்றவளுக்கு கொஞ்சம் தடுமாற்றம்.
"சா..சாரி..சாரி..வேணு..வேணும்னே..பண்..பண்ணல..சாரி.." திக்கித் திக்கி வார்த்தைகள் வர அவள் விரல்களோ கண்ணீரைத் துடைத்துக் கொண்டது.
அவளறிந்து கொஞ்சம் விபரம் தெரிந்த நாள் முதல் அவள் யார் முன்னும் அழுததில்லை.
ஏன் வீட்டினரின் முன் கூட அழுத்தமாய் நிற்பாளோ ஒழிய அழுதிட்ட நினைவுகளே இல்லை.
அப்படியிருக்க, ஏன் இவன் முன் மட்டும் அழுது பலவீனமாகிறோம் என்று யோசித்தவளுக்கு கிடைத்த விட காதல் ஆயிற்றே.
தன்னையே நொந்து கொண்டு அவள் திரும்ப விழிகளால் அவளை வரச் சொல்லி கட்டளையிட்டவாறு நகர்ந்திருந்தான்,
அவன்.
அவளுக்கு அவன் இயல்பாய் இருப்பதாய் ஒரு எண்ணம்.
நெற்றியில் அறைந்து கொண்டு பின்னே நகர்ந்தவளுக்கு அவன் தன்னை உதறவிடாதது,
இன்னும் அதிசயம் தான்.
அவர்கள் கடந்து செல்லும் போது திரும்பி நின்று கொண்டிருந்த தேவேந்திரனுக்கு மனம் பாரமாகியது.
கொஞ்சமாய் துளிர்த்திருந்த ஆசைகள் எல்லாம் மொத்தமாய் மரித்துப் போன உணர்வு.
தர்ஷினியின் மனதை அறிந்திடாமல் தன் மனதில் கற்பனைகளை வளரவிட்டது,பெரும் தவறென்று உரைத்திட விழியோரம் கசிந்த நீரை யாருமறியாது சுண்டி விட்டிருந்தன,
அவன் விரல்கள்.
அவன் வந்த வேலை இன்னும் முடிந்திருக்கவில்லை.
ஏனோ அவனால் மேலும் அவ்விடத்தில் இருக்க முடியும் என்று தோன்றாதிருக்க தன் வண்டியை கிளப்பிக் கொண்டு நகர்ந்தவனுக்கு உள்ளுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.
நேரங்கள் கடந்திருந்தது.
லாவகமாய் வண்டியோட்டும் கணவனை மீண்டும் ஒரு தடவை திரும்பி பார்த்தாள்,தர்ஷினி.
அவன் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.
ஏன் உணவகத்தில் கூட எரிந்து விழாமல் தன்மையாய் நடந்து கொண்டது அவளுக்குள் பெரும் கேள்வியை கிளப்பி விட்டிருக்க அதன் வெளிப்பாடு விழிகளில் இருக்கத் தான் செய்தது.
அவனுக்கு அவள் பார்ப்பது தெரிந்தாலும் அவள் புறம் திரும்பவில்லை,
இம்முறையும்.
"தூக்கம் வந்தா தூங்கு.." அவள் தன்னைப் பார்ப்பது அவனுக்குள்ளும் சிறு சங்கடத்தை தந்திட கொஞ்சம் அழுத்தமாய் வெளிவந்தன,
அவனின் வார்த்தைகள்.
இத்தனை நாள் அவள் தன்னைப் பார்ப்பது புரிந்தும் வெற்றுப் பார்வையுடன் எதையும் வெளிக்காட்டாது கடந்திடுபவனுக்கு இப்போதெல்லாம் அவள் பார்வையினால் தன்னுள் ஏற்படும் குறுகுறுப்பு வெளிப்பட்டிடுமோ என்கின்ற எண்ணம் தான்.
அவளோ அந்த குரலின் அதிகாரத்தில் பயந்து தன் விழிகளை மூடி சாய்ந்து கொள்ள அதைக் ஓர விழியால் பார்த்தவனின் இதழ்கள் சிறு பிளவுடன் விரிந்ததை அவள் தான் கண்டிடவில்லை.
ஏனென்று தெரியவில்லை,
முன்பு போல் இல்லாமல் தன்னைக் கேளாமல் விழி மூடி இருப்பவளின் வதனத்தை ஸ்பரிசித்து மீண்டிருந்தன,
அவனின் விழிகள்.
தன் மனதை உணர்ந்தவனாய் தன் எண்ணத்தில் கோபம் கொண்டு வண்டியை இன்னும் வேகமாக்க அடுத்த பதினைந்து நிமிடங்களில் அவனின் வண்டி அவளின் வீட்டின் முன் வந்து நின்றது.
அவளோ உறங்கியிருக்க தற்செயலாய் அவள் முகத்தை ஏறிட்டவனுக்கு எழில் சொன்னது தான் நினைவில் வந்தது.
"ரொம்ப நல்ல பொண்ணுடா தர்ஷினி.." அவன் கூறியது செவிகளில் எதிரொலிக்க மெல்லமாய் இதழ்கள் விரியத் தான் செய்தது, அவனிடம் கேளாமலே.
அவளோ கார் நின்றதை உணர்ந்தது போல் மெதுவாய் விழி சுருக்கிட பட்டென மறுபுறம் திரும்பி இருந்தான்,அவன்.
●●●●●●
"டாக்டர்..என் பொண்ணு பழய மாதிரி ஆனதும் அவளுக்கு இப்போ நடந்தது எல்லாம் ஞாபகம் இருக்குமா..?" பதபதைப்புடன் கேட்டிட அந்த தாயின் உள்ளம் அவளுக்கும் புரியத்தான் செய்தது.
"ரொம்ப பேருக்கு அப்டி ஞாபகம் இருக்குறது இல்லமா..ஆனா அது எந்த வித ப்ராப்ளத்தயும் தராது..உங்க பொண்ணு பழய மாதிரி வந்துருவா..கவல படாதீங்க.." அவரின் கைகளை அழுத்தி விடுவித்தவாறு தீபிகா சொல்ல கொஞ்சம் மனநிலை பிறழ்வுடன் இருக்கும் தன் மகளை வருத்தம் தோய்ந்த விழிகளுடன் அழைத்துக் கொண்டு வெளியேறினார்,
அந்த தாயார்.
அவர்கள் வெளியேற சோம்பல் முறித்த படி தன் இருக்கையில் சாய்ந்து கொண்டவளுக்கு இலேசாக தலை வலிக்க மெல்ல யன்னல் அருகே சென்று வெளியே எட்டிப் பார்த்திட அது மனதுக்கு கொஞ்சம் இதம் தருவதாய்.
கையில் இருந்த அவளின் அலைபேசி ஒலித்திட திரையில் ஒளிர்ந்திட்ட பெயரைக் கண்டதும் ஏனோ ஏற்க துளியும் மனம் வரவில்லை,
அவளுக்கு.
சட்டென அலைபேசியை அணைத்து விட்டு அவள் திரும்பிட அதற்குள் அனுமதி கேளாமலே கதவைத் திறந்து கொண்டு வந்திருந்தான்,அஜய்.
தீபிகாவின் தம்பி அவன்.இப்போது தான் வெளிநாட்டில் படிப்பை முடித்து விட்டு வந்து சில வாரங்கள் கடந்திருந்தன.
அவன் முகத்தில் கொஞ்சம் பதட்டம் ஒட்டியிருந்தது.
"டேய்..என்னாச்சுடா..படக்குன்னு கதவ தெறந்துட்டு வர்ர..?"
"தீப்...தாத்தாவ காணோம்.."
"என்னடா சொல்ற..?"
"ஆமா தீப்..தாத்தாவ காலைல இருந்து காணோம்..எங்க போனார்னு தெரியல...ஆர்த்தி தான் கால் பண்ணி சொன்னா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.." என்க கொஞ்சம் பதட்டம் பரவியது அவள் நெஞ்சில்.
அவள் விரல்களோ ஆர்த்திக்கு அழைப்பெடுக்க அழைப்பை ஏற்கவில்லையே,
அவள்.
அழைப்பை ஏற்க தன் சித்தி மகள் மீது அவளுக்கு கோபம் எழுந்தது உண்மையே.
"சரி..வா வீட்டுக்கு போலாம்.."என்றவர்கள் அவர்களின் வீட்டுக்குச் செல்ல அங்கு வீட்டில் அனைவரும் ஒரு வித பதட்டத்துடன் திரிந்து கொண்டிருக்க அவர்களின் தாத்தாவை காணவில்லை.
ஆர்த்தியோ தன் அலைபேசியை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்த இவை அனைத்தையும் விட்டேற்றியான பாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்,
அவன்.
முகத்தில் துளியும் பதட்டம் இல்லாதிருக்க தனக்கென்ன வந்ததென்று சோபாவில் சட்டமாய் அமர்ந்திருந்தவனை கண்டிப்புடன் நோக்கிய தந்தையை துளியும் கணக்கில் கொண்டிடவில்லை,
அவன்.
விரல்களோ அலைபேசியை தட்டிக் கொண்டிருக்க விழிகளோ அவ்வப்போது நடை பயிலும் கூட்டத்தை உயர்ந்து பார்க்கத் தான் செய்தது.
அடக்கப்பட்ட புன்னகை அவன் இதழ்களிடையே.
ஏனென்ற காரணம் அவனுக்கும் அந்த இறைவனுக்கும் மட்டுமே வெளிச்சம்.
"பெருசு..நம்மல என்னமா டார்ச்சர் பண்ணும்..அது பண்ண பாவத்துக்கு இது எல்லாம் தேவ தான்.." கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்திட அது தப்பிடுமா..?
அவனின் தந்தையில் கூர் செவியில் இருந்து.
கடுப்பை அடக்கிய படி அவனை உறுத்து விழிக்க அதில் அவனிதழ்களில் எள்ளல் நகைப்பு.
அதற்குள் அவனின் அலைபேசி ஒலித்திட அதை எடுத்துக் கொண்டு வெளியே நகர்ந்திருந்தான்,
அவன்.
அவன்.....?
அதே நேரம்,
தன் அறைக்குள் அடைந்து கிடந்த தேவேந்திரனின் மனம் துளியும் ஆறவில்லை.
நேற்றைய நிகழ்வு நினைவில் வந்து அவனின் நிகழை கனமாக்கியது.
ஏதோ ஓர் கோபம்...
தன் மீதான ஆற்றாமை..
ஏனோ மனம் விரக்தியின் உச்சத்தில் அருகே இருந்த பூச்சாடியை வீசி அடிக்க சுவற்றில் பட்டு சுக்கு நூறாய் உடைந்தது,அது.
"அர்ஜுன்ன்ன்ன்ன்ன்.."வெறுப்பின் உச்சத்தில் உதிர்த்திருந்தான்,
அந்தப் பெயரை.
அவனிடம் எல்லா நிலையிலும் தான் தோற்றுப் போவது போன்றதோர் பிரம்மை.
கட்டிலில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டவனுக்கு கார்த்திகாவின் மீது சொல்ல முடியாத ஆத்திரம் எழுந்தது உண்மையே.
அவள் மட்டும் தர்ஷினியின் மன எண்ணத்தை சரியாக தன்னிடம் சேர்ப்பித்திருந்தால் அவனும் தனக்குள் ஆசைகளை துளிர்க்க விட்டிருக்க மாட்டானே..
தன் மடத்தனத்தை எண்ணி அப்படி ஒரு வெறுப்பு அவன் மீதே அவனுக்கு.
அதற்குள் சத்தம் கேட்டு கதவைத் திறந்து கொண்டு வந்த தாயாரை அடிபட்ட பார்வை பார்த்தான், அவன்.
அவனின் விழிகளில் தெரிந்த வலி தாயுள்ளத்தை அதிகமாய் தாக்க மகனருகே அமர்ந்து அவனை மடிசாய்த்துக் கொண்டார்,
அவர்.
ஏனோ அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்திட மெதுவாக தலை கோதிக் கொடுத்தவருக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியவேயில்லை.
அவனுக்கும் பேசத் தோன்றியிருக்க வேண்டும்.
"அம்மாஆஆஆஆஆ.."
"என்னப்பா..சொல்லு..?" என்றவரின் கரமோ தலை கோதுவதைத் தொடர்ந்தது.
"அம்மா..தர்ஷினி அந்த அர்ஜுன தான் மா லவ் பண்றா.." எத்தனை முயன்றும் அவனின் குரல் உடைவதை அவனால் தடுக்க இயலவில்லை.
"ம்ம்..அப்டியா..நீ பாத்தியாஆ..?"
"ஆமாம்மா..அவளுக்கு அவன ரொம்ப புடிக்கும் போல.." என்றவனின் பார்வை அருகே இருந்த சிறு துணிப் பொட்டலத்தின் மீது தான் படிந்தது.
அன்று "அர்ஜுன்.." என்று பெயரெழுதி தர்ஷினி வீசியது.
"உனக்கு திடீர்னு என்னாச்சு பா..? நீ தர்ஷினிய மறந்து தான இருந்த..?" மகனின் திடீர் மனமாற்றத்துக்கான காரணம் தெரிய வேண்டி இருந்தது,
அவருக்கு.
"அவன் தர்ஷினிய டைவோர்ஸ் பண்ணப் போறான் மா..அதான்..நா தர்ஷினி அப்பா கிட்ட பேசி தர்ஷினிய கட்டிக்கலாம்னு நெனச்சேன்.." தன் மன எண்ணத்தை அவன் மறையாது உரைக்க அதைக் கேட்டவரின் உள் பெரும் அதிர்வே.
"அவன் நல்லவன் இல்லமா..அவன் தர்ஷினி கூட சிரிச்சு பேசனத கூட நா கண்டதில்ல..எப்பவுமே திட்டுகிட்டு தான் இருப்பான்..போதாததுக்கு அவனுக்கு எங்க காலேஜ்ல படிச்ச தீபிகா கூட லவ்வும் ஓடிகிட்டு இருக்கு..அவன் எப்டி மா தர்ஷினிக்கு சரியா இருப்பான்..?"
"கண்ணா..அந்த தம்பி அந்த தீபிகாவ விரும்புதுனு நீ எப்டிபா சொல்ற..?"
"அன்னிக்கு ஹோட்டல்ல அவ கூட சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டு இருந்தான் மா..அத நா பாத்தேன்.." என்க ஏனோ சிறு கோபம் மகன் மீது.
"கண்ணா..ஒருத்தர் சிரிச்சு பேசறத பாத்து எப்டி பா அவங்க ரெண்டும் பேரும் விரும்புறாங்கன்னு முடிவுக்கு வரலாம்..?"
"இல்லமா..அவன் தர்ஷினிய டைவோர்ஸ் பண்ணப் போறான் ல..அது அந்த தீபிகாவோட சேரத்தான்.."
"கண்ணா..யாரப் பத்தியும் முழுசா எதுவும் தெரிஞ்சிக்காம நாமலா எதுவும் நெனச்சுக்க கூடாது.." மெதுவாக வருடி விட்டார்,அவனின் முதுகை.
அவனுக்குள் நுழைந்த வார்த்தைகள் அவன் மனதை அலைக்கழித்தன.
"யேம்மா..தர்ஷினி எனக்கு கெடக்காம போனாஆ..?"
"கண்ணா..நம்ம வாழ்க்க துண யாருன்னு கடவுள் தான் முடிவு பண்ணுவாரு..நாம கெடயாது..உன்ன பெத்த அம்மாவா ஒன்னு சொல்றேன்..தர்ஷினி அர்ஜுன் தம்பிய தான் விரும்புதுன்னா பேசாம விட்ரு..கட்டாயப்படுத்தி கடமக்காக யார் மேலயும் காதலயோ பாசத்தயோ வர வக்க முடியாது..நீ விரும்புற பொண்ணுக்காக உன்ன விரும்புற பொண்ண நீ ரொம்ப கஷ்டப்படுத்துற..கொஞ்சம் யோசிச்சு முடிவெடு கண்ணா..
யேன்னா இது வாழ்க்க சம்பந்தப்பட்ட விஷயம்.." என்றிட்டவருக்கு சொல்லாமல் எட்டிப் பார்த்தது,தன் அண்ணன் மகள் ஆர்த்தியின் நினைவு தான்.
தைரியமாய் அவரிடமே தேவேந்திரனை விரும்புவதை சொல்லியதை எப்படி மறக்க இயலும் அவரால்..?
தாயின் வார்த்தைகள் அவனுக்குள் இறங்கி ஏதோ செய்தது.
அவர் சொல்வதும் பிழையேதும் இல்லை என்கின்ற எண்ணம் தான்.
மாறத் தான் காலங்கள் வேண்டுமே தவிர மாற்றங்கள் துளிர்க்க சில நொடி போதும்.
ஏனோ அவனுக்குள்ளும் தாயின் வார்த்தைகளால் சிறு மாற்றங்கள் துளிர்ப்பது போன்றதோர் உணர்வு.
அப்படியே விழிகளை மூடிய தாயின் தலைகோதலில் மெதுவாக கண்ணயர்ந்தான்,
அவன்.
●●●●●
அந்த உணவகத்தில் அமர்ந்திருந்த ஆதிக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்கின்ற எண்ணம் தான்.
நேற்று கிருஷ்ணாவை விசாரிக்க அவன் கொலை செய்யவில்லை என்று உறுதியாகத் தானே செய்தது.
இருந்த ஒரு வழியும் அடைப்பட்டது போல் இருக்க சத்தியமாய் யார் தான் கொலை செய்திருப்பார்கள் என்பது பெரும் குழப்பமாய் தான் இருந்தது.
"கதிர்..அந்த கிருஷ்ணா கொல பண்ணி இல்லன்னா வேற யாரு தான் பண்ணி இருப்பாங்க.."
"சார்..அந்த இன்னொரு பொண்ணு..அந்த பொண்ணோட லவ்வரா இருக்குமோ.."
"சான்ஸ் இருக்கு தான்..ஆனா அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிக்க இன்னும் எத்தன நாள் ஆகுமோ..?" என்றவனின் குரலில் அப்பட்டமான சலிப்பு.
ஒரு பெண்ணைப் பற்றிய தகவல்களை பிரச்சினையின்றி சேகரிக்க முயன்று கொண்டிருக்க மற்றைய பெண்ணின் பெயர் கூட தெரிய வரவில்லையே,
எத்தனை முயன்று விசாரித்தும்.
அவளைப் பற்றிய தகவல்களை யாரோ முற்றாக அழித்து விட்டிருப்பது தெரிந்திட அதில் சரியான காரணம் இருக்கும் என்று அவன் எண்ணவில்லை,
துளியும்.
"கதிர்..ஒரு வேள அந்த பொண்ண கொலயாவது பண்ணிட்டானுங்களோ.."
"சார்ர்ர்ர்ர்..அந்த பொண்ணு சேப் ஆ பொழச்சதுன்னு அங்க அந்த அம்மா சொன்னாங்களே.."
"அது சர் தான்..ஆனா.."
"சார்..ஒரு வேள அந்த பொண்ணுக்கு இப்டி நடந்தது வெளிய தெரிஞ்சிர கூடாதுன்னு யாராச்சும் இப்டி பண்ணிருப்பாங்களோ..? அதான்..அந்த பொண்ணோட அப்பா அண்ணன்..இல்லன்னா தம்பீஈ..இல்லன்னா லவ்வர்..அதுக்காக டீடெய்ல்ஸ் கெடக்காம பண்ணி இருப்பாங்கன்னு தோணுது.." கதிரின் கூற்று ஏனோ சரியாகத் தோன்றிற்று, அந்த நிமிடம்.
"யெஸ்ஸ்ஸ்..அப்டியும் இருக்கலாம் ல கதிர்.." என்றவனின் சிந்தனை அடுத்து என்ன செய்வது என்பதே.
தொடரும்.
அதி....!
2024.01.22
சகோஸ்..
இன்னும் யாரோட பாஸ்ட் ஸ்டோரியும் புல்லா வர்ல..
அதனால இப்ப உங்களுக்கு தப்பா தோணலாம்..
தப்பா தோன்றது சரியாகலாம்..
சரியா தோன்றது தப்பாகலாம்..
அடுத்தது யாரோட கேரக்டர் பத்தியும் இன்னும் முழுசாவும் சொல்லல..
அதனால, போகப் போக உங்களுக்கும் மூவிங்க் சரின்னு தோணும்னு நம்பறேன்.
நான் ஆரம்பிச்சது ஒரு எண்ணத்துல..
அத அப்டியோ கொண்டு போனா தான் கத ஒழுங்கா வரும்னு தோணுது..
கமென்ட்ஸ பாக்கும் போது மொக்கயா வந்துருமோன்னு எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு..
ஆனா, உங்க யாரயும் டிஸொய்ண்ட் பண்ற மாதிரி இருக்காதுன்னு தோணுது..
அதனால,
எப்பவும் சொல்றது போல தான்..
கொஞ்சம் பொறுமயா ரீட் பண்ணுங்க பா..