• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 16

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 16

" கவின்யாவோட முறைப்பையனா...புரியலமா... கவின்யா யாரு " என்று குழப்பம் மாறாது கேட்டாள் சஹானா. அவளுக்குத் தான் இங்கு எல்லாமே புதிதாயிற்றே... அஹானா பற்றிய காரியமும் தெரியாது , புதிது புதிதாக அனைத்தையும் அறிகிறாள்.

அந்த குழப்பம் குறையாத நேரத்தில் திரும்ப, " கவினயன் யாரு... அன்ட் கவின் யாரு... இங்க ஒரு பிரச்சனை னு பார்த்தா புதுசு புதுசா என்ன எல்லாமோ சொல்றீங்க... என்ன நடக்குது இங்க " என்று சற்றே கடுப்பானவளின் பார்வை சமர்ஜித்தை சந்திக்க , அவனோ ' யாருக்கு வந்த விருந்தோ ' என்பது போல் நின்றிருந்தான்.

இவற்றை சஹானாவிற்கு விளக்கத்தானே சமர்ஜித்தும் படாதபாடு பட்டான். அந்தப் பொழுது அவளும் கூட , ' யாருக்கு வந்த விருந்தோ' என்பது போன்று தானே இருந்தாள்.

பின் மனமிரங்கியவன் " இது சொல்ல தான் நான் அன்னைக்கு வந்தேன். ஆனா நீ தான் அஹானாவ குத்தம் சொல்றதா நினைச்ச... " என்று முகத்தைக் கோட்டிக்கொள்ள, அவளிற்கு அய்யோ என்றானது.

" சரி சரி ... என்ன நடந்தது னு தயவுசெய்து சொல்லேன். எனக்கு தலை வெடிக்காதது தான் குறை. என்ன நடந்துச்சு னு சொல்லு. "

இவ்வாறு மாறி மாறி பேச, பக்கத்திலிருந்தோர் எதோ படம் பார்ப்பது போல சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

" நம்ம அனா கவின் னு ஒரு பையன விரும்புறா. ஆனா நாங்க பையன் இல்ல திருநங்கை னு தான் நினைத்திருந்தோம். ஆனா அது ஒருபடி மேல போய் அவன் திருநங்கையும் இல்ல. கவின்யா னு ஒரு பொண்ணு.

இதுல புதுசா கவினயன் னு வேற சொல்றா... அது யாருனு கேட்டதுக்கு தான் கவின்யாவோட முறைப்பையன் னு சொல்றா " என்று விளக்கி முடித்தான்.

" அது சரி கவின்யா அஹானாவோட காதலன் என்பதைத்தாண்டி அவ யாரு " என்று சஹானா கேட்க பதில் தெரியாமல் நின்றான் சமர்ஜித் .

" என்ன முழிக்கிறீங்க பதில் சொல்லுங்க அவ யாரு " சஹானா.

" அது பொண்ணுனே நாங்க இப்ப தான் சில்வியா சொல்லி தெரிஞ்சுகிட்டோம். இதுல அவ யாருன்னு எப்படி தெரியும் இனி தான் தெரிஞ்சுக்கணும் " என்று ஆரியன் பதிலளிக்க சோர்ந்து அமர்ந்து கொண்டாள் பெண்ணவள். அவளைப் பார்த்த சில்வியாவிற்கு மனம் வெகுவாக பாதித்தது.‌ எட்டி நின்று உறவாடும் அவளேக்கே அஹானாவின் செயல் வலிக்கையில் , தனது சேயாகக் கருதி வளர்க்கும் சஹானாவிற்கு மனம் வெதும்பத்தானே செய்யும்.

"சரி நீ சொல்லுமா " என்றா சஹானா.

" ஆனா உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்... அவன்தான் சித்தாராவைக் கடத்தியதா ‌... " என்று இடைமறித்துக் சமரஜித் கேள்வி கேட்கத் தொடங்கினான். அவளை கிளறினால் இப்பொழுது அநேக கேள்விகளுக்கு பதில் அறியலாம் என்று சமர் யூகிக்க , அவளோ பெரிய தில்லாலங்கடி வேலையாகப் பார்த்து வைத்திருப்பதை யார் அறிவார் அந்த இறைவனைத் தவிர. ஆனாலும் சில உண்மைகள் தேவையான அளவு பட்டும் படாமலும் சொல்லத்தான் செய்தாள்.

அதுவரை ஒதுங்கியிருந்த அஸ்வின்,
" சில்வியா... நீ எதையோ மறைக்குற... அதைச் சொல்லாமல் எதுவும் மாறாது. நீ என்ன நடந்ததுனு தெளிவா சொல்லு... நார்மலா அவங்க எதுக்கு உன் அக்காவைத் தூக்கணும்... உனக்கு கால் பண்ணணும்... எதோ ஒரு விஷயம் மறைக்குற... " என்று இடைமறித்துக் கேள்வியெழுப்பினான்.

" ஹ ஹ ஹ ... நான் என்ன சார் மறைக்குறேன்... உங்களுக்கு இன்னமும் புரியலயா... நாங்க பொண்ணுங்க சார்... இதுக்கு மேல என்ன தேவை இருக்கு... உங்களுக்கு இது புரியலயா... இல்ல நான் டென் மார்க் அன்சர் போல விலாவாரியா அவன் என் அக்காவ எங்க தொட்டான் எப்படி தொட்டன் னு சொல்லணுமா... " என்று கண்களில் கண்ணீர் வடிய ஆக்ரோஷமாகக் கத்த , " மற்றவர்கள் அஸ்வினைக் கடிந்து சில்வியாவை அமைதிபடுத்தினர்.

இத்தனை தூரம் யோசித்தவர்கள் , அஸ்வின் ஒரு மனநல மருத்துவர் என்பதை ஏன் மறந்து போயினர் என்பதுதான் ஆச்சரியம்... அவள் எதோ ஒரு காரியத்தை மறைத்து, அவனது கேள்வாக்குத் தப்பிக்க சீறியதை அஸ்வின் உணர்ந்து கொண்டான். மேலும் இன்று தற்சமயம் , ' சார் ' என்று புதிதாக அழைக்கிறாள்.

சிறிது நேரத்தில் தன்னைச் சீராக்கியவள், " நான் கிளம்பி போகணும். இல்லனா நீங்க பார்த்த வீடியோவ நெட் ல போடுவேன் னு மிரட்டினாங்க.

ஆனா நான் போகாம தமிழ்நாடு போலீஸ்க்கு மெயில் பண்ணினேன் ‌. ஆனா என்னோட ஈமெயில் அ ஹேக் பண்ணி விஷயம் கண்டுபிடிச்சிட்டாங்க ‌. நெட் ல அப்லோட் பண்ணி லிங்க் அனுப்பி விட்டாங்க. என்னால எதுவும் பண்ண முடியாம போனேன்.

அங்க போன நேரம் சித்தாரா ... என்றவள் நிகழ்ந்த நிகழ்வின் தாக்கத்தில் வாய் மூடி குனிந்து விங்கி விங்கி அழ ஆரம்பித்தாள். அவர்களுக்கு இதுதான் நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்த போதும் எப்படி தப்பித்தார்கள் என்றும் யார் இங்கே கொண்டு வந்து சேர்த்தது , அவளை கண்காணிப்பவர் யார் என்று வரிசையாக கேள்விகள் இருந்தன.

ஒரு வழக்கு வரும்போது அவர்கள் தப்பித்து வந்தது பிடிகாத்ததால் அல்ல, அவர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழியில் வேறு பிரச்சனை வரக்கூடாது என்பதாலும் தான் காவலர்கள் துருவி துருவி விசாரிக்கிறார்கள். அதுதான் இங்கும் நிகழ்கிறது.

அந்த நிலையில் அதற்கு மேல் ஆண்களை வைத்து விட்டு அவள் பேச மாட்டாள் என்று யூகித்த பிரதீபா ஆண்களுக்குக் கண்காட்ட, மூவரும் எழுந்து சென்றனர். ஆனால் அஸ்வினிற்கு மட்டும் அவள்மேல் ஒரு சந்தேகம் இருந்துகொண்டு இருந்தது.

ஆண்கள் வெளியே போகவும் பிரதீபா அவளின் அருகே நெருங்கி அமர்ந்து முதுகை வருடிவிட, நம்பிக்கை அளிக்கும் விதமாக சஹானா அவளது வலது கைகயைத் தனது கைக்குள் வைத்து அழுத்தம் கொடுத்தாள். ஆனால் அழுகை குறையவே இல்ல.

" தங்கம்... நீ இப்ப அழுறியே... நீ உன் எனர்ஜி தீர அழுறதால நடந்தது மாறுமா... அது மாறும்னா நீ அழு... நான் தடுக்க மாட்டேன் " என்ற சஹானாவின் வார்த்தை சில்வியாவைச் சிறிதும் அசைக்கவில்லை.

" எலேய் சில்லு... தோ பாரு... உன்ன கொஞ்ச எங்களுக்கு நேரம் இல்ல... தோ கோமா ஸ்டேஜ் ல படுத்திருக்கா பாத்தியா சித்தாரா.‌‌.. எப்படி படுத்திருக்கா ... ஒருத்தனோட காமவெறிக்கு பலியாகி அவளோட பிறப்புறுப்புல இரத்தம் வந்து அதீத வலியோட " என்று பிரதீபா பேசும்போதே, " சொல்லாதீங்க... அப்படி சொல்லாதீங்க... ஆ... சொல்லாதீங்க... என் அக்கா பாவம்... அதைத் திரும்ப செல்லாதீங்க " என்று கதற ஆரம்பித்திருந்தாள்.

சஹானா பிரதீபாவைச் சொல்லாதே என்பதுபோல கண்ணைக் காட்டிய பின்னரும் , " சொல்லாதீங்க அ ... இன்னொரு பொண்ணு பாத்து ஒரு டாக்டர் சொல்ல கூடாது. இங்க நடந்தது இனி நடக்கக் கூடாதுனா நடந்த விஷயத்தை நீ சொல்லு " என்று அதட்டிக் கூற , இம்முறை சில்வியா சற்று மலையிறங்கி வந்தார்போல நிதானித்தாள்‌ . கொஞ்சம் கொஞ்சமாக அழுகை குறைய ஆரம்பித்தது.

" என் அக்காக்கு டிரக்ஸ் கொடுத்து அவளை அந்த கவினயன் சிதைச்சுட்டான். எனக்கும் டிரக்ஸ் தந்தான். ஆனா நான் எடுக்காம எகிறுனேன். என் கண்ணு முன்னாடி அவ அம்மா னு கத்தினா. அது இன்னமும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. இது நடக்கும்போது தான் கவின்யா (கவின்) வந்தா. அவளும் இதுக்கு உடந்தையோ னு நினைச்சிருந்தேன். ஆனா அவளும் ஒரு பொண்ணு தானே... அவ தான் சித்தாராவை ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணி என்னையும் காப்பாத்தி விட்டா.

ஆனா காவலுக்கு ஒரு ஆளை வச்சா. அந்த ஆள தான் ஆரியன் சார் பிடிச்சிழுக்க , அவன் மாட்டினா மொத்தமும் மாட்டுவோம் னு கொன்னுட்டாங்க. அதைத் தொடர்ந்து வந்த குண்டு ஆரியன் சார் எல்லா இடத்திலும் விசாரிக்குறதால மே பீ அவரைக் கொல்ல பாத்திருக்கலாம்... " என்றவள் கூறி முடித்தாலும் விக்கி விக்கி அழுவது குறையவில்லை.

அவளது அருகில் பிரதீபா அமர்ந்திருக்க , சஹானா எழுந்து ஆண்களண்டை சென்றாள்.

" எனக்கு என்னமோ தப்பா தெரியுது அண்ணா... என்னமோ எனக்கு உறுத்துது... அவ நம்ம கிட்ட எதோ மறைக்கிறா னு நினைக்கிறேன் " என்று தன் ஐயத்தை முன்வைத்தான் அஸ்வின்.

" இதுல என்ன இருக்கு... பொண்ணுனாலே அலையுற கூட்டத்துல இது ஒண்ணும் புதுசில்லையே... ஆனா இனி அவனால யாருக்கும் தொந்தரவு வராம வேலை பாக்கணும்... " என்று அஸ்வின் கூறியதை ஏற்காது பேசினாள் சஹானா.

" இப்ப நாம தான் பிளான் போட்டு அவனை சரிகட்டணும்... கவின்யாவ அஹானா கிட்ட இருந்து எப்படி பிரிக்கிறது. அதுவும் இல்லாம எனக்கு வேற ஃபேக் கால்ஸ் வருது. அவளை நம்ம கண்முன்ன பார்வைக்குள்ள வைக்கணும்..‌. ஆனா இதுலாம் இன்னும் எத்தனை நாளைக்கு... செல்ஃப் டிஃபென்ஸ் வேணும்... அவளை நாம சரி பண்ணணும் ... " ஆரியன்

" எனக்கு இன்னொரு டவுட் " அஸ்வின்

" என்னடா " ஆரியன்

" கவின்யா ங்குற அந்தப் பொண்ணு ஏன் அஹானாவ விரும்பணும்... எனக்குத் தெரிஞ்சு இதுல எதாவது மர்மம் இருக்கணும் ‌..‌ பர்செனலா அவ யாருனு தெரியுமா ‌... இவ்வளவு சொல்ற சில்வியா அவளோட ஒர்ஜினல் ஃபோட்டோ பாக்காமலா இருப்பா... நாமளும் பெருசா மினிஸ்டர் பொண்ண பாத்தது இல்ல..‌ "

" மினிஸ்டர் பொண்ணா னு தெரியல... ஆனா அவ காலேஜ் சேர்ந்த நேரம் கவின்யா னு ஒரு ஃப்ரெண்ட் இருந்தா. தென் அந்தப் பொண்ணு படிக்க உக்ரைன் போயிட்டா... " சஹானா‌.

" ஹம்ம்... பாத்துக்கலாம்... இப்போதைய சூழ்நிலையில் அவளை தைரியப்படுத்தணும்... எங்காவது ஒரு வழி பிறக்கும் " என்றான் சமர்ஜித்.

" வீட்ல அஹானா தனியா இருப்பா. நீ கிளம்பு சனா. பிரதீ தங்கச்சியும் கைல கட்டோட இருக்குறா. அவளையும் கூட்டிட்டுப் போய் வீட்ல விடு டா. இங்க ஒரு லேடி கான்ஸ்டபிள் அ வரச் சொல்வோம். அஸ்வின் நீ... " என்று சமர்ஜித் இழுக்க, அவனோ " எனக்கு இன்னைக்கு நைட் டியூட்டி... பகல் ல டியூட்டி பாக்காததால் இன்னைக்கு நைட் போட்டுட்டாங்க " என்க, சரி என்றபடி அறைக்கு வந்தனர். அவர்கள் முடிவை ஆரியன் கூற , பிரதீபா மட்டும் அஸ்வினை ஒருமுறை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள்.

அவர்கள் வீட்டிற்குச் சென்று அடைந்து தூங்கி எழ மறுநாள் காலையில் தொலைக்காட்சியில் செய்தி சேனல்கள் பறைசாற்றிய முக்கிய செய்தி அமைச்சர் ராஜசெல்வனின் கோரமான இறப்பையே... அதே சமயம் சில்வியாவோ அஸ்வினின் முன்பு குற்றவாளி போன்று நின்றிருந்தாள்.

தொடரும்...

கதையின் குழப்பத்திற்கு மொத்த பதிலும் இதுல இல்ல. மொத்தமா தந்தா கண்டிப்பா அது கட்டுரை படிச்ச ஃபீல் தான் தரும்... அடுத்த எபி ல ஓரளவு சரியாகிரும்... அடுத்த எபி நாளைக்குக் மாலை ல வந்துடும்... காத்திருங்கள் மக்களே 🤩‌ .

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿


 
S

Serzjjw

Guest
Please tell me?
I cannot create the first message.
Thank you.
 
S

Serzjjw

Guest
удалите пожалуйста.
 
Top