• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 15

Messages
31
Reaction score
13
Points
8
அத்தியாயம் - 15

அஹானாவை சமரன் அழைத்துச் சென்று வீட்டில் விட்ட பின்னர், மருத்துவமனைக்கு வந்தான். சில்வியாவைச் சூழ்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்துச் சிரித்தாள் சில்வியா.

" சொல்லு தங்கம் ... கேள்வி கேட்க எனக்குத் தெரியல. ஏன்னா இங்க ஒரு கேள்வி இல்ல... ஓராயிரம் கேள்வி உன்னைச் சுற்றி இருக்கு. நீ வாய் திறந்தா மட்டும் தான் எங்களுக்கு விடை கிடைக்கும். இல்லாதபட்சம் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது " என்றபடியே சில்வியாவின் தலைமுடியை ஒதுக்கி விட்டபடியே ஆதுரமாக சஹானா கேட்டாள்.

" ஆமா நீ நல்லா கொஞ்சு... எலேய் சில்லு... நீ சொல்லு... இன்னா இன்னா வேலை பாத்த... குறுகுறுனு என் வூட்டுக்காரனோட சேர்த்து சனா க்கா வூட்டுக்காரனையும் சேர்த்து சைட்டடிக்க தானே ஜெய்யுறனு நாங்க நினைச்சா, நீ புதுசு புதுசா ரிலீஸ் பண்ணுறே... என்ன மேன் பண்ணின ... டெல் மீ... " என்று எப்பொழுதும் போல பிரதீபா சில்வியாவை வம்பிழுக்க, சில நாட்கள் பின்னர் வாய்விட்டுச் சிரித்தாள் சில்வியா.

அந்த சூழலிற்கு பிரதீபாவின் பேச்சு சற்று இளைப்பாறலாக இருந்தது. பெருத்திருந்த அதீத அழுத்தமான நிலைக்கு தென்றல் வருடியது போன்ற இதமான சுகமாக பிரதீபாவின் குதர்க்கமான பேச்சு அமைந்தது.

" எலேய் தீபா அக்கா... அப்ப நான் இனிமே தைரியமா ஆரியன் மாம்ஸ சைட்டடிப்பேன்... நீ கண்டுக்கப்புடாது... அம்புட்டு தான் "

" எலேய் சில்லு... நான் எதோ பேச்சுக்கு சொன்னா நீ அதையே பிடிச்சுட்டுத் தொங்குற. ஹம்ம் வடையா சம்சாயா... மணி நாலாகுது. உன் மாம்ஸ் பர்ச காலி பண்ணுவோம் . நீ ஜொல்லு சில்லு "

" ஹ ஹ ஹ... எனக்கு ஒரு பழபஜ்ஜி " என்று சொல்லி முடிக்கவும் " எனக்கு சம்சா " என்று சஹானா கூற, பின்னே " ஒரு போண்டா " என்று அஸ்வின் என்று அஸ்வின் விளிக்க, " ஏன் சமரு நீ பேசாம நிக்கிற... நீயும் சொல்லு எழுதிக்கிறேன் " என்று ஆண்கள் மூவரும் வெளியே சென்றனர்.

நேரம் செல்வதை அவர்கள கண்டு கொள்ளவில்லை. ஒருவித இறுக்கமான சூழ்நிலை படிந்திருந்த இடத்தில் சற்று சிரித்திருக்க, மனபாரம் குறைவதை உணர முடிந்தது. மேலும் எத்தனை தான் ஆண்கள் இதமாக பேசினாலும் ஆண்கள் பேசுவதற்கும் பெண்கள் பேசுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா... சாதாரணமாக ஒரு ஆணிடம் பேசும்போது எதோ ஒருவிதத்தில் பெண்கள் தானிருக்குமிடத்தில் இருப்பதை உறுதி செய்துகொள்பவள் இதில் மட்டும் எங்ஙனம் விதிவிலக்காக இருக்க இயலும் என்பதை உணர்ந்திருந்தனர்.

" என்ன அக்காமாரே... அலேக்கா ஆம்பளைங்கள வெளிய அனுப்பிட்டீங்க... நீங்க பாகற்காய் னா மாம்ஸ்மார் பாகற்கா வறுவலா நிக்குறாங்க... ஒரு கலெக்டர் ஒரு ஆடிட்டர் என்கிறது சரியா தான் இருக்கு " சில்வியா

" நீ கூட தான் டாக்டர் என்கிறது தாண்டி நிறைய டிடெக்டிவ் வேலை பாக்குற... " பிரதீபா

" சில நேரங்களில் காலம் நம்மை அப்படி மாற்றும். ஆனா நான் அப்படி இல்ல. வாழ்க்கை முழுக்க டிடெக்டிவ்வா தான் இருக்குறேன். இன்னமும் எத்தனை நாள் அந்த நிலையோ... அது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும். " சில்வியா

" புரியலயேமா... நீ எங்களுக்கு முதல் ல இருந்து சொன்னா தான் எதாவது எங்களுக்கு புரியும். " சஹானா

இவர்கள் பேசிக்கொண்டிருக்க ஆண்கள் மூவரும் அவர்கள் கேட்ட தின்பண்டங்களோடு டீயும் கொண்டு வர, கொஞ்சம் நேரம் அமைதி நிலவி, உண்டு முடித்தனர்.

" இப்ப சொல்லுமா ... சித்தாரா எப்படி அவங்க கிட்ட சிக்குனா... அவ கோமா ல இருக்குறதோ, சீரழிக்கப்பட்டா னு சொன்ன தகவலோ உன்ன எந்த விதத்திலும் பாதிக்கல. எதோ ஏற்கனவே தெரிந்தது போல இருந்த... தயவுசெய்து எதையும் மறைக்காம சொல்லு " என்று இழுத்துபிடித்த பொறுமையோடு சமரன் கேட்க, ஒருமுறை நீண்ட மூச்சை இழுத்து விட்டவள் அன்றைய தினம் நிகழ்ந்ததைக் கூற ஆரம்பித்தாள்.

" அன்னைக்கு சித்தாரா நார்மலா தான் வெளிய கிளம்பி போனா. அதாவது பிரதீபா அக்காகிட்ட நான் வம்பு வளர்த்த ஞாயிற்றுகிழமை. என்கிட்ட காலேஜ் ல எக்ஸாம் னு சொல்லிட்டு கிளம்பினா "

" ஆனா ஞாயிற்றுக் கிழமை எப்படி எக்ஸாம் நடக்கும்... " என்று இடைமறித்தான் அஸ்வின்.

" குட் கொஸ்டின்... அக்காவுக்கு சில நேரம் பாடம் எடுக்க டைம் போதலனா ஞாயிறு கூப்டுவாங்க... பாதி பிள்ளைகள் ஹாஸ்டல் தான். இவங்களும் பக்கம் என்பதால போயிடுவாங்க. என்ன அவ எக்ஸாம் னு சொன்னத கவனிக்காம காலேஜ் யூனிஃபார்ம் பார்த்து காலேஜ் போறா னு நினைப்புல இருந்தேன். அதுதான் பிரச்சனை " .

" ஓகே ஓகே... " அஸ்வின்.

" ஆனா அவ அன்னைக்குப் போனது காலேஜ்க்கு போகல. இது நடக்கவும் இரண்டு நாள் முன்ன எனக்கு காலேஜ் ல ஃபீஸ் கட்ட கேட்டாங்க. அவளோட கம்மலை வட்டிக்கு வச்சு ஃபீஸ் கட்டிட்டா . அடுத்து வட்டி கட்ட பணம் வேணுமே...

அவ கம்மல் விற்றதே எனக்குத் தெரியாது. திடீர்னு நான் லேட்டா தான் வருவேன் னு சொன்னா. அப்ப தான் எல்லாம் கம்மல் விற்றதும் வட்டி கட்டுறதும் தெரியும். வேலைக்குப் போகப்போறேன் னு ஒரு வீடு பற்றி சொன்னா. என்னால ஏத்துக்க முடியல. அப்புறம் இரண்டு பேருக்கும் தகராறு ஆகிட்டு. சரி வேலைக்கு போகல னு என்னயும் சமாதானம் பண்ணினா.

அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமையும் படிப்பு னு சொல்லிட்டு வேலை தேடி போயிருக்கா. அப்ப எனக்கு விஷயம் தெரியாது. பிரதீபா அக்கா சனா க்கா வீட்டுக்கு வரும்போது தான் எனக்கு என் ஃப்ரெண்டு கால் பண்ணி சொன்னா. அப்புறம் சித்தாராவுக்கு கால் பண்ணி கேட்டப்போ ' இனி கால் பண்ணாத. நான் ஃபோன் சைலன்ட் ல போட போறேன் ' னு சொன்னவ சைலன்ட் ல போட்டுட்டா. அன்னைக்கு முழுக்க வீட்டுக்கு வரல. நைட் டைம் கால் பண்ணி ' நாளைக்கு காலைல வந்துடுவேன். பயப்படாம தூங்கு னு சொல்லிட்டு கட் பண்ணினா ' அந்த நேரம் அவ நார்மலா தான் இருந்தா. எந்த விதத்திலும் எனக்குத் தெரிஞ்சு நெர்வஸ் ஆகவே இல்ல.

மறுநாள் கூட 7.00 கால் பண்ணி ' வீட்டுக்கு வந்துட்டு இருக்கேன். நீ காலேஜ்க்கு ரெடி ஆகு ' னு சொன்னா.' நீ வராம நான் போக மாட்டேன் ' னு நான் சொன்னதால ' ஓகே வர்றேன் ' னு பிராமிஸ் பண்ணிட்டு பேசும்போதே எதோ கத்த ஆரம்பிச்சா. அவ்வளவே தான். அதுக்குப் பிறகு கான்டேக்ட் பண்ணவே முடியல " என்றவள் வார்த்தை வராமல் நிறுத்தினாள். பேச்சு நிறுத்தப்பட்டு அதீத மௌனம் அங்கே ஆட்சி செய்தது. அந்த நிலையில் பிரதீபாவின் மொக்கை பேச்சு
கூட அந்த இடத்தை சராசரியாக மாற்றாது. வலியுடன் நிறைந்த ஒரு அபலைப் பெண்ணவளின் சத்தமில்லா கதறலில் எங்ஙனம் சரிசெய்வது என்று தெரியாது சூழ்நிலையைக் கருதி மௌனம் காத்தனர். தன்னைத்தானே சமன் செய்து கொண்டவள் மீண்டும் மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

" அக்கா வருவா னு நானும் காத்திட்டே இருந்தேன். அந்த சத்தம் யாரோ ஒரு பொண்ணுக்கு பிரச்சனை போல... அதான் அவங்களுக்கு உதவ போய்ட்டாளோ னு முதல் ல நினைச்சேன். அப்புறம் இன்னும் நேரம் ஆகவும் இறால் வாங்க போனாளோ னு நினைச்சேன்.

பொதுவா எனக்கும் அவளுக்கும் சண்டை பெருத்தா அவ எனக்கு இறால் மீன் வாங்கிட்டு வந்து சமைச்சு தந்து சரி பண்ணுவா. கிடைக்காத பட்சத்தில் எந்த இடத்துக்கும் போயாடுவா. அதுனால லேட் ஆகுதோ னு குழம்பி இருந்தேன் " என்று கூறிக்கொண்டே போனவளின் கண்கள் இம்முறை உவர்நீராம் கண்ணீரைச் சொரிந்தன. தாயில்லாத நேரத்தில் தாயாய் தாங்கிய தமக்கைக்கு நேர்ந்ததை நினைக்கியில் கண்ணீர் அவளது அனுமதியின்றியே வரத்தான் செய்தது.

சிறிது தன்னைத் தேற்றிக் கொண்டவள், " மதியம் போல திரும்ப கால் பண்ண ஆரம்பிச்சேன். அப்ப அந்த பக்கம் ஃபோன் அட்டென்ட் பண்ணினான் கவினயன் " என்க, அத்தனை பேர் முகத்திலும் அதீத குழப்பம்.

" யார்மா இந்தக் கவினயன். புதுசா இருக்கு... கவினயனா கவினு... " என்று அதீத குழப்பத்தோடு கேட்டான் சமரன்.

" கவினயன் னா கவின் இல்ல. கவின்யாவோட முறைப்பையன் " என்றவளின் முகத்தில் விரக்திப் புன்னகை வீற்றிருக்க , மனமோ ' என் முறைப்பையன் ' என்று மௌனக் கண்ணீர் வடித்தது.


தொடரும்...
 
Top