• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 13

Messages
31
Reaction score
13
Points
8
நடந்த நிகழ்வினை ஏற்க சில நிமிடங்கள் ஆனது . திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒருபக்கம் அதிர்ச்சி மேலிட, இன்னொருபக்கம் மக்களின் கூச்சல் அதிகமானது. ஆரியன் துரிதமாக தனது அலைபேசியிலிருந்து காவலர்களுக்கு செய்தி தெரிவித்துவிட்டு அஸ்வினிடம் சில காரியங்களைக் கூறிவிட்டு மேற்கொண்டு மக்களை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டான்.

நொடிப்பொழுதில் நடந்த நிகழ்வில் ஸ்தம்பித்தது போன்று இருந்தது. ஒரு குண்டு என்று நினைத்திருக்க சடுதியில் மற்றொரு குண்டு ஆரியனை நோக்கி பறந்துவர, அவனை பிடித்துழுத்துக் கொண்டு பிரதீபா நகர, தோட்டா பெண்ணவளின் கைத்தோள்பட்டைக்கு கீழே சதைப்பகுதியில் இறங்கியது. சதையைக் கிழித்துக் கொண்டு நுழைந்த குண்டானது குருதியை தாராளமாக வாரி வழங்கியது. அடுத்த நிகழ்வில் ஆரியன் , " டவுன் " என்று கத்த, பாதி மக்கள் கீழே குனிந்தும் சிலர் வெளியே ஓடவும் முந்திக் கொண்டனர். மக்கள் கூட்டம் கொஞ்சம் குனியவும் ஒருசில ரவுடிகள் வெளியே ஓட, வெளியே காவலர் குழு சுற்றி வளைத்துக் கொண்டது.

இங்கே ஒரு மருத்துவர் பிரதீபாவிற்கு
மருந்துவைத்துக் கட்டிக்கொண்டிருந்தார். அஸ்வின் துரிதகதியில் சமரை அலைபேசியில் அழைக்க முயன்று பெரும் நேரத்திற்குப் பினன்ர் ஏற்றான்.

" ஹலோ சமர் சார் தானே "

" ஆமா அஸ்வின். ஏன் இவ்வளவு பதற்றமா பேசுற... "

" சார் ஹாஸ்பிடல் ல கன் ஷூட். அதுல அண்ணிக்கு கைல தோட்டா புகுந்துட்டு. ஹாஸ்பிடல் சுத்தி போலீஸ் சுத்து போட்ருக்காங்க. அண்ணா உள்ளே தான் மக்களை சரி பண்ணிட்டு இருக்காங்க.

கன் ஷூட் நடக்குறதுக்கு ஐந்து நிமிஷம் முன்ன அண்ணா உங்ககிட்ட ஒன்னு சொல்ல சென்னாங்க. சஹானா மேம் அ கூட்டிட்டு ஹாஸ்பிடல் வரச் சொன்னாங்க. எதோ ஒரு உண்மை தெரிஞ்சதாகவும் அதை சஹானா மேம்கிட்ட சொல்ல செல்லியும் சொன்னாங்க. அப்புறம் மிஸ். அஹானா இப்ப காலேஜ் ல தான் இருக்குறாங்களாம். சோ வந்தது உங்களை குழப்ப வந்த கால் தான் னு சொன்னாங்க. இரண்டு பேரையும் கூப்டு வரச் சொன்னாங்க. "

" ஓகே ஓகேப்பா... நீயும் ஆரியனும் அங்க பாத்துக்கோங்க. நான் அவங்களைக் கூட்டிட்டு வந்துடுறேன் "

என்றவன் தனது அலைபேசியின் இணைப்பை துண்டிக்க, அவனும் துண்டித்தான்.

*____________________________________________ *


இங்கு சஹானாவிற்கு காலின் கீழ் உலகம் நழுவுவது போன்று இருந்தது. விவாகரத்து என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட வார்த்தைகள் அவள் மூளையைப் போட்டுக் குடைந்தன. வண்டானது மனத சதையில் துளையிட்டு இரத்தம் குடித்து பெரும்புண்ணை உருவாக்குவது போன்று அவள் நிலை இருந்தது. இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த அரசிக்கும் மனதுக்குள் திக்கென்றிருந்தது. அவர்களின் காதல் காலத்தையும் குடும்ப காலத்தையும் ஓரளவு அறிந்திருக்கிறாள். அப்படியிருக்க விவகாரத்து என்பது நெஞ்சை அடைக்காது இருக்குமா என்ன...

ஆனாலுமே மனதில் ஒரு சந்தேகம் தோன்றாது இல்லை. இருவருக்குள்ளும் சில நாட்களாக பிரச்சனை இருப்பதை அவர்களின் உரையாடல்வழி அறிந்திருக்கிறாள். ஆனால் எதற்காக விவாகரத்து வரை செல்ல வேண்டும்... எங்கேயோ எதுவோ அவளைக் குடைந்தது. எதோ ஒரு தவறும் ஒரு தவறான புரிதலும் இருவரையும் பிரிக்க முயல்வதாக அவளது மனம் அவளுடன் வாதிட்டது.

அப்பொழுது சமரன் வெளியே வருவது தெரிந்தது. அரசி அவனை அனுப்பும் நோக்கில் வெளியே செல்ல எத்தனிக்க, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள் சஹானா.

" என்ன அரசிமா... காப்பாத்த போறீங்களோ... உப்பு தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு பண்ணினவன் தண்டனையை அனுபவிப்பான். சரிதானே ... இதை அனுப்பியது அவருதான்னு நான் நம்பிடுவேனா...

எங்கேயோ எவனோ அம்பு எய்தா அம்பு குற்றவாளி ஆகமுடியுமா... என் புருஷன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு... என்ன டக்குனு அத பாத்ததும் ஏத்துக்க முடியல. அப்புறம் இதோ இந்த சைன் எவனோ கார்பன் ஷீட் யூஸ் பண்ணி போட்டிருக்கான். இதப் பத்தி அவருகிட்ட வாய் விடாத... பிறகு பாத்துக்கலாம் " என்றவள் , அதை அங்கேயே கிழித்துக் குப்பையில் தள்ளிட, அரசிக்கு போன உயிர் திரும்ப வந்தது போன்று இருந்தது.
முகத்தில் புன்னகை பூ விரிந்திட இருவரும் நிம்மதி நிலையை உணர்ந்தனர்.

" மே ஐ கம் இன் மேம் " என்றபடி உள்ளே வர, " எஸ் கம்மின் " என அவள பதிலுரைத்து அழைத்துக் கொண்டாள். அவனும் மரியாதை நிமித்தமாக சலியூட் அடித்து நின்றுகொண்டான்.

" ஓகே மிஸ்டர் சமரன். பிளீஸ் டேக் யுவர் சீட்... " என்றவள் அவன் அமர்ந்ததும், மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"தாம்பரம் பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் ல கன் ஷூட் நடந்திருக்கு. அதோட மோட்டிவ் என்ன... மக்களை சேஃப் ஆக்கியாச்சா.. எதாவது தெரிஞ்சுதா... " என்று ஒரு அதிகாரியாக மாறிப் போனாள்.

" எஸ் மேம். மோட்டிவ் னு பார்த்தா இன்ஸ்பெக்டர் ஆரியன், சில்வியா மற்றும் சித்தாரா என்கிற நடுத்தய வர்க்க பொண்ணுங்களை கொல்ல பார்த்தது தான். இப்ப இது எக்ஸ்ப்ளெயின் பண்ண நேரம் இல்ல மேம். கன் ஷூட் தொடர்ந்து நடக்குது. அதுல இன்ஸ்பெக்டரோட மனைவி மிஸ். பிரதீபா ஆரியன் கைல ஒரு தோட்டா இறங்கிட்டு. இப்போ டிரீட்மென்ட் போகுது .

இப்போதைக்கு போலீஸ் சார்பில் சில்வியா & சித்தாராவுக்கு பாதுகாப்பு கேட்டிருக்காங்க... அதுக்காக என்னையும் இன்ஸ்பெக்டர் ஆரியனையும் தனிப்பட்ட முறையில் கேட்கிறாங்க. மேலிடத்தில் பெர்மிஷன் கிடைக்கல. நீங்க எடுத்துச் சொன்னா பண்ண முடியும். "

" நீங்க ஏன் போகணும்... நீங்க கிருஷ்ணகிரி போக அப்ளை பண்ணிய நாட்கள் கூட நெருங்குது. அதையும் கேன்சல் பண்ணியிருக்கீங்க... உங்க இஷ்டத்துக்கு அப்ளை பண்ணுறீங்க. இஷ்டத்துக்கு கேன்சல் பண்ணுறீங்க. உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க "

" இல்ல மேம் போக வேண்டிய நிலை தான். ஆனா சில தனிப்பட்ட ரீசன்னால கேன்சல் பண்ணிட்டு அங்க ஒருத்தரை வச்சு வேலையைப் பார்த்துட்டு இருக்குறேன். அதுல சித்தாரா என்கிற பொண்ணு ஹாஸ்பிடல் ல அட்மிட் ல இருக்காங்க. இப்ப அவங்க கேட்க காரணம் அந்த பொண்ணுங்க இன்ஸ்பெக்டரோட மனைவிக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. அதுனால பயம் இல்லாம கேக்குறாங்க. "

" ஓகே நீங்க முன்னெடுத்து நடத்துங்க. தேவைனா அந்த ஹாஸ்பிடல் ல இருந்து மாற்றுங்க. நான் மற்ற பிரொசியூஜர் ஏற்பாடு பண்றேன் " என்றிட, சமரனும் சலியூட் அடித்து கிளம்பினான்.

*_____________________________________________*

காவல் துறையார் உதவியுடன் மக்கள் கூட்டத்தைச் சரிசெய்து ஒருவழியாக சரிசெய்தனர். சித்தாராவை ஒரு அஸ்வின் தோளில் சுமக்க , மற்றவர்களும் ஒன்றாக இரு காரில் ஏறி அஸ்வின் வேலை செய்யும் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

பிரதீபாவும் காலையில் உண்ணாத நிலை மற்றும் மதிய நேரம் ஒரு ஆடிட்டிங் வேலை முடிந்துவர சாப்பிடாது வந்த நிலையில் தோட்டா பாய்ந்து பெண்ணவளை மயக்கத்தில் தள்ளியிருந்தது. அவளையும் ஒரு மெத்தையில் படுக்க வைத்து டிரிப்ஸ் ஏற்றினர்.

வெளியே நின்றிருந்த அனைவரும் ஒன்றாக சில்வியாவை வளைத்துக் கொண்டனர். இதையெல்லாம் அவள் எதிர்பார்த்து இருந்தமையால் அனைத்திற்கும் தயாராகவே இருந்தாள்.
அஸ்வின் பிரதீபாவிற்கு மருந்து ஏற்றி விட்டு வெளியே வர, சித்தாராவின் அறையில் இருந்து வெளியே வந்தார் பெண் மருத்துவர்.

" டாக்டர் இவங்க... "

" அவங்க கோமா ல இருக்காங்க அஸ்வின். எனக்குத் தெரிஞ்சு இவங்க சீக்கிரம் இதிலிருந்து வெளி வர வாய்ப்பில்ல . ஹை டோஸ் டிரக்ஸ் எடுத்த நிலையில அந்த பொண்ணை ஒரு நபர் சீரழிச்சியுக்காங்க. மைன்ட் ஸ்டெரெஸ் னு நிறைய... நடந்து இரண்டு நாள் கிட்ட ஆகியிருக்கும். பேஷன்ட் ரிலேட்டிவ் கிட்ட சொல்லுங்க... " என்றவர் கடமை முடிந்ததென நகர, சூழ இருந்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். ஆயினும் நெட்டில் அவளை உலவ விட்டவருக்கு இது பெரிதில்லையே...

தொடரும்...
 
Top