• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 13

Administrator
Staff member
Messages
545
Reaction score
735
Points
93
அத்தியாயம் 13



அகிலாவிற்கு அப்படியொரு கோபம் பிரவாகமாகப் பொங்கியது. 'திமிர் பிடிச்ச பொண்ணா இருப்பா போலயே? இவ எப்படி என் புள்ளைய அடிக்கலாம், யார் இவளுக்கு அந்த உரிமைய கொடுத்தது. நானே என் புள்ளைய அடிச்சதில்லை' என்று கண்ட காட்சியில் தாயுள்ளம் கொதித்தது. நகர முனைந்தவரை மூர்த்தி கைப்பிடித்து நிறுத்தியிருந்தார் கண்களாலே அமைதியாய் இருக்குமாறு சைகை செய்து.


தன் கன்னத்தை பிடித்துக் கொண்ட சித்விக்கிற்கும் சட்டென்று கோபம் துளிர்த்து விட்டாலும் பெண்ணவளின் அடுத்தடுத்த நடவடிக்கையில் அதுவோ உருகி கரைந்திருந்தது.


அழுதாள், முகத்தை மூடிக் கொண்டு. அடித்தது ஆடவனை ஆனால் அழுதது என்னவோ பேதை! பார்த்து நின்றவன் மனமும் சேர்ந்து கசங்கியது அவளின் வதனத்தை போல். இழுத்தணைக்க பரபரத்த கைகளை இறுக்கி கட்டிக் கொண்டு நின்றான் பாவையையே பார்த்தப்படி.


பெருங்குரலெடுத்து கத்தினாள், "எல்லாமே உன்னால தான்! நீ எதுக்கு என்னோட ஃலைப்ல வந்த? நீ வந்த பிறகு தான் என்னோட நிம்மதியே போச்சு. வாழவே பிடிக்கலை கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டு இருக்கேன். நான் சரியா சாப்பிட்டு எத்தனை நாளாச்சுனு கூட தெரியலை. கிட்ட தட்ட பைத்தியக்காரியா தான் சுத்திட்டு இருக்கேன், எங்க பார்த்தாலும் நீ மட்டும் தான் தெரியுற. தப்பு தான், அன்னைக்கு பிருந்தாவோட உன்னை பார்த்தப்பவே உன் சட்டையை பிடிச்சு நாலு அடி கொடுத்திருக்கணும் ஆனா கோபத்தில கிளம்பி போய்ட்டேன். ஆமா அவாய்ட் பண்ணேன், நீ எப்படி அவ கூட நிற்கலாம், அவ எப்படி என் முன்னாடியே உன் கையை பிடிக்கலாம் அப்படின்ற கோபம். பத்து நாளா நீ என்ன பண்ண? ஒரு நிமிஷம் கூட என்கிட்ட பேசுறளவுக்கு நேரமில்லாம போயிடுட்டாச்சா அப்படின்ற ஆத்திரம்" என்றவளுக்கு சத்தியமாக என்ன பேசுகிறோம் என்று கூட மூளையில் பதியவில்லை. அவன் மீது கொண்ட அதீத காதலின் வெளிப்பாடு தான் இந்த அதிரடியும் கூட. அதுவும் அவன் அலட்சியமாக தோள் குலுக்கி அவளை விலக்கி வந்ததை பாவையால் ஏற்கவே முடியவில்லை.
அவனின் அந்நியப்பார்வை பாவையின் ஒரு வருட ரணங்களை கிளறி இருக்க வெகு பலமாகவே அடி வாங்கினாள்.


"போனவன் போனவனாவே இருக்க வேண்டியது தான? எதுக்கு திருப்பி என் கண் முன்னாடி வந்த? அதுவும் அவ்வளவு கேஷூவலா விஷ் பண்ணிட்டு போற, அப்ப எப்பயுமே ஆத்திரம் எனக்கு மட்டும் தானா?" என்றவளின் வார்த்தைகள் வலிகளை தாங்கி வெளி வர கை அவனின் சட்டையில் இருந்து தளர அப்படியே பொத்தென்று ஷோபாவில் அமர்ந்து விட்டாள்.


கைகள் மட்டுமல்ல மனமுமே பெண்ணவளுக்கு முற்றிலும் தளர்ந்து உடைந்து தான் போனது.
ஆம், அவள் கூறியது போல் பாவையின் விழிகள் மட்டுமல்ல முகமுமே முழுவதாய் சிவந்து வீங்கி போயிருந்தது இரண்டு நாள் உறக்கத்தை விழுங்கியதின் விளைவாக. கண்களெல்லாம் நீர் நிரம்பி தன் முன் குழந்தையாய் முகத்தை மூடி தேம்பி அழுதபடி அமர்ந்திருப்பவளை கண்டு சித்விக் மனதும் அதிகமாகவே கசங்கியது.


மூர்த்தியும் அமைதியாய் நடப்பவற்றை வேடிக்கை பார்க்க அகிலா தான் அவ்வபொழுது மகனை முறைக்க இயலாததால் கணவனை முறைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தி நின்றிருந்தார்.


நின்றிருந்தவன் என்ன நினைத்தானோ சட்டென்று அமர்ந்திருந்தவளை நின்ற நிலையிலே தன் மீது சாய்த்துக் கொள்ள, "போ நீ கிட்ட வராத" என்று பெண்ணவள் தன் முன் நின்றவனை கைகளால் தள்ளி விட முயன்றாள் தேம்பியபடி.


அவள் நிறையவே தன்னால் காயப்படுத்தப்பட்டிருக்கிறாள் மேலும் அதிக அழுத்தத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. ஆடவனுக்கும் தெரியும் தானே சாராவின் கண்ணீர் அவ்வளவு சுலபத்தில் மற்றவர்கள் முன் வெளி வருவதில்லை என. ஆம், அவன் முன்பு கூட அதிகமாக அழுததில்லை பெண். சண்டை, சமாதானம் இன்னும் எத்தனை பெரிய பிரச்சனைகள் என்றாலுமே, 'வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்' எனும் ரகம். 'தான் இன்னும் கொஞ்சம் இறங்கி சென்று பெண்ணவளுக்கு தன்னுடைய நிலையை விளக்கி இருக்கலாம்' என்று எண்ணிய சித்விக்கிற்கும், 'என்னடா வாழ்க்கை' என்று சலிப்பே மிஞ்ச தலையை கோதிக் கொண்டான்.


இப்பொழுது அவளின் வார்த்தைகளும் செயல்களும் தன்னை மீறிய ஒன்று. இதற்கே ஒரு வருடங்கள் கடந்து விட்டதல்லவா? இத்தனை நாட்களாக அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் ஆடவனை கண்டவுடன் பிரவாகமாக ஆர்பரித்து விடுவதை அவளாலும் தடுக்க முடியவில்லை என்பது தான் பரிதாபம்! நெருக்கமானவர்களிடம் வெளிப்படும் சில உணர்வுகளுக்கு தடைகள் என்பதே கிடையாது தானே!


பாவையின் பாரத்தை யாரிடமாவது இறக்கி இருந்தால் கூட கொஞ்சமாவது குறைந்திருக்கும். கண்மண் தெரியாத கோபத்தில் கிளம்பி வந்தவள் உள்ளே நுழையும் கணம் வரை அவனை அடிக்க வேண்டும் என்று துளியளவு கூட எண்ணியிருக்கவில்லை. அவனிடம் கொண்ட அதீத உரிமை உணர்வினால் நடந்து விட்ட நிகழ்வென்பது அவனுக்கு தெரியும் ஆனால் பார்ப்பவர்க்கு விளங்குவது சற்று சிரமம் தான். ஆடவனுக்கு தெரியும், வருவாள் என்று! ஆனால் இவ்வளவு நாட்கள் அலைக்கழித்தே என்பதை அவன் கணிக்கவில்லை.


"ம்ப்ச்..சாரா" என்று அதட்டியவன், "ஷ்ஷ்..அழாதே!" என்று வாயில் விரல் வைத்து அவளின் எதிர்ப்பை பொருட்படுத்தாது தன்னுடன் சேர்த்து அழுத்தி பிடித்துக் கொள்ள அதற்கு பின் அசையவே இல்லை பெண். ஆனால் கண்ணீர் வற்றி தேம்ப தொடங்கியவள் ஒரு கட்டத்தில் மூச்சுக்காக ஏங்க தொடங்க சித்விக் திரும்பி தாயை பார்த்தான், "ம்மா, தண்ணீ கொடுங்க" என்று.


அவனை முறைத்தவர் உணவு மேஜையினருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, "இருப்பா நான் கொண்டு வரேன்" என்ற மூர்த்தி அவசரமாக அடுப்பறை நுழைந்து நீர் நிரம்பிய குவளையை கொண்டு வந்து மகன் கையில் கொடுத்தார்.


சாரா நீரை முழுவதுமாக உள்ளிறக்கிய பின்பு தான் சுற்றம் உரைத்தது. அதை விட தன்னுடைய செயலின் வீரியமும் புரிந்தது. சித்விக்கும் சரி மூர்த்தியும் சரி சூழலை பொறுமையாக கையாள முயல அகிலாவிற்கு கோபம் தான். ஆனால் வாயை இறுக மூடி அமர்ந்து கொண்டார் பார்வையாளராய். இத்தனைக்கும் பிறகு மகனின் அலட்டாத பாவனை அப்படியொரு எரிச்சலை கொடுத்தது தாயவருக்கு.


முகத்தை இரண்டு கைகள் கொண்டு அழுத்தி துடைத்தவள் நிமிர்ந்து தன்னருகில் அமர்ந்திருந்தவனை பார்க்க, "எப்படி வந்த? நைட் சாப்பிட்டியா?" என்றான் அக்கறையாய்.

சாரா அமைதியாய் இருந்தாள் தலையை குனிந்தப்படி. ஏனோ வலித்தது, 'இப்படி அடி வாங்கியும் அவளிடம் அவன் காட்டும் கரிசனைகள்! இவன் ஏன் இப்படி இருக்கிறான். கோபமே வராதா? இவனை யார் நல்லவனாய் இருக்க சொன்னது?' என்று எண்ணியவளுக்கு ஆடவனுடனான முதல் நாள் சந்திப்பு நினைவெழ அன்று கூட அவளை கடிந்தானே தவிர கோபமில்லை.


"சாரா" என்று மீண்டும் அழுத்தி அழைத்தவன் அவளின் முகத்தை நிமிர்த்த, "தூக்கம் வருது, தூங்கி முழுசா ரெண்டு நாளாச்சு" என்றாள் உள்ளிறங்கிய குரலில் பாவமாய். உண்மையிலே அவளது கண்களை உறக்கம் நிரப்பி தான் இருந்தது. மஹிமாவிடம் பேசியதிலிருந்து அவள் உறங்கவே இல்லை அதுவும் நேற்றைய நிகழ்விற்கு பின் சுத்தமாக உறக்கம் விழிகளை அண்டவே இல்லை. ஆம், அதற்காக தானே இப்படி விழுந்தடித்து ஓடி வந்ததும். இல்லையென்றால் தலையை அல்லவா பிய்த்துக் கொண்டிருப்பாள் இந்த நேரத்தில்.


சோர்ந்து போய் வாடி வதங்கி முற்றிலும் உடைந்து அமர்ந்திருந்தவளை காண ஆடவனுக்கு சகிக்கவில்லை.
'இவள் ஏன் இப்படி இருக்கிறாள்? நான் என்ன செய்திட்டேன் என்று இவ்வளவு இறுக்கி பிடித்துக் கொண்டிருக்கிறாள் பைத்தியமாய்' என்று ஆடவனாலும் எண்ணாமல் இருக்க முடியவில்லை.



"நைட் சாப்பிட்டியா?" என்றான் மீண்டும் விடாமல். 'இல்லை' என்பதாய் பாவையின் தலை மேலும் கீழுமாய் அசைந்தது. அவளின் முகத்தை வைத்தும் அதில் தெரிந்த சுணக்கத்தை கண்டும் அவள் உண்ணவில்லை என்பதை தெரிந்து தான் கேட்டான் ஆடவன்.


"எழுந்து போய் ப்ரெஷ் பண்ணிட்டு பேஸ் வாஷ் பண்ணிட்டு வா" என்று அவனின் அறையை கைக்காட்டினான். அவளின் விழிகள் மறந்து கூட மூர்த்தி புறமும் அகிலா புறமும் திரும்பவே இல்லை. வந்த பொழுது இருந்த தைரியம் முழுவதுமாக எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. சாரா, எங்குமே 'என்னவாம் இப்பொழுது? இதான் நான், இப்படி தான்' என்றிடுவாள் நிமிர்ந்து நின்று. ஆனால் இன்று உள்ளம் மட்டுமின்றி உடலும் மிக பலவீனமாக உணர்ந்தது.


தன்னுடைய செயல் அவளுக்கே உவப்பானதாக இருக்கவில்லை. தெரியும் தவறென்று, ஆனாலும் செய்தாள். அவனிடம் கொண்ட உரிமையுணர்வை நிலைநாட்ட மனது விரும்பியதோ என்னவோ?...


'வேண்டாம்' என்று மறுத்து தலையசைத்தவளை, 'நான் சொல்வதை கேட்க மாட்டியா நீ?' என்ற ஆடவனின் ஒற்றை பார்வை கட்டுப்படுத்தியது. ஆம், வாய் மொழியல்ல விழி மொழிகள் மட்டுமே அங்கு அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்க மூர்த்தியும் அகிலாவும் தூரத்திலே அவர்களை பார்த்தப்படி அமர்ந்திருந்தனர். மனைவி அவ்வபொழுது முறைத்துக் கொண்டே இருக்க எங்கே சாராவுடன் சண்டைக்கு கிளம்பி போய் விடுவாரோ என்று மூர்த்தி அவரையே சற்று கிலியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அகிலாவும் எப்பொழுதும் சண்டையிடும் ரகமல்ல என்றாலும் கணவன் மகள்களை விட அவரிடம் அதிக முன்னுரிமை மகனுக்கு மட்டுமே, அவனுக்கு எதாவது என்றால் போதும் ஒரு பிரளயத்தையே உருவாக்கி விடுவார் பெண்மணி. சிறு வயதிலிருந்தே அவனும் அப்படி தான். மூர்த்தியிடம் கூட எதாவது வாக்குவாதம் செய்வான் ஆனால் அகிலா எதை கூறினால் அப்படியே தலையசைப்பான்.


சாரா எழுந்து அறைக்குள் நுழைய, "ம்மா" என்று அகிலா அருகில் செல்ல அவர் முறைத்தார் கண்டனத்தோடு, 'என்ன இது?' என்னும் விதமாய்.

"சாரிம்மா, நான் உங்ககிட்ட முதல்லே சொல்லி இருக்கணும் பட் அதுக்கு சூழ்நிலை அமையல. அவ கிளம்பட்டும் நான் உங்களுக்கு எல்லாதையும் சொல்றேன்" என்றவன் இறுதியாக, "சாராவுக்கு சாப்பிட எதாவது செஞ்சு கொடுங்க" என்றிட அகிலா வாயவே திறக்கவில்லை, அமைதியாய் இறுகி அமர்ந்திருந்தார்.


"ச்சு..ம்மா, எதாவது பேசுங்க" என்றவன் தந்தையை பார்த்தான். "அகிலா" என்று வாய் திறந்த மூர்த்தியும் மனைவி முறைப்பில் அமைதியாகி விட அகிலா வேகமாக எழுந்து சென்று ஷோபாவில் அமர்ந்து கொண்டார் கைகளை கட்டியப்படி.


"நீ கடையில போய் ஏதாவது வாங்கிட்டு வாப்பா" என்று மூர்த்தி கூற நேரத்தை பார்த்தவன், "இந்த நேரத்தில எதுவுமே ஓபன் ஆகி இருக்காதேப்பா, இருங்க நானே எதாவது செய்ய முடியுதானு பார்க்கிறேன்" என்று அடுப்பறை நுழைந்திருந்திருந்தான்.


பழச்சாறு செய்வதற்கு குளிர்சாதனபெட்டியை திறந்து பழங்களை எடுத்து கழுவியவன் அதை நறுக்குவதற்கு தயாராகி விட அந்தோ பரிதாபம் கத்தி எங்கிருக்கிறதென்று கூட அந்த நல்லவனுக்கு தெரியவில்லை. 'ச்சு...' என்று நெற்றியை தேய்த்தவன் அங்கிருந்தே தாயை எட்டிப்பார்த்தப்படி அடுப்பறையை தலைகீழாய் புரட்ட முயல அகிலாவால் பொறுக்க முடியவில்லை மகன் அங்கு நிற்பதை. ஆம், கை கழுவுவதற்கு கூட மகனை அங்கு அனுமதித்ததில்லையே அந்த தாய்.


எழுந்து உள்ளே நுழைந்து, "தள்ளு டா" என்றவர் மகனை பார்க்கவே இல்லை. வேகமாக கத்தியை எடுத்து பழங்களை நறுக்க, "ம்மா" என்றவன் பின்னிருந்து அவரை தோளோடு அணைத்துக் கொள்ள திரும்பி அவனின் கையில் லேசாக அடித்தவர் பார்வை மகனின் கன்னங்களில் ஊடுருவியது. அவரின் கண்கள் கலங்க மகனுக்கு பொறுக்க முடியவில்லை. "ம்மா, ஒன்னுமே இல்லம்மா" என்று தாயை சமாதானம் செய்ய விழைய,

"கொன்னுடுவேன் உன்னை, மரியாதையா வெளிய போய்டு" என்று மகனை துரத்தி இருந்தார்.

வெளியில் வந்தவனுக்கு அந்த சூழல் சற்று கனமாக தான் இருந்தது. எங்கு யாரை குறை கூறுவது? சாராவிடம் பேச முடியுமா?.. ம்ம், கண்டிப்பாக மன்னிப்பு கூட கேட்பாள். இனி செய்யாமல் தடுக்க முடியும், ஆனால் நடந்து விட்டதை மாற்ற முடியுமா என்ன? அவனுக்கு கோபம் துளிர்த்தது தான் அதற்கு பின் பெண்ணவளின் கண்ணீரும் வார்த்தைகளும் ஆடவனை அசைத்திருந்தது. அவள் தனக்காக தான் இத்தனை உருகி கரைந்து கொண்டிருக்கிறாள் என்று தாயிடம் எவ்வாறு விவரிப்பது. எனக்காக என் மீது கொண்ட காதலை தக்க வைத்துக் கொள்ள தான் இவ்வளவு தூரம் தேடி வந்து என் கழுத்தை அழுத்தி பிடித்து கன்னத்தை பதம் பார்த்தாள் என்று எங்கனம் விளிப்பது. அவர் ஏற்பாரா? ஆயிரம் வினாக்கள் மேலெழும்பி தலையை கனக்க செய்ய அதை பிடித்தப்படி அமர்ந்திருந்தவனை, "எல்லாம் சரியாகும்ப்பா" என்று தோள் தட்டி புன்னகைத்த தந்தை முகம் சற்று தேற்றியது.

மூர்த்திக்கும் நடந்து
கொண்டிருப்பதில் அதிர்ச்சி தான் ஆனால் மகன், அவன் பார்த்துக் கொள்வான் என்று எல்லாத்தையும் தூக்கி கொடுத்த பின்பு எதிலுமே அதிகமாக தலையை நுழைப்பதில்லை. சித்விக்கும் அதற்கு அனுமதியளித்ததில்லை. எல்லா இடத்திலும் பொறுப்பாக நின்று கொள்ள அவனுக்காக சிந்தித்தார். தவற மாட்டான் என்று நம்பி தோளை தட்டிக் கொடுத்தார்.



தான் கொண்டு வந்த பழச்சாறு நிரம்பிய குவளையை மகன் முன் வைத்த அகிலா தந்தைக்கும் மகனுக்கும் சூடான தேநீரையும் வைத்து விட்டு அறைக்குள் நுழைந்து கொண்டார். ஏனோ தந்தையை போல் தாயால் இதை இயல்பாய் ஏற்க முடியவில்லை, மனது உறுத்தியது.

அறையிலிருந்து வெளி வந்தவளுக்கு மூர்த்தியை எதிர் கொள்வது சற்று சிரமமாக தான் இருந்தது. அவரது இதழ்கள் லேசாக விரிய, "உட்கார்ம்மா" என்று தன் முன்னிருந்த இருக்கையை கைக்காட்டிட சித்விக்கை பார்த்தப்படி அமர்ந்தாள் சின்ன தலையசைப்புடன். அவளின் முன் குவளையை வைத்தவன், "குடி, நான் ப்ரெஷ்ஷாகி வரேன்" என்று அறைக்குள் நுழைந்து கொண்டான்.
முகம் கழுவியவன் பத்து நிமிடத்தில் வெளி வர அவள் குவளையை காலி செய்திருந்தாள். சாராவை தனியே விட்டு செல்ல மனதில்லாமல் சித்விக் வருகைக்காக காத்திருந்த மூர்த்தி மகனிடம் தலையசைத்து தன் குவளையுடன் அறைக்குள் நுழைந்து கொள்ள, "ரூம்ல்ல போய் படுத்து தூங்கு சாரா" என்றவன் அவளெதிரில் அமர்ந்தான் தேநீர் குவளையை கையில் ஏந்தியப்படி.



அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் மீண்டும் நீர் துளிகள் தேங்க, "சாரா, ப்ளீஸ் அழாத டி. எத்தனை தடவை சொல்றது" என்றவன் முறைப்பில் வேகமாக கண்ணீரை துடைத்தவள், "நான் அழலை, அதுவா வருது" என்றாள் பாவம் போல். பாவையின் பாவனை ஆடவனை நெகிழ செய்ய அவளின் கண்ணீர் துடைத்தவன் இதழ்கள் லேசாக விரிய தேநீரை இரண்டு மிடறு உள்ளே இறக்கினான் அவளை பார்த்தப்படியே.

சட்டென்று அவளது கைகள் ஆடவனின் வதனத்தை நோக்கி நீள அன்னிச்சையாக பின்னால் இழுத்துக் கொண்டான். அதில் பாவையின் முகம் சுருங்கி கொள்ள, "ஸ்ஸ்..." என்று நெற்றியை தேய்த்தவனை கண்டு புன்னகைத்தவள், "என்ன செஞ்சிட்டேன் உங்களை? இப்படி பயப்படுறீங்க? இரண்டே இரண்டு அடி தானா?" என்றாள் மீண்டு விட்ட லேசான துள்ளல் ததும்பிய குரலில் புன்னகையுடன். பெண்ணவளின் பேச்சில் அவனது இதழ்கள் தாராளமாய் விரிய, "ம்ம்" என்றபடி மேலும் இரண்டு மிடறு உள்ளே இறக்க, "ரொம்பவே டயர்டா தெரியுற, போய் கொஞ்ச நேரம் தூங்கு சாரா" என்றான் கரிசனையாய்.


'மாட்டேன்' என்று இட வலமாக தலையசைத்தவள் முயன்று கண்களில் தேங்கிய தூக்கத்தை விரட்டி அமர்ந்திருந்தாள். அவன் குவளையை காலி செய்திருக்க அவளது கை நீண்டு அவனின் கன்னங்களை வருட, "சாரி" என்று முணுமுணுத்தாள்.


"என்ன என்ன சொன்ன? சரியாவே கேட்கலையே?" என்றான் அன்றொரு நாள் அவளை போல் வம்பிலுக்கும் பொருட்டு. முகத்தை சுருக்கியவள், "உங்களுக்கு என் மேல கோபமே வராதா?. நான் அடிச்சும் இவ்வளவு கேஷூவலா பேசிட்டு இருக்கீங்க?" என்றாள் அதி முக்கிய வினாவாய் நெற்றியை தேய்த்து.


சிரித்தான், சற்று சத்தமாகவே. அவள் சற்று கிலியுடன் அகிலா அறையை பார்த்தப்படி, "ஷ்ஷ்...மெதுவா சிரிங்க" என்றிட, "ம்ம், அடிக்கும் போது தெரியலையா, எங்கம்மாவும் அப்பாவும் இருந்தது?" என்றான் அவளின் விழிகளில் தெரிந்த பாவனைகளை ரசித்தப்படி. அவ்வளவு தான் சட்டென்று பாவை சுருண்டு கொண்டாள் முகம் கசங்கியது.

"ம்ம், நீ எழுந்திரு முதல்ல" என்றவன் அவளை வம்படியாக இழுத்துக் கொண்டு போய் அறை வாயிலில் விட, "நீங்களும் கொஞ்ச நேரம் கூட இருக்கீங்களா?" என்றாள் கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில்.

அறையின் வாயிலில் நின்று நடைபெற்றுக் கொண்டிருந்தது இந்த சம்பாஷனைகள். விழிகளை தாயின் அறையை நோக்கி செலுத்தியவன் அவளை சற்று உள்ளே தள்ளி அதாவது அறையின் வாயிலை விட்டு உள்ளே தள்ளி நிறுத்தி பெண்ணவள் வதனத்தை கையில் ஏந்தி நொடியில் தன்னிதழை அவள் நெற்றியில் ஒற்றி எடுத்திருந்தான். ஆடவன் ஸ்பரிசத்தில் கண்களை மூடி அசையாது நின்றவளுக்கு ஒற்றை இதழ் ஒற்றல் இத்தனை நாள் இடைவெளியை குறைத்திருப்பதை உணர்ந்தினாலும்
உடல்கள் உரசவே இல்லை, அதில் பாவைக்கு ஆகப்பெரும் வருத்தமும் கூட. நெருடலை கொடுத்த அந்த இடைவெளியை நிரப்பி அவன் மீது முழுவதுமாக சாய்ந்து மார்பில் முகத்தை வைத்து அழுத்தி இருந்தாள் பெண்.


பெண்ணவளின் செயலிலும் எங்கே அகிலா பார்த்து விடுவாரோ என்ற எண்ணத்திலும் ஆடவனுக்கு அவஸ்தை எழ நெற்றியை நீவியப்படி தாயின் அறைக்கதவில் விழிகளை நிலைக்க விட்டவன், "சாரா, என்ன பண்ற நீ? தள்ளி போ" என்றான் ஹீனமான குரலில். ஆம், வார்த்தைகள் முக்கால்வாசி காற்றுடன் கலந்திருக்க பாவையின் செவியை சரியாக சென்றடையவில்லை.


"ஒரு வருஷமாச்சு நீங்க கிட்ட வந்து, உங்களை ஃபீல் பண்ண விடுங்க, ஜஸ்ட் டூ மினிட்ஸ் தான் அப்புறம் போய் தூங்கிடுவேன்" என்று அத்தனை சோர்வுகளுகளையும் மீறி விழிகளில் மின்னும் இரகசிய புன்னகையுடன் நின்றிருந்தவளுக்கு முழுதாக அவனுள் புதைந்து விடும் ஆர்வம். அவனை கொஞ்சம் கொஞ்சமாக நாசி வழியாக ஸ்பரிசித்து தன்னுள் முழுவதுமாக நிரப்ப பாவை முயற்சி செய்து கொண்டிருக்க ஆடவன் நிலை தான் அந்தோ பரிதாபம்!



தொடரும்....



விமர்சனம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி(தனி தனியா ரிப்ளே பண்ண முடியலை, மன்னிச்சூசூ..கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ, முடிந்தளவு சீக்கிரமா அப்டேட் கொடுக்க ட்ரை பண்றேன் மக்களே😊)...

 
Messages
524
Reaction score
403
Points
63
சாராவின் பாசம் கூட அதிரடி தான் முதலில் அடிச்சிட்டு அப்புறம் தான் பேச்சே சித் நீ தான் என்ன பண்ண போறேன்னு தெரியலை வீட்டுக்கே வந்துட்டாள்
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Semmmmmmmaaaaa semmmmmmmaaaaa
Saara ellathulayum athiradi thhan
 
Top