Member
- Messages
- 47
- Reaction score
- 2
- Points
- 8
*சொல்லாமல்...!*
*மௌனம் 13(ii)*
அந்த அறையினுள் பெரும் நிசப்தம் நிலவிற்று.
கடிகார முட்களின் சத்தம் மட்டும் நொடி தவறாது கேட்டுக் கொண்டிருக்க விழியெடுக்காது உறக்கத்தில் இருந்தவளையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டதும் பயமாகிற்று தோழனுக்கு.
அவளின் தந்தையோ அழுது வீங்கிய கண்களுடன் அவளருகே தலை வைத்திருக்க அவருக்கு ஆறுதல் சொல்லக் கூட தெம்பில்லை, அவனுக்கு.
அவனின் தோழன் தான் யாரைத் தேற்றுவது என்று தெரியாது விழி பிதுங்கி நின்றிருக்க அவளின் தந்தையின் அலைபேசி ஒலிக்க பதற்றத்துடன் எடுத்துப் பார்த்தவருக்கு திரையில் ஒளிர்ந்த எண்ணைக் கண்டதும் கலவரம் மூண்டது.
நடுங்கும் கரத்தால் அலைபேசியை காதில் வைத்து பிடித்துக் கொண்டு அறையில் அவர் வெளியேறிட மெல்ல அவளருகில் நெருங்கி வந்தான்,
அவன்.
அவளின் கரத்தையாவது தன் கரத்தினுள் பொத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற சின்ன ஆசை உள்ளத்தில்.
ஆனாலும் என்ன உரிமை..?
நீண்ட விரல்களை இழுத்து தன் பாக்கெட்டினுள் இட்டுக் கொண்டவனுக்கு விழிகளில் அவள் நிலை கண்டு கொஞ்சம் நீர் கோர்த்தது.
இமை சிமிட்டி தடுத்துக் கொண்டான் கண்ணீர் வழிவதை.
மெல்ல அவளின் காதருகே குனிந்தவனின் இதழ்கள் மென்மையாய் உச்சரித்து ஓய்ந்தது,
சில வார்த்தைகளை.
"பயப்டாத..நா பக்கத்துல இருப்பேன் எப்பவும்.." மெல்லிய குரலில் அவன் ஒப்புவித்த வார்த்தைகள் அவளின் செவியை அடைந்தாலும் அதை எங்கனம் அவள் கேட்டிட.
அதற்குள் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த அவளின் தந்தையின் முகம் இருண்டு கிடக்க அடுத்த ஓரிரு நொடிகளுக்குள் புயல் போல் அறைக்குள் நுழைந்திருந்தான்,
இன்னொரு ஆடவன்.
வந்தவனின் பார்வை சுற்றியிருந்தவர்களையும் உறக்கத்தில் இருந்தவளையும் அற்பமாய் தழுவிட அதில் சினம் ஏறியது,
அவனுக்கு...
அவளின் அவனுக்கு...
அவளருகே வந்து நின்றவனோ அவனின் தோழனைப் பார்த்து " முருகா..இவ எப்டி இருக்கா..?" என்று சாதாரண குரலில் கேட்டிட அதில் இன்னும் ஆத்திரம் கிளம்பியது இவனுக்கு தான்.
"மாப்ள..இப்போ பரவால.." என்றது அவளின் தந்தை தான்.
அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு மகளுக்கு இப்படி ஆகியதை எண்ணி உள்ளுக்குள் அத்தனை அலைப்புறுதல்.
"அங்கிள்..இந்த மாப்ள உறவு முற எல்லாம் தயவு செஞ்சு வேணாம்..ஏன்னா இதுக்கப்றமும் உங்க பொண்ண கல்யாண பண்ணிக்கிற அளவு எனக்கு பரந்த மனசு கெடயாது.." சாகவகாசமாய் சொல்லி முடிக்க அவன் முகத்தில எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லை.
"மாப்ள.." அவளின் தந்தை நடுங்கிய குரலில் அழைத்திட அதை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை, அவன்.
"கௌதம்ம்ம்ம்ம்.."
"என்ன முருகா..சும்மா சவுண்ட் விட்ற வேலயெல்லாம் என்கிட்ட வேணா..கற்ப பறிகொடுத்த பொண்ணுக்கு வாழ்க்க கொடுக்குற அளவு நா ஒன்னும் கொறஞ்சு போய்டல.." வார்த்தைகளை முடிக்கும் முன்னே அவனின் சட்டையை பிடித்து முகத்தில் ஓங்கிக் குத்தியிருந்தான்,
அவன்.
அந்த தாக்குதலை கௌதமுமே எதிர்பார்த்து இருக்க மாட்டான் போலும்.
"முருகா..உன் ப்ரெண்ட.." என்று சொல்லி முடிக்கும் முன்னமே மீண்டும் ஓங்கி அறைந்திருந்தான், கன்னத்தில்.
அப்படி ஒரு ஆக்ரோஷம் அவனின் முகத்தில்.
"என்னடா சொன்னா..என்னடா சொன்ன..இன்னொரு வார்த்த அவள பத்தி பேசின..தொலச்சிருவேன்..கற்பு..ஹான்..அது என்னடா கற்பு..அது மனசுல தான் இருக்கு..அத மொதல்ல புரிஞ்சிக்க..வந்துட்டாரு அவள கொற சொல்ல..அவள பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லடா...இடியட்ட்ட்..கன்ட்ரோல் யுவர் வர்ட்ஸ்...இன்னும் ஒரு வார்த்த பேசுன" கத்தியவாறு அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவாறு பேசியவனோ அவனை முன்னே இழுத்து படாரென பின்னே தள்ளி விட முதுகு பலமாய் மோதியது, சுவற்றில்.
"இங்க பாரு..நா ஒன்னும் தப்பா சொல்லல..அவ கற்பு இல்" கௌதம் தன் பிடியிலேயே நின்றிட மீண்டும் ஒரு அறை பளாரென கன்னத்தில்.
கௌதமின் சிவந்த கன்னத்தில் அவனின் ஐ விரல்களும் தடம் பதித்து விட்டு மீண்டன.
அவனின் குரல்வலையை இறுக்கிப் பிடித்திட இங்கு பயம் தொற்றிக் கொண்டது தோழனுக்கு தான்.
"மச்சீ..விட்றா..விட்றா..செத்துரப் போரான்..மச்சீ.." என்று கத்தியவாறு அவனின் கைகளை அகற்றப்பார்த்திட
ம்ஹும்..
இன்னும் இறுக்கித் தான் பிடித்தன அவனின் விரல்கள்.
கௌதமும் அவனின் கரத்தை விலக்கப் போராடிட அதிலும் மேலும் கோபம் வரப்பெற்று இன்னும் நெருக்க அவளின் தந்தைக்கும் பயம் வந்திற்று.
"தம்பீ..வேணா தம்பீ..தம்பி விடுங்க.." அவரின் அவனின் தோற்பட்டையை பற்றிட நண்பணிடம் காட்டிய உதறலை இவரிடம் காட்ட முடியவில்லை அவனால்.
வயதில் மூத்தவர் ஆயிற்றே.
முறைப்பு தேங்கிய விழிகளுடன் அவனின் கழுத்தில் இருந்து கரத்தை அகற்றிட அவன் விட்ட கணமே பெரும் இருமல் வெளி வந்தது கௌதமில் இருந்து.
அப்படியே சரிந்து நிலத்தில் அமர்ந்து கௌதம் இரும அதைப் பார்த்தும் சற்றும் இளக்கம் இல்லை அவன் மனதில்.
தோழன் தான் பதறிக் கொண்டு அருகே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவனிடம் நீட்டப் பார்த்திட அதை உணர்ந்தவனின் விரல்கள் போத்தலைப் பற்றி தன் வாயிற்குள் சரித்திட கௌதமின் விழிகள் அவனிடம் இறைஞ்சி நின்றன,
நீர் கேட்டு.
ஓரவிழியால் கௌதமை பார்த்தவாறு அண்ணாந்தவாறே நீரை தன் வாயிற்குள் சரித்துக் கொண்டிருந்தவனுக்கு மனிதாபிமானம் சற்றே எட்டிப் பார்த்திருக்க வேண்டும்.
பாதி குடித்து விட்டு போத்தலை மூடி தரையில் அமர்ந்திருந்தவனின் மடியில் போட்டவின் விழிகளில் பெருமளவு நிரம்பியிருந்தது,
அலட்சிய பாவமே.
அவளின் தந்தை அசையாது நின்றிருக்கவே அவனுக்கு ஏதோ ஒன்று புரிவது போல்.
ஆனாலும் தெளிவாக ஊகித்துக் கொள்ள இயலவில்லை.
கௌதமோ சுவற்றை பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்றிட அவளின் தந்தையோ அவனிடம் கை கூப்பி " நீங்க போங்க சார்..கல்யாணம் நடக்காது..இப்டி பட்ட ஒருத்தனுக்கு என் பொண்ண கட்டிக் கொடுக்க நா விரும்பல.." என்றிட இவனுக்குத் தான் விழிகள் விரிந்தன.
கெந்திய நடையுடன் கௌதம் அந்த அறையில் இருந்து வெளியேறிட இவனின் தோள் சாய்ந்து அழுதே விட்டிருந்தார்,
அவளின் தந்தை.
மகளைப் பெற்ற அப்பாவின் மனநிலைகைளை தனக்கும் மகள் பிறந்த தானும் தந்தை எனும் ஸ்தானத்தை அடையும் வரை யாராலும் உணர்ந்து கொண்டிட இயலாது என்பதே நிதர்சனம்.
அவனின் கரங்கள் அவரின் தோளை அழுந்தப் பற்றியது.
அழுத்தி அழுத்தி மொழியின்றி ஆறுதல் வார்த்தைகளை அவரினுள் கடத்த முயன்றது.
ஓரிரு நிமிடங்கள் கடந்த பின்னர் அவர் இயல்புக்கு மீள அவரை அமர வைத்து விட்டு நிமிர்ந்தவனின் மனதில் தீர்க்கமாய் தெளிவாய் ஒரு முடிவு.
"அங்கிள்.." என்றவனின் குரலில் அசைக்க முடியதா ஓர் உறுதி.
அவனின் குரல் கேட்டு தலை நிமிர்த்தி அவர் பார்த்திட நேர்ப்பார்வை பார்த்தன அவனின் விழிகள்.
"அங்கிள் உங்க பொண்ண எனக்கு கட்டித் தர்ரீங்களா..? கண் கலங்காம பாத்துக்குறேன்.." சிறு புன்னகையும் தன்மையாய் அதே நேரம் உறுதியாய் கேட்டவனைக் கண்டதும் அவருக்கு பெரும் அதிர்வே.
"தம்பீஈஈஈஈஈஈ..." அவரின் குரல் பிசிர் தட்டியது. சத்தியமாய் இப்படி ஒரு கேள்வியை அவனிடம் இருந்து எதிர்ப்பார்த்திருக்க மாட்டார் அந்த மனிதர்.
"எதிர்ப்பார்த்தது தான்.." என்பது போல் சிறு புன்னகையை இழுத்து ஒட்டிக் கொண்டன, அருகே இருந்த தோழனின் இதழ்கள்.
"நெஜமா தா அங்கிள் கேக்கறேன்..வெளயாடல.." சிவப்பேறிய விழிகளுடன் அவன் கேட்டிட்டாலும் இதழ்களில் உதித்திருந்த புன்னகை மட்டும் மாறவேயில்லை.
மறுப்புச் சொல்ல இயலவில்லை அவரால்.
மறுத்து என்ன காரணம் தான் சொல்லிட..?
இவனைப் போன்ற ஒருவனைத் தான் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணம் முன்பு அடிக்கடி அவனைக் காணும் போதெல்லாம் எழுவது உண்டல்லவா.
அவன் அங்கிருந்து சென்றவுடன் அவனைக் காண கிடைக்காததில் அவனைப் பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்ததே தவிர அழிந்து போயிருக்கவில்லை.
அதிலும் அவனுக்கு திருமணம் முடிந்து விட்டதாய் வதந்தி வேறு உலா வந்திருக்கவே தான் மகளுக்கு வேறிடம் பார்த்திருந்தார், அவர்.
"அங்கிள் என்ன சொல்றீங்க..?" சிந்தனையை கலைத்து செவியை ஊடுருவிய அவன் குரலில் தானாகவே அசைந்தாடியது, அவரின் சிரசு.
புன்னகையுடன் அவருக்கு நன்றி சொன்னவனின் பாதங்கள் அவளை நோக்கி அடியெடுத்து வைத்தன.
கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிய படி அவளின் வதனத்தையே அவன் பார்த்திருக்க அந்த விழிகளில் கசிந்திட்ட காதலைக் கண்டதும் அவளின் தந்தையின் மனதில் என்னவித உணர்வென்று அவராலே பிரித்தறிந்திட இயலவில்லை.
பேன்ட் பாக்கெட்டினுள் விரல்களை இட்டு அவளுக்கென வாங்கி வைத்த வெள்ளிச் சங்கிலியை கையிலெடுக்க அதில் இருவரினதும் முதலெழுத்து பொறிக்கப்ட்ட பென்டன் தொங்கிக் கொண்டிருந்தது.
அவளுக்கு சிறிதாய் ஒற்றையாய் வெள்ளிச் செயின் அணிவது பிடித்தமானது என்று தெரிந்த பிறகு அவனின் முதல் மாத சமபாத்தியத்தில் அவளுக்கென வாங்கி வைத்தது இது.
"அங்கிள்.." என்று அவளின் தந்தையை அழைத்திட அனுமதி கேட்டு நின்ற அவனின் விழிகளைக் கண்டதும் அவரிதழ்களில் எழுந்தது சிறு புன்னகை.
"கெட்டதிலும் ஒரு நல்லது இதுவா..?" என்கின்ற எண்ணம் தான் அவர் மனதில்.
அவளின் நிலை கண்டு மனம் வலித்தாலும் அதற்கு மீறிய சந்தோஷம் அவனுள்.
அவளாய் இருந்தவள் அவனின் அவளாய் ஆகப் போகிறாள் அல்லவா..?
தன் பர்ஸில் இருந்த தந்தையின் புகைப்பட்டத்தை ஒரு கணம் பார்த்து விட்டு கடவுளிடமும் கோரிக்கைகளை முன் வைத்தவனாய் அந்த வெள்ளிச் சங்கிலியை அவள் கழுத்தில் மாட்டிட்ட மறு கணம் அவளின் கரங்களை அழுந்தப் பற்றிக் கொண்டது,
அவனின் ஒற்றைக்கரம்.
சுழலில் மாட்டி அலைந்து திரிந்து கரை சேர்ந்த உணர்வு தான் அவனில்.
அவன் நெகிழ்ந்திருக்க அந்த நெகிழ்வில் புன்னகைத்தவாறு அவனின் தோளில் கை போட்டான், அவனின் தோழன்.
"மேடம்ம்ம்ம்ம்.."
"ம்ம்.." என்றவரின் விரல்கள் விழிகளோரத்தில் சேர்ந்திருந்த நீரை சுண்டி விட்டுக் கொண்டது.
" என்னமோ பண்ணுது மேடம் மனசுக்கு..ரொம்ப நல்ல ஆள் தான அவரு..இப்டி ஒரு புள்ள இருக்க அம்மா அப்பா கொடுத்து வச்சுருக்கனும்.." சொன்னவளின் குரலில் அத்தனை சிலாகிப்புத் தன்மை.
"அது சரி தான்மா..ரொம்ப ரொம்ப கொடுத்து வச்ச ஆளுங்க மா.." சொல்லும் முன் ஏனோ தொண்டை அடைத்தது.
அவரிடம் பேசி விட்டு தன் நோட்டை தட்டியவாறு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள்,
கயல்விழி.
அவள் வாயிலைத் திறந்து வெளியேறும் சமயம் சீறிப் பாய்ந்து கொண்டு வந்தது சித்தார்த்தின் என்.எஸ்.டூ ஹன்ட்ரட்.
அவளோ அதன் வேகத்தில் சமைந்து நின்றிருக்க அவனோ அவளைக் கவனிக்கவில்லை.
ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனின் முகம் அவளுக்கு தெளிவாய்த் தெரியவுமில்லை.
காணாமல் போனது தான் விதியோ..?
அவளோ மறு கணமே விரைந்து நடக்கத் துவங்கிட எண்ண அலைகள் சாரதா சொன்ன நபரை பற்றியே சுற்றி வந்தன.
மறுநாள் காலையில் சீக்கிரமாகவே விழிப்புத் தட்டியிருந்தது, தர்ஷினிக்கு.
இன்று அவனின் பிறந்த நாள் என்பதாலோ..?
அலைபேசி திரையில் அவள் வைத்திருந்த முகப்புப் படத்தில் இதழ் பிரித்து சிரித்துக் கொண்டிருந்தான்,
அவன் கணவன்.
எப்போதே அவனின் அலைபேசியில் இருந்து அவனுக்கு தெரியாமல் அவளினதுக்கு அனுப்பிக் கொண்ட புகைப்படம் தான்.
சாதாரணமாகவே ரசிக்கத் தோன்றுவதாய் இருக்க நேசம் வழியும் விழிகளுக்கு தப்பிடும் வாய்ப்பு இல்லையே.
காற்றில் சிகை அசைந்தாட பக்கவாட்டாய் ஒரு கையை பான்ட் பாக்கெட்டில் இட்டபடி அவன் நின்றிருந்த தோரணையும் கடைவிழியின் ஊடு அவன் எங்கோ பார்த்திருப்பதும் ஏனோ அவளை அத்தனை கவர்ந்திருந்தது.
கறுப்பு நிற டெனிமும் கரு நீல நிற முழுக்கை சட்டையும் அணிந்து முட்டி வரை கையை மடித்து விட்டு இருந்தவனின் மறு கரம் அலைபேசியை தாங்கியிருந்தது.
என்றும் பார்ப்பது தான் என்றாலும் அனுதினம் புதிதாய்த் தான் தெரிகிறான் அவள் விழிகளுக்கு.
"என்னன்னாலும் இந்த ஆளு இவ்ளோ அம்சமா இருக்க கூடாது பா..ரொம்ப க்யூட்டான அர்ஜுனா இருக்குதே மனுஷன்.." தனக்குள் முணுமுணுத்தவளுக்கு விழிகளை அகற்றிடத் தான் இயலவில்லை.
ஓரிரு நிமிடங்கள் அசையாத கருமணிகள் அவன் விம்பத்தை தமக்குள் தேக்கி வைத்திருக்க தாய் அழைக்கும் சத்தத்திலயே நிகழ் உரைத்தது அவளுக்கு.
"ப்ரீஸ் ஆகித் தான் நிக்கறோம்.." நெற்றியில் அறைந்தவாறு போர்வையை விலக்கி விட்டு எழுந்தவளோ போர்வையை மடித்து வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்திட ஒலித்தது அழைப்பு மணியின் சத்தம்.
தொடரும்.
அதி...!
2023.08.29