Member
- Messages
- 31
- Reaction score
- 13
- Points
- 8
அத்தியாயம் - 12
அதீத கோபம் கண்களில் மிளிர, கத்தி மயங்கி சரிந்தவளைக் கண்டு சற்று பதற்றமடைந்தான் ஆரியன். அது விசிட்டர் நேரமாதலால் சில பெண்களின் உதவியோடு ஐசியூவில் இருந்த ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். அங்கிருந்த செவிலியரும் தனது பங்கிற்கு ஒரு டிரிப்பை ஏற்றிவிட்டு மருத்துவரை அழைத்து வந்தார். மருத்தவர் வைத்தியம் செய்ய விசிட்டர்கள் வெளியேற்றப்பட்டனர் ஆரியன் உட்பட.
வெளியே வந்த ஆரியனுக்கு சில சந்தேகங்கள் மனதில் இருந்தன. ஒன்று படுக்கையில் மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சித்தாராவினை வைத்து சில்வியாவினை மிரட்டும் நபர் யார்?... சஹானாவின் தங்கையான அஹானாவினைச் சுற்றி நிகழுபவை பற்றியும் கவின்யா என்று சில்வியாவால் நம்பப்படும் கவின் பற்றி அவளுக்கு எப்படி தெரியும்?... இடையில் கவினயன் என்ற பெயர் வந்ததே அவன் யார்... அவன் தான் சித்தாராவின் நிலைக்குக் காரணமா... இன்னும் இருந்தன. ஆனால் அதற்குள் மருத்துவர் வெளியே வந்தார். இவற்றை எல்லாம் யோசித்தவன் சில்வியாவை யாரோ ஒருவர் மிரட்டினரே அவன் இங்கும் கண்காணிப்பானே என்பதை உணராமததே பரிதாபம்.
" பேஷன்டோட ரிலேட்டிவ் யாரு "
" டாக்டர் பேஷன்டோட ரிலேட்டிவ் இல்ல... ஆனா அவளை இப்ப நான் தான் பாத்துக்க போறேன் . அன்ட் ஐ ஆம் இன்ஸ்பெக்டர் ஆர்யன் . "
" ஓகே மிஸ்டர் ஆரியன். பேஷன்டுக்கு பிரச்சனை எதும் இல்ல. பேஷன்ட்க்கு சரியான நேரம் சாப்பிட வைத்து தூங்க வைக்கணும். ரொம்ப ஸ்ட்ரெஸ் ல இருக்காங்க. ரெஸ்ட் எடுத்தா பெட்டர் ஆகிடுவாங்க... "
" ஓகே டாக்டர். அன்ட்... ஐ வான்ட் டு நோ சம்திங் எல்ஸ் "
" எஸ். டெல் மீ சார் "
" SEX ASSIGNMENT SURGERY "
சில்வியா சொன்னது என்ன என்று புரியாமல் ஆரியன் கேட்டுவைக்க, மருத்துவரோ அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்து வைத்தார்.
அவரின் பார்வையில் ஆரியன் குழம்பி, " டாக்டர் எனி பிராப்ளம் " என்றிட , அவரோ இல்லை என்பதாக தலையசைத்து வைத்தார். ஆனாலும் அவரது பார்வையின் தாக்கம் மட்டும் மாறியதாகத் தெரியவில்லை.
அவனை அழைத்துக் கொண்டு அவரும் தனது கேபினில் வந்தவர் அவனுக்கு அமர நாற்காலியைக் காட்டிவிட்டு அவரும் அமர்ந்து கொண்டார்.
" ஆமா இது இப்ப எதுக்கு... "
" டாக்டர்... பிளீஸ் கொஞ்சம் அது என்ன னு சொல்லுங்க . நான் ஒரு நார்மலான மனுஷன் என்பதைத் தாண்டி ஒரு போலீஸ். அப்ப காரணம் இல்லாமலா கேட்பேன். கொஞ்சம் அன்ஆஃபிஷியலா கேஸ் டீல் பண்ண வேண்டியிருக்கு. சோ... " என்று இழுக்க , விபரம் புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தார் மருத்துவர்.
" SEX ASSIGNMENT SURGERY ங்குறது பாலின ஒதுக்கீடு அறுவை சிகிச்சை . இதன் மூலம் ஒரு திருநங்கையின் உடல் தோற்றம் மற்றும் அவர்களின் தற்போதைய பாலியல் பண்புகளின் செயல்பாடு ஆகியவை சமூக ரீதியாக தொடர்புடையவை போல மாற்றப்படுகின்றன. அவர்களின் அடையாளம் பாலினத்துடன் . இது திருநங்கைகளுக்கு பாலின டிஸ்ஃபோரியா சிகிச்சையின் ஒரு பகுதி . இன்டர்செக்ஸ் நபர்களுக்கான அறுவை சிகிச்சை தலையீட்டை விவரிக்கவும் இந்த சொல் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகிறது . "
" திருநங்கைகளுக்கானதா... " என்றவனின் குரலானது கனலில் சிவந்திருந்து கனன்றிருந்த நெருப்புக்கரியில் தண்ணீர் தெளிக்கப்பட்டது போன்றிருந்தது. ஏற்கனவே கவின் திருநங்கை தானோ என்ற சந்தேகம் இருந்ததாலோ அது பெரிதும் அவனை பாதிக்கவில்லை.
ஆனாலும் திருநங்கை என்பதை ஏன் சில்வியா கேட்கவில்லை என்ற கேள்வி அவனை உறுத்தியது. மற்றோர் சொல்லியிருந்தால் அதனைப் பற்றி அவன் யோசிக்க வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் மருத்துவம் மூன்றாமாண்டு பயிலும் மாணவியான சில்வியாவின் அவனை யோசனைக்குள்ளாக்கியது.
" டாக்டர் ஒரு பெண் ஆணாக மாறுற வாய்ப்பு.... "
" யா கண்டிப்பா இருக்கு . ரீசன்டா சிவகார்த்தியன் சாரோட Mr. லோக்கல் படத்தில் கூட ஒரு இடத்தில் அஸ்வினி சர்ஜரி பண்ணி அஸ்வினா மாறியதா இருக்குது இல்லையா... லைக் தட். பொண்ணுங்க ஆணுங்களா மாற முடியும். ஆணுங்க பொண்ணுங்களா மாற முடியும்.
பெண்ணியமயமாக்கல் அறுவைசிகிச்சை என்பது பொதுவாக பெண் பாலினத்தின் உடற்கூறியல் விளைவிக்கும் அறுவை சிகிச்சைகள் ஆகும். இந்த அறுவை சிகிச்சைகளில் வஜினோபிளாஸ்டி , ஃபெமினைசிங் ஆக்மென்டேஷன் மேமோபிளாஸ்டி , ஆர்க்கிஎக்டோமி , ஃபேஷியல் ஃபெமினைசேஷன் அறுவை சிகிச்சை , குறைப்பு தைரோகாண்ட்ரோபிளாஸ்டி (டிராச்சில் ஷேவ் ) மற்றும் வாய்ஸ் ஃபெமினைசேஷன் அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.
ஆண்மையாக்கும் அறுவை சிகிச்சைகள் என்பது பொதுவாக ஆண் பாலினத்தின் உடற்கூறியல் விளைவிக்கும் அறுவை சிகிச்சைகள் ஆகும். இந்த அறுவை சிகிச்சைகளில் மார்பு ஆண்மை அறுவை சிகிச்சை ( மேல் அறுவை சிகிச்சை ), மெட்டோடியோபிளாஸ்டி, ஃபாலோபிளாஸ்டி , ஸ்க்ரோடோபிளாஸ்டி மற்றும் கருப்பை நீக்கம் ஆகியவை அடங்கும் .
SRS க்கு கூடுதலாக, நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் ஆண்மை அல்லது பெண்ணை மாற்றும் ஹார்மோன் மாற்று சிகிச்சையை பின்பற்ற வேண்டும்.
ஒரு மாற்று ஆண், பிறக்கும்போதே பெண்ணாக நியமிக்கப்பட்டு, ஆணுறுப்பு அறுவை சிகிச்சையை நாடினால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படலாம், இதில் கருப்பை நீக்கம் , ஓஃபோரெக்டோமி , மெட்டோடியோபிளாஸ்டி ஆகியவை அடங்கும்.,
இதுதான் சார்... முதல் ல இந்த சிகிட்சையில் அவங்களோட அசல் பாலின உறுப்பை நீக்கிடுவாங்க.
பெண்ணிலிருந்து ஆணுக்கு அறுவைசிகிச்சை மாற்றத்திற்காக மெட்டோடியோபிளாஸ்டிக்கான செயல்முறை உருவாக்கும்போது ஃபாலோபிளாஸ்டியின் ஒரு மாறுபாடாகக் கருதப்படும் மெட்டாய்டியோபிளாஸ்டி, நோயாளியின் தற்போதைய பெண்குறிமூலத்தில் இருந்து ஆண்குறியை உருவாக்க வேலை செய்கிறது. இது நோயாளிக்கு உணர்ச்சியை உணரும் ஆண்குறியின் தலையைப் பெற அனுமதிக்கிறது. மெட்டோய்டியோபிளாஸ்டி பல நிலைகளில் ஒரு பெரிய, அதிக " சிஸ் -தோன்றக்கூடிய" ஆண்குறியை உருவாக்க ஃபாலோபிளாஸ்டியுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம் .
இன்னும் நிறைய உண்டு சார்... " என்று அவர் படித்த அனைத்தையும் ஒரே மூச்சில் கொட்ட எத்தனிக்க , " சார் சார் நான் பாவம் சார்... என்ன விட்ருங்க... சிலது நீங்க சொல்றதே எனக்குப் புரியல... இன்னுமா " என்று ஒரு குரல் பின்னிருந்து வந்தது. திரும்பி பார்க்க, கலவரமான முகத்துடன் பிரதீபாவும், ' இங்கேயுமா இவங்க அலம்பல் ' என்பது போன்று அஸ்வினும் நின்றிருந்தனர் .
" ஓகே டாக்டர்... இதுபோதும். நாங்க பாத்துக்குறோம்... தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப் " என்றவன், எழுந்து கொண்டான்.
இவர்கள் வெளியே வர, ஒருவன் யாருக்கோ தகவலைக் கடத்த, அவனை விரைந்து பிடிக்கும் முன்னர், பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டானது அவனது உயிரினை பிடுங்கிச் சென்றது.
தொடரும்...
கதையின் நிறை குறை சொல்லுங்க தங்கம்ஸ்.
- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன்
