• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 11

Messages
31
Reaction score
13
Points
8
விதியின் ஆட்டம் ஓயாதே - 11

அத்தியாயம் : 11

காலை வேளையில் சஹானா சமரைத் தேடி அமர, அவனைக் காணவில்லை.

' நம்ம மேல இன்னுமா கோவம் போகல… ஒருவேளை அந்த கவின் அடிச்சது மனசுல வச்சுட்டு பண்ணுறானா… நான் தான் திரும்ப அவனை அடிச்சிட்டேனே… இன்னுமா போகல…


சொல்றதுக்கில்ல… அவன் ஆம்பள … அவன் கோபமும் நியாயம் தானே… இப்படி ஆகிட்டே… இந்நேரம் சாப்பிட்டானோ என்னவோ '

இவ்வாறாக சமரின் மனது அங்கலாய்க்க ஆரம்பித்தது. இரவும் வீடு வரவில்லை ; காலையிலும் வரவில்லை… ஒரு சராசரி மனைவியாக, காதலியாக அவள் மனம் சமரின் நலனை அறிய ஏங்கியது.

இப்படியே அமர்ந்தால் மனம் சேர்ந்து விடும் என எண்ணியவள் ஹோம்தியேட்டரில் பாடலைப் போட்டு விட்டாள்.

ஒரு கணம் ஒருபோதும்
பிரியக் கூடாதே
என் உயிரே
என் உயிரே நீ
அழுக கூடாதே

நீ கண்ட கனவெதுமே
கலைய கூடாதே
நான் இருக்கும் நாள்வரைக்கும்
நீ அழுக கூடாதே

பாடலும் மெல்லிசையாய் வந்து பெண்ணவளின் மனதை வருடிச் செல்ல, புன்னகையோடு அடுத்த வேலையைப் பார்க்கலானாள் . ஆனால் கலங்கியே ஆகவேண்டுமென விதியிட்ட கணக்கினை அவளுக்குக் கூறுவது யார்…

விதியோ மாந்தரிடையே - சிறு
விளையாட்டைத் தொடங்குகையில்
விதியின் சதியை அறியாது
மனதை ரணப்படுத்திட
மனதை வருடும் மயிலிறகாய்
காலம் நின்றால் நன்றே!

*_____________________________________________*

தாம்பரத்தில் இருந்து ஏறி ஒவ்வொரு இடமாகச் சுற்றி, மீண்டும் தாம்பரமே வந்து நிற்க, ஆரியனுக்கும் சமருக்கும் குழப்பம் அதிகமானது. சாதாரணமாக மருத்துவமனை வருவதற்கு ஏன் இத்தனை தூரம் சுற்ற வேண்டும்... கிட்டத்தட்ட இந்த இடத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணமின்றி வரும் இரயில்களில் எல்லாம் ஏறி கடைசியில் தாம்பரமே வந்து நிற்கின்றாள் .

" சமரா… இந்தப் பொண்ண வழிமறிச்சான் பேய் எதும் பிடிச்சிருக்குமோ "

" எதே… வழிமறிச்சான் பேயா … அப்டினா என்னடா ஆரி… புதுசு புதுசா சொல்லுற… "

" எனக்கும் இதுலாம் தெரியாது... பிரதீ சில நேரம் சொல்வா… "

" ஆக மொத்தத்துல நீ லூசாகி நானும் லூசாக போறேன்… சரி அத விடு… எதோ சொன்னியே 'வழிமறிச்சான் பேய்'… அப்டினா என்னடா… "

" டெஃபனைட்டா லூசாகிடுவோம்…
சரி சொல்றேன் கேளு… வழிமறிச்சான் பேய்ங்குறது நம்மள ஒரு இடத்துக்குப் போக விடாது. உதாரணத்துக்கு இதோ சில்வியாவ எடுத்துக்கோயன்… தாம்பரத்துல இருந்து பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல் போக செங்கல்பட்டு போய் அங்கிருந்து எழும்பூர் போய் அடுத்து தாம்பரம் வந்து நிக்குறா… சுத்தி சுத்தி ஒரே இடத்துக்கு தானே வந்து நிக்கிறா… அதான். ஆனா இவ ஹாஸ்பிடல் வந்துட்டா… "

"இப்படி கூட இருக்குதா… ஆனா நல்லா இருக்குல… " என்றவன் சிரிக்க, ஆரியனும் சிரித்துக் கொண்டான். இருவரும் பேசிக்கொண்டே சில்வியா செல்லும் அறைக்குப் பின்னே நடக்க ஆரம்பித்தனர்.

" ஆரி … இப்படியே போனா மாட்டிக்குவோம்… இரண்டு வார்டு பாய் டிரெஸ்க்கு ரெடி பண்ணு இரண்டு பேரும் போட்டுட்டு முகத்துல மாஸ்க் போட்டு மறைச்சுட்டு போனா அந்தப் பொண்ண நேரடியாவே பின்தொடரலாம்… "

" கரெக்டு தான்… ஆனா இப்ப நேரம் இல்ல… போற வழில எங்கேயாவது கிடைச்சா போடுவோம் விடு… " என்று ஆரியன் கூற, சமரும் சம்மதித்து இருவரும் நடந்தனர்.

போய்க்கொண்டே இருந்தவள் ஒருகட்டத்தில் திரும்பித் திரும்பி பார்க்க ஆரம்பித்து கடைசியில் யாரையோ கண்டு பயந்து நின்றாள் . அது கட்டாயம் சமரோ ஆரியனோ அல்ல என்பது தெளிவு. ஆனால் யார் என்று தெரியவில்லை.

நடந்து வருகையில் ஒரு பிரிவில் வலது இடது முன்பக்கம் எனப் பிரிய, சில்வியா போன திசையை அறிய இயலவில்லை. சமரும் ஆரியனும் வலது புறம் செல்ல, சில்வியாவோ லிஃப்டில் மூன்றாவது மாடி ஏறியிருந்தாள். பின் சுற்றி சுற்றி நான்காவது மாடிக்கு இருவரும் படிக்கட்டு வழியே ஏறி அங்கிருந்து கீழ் உள்ளதைப் பார்க்கையில் சில்வியா மூன்றாவது மாடியின் ஐசியூவில் நிற்பது தெரிந்தது.

இருவரும் வேகவேகமாக ஐசியூவை அடைய, அந்த நேரம் மற்ற செவிலியர்கள் வெளியில் சென்றமலயாலும் அது விசிட்டிங் நேரம் என்பதாலும் இருவருக்கும் வாகாக அமைந்தது. ஐசியூ வாசலில் நின்ற இருவரையும் கண்டு சில்வியா அதிர்ந்தாலும் இருவரும் வந்ததை நினைத்து அவள் மனம் சந்தோஷத்தில் கூத்தாடாமல் இல்லை.

சித்தாராவோ பச்சை நிற உடையணிந்து இடது கையின் மணிக்கட்டு நரம்பில் ஊசி குத்தியும் மூக்கு துவாரங்களில் பிளாஸ்டிக் வயர்கள் செருகப்பட்டு செயற்கை சுவாசத்துடன் படுத்திருந்தாள். சாதாரணமாக செயற்கை சுவாசத்துடன் தூங்குவது போன்று தான் இருந்தது. ஆனாலும் இத்தனை வயர்களுக்கு மத்தியில் ஒடுங்கி படுத்திருப்பவளைக் காண மனம் தாங்கவில்லை.

" என்ன சில்வியா இது… என்ன நடந்துச்சு… இப்படி படுத்திருக்கா… "

" என்னமா ஆச்சு… மான்குட்டி போல துள்ளிட்டு திரிஞ்ச நீ… இன்னைக்கு தாம்பரம் ல இருந்து செங்கல்பட்டு போய் அங்கிருந்து எழும்பூர் போய் அங்கிருந்து திரும்ப தாம்பரம் வந்து திரும்ப ஹாஸ்பிடல் வர்ர… யார பாத்து இப்படி பயப்படுற… வீட விக்குறதுக்கு ' To let ' போர்டு போட்டிருக்குற… "

இருவரும் கேள்வியினால் அவளைத் துளைக்க, அவளது அலைபேசிக்கு சென்ற முறை வந்தது போன்று ஒரு லிங்க் வந்தது. ஓபன் செய்து பார்க்க, இப்பொழுதே 10,000 வியூவ்களைத் தாண்டியிருந்தது.

' ஆ…' வென அலற, அந்த அலறல் ஐசியூவில் இருந்த அத்தனை பேரையும் உலுக்கியது. அனலிட்ட புழுவாய்த் துடித்த மனதைக் கட்டுப்படுத்த வழியின்றி அழுது கரைந்தாள். அங்கிருந்த இருவருக்கும் என்ன செய்ய என்று தெரியவில்லை.

" சில்வியா… வியா மா… அழுகைய நிறுத்து … இப்ப எதுக்கு அழுகுற… " என்று அவளிடம் கேட்க, பதில் வராது தொடர்ந்து அழுகையே வந்தது. சித்தாராவைப் பார்த்து பார்த்து நெஞ்சலடித்து அழுது கொண்டாள்.

அவளது கையிலிருந்த அலைபேசியை எடுத்து இருவரும் பார்க்க, அதிலிருந்த சித்தாராவின் உடையற்ற உடலின் காணொளியில் திடுக்கிட, அதிர்வில் கையில் இருந்த அலைபேசியியும் கீழே விழுந்து நொறுங்கியது. சில நொடிகளில் அவளிடம் இருந்த மற்றொரு அலைபேசியில் அழைப்பினை ஏற்றாள்.

" ஏண்டி… நான் தான் சொன்னேன் ல… போலீஸ்காரன கூட்டு சேக்குறியா… இதுக்கு தண்டனையா இது யூடியூப் ல போட்டுட்டேன்… அழுறியா… அழு இன்னமும் அழு… இன்னமும் அவனுங்க அங்க நின்னால் சித்தாராவுக்கு ஆக்ஸிஜன் பதில் CO2 சுவாசத்துக்கு ஏற்றிடுவேன். ஜாக்கிரதை " . பேசி முடிந்ததும் அலைபேசியில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. கேட்டுக் கொண்டிருந்த சமருக்கு இந்தக் குரல் நன்கு பரிச்சயமானது போன்றே இருந்தது.

" ஆரி... இந்த குரல் நல்லா பரிச்சயமானது போல இல்லையா... "

" ஏன் இருக்காதூ... இது சார் அனிருத் குரல்... சவுண்ட் மிக்ஸ் பண்ணி பேசி குழப்புறாங்கடா ... "

இருவரும் மாற்றி மாற்றி சில விடயங்களை விவாதிக்க, சமரின் அலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. எடுத்து பார்க்க திரையில் அஹானா என்று எழுதப்பட்டு அவளுடைய புகைப்படம் மிளிர, சில்வியா அதைப் பிடுங்கி லவுட் ஸ்பிக்கரில் போட்டாள்.

" ஹலோ மாம்ஸ்... நான் அஹானா பேசுறேன். என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியாது. எனக்கு இன்னமும் 5 நாள் ல 21 வயது ஆகிடும். நானும் கவினும் மேரியேஜ் பண்ணலாம்னு இருக்குறோம்... இவ்வளவு நாள் வெயிட் பண்ணிட்டேன். இத்தனை நாள் என்னைய வளர்த்த கடனுக்கு உங்க கிட்ட சொல்லிட்டேன். அக்காவ பாத்துக்கோங்க... பை "

அதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது. மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியவில்லை. ஒருபுறம் அஹானாவைத் தடுக்க வேண்டும் ; அதே சமயம் மற்றொருபுறம் சித்தாரா மற்றும் சில்வியாவின் சூழ்நிலையை சரிசெய்ய வேண்டும். சமருக்கு கண்ணுக்குத் தெரியாத மற்றொரு பிரச்சனையும் காத்துக் கொண்டு இருக்கிறது .

அதுவரை அழுது கொண்டிருந்த சில்வியா அலைபேசியை பிடுங்கியது என்னவோ எதாவது மிரட்டலா என்ற பயத்தில் தான்... ஆனால் இது சற்று புதிதாய்த் தோன்றியது. புருவம் சுருக்கி யோசனையாய் அவர்களைப் பார்க்க, " இது வேற மா... சஹானாவோட தங்கச்சி அஹானாவோட காதல் பிரச்சனை... இன்னமும் வீட்டுக்குத் தெரியாது " என்று ஆரியன் கூறி முடித்தான்.

" அது இருக்கட்டும்... அஹானா நீங்க சொல்ற ஆள் யாரு... கவினயனா... அல்லது கவின்யாவா ... "

" கவினயனா... அது யாருமா... நாங்க சொல்றது கவின்... அவன் ஒரு திருநம்பி... உனக்கு அஹானாவையே தெரியாதே... புதுசா என்ன சொல்ற... " என்று குழப்பம் முற்றிட கேட்டான் சமர்.

" சமரா நீ முதல் ல சஹானா கிட்ட போ... அஹானாவ டீம் ல ஒரு லீடரை வைத்து தூக்குறேன். அஹானா கூட தானே கவினும் இருப்பான்... பாத்துக்கலாம்... சஹானாக்கு விஷயம் தெரியும் போது இடிஞ்சு போயிடுவா... அப்ப நீ அங்க இருக்குறது தான் நல்லது... " என்று கூறி சமரை அனுப்பி வைத்தான் ஆரியன்.

" அண்ணா... எனக்கு ஒரு உதவி கிடைக்குமா... உங்க கிட்ட அஹானா லவ் பண்ணுற பையன் ஃபோட்டோ தாங்களேன்... " என்று சில்வியா பிடிவாதமாய் கேட்டபடியே தனது அலைபேசியில் எதையோ தேடினாள்.

எதாவது ஒரு தடயம் கிடைக்காதா என்ற எண்ணத்தில் அவனும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினான். போலீஸ் கஸ்டடியில் கவினின் பைக்கை எடுக்க வேண்டி ஆரியனுக்கு சமரன் அனுப்பிய புகைப்படம் அது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவளுக்குத் தலை சுற்றாத குறை தான்.

அவளது கண்களில் அதிர்ச்சியும் பதற்றமும் தெரிய , " என்ன ஆச்சுமா... இவன் தான் கவின்... இவனா உங்கள கடத்தியது... " என்று ஆரியன் கேட்க, " இவன் கவின் இல்ல... கவின்யா ... திருநம்பி இல்ல... பெண் ... "

" ப்ச் ... என்னமா உளருற... அவன் ஒரு திருநம்பி... உலக பார்வைக்கு ஆண்... குழப்பாதடா... "

" அத தான் அண்ணா சொல்றேன்... நீங்க அத ஏத்துக்க மறுக்குறீங்க.... அவன் திருநம்பி இல்ல.. 'அவன்' இல்ல... 'அவள்' ... கவின் இல்ல... கவின்யா... "

" சரி கவின்யா னு சொல்றியே... அந்தப் பையன்... சரி சரி... அந்தப் பொண்ணு எப்படி இப்ப ஆணா வெளிப்படுறான் வியா மா... "

" SEX ASSIGNMENT SURGERY "

கண்கள் கோபத்தில் சிவக்க , அதீத கோபத்தில் கத்தியவள், இரத்த அழுத்தம் குறைந்து மயங்கி சரிந்தாள்.

*_____________________________________________*

தனது அலுவலகத்தில் சில கோப்புகளைச் சரிபார்த்தும் கையெழுத்திட்டுக் கொண்டும் இருந்தாள் சஹானா. அந்தச் சமயம் அவளுக்கென ஒரு போஸ்ட் வந்தது.

" மே ஐ கம் இன் மேம் "
" கம் இன்... எதுக்காக வந்தீங்க மிஸ். அரசி... "
" மேம் உங்களுக்கு பெர்சனலா ஒரு போஸ்ட் வந்திருக்கு மேம் "

" பெர்சனலாவா... பெர்சனல் எல்லாமே என் வீட்டுக்குத் தானே வரும் " என்றவள் புருவ முடிச்சு விழ, குழப்பத்துடன் பிரித்துப் பார்த்தாள்.

அந்தக் கடித்தத்தில் " Divorce " என்று பெரிய கருப்பு நிற எழுத்துக்களில் இருக்க அதிர்ந்தவள் கீழே பார்கக, சமரின் கையொப்பத்துடன் இருந்தது. சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்தாள் சஹானா...

*_____________________________________________*


தொடரும் ...

கதையைப் பற்றிய நிறை குறைகளை தெரிவியுங்கள் மக்களே... தொடர்ந்து இனிமேல் தினமும் கதை வந்துவிடும்... தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙇‍♀ .

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿.
 
Top