• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 1

Messages
31
Reaction score
13
Points
8
புலர்ந்தும் புலராததுமான அந்தக் காலை வேளையிலேயே பெரும் சத்தம் கேட்டது அந்த வீட்டில். இவர்கள் அமளியால் தான் ஆதவனும் விடியலில் வரவில்லையோ... இல்லை இல்லை.. மார்கழி குளிரில் நன்கு உறங்குகிறான் போலும்...

முதலில் அந்த வீட்டில் ஒரு கண்ணாடி உடைந்தது. அடுத்த நொடியே சொல்லி வைத்தது போல ஒரு ஜாடி உடைந்தது. சத்தம் பயங்கரமாக ஆரம்பித்தது.

' பொறுத்தது போதும் பொங்கியெழுந்து விடு ' என்பதுபோல கடுப்பாகி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள் சஹானா. வீட்டின் நடுக்கூடத்தில் வந்து பார்க்க, ஒரு கண்ணாடிச் சில்லையும் காணவில்லை. 'ஒருவேளை எல்லாத்தையும் சுத்தம் பண்ணிட்டாங்களா... அந்த அளவு நல்லவங்க இல்லையே இவங்க ' என்று நினைத்தபடி மீண்டும் சமையலறை விரைய, அவளது கால் தடுக்கி முக்காலியில் இருந்த டேப்ரெக்கார்டர் விழுந்து திரும்ப கண்ணாடி உடையும் சத்தம் வர ஆரம்பித்தது. முதலில் புரியாமல் புருவம் சுருக்கி யோசிக்க, பதில் கண்முன் வந்தது.


கடுப்பானவள், " அனா " என்று கத்த, அடுப்பில் வைத்திருந்த பாகற்காய் கருகும் வாடை வர, அய்யோ என்று தலையிலடித்தபடி சமையலறை ஓடினாள்.
அடுப்பில் இருந்த பாகற்காயை எடுத்து குப்பையில் போட்டாள். குக்கரில் வைத்திருந்த சாதம் குழைந்து மசிந்து போயிந்தது. மீன் வெந்து அடிபிடித்து கரிந்திருந்தது. காலையில் 4.00 மணிக்கே எழுந்து செய்த மொத்த வேலையும் குப்பைக்குப் போகத் தயாராக இருந்தது.

" சமர்... டேய் சமர் பக்கி... வாடா... வந்துத் தொலைடா பக்கிப்பயலே... " என்று பல்லைக் கடித்தபடி கத்த, ஈஈஈஈ ' என்று பல்லைக் காட்டியபடி வந்து நின்றான் சமர் எனும் பெயருக்குச் சொந்தக்காரனான சமர்ஜித்.

அவனது காதைப் பிடித்திழுத்து , " பக்கி... இங்க பாருடா... நீ எழுந்துட்ட

னு காட்ட இதுதான் வழியா... எங்க அந்த வாலு அனா... இதோ பாருடா... காலை ல நாலுமணிக்கே எழுந்து வச்ச மொத்த சாப்பாடும் குப்பைல " என்று கடுப்பில் கத்த, " அச்சோ டோரா... விடு விடு... நேத்து அனா ஃபோன நீ உடைச்சதால அவ இப்படி பண்ணுனா.... நான் வேண்டாம் னு தான் டோரா சொன்னேன். அவதான் கேக்கல... " என்று மீண்டும் கூற முறைத்தபடி நகர்ந்தாள். ஹாலில் வந்து அமர்ந்தவள் , " இன்னும் அரைமணி நேரத்தில நான் ஆஃபிஸ் கிளம்பணும் . அதுக்குள்ள மொத்த சாப்பாடும் ரெடி ஆகணும் " என்றவள், குளிக்கச் சென்றாள்.

அறையின் வாசலில் நின்ற அனா எனும் அஹானா மெல்லமாக வெளியே வந்தாள். " ஹாய் மாம்ஸ்... இப்ப தான் எனக்கு நிம்மதி. நேத்து என் ஐஃபோன் அ எவ்வளவு தைரியம் இருந்தா உடைப்பா... என் ஃப்ரெண்ட் அவ நியாபகமா பிரசென்ட் பண்ணுன ஹிப்ட் அது... " என்று மென்மேலும் கோள் கூறிக்கொண்டே போக , புன்சிரிப்புடன் அவள் கூறுவதைக் கேட்டபடியே சமையலறை சென்றார் சமர்ஜித்.

அவள் பேசிக்கொண்டே இருக்க இவன் , குக்கரில் இருந்த குழைந்த சாதத்தை தனியா எடுத்து வைத்தான். குக்கரை கழுவி, பால் ஊற்றி குழைந்த சாதத்தைப் போட்டு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி குக்கரை மூடி விசில் இட்டான். இன்னும் இரண்டு விசில் வந்ததும் இறக்கி விசில் இழக்கி ஆற வைத்தான். ஆறியதும் தயிர் இட்டு கிளறி பச்சை மிளகு, கொத்தமல்லி போட்டு மீண்டும் கிளறி வைத்தான். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் எடுத்து சாதத்தில் எடுத்து ஊற்றினான் .

பின்னர் மூவரின் சாப்பாடு பாத்திரமும் எடுத்து சாதத்தை எடுத்து அடைத்தான். சிறு கிண்ணியில் பூண்டு ஊறுகாய் வைத்துப் பேக் செய்தவன் மூன்று பிளாஸ்கை எடுத்து வெதுவெதுப்பான சூட்டில் தண்ணீரை அடைத்தான் . அதகளமாய் இருந்த சமையலறையை அழுக்கு நீக்கி துடைத்து சுத்தம் செய்து வைத்தான். பாத்திரம் கழுவி உரிய இடத்தில் வைத்தவன் அஹானாவிடம் திரும்பி, திட்டி முடிஞ்சுதா என்று கேட்டவாறே மூவருக்கும் காலைக்கும் தட்டில் தயிர்சாதம் வைத்து பூண்டு ஊறுகாய் எடுத்து வைத்து டைனிங் டேபிளில் கொண்டு வைத்தான் சமர். அவன் வைத்து முடிக்க சஹானா வர சரியாக இருந்தது.

" சரி அனா மா... போய் குளிச்சு ட்ரெஸ் சேன்ச் பண்ணிட்டு வா. சேர்ந்து சாப்பிடலாம்... இல்லனா இன்னைக்கு உன் ஃபோன நான் உடைப்பேன்... சனா நீ வெளில டிரைவர் அண்ணா நின்னா ஒரு காஃபி போட்டு குடுத்துட்டு வா... நானும் போய் குளிச்சு ட்ரெஸ் சேன்ச் பண்ணிட்டு வர்றேன் " என்றவன் நடையைக் கட்ட, அஹானாவோ, " அட பொண்டாட்டி தாசன் மாம்ஸே... இத்தனை நேரம் நான் திட்டுனது ஒரு பொருட்டே இல்லையா... " என்று தலையிலடித்தபடி குளிக்கச் சென்றாள். குளித்து தலையை ஃபிரீ ஹெயரில் ஏசிமெட்ரிக் கிரீப்பா குர்தா அணிந்து வந்தாள் அஹானா. சஹானாவோ சிவப்பு நிற பிளெய்ன் காட்டன் புடவை அணிந்து தலை முடியை வெறுமனே பின்னி விட்டு கம்பீரமாக நின்றிருந்தாள் .

மணி 6.45 ஐ நெருங்க வெளியே கார் வரும் சத்தம் கேட்க, வெளியே சென்று டிரைவரை வரவேற்றாள் சஹானா.

" வாங்க அண்ணா... எதாவது சாப்டுறீங்களா... அவரு கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு... " என்று
போலீஸ் வண்டியை ஓட்டும் டிரைவர் ரவியை அழைத்தாள் .

" அட இல்லமா ... நான் சாப்ட் வந்துட்டேன். வழக்கம் போல உங்க கையால ஒரு கப்பு காஃபி " என்று கூறி சிரிக்க, புன்னகையோடு சென்று காஃபி இட்டு வந்தாள் சஹானா . அவர் அருந்திக் கொண்டிருக்க, சஹானாவின் வண்டி டிரைவர் வர, அவருக்கும் ஒரு காஃபி கொடுத்த நேரம், சமர் வந்து சேர்ந்தான். சஹானா வீட்டிற்குள் செல்ல , சமர் ரவியிடம் வந்து அமர்ந்தான்.


" அண்ணே நான் கேட்டது என்ன ஆச்சே... " என்று சமர் கேட்க, " கொஞ்சம் குழப்பத்துல இருக்கு தம்பி, சீக்கிரம் பதில் சொல்றேன். சரியான முடிவுக்கு என்னால வர முடியல " என்றிட, " சரி அண்ணா சாப்பிட்டு வர்றேன் " உள்ளே வந்து உண்டு விட்டு, கம்பீரமாக தனது காவலர் உடையை அணிந்து வந்தான்.


வந்தவன் சனாவிடமும் அனாவிடமும் கூறிவிட்டு, வண்டியில் ஏறி கிளம்பினான். இங்கு சஹானா, " அனா... இன்னைக்கு நான் இப்போவே கிளம்புறேன். பட் நைட் நேரமாவே வர்றேன். உன்னோட ஃப்ரெண்ட் கூட போயிக்க... ஸ்கூட்டி எடுக்காத உனக்கு லைசன்ஸ் இல்ல... கட்டாயம் பவர் யூஸ் பண்ணி வெளில வரலாம் னு நினைக்காத " என்றவள், பரபரவென உண்டு மீட்டிங்கிற்குக் கிளம்பினாள்.
இவர்களின் அவசரத்தைப் பார்த்த அனா தன்னையே நொந்தவள் தயிர் சாதத்தை எடுத்து குப்பையில் கொட்டி விட்டு தனதறையில் நுழைந்து கொண்டாள்.


மணி ஒன்பது ஆகும் வேளையில் தனது அலைபேசியில் ' கவின் ' என்ற எண்ணை அழைத்து, " கவி... பார்க் ல வந்துடு... அவசரம் மீட்டிங் னு இரண்டு பக்கிங்களும் போயிட்டாங்க ... வந்து சேரு... " என்றவள் தனது சாப்பாட்டை எடுக்காமல் பேகை எடுத்துக் கொண்டு அருகில் இருந்ந பார்கிற்கு வந்தாள்.


பார்க்கில் அமர்ந்திருந்த அஹானாவை வந்தவன் அணைத்து விலக்கினான். அந்த அணைப்பிலேயே அவளது உடல் பாகங்களை தீண்டியிருந்தான். " டேய் என்ன... ரொம்ப தான் பண்ணுற... கேசூயல் அ ஒரு ஹக் பண்ணுனா லிமிட் மீறுறது போல இருக்கு... பிச்சுருவேன் " என்க, " அச்சோ செல்லம் இன்னைக்கு உன் டிரெஸ் செம்ம டா... சாரி... " என்று அவளது மூக்கை நிமிட்ட , சிரித்துக் கொண்டாள் .

" ஓகே ஒரு நல்ல ரெஸ்டாரன்ட் போ... காலைலயே கர்ட் ரைஸ் தந்து கடுப்படிக்கிறாங்க ... தூக்கி குப்பைல போட்டு வந்தேன் " என்றபடி கவினின் யமஹா வண்டியில் ஏற, வண்டி அருகில் உள்ள ரெஸ்டாரன்ட் வந்தது. அங்கு நன்கு உண்டவள் அவனுடனே காலேஜிற்குக் கிளம்பினாள். இவற்றை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரவி, சமர்ஜித்திற்கு தகவலை காணொளியாக அனுப்பி வைத்தான்...

*!*!*!*!*

காலை எட்டு மணியளவில் பீச் ரோடு வழியாக நுழைந்து கார் சென்னை ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது . கண்களில் இருந்த கூலரை எடுத்தபடி , கோப்புகளை கையில் எடுத்துக் கொண்டு, கம்பீரமாக வண்டியிலிருந்து இறங்கினாள் சஹானா .

அவளைக் கண்டதும் ஒரு கூட்ட மக்கள் இன்றாவது தனது பிரச்சனைக்கு விடிவு வராதா என்ற ஏக்கத்தோடு அவளை வட்டமிட முன்னேற, காவலர்கள் அவர்களை தடுக்க, தனியே ஒரு மேஜையின் முன்பு வந்து அமர்ந்தாள் சஹானா.

அங்கிருந்த மைக்கைக் கையிலெடுத்து , " கூச்சல் போடாதீங்க ... ஆறடி விட்டு நில்லுங்க... மாஸ்க் போடாம நின்னா போலீஸ் ஃபைன் போடுவாங்க... டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க... எல்லாரோட விண்ணப்பமும் வாங்குவோம்.. பிளீஸ் ட்ரஸ் மீ... " என்று பேச, இன்னொரு பக்கம் மக்கள் கூட்டத்தைச் சரி செய்தான் சமர்ஜித்.


தொடரும்...

கதையைப் படித்து விட்டு உங்கள் ஆதரவைத் தர பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

- என்றும் அன்புடன்
சில்வியா மனோகரன் 🌿.
 
New member
Messages
25
Reaction score
21
Points
3
😍😍😍😍 சில்விமா ஜூப்பரா இருக்கு கதை 😍கலெக்டர்... 😍காவலர்... 😍திருட்டு பூனை 🤭 செம ஸ்டார்டிங் சூப்பரா இருக்குடா.... 💞💞💞
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சஹானா, அஹானா பெயர் சூப்பர் டா 😍😍😍😍😍
 
Top