• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 9

Member
Messages
55
Reaction score
2
Points
8
வெளியில் மழை பெய்து கொண்டு மண்ணை நனைத்து கொன்டு இருக்க சந்தீப் தனது தொல்பையை எடுத்து கொண்டு அந்த இடத்தை பூட்டி விட்டு சுற்றும் முற்றும். பார்த்து விட்டு அங்கே இருந்து நடந்து செல்லும் பொழுதே தன் கையில் உள்ள பூட்டின் சாவியை பக்கத்தில் உள்ள ஒரு கழிவுநீர் சாக்கடையில் போட்டு விட்டு செல்கிறான்.
அதே சமயம் இருசக்கர வாகனத்தில் கயல் இருக்கும் திசையை நோக்கி சென்று கொன்டு இருக்கிறான் ராஜேஷ்.
திலீப் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் ராஜ் வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அடிக்கிறார்கள்.
"அவனை எப்படியாச்சும் முழு உண்மையையும் சொல்ல வைக்கணும்னு..."என ரங்கா கூற,
உள்ளே இருந்து வந்த நபர்,
"யார் நீங்க..."என கேட்க,
"நான் திலீப்...போலீஸ்ல இருந்து வந்து இருக்கேன்...
ராஜ் கிட்ட கொஞ்ச நேரம் பேசணும்..."
"சரி...உள்ளே வாங்க...."என முன்னால் அந்த நபர் நடக்க, பின்னால் திலீப் மற்றும் மற்ற அதிகாரிகள் நடந்து செல்கிறார்கள்.
மற்றொரு பாழடைந்த கட்டிடத்தை அடைந்த சந்தீப் அதன் உள்ளே சென்று ஹீலியம் வாயு நிரப்பிய சிலிண்டர்களை எடுத்து கொண்டு சில மின் கம்பிகள் கொண்டு ஃபோன் மற்றும் வெடிகுண்டு இணைக்கிறான்.
உள்ளே வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு இருந்த அதிகாரிகளுக்கு அந்த வீட்டு கதவை திறந்த நபர் தேநீர் கொடுக்க,
"என்னை பார்க்க யாரும் வரமாட்டாங்க...அதுவும் என் பொண்டாட்டி இறந்து போன பின்னாடி சுத்தமா யாரும் வர்றது இல்ல... ஆனால் எனக்கு தெரியும் என்னைக்காச்சும் ஒரு நாள் உங்களை மாதிரி ஆட்கள் என்னை தேடி வருவீங்கன்னு..."என அந்த நபர் ராஜ் கூற,
"எனக்கு இந்த athena program பத்தி தெரியணும்..."என திலீப் கேட்டு கொண்டே தன் கையில் இருந்த அவரது பழைய விசிட்டிங் கார்டை காட்ட,
"நீங்க இந்த மாநிலத்தில் இருக்க அனாதை இல்லத்தில் இருக்க குழந்தைகளை டெஸ்ட் வச்சு தேர்ந்தெடுத்து அவர்களை கூட்டிட்டு போய் இருக்கீங்க...அவங்களோட அடையாளம் எல்லாத்தையும் அழிச்சு இருக்கீங்க...சரியா...."என குமார் கேட்க,
தன் கண் கண்ணாடியை சரி செய்து கொண்டே,"உங்களுக்கு நவீன் தெரியுமா...?"
"தெரியும்... செக்ரேடரியா இருந்தாரு... மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த் அண்ட் வெல்ஃபேர்ல...மூணு வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டார்..."என ரங்கா கூற,
"அவர்தான் இப்போ நீங்க கேட்டதை ஆரம்பிச்சு வச்சாரு...இப்போ நீங்க கேட்க போவதால் உங்க உயிர் போக வாய்ப்பு இருக்கு...."என ராஜ் கூற,
"சொல்லுங்க..."என திலீப் கூறுகிறார்.
கையில் ஒரு காகிதத்தை எடுத்து கொண்டு அவர் சொல்வதை எழுத காத்திருக்கிறார் கோகுல்.
"உங்களுக்கு savantism அப்படின்னா என்னன்னு தெரியுமா..."என ராஜ் கேட்க,
"அது ஒரு கண்டிசன் நம்மளோட பிரைன் அதிகமா செயல்படும்..."என திலீப் கூற,
"Savantism அப்படின்னா மூளை அதிகமாக செயல்படுவதால் நியாபக சக்தி அதிகமா இருக்கும்...மென்டல் கல்குலேஷன் அதிகமா இருக்கும்...தான் பாத்து கத்துக்கற எல்லாமே நல்லா வர்ற அளவுக்கு ஒரு அற்புதமான வரம்... சில பேர்க்கு மட்டும் இயற்கையா கிடைக்கும் பரிசு....அதை மனிதனால் உருவாக்க முடிந்தால் என்ன ஆகும்...மனித மூளையின் எல்லையை தாண்டினால் என்ன ஆகும்... அதுதான் athena program குறிக்கோள்....5 வயசுகும் கீழ இருக்க 26 குழந்தைகளை நாங்க சேர்ந்து கொண்டு வந்து அவர்களை ஒரு டெஸ்ட் சப்ஜெக்ட் மாதிரி உபயோகப்படுத்தினோம்...." என ராஜ் கூற,
"என்னது டெஸ்ட் சப்ஜெக்ட்டா..."என கோபத்துடன் ரங்கா கேட்க,
"நாங்க அப்போ ஒரு மருந்து ஒன்னை கண்டுபிடிச்சி...அதை யாருக்கும் தெரியாம உற்பத்தி செஞ்சோம்....90 கால கட்டங்களில் மூளையின் செயல்திறன் பத்தி ஆராய்ச்சி செய்த ஒரு மெடிக்கல் கம்பனி எங்களுக்கு அந்த மருந்தை தயார் செய்து கொடுத்தாங்க...அப்போ அவங்கதான் rising peace academy ஆரம்பிச்சு அதுல இருக்க குழந்தைகளுக்கு அந்த மருந்தை கொடுத்தாங்க...அதுதான் athena program... ஆமா எனக்கு இன்னும் நினைவு இருக்கு...அந்த இடத்துக்கு பேர் செட்டில்மென்ட் 12 ன்னு வச்சோம்...அந்த காலகட்டத்தில் இருந்த நிறைய திறைமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிஸினஸ் நபர்கள் அதுக்கு நிறைய பணம் கொடுத்தாங்க...ஆனால் அந்த மருந்து அவங்க 5 வயசு வரைக்கும் நல்லா வேலை செஞ்சது...அஞ்சு வயசை தாண்டினதும் தன்னொட வேலையை காட்டியது...அங்க இருந்த குழந்தைகளால் அந்த மருந்தோட வீரியத்தை தாங்கிக்க முடியலை...அங்க இருந்த குழந்தைகள் ஒவ்வொருவராக தன்னோட உடலாலும் மனதாலும் காயப்பட்டு ஒவ்வொருவரா இறந்து போனாங்க... கடைசில அங்க இருந்த நிறைய பேர் இறந்து போனாங்க..."
"என்ன...சொல்றே...நீயெல்லாம் மனுஷந்தானா..."என ரங்கா கோபப்பட,
"கடைசில....athena program ஒரு unsuccessful புராஜக்ட் ஆனது..ஏழு வருசத்துக்கு முன்னாடி இதை பத்தி கேள்விப்பட்ட US கவர்ன்மென்ட் உள்ளே புகுந்து அதை மூட வச்சுட்டாங்க.."என ராஜ் கூற,
"இதுக்கு தண்டனை என்ன தெரியுமா.."என கோகுல் கேட்க,
"தெரியும்...எனக்கு ரொம்ப வயசு ஆயிருச்சு... என்னோட உடம்பும் இப்போ வீக் ஆயிருச்சு... உண்மையை சொன்னால் நான் இப்போ நாட்களை எண்ணி கொண்டு இருக்கிறேன்...எனக்கு ஒருவேளை தண்டனை கிடைச்சாலும் கொஞ்ச நாள் மட்டும் உயிரோட இருப்பேன்..."என ராஜ் கூற,
"அதுக்கு பின்னாடி அந்த குழந்தைகளுக்கு என்னாச்சு..."என திலீப் கேட்க,
"கடைசில அந்த ஆராய்ச்சியின் முடிவில் ஒரே ஒரு குழந்தை மட்டும்தான் உயிரோட இருந்தது...அமெரிக்கன் ஏஜென்சி அந்த குழந்தையை கஸ்டடில எடுத்து கூட்டிட்டு போனாங்க..."என ராஜ் கூற,
"சரி.."என திலீப் திரும்ப,
"அப்புறம்..."என ராஜ் கூற,
"சொல்லு..."என திலீப் கேட்கிறான்.
"அந்த செட்டில்மென்ட் 12 இடத்தில் இருந்து ரெண்டு குழந்தைகள் தப்பிச்சு போனாங்க..."என ராஜ் கூற,
அதிகாரிகள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு,"அவர்கள் பெயர் என்ன..."என திலீப் கேட்கிறார்.
"அவங்க வெறும் டெஸ்ட் சப்ஜெஸ்ட்ஸ் அவங்களுக்கு பெயர் இல்லை..
எல்லாரையும் வெறும் எண்கள் வைத்து கூப்பிடுவோம்...ஒரு குழந்தை பெயர் 3 இன்னொரு குழந்தை பெயர் 12....மருந்து கொடுத்ததால் அவங்க மூளை அதிவேகத்தில் செயல்பட்டுச்சு....அவங்க அந்த இடத்தில நெருப்பு மூட்டி செக்யூரிட்டி சிஸ்டம் எல்லாத்தையும் திசை திருப்பி தப்பிசிட்டாங்க....சொல்ல மறந்துட்டேன் கடைசில உயிரோட இருந்த அந்த குழைந்தை நம்பர் 5..."என ராஜ் கூற,
"இதெல்லாம் எப்போ நடந்தது..."என திலீப் கேட்க,
"எட்டு வருசத்துக்கு முன்னாடி..அவங்க இப்போ உயிரோட இருந்தா இந்நேரம் ஸ்கூல் படிக்கர டீனேஜ் பசங்களா இருப்பாங்க.... இப்போதும் அவங்க உயிரோட இருந்தால் அவங்களும் தன்னோட வாழ்நாளை எண்ணிட்டு இருப்பாங்க...அந்த மருந்து வளர வளர உயிரை கொல்லும்..."என ராஜ் கூறுகிறார்.

"உங்களுக்கு மனசாட்சி இல்லையா...குழந்தைகளை ஒரு எலி மாதிரி யுஸ் பண்ணி இருக்கே.... நீ மனுசனே இல்லை.... சந்தோசமா இருக்க வேண்டிய வயசுல நீங்க அவங்களுக்கு நரகத்தை காட்டி இருக்கீங்க...உங்களால்தான் இப்போ அந்த சின்ன பசங்க தீவிரவாதி ஆகிட்டாங்க..." என ரங்கா கோவத்தில் ராஜை அடிக்க செல்ல,
மற்ற அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள்.
"நான் மனுஷன்னு சொல்லிகிட்டே ரொம்ப நாள் ஆச்சு...இது நான் பண்ணது இல்லை...இது எல்லாத்துக்கும் மேலே ஒரு in-charge இருந்தார்..."என ராஜ் கூற,
"யார் அது..."என திலீப் கேட்க,
"Dr. தியாகு..."என ராஜ் கூற, அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்கிறார் திலீப்.
அதே சமயம், ராஜேஷ் கிரேஸ் சொன்ன இடத்திற்கு வருகிறான். கிரேஸ் ராஜேஷ் வருவதை சிசிடிவி மூலம் கண்காணித்து கொண்டு இருக்கிறாள்.
"மேடம்...நம்ம உள்ள போய் அவனை புடிசிடலாமா..."என எரிக் கேட்க,
"இப்போ வேண்டாம்....இது இப்போதுதான் ஆரம்பம் ஆகுது...."என கிரேஸ் கூறுகிறாள்.
கிரேஸ் சொன்ன ராட்டினத்தின் உள்ளே சென்ற ராஜேஷ் கயலை பார்க்க கயலின் உடல் முழுவதும் வெடிகுண்டு கட்டப்பட்டு இருக்கிறது. அவளின் கை பின்னால் கட்டப்பட்டு விலங்கு போடப்பட்டு இருக்கிறது.
"கயல்.... பொறுமையா இரு...."என கூறி கொண்டே அவள் அருகே செல்கிறான் ராஜேஷ்.
அவன் அருகே செல்ல அந்த வெடிகுண்டு செயல்பட்டு திரையின் நேரம் ஓட ஆரம்பிக்கிறது. 9:59 என காட்டுகிறது.
"5....இதெல்லாம் உனக்கு விளையாட்டா போச்சா என்ன..."என மனதினுள் நினைத்து கொண்டே , அவளை சுற்றி வந்து பார்த்து கொண்டே அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க முயற்சிக்கிறான்.
"இது சரியா போய்டும்...நான் பாத்துக்கிறேன்..."என ராஜேஷ் கூறி கொண்டே தன் பையில் உள்ள பொருட்கள் எடுத்து அவள் அருகே சென்று அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்க முயற்சிக்கிறான்.
அதை திரையில் பார்த்து கொண்டே கிரேஸ், தன் தலையை பிடித்து கொண்டு வழியில் பார்க்கிறாள்.
ஒரு வழியாக ஒரு வெடிகுண்டின் இணைப்பை துண்டித்துவிட்டு "ஒன்னு முடிஞ்சது..."என கூறிவிட்டு நிமிர்ந்து பார்க்க திரை 7:54 என காட்டியது.
"Professionals கூட நீ செட் பண்ணி இருக்க bombs diffuse பண்ண கஷ்டப்படுவாங்க...அதிகமான bombs வச்சி இருக்கே... இதுனால பெரிய பிரச்சினைதான் வர போகுது....அவன் செத்துட்டா புளூட்டோனியம் எங்க இருக்குன்னு தெரியாமா போய்டும்....எதுவா இருந்தாலும் பார்த்து பண்ணு...."என எரிக் கூற,
"ஷட் அப்...."என கூறி கொண்டே தலையை பிடித்து கொண்டு திரையை பார்க்கிறாள்.
ஒவ்வொரு வெடிகுண்டாக இணைப்பை அகற்றி மெதுவாக ராஜேஷ் எடுத்து கொண்டு இருக்கிறான். திறையில் 5 : 23 என காட்டியது.
"என்னை மன்னித்துவிடு...நான் தேவை இல்லாமல் பிரிந்து இவர்களிடம் மாட்டி கொண்டேன்....."என கயல் கூற,
எழுந்து கயலின் கன்னங்களை தனது கைகளால் பிடித்து,"நீ ஒன்னும் மன்னிப்பு கேட்க தேவை இல்லை...இது உன்னோட தப்பு இல்லை...."என கூறிவிட்டு மீண்டும் வெடிகுண்டுகளை அகற்றுகிறான் ராஜேஷ்.
கயல் அழுது கொண்டே பார்க்க,"நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும்...3 சொன்னது சரிதான்...நான் உன்னை ஏர்போர்ட்டிற்கு கூட்டி வராமல் இருந்தால் இது எதுவும் நடந்து இருக்காது...நான் அன்னைக்கு பயந்து இருக்கமாட்டேன்...இல்லை...நான் முன்னாடி உன்னை பார்க்காமல் இருந்திருந்தால்....பேசாமல் இருந்திருந்தால்....எனக்கு தெரியும் எல்லாம் ஒரு நாள் இந்த நிலைக்கு வரும்னு...."என கூறி கொண்டே ஒவ்வொரு வெடிகுண்டாக இணைப்பை துண்டிக்கிறான்.
"ஆனால் ...நான்... ஐ...."என ராஜேஷ் கூறி கொண்டே திரும்பி வானத்தை பார்க்க மழை நின்று நிலா தனது வெளிச்சத்தை காட்டியது.
"தேங்க்ஸ்.... ஐ ஆம் ஓகே....இங்க இருந்து ஓடி தப்பித்துவிடு...."என கயல் கூற,
"இல்லை...என்னால் முடியாது..."என ராஜேஷ் கூற,
"3 உனக்காக காத்திட்டு இருப்பான்...எனக்கு தெரியும்....அவனுக்கு நீ முக்கியம்ன்னு... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்ய என்னமோ இருக்குன்னு எனக்கு தெரியும்... அதுக்காகத்தான் நீங்க இங்க வந்து இருக்கீங்க...."என கயல் கூற,
கண்களில் கண்ணீர் வடிய வெடிகுண்டுகளை செயல் இழக்க முயற்சிக்கிறான் ராஜேஷ். திரை 2:01 என காட்ட, கயலின் பக்கத்தில் உள்ள அலைபேசி ஒலியை எழுப்புகிறது.
ராஜேஷ் பதிலளிக்க," எப்படி இருக்கு.... ராட்டின ஆட்டம்..."என கிரேஸ் கேட்க,
"Five..."என ராஜேஷ் கூற,
"டீல் போடுவோமா...நீங்க திருடுன புளூட்டோனியம் ஆயுதம் எங்க...அது எங்க இருக்குன்னு சொன்னால் இப்போவே இவ மேல இருக்க வெடிகுண்டு எல்லாத்தையும் diffuse பண்ணிற்றேன்... நீ ஏற்கனவே அவனை விட்டுட்டு வந்து அவனுக்கு துரோகம் பண்ணிட்டே..இப்போ உன் கண்ணு முன்னாடியே இன்னொருத்தி சாகரது பார்க்க போறியா....."என கிரேஸ் கூற, திரையில் 00:18 என காட்டியது.
"Wow... வாட் அ ரொமான்டிக் நைட்... சொல்லமாட்டீல்ல... குட் நைட்..."என கூறி தனது அழைப்பை துண்டிக்க அவள் விரல் செல்ல திரை 00:05 என காட்டியது.
"அது ஸ்கூல்ல இருக்கு...3rd desk கீழ...."என கூற நேரம் 0:02 என காட்டி நிற்கிறது.
"வெல் டன்..."என கிரேஸ் கூற போலீஸ் வாகனங்கள் கிளம்புகின்றன.
அதே சமயம் பள்ளியில் சந்தீப் 3வது மேசையின் அடியில் உள்ள ஒரு பையை எடுக்கிறான். பள்ளியின் வெளியே போலீஸ் வாகனங்கள் வருவதை கண்ட சந்தீப்,
"12" என மனதினுள் நினைத்து கொண்டே அங்கே இருந்து தப்பித்து பள்ளியின் சுவர் ஏறி குதிக்கிறான்.
"டர்ஜெட் வாஸ் எஸ்கேப்பிடு..."என போலீஸ் அதிகாரிகள் கிரேஸிடம் கூற,
கீழே குதித்த சந்தீப் போலீஸ் கண்களில் அகபட,"Target spotted.."என அதிகாரிகள் கூற,
"அவனை பிடிங்க..."என கூறி கொண்டே மயங்கி விழுகிறாள் கிரேஸ்.

போலீஸ் அதிகாரிகள் சந்தீப்பை தன் கையில் உள்ள துப்பாக்கியால் சுட அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடுகிறான் சந்தீப்.
(தொடரும்....)


1000189072.jpg
1000189070.jpg
1000189071.jpg
1000189100.jpg
பின் குறிப்பு : Savantism அல்லது Savant syndrome பற்றி மேலும் அறிய இங்கே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
 
Top