Member
- Messages
- 64
- Reaction score
- 2
- Points
- 8
"தமிழ்நாடு போலீஸ் ஃபேஸ்புக் பக்கம் sphinx ஹேக் செய்யபட்டு போலீஸ் தகவல்கள் போலீஸ் ரகசியங்கள் மேலும் போலீஸ் கேஸ் பைல்ஸ் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் பொது மக்களிடையே போலீஸ் மீதான நம்பிக்கை கேள்வி குறி ஆகி உள்ளது..." என செய்தி வாசிப்பாளர் செய்தியை ஒலிபரப்பி கொண்டுள்ளார்.
அதே சமயம் சந்தீப் இருந்த வீட்டின் அழைப்பு மணி அடிக்க இந்த நேரத்தில் ராஜேஷ்தான் என மனதில் எண்ணி கொண்டே கதவை திறக்க எதிரில் ராஜேஷ் மற்றும் கயல் நின்று கொண்டு இருந்தனர்.
"டேய்....உனக்கு அறிவு ஏதாச்சும் இருக்கா...நம்ம என்ன நிலைமைல இருக்கோம்...இந்த நேரம் இவளை கூட்டிட்டு வந்து இருக்கே..." என சந்தீப் கேட்க,
"இல்ல... இவளுக்கு போக இடமில்லை... அதுனால கூட்டிட்டு வந்தேன்..."என ராஜேஷ் கூறுகிறான்.
"நம்ம மிஷன்க்கு இவ தேவை இல்லை...இவளை நீ பேசாம எங்க இருந்து கூட்டிட்டு வந்தியோ அங்கேயே கொன்டு போய் விட்டுவிடு..."என சந்தீப் கூறி கொண்டு இருக்க, கண்கள் இருள் சூழ மயக்கத்தில் கீழே விழுகிறாள் கயல்.
"அருமைடா....இதுல இது வேறயா..."என சலித்து கொண்டே, வேறு வழியின்றி கயலை தூக்கி கொண்டு அங்கு உள்ள கட்டிலில் படுக்க வைத்து அவளுக்கு உடல்நிலை சரிில்லாமல் இருப்பதை அறிந்து கொண்டு இருவரும் அதற்கான மருந்துகளை கொடுக்கிறார்கள்.
மறுநாள் காலை...சூரியன் நிலவை விரட்டிவிட்டு தனது வெளிச்சத்தை கொடுத்து கொண்டு இருந்தது. கயல் இரவு முழுவதும் நன்றாக உறங்கி விட்டு கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்து கொன்டு இருக்க, அந்த அறையின் வெளியே ராஜேஷ் மற்றும் சந்தீப் பேசி கொன்டு இருக்கிறார்கள்.
"நீ அந்த பொண்ணை கூட்டி கொன்டு வந்து இருக்க கூடாது... அவளுக்கு நம்ம இடத்தை வேற காட்டி கொடுத்து விட்டே...."என சந்தீப் கூறி கொண்டிருக்க,
"அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல.... அவளே வீட்டை விட்டு வந்திருக்கா...அவளுக்கு எங்க போறதுன்னு தெரியல...அது மட்டுமில்லாம நம்ம முகம் அவளுக்கு ஏற்கனவே தெரியும்...அவள் போலீஸுக்கு போகனும்ன்னு நினைச்சுருந்தா எப்போவோ போயிருப்பா...ஆனால் அவ இன்னும் போகல... அத நம்பித்தான் நான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்..."என ராஜேஷ் கூற, கயலின் அறையினுள் இருந்த மொபைல் ஃபோன்கள் எல்லாமே ஒன்றாக அழைப்பு வருகிறது.
சப்தம் கேட்டு வெளியே இருந்த ராஜேஷும் சந்தீப்பும் உள்ளே ஓடி வருகிறார்கள். கயல் மேஜை மேல் உள்ள ஒரு ஃபோன் தொட்டு பார்க்க அந்த அறையினுள் உள்ள அனைத்து மொபைல் ஃபோனிலும் அழைப்பு வருகிறது.
"எம்மா....கொஞ்ச நேரம் கைய வச்சிட்டு சும்மா இருக்கமாட்டியா..."என சந்தீப் கூறி கொண்டே உள்ளே வந்து அந்த ஃபோன்கள் எல்லாம் எடுத்து ஏதோ திரையில் தேய்க்க அனைத்து சப்தமும் நின்று விடுகிறது.
"இதெல்லாம் சாதாரண ஃபோனஸ் இல்ல...எல்லாமே fire extinguisher கூட connect ஆகி இருக்க bombs" என கூறி கொண்டே அவள் காதருகே வந்து "boom" என வெடிகுண்டு வெடிப்பது போன்று சப்தமாக கத்த, அந்த சப்தம் கேட்டு கயல் பயந்து போய் விழிப்பதை பார்த்து சிரிக்கிறான் ராஜேஷ்.
"இதெல்லாம் தெரியாத்தனமாக on பண்ணுனா சுத்தி இருக்க 500 மீட்டர் எல்லாமே காலி...இது தெரியாம இதெல்லாம் டச் பண்ணாத... ஏதோ தெரியாம பண்ணிட்டே...இப்படியே பண்ணிட்டு நீ இருந்தா நம்ம வெடிச்சு சாக வேண்டியதுதான்..."என சந்தீப் கூற,
"உனக்குத்தான் உடம்புக்கு முடியலேல்ல....போய் தூங்கற வேலையை பாரும்மா..."என கூறி கொண்டே நடக்கிறான் ராஜேஷ்.
அதே சமயம் சென்னை விமான நிலையம்... சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு விமானத்தில் இருந்து இரண்டு நபர்கள் இறங்கி வருகிறார்கள். ஒரு பெண் மற்றும் ஒரு வயதான ஆண் இரண்டு பேரும் நேராக நடந்து வந்து எதிரில் நின்று கொண்டு இருந்த மேல் அதிகாரி விக்னேஷை பார்த்து,
"ஹாய் ... ஐ அம் கிரேஸ்... திஸ் இஸ் எரிக்... நாங்க அமெரிக்கன் எம்பசில இருந்து வந்து இருக்கோம்...உங்க ஹையர் ஆபீசர்ஸ் எங்களை இங்க FBI agents ஆக அனுப்பி வச்சு இருக்காங்க....உங்க கூட கோ ஆபரட் பண்ணி வேலை பண்றோம்...nice to meet you..."என கை அந்த கிரேஸ் கை நீட்ட, எதிரில் இருந்த விக்னேஷ் அவள் கைகளை பற்றி " வெல்கம் "என கூறுகிறார்.
சென்னை தலைமையகம்....முன் நடந்த தகவல் கசிவு பற்றி போலீஸ் அதிகாரிகள் அனைவரும் மீட்டிங்கில் பேசி கொண்டு இருந்தார்கள்.
"இது வரைக்கும் நம்ம கேஸ் பைல்ஸ் எல்லாம் போயிருச்சு... அது மட்டுமில்லாம இதுக்கு முன்னாடி நடந்த விஷயங்கள்.... பழைய கேஸ் பைல்ஸ் எல்லாம் வெளியாகி அவங்க கிட்ட இருக்கு... எல்லாமே VON hastag கூட லீக் ஆயிறுக்கு.....அதை வச்சு என்ன பண்ண போறாங்கன்னு தெரியல... இதனால் பப்ளிக் கிட்ட நம்ம பேர் ரொம்ப டேமேஜ் ஆயிருக்கு... எவ்ளோ சீக்கிரம் இந்த கேஸ் முடிக்கிறோமோ அவ்ளோ சீக்கிரம் நல்லது... எல்லாரும் உங்க முழு effort குடுங்க..." என கூறி மேல் அதிகாரி விக்னேஷ் அந்த மீட்டிங்கை முடிக்கிறார்.
அதே சமயம் ராஜேஷ் மற்றும் சந்தீப் மாறு வேடத்தில் இரயிலில் பணி புரியும் வேலையாட்கள் போல இரயிலின் உள்ளே சென்று அங்கு உள்ள fire extinguisher எடுத்து விட்டு அவர்கள் கொண்டு வந்த bomb fire extinguisher மாற்றி வைக்கிறார்கள்.
இருவரும் இரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு சென்று பார்க்க வீடு முழுவதும் ஒரே புகை மூட்டமாக இருக்கிறது.
"போச்சுடா....இவ கை சும்மா வச்சு இருக்காம ஏதோ தொட்டு ஏதோ பண்ணிட்டா..."என தலையில் கை வைத்த படியே சந்தீப் உள்ளே நுழைய, உள்ளே கயல் வாணலியை அடுப்பில் வைத்து கொண்டு சமைத்து கொண்டு இருக்கிறாள்.
"வந்துட்டீங்க....வாங்க...வாங்க...
இதெல்லாம் உங்களுக்காகதான்.... சாப்பிடுங்க..." என கூறி கொண்டே சரிந்து போன அந்த உணவை மூன்று தட்டில் போட்டு மேசை மீது வைக்கிறாள்.
"இந்தக் கருமத்தை எல்லாம் என்னால திங்க முடியாது... கண்றாவிடா...உன்னை இந்த வீட்டிற்கு கூட்டி வங்தான்ல...அவனுக்கு குடு அவன் திம்பான்..." என தன் தட்டை ராஜேஷிடம் சந்தீப் குடுக்க,
ராஜேஷ் வேறு வழியின்றி ஒரு வாய் சாப்பிட,
"நல்லாருக்கா..."என கயல் கேட்கிறாள்.
"நீ சாப்பியாம்மா..."என ராஜேஷ் கேட்க,
"இல்லை இனிமேல்தான்..."என கயல் கூற,
"இந்தாம்மா....இப்போ சாப்பிடு...."என ஒரு கரண்டி உணவை கயலிற்கு கொடுக்க, கயல் அதை உண்டுவிட்டு துப்புகிறாள்.
"உனக்குத்தான் முடியல சொண்ணெல்ல....உன்னை யார் இதெல்லாம் பண்ண சொன்னா... நீ போய் ரெஸ்ட் எடு.... இப்படி சமைச்சுதான் எங்க கூட இருக்கணும்னு இல்லை...ஒழுங்காக போய் தூங்கு...." என ராஜேஷும் சந்தீப்பும் எழுந்து சென்று வெளியே வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
"சின்ன வயசுல நம்ம அகாடெமில நம்மளும் சமைச்சு சாப்பிட்டோம்... நல்லாதான் இருந்தது அது..."என ராஜேஷ் கூற,
"ஆமா...ஆனால் அது நமக்கு ஒரு டாஸ்க்தான்....சரி அதெல்லாம் விடு...நம்ம வீடியோ ரிலீஸ் பண்ண டைம் ஆச்சு....வா ரிலீஸ் பண்ணிறுவோம்" என சந்தீப் கூறுகிறான்.
சென்னை தலைமையகம்...."சார் அவங்க வீடியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க...இதோ பாருங்க..."என ரங்கா அங்கு உள்ள திலீப் மற்றும் மற்ற அதிகாரிகளிடம் பெரிய திரையில் காட்டுகிறார்.
"ஹலோ மக்களே....நான்தான் sphinx red நான்தான் sphinx blue... நாங்க இந்த இடத்தில இந்த city லையே ஒரு வெடிகுண்டு வச்சிருக்கோம்... மறக்காம அதை நீங்க diffuse பண்ணனும்...அதுவும் எட்டு மணிக்குள்ள பண்ணனும்...அப்படி இல்லாட்டி பெரிய வெடி விபத்துதான் நடக்கும்...அந்த bomb கான விடுகதையும் சேர்த்து சொல்லிடரோம்...ஒரு தேவதையை 5889 fez ஓடவிட்டு கொன்னிருக்காங்க...இதை நீங்க கண்டுபிடிச்சிட்டா நீங்க இந்த வெடிகுண்டை diffuse பண்ணிடலாம்....சரி....ஓகே...bye...." என அந்த வீடியோ முடிவடைகிறது.
இதை பார்த்து கொஞ்சம் யோசித்துவிட்டு திலீப் நேராக சென்று ரங்காவிடம் , "அண்ணே....FEZ 5889 இந்த நம்பர்ல நம்ம போலீஸ்ல ஏதாச்சும் கேஸ் ஃபைல் ஆயிருக்கா..." என கேட்க,
"இருங்க சார்...நான் போய் தேடி பார்த்து இருந்தால் எடுத்துட்டு வர்றேன்..." என கூறி கொண்டு சென்ற ரங்கா...போலீஸ் கேஸ் பைல்ஸ் இருக்கும் அறையினுள் நுழைந்து அந்த கேஸ் ஃபைல் தேடுகிறார்.
சிறிது நேரம் கழித்து வந்த ரங்கா, "சார்... நீங்க சொன்ன மாதிரி ஒரு கேஸ் ஃபைல் இருக்கு...இந்தாங்க சார்...ஏதோ ஒரு ஸ்கூல்ல நாலு ஸ்டூடண்ட் நேரமா வராததால அவங்களுக்கு punishment ஆ school ground அ ஓட விட்டு இருக்காங்க... அதுனால அவங்களுக்கு மூச்சு திணறல் வந்து நாலு பேரும் இறந்து போய் இருப்பாங்க..." என கூறி கொண்டே அந்த ஃபைல் கொடுக்கிறார்.
அதை வாங்கி படித்து கொண்டு இருந்த திலீப், "சரி....இவங்க அதிகமா மைதொலஜி பத்திதான் விடுகதை போடுவாங்க.... ஏற்கனவே இந்து கடவுள் பத்தி குடுத்துட்டாங்க...அப்போ ஒன்னு முஸ்லீம் இல்லன்னா கிறிஸ்டியன் பத்தி இருக்கும்....இவங்க க்ரீக் பத்தி அதிகமா சொல்லி இருக்காங்க...அப்போ அது கண்டிப்பா கிறிஸ்டியனா இருக்கும்...அப்போ....க்ரீக்.... பைபிள்... அப்பொகலிப் பைபிள்....அதுவா தான் இருக்கும்... அண்ணே எனக்கு இப்போ ஒரு அப்போகலிப் பைபிள் வேணும்..."என திலீப் கேட்க,
"இருங்க சார்... லைப்ரரில இருக்கும் எடுத்து விட்டு வர்றேன்...."என ரங்கா வேகமாக சென்று திலீப் கேட்ட அந்த அப்பொகலிப் பைபிள் எடுத்து கொண்டு வருகிறார்.
அதை வாங்கி அவர்கள் சொன்ன எண்களில் உள்ள சங்கீத வார்த்தைகளை புரட்டிப் பார்க்க, " அண்ணே....இதை பார்த்தீங்களா... இவங்க சொண்ணதுல... சாமுவேல்ன்னு ஒரு தேவதை ஒரு திராட்சை மரத்தை வச்சு இருந்து இருக்காங்க... ஆனா அங்க வச்சது நம்ம கடவுளுக்கு பிடிக்காம இருந்ததால அவரை சபிச்சிட்டாங்க...அவரை சிவப்பு பாம்பா மாத்திட்டாங்க... சிவப்பு பாம்புன்னா பாம்பு எப்போவும் ஊர்ந்துதான் போகும்... பாம்பு மாதிரி city க்கு உள்ள போறது...அப்போ அது டிரெயின்தான்....நம்ம city க்கு உள்ள வர்ற ஒரு டிரெயின்தான்...நீங்க எல்லாரும் போய் அங்க இருக்க எல்லா டிரெயின்லயும் செக் பண்ணி செக்யூரிட்டி குடுங்க...நான் இங்க இருந்து இந்த கேஸ்ல கொஞ்சம் ரிசர்ச் பண்ண வேண்டியது இருக்கு...." என திலீப் கூற, அங்கே இருந்து ரங்கா மீதி உள்ள போலீஸ் எல்லாரையும் கூட்டி கொண்டு ரயில் நிலையத்தை நோக்கி செல்கிறார்.
"இது வரைக்கும் அவங்க வச்ச bombs எல்லாமே ஒரு கவர்மெண்ட் சம்பந்தமான இடத்துலதான்... இப்போ கடைசியா வச்சதும் ஒரு கவர்மெண்ட் சம்பந்தமான இடம்தான்... இவங்க நாலு பேருக்கும் ஏதாச்சும் லிங்க் இருக்கும்...இவங்க இது வரைக்கும் நம்மகிட்ட பணம் காசு எதுவும் கேட்கலை...இல்லை அவங்கள ரிலீஸ் பண்ணுங்க இவங்களை ரிலீஸ் பண்ணுங்கன்னும் கேட்கலை...அவங்க நம்மகிட்ட என்னமோ சொல்ல வர்றாங்க..."என திலீப் யோசித்து கொண்டு இருக்கிறார்.
அதே சமயம் ராஜேஷ் மற்றும் சந்தீப் பேசி கொண்டு இருந்தார்கள்.
"இந்த விடுகதை ரொம்ப சிம்பிளா குடுத்திட்டே...அவர் ஈஸியா கண்டுபிடிக்கமாட்டாரா...."என ராஜேஷ் கேட்க,
"அவர் ஈஸியா கண்டுபிடிக்கணும்ன்னு கொடுத்தேன்... அது மட்டுமில்லாம அவரை குறைச்சு மதிப்பிடாத...அவர் பார்ட்னர் இறந்து போனதால் depromotion குடுத்து இருந்திருக்காங்க..."என சந்தீப் கூற,
"சரி அந்த bomb அவங்க கண்டுபிடிக்கலேன்ன என்ன பண்றது..."என ராஜேஷ் கேட்க,
"ஒன்னுமில்ல...என் ஃபோன்ல இருந்து ஒரு கால் பண்ணுனா போதும் அந்த bombs எல்லாம் ஈஸியா அதுவா diffuse ஆயிரும்... ஒரு பத்து நாள் கழிச்சு நம்ம மாறுவேடம் போட்டுட்டு போய் அந்த fire extinguisher மாற்றிடலாம்..."என கூறி கொண்டே சந்தீப் தனது கைபேசியை பார்க்க" no signal " என காட்டுகிறது.
"என் ஃபோன்ல சிக்னல் இல்லை....உன் ஃபோன்ல சிக்னல் இருக்கான்னு பாரு...."என சந்தீப் கூற,
"இல்லையே என் ஃபோன்ல சிக்னல் இல்லை "என் ராஜேஷ் கூற,
"இப்போ வேற வழி இல்லை...நம்ம கவுண்டர் அட்டாக் பண்ணனும்..."என கூறுகிறான் சந்தீப்.
அதேசமயம் மேல் அதிகாரி விக்னேஷை சந்திக்க திலீப் சென்று, "சார்... நம்ம city ஃபுல்லா மொபைல் ஜாமிங் ஆயிருக்கு...என்னாச்சு..."என கேட்க,
"தெரியலை...அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை...அது மட்டுமில்லாம இந்த கேஸ் கை மாற போகுது...இனி நீங்க இதுல involve ஆக முடியாது"என விக்னேஷ் கூற,
அங்கே இருந்து கோபமாக திலீப் சென்று விடுகிறார்.
அதே சமயம் ராஜேஷ் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து இரயில் நிலையத்தை நோக்கி செல்ல, "மணி இப்போ 7 30 ஆச்சு....8 மனிக்கு வெடிச்சிரும்... அதுக்கு முன்னாடி நம்ம அங்க போய் diffuse பண்ணிரணும்... நான் அந்த டிரெயின் exact location எங்க இருக்குன்னு தேடி பார்க்கறேன்..."என மறுமுனையில் சந்தீப் கூறி கொண்டே தனது மடிக்கணினியை தட்டி தேடி கொண்டு இருக்க,
"டேய்...நான் ஹேக் பண்ணுறதுக்கு முன்னாடி யாரோ அதை கவுண்டர் ஹேக் பண்ணி அதோட லொகேஷன் ஏகப்பட்ட இடத்தில இருக்க மாதிரி காட்டிட்டு இருக்காங்க..."என சந்தீப் கூற,
"சீக்கிரம் try பண்ணு... டைம் இல்லை நமக்கு...."என ராஜேஷ் கூற,
"டேய்...உன்கிட்ட பேசிட்டு இருக்கும் போதே...என் லேப்டாப் ஹேக் பண்ணிட்டாங்க... ஷிட்....இருடா...."என கூறி கொண்டே அந்த லேப்டாப் எடுத்து வைத்து விட்டு வேறொரு மடிக்கணினி வைத்து டிரெயின் இருக்கும் இடத்தை தேடி கொண்டு இருக்கிறான்.
"ஷப்பாடா.....ஒரு வழியா கிடைச்சிருக்கு....அந்த டிரெயின் இப்போ டிரெயின் ஸ்ட்டேஷன்க்கு வந்திருச்சு... சீக்கிரம் போ....நம்மகிட்ட யாரோ game ஆடுறாங்க...ஒன்னு போலிஸ்... இல்லன்னா வேற யாராச்சும் இருக்கும்..நானும் கிளம்பறேன்...."என கூறி கொண்டே சந்தீப் அங்கே இருந்து கிளம்புகிறான்.
"நம்ம முதல் நோக்கம் அந்த bomb எடுக்கறதுதான்... அந்த bomb வெடிச்சுதுனா அந்த பழி நம்ம மேல தான் விழும்..யாரையும் கொல்றதுக்கு நம்ம விரும்பல...ஃபர்ஸ்ட் அந்த bomb எடுத்திடலாம்..."என ராஜேஷ் கூற,
"சரி... நீதான் அங்க இருக்க...நீ போய் bomb எடுத்துடு... நான் அங்க இருக்க கேமரா எல்லாம் ஹேக் பண்ணுறேன்..."என ஓடி கொண்டே சந்தீப் கூற,
"சரி" என இரயில் நிலையத்தை நோக்கி விரைகிறான் ராஜேஷ்.
அதே சமயம் திலீப், "இவங்கதான் நம்மள கூப்பிட்டாங்க... ஆனால் போக போக நிறைய விஷயம் தெரிய வர கேஸ் ஹையர் ஆபீசர்ஸ் பாத்துக்கிறாங்க சொல்றாங்க...ஏதோ ஒரு விஷயத்தை இவங்க மறைக்கிறாங்க...நான் எப்படியாச்சும் அதை கண்டுபிடிக்கனும்..."என யோசித்து கொண்டே நடந்து கொண்டு இருக்கிறார்.
"நான் கேமரா ஃபுல்லா ஹேக் பண்ணிட்டேன்... நீ bomb போய் diffuse பண்ணு" என ஒரு இடத்தில் அமர்ந்து லேப்டாப் வைத்து கொண்டு சந்தீப் கூற,
மறுமுனையில் ராஜேஷ் "சரி " என கூறி கொண்டு தனது முகமூடி அனிந்து கொன்டு கையில் ஒரு புகை குண்டு எடுத்து போட்டு மக்கள் எல்லோரும் சிதறி ஓட அப்போது ராஜேஷ் இரயில் உள்ளே நுழைகிறான்.
உள்ளே நுழைந்த ராஜேஷ் திரும்பி பார்க்க அங்கே ஒரு பெண்மணி காதில் headphones போட்டு கொண்டு தூங்கி கொண்டு இருக்க, ராஜேஷ் கையில் உள்ள கடிகாரத்தை பார்த்து கொண்டு அந்த பெண்ணை இழுத்து தூக்கி கொண்டு அங்கே இருந்து வெளியே தூரமாக ஓடி வந்து விழ, இரயில் இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறுகிறது.
அதே சமயம் திலீப் நேராக சென்று மேல் அதிகாரி விக்னேஷிடம்,"நீங்கதான் இதை கண்டுக்கல...இப்போ என்னாச்சு.... பாத்தீங்களா...அந்த bomb யாரும் எடுக்கவே இல்லை...யாராச்சும் செத்திருந்தா என்ன ஆகிருக்கும்...."என கேட்க,
"எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை... என்னாலேயே இந்த கேஸ் உள்ள போக முடியாது... சொன்னால் புரிஞ்சுக்க..."என விக்னேஷ் கூற,
திலீப் திரும்பி பார்க்க, பின்னால் அமெரிக்காவில் இருந்து வந்த அமெரிக்கன் எம்பசி ஏஜெண்ட்ஸ் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
"இவங்கதான் காரணமா..."என மனதினுள் நினைத்த படி திலீப் அங்கே இருந்து செல்கிறான்.
வெடிகுண்டு வெடித்து சிதறி இருக்க, அங்கே இருந்து சிறு காயத்துடன் எழுந்த ராஜேஷ் அந்த பெண்மணி உயிருடன் இருப்பதை பார்த்து விட்டு அங்கே இருந்து நடந்து வர அங்கு நேர் எதிரில் சந்தீப் நின்று கொண்டு இருக்கிறான்.
நடந்து வர இரண்டு பேர் மொபைல் ஃபோனிற்கும் ஒரு notification சப்தம் வருகிறது.
அங்கு உள்ள அனைத்து பேருக்கும் அந்த notification சப்தம் வருகிறது. திலீப் ரங்கா பொது மக்கள் என அனைத்து மொபைல் ஃபோனிற்கும் அந்த notification வருகிறது.
"I found you ^~^" என மெசேஜ் வந்து இருக்க,
"இது கண்டிப்பா நம்பர் 5 வேலையா இருக்கும்..."என ராஜேஷ் கூறுகிறான்.
அதே சமயம் அந்த அமெரிக்க ஏஜென்ட் பெண் "i found you " என கூறி சிரிக்கிறாள்.
(தொடரும்.....)