• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 4

Member
Messages
64
Reaction score
2
Points
8
விடியற்காலை நான்கு மணி. வெண்ணிலவு இன்னும் தன் ஒளியை கொடுத்து கொண்டு இருந்தது.
"பேசாமல் நாம் இங்க இருந்து கிளம்பி விடலாம்... யாருக்கும் பாரமா இருக்க வேண்டாம்...நாம் எங்கேயாச்சும் போயிடலாம்...." என மனதினுள் எண்ணி கொண்டே கயல் அவள் வீட்டில் இருந்து தன் அம்மாவிற்கு தெரியாமல் வெளியேறுகிறாள்.
வெளியே வந்து அவள் வீட்டில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து கொண்டு இருக்கிறாள். திடீர் என அவளது கைபேசி அழைக்க எடுத்து பார்க்க கைபேசியில் "அம்மா" என காட்டியது.
பதில் எதுவும் உரைக்காமல் கைபேசியை வைத்துவிட்டு, "இப்பொழுது என்ன செய்வது எங்கு செல்வது பேசாமல் திரும்பி வீட்டிற்கே சென்றுவிடலாமா" என யோசித்து கொண்டே நடக்கிறாள்.
சென்னை காவல் தலைமையகம் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வெடி குண்டு வெடிப்பு தொடர்பாக பெரிய மீட்டிங் நடத்தி கொண்டு இருந்தனர்.
"அவங்க ஏற்கனவே மூணு bomb வச்சுட்டாங்க...அதுல ஒண்ணுதான் நமக்கு வெடிக்காம கிடைச்சு இருக்கு...அதை ஆராய்ச்சி செய்ய நம்ம ஆய்வக விஞ்ஞானியிடம் குடுத்து இருந்தோம்...அதற்கான report இப்போ அவர் குடுப்பார்" என கூறிவிட்டு மேல் அதிகாரி விக்னேஷ் நாற்காலியில் அமர,
ஆய்வக விஞ்ஞானி எழுந்து, "இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துல போன தடவ நமக்கு கிடைச்ச வெடிகுண்டும் ரொம்ப எளிதாக பண்ணிடலாம்... இதுக்கான பொருட்கள் எளிதாக எல்லா இடத்துலயும் கிடைக்கும்... கட்டிடம் கட்ட கட்டிட தொழிலாளிகள் உபயோகப்படுத்தற வெடிகுண்டு மாதிரியே இதுவும்... அதே method தான் இதுக்கும் use பண்ணி இருக்காங்க...என்ன அதை விட இது கொஞ்சம் சக்தி வாய்ந்ததா இருக்கும்... வெடிச்சால் அந்த கட்டிடம் தரைமட்டம் ஆயிரும்...அந்த மாதிரி வெடிகுண்டு செய்ய பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் எப்படி இவங்க கைக்கு கிடைக்கும்னு யோசிக்கும் போதுதான் இது சில கான்ட்ராக்டர் கையெழுத்து இருந்தால் போதும்..." என கூற,
" அவங்க அந்த கான்ட்ராக்டர் கையெழுத்து ஈஸியா வாங்கிருக்காங்க... இந்தியால இல்லாம வேற வேற நாட்டுல இருந்து கேட்கிற மாதிரி வாங்கி இருக்காங்க...அந்த ஏரியால சமீபத்தில் ஒரு நபர் மட்டும் இதற்கான பொருள் எல்லாம் வாங்கி இருக்காங்க... அவங்க என்னென்ன வாங்கி இருக்காங்கன்னா டெலிவரி பாய் டிரஸ் , டேப், இது மாதிரி வீட்டிற்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் மட்டும்தான் வாங்கி இருக்காங்க... ஆனா இது எல்லாம் ஒண்ணா சேர்த்தா bomb செய்ய முடியும்...மேலும் இவங்க இந்த பொருட்கள் எல்லாம் சூப்பர் மார்க்கெட் அட்ரஸ் குடுத்து ரிசிவ் பண்ணி இருக்காங்க...மேலும் அந்த சூப்பர் மார்க்கெட் சிசிடிவி கேமரா எல்லாம் ஹேக் பண்ணி இருக்காங்க போல...அதுல ஒரு footage கூட கிடைக்கல...சோ அவங்க நமக்கு முன்னாடி யோசிக்கிறாங்க...நம்ம இன்னும் ஜீரோ ஸ்டேஜ்ல இருக்கோம்...இன்னும் அதி தீவிரமாக இந்த case கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க..." என கூறி மேல் அதிகாரி விக்னேஷ் அந்த மீட்டிங் முடிக்கிறார்.
மீட்டிங் முடிந்து விக்னேஷ் ரங்காவிடம் ," ஆமா திலீப் எங்க..? அவரை காணோமே..." என கேட்க,
"அவர் அந்த புளூட்டோனியம் ஆயுதம் திருடு போச்சுல்லே அங்க போய் இருக்கார்... காஷ்மீர்க்கு..." என ரங்கா பதில் சொல்லி கொண்டே தன் வேலைகளை செய்கிறார்.
இடம் ஜம்மு காஷ்மீர்...
சென்னை வெயிலில் இருந்துவிட்டு காஷ்மீர் குளிர் திலீபிற்கு உற்சாகத்தை கொடுத்தது. அவர் அங்கே உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் பக்கத்தில் நின்று காத்து கொண்டு இருக்கிறார்.
"சாரி சார்...ரொம்ப நேரம் வெயிட் பண்ணறீங்களா... நீங்க நேற்று ஃபோன் பண்ணி கூப்பிட்டீங்க....சொல்லுங்க என்ன விஷயம் சார்..." என அந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஒரு நபர் கேட்க,
"இந்த பையனை உனக்கு தெரியுமா...." என சந்தீப்பின் அந்த ஸ்கெட்ச் போஸ்டர் நீட்டி காட்ட,
"இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு...ஆனால் என்னன்னு சரியா நியாபாகம் வரல சார்... ஏன் என்னாச்சு..."
"ஒண்ணும் இல்லை...சின்ன பிரச்சினைதான் இவன் உங்க கூட வொர்க் பண்ணிருக்கான்... நினைவு இல்லையா...."
"என்ன சார் சொல்றீங்க...எனக்கு சரியா நினைவு இல்லை... என்னாச்சு"என அந்த நபர் கேட்க,
"ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்க காஷ்மீர் இராணுவ தளத்தில் ஒரு அணு ஆயுதம் திருடு போச்சு...அந்த ஆயுதத்தை திருடுனது இந்த பையனும் இன்னொரு பையனும்தான்...அந்த டைம் யோசிச்சு பாருங்க..."என திலீப் கூற,
சிறிது யோசித்து விட்டு," ஆமா ஆமா இவன் இங்கதான் வொர்க் பண்ணிட்டு இருந்தான்...இங்க மூணு மாசமா வொர்க் பண்ணான்... நான் மெய்ன் ரூம்ல இருப்பேன்...இவன் சப் ரூம்ல இருப்பான்...இவன் யார்கூடயும் பேசி பார்த்தது இல்லை.... லஞ்ச் டைமில் கூட பேசி பார்த்தது இல்லை..ரொம்ப தனியாத்தான் இருப்பான்..." என கூறுகிறார் அந்த நபர்.
அந்த நபரிடம் மற்ற கேள்விகள் எல்லாம் கேட்டு கொண்டு அங்கு இருந்து விடைபெற்று சென்னை வந்தடைகிறார் திலீப்.
அதே சமயம் ராஜேஷ் தனது மடிக்கணினியில் ஏதோ செய்து கொண்டு இருக்கிறான். அவனிற்கு , "404 error found connecting not connecting" என மடிகணினியின் திரை காட்டி கொண்டு இருந்தது.

மேலும் ராஜேஷ் அந்த மடிகனினியின் பொத்தானை தட்ட அது எதோ ஒரு தளத்திற்குள் சென்றது.
"வேற லெவல்... சீக்கிரமா போலீஸ் சைட் server ஹேக் பண்ணிட்டே...." என கூறி கொண்டே சந்தீப் அந்த கணினியின் திரையை நோக்கி வருகிறான்.
"ஆமா டைம் இல்லை...நாம நம்ம அடுத்த மூவ் பண்ணனும்" என கூறுகிறான் ராஜேஷ்.
"சரி நீ இதை பாரு...நான் வெளிய ஒரு வேலை இருக்கு நான் போய்ட்டு வாரேன்..." என கூறி கொண்டே சந்தீப் அங்கே இருந்து செல்கிறான்.
சென்னை தலைமையகம் காஷ்மீர் சென்று வந்த திலீப்பை விக்னேஷ் தனியாக அழைத்து பேசி கொண்டு இருக்கிறார்.
"காஷ்மீர் போய்ட்டு வந்தீங்க...என்னாச்சு any clues..." என கேட்க,
"என்னதான் இருந்தாலும் ஒரு நபரோட நினைவுகளை அழிக்க முடியாது...அதுனால அங்க போய் விசாரிச்சேன்... அவன் அங்க ஒரு தனிமை விரும்பியா இருந்து இருக்கிறான்... யார்கிட்டேயும் பேசாம இருந்து இருக்கிறான்.... ஆனா இவளோ தூரம் போயும் ஒரு clue கிடைக்கல...எல்லாமே சரியா பன்னிருகாங்க..." என கூறுகிறார் திலீப்.
அதே சமயம் ராஜேஷ் போலீஸ் வலை தளத்தில் ஊடுருவி திலீப் பற்றி அதில் பார்க்கிறான்.
"நீதானா அது..." என மனதிற்குள் நினைத்து கொண்டே திலீப் பற்றி எல்லா விவரங்களையும் பார்க்கிறான்.
அதே சமயம் வெளியே சென்ற சந்தீப் தனது அலைபேசியை எடுத்து கயல் இருக்கும் இடத்தை track செய்கிறான். கயலிடம் தான் கொடுத்த அலைபேசி இருப்பதால் அவளை கண்காணிக்க track செய்கிறான்.
"இந்த பொண்ணு என்ன வீட்டை விட்டு வெளியே போயிருச்சு போல...அது பாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்கு.. இவளால் போலீஸ்கிட்ட நாம மாட்டிக்கிவோம் போல..." என மனதினுள் நினைத்து கொண்டே ராஜேஷ் இடம் நடந்து செல்கிறான்.
சென்னை தலைமையகம் திலீப் தான் சேகரித்த தகவல்களை பார்த்து யோசித்து கொண்டு இருக்க, அங்கே விரைந்து வந்த ரங்கா "சார் அவங்க அடுத்த வீடியோ விட்டுட்டாங்க....இந்த தடவ அவங்களுக்கு நிறைய வியூ போய் இருக்கு...viral ஆயிருச்சு...சார்..." என கூறி கொண்டே தன் கைபேசியை எடுத்து வீடியோ பிளே செய்து திலீப் இடம் கொடுக்க,
"ஹை....ஹலோ...நான்தான் sphinx red நான்தான் sphinx blue.... கடைசியாக நாங்க குடுத்த விடுகதைய சரியா கண்டுபிடிச்சுட்டீங்க....அதுக்கு வாழ்த்துக்கள்... முக்கியமா ஒரு போலீஸுக்கு நாங்க வாழ்த்துக்கள் சொல்லணும்...இன்னைக்கு விடுகதை ரொம்ப இன்றேஸ்டிங்கா இருக்கும்... எல்லாருமே game விளையாட தயாரா இருங்க...இன்னைக்கு bomb கண்டுபுடிக்கலேன்னா கண்டிப்பா வெடிச்சிடும்...ஒரு வேளை வெடிச்சிட்டா எங்களை குறை சொல்லாதீங்க... ஓகே... விளையாட்டை ஆரம்பிப்போமா...நீங்க வெங்கலத்திற்கு பதிலாக வார்த்தைகளை use பண்ணுங்க...all the best..." என கூறி வீடியோ முடிய,
"ஓகே...இது பப்ளிக் ஆயிருச்சு... நிறைய பேர் பார்த்துட்டாங்க... இனிமேல் நாம எதையும் மூடி மறைக்க முடியாது...இதை எப்படியாச்சும் கண்டுபிடிச்சு கவர் பண்ணியாகனும்.." என மேல் அதிகாரி விக்னேஷ் கூற,
"இது க்ரீக் இதிகாசத்தில் வர்ற அதே எடிபஸ் கதைதான்... எடிபஸ் கடைசி விதி இருள் உலகத்தின் உள்ளே போறது ....கடைசியாக இருள் உலகத்துகுள்ள போக எடிபசின் இரண்டு பொண்ணுங்க அவரோட கைய பிடிச்சு கூட்டிட்டு போவாங்க...அப்படி போகும் பொழுது அவர் வெங்கலத்தில் ஆன படிக்கட்டில் இறங்கி போய்ட்டு இருப்பார்...இப்போ அதே மாதிரிதான்.... வெண்கலத்திற்கு பதில் வார்த்தைகள் சொன்னாங்க...அப்போ அது comments section ஆ இருக்கணும்..." என கூறி கொண்டே திலீப் அவர் மடிக்கணினியை திறந்து யூடியூபில் இருந்த அந்த வீடியோ comments வாசிக்கிறார்.
அந்த comments இல் Sphinx என்ற பெயரில் ஒரு id ஒரு லிங்கை பதிவிட்டு இருப்பதை பார்க்கிறார் திலீப். அந்த லிங்கை கிளிக் செய்ய ஏதோ game சைட் உள்ளே செல்கிறது.
"Let's play" என அந்த கணினி திரை காட்ட அந்த let's play என்ற வார்த்தையை கிளிக் செய்கிறார் திலீப். அப்பொழுது அந்த திரை மாறி ஒரு பூனைக்குட்டி கையில் வெடிகுண்டு வைத்து நின்று கொண்டு இருக்க, கீழே பாஸ்வேர்டு என காட்டுகிறது. அதன் கீழே 3 என காட்டி இருக்கிறது.
"திலீப் நீங்க இதை பாருங்க நாங்க போய் மக்கள் இருக்க எல்லா இடத்தையும் அலர்ட் பண்றோம்... ஏதாச்சும் துப்பு கிடைச்சா கால் பண்ணுங்க..."என கூறி கொண்டே விரைந்து அங்கே இருந்த மற்ற காவலர்களை அழைத்து கொண்டு செல்கிறார் விக்னேஷ்.
"3......3.....3.....என்னவா இருக்கும்....."என திலீப் யோசித்து கொண்டு திரையை பார்க்க,"எடிபஸ் கடைசியாக அந்த இருள் உலகத்துக்கு போகும் போது மூணு வரிகள் இருக்க கல்வெட்டு ஒன்னை விட்டுட்டு போவார்...அந்த வரிகள்...
வெளியில் எதுவுமில்லை
உங்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
இதுதான் நிதர்சனம்...
இதுல என்னவா இருக்கும்...." என யோசித்து கொண்டே அந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் பாஸ்வேர்டாக போட்டு திரும்ப திரும்ப முயற்சிக்கிறார்.
"What a same" "you fool" என அவர் போட்ட எல்லா பாஸ்வேர்டுகளும் தவறு என்பதை அந்த பூனை குட்டி சொல்வதை கேட்டு எரிச்சலடைகிறார் திலீப்.
அதே சமயம் ராஜேஷும் சந்தீப்பும் சதுரங்க விளையாட்டு விளையாடி கொண்டு இருக்கிறார்கள்.
"பேசாம நம்ம அந்த பொண்ணு கயலை கூட்டிட்டு வந்திரலாமா..."என ராஜேஷ் கேட்க,
"வேண்டாம்...நமக்குதான் அது பெரிய பிரசசனையாக முடியும்... அவளுக்கும் அது பிரச்சினை...."என சந்தீப் சொல்கிறான்.
"வீட்டை விட்டு வெளியே வந்துட்டான்னு நீ சொல்றே....அவ ஒரு வேளை போலீஸ் போயிட்டா நமக்கு பிரச்சினை..."என ராஜேஷ் கூற,
"பேசாம நீ அந்த பொண்ணை கொலை பண்ணிட்டா பிரச்சினை இல்லை....அவளை கொண்ணிடு..."என கூறி சிரித்து கொண்டே சதுரங்க விளையாட்டில் உள்ள காய்களை நகர்த்துகிறான் சந்தீப்.
அதே சமயம், திலீபிற்கு மேல் அதிகாரி விக்னேஷ் இடம் இருந்து அழைப்பு வருகிறது. அதை எடுத்த திலீப்,"ஹலோ சார்...." என கேட்க,
"திலீப்.... இப்போ பப்ளிக்ல ஒருத்தர் கால் பண்ணார்...நம்ம ரிலீஸ் பண்ணுன ஸ்கெட்ச் பார்த்து அந்த sphinx ல ஒருத்தன பார்த்ததா சொன்னார்...வாங்க அங்க போய் பார்த்துட்டு வருவோம்..."என கூற,
"இல்லை சார்...நீங்க அதை பாருங்க...நான் இந்த game விளையாடறேன் "என திலீப் கூற
"சரி திலீப்..."என கூறி கால் கட் செய்கிறார்.
திலீப் முயற்சி செய்ய அனைத்து வார்த்தைகளும் செயலற்று போகிறது.
பதற்றத்தில் திலீப் அங்கே வேறு காவலர் ஒருவர் வைத்து சென்ற சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைக்க, அங்கு வந்த ரங்கா, "சார்...எதுக்கு ஸ்மோக் பண்றீங்க... உங்களுக்கு ஸ்மோக் பழக்கம் இல்லைல...உன்னை பத்தி தெரிஞ்சுக்கோ..."என கூற,
"அண்ணே என்ன சொன்னீங்க..."என திலீப் திரும்பி கேட்க,
"ஸ்மோக் பண்ணாத சொன்னேன்..."என ரங்கா கூற,
"இல்லை அதுக்கு அப்ரம்"
"உன்னை பத்தி நீ தெரிஞ்சுக்கோ சொன்னேன்" என ரங்கா கூற,
"அந்த மூணு வரிகள்....வெளியில் எதுவுமில்லை
உங்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
இதுதான் நிதர்சனம்... இதை ஒண்ணா சேர்த்தா.... ஓ.... நோ வே...." என கூறிக்கொண்டே, திலீப் என type செய்து கிளிக் செய்ய அந்த தளம் முடிந்து அடுத்த தளம் சென்று வாழ்த்துகள் என கூறி வரவும் மேல ஓடி கொண்டு இருந்த டைமும் நின்று போக சரியாய் இருந்து.
"நீங்க நினைச்சு இருந்து இருந்தா நீங்க இதை முன்னாடியே time stop பண்ணிருக்கலாம்... ஆனால் நீங்க பண்ணல...முன்னாடி சொன்ன மாறி இது இன்றேஸ்டிங்கா இருக்க போகுது...இந்த bomb வெடிக்கும் ஆனால் வேற மாறி வெடிக்கும்....இது வரைக்கும் நீங்க பண்ணது எல்லாம் மத்தவங்களுக்கு தெரியணும்...."என பூனை குட்டி கூற, திலீபின் கைபேசி தொடர்ந்து நோட்டிபிகேஷன் வந்து கொண்டு இருந்தது.
கைபேசி எடுத்து பார்க்க, இதுவரையில் போலீஸ் சேகரித்த தகவல்கள் போலீஸ் கேஸ் லிஸ்ட்கள் போலீஸ் ரகசியங்கள் எல்லாம் போலீஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி கொண்டு இருந்தது.

"தமிழ்நாடு போலீஸ் ஃபேஸ்புக் பக்கம் sphinx ஹேக் செய்யபட்டு போலீஸ் தகவல்கள் போலீஸ் ரகசியங்கள் மேலும் போலீஸ் கேஸ் பைல்ஸ் எல்லாம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதனால் பொது மக்களிடையே போலீஸ் மீதான நம்பிக்கை கேள்வி குறி ஆகி உள்ளது..." என செய்தி வாசிப்பாளர் செய்தியை ஒலிபரப்பி கொண்டிருந்தார்.
(தொடரும்...)
1000182219.jpg
1000182222.jpg
1000182218.jpg
1000182220.jpg
1000182226.jpg
 
Top