• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 3

Member
Messages
64
Reaction score
2
Points
8
சென்னை காவல் தலைமையகம், நமது நாட்டின் தேசிய கொடி ஆடி சூரியனுக்கு வணக்கம் வைத்தது போல அங்கும் இங்கும் காற்றில் ஆடி கொண்டு இருந்தது.
"எவ்வளவு நாளா நான் இங்க வேலை பார்த்துட்டு இருக்கேன்... ஆனா இப்போ எங்கேயோ இருந்து புதுசா ஒரு ஆபீசர் இந்த கேஸ்குள்ள வராங்களா..."என பொருமி கொண்டு இருந்தார் ஒரு போலிஸ் அதிகாரி.
"வர்ற போறது பெரிய ஆளு கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு... யாரு வந்தால் என்ன...இந்த கேஸ் முடிஞ்சா போதும்..."என சக அதிகாரி கூறி கொண்டு இருக்க,
"எதுவும் பிரச்சினையா "என கேட்ட படியே உள்ளே நுழைந்தார் திலீப்.
"ஒண்ணும் இல்லை சார்... நீங்க டுயூடில ஜாயின் பண்ண வந்துட்டீங்களா...
எப்படியாச்சும் அவங்கள புடிச்சிருங்க சார்.... அடுத்து என்ன வீடியோ எப்போ விடுவாங்க...என்ன விடுகதை கேக்க போறாங்க... எங்க பாம்ப் வைக்க போறாங்கன்னு தெரியல..."என சக அதிகாரிகள் கூற,
கையில் அழைப்பு கடிதத்துடன் காத்து கொண்டு இருந்தார் திலீப்.
"இவர்களை பிடிப்பார்காளான்னு நாம மத்தவங்களை சொல்லிட்டு இருந்தோம்... கடைசில நம்மள பிடிக்க சொல்றாங்க..."என எண்ணியவாறு அமர்ந்து இருந்த திலீபை அழைத்தார் உயர் அதிகாரி விக்னேஷ்.
"Congratulation திலீப்... எப்படியாச்சும் அவங்கள நீங்கதான் பிடிக்கணும்... ஒரு போலிஸ் ஸ்ட்ஷன்ல பாம்ப் வைக்கற அளவுக்கு வந்திருக்காங்க...எனக்கு உங்க நிலமை புரியுது... பட் இதுதான் எங்களுக்கு இருக்க ஒரே வழி... நடந்தத மறந்து நீங்க அவங்கள புடிக்க பாருங்க..."என விக்னேஷ் கூற,
"சரி சார்...ஆனால் ஒரு கண்டிசன் என்னை என் போக்கிலேயே விடுங்க...என்னை தனியா சுதந்திரமாக இன்வெஸ்டிகேஷன் பண்ண விடுங்க" என திலீப் கேட்க,
"கண்டிப்பா...நீங்க அவங்கள புடிங்க.." என விக்னேஷ் கூறுகிறார்.
அதேசமயம்... இராஜேஷும் சந்தீப்பும் ஒரு பாழடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் அடுத்த வெடிகுண்டை அமைத்து கொண்டு இருக்கிறார்கள்.
"நாம குடுக்கற விடுகதை எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கு போல...கடைசியாக நம்ம வச்ச ரெண்டு வெடிகுண்டும் வெடிக்க வச்சுட்டாங்க... இனி விடுகதை எல்லாம் கொஞ்சம் ஈஸியா குடுக்கலாமா..?" என ராஜேஷ் கேட்க,
"இல்லை... ஈஸியா குடுக்க வேணாம்... கஷ்டமாகவே குடுக்கலாம்... ஈஸியா குடுத்துட்டா ஈஸியா கண்டுபிடிச்சிருவாங்க...அது மட்டுமில்லாம நீ போன தடவ ஒன்னு கவனிச்சியா...போன தடவ நம்ம வச்ச வெடிகுண்டு இருக்குன்னு நினைச்சு ஒரு லேப் அவங்க நினைச்சு தேடுனாங்க...அதுல நம்ம எடுத்த அந்த புளூட்டோனியம் இருக்கான்னு செக் பண்ணாங்க...அவங்க நம்மதான் அதை எடுத்தோம்ன்னு கண்டுபுடிச்சிட்டாங்க..." என சந்தீப் கூற,
" நீ சொல்லுவதும் சரிதான்...சரி இங்க இருக்க வெடிகுண்டு எப்போ வெடிக்கற மாதிரி வச்சு இருக்கே" என ராஜேஷ் கேட்க,
"ஒருநாள் வெடிக்கற மாதிரி வச்சு இருக்கேன்...இந்த தடவ போலீஸுக்கு டைம் அதிகமா இருக்கு...பார்ப்போம் கண்டு புடிக்கறாங்களான்னு...இன்னைக்கு மதியமே நம்ம வீடியோ ரிலீஸ் பண்ணிருவோம்..."என சந்தீப் கூறி கொண்டே வெடிகுண்டை சரியாக அந்த கட்டிடத்தில் பொருத்திவிட்டு எழுந்து நடக்கிறான்.
சென்னை காவல் தலைமையகம், போலீஸ் அதிகாரிகள் அனைவரும் வெடிகுண்டு நிகழ்வு பற்றி கலந்தோசித்து கொண்டு இருக்கின்றனர்.
"இந்த மீட்டிங் எதுக்குன்னா இப்போ நடக்கிற வெடிகுண்டு நிகழ்வு எல்லாத்தையும் கட்டுபடுத்த மேலும் அவங்களை பிடிக்க ஸ்பெஷல் ஆபீசரா நான் நம்ம திலீப்பை அப்பாயின் பண்ணறேன்..." என கூறி கொண்டே, மேல் அதிகாரி விக்னேஷ் திரையில் குண்டு வெடிப்பு நடந்த போலீஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா வீடியோ தொகுப்பை பார்த்தபடி,
"அந்த sphinx போலீஸ் ஸ்டேசன் உள்ளேயே நுழைஞ்சு போலீஸ் ஸ்டேஷன்லையே வெடிகுண்டு வச்சிட்டு போய்ட்டு இருக்கான்...நீங்க எல்லாரும் அசால்டா விட்டு இருக்கீங்க...இந்த தடவை இந்த வெடிகுண்டு வெடிப்புல யாரும் சாகல... ஆனாலும் எல்லாருக்கும் காயம் ஏற்பட்டு இருக்கு...வெளிய போய்ட்டு இருந்த மக்களுக்கும் சரி உள்ள இருந்த போலீசுக்கும் சரி...எல்லாருக்கும் அடிபட்டு இருக்கு... எல்லாரும் இந்த கேஸ அதி கவனமாக பாருங்க... பொது மக்கள் மத்தில நம்ம பேர் டேமேஜ் ஆகுது.."என கோவத்தில் பேசி கொண்டு இருந்தார் விக்னேஷ்.
மதியம் ஒரு மணி சூரியன் சுட்டெரிக்க, ஒரு பூங்காவில் மரப்பலைகையில் திலீப் அமர்ந்து இருக்க, எதிரே தூரத்தில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி கையில் ஒரு ஃபைலுடன் ரங்கா வந்து கொண்டு இருந்தார்.
"திலீப் நீ கேட்ட ஃபைல் இந்தா..."என அருகே வந்து கொடுக்க,
"என்ன ஒரே டிராயிங் ஃபோட்டோஸ் இருக்கு...அவனோட ஒரிஜினல் ஃபோட்டோ இல்லையா...என்ன சென்ட்ரல் இவங்க..."என ரங்காவிடம் கேட்க,
"இங்க மாதிரிதான் அந்த புளூட்டோனியம் திருடும் போதும் வீடியோல வர்ற அந்த மாஸ்க் போட்டு இருக்காங்க..ஏதோ அந்த இருந்த பார்த்த சில பேர் வச்சு ஸ்கெட்ச் பண்ணி குடுத்து இருக்காங்க...மேலும் வணிக வளாகத்திலும் போலீஸ் ஸ்டேசன் பூத்தொட்டியிலும் VON என்று போட்ட மாதிரியே இதுலயும் போட்டு இருக்காங்க பாருங்க" என ரங்கா தான் இராணுவத்தில் இருந்து வாங்கி வந்த அந்த ரிப்போர்ட் தாளை காட்டுகிறார்.
"அங்க பார்த்த எல்லாரும் இவன் இப்படித்தான் இருப்பான்...80% இதே மாதிரின்னு சொல்லிருக்காங்க..." என ரங்கா கூற,
கையில் சந்திப்பின் முகம் வரைந்த தாளை பார்த்து கொண்டு இருக்கிறார் திலீப்.
காவல் தலைமையகத்தில் இரண்டு காவல் அதிகாரிகள் ஒரு நபரை விசாரித்து கொண்டு இருந்தனர்.
"நீ எதுக்காக அந்த வணிக வளாகத்தில் இருக்க கரெண்ட் லைன் கட் பண்ணி விட்டே... எதிரில் இருந்த CCTV ல நீ கட் பண்ணறது மட்டும் தெரிஞ்சு இருக்கு... உண்மைய சொல்லு..." என விசாரிக்க,
"சார்...அது அந்த லைன் தெரியாது...நான் சும்மா என் மேனேஜர் மேல உள்ள கோவத்த இதுல காட்டினேன்... கரெண்ட் கட் ஆனா ஓனர் மேனேஜர திட்டுவார்னு பண்ணேன்... அந்த சமயம் பார்த்து இவங்க அங்க bomb வைப்பாங்கன்னு எனக்கு எப்படி சார் தெரியும்..." என அந்த நபர் கூற,
"இவன் இப்படி கேட்டா சொல்லமாட்டேன் அடிச்சுதான் உண்மைய கொண்டு வரணும்" என எதிரில் இருந்த காவலர் எழுந்திருக்க,
உள்ளே நுழைந்த திலீப், "அடிச்சிதான் உண்மையை வரவைக்கணும்ன்னு இல்ல..."என கூறி கொண்டே, விசாரித்து கொண்டு இருந்த அந்த நபரின் முன்னால் அமர்ந்து,
"நீ ஊரு ஃபுல்லா கடன் வாங்கி வச்சு இருக்கியாமே உண்மையா"என திலீப் கேட்க,
"ஆமா சார்..."
"சரி...அப்போ ஏன் கடைசி ரெண்டு வாரமா உன் வீட்டுக்கு கடன் காரங்க யாரும் வரல..."
"சார் அது வந்து..."
"ஏன்னு நான் சொல்லவா....உன் details எல்லாம் என்கிட்ட இருக்கு...நீ ஒரு டம்மி பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணி இருக்கே..அதுல 75,000 வந்து இருக்கு... உன் பேர்ல.." என திலீப் கூற,
"சார்...எனக்கு எதுவும் தெரியாது...அவங்க சொன்னது நான் பண்ணேன் அவங்க யார்னு கூட தெரியாது..."என அந்த நபர் கூற, அவரை அரெஸ்ட் செய்து கூட்டி கொன்டு செல்கிறார்கள் மற்ற காவலர்கள்.
"இவன் வெறும் பகடைகாய்தான்...இவனை எல்லாம் use பண்ணிட்டு தூக்கி எரிஞ்சிட்டு போயிடுவாங்க... இப்போ என்னன்னா எல்லா விஷயத்தையும் பாத்து பாத்து பண்றவங்க இவனுக்கு பணம் அனுப்பி பேசுன இமெயில் மட்டும் அப்படியே விட்டுட்டு போயிருக்காங்க...மேலும் இவங்க போலிஸ் ஸ்ட்ஷன் உள்ள வந்து வெடிகுண்டு வச்ச CCTV footages எல்லாம் நம்ம பாக்கர வரை விட்டு வச்சு இருக்காங்க...ஏன் வேணும்னே விட்டு வச்சு இருக்காங்க...அவங்க ஏதோ நம்மகிட்ட சொல்ல வராங்க..."என திலீப் மற்ற காவலர்களிடம் கூறி கொண்டு இருக்க,
அந்த இடத்திற்கு வேகமாக வந்த ரங்கா, "சார் அவங்க இன்னொரு வீடியோ யூடியூபில் விட்டுட்டாங்க..." என கூறி கொண்டே அந்த வீடியோவை புராஜக்டர் திரையின் போட,
"ஹே ஹலோ..
நான்தான் sphinx red நான்தான் sphinx blue.... இன்னைக்கு விடுகதை ரொம்ப சிம்பிளா இருக்கும்...அது நீங்க கண்டுபிடிக்கலேனா நீங்க எதுக்கு போலீசா இருக்கீங்கன்னுதான் கேக்கணும்...இது கூட யோசிக்க வக்கில்லையான்னு கேட்கணும்....இன்னைக்கு விடுகதை என்னன்னா பழத்தில் இருந்து பிறந்த எனக்கு தமிழ்நாட்டில் நீங்காத இடம் உண்டு எனக்கு.... இது நீங்க கண்டுபிடிச்சா அதுக்கு பக்கத்து கட்டிடம்...அதுல இருக்கு வெடிகுண்டு...கடவுளே போலீஸுக்கு இப்போவாச்சும் யோசிக்க மூளை குடு... ஆல் தி பெஸ்ட்...பை...." என கூறி அந்த வீடியோ முடிவடைகிறது.
"திருப்பி அந்த வீடியோ பிளே பண்ணுங்க...நான் அதை திரும்ப பார்க்கணும்..."என திலீப் கேட்க, அந்த வீடியோ மீண்டும் தொடர,
"எல்லாரும் கவனிச்சீங்களா....அவங்க கடவுளேன்னு சொல்லும் போது சாமி கும்பிடற மாதிரி பண்ணறாங்க....கடவுள்...அவங்க சொன்ன இடம் கோவிலா கூட இருக்கலாம்...அவங்க சென்னை விட்டு போற மாதிரி தெரியல... சோ...சென்னைல இருக்க ஏதோ ஒரு கோவிலுக்கு பக்கத்து கட்டிடத்தில் வெடிகுண்டு இருக்கு.."என திலீப் யோசிக்க,
"ஆனால்...நம்ம எந்த கோவில்ன்னு தேடி கண்டுபிடிப்போம்..."என காவலர்கள் குழம்ப,
"மூணு யூனிடா பிரிஞ்சுகோங்க...ஒரு யூனிட் சென்னைல இருக்க எல்லா கோவில் பக்கத்து கட்டிடம் எல்லாம் அலசி ஆராய்ங்க.... ரெண்டாவது யூனிட் பழத்தில் பிறந்த கடவுள் இல்ல பழம் சார்பா இருக்க கடவுள் லிஸ்ட் எடுங்க...மூணாவது யூனிட் இன்பர்மேஷன் பாஸ் பண்ணுங்க... கம் ஆன்... பாஸ்ட்...." என திலீப் கூறி கொண்டே மீண்டும் அந்த வீடியோவை பார்த்து கொண்டு இருக்கிறார்.
வெண்ணிலா மேகத்துள் ஊடுருவி வெளிச்சத்தை கொடுத்து கொண்டு இருந்தது. இரவு 8 மணி ஆயிருந்தது. கயல் வீட்டின் உள்ளே கயலின் அம்மாவின் நிலமை மோசமாக இருந்தது. எங்கு சென்றாலும் பள்ளிக்கு சென்றாலும் நீ என்னை விட்டுவிட்டு சென்றுவிடுவாய் என கூறி கொண்டே இருந்தாள்.
"சே...என்ன வாழ்க்கை இது... பேசாம அன்னைக்கே வணிக வளாகத்தில் இறந்து போய் இருக்கலாம்...இங்க இருக்கவே பிடிக்கல...தேவை இல்லாமல் பிரச்சினைல வேற மாட்டிகிட்டோம்... வீட்டை விட்டு எங்கேயாவது போய்விடலாமா" என யோசித்து கொண்டே கயல் நித்திரையில் ஆழ்ந்தாள்.
அதேசமயம், காவல் தலைமையகத்தில் அனைவரும் விடுகதை பதிலை கண்டுபிடிக்க வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்.
"சார்.... சென்னைல இருக்க பாதி கோவில்ல தேடி முடிச்சிட்டாங்க... இங்கே எதுவும் கிடைக்கல... பெரிய கோவில் சின்ன கோவில்ன்னு எல்லா இடத்திலும் தேடிட்டாங்க..." என தேடுதல் பணிக்கு சென்ற காவலர்கள் கூற,
"குட் ஜாப்... இன்னும் தேடுங்க... முழுசா தேடுங்கள்..."என அலைபேசியில் திலீப் கூறி கொண்டே யோசித்து கொண்டு இருக்கிறார்.
"சார்...இன்னைக்கு நீங்க சொன்ன எல்லா வேலையும் செஞ்சுட்டேன்...நான் வீட்டுக்கு போறேன்..."என ரங்கா சொல்ல,
"அண்ணே... பைல்ஸ் கொண்டு வந்ததுக்கு thanks...நீங்க போங்க...நான் பாத்துக்கிறேன்..."என திலீப் கூறுகிறார்.
"Ok சார்..."என கூறி திரும்ப, "அண்ணே shirt ல கறை இருக்கு... துடைங்க..."என கை காட்டி திலீப் கூற,
"நல்ல வேளை சொன்னீங்க சார்.. இப்படியே போனா என் பொண்டாட்டிகிட்ட யார் திட்டு வாங்கறது...இது வேற peach colour ரொம்ப ஆசையா எடுத்து கொடுத்த சட்டை..." என ரங்கா கூற,
சட்டென தெளிந்தவனாய் திலீப் நிமிர்ந்து ராங்காவை பார்க்கிறார்.
மறுநாள் வெண்ணிலவை துரத்தி சூரியன் தனது கதிர்களை செலுத்தி கொண்டு இருந்தது...மணி ஆறு...அரைதூக்கத்தில் இருந்த சந்தீப் கனவு கண்டு கொண்டு இருக்கிறான்....சந்தீப் சிறு வயதில் இருப்பது போல...பக்கத்தில் ஒரு சிறுவன் ராஜேஷ் உருவத்தில்...சுற்றி நிறைய குழந்தைகள்... அங்கே வெள்ளை நிற உடை உடுத்திய ஒரு பெண் அவர்களிடம் நீங்க எல்லாரும் தனிமைப்படுத்தபட்டவர்கள்... நீங்கள் இந்த சமுதாயத்திற்கு தேவை இல்லாதவர்கள்...உங்களுக்கு பாசம் என்றால் தெரிய கூடாது...என கூறி கொண்டு இருக்க..திடீர் என ஏதோ ஒரு குழந்தை கம்பி வேலியில் மாட்டிக்கொண்டு அலறுவது போல...திடீர் என காகங்கள் பறப்பது போல...திடீர் என நம்பர் 3 நம்பர் 12 என கத்தி கொண்டே ஒரு சிறுவன் நெருப்பில் எரிவது போல கனவு வர கனவில் இருந்து அலறி அடித்து எழுந்து கொள்கிறான் சந்தீப்.
"எனக்கு ஒரு கேமரா வேணும்... ரெகார்ட் பண்ண...கொண்டு வாங்க..."என திலீப் காவலர்களிடம் கேட்க,
"எதுக்கு சார்..."என ரங்கா கேட்கிறார்.
"எதுக்குன்னு கேட்காதீங்க அண்ணா... நான் ஒன்னு try பண்றேன் கொண்டு வாங்க... யூடியூப் லைவ் கனெக்ட் பண்ணி கொண்டு வாங்க..." என திலீப் கூறுகிறான்.
திலீப் கேட்டது போல் கேமரா வர, அதை நேராக வைத்து யூடியூபில் அனைவரும் பார்க்க திலீப், "sphinx red and Sphinx blue உங்க விடுகதைக்கு எனக்கு விடை தெரிஞ்சிருச்சு...நீங்க கடவுளே சொல்லி அது ஒரு கோவில்ன்னு கண்டுபிடிச்சிட்டோம்.. பழத்தில் இருந்து பிறந்த ஆள்ன்னு சொல்லி இருக்கீங்க... ஆனா அவங்க தமிழ் கடவுள்...கதை மட்டும்தான் வேற... என்னோட கணிப்பு சரியா இருந்தா நீங்க சொல்ற கடவுள் முருகன்தான்... ஜப்பான்ல ஒரு கதை இருக்கு...momotaro ன்னு ஒரு பையன் peach பழத்தில் இருந்து பிறந்து ஒரு தம்பதி அவனை தத்து எடுத்து வளர்பாங்க...ஒரு நாள் அவன் கிராமத்தை மூணு அரக்கர்கள் கொள்ளையடிப்பாங்க...அவனும் அவன் அம்மாகிட்ட போய் ஒரு கத்தி வாங்கிட்டு சாப்பிட திணை மாவு செய்துட்டு அவங்கள வீழ்த்த போவான்..போற வழியில அவன் ஒரு நாய், ஒரு குரங்கு மற்றும் ஒரு pheasant பறவை கூட நண்பர்கள் ஆகி போய் அந்த மூணு அரக்கர்கள அழிப்பான்... பின்னாடி அவனை ஜப்பான் மக்கள் idatan பேர் சொல்லி கடவுளா வணங்க ஆரம்பிச்சாங்க...அந்த idatan தான் முருகன்...ஜப்பான் மக்கள் முருகனை idatan பேர் வச்சு வணங்கி வந்தாங்க...நம்ம இதிகாசபடி அந்த peach பழம்தான் முருகன் பிறந்த தாமரை.. மூணு அரக்கர்கள்தான் சூரபத்மன், சிங்கமுகன் மற்றும் தாரகாசூரன்...அந்த அம்மா குடுத்த கத்திதான் நம்ம வணங்கர வேல்...அந்த pheasant பறவை கூட பார்க்க மயில் மாதிரி இருக்கும்... அப்போ அது முருகன் கோவில்... நீங்க சென்னைல bomb வைச்சு இருக்கீங்க... விடியோல சென்னை சொல்லாமல் தமிழ்நாடு சொன்னீங்க..சோ...தமிழ் நகரில் உள்ள முருகன் கோவில்...அந்த கதைப்படி பார்த்தா.. ஒரு peach பழம்...மூணு அரக்கர்கள்...மூணு நண்பர்கள்... அப்போ கோவில்க்கு பக்கத்து கட்டிடத்தில் முதல் தளத்தில் மூணாவது வரிசையில் மூணாவது டைல்ஸ் அடியில் இருக்கு.." என திலீப் கூறி முடிக்க, திலீப் பேசியது மாறி போலிஸ் வெடிகுண்டை எடுக்கும் காட்சி லைவ் திரையில் தெரிகிறது.
"ஒரு வழியா கண்டுபிடிச்சிட்டாங்க சரியா..." என சந்தோசத்தில் அந்த லைவ் பார்த்து கொண்டு இருந்த சந்தீப் பெருமூச்சு விடுகிறான்.
"எல்லாமே நம்ம பிளான் பண்ண மாதிரி நடக்குது சந்தோசம்" என ராஜேஷ் சந்தீப்பை கட்டியணைத்து கொள்கிறான்.
"நீங்க என்ன வேலை பாத்துட்டு இருக்கீங்க தெரியுமா....உங்களை கொல்லாம விடமாட்டேன்...போலீஸ் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க... உங்களை தேடி வருவேன்...சும்மா விடமாட்டேன்..." என லைவ் பேசி கொன்டு இருக்கும் போதே கோவத்தில் திலீப் கத்த, சுத்தி இருக்கும் காவலர்கள் திலீப்பை கட்டுபடுத்தி லைவ் கேமரா ஆஃப் செய்கிறார்கள்.
"ஏன் சார் இப்படி பண்ணீங்க...எதுக்கு இப்படி லைவ்ல கத்துனீங்க" என காவலர்கள் கேட்க,
"அது பிரச்சினை இல்ல...நான் விக்னேஷ் சார்கிட்ட பேசிட்டேன்..." என கூறி நடந்து செல்கிறார் திலீப்.
திலீப் நடந்து செல்ல காவலர்கள் மேல் அதிகாரி விக்னேஷை அணுகி,"அவர் ஏன் இப்படி நடந்துக்கிறார்.." என கேட்க,
"திலீப் அப்படித்தான்... அவர் பண்றது நமக்கு சுத்தமா புரியாது...அவர் ஆரம்பத்தில் நல்ல பெரிய போஸ்டிங் போலீசா இருந்தார்...அவரோட கீழ வேலை செய்கிற அசிஸ்டன்ட் ஒரு கேஸ் investigate பண்ணார்...அப்போ அவர் அந்த கேஸ்ல இருந்து வெளிய வர முடியாமல் suicide தற்கொலை பண்ணிட்டார்...இவர் அந்த case நான் investigate பண்றேன்னு முன்வந்தார்...ஆனால் உள்ள நடந்த அரசியல்ல அவரை இப்படி depromotion குடுத்து ஒதுக்கிட்டாங்க...அதுனால இப்படி ஆகிட்டார்...கண்டிப்பா

இவர் பிடிப்பார் அவங்களை..." என காவலர்களிடம் கூறுகிறார் விக்னேஷ்.

(தொடரும்.....)

1280px-Momotarō_ehon.jpg
skanda2.jpg
1000181296.jpg
1000181304.jpg
1000181300.jpg
பின் குறிப்பு: Momotaro பற்றி மேலும் அறிய இங்கே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

 
Top