• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 2

Member
Messages
64
Reaction score
2
Points
8
"சென்னை நகரில் உள்ள வணிக வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்து உள்ளது. அந்த குண்டு வெடிப்பில் உயிர்சேதம் எதுவும் இல்லை எனினும் பொது மக்கள் சிறு காயங்களுடன் தப்பித்து உள்ளனர். இது குறித்து மேற்கொண்ட விசாரணை செய்ய காவல் துறை தரப்பில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இது தீவிரவாத கும்பலின் வேலையா அல்லது வேறு ஏதாவது அமைப்பின் வேலையா என்பதை கண்டறிய போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகன்றனர்" என தொலைகாட்சி செய்திகள் ஒளிபரப்பி கொண்டு இருக்க அதை ராஜேஷ் டி வி ரிமோட் கொண்டு அணைத்தான்.
" இந்த போனை நீயே வச்சு இரு..நாங்க வேணும்னா உனக்கு கூப்பிடறோம்...அது வரைக்கும் நீ உங்க வீட்டுலயே இரு....போலீஸ் பக்கம் போக நினைச்சா உன்னையும் சேர்த்துதான் அரெஸ்ட் பண்ணுவாங்க நியாபகம் இருக்கட்டும்..." என கூறி கயலை அங்கு இருந்து அனுப்பி வைத்தான் சந்தீப்.
கயல் அங்கு இருந்து கிளம்பி தன் வீட்டிற்குள் நுழைய,
"கயல் எங்கே போய் தொலைஞ்சே... நீயும் என்னை விட்டுட்டு போக முடிவு பண்ணிட்டயா.. உன் அப்பா மாறியே என்னை தனியா தவிக்கவிட்டு போக போறியா..நான் call பண்ணி ஏன் ஃபோன் எடுக்கல..."என கயலின் அம்மா கேட்க,
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல அம்மா...நான் மொபைல் பார்க்கல.. அதான் ஃபோன் எடுக்கல..."என கூறி கொண்டே கயல் அவள் அறைக்கு செல்ல,
"பேச பேச எங்க போறே...உன் அப்பா மாறியே பன்னாத கயல்...என்னை விட்டு போயிராத..."என கயலின் அம்மா கயிலின் அறைக்குள் நுழைய வர கயல் அதற்குள் அறையின் கதவை மூடிக்கொண்டு கதவின் மீது சரிந்து கீழே உட்கார்ந்து அழ தொடங்குகிறாள்.
"இப்போ என்ன செய்வது போலீஸ் இடம் போய்விடலாமா போனால் நம்மளும் மாட்டி கொள்வோமே என்ன செய்வது முதலில் நாம் ஏன் அங்கு சென்றோம் நாம் ஏன் அப்போது இறப்பதை விட்டுவிட்டு குற்றவாளி ஆக சம்மதித்தோம்" என எண்ணி கொண்டே கயல் தூங்கி போகிறாள்.
மறுநாள் காலை சூரியனை நம் இந்திய அரசின் தேசிய கொடி மறைத்து காற்றில் ஆடி கொண்டு இருந்தது போலீஸ் தலைமையகத்தில். சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் என அனைத்து அதிகாரிகளும் கூடி இருந்தனர். திரையில் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறி தரைமட்டம் ஆன சென்னை வணிக வளாகத்தின் புகைப்படம் ஓடி கொண்டு இருந்தது. சுற்றி இருந்த போலீஸ் அதிகாரிகள் அந்த மீட்டிங்கில் குண்டு வெடிப்பு சம்பத்தை பற்றி கூறி கொண்டு இருந்தனர்.
"இது வரைக்கும் நடந்த எல்லா தீவிரவாத தாக்குதலிலும் ஏதாச்சும் ஒருத்தராவது இறந்து போயிருக்காங்க... ஆனா இந்த தாக்குதலில் ஒரு உயிரும் போகல... அதுனால இவங்க புது அமைப்பா இருக்க வாய்ப்பு உண்டு..இது வரைக்கும் இப்படி உயிர்சேதம் இல்லாம குண்டு வெடிப்பு நடந்தது இல்லை..."என ஒரு போலீஸ் மேல் அதிகாரி விக்னேஷ் கூற,
"யாருமே சாகலையா அடி கூட படலையா" என மற்றொரு அதிகாரி கேட்க,
"அடி எல்லாம் பட்டிருக்கு...எல்லாமே சின்ன அடி மட்டும்தான்... உயிர் பாதிப்பு ஏற்படும் வகையில் அடி எதுவும் இல்லை..25 பேருக்கு மட்டும் அடி...எல்லாமே மைனர் அடி... மேஜர் அடி ஒண்ணும் இல்ல..இவங்க ரொம்ப கவனமாக இதை பண்ணிருகாங்க... இவங்களோட நோக்கம் என்னன்னு தெரியலை...இவங்களை நாம கவனமாக பிடிக்கணும்...இப்போதைக்கு நம்மகிட்ட இருக்க ஒரே கிளூ அந்த வீடியோ மட்டும்தான்... யூடியூப் வைரலா ஆன அந்த வீடியோ...நாங்களும் அந்த வீடியோ வெளியான அந்த சேனல் கண்டுபிடிச்சி தேடி பார்த்தா எங்களால அந்த ஐபி முகவரி கண்டுபிடிக்க முடியல... அவங்க tor use பண்ணி இருக்காங்க" என மற்றொரு அதிகாரி கூறுகிறார்.
"Tor தானே அதை நம்ம ஈசியா டிராக் பண்ணிடலாமே"என மற்றொரு அதிகாரி கேட்க,
"அவங்க Tor வித்தியாசமா பயன்படுத்தி இருக்காங்க...tor உள்ள tor உள்ள tor உள்ள tor... அந்த மாதிரி பயன்படுத்தி இருக்காங்க...ஒரு tor லயே நிறைய லொகேஷன் காட்டும்...இப்படி அவங்க பண்ணதால் நம்மளால அவங்க ஐபி முகவரி கண்டுபிடிக்க முடியல...நம்ம track பண்ணும் போது ஒரே சமயத்தில் எல்லா லொகேஷனும் pin ஆகுது... இதை பயன்படுத்தித்தான் அவங்க அந்த வீடியோ அப்லோடு பண்ணிருக்காங்க... அது மூலமாக போறது டைம் வேஸ்ட்..." என பெரு மூச்சு விட்டபடி அந்த அதிகாரி கூறி முடிக்கிறார்.
"அப்போ அவங்களை எப்படித்தான் பிடிக்கிறது..." என மேலும் ஒரு அதிகாரி கேட்க,
"அதைத்தான் நானும் யோசிக்கிறேன்...ஆனால் அதுக்கு முன்னாடி அந்த வணிக வளாகத்தில் உள்ள எல்லா CCTV camera எல்லாத்தையும் அழிச்சிட்டாங்க...மேலும் அது பெரிய வணிக வளாகம் அதுனால அந்த பில்டிங் காண்ட்ராக்ட் பண்ணவங்க எல்லாரையும் விசாரிச்சுட்டு இருக்கோம்.." என மேல் அதிகாரி விக்னேஷ் கூற,
அங்கு அமைதியாய் அமர்ந்து இருந்த திலீப் ரங்காவிடம், "என்ன அண்ணே இன்னைக்கு இவங்க ஒரு முடிவுக்கு வருவாங்களா இல்லை இவங்க பேசிட்டு மட்டும்தான் இருப்பாங்களா" என முணுமுணுத்தபடி ரங்காவை பார்க்க,
"வழக்கம் போலதான் கண்துடைப்பு ஏதாச்சும் பண்ணுவாங்க..."என கூறி சிரித்து கொண்டே கவனிக்கிறார் ரங்கா.
"அங்க இருந்த வெடிகுண்டு பத்தி விவரங்களை நம்ம லேப் சைன்டிஸ்ட் சொல்லுவாரு..." என கூறி மேல் அதிகாரி விக்னேஷ் அமர,
அந்த ஆய்வக விஞ்ஞானி எழுந்து," இது வெறும் பிளாஸ்டிக் எக்பலோசிவ் பாம்ப்... இதை நார்மலா சூப்பர் மார்க்கெட் மற்றும் மெட்டல் மார்ட்ல கிடைக்கற பொருட்கள வச்சே பன்னிருக்காங்க..இது நார்மலா வெல்டிங் அப்புறம் fire extinguisher எல்லாமே எல்லா இடத்துலயும் கிடைக்கும் அதுல பயன்படுத்தி இருக்க உலோகத்தைதான் இதுல பயன்படுத்தி இருக்காங்க...சில உலோகங்கள் எல்லாம் அயர்ன் ஆக்ஸைடு படும் போது தானாவே உருகி எரிய ஆரம்பிக்கும்..அப்படி எரியும் போது அது பக்கத்தில் இருக்க பொருட்களை உருக்கி பெரிய அளவுல பாதிப்பை குடுக்கும்...இவங்க அந்த மாதிரி உலோகங்களை பயன்படுத்தி இருக்காங்க...அது மட்டுமில்லாம இவங்க வித்யாசமான முறைய பயன்படுத்தி இருக்காங்க...முதல் குண்டு வெடிச்சது மேல டாப் பிளோர்லதான்... அதுக்கு பின்னாடி ஆறு பிளோர் கீழ வந்து வெடிச்சு இருக்கு...அதுக்கு பின்னாடி ஆறு பிளோர் கீழ வந்து வெடிச்சு இருக்கு...இப்படி வெடிச்சுட்டு இருக்கும் போது அந்த கட்டிடத்தோட வெயிட் தாங்காம சப்போர்ட் இல்லாமல்தான் அந்த வணிக வளாகம் இடிஞ்சு விழுந்து இருக்கு...அது மட்டுமில்லாம மக்கள் அதுல இருந்து வெளிய வரதுக்கும் அது வரைக்கும் டைம் கிடைச்சு இருக்கு...அவங்க நினைச்சு இருந்தா நேரடியாக கீழேயே வெடிக்க வச்சு இருக்கலாம்...அவங்க வேணும்னுதான் மக்கள் எல்லாரும் வெளிய வரணும்னுதான் இப்படி பண்ணி இருக்காங்க...அது மட்டுமில்ல அங்க ஒரு நமக்கு லீட் கிடைச்சு இருக்கு ...இதோ பாருங்க" என சொல்லி முடிக்கிறார் ஆய்வக விஞ்ஞானி.
அந்த மீட்டிங் திரையில் "VON" என சிவப்பு நிற வண்ண தெளிப்பான் மூலம் ஒரு இடிந்த சுவரில் எழுதி இருந்த புகைப்படம் காட்டப்படுகிறது.
" ஆறு மாசத்துக்கு முன்னாடி காஷ்மீர் இராணுவ தளத்தில புளூட்டோனியம் அப்படினு ஒரு அணு ஆயுதம் காணாம போயிருக்கு... அதை திருடுன ஆட்களும் இதே போல VON என்ற குறியீட்டை விட்டுட்டு போய் இருக்காங்க...இவங்க அவங்களா இருந்தா நாம கூடுதல் கவனமாக எல்லாம் பண்ணனும்...எல்லா பக்கமும் கூடுதல் கவனமாக இருங்க...சென்னைல எல்லா பக்கமும் extra security போடுங்க...காவலர்கள் அதிக நேரம் ரோந்து பணில ஈடுபடுங்க... அதுக்குதான் இந்த மீட்டிங்..." என மேல் அதிகாரி விக்னேஷ் கூறி அமர,
" ஏதாச்சும் துப்பு கிடைச்சலாவது கண்டுபிடிக்க முடியும்....வெறும் எழுத்த வச்சு எப்படி கண்டுபிடிக்க....கண்டிப்பா இது பெரிய தலை வலிதான் "என பெருமூச்சு விடுகிறார் ரங்கா.
அதே சமயம், ராஜேஷ் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி துடைத்து சரி பண்ணி கொண்டு இருக்க" நம்பர் 3 அந்த ஸ்க்ரூ டிரைவர் எடுத்து குடு" என கூற,
சந்தீப்,"அதை நீயே எடுத்துக்கோ நான் வேலையா இருக்கேன் நம்பர் 12" என கூறுகிறான்.
"வேலையா என்ன வேலை" என எழுந்து கையில் ஒரு துண்டு எடுத்து கையில் இருந்த ஆயிலை துடைத்தபடி ராஜேஷ் சந்திப்பின் பக்கம் வர,
"பிரியாணி உள்ள பாம்ப் வச்சிட்டு இருக்கேன்" என கூறி கொண்டே, ஒரு பிரியாணி பொட்டலத்தின் உள்ளே ஒரு பாலத்தீன் காகிதத்தில் சுற்றப்பட்ட வெடிகுண்டை உள்ளே வைக்கிறான் சந்தீப்.
"பழக்க தோஷத்துல நம்பர் சொல்லி மத்தவங்க முன்னாடி சொல்லிராத...பொய்யா வச்சுக்கிட்ட சந்தீப் ராஜேஷ் பேரையே சொல்லு" என கூறி கொண்டே எழுந்து டெலிவரி பாய் சட்டையை அணிந்து கொள்கிறான் சந்தீப்.
"எல்லாம் சரி அந்த கயல் பொண்ணை எதுக்கு நம்ம கூட சேர சொன்னே " என ராஜேஷ் கேட்க,
"அவ பயப்படுவானு நினைச்சேன் ஆனா அவ நம்மளோட சேருவானு நினைச்சு பார்க்கல...சரி அடுத்த bomb set பண்ண இதுதான் சரியான நேரம்... நான் போய் செட் பண்ணிட்டு வரேன்" என கூறி கொண்டே ராஜேஷ் சரி செய்த இரு சக்கர வாகனத்தில் பின்னால் ஒரு டெலிவரி பையை வைத்து கொண்டு வண்டியை செயல்படுத்தி கிளம்புகிறான் சந்தீப்.
சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையம் அங்கே சந்திப்பின் வாகனம் நிற்க அதில் இருந்து சந்தீப் கீழ இறங்கி போலீஸ் நிலையத்தில் நுழைய முன்னால் இருந்த PC இடம்," சார்...நீங்க கேட்டது வந்து இருக்கு எங்க கொண்டு போய் வைக்க...?" என கேட்க, அந்த PC மேலும் கீழும் அவனை பார்த்துவிட்டு "உள்ளே இன்ஸ்பெக்டர் டேபிள் இருக்கு அதுல போய் வை" என கூறிக்கொண்டே தணது வேலைகளை மீண்டும் பார்க்க தொடங்குகிறார்.
போகும் வழியில் தனது பாக்கெட்டில் உள்ள சிறிய கேமராக்களை டேபிள், அங்கு உள்ள fire extinguisher மற்றும் அங்கு உள்ள சிறிய செடிகளில் வைத்து விட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களில் தனது முகம் தெரியாத வகையில் திரும்பி கொண்டே டேபிள் அடியில் தான் கொண்டு வந்து வெடிகுண்டை கீழ் நோக்கியவாறு வைத்து விட்டு பொட்டலத்தை அங்கேயே வைத்து விட்டு போலீஸ் நிலையத்தை விட்டு வெளிய வருகிறான் சந்தீப்.
மதியம் ஒரு மணி, சூரியனை மறைக்க மேகம் இல்லாமல் வானம் வெய்யிலை கக்கி கொண்டு இருந்தது.
"சார்...சார்... யூ ட்யூப்ல புதுசா சேனல் ஆரம்பிச்சு அவங்க புது வீடியோ ஒன்னு விட்டு இருக்காங்க" என ரங்கா கூறி கொண்டே தனது மொபைல் போனை திலீபிடம் காட்ட,
"சரி சரி பொறுமையா காட்டுங்க அண்ணே... பார்ப்போம் என்னன்னு..." என ரங்காவின் போனை வாங்கி பார்க்கிறார் திலீப்.
"ஹாய் ஹலோ வணக்கம்...நான்தான் sphinx red நான்தான் sphinx blue.... எல்லாருக்கும் இந்த பொம்மை நியாபகம் இருக்கா....பாவம் இந்த பொம்மை அழுதுகிட்டே செத்து போச்சு... இதுக்கு எல்லாம் காரணம் போலீஸ்தான்...போலீஸ் நீங்க எல்லாம் ரொம்ப அறிவாளிங்கன்னு சொல்லறீங்க இல்லே... உங்களுக்கு ஒரு விடுகதை சொல்லறே...காலைல நாலு காலுல நடக்கும்....மதியம் ரெண்டு காலுல நடக்கும்... நைட் மூணு காலுல நடக்கும்....அது என்னன்னு கண்டுபுடுசுட்டா அடுத்த bomb இருக்க இடத்தை கண்டுபுடிச்சிறலாம்...போலீஸ் எல்லாம் ரொம்ப மூளைகாரங்கன்னு சொல்லரீங்க...முடிஞ்சா இதை கண்டுபுடிங்க... இல்லன்னா எங்களை குறை சொல்லாதீங்க... பை பை பை..." என்றபடி அந்த வீடியோ முடிகிறது.
வீடியோ முடிந்ததும் ரங்காவும் திலீபும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
அதே சமயம் அந்த விடுகதையை கண்டு பிடிக்க எல்லா காவல் துறையினரும் யோசித்து கொண்டு இருக்க, மேல் அதிகாரி விக்னேஷ்," இவங்களோட பேர் sphinx அதை தேடி பார்த்தா அது ஒரு புராண இதிகாச கதைல வர்ற ஒரு பிராணி...அதோட உடம்பு சிங்க உடம்பும் தலை ஒரு பொண்ணோட தலையும் கழுகோட இறக்கையும் வச்ச ஒரு உயிரினம்....இது க்ரீக் இதிகாசத்தில் வர்ற ஒரு கதைல வர்ற உயிரினம்...இது புதையலை காத்துகிட்டு இருக்கும்..யாராச்சும் புதையலை எடுக்க வந்தா அவங்ககிட்ட அது விடுகதை கேட்க்குமாம் சரியா பதில் சொன்னால் புதையல்.... தப்பா பதில் சொன்னால் மரணம்...இது வர்ற புராண கதைல எடிபஸ்ன்னு ஒருத்தர் தன்னோட பெத்தவங்கள கொண்ணுட்டு காட்டுக்கு போயிருவார்... போய் தன்னை தானே தற்கொலை பண்ணிப்பார்...இவங்க கேட்ட கேள்வியும் இந்த கதைல வரும்... அதுக்கான பதில் மனுஷன்தான்... மனுஷன் பிறந்ததும் நாலு காலில் தவளுவான்... வளர்ந்ததும் ரெண்டு காலில் நடப்பான்... முதிர்ந்ததும் மூன்று காலில் குச்சி ஊன்றி நடப்பான்...அப்போ மனிதன்தான்...நம்ம சென்னைல மனிதர்கள் அதிகமாக இருக்க இடம் தியேட்டர் மால் பீச் எல்லா எடத்துலயும் தேட சொல்லுங்க...காலைல நாலு காலுல நடக்கும்....மதியம் ரெண்டு காலுல நடக்கும்... நைட் மூணு காலுல நடக்கும்....423 இந்த நம்பர் இருக்க google location தேடி பாருங்க சென்னைல..." என கூறி கொண்டே தனது தொலைபேசியில் மற்ற காவல் துறையினரை அழைத்து தயாராக இருக்க கூறுகிறார்.
"சார் 423 நம்பர் லொகேஷன்ல ஒரு டிஎன்ஏ ரிசர்ச் லேப் இருக்கு சார்" எம என ஒரு போலீஸ் அதிகாரி கூற, விக்னேஷ் மற்ற போலீஸ் அதிகாரிகளை அந்த இடத்திற்கு அனுப்பி வைக்கிறார்.
மற்ற போலீஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து செல்ல அந்த இடத்தை சுற்றி கண்காணிக்க தொடங்குகிறார்கள்.
திலீப் யோசித்து விட்டு மேல் அதிகாரி விக்னேஷிற்கு தன் கைபேசியின் மூலம் அழைக்கிறார்.
"ஹலோ....சார்..."
"சொல்லுங்க திலீப்..."
"அந்த விடுகதைக்கு பதில் சொல்ல கூப்பிட்டேன்... sphinx பேர் க்ரீக் இதிகாசத்தில் வர்ற ஒரு விலங்கோட பேர்..."
"அது ஏற்கனவே கண்டுபிடிச்சி அங்க ஆளுங்களை அனுப்பி வச்சிட்டேன் திலீப்"
"அந்த விடுகதைக்கு பதில் என்ன சார்..."என திலீப் கேட்க,
"மனிதர்கள்தான்"என விக்னேஷ் கூற,
" இல்லை சார் அந்த விடுகதை பதில் அந்த கதைல வர்ற எடிபஸ்தான்...அந்த கதைல எடிபஸ் தன் அப்பா அம்மாவை கொல்லும் போது அவர் ஒரு விலங்கா மாறுவாரு அப்போ அவருக்கு நாலு கால்....காட்டுக்கு போகும் போது ரெண்டு கால்.... அங்க போய் குச்சி ஊன்றி நடந்து மூணு கால்...மேலும் ஏடிபஸ் ஷார்ட் OP... அப்போ OP 423 அப்படி ஒரு போலீஸ் ஸ்டேசன் இருக்கு சார்... அதுவும் சென்னைக்கு உள்ளதான் இருக்கு...அவங்க போலீஸ் போலிஸ்ன்னு வார்த்தையை அதிகமா யூஸ் பண்ணினாங்க... அப்போ OP 423 போலீஸ் நிலையமா இருக்கும்..." என திலீப் விளக்க,

OP 423 போலீஸ் நிலையத்தில் சந்தீப் ஏற்கனவே டேபிள் கீழே வைத்து இருந்த வெடிகுண்டு வெடித்து போலீஸ் நிலையம் பற்றி கொண்டு எரிந்து வெடித்து சிதறுகிறது.
போலீஸ் நிலையம் வெடித்த தகவல் விக்னேஷ் வந்தடைய விக்னேஷ் மீண்டும் திலீப்ற்கு அழைத்து "நீங்க சொன்ன மாறியே அந்த போலீஸ் நிலையம்தான்..."
"சாரி சார் நான் கொஞ்சம் தாமதமா சொல்லிட்டேன்"
"நீங்க பேசாம மறுபடியும் இங்க கிளம்பி வாங்க திலீப்...உங்க அறிவு இந்த கேஸ்க்கு பயன்படும்..."
"இல்லை சார்... இப்போ நான் நிம்மதியா இருக்கேன்...நான் இங்கேயே இருக்கேன்"என மறுமுனையில் திலீப் கூற,
"உங்க அறிவு இதுக்கு உதவும் நடந்ததை மறந்து வாங்க..."என விக்னேஷ் கூற,
"சரி சார் யோசிக்கிறேன்..."என கூறி இணைப்பை துண்டிக்கிறார் திலீப்.

அதே சமயம், "நானும் ஒரு ஆளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..."என தன் மடிக்கணினியை பார்த்து கொண்டே ராஜேஷ் சிரிக்கிறான்.

(தொடரும்....)
1000179299.jpg
1000178976.jpg



பின்குறிப்பு : Sphinx பற்றி மேலும் அறிய லிங்க் கிளிக் செய்யவும்


1000179309.jpg
 
Top