• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அணு - 10

Member
Messages
51
Reaction score
2
Points
8
சூரியன் மேகத்தை விலக்கி விட்டு பார்த்து கொண்டிருந்த காலை நேரம்....சென்னை காவல் தலைமையகத்தின் முன் நின்று நிமிர்ந்து நாட்டின் தேசிய கொடியை பார்த்து கொண்டு இருந்தான் சந்தீப்.
காவல் தலைமையகத்தின் உள்ளே சென்ற சந்தீப் தன் எதிரில் உள்ள பெண் போலீசாரிடம்,"நான்தான் sphinx blue... நீங்க தேடுற கிரிமினல்..."என கூற,
"என்னது...?"என அதிர்ச்சியுடன் கேட்டு கொண்டே நிமிர்ந்து அந்த போலீஸ் பார்க்க,
"நான் சரணடைய வந்து இருக்கேன்.."என கூறி கொண்டே தன் கையில் உள்ள முகமூடியை எடுத்து தன் முகத்தில் மாட்டுகிறான்.
உடனே தன் கை துப்பாக்கியை எடுத்து சந்தீப்பின் முன் நீட்ட அதை பார்த்த மற்ற போலீஸ் துப்பாக்கியை நீட்டி,"கையை தூக்கி தலைக்கு பின்னாடி வச்சு அசையாம நில்லு..."என கூறுகிறார்கள்.
"சார்....sphinx நம்ம ஆபீஸ்லேயே வந்து சரண்டர் ஆயிருக்கான் சார்..."என மேல் அதிகாரி விக்னேஷ் அறைக்குள் வந்து ஒரு போலீஸ் கூற,
"என்ன....இப்போ என்ன பிளான் பண்ணி வந்து இருக்கான்..."என எண்ணி கொண்டே எழுந்து நடக்கிறார் விக்னேஷ்.
"சரண்டர் ஆயிட்டானா....சரி...நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்...அவங்கள நான் பார்த்துக்கறேன்....இப்போ நார்மல் ஆயிட்டு இருக்காங்க...."என மருத்துவமனையில் கிரேஸ் மயக்கத்தில் இருப்பதை பார்த்தபடி அலைபேசியில் பேசி கொண்டு இருக்கிறார் எரிக்.
"சார்....அவன் ஆபீசர் திலீப் பத்தி கேட்கிறான்....அவரை பார்க்கும் வரை நான் எதுவும் சொல்லமாட்டேன் என சொல்லுறான் சார்..."என அமர்ந்து இருந்த சந்தீப்பை பார்த்து கொண்டே விக்னேஷிடம் கூறுகிறார் அருகில் இருந்த போலீஸ்.
அதே சமயம் கயல் மற்றும் ராஜேஷ் அங்கு இருந்து தப்பித்து வேறு இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றனர்.
"நான் விக்னேஷ்....நான்தான் இந்த ஆபரேஷன்க்கு இஞ்சார்ஜ்....திலீப் இப்போ லீவுல இருக்கார்...அதுனால நீ என்கிட்ட எல்லா உண்மையையும் சொல்லலாம்...எதுக்காக இப்போ நீயா சரண்டர் ஆனே....எதுக்காக இதெல்லாம் பண்ணுன....அப்புறம் யாரு நீ முதல்ல..."என கேட்டு விட்டு விக்னேஷ் சந்தீப் முகத்தை பார்க்க,
"நான் அந்த அணு ஆயுதத்தில் டைமர் செட் பண்ணிட்டு வந்து இருக்கேன்...அது வெடிக்க கூடதுன்னா என்னோட கோரிக்கையை ஏற்க்கணும்...."என சந்தீப் கூற,
"கோரிக்கையா...?"என விக்னேஷ் கேட்கிறார்.
அதே சமயம் பார்க்கில் திலீப் மற்றும் மற்ற அதிகாரிகள் பேசி கொண்டு இருந்தார்கள்.
"நீங்க இப்போ என்ன யோசுப்பீங்கன்னு தெரியும்... தியாகுவை மீட் பண்ண போறீங்கதானே....நாங்களும் வர்றோம்..."என ரங்கா கூற,
"இல்ல...நான் தனியா போறேன்..."என திலீப் கூற,
"இல்ல சார்...நாங்களும் வர்றோம்...நம்ம டீம்மா செயல்படனும்..."என கோகுல் கூற,
"நான் இதுக்கு தயார் ஆயிட்டேன்...உங்க கூட வரணும்னு..."என குமார் கூற,
"சரி... போவோம்...ஆனால் என்ன நடந்தாலும் அது உங்க own risk"என கூறி திலீப் மற்றும் மற்ற அதிகாரிகள் நன்கு சக்கர வாகனத்தில் விரைந்து செல்கின்றனர்.
"என்னது....பிரஸ் மீட் வேண்டும்னு கேட்கின்றானா....அவன் என்ன யோசிக்கிறான்..."என மற்ற அதிகார்கள் விக்னேஷ் கூறியதை கேட்டு திருப்பி பேச,
"ஆமா....அதுவும் குறிப்பாக இன்னைக்கு 8 மணிக்குள்ள வேண்டும்ன்னு கேட்கிறான்...அப்படி நம்ம பிரஸ் மீட் வைக்கலேன்னா அணு ஆயுதத்தை செயல்படுத்துவேன்னு சொல்றான்..."என விக்னேஷ் கூற,
"அப்போ... தீவிர வாதி பேச்சை கேட்க போறீங்களா..."என மற்றொரு அதிகாரி கேட்க,
"நம்மளோட முக்கிய கடமை மக்களை பாதுகாக்கிறது...நம்ம மீட் வச்சா அவன் அணு ஆயுதத்தை நம்மகிட்ட குடுத்தறேன்னு சொல்றான்..."என விக்னேஷ் கூற,
"நம்ம அவனை நம்ப முடியாது..."என ஒரு அதிகாரி கூற,
"அவங்க பண்ண எல்லா கிரைம்லயும் சொன்னதை செஞ்சு இருக்காங்க... அது மட்டுமில்லாம இதுதான் அவங்க முதல் தடவை டிமாண்ட் வைக்கிறது..."என விக்னேஷ் கூற,
"சரி...ஏதாச்சும் ஏடாகூடமாக ஆனால்..."என ஒருவர் கேட்க,
"நான் responsibility எடுத்துக்கறேன்..."என விக்னேஷ் கூறுகிறார்.
அதே சமயம் மருத்துவமனையில் இருந்த கிரேஸ் கண்விழிக்கிறாள். எழுந்து தனக்கு என்ன நடந்தது என யோசித்து கொண்டு இருக்கிறாள்.
அதே சமயம் திலீப் மற்றும் மற்ற அதிகாரிகள் Dr தியாகு வீட்டிற்கு சென்று அழைப்பு மணியை அடிக்கிறார்கள்.
"யாரு...?"என உள்ளே இருந்து ஒரு குரல் வர,
"திலீப் from போலீஸ் டிபார்ட்மண்ட்...நான் Dr தியாகுவை பார்க்கணும்..."என கூற,
"டாக்டர் இப்போ யாரையும் பார்க்க மாட்டார்..."என உள்ளே இருந்தவர் கூற,
"போய் உங்க டாக்டர்கிட்ட சொல்லுங்க...26 குழந்தைகள் காத்தோட காத்தா மறைஞ்ச விஷயத்தை பத்தி பேசணும்ன்னு..."என கோகுல் கூற,
"ஒரு நிமிஷம்...."என கூறுகிறார் உள்ளே இருந்த நபர்.
சிறிது நேரத்தில் அந்த கதவு திறக்க, நால்வரும் உள்ளே நடந்து சென்று உள்ளே படுத்த படுக்கையாக இருக்கும் Dr. தியாகுவை பார்க்கிறார்கள்.

"எல்லாரும் தயாரா இருக்கீங்களா..."என தியாகு கேட்க,
"எதுக்கு..."என ரங்கா கேட்க,
"என்னை பழி வாங்க....வேற எதுக்கு..."என தியாகு கூற,
"5 வருஷமா தயார்...ஆனால் எனக்கு நடந்ததுக்கு மட்டும் இல்லை...அந்த குழந்தைகளுக்கு நடந்ததுக்கும் சேர்த்துதான்..."என திலீப் கூறுகிறார்.
அதே சமயம் மருத்துவமனையில்,"என்னன்னு முழு விவரம் தெரியலை....ஆனால் sphinx blue சரண்டர் ஆகிட்டான்னு சொன்னாங்க..."என எரிக் கிரேசிடம் சொல்ல,
தனது படுக்கையில் இருந்து எழுந்து நிற்க முடியாமல் பக்கத்தில் உள்ள பொருட்களை தட்டி விட்டு மூச்சு வாங்க எழ,
பதறி ஓடி வந்த எரிக்,"ரொம்ப ஸ்றைன் பண்ணாதீங்க...டாக்டர்ஸ் உங்களை மாதிரி கேஸ் இது வரைக்கும் பார்த்தது இல்லை....உங்களை கிளாஸ் எக்ஸாமினேஷன்ல வைக்கணும்னு சொல்லிருக்காங்க..."என கூறி அருகே வர,
"Twelve.... எனக்குதான்...எனக்கு மட்டும்தான்..."என மூச்சு வாங்கி கொண்டே கூறுகிறாள் கிரேஸ்.
அதே சமயம்,"உன்னை மாதிரி சின்ன பசங்க இதெல்லாம் நம்ப மாட்டீங்க...ஒரு காலத்தில் நம்ம மாநிலம் இந்த உலகத்தில பட்டு போன இடமா இருந்தது...நம்ம மண்ணுல யுத்தம் முடிஞ்சு கிட்ட தட்ட 70 வருசம் ஆச்சு...ஆனால் யோசிச்சு பார்த்தால் நம்ம இன்னும் தோற்கடிக்கப்பட்ட ராஜ்ஜியம்தான்...இந்த நிலைமைக்கு வர்ற நம்ம நிறைய தியாகங்கள் காயங்களை சந்திச்சு இருக்கோம்...நம்ம மாநிலம் உண்மையான சுதந்திரம் உணரணும்..." என தியாகு கூற,
"அதுக்குதான்....athena program கொண்டு வந்தீங்களா...?"என திலீப் கேட்க,
"ஆமாம்...நம்ம செயற்கையாக உருவாக்கும் மனிதர்களுக்கு உண்மையான மனிதர்களை விட விழிப்புணர்வும் அறிவு திறனும் அதிகளவு இருக்கும்...அப்படி உருவாகும் மனிதர்கள்தான் என்னோட ஆயுதம்...அதுதான் என்னோட குறிக்கோள்...அந்த பிராஜக்ட் fail ஆனாலும் இப்போ ஒண்ணும் இல்லை...அவங்கதான் வருங்காலத்திற்கு படிக்கட்டுகள்...."என தியாகு கூற,
"இது ஒண்ணும் தேசியவாதம் இல்லை...நீ ஒன்னும் தெரியாத குழந்தைகளின் உயிரை உன்னோட சுயநல குறிக்கோளிற்கு திருடு இருக்கே...நீ செஞ்ச தப்புக்கு உன்னை தேடி sphinx வந்து இருக்காங்க..."என குமார் கூறுகிறான்.
"அப்போ உங்க நான்கு பேருக்கும் நிறைய விஷயம் தெரிஞ்சு இருக்கு போல....இதை உங்க மேல் அதிகாரிகளிடம் சொன்னீங்களா....?ஒரு சின்ன தீ பொறி பெரிய சூறாவளி காற்று கிட்ட இருக்க மாதிரி நீங்க தெரிஞ்ச விஷயம்... மத்த இடத்துக்கு அது போறதுக்கு முன்னாடியே அணைஞ்சு போய்டும்..."என தியாகு கூற,
"அப்படி இருந்தால் இருக்கட்டும்....ஆனால் நாங்க எங்க தீப்பொறியை கொடுப்போம்...கண்டிப்பா உன்னை விடமாட்டோம்..." என திலீப் கூற,
அந்த சமயம் அங்கே வேலை செய்து கொண்டு இருந்த ஒரு நபர் தியாகு காதில் வந்து சந்தீப் போலீஸிடம் சரணடைந்த விவரத்தை கூற,
"என்ன.... நீங்க சொன்ன sphinx போலீஸ்கிட்ட சரண்டர் ஆகிட்டான் போல...."என தியாகு கூற,
நால்வரும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.
"தன்னை தானே sphinx என்று கூறி வீடியோ வெளியிட்டு தொடர் குண்டுவெடிப்பில் இருந்த நபர் இன்று காலை போலீஸிடம் சரணடைந்தார்....சரணடைந்த அவர் இன்று 8 மணியளவில் செய்தியாளர்களிடம் பேச கோரிக்கை வைத்துள்ளார்...அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அனைத்து உண்மைகளையும் கூற போவதாக தகவல் வெளியாகி உள்ளது..."என தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வருவதை பார்த்த கயல் ராஜேஷிடம் ஓடி சென்று,
"Sphinx blue சரண்டர் ஆயிட்டான்...இப்போ என்ன செய்றது....எதுக்கு அவன் போலீஸ்கிட்ட போனான்...நம்ம இப்போ என்ன பண்ண போறோம்..."என கயல் கூற,
அதிர்ச்சியில் இருந்த ராஜேஷ்,"நாங்க களத்தில் இறங்க நேரம் வந்தாச்சு..."என கூறுகிறான்.
அதே சமயம் விரைந்து காவல் தலைமையகத்தில் நுழைந்த திலீப் மற்றும் மற்ற அதிகாரிகளை பார்த்த விக்னேஷ் அவர்களை ஓரமாக அழைத்து பேசுகிறார்.
"சார்.... நான் அந்த sphinx கிட்ட பேசணும்...." என திலீப் கேட்க,
"No... அது முடியாது...போலீஸ்ல கூட ஒரு சில குறிப்பிட்ட போலீஸ் மட்டும்தான் உள்ள போய் அவனை பார்க்க முடியும்..."என விக்னேஷ் கூற,
"உங்களால ஏதாச்சும் பண்ண முடியும்...இது பத்திதான் உங்களுக்கு நல்லா தெரியுமே...." என ரங்கா கூற,
"நான் இதை பார்த்துக்கறேன்.... உங்களால போக முடியாது...."என கூற விரக்தியில் மெதுவாக திலீப் திரும்ப,
"அந்த பையன் பிரஸ் மீட்க்கு ஒரு இடத்தை சொல்லி இருக்கான்...ஆனால் மற்ற அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கிறார்கள்..."என விக்னேஷ் கூற,
"என்ன ஆனாலும் சரி....அந்த பையனை யார்கிட்டேயும் அணுப்பிடாதீங்க ..."என திலீப் கூற,
"சரி..."என கூறி தன் சட்டையில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்து காட்டுகிறார் விக்னேஷ்.
"என்ன இது..."என திலீப் கேட்க,
"பிரஸ் மீட் நடக்கும் இடத்தின் அட்ரஸ்ஆ இருக்கலாம்..."என விக்னேஷ் கூற மெதுவாக புன்னகைத்தபடி பார்க்கிறார் திலீப்.
மருத்துவமனையில் அமர்ந்து இருந்த கிரேஸ் எரிக் பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"நான் சொன்னேன்ல.... sphinx சொன்ன கோரிக்கைல மற்ற போலீஸ் யாரும் வரக்கூடாத்துன்னு இருக்குன்னு...நாங்க பார்த்து கொள்கிறோம்..."என அலைபேசியில் விக்னேஷ் எரிக் இடம் கூற,
"தீவிரவாதி பேச்சை கேட்க போறேன்னு சொல்லறீங்களா...ஆனால் நீங்க அமெரிக்கன் கவர்ன்மென்ட் சொல்ற விஷயத்தை கேக்க போறதில்ல..."என எரிக் கூறி அழைப்பை துண்டிக்க,
"நீ உன்னோட time வேஸ்ட் பண்ணிட்டு இருக்கே...உனக்கு ஏதாச்சும் வேணும்னா நீ அதை எடுத்துக்கணும்...."என கிரேஸ் கூற,
"ஏர்போர்ட் சம்பவத்தில் இருந்து போலீஸ்க்கும் நமக்கும் நல்ல விதமாக போகல எதுவும்...நம்ம இப்போ அப்படி பண்ணுனா...." என எரிக் பேசுவதை இடைமறித்து,
"நீங்க எப்போவும் இப்படித்தான்... ரூல்ஸ் பேசிட்டு இருக்கீங்க.....இதை நான் பாத்துக்கிறேன்...."என கிரேஸ் கூறுகிறாள்.
மணி 7 தொட வானத்தில் ஹெலிகாப்டர் மற்றும் தரையில் இராணுவ வீரர்கள் பாதுகாப்பில் சந்தீப் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறான்.
அதே சமயம் "இப்போ Sphinx போற வண்டியின் எக்ஸாக்ட் லொகேஷன் வேணும்..."என கிரேஸ் கூற,
"ஓகே மேடம்..."என பக்கத்தில் இருந்த அமெரிக்கன் ஏஜென்சி அதிகாரி தனது கணினியை தட்டி திரையில் பார்க்கிறார்.
அப்பொழுது ஒரு பாலத்தின் கீழே போலீஸ் வாகனம் செல்ல அதன் வழியே வந்த ஒரு தீயணைப்பு வண்டி போலீஸ் வண்டியின் மீது மோதுகிறது.
போலீஸ் வாகனம் தடம் புரண்டு இடிந்து விழ, தீயணைப்பு வாகனத்தில் இருந்து விரைந்து கையில் துப்பாக்கியுடன் அமெரிக்கன் ஏஜென்சி அதிகாரிகள் இறங்கி போலீஸ் வாகனத்தின் கதவை உடைத்து உள்ளே பார்க்க உள்ளே சந்தீப் இல்லை.
"மேடம் அது ஒரு ட்ராப்..."என அமெரிக்கன் அதிகாரி கூற,
திரையை பார்த்த கிரேஸ் ,"ஐ found you...."என கூறி திரையில் ஒரு இடத்தை சுட்டி காட்டி அங்கு எரிக் மற்றும் கிரேஸ் விரைந்து செல்கிறார்கள்.

அங்கு சாதாரண காரில் போலீசுடன் சென்று கொண்டு இருந்த சந்தீப்,"அவ வந்துட்டா...."என கூறுகிறான்.
அவர்கள் காரின் பக்கத்தில் சென்ற கிரேஸ் தன் கைத்துப்பாக்கியை எடுத்து காரின் சக்கரத்தில் சுடுகிறாள். சந்தீப் சென்ற கார் பக்கத்தில் இருந்த சுவற்றில் தடுமாறி மோத அந்த காரில் இருந்து அடிபட்டு வெளியே வருகிறான் சந்தீப். கிரேஸ் தனது காரில் வேகமாக சந்தீப்பை நோக்கி வர, இருசக்கர வாகனத்தில் கிரேஸ் காரின் முன்னே அதிவேகத்தில் வந்து தன் கையில் உள்ள வெடிகுண்டை வீசுகிறான் ராஜேஷ்.
வெடித்த வேகத்தில் ராஜேஷ் மற்றும் கிரேஸ் தூக்கி எறியப்பட அந்த இடத்தை நோக்கி ஓடி வருகிறான் சந்தீப்.
ராஜேஷ் அடிபட்ட காயங்களுடன் எழுந்து நிற்க,"வந்துட்டியா..."என கேட்டு கொண்டே திரும்பி கிரேஸ் பார்க்க,
கிரேஸ் தனது காரில் இருந்த தன் கை துப்பாக்கி எடுத்து கொண்டு அடிபட்டு இரத்தம் சொட்ட வெளியே வருகிறாள். காரில் இருந்து பெட்ரோல் லீக் ஆக காரின் முன்னால் நின்று கொண்டு,"த்ரீ....உன்னை எப்போவும் என்னால் முந்த முடியாது... எப்போதும் எனக்கு நீ தேவைபட்டே...எனக்குத்தான் நேரம் கிடைக்கல....இதுவரைக்கும் நான் உயிர் வாழ முடிந்தது உன்னால்தான்...ஆமா..நீதான் என்னை முன்னாடி செல்ல வச்சே....ஆனால் இது நம்ம good bye சொல்ல வேண்டிய நேரம்...அதுனால எனக்காக நீ உயிர் வாழ் த்ரீ...."என கூறி கொண்டே சந்தீப் அருகே வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு, மீண்டும் திரும்பி சென்று காரின் அருகே நின்று,"good bye three" என கூறிவிட்டு தன் கையில் உள்ள துப்பாக்கியால் காரில் இருந்து வழியும் பெட்ரோலை நோக்கி சுடுகிறாள்.காருடன் சேர்ந்து கிரேஸ் உடலும் வெடித்து சிதறி சந்தீப்பின் கண்முன்னே நெருப்பில் எரிகிறது.
"Five...."என சந்தீப் கத்தி கொண்டே அழுகிறான்.
அதே சமயம் தன் கை கடிகாரத்தை பார்த்து கொண்டே,"என்னாச்சு ஏன் இன்னும் வரல...."என பிரஸ் மீட் நடைபெறும் இடத்தில் திலீப் நின்று கொண்டு இருக்கிறார்.
ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்த ஹீலியம் பலூன் கட்டப்பட்டு இருந்த கயிறு மணி 8 ஆனதும் அறுந்து புளூட்டோனியம் வெடிகுண்டுடன் வானத்தில் பறக்கிறது.
"சார்....இதை பாருங்க..."என ரங்கா தன் கைபேசியை காட்ட, கோகுல் ,குமார் மற்றும் திலீப் அதை பார்க்கிறார்கள்.
"குட் ஈவ்னிங்....நான்தான் Sphinx blue... உங்க இடையூறால் இன்னைக்கு பிரஸ் மீட் கேன்சல் பண்றேன்....இந்த பிரஸ் மீட் கேன்சல் ஆகும் போது ஆட்டோமேட்டிக்கா உங்களுக்கு என்னோட இந்த கடைசி தகவல் கிடைக்கும்....இப்போதான் இந்த ஆட்டத்தோட கடைசி பகுதிக்கு வந்து இருக்கோம்...நான் அணு குண்டு அதாவது atomic bomb ரெடி பன்னிருக்கேன்....அந்த அணுகுண்டு 10 மணிக்கு அதுவாகவே வெடிக்கும்....யாரலையும் அதை நிறுத்த முடியாது....அப்புறம்....தமிழ் நாட்டில் இருக்கும் மக்களே.... bye...."என கூறி கொண்டே தன் முகத்தில் இருக்கும் முகமூடியை கழட்டி காட்டுகிறான் சந்தீப். அத்துடன் அந்த வீடியோ முடிய அந்த வீடியோ viral ஆகிறது.
"இது அவன் முன்னாடியே பிளான் பன்னிருக்கான்
போல...எதுவும் மாறல...ஆட்டத்தை ஆரம்பிப்போம்..."என திலீப் மற்ற மூவரை பார்த்து கூறுகிறார்.

(தொடரும்....)
1000190940.jpg
1000190946.jpg
1000190947.jpg
 
Top