Member
- Messages
- 51
- Reaction score
- 2
- Points
- 8
அந்த இரவில் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்த ஹெலிகாப்டர்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிய ,"தற்போது நிலவரத்தின்படி தொடர் குண்டு வெடிப்புகளை செய்து Sphinx என்ற பெயரில் பொது வெளியில் காணொளிகளை பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய நபர் போலீஸிடம் இருந்து தப்பித்தார்..மேலும் இராணுவத்தில் இருந்து திருடப்பட்ட புளூட்டோனியம் அணுகுண்டு இன்று 10 மணியளவில் வெடிக்கும் என தனது புது காணொளியை பதிவிட்டுள்ளார்....."என தொலைக்காட்சிகளில் செய்தி ஒளிபரப்பி கொண்டு இருந்தனர்.
"அரசு போர்கால உத்தரவை நடைமுறைபடுத்த உள்ளது....மேலும் இது நமது அரசின் அவசர கால நேரம்... தமிழ் நாட்டு மக்கள் அதுவும் குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்...நமது அரசு அதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது...மேலும் நமது அரசு பொது மக்களை காக்க ஸ்பெஷல் மிலிட்டரி ஸ்குவாட்ஸ் மற்றும் கிரவுண்ட் டிபன்ஸ் ஃபோர்ஸ் அமைத்து உள்ளது...எனவே பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டு கொள்கிறோம்..."என நமது மாநிலத்தின் முதலமைச்சர் தொலைகாட்சியில் பேசி கொண்டு இருக்க, கயல் அங்கு உள்ள தெரு வீதிகளில் நடந்து சென்று கொண்டிருக்கிறாள்.
எதிரில் ராஜேஷ் காயங்களுடன் நடந்து வருவதை பார்த்த அவள்,"12..."என அழைக்க,
திரும்பி பார்த்த ராஜேஷ் அதிக இரத்த போக்கு காரணமாக,"கயல்..."என கூறி கொண்டே மயங்கி விழுகிறான்.
அவனருகே ஓடி வந்த கயல்,"12....உனக்கு என்னாச்சு....12"என கேட்டு கொண்டே அவனை தூக்க முயற்சிக்கிறாள்.
"அவங்க நிஜமாக அதை பண்ணதான் போறாங்க திலீப் சார்....இது அவங்க பழி வாங்கற நேரம்..."என ரங்கா கூற,
"நானா இருந்தால் அப்படி பண்ணமாட்டேன்..."என நடந்து கொண்டே திலீப் கூறுகிறார்.
தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைக்க,"அனைத்து இணைப்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு உள்ளது..."என அலைபேசி கூறுகிறது.
"நல்லா யோசிச்சு பாருங்க...இப்போ வரைக்கும் அவங்க எத்தனை பேரை கொண்ணிருக்காங்க..."என கூறி கொண்டே லிஃப்ட் பொத்தானை அழுத்த,
"வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைத்த பொழுது...அவங்க தீயணைப்பு நடவடிக்கை செய்து அந்த கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னாடியே அங்க இருக்க எல்லா மக்களையும் வெளிய வர வச்சாங்க...."என திலீப் கூற, லிஃப்ட் கதவு திறந்தவுடன் அதன் உள்ளே சென்ற நால்வரும் நிற்க,
"அது மட்டுமில்லாம சென்னை இரயில் நிலையத்தில் வெடி விபத்து நடந்த பொழுதும் யாரும் சாகல.... ஏர்போர்ட்டில் அவங்களை மாதிரியே வெடிகுண்டு வைத்த copycat இடம் இருந்து கூட அந்த வெடிகுண்டை எடுக்க வந்தாங்க...இவங்க சாதாரண திவீரவாதிங்கள் இல்ல....அவங்க காரணம் வேற....அவங்க நமக்கு ஏதாச்சும் செய்தி சொல்லுவாங்க..."என திலீப் கூற லிஃப்ட் மேல் புளோர்க்கு வந்தடைகிறது.
அப்பொழுது திலீப்பின் அலைபேசி அழைக்க,"ஹலோ...."என எடுத்து பேச,
"சொல்லுங்க சார்....ரொம்ப நேரமா எனக்கு கால் பண்ணிட்டு இருந்திருக்கீங்க....என்ன விஷயம்....என் அண்ணா நல்லா இருக்காரா..."என திவ்யா கேட்க,
"நல்லா இருக்கார்...நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் அதுக்குதான் கால் பண்ணேன்..."என திலீப் கூற,
"என்ன கேளுங்க..."
"அந்த புளூட்டோனியம் ஆயுதம் தாங்கிய வெடிகுண்டை எந்த ஒரு மக்களையும் கொல்லாமல் வெடிக்க வைக்க முடியுமா...?"
"என்னது..."
"ஒரு மனுசனுக்கு கூட காயம் படாமல்...ஒரு அடியும் படாமல்....அந்த வெடிகுண்டை வெடிக்க வைக்க முடியுமா...?"
"எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு வழி இருக்கு...அதுக்கு பேர் High-altitude nuclear explosion..."என திவ்யா கூற,
"என்ன சொல்றீங்க...."
" A High-altitude nuclear explosion.... வெடிகுண்டை தரையில் வெடிக்க வைக்காமல் வளிமண்டலத்தின் அடுக்கான stratosphereல வெடிக்க வைப்பது...இது அமெரிக்கா மற்றும் சோவியத் நாடுகளில் கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி நடத்தி பார்த்து இருக்காங்க....யாருக்கும் அடி படல.... யார் உயிருக்கும் சேதம் வரல....ஆனால் பவர் சீஸ் ஆகிடும்.... கரெண்ட் இல்லாமல் போகும்....சில நாட்களுக்கு...."என திவ்யா கூற,
"Stratosphere.... stratosphere.... எப்படி அவங்க stratosphere வரைக்கும் bombs எடுத்திட்டு போவாங்க...."என கோகுல் கேட்க,
"ஒரு வேளை பலூன் வச்சு கொண்டு போகலாம்ல...."என குமார் கூற,
"என்னது..."என விழித்தபடி ரங்கா கேட்க,
"நாங்க காலேஜ் படிக்கும் பொழுது எங்க ஹாஸ்டலில் தங்கி இருந்த ஒரு பையன் அப்போ சைன்ஸ் பிராஜக்ட்க்கு ஒரு பெரிய பலூன் செஞ்சு அதுல கேமரா வச்சு மேல விட்டு மேல இருந்து பூமியின் ஃபோட்டோ எடுத்தான்..."என குமார் கூற,
"நான் உங்ககிட்ட அப்புறம் பேசறேன்..."என கூறி திலீப் அழைப்பை துண்டித்து விட்டு, அங்கே இருந்து நேராக நடந்து கன்ட்ரோல் ரூமிற்கு செல்கிறார்கள்.
மயங்கி விழுந்த ராஜேஷ் பக்கத்தில் அமர்ந்து கொண்டு தண்ணீர் தெளித்து தனது கைபேசியில் சந்தீப்பை அழைக்கிறாள் கயல்.
"12....கண்ணு முழிச்சிரு.....12"என அவனை பார்த்து கொண்டு இருக்கிறாள்.
"லேப்ல இருந்து ஏதாச்சும் தகவல் வந்ததா...."என ரங்கா கேட்க,
"இல்ல எதுவும் வரல....பலூன் மாதிரி ஏதாச்சும் இருக்கான்னு பார்த்திட்டு இருக்காங்க இன்னும்...."என குமார் கூற, திடீர் என மேலே பறந்து கொண்டு இருக்கும் கேமரா footage பார்க்க,
"சார்....இங்க வந்து பாருங்க...."என குமார் கூற,
ரங்கா அவர் அருகே வந்து பார்க்கிறார். திரையில் ஒரு பெரிய பலூன் ஒன்று பறப்பதை பார்க்கிறார்கள்.
"சார்...இது நம்ம சிட்டில இருக்க லைவ் கேமரா footage....43 நிமிஷத்துக்கு முன்னாடி பறந்து இருக்கு.... கரெக்ட்டா அந்த வீடியோ ரிலீஸ் ஆன டைம்..."என குமார் கூற,
அதை பெரிது படுத்தி பார்த்த திலீப் கண்ணில் அந்த பலூனின் இறுதியில் ஒரு பெட்டி தொங்கி கொண்டு இருப்பதை பார்க்கிறார்.
"சந்தேகமே இல்லை... வானத்தில்தான் அந்த வெடிகுண்டு வெடிக்க போகுது...."என கூறுகிறார்.
அதே சமயம் சந்தீப் அங்கு உள்ள சாலையில் சோகமாக நடந்து சென்று கொன்டு இருக்கிறான்.
சென்னை தலைமையகத்தில், "சார்....நம்ம தமிழ்நாடு உளவு துறைல இருந்து ஒரு வீடியோ நமக்கு அனுப்பி இருக்காங்க...அந்த பலூன் இப்போ 10, 000மீட்டர்ல சென்னைக்கு நேர் மேல பறந்து இன்னும் மேல போய்ட்டு இருக்கு...."என ஒரு அதிகாரி கூற,
"சரி....ஸ்பெஷல் மிலிட்டரி ஃபோர்ஸ் அங்க போக சொல்லுங்க...."என மேல் அதிகாரி விக்னேஷ் கூறுகிறார்.
"High - altitude nuclear explosions எல்லாமே திறந்த வெளியில்தான் பண்ணுவாங்க... வெடிக்கும் போது அதுல இருந்து வர்ற கதிர்வீச்சு எல்லாம் அப்போதான் நேரா வளிமண்டலத்தின் அதைத் தாண்டி ஸ்பேஸ்லயும் போகும்....அதுக்கு பதிலாக அது மிக அளவில் அதிகமான மின்காந்த அலை களை உற்பத்தி பண்ணும்...அதுக்கு கீழ தரையில் இருக்க எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாத்தையும் பழுதடைய வைக்கும் சக்தி இருக்கு...."என லேப் ஆராய்ச்சியாளர் கூற,
"நீங்க சொல்றது மட்டும் நடந்தால் தமிழ்நாட்டில் பாதி இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்..."என யோசிக்கிறார் விக்னேஷ்.
அதே சமயம்,"அவங்க என்ன நம்மளை இப்போ கற்காலத்துக்கு கூட்டிட்டு போக போறாங்களா...."என திலீப் யோசித்து கொண்டு இருக்கிறார்.
"பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கால் பண்ணுங்க....எல்லா அணுமின் நிலையத்தையும் இப்போ மூட சொல்லுங்க...."என விக்னேஷ் கூற,
"சார்....Aircraft க்கு என்னவாகும்...."என கோகுல் கேட்க,
"Aircraft எல்லாத்துலயும் EMP சீல்டிங் ஈக்விப்மன்ட் இல்லை....அதுனால அது விபத்துக்கு உள்ளாகும்...நம்ம மாநிலத்தில் அந்த மாதிரி சீல்ட் இருக்க மாதிரி ஒரே ஒரு விமானம்தான் இருக்கு..."என ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.
அதேசமயம் மயக்கத்தில் இருந்து கண்விழித்த ராஜேஷை பார்த்து அவனை கட்டியணைத்து கொள்கிறாள் கயல்.
"உனக்கு ஒன்னும் ஆகாது...."என கூறி அழுகிறாள் கயல்.
"உடனடியாக எல்லா aircrafts உம் தரை இறங்க சொல்லி airspace க்கு உத்தரவு கொடுங்க...."என விக்னேஷ் கூற,
"சார் இப்போ மொத்தம் 120 aircrafts வானத்தில் பறந்த்துட்டு இருக்கு....எல்லாத்தையும் தரைக்கு கொண்டு வர எப்படியும் 90 நிமிடங்கள் ஆகும்...."என கன்றோலில் அமர்ந்து இருக்கும் அதிகாரி கூற,
"நமக்கு அந்த அளவுக்கு நேரம் இல்லை....30 நிமிடங்களில் செய்ங்க...."என முகத்தில் வியர்வை வடிய கூறுகிறார்.
"நம்ம நாட்டோட medical and transportation facilities மற்றும் wlfare and transportation ministries க்கு தொடர்பு கொள்ளுங்கள்...." விக்னேஷ் கூறி விட்டு நகர,
"சரி...."என கூறுகிறார் அங்கே உள்ள அதிகாரி.
"Echo 01, டார்கெட் 060, குறைவு 48 miles, உயரம் 660..."என ஜெட் விமானத்தில் பறந்து கொண்டு இருந்த நபர் கூற,
"நான் ரேடார் பார்த்துட்டேன்...48 miles ahead, உயரம் 660...அதுதான் உங்க target...i copy.... அதுதான் உங்க target...."என கூற,
"Roger..."என கூறி கொண்டு EMP சீல்டு உள்ள அந்த விமானம் வானத்தில் சீறி பாய்ந்தது.
அதே சமயம் சந்தீப் சென்னையில் உள்ள ஒரு பெரிய உயரமான கட்டிடத்தின் உள்ளே நுழைந்து அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறான்.
"Echo 01, டார்கெட் அடைய 18 miles இருக்கு..."என அந்த aircraft விமான ஓட்டி கூற,
"Roger....Target கிட்ட போங்க...."என கூற, சென்னை தலைமையகத்தில் உள்ள திரையில் விமானத்தின் முன்னே உள்ள கேமரா லைவ் பார்த்து கொண்டு இருகிறார்கள்.
"Roger... அந்த விமானம் Target பார்த்த்துட்டாங்க...."என கூறி சென்னை தலைமையகத்தில் உள்ள அனைவரும் திரையை பார்க்கிறார்கள்.
அதே சமயம்,"3.... உண்மையில் இந்த மொத்த மாநிலத்தை அழிக்க போகிறானா....? நம்ம எல்லாரும் இந்த குண்டு வெடிச்சு இறக்க போகிறோமா..."என கயல் ராஜேஷை பார்த்து கேட்க,
ராஜேஷ் பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்து இருக்கிறான்.
"Echo 01 maximum altitude reached...." என விமான ஓட்டி கூற,
"விமானத்தின் கடைசி உயரத்தையும் அவங்க தாண்டிட்டாங்க...இதுக்கு மேல அவங்களால போக முடியாது சார்...."என கன்ட்ரோல் அதிகாரி கூற, அங்கே உள்ள அனைவரும் பதற்றத்தில் உறைந்து போய் நிற்கிறார்கள்.
"நாங்க ஒரு dark facility ல வளர்ந்தோம்.... எங்களுக்கு யாரு அப்பா யாரு அம்மான்னு தெரியாது....நாங்க அங்க இருந்து தப்பிச்சு வந்த பின்னாடியும் நாங்க எப்போதும் தனிமையில் இருந்தோம்...நாங்க இரண்டு பேர் மட்டும்...யாரும் எங்களுக்கு அக்கறை காட்டவில்லை..."என ராஜேஷ் கயலிடம் கூறி கொண்டு இருக்கும் போது, அந்த உயரமான கட்டிடத்தின் உச்சியை அடைந்த சந்தீப் தனது கைபேசியை எடுத்து பார்க்க அதில் திரையில் 03:00:02 என நேரம் கடந்து கொண்டு இருந்தது.
"இன்னும் மூணு நிமிஷத்துக்கு குறைவாக இருக்கு...அந்த அணுகுண்டு வெடிக்க.... நம்மளால இன்னும் target ரீச் பண்ண முடியலை..."என கன்ட்ரோல் அதிகாரி கூறி கொண்டு இருக்கும் போது, சந்தீப்பின் கைபேசி திரையில் 00:59:44 என காட்டியது.
"எல்லா விமானத்தையும் தரை இறக்குங்க...."என விக்னேஷ் கூற,
அதே சமயம்" அதுனால ரொம்ப தேங்க்ஸ் கயல்.... உன்னை மீட் பன்னுனதுக்கு..."என ராஜேஷ் கூற கயல் அழுது கொண்டே சிரிக்கிறாள்.
சந்தீப்பின் மொபைல் திரை,"00:00:00"என காட்ட வானத்தில் உள்ள அணுகுண்டு வெடித்து சிதறுகிறது. அந்த அணுகுண்டின் அதிர்வு அலைகள் கீழே உள்ள பூமியின் மீது விழுந்து புயல் அடிப்பது போல் காற்று பலமாக வீசுகிறது... பகல் போல் வெளிச்சம் நிறைந்து சூடான காற்று எங்கும் வீசுகிறது.... பகல் போல் காட்சி அளிப்பதை மக்கள் கீழே இருந்து வானத்தை பார்க்கிறார்கள். சந்தீப் அந்த கட்டிடத்தின் மீது நின்று பார்க்கிறான்.
ராஜேஷ் மற்றும் கயல் தனது கைகளை கோர்த்து கொண்டு பார்க்கிறார்கள்.
"சொன்னதை செஞ்சுட்டாங்க..."என திலீப் கூற வானத்தை நால்வரும் பார்க்கிறார்கள்.
கன்ட்ரோல் திரையின் வழியே எல்லா போலீஸ் அதிகாரிகளும் அந்த அணுகுண்டு வெடிப்பை பார்க்கிறார்கள்.
அணுகுண்டு வெடித்து சிதறி முடிக்க அதன் அலை காரணமாக அங்கு உள்ள மொத்த மின் இணைப்புகளும் துண்டிக்கபடுகிறது. எலெக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் செயலிழக்க அந்த நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
மறுநாள் காலை மணி எட்டு ஆக சூரியன் தனது வெளிச்சத்தை கொடுத்து கொண்டு இருந்தது. சாலையில் ஒரு வாகனமும் இல்லை...போது இடங்கள் எல்லாம் வெறிச்சு போய் இருக்க மக்கள் அனைவரும் அணுகுண்டு வெடிப்பு காரணமாக பயத்தில் தங்களது வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
அப்பொழுது சந்தீப் தங்களது பழைய அகாடெமிக்கு சென்று பார்க்கிறான். கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்த கட்டிடத்தின் உள்ளே செல்கிறான். உள்ளே சென்று பார்க்க உள்ளே சதுரங்க விளையாட்டில் இருக்கும் பழைய பகடை காய் ஒன்று இருப்பதை பார்த்து கொண்டே பின்னால் உள்ள காலி இடத்திற்கு செல்கிறான். அங்கு சென்று பார்க்க நிறைய சமாதி இருக்கிறது. அங்கு உள்ள ஒரு கல்லை எடுத்து அதில் 5 என பொறித்து அதை கிரேஸின் நினைவாக அங்கு நடுகிறான்.
அப்பொழுது அங்கு கயலும் ராஜேஷும் வருகின்றார்கள்.
"த்ரீ....அது வந்து...."என ராஜேஷ் கூற,
"அந்த வெடிகுண்டு....நான் தப்பிக்க அந்த வெடிகுண்டை நீதானே போட்டே....அது நீதானே...."என சந்தீப் கேட்க,
பதில் எதுவும் பேசாமல் ராஜேஷ் நிற்க,
"எனக்கு தெரியும்....உன்னால மட்டும்தான் அப்படி பண்ண முடியும்.... தேங்க்ஸ் நீ திரும்பி வந்ததில் சந்தோசம்..."என சந்தீப் கூறுகிறான்.
இருவரும் மகிழ்ந்து கட்டியணைத்து கொள்கிறார்கள். கயல் அங்கு உள்ள மலர்களை பறித்து கிரேஸ் சமாதிக்கு வைத்து அஞ்சலி செலுத்த சந்தீப் ஒரு பந்தை எடுத்து கொண்டு வந்து ,"விளையாடுவோமா..."என கேட்க,
சந்தீப் ராஜேஷ் மற்றும் கயல் மூவரும் பந்தை தூக்கி வீசி மகிழ்ச்சியில் விளையாடி கொண்டு இருக்கின்றார்கள்.
ராஜேஷ் அங்கு தண்ணீர் குழாயை திறந்து சந்தீப் மற்றும் கயல் மீது தண்ணீர் அடுத்து விளையாடி கொண்டு இருக்கின்றார்கள் மூவரும்.
மாலை ஆறு மணி ஆக சூரியன் மெதுவாக மறைந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திலீப், ரங்கா, குமார் மற்றும் கோகுல் அங்கு வருகிறார்கள்.
அவர்கள் வருவதை சந்தீப் ராஜேஷ் மற்றும் கயல் பார்க்கிறார்கள்.
"ஒருவழியாக இங்க வந்துட்டோம்....இங்க இருந்துதான் எல்லாம் ஸ்டார்ட் ஆச்சு...அதுதான் நீங்க எங்களுக்கு காட்ட நினைச்சீங்க... இல்லே.....இந்த சம்பவத்தினால் எல்லாரோட கவனமும் உங்க பக்கம் திரும்பி இருக்கு...யாரு sphinx .... அவங்க எங்க இருந்து வந்தாங்க....இங்க இருக்க எல்லா ஊடகங்களும் தெரிய நினைக்கிறார்கள்.....இப்போ நீங்க மாட்டி கொண்டால் உங்களுக்கு நடந்த எல்லா கொடுமைகளும் வெட்ட வெளிச்சமாக தெரிய வரும்....உங்க குரலை அடக்க இப்போ யாரும் இல்லை....உங்க குறிக்கோள் அதுவாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்....நீங்க மாட்டிக்க வேண்டும் என்றுதான் முதலில் இருந்தே பிளான் போட்டீங்க...."என திலீப் கூற,
"இன்னொரு விஷயம்...."என ராஜேஷ் கூற,
"ஒருதர்தான் எங்களை பிடிக்க வேண்டும் வேறு யாரும் பிடிச்சிட கூடாதுன்னு இருந்தோம்....அது வேற யாரும் இல்லை... திலீப் சார்.... நீங்கதான்.... நாங்க sphinx ஆக இருந்தால்.....நீங்கதான் எங்களோட எடிபஸ்...."என சந்தீப் கூற,
தன் கையில் உள்ள கைத்துப்பாக்கியை நீட்டி,"sphinx.... யூ ஆர் அண்டர் அரெஸ்ட்..."என திலீப் கூற,
"இவ வெறும் hostage மட்டும்தான்....இவளை நீங்கதான் காப்பாத்தனும்...."என ராஜேஷ் கயலை பார்த்து கூற,
"Don't worry.... நாங்க பார்த்துகறோம்..."என ரங்கா கூறுகிறார்.
"சார்...சார்....அங்க பாருங்க...."என கோகுல் கூற, மேல பார்க்கிறார் திலீப்.
இராணுவ வீரர்கள் நிரம்பிய ஐந்து அமெரிக்கா கொடி பொறித்த ஹெலிகாப்டர்கள் மேலே பறக்க,
"என்ன சார் நடக்குது இங்க.... அமெரிக்கன் forces இங்க எதுக்கு வந்து இருக்காங்க..."என குமார் அதிர்ச்சியில் கேட்க,
"வாய்ப்பே இல்லை...."என திலீப் கூற அனைவரும் மேலே பார்க்கிறார்கள்.
அப்பொழுது சந்தீப் தன் கையில் உள்ள ஒரு ரிமோட் கண்ட்ரோல் எடுத்து கையை உயர்த்தி காட்ட,"இது ஒரு வெடிகுண்டு ரிமோட் கண்ட்ரோலர்.... அணுகுண்டு வேணா இங்க இல்லாமல் இருக்கலாம்....ஆனால் எண்ணிக்கை இல்லாத அளவுக்கு வெடிகுண்டுகளை இந்த நகரம் முழுக்க வச்சு இருக்கோம்... அவ்வளவு ஏன் அணுமின் நிலையத்தில் கூட ஒரு வெடிகுண்டு வச்சு இருக்கோம்... அமெரிக்கன் ஃபோர்ஸ் மட்டும் இப்போ பின்வாங்கவில்லை எனில் இப்போவே ஆக்டிவேட் பண்ணிருவேன்...."என சந்தீப் கூற,
"சார்....வெடிகுண்டு வச்சு இருக்கோம் என மிரட்டுகிறார்கள் சார்..."என ஹெலிகாப்டரில் இருக்கும் அதிகாரி கூற,
"அவங்க கொல்லனும்னு நினைச்சு இருந்தால் ஏற்கனவே கொன்னு இருப்பாங்க....அவங்க அதை செய்யல....இப்போ அவங்க சொல்லறது பொய்தான்..."என மறுமுனையில் எரிக் கூற,
"இப்போ என்ன சார் பண்றது..."என அவர் கேட்க,
"மேல் இடத்தில் இருந்து சொன்னது போல செய்ங்க..."என எரிக் கூறுகிறார்.
ஹெலிகாப்டரில் இருக்கும் அதிகாரி தனது rifle துப்பாக்கியில் குறி வைத்து ராஜேஷின் நெஞ்சில் துப்பாக்கியின் தோட்டாவை இருக்குகிறார்.
அங்கே உள்ள அனைவரும் அதிர்ந்து போக ராஜேஷ் தரையில் சுருண்டு விழுகிறான்.
சந்தீப் மற்றும் கயல் கதறி அழுக, திலீப் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் நடுவில் புகுந்து கைகளை தூக்கி,"இருங்க...யாரும் சுடாதீங்க...இருங்க..."என கூச்சலிடுகிறார்கள்.
"என்னை அவங்க கிட்ட பேச விடுங்க...."என திலீப் கத்த, "சார்...."என சந்தீப் அழைக்க,
அவன் பார்வையை புரிந்து கொண்ட திலீப்,"எல்லா உண்மையையும் நான் கோர்ட்ல கொண்டு வர்றேன்...நீங்க இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டது கண்டிப்பா பலன் நான் வாங்கி தர்றேன்...இது என்னோட வாக்கு... இதுதான் நீ கேக்கறே...."என திலீப் கூற,
"இதுக்கு பின்னாடி எல்லாத்தையும் நீங்க பாத்துக்கங்க சார்..."என சந்தீப் கூறி அந்த ரிமோட்டை திலீப்பிடம் வீச அதை திலீப் பிடிக்கிறார்.
திடீர் என சந்தீப்பின் தலை வலிக்க தன் தலையை பிடித்து கொண்டே,"சார்.... எங்களை மறந்து விடாதீர்கள்....நாங்க இருந்தோம் என நினைவு வச்சுக்கோங்க...."என கூறி வானத்தை பார்க்க வானத்தில் இருந்து சீறி பாய்ந்த தோட்டா சந்தீப்பின் நெஞ்சில் இறங்க அங்கேயே சந்தீப் மற்றும் ராஜேஷ் இறக்கிறார்கள்.
ஒரு வருடம் கழித்து.....
"என்னால அப்போ அங்க என் கண் முன்னாடி நடந்தது இப்போ கூட என்னால நம்ப முடியல....அதுக்கு பின்னாடி என்கிட்ட நிறைய பேர் நிறைய கேள்வி கேட்டாங்க.... நான் அவங்ககிட்ட எதையும் சொல்லல...என்னோட வாழ்க்கை முழுவதும்....அதை மறக்க மாட்டேன்....ஆனால் எனக்கு அவர்களுடன் இருந்தது சந்தோசம்....கண்ணை மூடி கண்ணை திறக்கரதுக்குள்ள ஒரு வருசம் போயிருச்சு..."என கயல் திலீப்பிடம் கூறி கொண்டு இருக்கிறாள்.
"நீங்க அவங்க கல்லறைக்கு அஞ்சலி செலுத்த வந்தீங்களா...."என ரங்கா கேட்க,
"ஆமாம்..."என கயல் கூற,
"நாங்களும் அங்கதான் போறோம்..."என கோகுல் கூற,
"ரொம்ப தேங்க்ஸ்...."என கயல் கூற,
"உங்களுக்கு ஏதாச்சும் தேவைப்பட்டால்...நீங்க எப்போ வேண்டுமானாலும் எங்களை கூப்பிடுங்க..."என திலீப் கூறுகிறார்.
"அது வந்து....இறந்து போறதுக்கு முன்னாடி சந்தீப் VON க்கு ஐஸ்லாந்து மொழியில் நம்பிக்கை என்று அர்த்தம்...என சொன்னான்..."என கயல் கூற,
"நம்பிக்கை..... ஆமாம் அவங்க எங்க மேல வச்ச நம்பிக்கை...அவங்க அப்போ குடுத்த அந்த ரிமோட்டில் உள்ள ஒரு பென்டிரைவ் இருந்தது....அதில் Athena program பத்தி எல்லா விவரங்களும் இருந்தது....அந்த விவரங்கள் மற்றும் நாங்க சேகரித்த விவரங்கள் எல்லாம் சேர்த்து கோர்ட்ல குடுத்து அவங்க எல்லாருக்கும் தண்டனை வாங்கி குடுத்துட்டேன்....நம்ம சுதந்திர நாட்டோட கோரமான மறுபக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம்....யாரும் இப்போ அவங்களை மறக்க மாட்டாங்க....."என கூற,
"ஆமாம் .... சரி சார்...நான் கிளம்பறேன்...."என கயல் கூற ,
"சரி...."என கூறி கொண்டு நால்வரும் அவர்கள் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு நடந்து செல்கிறார்கள்.
அவர்கள் கல்லறையில் இருந்து நடந்து சென்று முடிய அங்கு வந்த ஒரு நபரின் உருவம் அங்கு கல்லறையில் உள்ள 9 என்ற என் பொறிக்கப்பட்ட கல்லை பெயர்த்து எடுக்கிறது.
"உயிரோட இருக்க எனக்கு....எதுக்கு கல்லறை கட்டி வச்சு இருக்காங்க..."என கூறி கொண்டே தன் கையில் உள்ள வெடிகுண்டு பொருட்களையும் முகமூடி ஒன்றையும் பையில் போட்டு கொண்டு நடக்க தொடங்கியது.
(முற்றும்.....)