• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
பொழுது – 22 💖
“உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில்
நீள என்னுயிர் தருவேன்
காதல் கணவா உந்தன்
கரம் விட மாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே!”
அலைபேசியில் பாடலை ஒலிக்கவிட்ட விவேகா,
“சுதி, தாலிக் கட்டும்போது போடலாம்னு எடுத்து வச்சேன். எப்படி இருக்கு. அழாக வீடியோ எடுத்து எடிட் பண்ணலாம்!” குதூகலமாகக் கூறிய தோழியை முறைக்க முயன்று தோற்ற சுதியின் உதடுகளில் புன்னகை மிளிர்ந்தது.
மதுரையின் பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகேயிருந்த மதனகோபால சுவாமி கோவில் அன்றைக்கு முகூர்த்தநாள் என களைக்கட்டியிருந்தது. ஆங்காங்கே உறவினர்களுடன் மணமக்கள் ஜோடியாக நின்றிருந்தனர்.
காயாம்பூ நிறத்தில் பட்டுடுத்தி தலைநிறைய பூவோடு முகமும் மலர அமர்ந்திருந்தாள் சுதிரமாலா. பெரிதாய் ஒப்பனை வேண்டாம் எனப் போரடியவளிடம் சௌம்யா அதட்டி உருட்டி சரி செய்திருந்தாள். இன்றைக்கு அவளுக்கும் நிவினுக்கும் திருமணம் என இருவீட்டுப் பெற்றவர்களால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டு பதினைந்து நாட்களுக்கு முன்பே கோவிலில் விண்ணப்பம் பூர்த்தி செய்து, நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தனர்.
பாலு மகேந்திராவின் சொந்த ஊர் விருதுநகர் என்பதால் பெரும்பான்மையான உறவினர்கள் அங்குதான் வசிக்கின்றனர். இங்கே சொற்ப மக்கள் மட்டுமே வசிக்க, கோவிலில் வைத்து திருமணத்தை எளிதாக முடித்து மண்டபத்தில் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
அடுத்த வாரம் விருதுநகரிலும் கோவிலில் சிறிய விழா வைத்து ஊர்க்காரர்களுக்கு தெரிவிக்கலாம் என்ற முடிவோடு, இன்றைக்கு வெகு எளிமையாக திருமண ஏற்பாடுகள் நடந்தன.
மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் கோவில் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார்‌ மட்டுமே கோவிலை நிறைக்கப் போதுமானதாய் இருந்தனர். முதலாவதாக ஒரு திருமணம் முடித்திருக்க, அடுத்ததாக இவர்கள் காத்திருந்தனர்.
“நிவின், சுதிரமாலா... உள்ள வாங்க!” கோவில் அலுவலக உதவியாளர் கூற, சுதி எழுந்து நின்றாள்.
“ஒரு நிமிஷம் இரு டி... புடவை கசங்கி இருக்கு!” விவேகா சரி செய்துவிட, ருத்ரா சுதியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
தவா புதிதாகக் கிடைத்த மாமாவிடம் ஒட்டிக்கொண்டு திரிந்தான். அவனுக்கு நிவினை பிடித்துப் போனது.
“மச்சான்... வாடா, உள்ள கூப்பிட்றாங்க!” என பாலா கூறவும், அருகேயிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்த நிவின் தலையை அசைத்து உள்ளே நுழைந்தான். தங்க நிற பட்டு வேட்டி சட்டை பாந்தமாய் அவனுக்குப் பொருந்தியிருந்தது.
அவன் கடவுள் சன்னிதானத்திற்குள் நுழைய, சுதியும் அவனுக்கடுத்ததாய் நடந்து வந்தாள். ஒருபக்கம் சந்திரா, சௌம்யா குழந்தைகள் நிற்க, மறுபுறம் பாலுமகேந்திரா, வாகீஸ்வரி, முத்துவேல், பாலா, நந்தனா, ஆரோன் நின்றிருந்தனர். திருமணத்திற்கு விரைவாய் வந்திருந்த உறவினர்கள் மண்டபத்தில் குழுமிவிட்டனர். அதிகாலை வைகறை வேளையில் திருமணம் என்பதால் எல்லோருக்கும் நேரம் தோதுபடவில்லை. அதனால் மொதுவாகக் வரக் கூடும் என எண்ணிய மகேந்திரா முன்னே சென்று ஐயரிடம் பேசினார்.
ஏதோ மந்திரங்களை உதடுகளில் உச்சரித்த ஐயர், “சாமியை நல்லா வேண்டிக்கிட்டு ரெண்டு முடிச்சுப் போடுங்க. மூனாவது முடிச்சை நாத்தனார் போடட்டும்!” என அவர் கூற, தலையை அசைத்து திருமாங்கல்யத்தைப் பெற்றுக் கொண்டான் நிவின்.
சுதிரமாலா மென்புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்க்க, ஒற்றைக் கண்ணை சிமிட்டியவன் சிரிப்புடன் அவள் கழுத்தில் இரண்டு முடிச்சை இட்டான். சுற்றியிருந்தவர்கள் கையிலிருந்த மஞ்சள் கலந்த அரிசியையும் பூவையும் தூவி அகம் நிறைய மணமக்களை வாழ்த்தினர்.
‘கடவுளே...நானா தேடிப் போகலை. நீங்களா அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை. எப்படி இருந்தாலும் கடைசிவரை ரெண்டு பேரும் சேர்ந்து வாழணும். நீங்கதான் அதுக்குத் துணையா இருக்கணும்!’ என்ற வேண்டுதலோடு சுதி கண்ணைத் திறக்க, சௌம்யா நாத்தனார் முடிச்சைப் போட்டாள். அவள் வேண்டுதலை அறிந்தானோ என்னவோ ஆதரவாய்ப் புன்னகைத்து அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தான் நிவின். ஒரு நொடி கண்ணை சிமிட்டி கலங்கப் பார்த்த விழிகளை அதட்டியவள், குனிந்து ஒருமுறை மாங்கலயத்தைப் பார்த்தாள். மனம் நிறைந்து போனது. தனக்கே தனக்கான ஒரு உறவு. தன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு ஜீவன் அதிகாரப்பூர்வமாக அவளுக்கு உறவாகியிருந்தன். அந்த உணர்வை அது கொடுத்த மகிழ்வை மெதுவாய் உள்வாங்கினாள். அவள் தோளைச் சுற்றி நிவின் கையைப் போட, சுதி நிமிர்ந்து புன்னகைத்தாள்.

அவர்கள் இருவரையும் விவேகா அலைபேசியில் புகைப்படம் எடுக்க, “மிஸஸ் நிவின்!” என இவன் முணுமுணுக்க, சுதி கண்ணோர சிரிப்புடன் அவன் புறம் திரும்பவே இல்லை. ஆனாலும் அந்த விளிப்பை மனம் பரிபூரணமாக ஏற்று பத்திரப்படுத்திக் கொண்டது. இனிமேல் அவள் நிவினின் மனையாள். அந்நினைப்பே தித்தித்தது. இருவீட்டுப் பெற்றவர்களிடமும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
“நல்லா இரு சுதி... உன் மனசு போல நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருக்கு. பார்த்து பக்குவமா நடந்துக்க!” என சந்திரா அவள் முகத்தை வழிக்க, சுதி அவரை அன்பாய்ப் பார்த்து தலையை அசைத்தாள்.
“சந்தோஷமா இருடி!” என சௌம்யா தோளில் தட்ட, “தேங்க்ஸ் அண்ணி!” என்றாள் மனதார. இந்த திருமணத்தை செயலாற்றியதில் சௌம்யாவின் பங்குதான் பிரதானம். இருவருடைய ஜாதகமும் சந்திரா கை சேரும் முன்னே இவளே சென்று இரண்டு மூன்று ஜோதிடர்களைப் பார்த்து பொருத்தம் நன்றாய் இருக்கிறது என உறுதி செய்து பின்னர் மாமியாருடன் அவர்கள் குடும்ப ஜோதிடரைப் பார்த்திருந்தாள்.
“நான் முன்னயே சொன்னேன்ல மா. நீங்க தேடி போக வேணாம். நல்ல வரனா உங்களைத் தேடி வரும்னு. பொருத்தம் பத்துக்கு எட்டு இருக்கு மா. கட்டி வைங்க, ராணி மாதிரி உங்க மக வாழ்வா. பையன் ஜாதகம் ராஜயோகம். எப்பவுமே பணத்துல புரளுவான். உங்கப் பொண்ணுக்கும் யோகம்மா. ஓஹோன்னு வருவாங்க. எந்த மனசஞ்சலமும் இல்லாம கல்யாணத்தை முடிச்சி விடுங்க!” என அவர் கூறியதும் அவர்கள் பணம், ஜாதி என அடுக்கடுக்காய் உயர்ந்திருந்த ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் சந்திராவிற்கு நொடியில் தகர்ந்திருந்தது. மனதிலிருந்த சஞ்சலங்கள் அகல, ஒருமுறை விருதுநகரில் வசிக்கும் உறவினர் ஒருவரிடம் நிவின் குடும்பத்தை பற்றி விசாரிக்கச் சொன்னார். அவர்களுமே பாலுமகேந்திரா பற்றியும் அவர்கள் குடும்பத்தைப் பற்றியும் நல்ல விதமாய்க் கூறிவிட, சந்திராவிற்கு வெகுவாய் நிம்மதி படர்ந்தது.
தங்களது செல்வநிலைக்கு ஏற்ப முடிந்தவரை திருமணத்தை சிறப்பாக செய்து விடுகிறோம் என சந்திரா நிவினிடமும் அவன் தந்தையிடமும் பேச, அவன் மறுத்திருந்தான்.
“ஆன்ட்டி... இந்த ஒருநாள் கூத்துக்கு ரொம்ப செலவு பண்ண வேணாம். சிம்பிளா ஒரு கோவில்ல வச்சு தாலியைக் கட்டிட்டு எதாவது மண்டபத்துல ரிலேட்டீவ்ஸைக் கூப்பிட்டு ஃபூட், அதர் திங்க்ஸ் அண்ட் ஃபார்மாலிட்டீஸ் வச்சுக்கலாம். தட்ஸ் இட், கிராண்டா எதுவும் வேணாம்!” என அவன் வற்புறுத்த சந்திராவும் ஒப்புக் கொண்டார். எந்தவித ஆடம்பரமும் இன்றி அமைதியாய் திருமணம் முடிந்திருந்தது.
பழங்காநத்தம் பேருந்து நிலையத்தைக் கடந்ததும் குரு கிருஷ்ணா மண்டபம் திருமணத்திற்கு உரிய அலங்காரத்துடன் காட்சியளித்தது. மணமக்கள் ஆராத்தி எடுத்து உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். இப்போதுதான் உறவினர்கள் ஒவ்வொருவராய் வருகைத் தர தொடங்கியிருந்தனர்.
“தம்பி... ஆள் வராம இருக்கும்போதே ஜூஸைக் குடிச்சிடுங்க. இல்லை கிஃப்ட் கொடுத்து, ஃபோட்டோ எடுத்தே ரெண்டு பேரும் டயர்டாகிடுவீங்க!” என சௌம்யா இருவருக்கும் பழச்சாற்றைக் கொடுத்துவிட்டு சென்றாள்.‌
சுதிக்கு தாகமாய் இருக்க இரண்டு மிடறு பழச்சாற்றை அருந்தியவள் நிவினைத் திரும்பி பார்க்க, அவன் அதைக் குடிக்காது வைத்திருந்தான்.
‘ஷ்... இவர் ஃப்ரெஷ் ஜூஸ் தானே குடிப்பாரு!’ என எண்ணியவள் தவாவை அழைத்தாள்.
“விவேகா அக்காகிட்டே காசு வாங்கிட்டுப் போய் மாதுளம் பழ ஜூஸ் வாங்கிட்டு வா தவா. அப்படியே உனக்கும் எதாவது வாங்கிக்கோ!” என குனிந்து அவனிடம் கூறியவள் மேடையை ஒட்டி கீழே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த விவேகாவிடம் கண்ணைக் காண்பிக்க, அவள் தலையை அசைத்தாள்.
பின்னர் தன்னுடைய பழச்சாற்றை அருந்திவிட்டு அவன் கையிலிருந்ததைப் பிடுங்கினாள். “உங்களுக்கு வேற வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். இதை நானே குடிச்சிக்குறேன்!” என்றவள் அதை அருந்தத் தொடங்க, “தேங்க்யூ மிஸஸ் நிவின்!” என்றான் அவன் புரிதலாய் புன்னகைத்து.
“இட்ஸ் ஓகே மிஸ்டர் சுதி!” என அவள் புன்னகைக்க நிவின் வீட்டு சொந்தங்கள் சிலர் மேடையேறினர். கையிலிருந்த பரிசுப் பொருளை மணமக்களிடம் கொடுத்தனர்.

அதிலிருந்த பெண்மணி ஒருவர், “ஏம்மா கல்யாண பொண்ணு, இப்பவே எங்க வீட்டுப் பையன் ஜூஸை புடுங்கி குடிச்சுப்புட்ட. பிறகு உன்னை நம்பி எப்படி அவனை அனுப்புறது. நாளைப் பின்ன அவனுக்கு சோறாக்கிப் போட மாட்ட போல!” என அவர் வம்பிழுக்க, நிவின் அவளைப் பார்த்து சிரித்தான்.
“ஹக்கும்... உங்க வீட்டு பையனை சமாளிக்க ரெண்டு ஜூஸ் எல்லாம் பத்துமா? சொல்லுங்க அக்கா?” என இவளும் வம்பிழுக்க, அவர்கள் சிரித்துவிட்டு விடை பெற்றனர்.
தவா பழச்சாறு வாங்கி வந்து கொடுக்க, நிவின் அதை அருந்தினான். சௌம்யாவும் சந்திராவும் விருந்தினர்களை வரவேற்க, உணவுண்ண அழைத்துச் செல்ல என அங்கே கவனமாய் இருந்தனர். ஆண்கள் இல்லாத வீட்டில் பெண்கள்தான் அனைத்தையும் செய்ய வேண்டியதாக இருந்தது. அதனாலே விவேகாவிடம் ஒன்றுக்கு இரண்டு முறை அறிவுறுத்தி விட்டு சௌம்யா சென்றாள்.
உறவினர்கள், நிவினின் அலுவலக நண்பர்கள் என மெதுவாய் மண்டபம் ஆட்களால் நிறையத் தொடங்கியது. நிவினின் தொழில்முறை நண்பர்கள் அனைவரும் சற்று வசதி படைத்தவர்கள் என அவர்களைப் பார்க்கும் போதே சுதிக்குப் புரிந்திருந்தது. அனைவரிடமும் இன்முகமாகப் பேசினாள். நிவின் மனைவியை அனைவருக்கும் முறையாய் அறிமுகம் செய்து வைத்தான்.
“பாலா... எல்லாரும் சாப்பிட கூட்டீட்டு போ!” என நிவின் பாலாவை அவர்களுடன் அனுப்பினான். முத்துப்பாண்டி உணவு கூடத்தில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, வாகீஸ்வரியும் மகேந்திராவும் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என பார்த்துக் கொண்டே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றனர்.
நந்தனா ஒரு ஓரமாய் இருக்கையில் யாருக்கு வந்த விருந்தோ என்ற மனநிலையில் அமர்ந்திருந்தாள். நேற்றைக்கு காலையில் வரை எல்லாவற்றிலும் மனம் ஒன்றி நன்றாய் வளைய வந்தாள். நிவின் மீதான கோபம் இந்த சில நாட்களில் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் நேற்றைக்கு மாலை அக்ஷா அழைத்து அழுது, நிவின் திருமணம் செய்து கொண்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என ஆர்ப்பாட்டம் செய்திருந்தாள். அவள் வீட்டிற்கு நந்தனா சென்று சமாதானம் செய்து, ஆற்றுப்படுத்திவிட்டு அவளது பெற்றவர்களிடமும் கவனமாய்ப் பார்த்துக் கொள்ள அறிவுறுத்திதான் வந்திருந்தாள். அப்போதிலிருந்தே மகிழ்ச்சியான மனநிலை அற்றுப் போயிருந்தது. என்னதான் நிவினின் மீது அவளுக்கு மாமன் மகன் என்ற பாசம் இருந்தாலும், அக்ஷாவின் கண்ணீர் எதிலுமே முழுமனதாய் அவளை ஈடுபட முடியாமல் தடுத்தது. அதனாலே அமைதியாய் ஒரு ஓரமாய் அமர்ந்துவிட்டாள். நிவின் அவளை மேடைக்கு அழைக்க, இவள் தலையை அசைத்து மறுத்திருந்தாள். அவளருகே அரவும் கேட்க, நிவின் மற்றும் பாலாவின் நண்பன் ஒருவன் அமர்ந்து இவளிடம் மெதுவாய் பேச, பதில் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மணமக்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர். பின்னர் மீண்டும் மேடையேறி பரிசுகளைப் பெற்று, மூத்தவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி என சுதி கொஞ்சம் சோர்ந்து போனாள். அடிக்கடி குனிந்து எழுந்ததில் அவளது முதுகு வலி உச்சத்தை தொட்டிருந்தது. மாத்திரையும் இப்போது கையிருப்பில் இல்லை. முகத்தில் எதையும் காண்பிக்காது புன்னகையுடன்தான் இருந்தாள். எப்போது வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்கலாம் என உடல் அனத்தியது‌. அதைப் புறந்தள்ளி சிரித்த முகமாக அனைவருக்கும் பதிலளித்தாள்.
மதிய உணவை உண்டு வந்திருந்த உறவினர்கள் எல்லாம் கலைந்து செல்ல, மெதுவாய் மாலை மங்கத் தொடங்கியது. மணமக்கள் வீட்டிற்கு அழைத்துச் சொல்லப்பட்டனர்.
மகேந்திராவின் தங்கை முறையிலிருந்தவர் முன்பே வீட்டிற்குச் சென்று மணமக்களை வரவேற்க ஆராத்தியுடன் காத்திருந்தார். சடங்குகள் முடிந்து நீள்விருக்கையில் சுதி அமர்ந்த போது கால் லேசாய் வீங்கியிருந்தது. சற்றே புடவைக்குள்ளே காலை இழுத்துக்கொண்டு யார் கவனத்தையும் அவள் ஈர்க்காது விட்டுவிட்டாள்.
“சுதி... நீ வா!” என அழைத்துச் சென்ற சௌம்யா, “மாலையைக் கழட்டி வச்சிடு. இந்தா, குளிச்சிட்டு இந்த சேலையைக் கட்டிக்கோ. விவேகா உனக்கு ஹெல்ப்பா இருப்பா. ருத்ராவைப் பார்த்துக்கோங்க அப்படியே. புது இடம்னு கையைக் காலை வச்சிட்டு சும்மா இல்லாம, அது இதுன்னு எல்லாத்தையும் எடுத்துப் பார்ப்பா!” என அவள் அகல, சுதிரமாலா அப்படியே பொத்தென கட்டிலில் அமர்ந்தாள். அதிலே படுத்து உறங்கிவிடேன் என மனம் கெஞ்சியது.
“என்ன சுதி... ரொம்ப டயர்டா இருக்கா?” என்ற விவேகா, “இந்த காஃபியை குடி. ஃப்ரெஷ் ஆகிடுவ!” என்றபடி அருகில் அமர்ந்தாள்.
“செம்ம டய்ர்ட் விவே. பேசாம படுத்து தூங்கிடவா நானு?” இவள் கேட்க, விவேகாவிற்கும் தோழியைப் பார்த்து பாவமாய் போனது.
“போச்சு போ... இப்போவே தூங்குறேன்றீயே.. அண்ணா பாவம்!” அவள் சிரிக்காமல் கூற, என்னவென யோசித்த சுதியின் முகம் முறைத்துப் பின் சிவந்தது.
“டி விவே... போடி...போ. நான் போய் குளிக்கிறேன்!” என சுதி ஓட, ‘எனக்குப் பின்னாடி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்ச அவளுக்கு அழகான பையனா செட் பண்ணி விட்டுட்டீங்க கடவுளே. நான் இன்னும் லிஸ்ட்லதான் இருக்கேன். பார்த்துப் பண்ணி விடுங்க!’ என மனதிற்குள் இவள் புலம்பினாள். பெண்கள் சேர்ந்து இரவு உணவை சமைத்து முடித்தனர்.
சுதி குளித்து முடித்து சேலையை மட்டும் உடுத்திவிட்டு தலையை உலர்த்தினாள். ருத்ரா அறையில் என்ன இருக்கிறதென இஞ்ச் இஞ்சாக நோட்டமிட இவளுக்கு சிரிப்பு வந்தது. சிறுவயதிலிருந்தே எங்கே சென்றாலும் என்ன இருக்கிறதென்று தொட்டு ஆராய்ச்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் சின்னவள். விவேகா கொஞ்சம் அதட்டி அமைதியாக சின்னவளை அமர்த்தியிருந்தாள். சுதி குளித்து வந்ததும் அவளிடம் செல்லம் கொஞ்சி மீண்டும் ருத்ரா தனது வேலையைத் தொடர, “ஏன் சுதி, வால் மட்டும்தான் இவளுக்கு இல்ல போல!” என்றாள் விவேகா.
“குழந்தையைப் போய் குரங்குன்னு சொல்லாத விவே. வளர்த்தி குறைஞ்சு போய்டும்!” மென் முறைப்புடன் தோழியை அதட்டினாள் இவள்.
“சுதி... வா, சூடா ரெண்டு இட்லியை சாப்பிடு. நீயும் வா விவேகா!” என்ற சௌம்யா ருத்ராவிற்குத் தனியாக உணவை தானே ஊட்டிவிட்டாள். நான்கு நான்கு பேராக உணவு மேஜையில் அமர்ந்து இரவுணவை முடித்தனர்.
பாலாஜியும் ஆரோனும் நிவினுடன்தான் இருந்தனர். நந்தனா மாலையே தலை வலிக்கிறது எனக் கூறி கிளம்பிவிட, வாகீஸ்வரியும் விட்டுவிட்டார்.
“சரி சுதி... டைமாச்சு டி. நானும் வீட்டுக்கு கிளம்புறேன்...” என விவேகா விடை பெற, “வாமா, நானே பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்றேன்!” என நிவின் எழுந்து மகிழுந்து சாவியை எடுத்தான்.
“இல்ல தம்பி... இன்னைக்குதானே கல்யாணம் ஆகியிருக்கு. நைட் டைம்ல வெளிய போக வேணாம். காத்து கருப்பு அடிச்சிடும்!” சந்திரா அவனைத் தடுக்க, “பாலா... நீ போய் விட்டுட்டு வாடா!” என வாகீஸ்வரி கூறினார்.
பாலாஜி விவேகாவை அழைத்துச் சென்று பேருந்து நிலையத்தில் விட, “தேங்க்ஸ் ப்ரோ!” என அவளும் கிளம்பிவிட்டாள்.
சுதி அறையில் அமர்ந்திருந்தாள். தலை நன்றாக உலர்ந்ததும் தளரப் பின்னியவள் நெற்றியில் குங்குமத்தை எடுத்து வைத்தாள். உதடுகளில் புன்னகை ஏறியது. உள்ளே வந்த சௌம்யா, அவளது தலை நிறைய மல்லிகைப் பூவை சூடிவிட்டாள்.
“ஒரு நிமிஷம் இரு சுதி...” என்ற சந்திரா சென்று உப்பும் மிளகாயும் எடுத்து வந்து மகளுக்கு திஷ்டி கழித்தார்.
“ம்மா... எதுக்கு இதெல்லாம்?” என அவள் சங்கடப்பட,
“ஊருக்கண்ணு பட்டு இருக்கோ இல்லையோ, என்னைப் பெத்தவங்க கண்ணே பட்டிருக்கும் சுதி. கல்யாணத்துக்கு வந்ததுல இருந்து பொருமிக்கிட்டே இருந்தாங்க. அதான் அத்தைகிட்டே நானே சொல்லலாம்னு நினைச்சேன். அவங்களே சுத்துறாங்க!” என்றவள், “நம்ப வீடுனா வெளிய போய் எரிக்கலாம். இங்க அப்பார்ட்மெண்டா வேற இருக்கு. ரொம்ப கஷ்டம்!” என அவள் நொடிக்க, சுதி சிரித்தாள். ருத்ரா தாய் வந்ததும் அத்தை என சமத்தாக சுதியருகே அமர்ந்து கொண்டாள். தவா சௌம்யாவின் அலைபேசியுடன் கூட்டத்திலிருந்த நீள்விருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டான்.
“நாங்க போய்ட்டு காலைல வரோம்ண்ணா!” என்ற வாகீஸ்வரி கூற, அவர்கள் மூவரும் விடை பெற்றனர். ஆரோனும் சில நிமிடங்கள் நண்பனிடம் பேசி கலகலத்துவிட்டு கிளம்ப, இப்போதுதான் வீடு நிவினின் இல்லம் போல அமைதியானது. இத்தனை பரபரப்புகள் எல்லாம் ஒருபோதும் அவன் வீட்டில் இருந்தது இல்லை. நண்பர்களாக கூடினால் கூட, இப்படியெல்லாம் இருக்காது.
அப்படியே மெதுவாய் சமையலறையை எட்டிப் பார்த்தான். சுத்தம் என்பது மருந்துக்கும் இல்லை. அப்படியே வைத்தது வைத்தபடி இருக்க, இத்தனை பேர் இருக்கையில் அவனால் ஒன்றும் சொல்லவும் முடியவில்லை, செய்யவும் இயலவில்லை. அமைதியாய் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டான்.
மகேந்திரா கூடத்தில் படுத்துக் கொள்வதாகக் கூறிவிட, பெண்கள் இருவரோடு குழந்தைகளும் அறையில் படுக்க ஏற்பாடானது.
நிவின் தனதறைக்குள் நுழைய, ஊதுபத்தி வாசனை நாசியைத் துளைக்க, பூக்கள் எங்கும் மலர்ந்து கிடந்தது. அவற்றை எல்லாம் சுவாரஸ்யமாய்ப் பார்த்தவன் இலகுவான இரவு உடையை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றான்.
சுதிரமாலாவின் கையில் பால் சொம்பைக் கொடுத்த சௌம்யா, “நல்லா இருடி நாத்தனாரே!” என்ற வாழ்த்தோடு அவனது அறைக்குள் அனுப்ப, இவள் தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள். குளியலறைக்குள்ளிலிருந்து சத்தம் கேட்கவும் சுதியிடம் நிம்மதி பெருமூச்சு. மேஜை மீது பால் சொம்பை வைத்துவிட்டு மெல்ல அறையில் கண்களை சுழலவிட்டாள். அலங்காரத்தை தாண்டி அவளது விழிகள் அந்த அறையின் நேர்த்தியில் லயித்தது.
‘இவர் ரூம் இவ்வளோ நீட்டா இல்லைன்னாதான் அதிசயம்!’ என முணுமுணுத்தவள் அமைதியாய் சுவரில் சாய்ந்து நின்றாள். நிவின் சில நிமிடங்களிலே குளித்து முடித்து வெளியே வந்தான். இவளைப் பார்த்ததும் அவன் முகம் மலர்ந்தது.
 
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
“வெல்கம் டூ அவர் ரூம் மிஸஸ் நிவின்!” என அவன் கூறிக் கொண்டே தலையை துவட்டினான். சுதி புன்னகையுடன் தலையை அசைத்து ஏற்றாள். இரண்டு நாளுக்கு முன்பே ஏன் தன்னை அறைக்குள்ளே அனுமதிக்கவில்லை எனக் கேட்க, “சாரி சுதி... ஹம்ம், என்னோட ரூம் ரொம்ப பிரைவேட்.‌ என்னோட கம்பர்ட் சோன்க்குள்ள இருக்கவங்களைத் தவிர யாரையும் அலோவ் பண்ண மாட்டேன். அதான் எந்த சர்வன்டையும் அப்போ உள்ள வர விடலை. தட்ஸ் மை நேச்சர்!” என அவன் எந்த பசப்பு வார்த்தைகளையும் உபயோகிக்காது உண்மையை உரைத்ததில் சுதிக்கு நிம்மதிதான். நியாயமான காரணம் என்பதால் ஏற்றுக் கொண்டாள். அவளது பார்வை அறையின் சுவரில் பெரிதாய் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் நிலைக்க, "என் அம்மா... அழகா இருக்காங்க இல்ல?" எனக் கேட்ட நிவின் குரல் இளகிப் போயிருந்தது. அவன் கூறியதை இளம் புன்னகையுடன் ஆமோதித்தாள் சுதி.
“நைட் பால் குடிக்கிற பழக்கம் இருக்கா சுதி?” எனக் கேட்டவன் நிலைப்பேழையைத் திறந்து மேல்சட்டை ஒன்றை உருவி எடுத்தான்.
“இல்லைங்க... நைட் பால் எல்லாம் குடிக்க மாட்டேன்!” என்றவளின் சார் என்ற விளிப்பு சில நாட்களில் வாங்க போங்க என்று பன்மைக்கு மாறியிருந்தது.
“ஓகே... நான் டெய்லி தூங்கும்போது பால் குடிச்சிட்டுதான் படுப்பேன். எனக்கு கிளாஸ்ல ஊத்து சுதி!” என அவன் மேலுடையை அணிய, இவள் சரியென தலையை அசைத்து மறுபுறம் திரும்பி நின்று குவளையில் பாலை நிரப்பினாள்.
“சுதி... யூ லுக் ஸ்டன்னிங்!” என காதோரம் மீசையை உரசி கழுத்தோரம் வாசம் பிடித்த கணவனில் சுதியின் கைகள் ஒரு நொடி தடுமாறிப் போயின.
அப்படியே முன்புறமாக கையைக் கோர்த்து அவளை அணைத்தவன், “யூ ஸ்மெல் நைஸ். ஐ ஜஸ்ட் வான்ட் டு ஸ்மெல் யூ, டேஸ்ட் யூ, பெல்ட் யூ எவ்ரி மினிட் ஆஃப் திஸ் நைட்!” என தாபமேறி செவியோரம் அடர்ந்தக் குரலில் சுதிக்கு மெதுவாய் முகம் சூடேறியது. “ஹம்ம்!” என்றாள் முனங்கலாக. முதன்முதலில் ஒரு ஆணின் தொடுகையில் உடல் சிலிர்த்து நாணம் படர்ந்தது.
“ஹம்ம்...” என மீசை உரச அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு கையை முன்னோக்கி நகர்த்தி பால் குவளையை எடுத்துக்கொண்டு அவன் நகர்ந்ததும் சுதியின் சீரற்ற மூச்சு சரியானது. இது எல்லா திருமணமானவர்களுக்கு இடையில் நடக்கும் இயல்பான ஒன்று தான் என படபடத்த மனதையும் பதகளித்துப் போன மூளையையும் அதட்டினாள் பெண். சற்று முன்னர் அவன் தொட்ட இடமெல்லாம் சுதிக்கு ஏதோ செய்தது. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதை உணர்ந்தவள் மெதுவாய் அவன்புறம் திரும்பி நின்றாள்.
நிமிர்ந்து பார்க்க நாணம் தடுத்துவிட, அப்படியே கைவிரல் நகங்களை ஒவ்வொன்றாய் ஆராய்ச்சி செய்தாள். அவளது செய்கையில் நிவினுக்குப் புன்னகை படர்ந்தது‌.
“சுதி... டோன்ட் கெட் நெவர்ஸ். என் ஃபேஸை பாரு!” என்றான் குறும்பாய். சில நொடிகளில் தயக்கத்தை அடித்து விரட்டியவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, பாலைக் குடித்து முடித்து குவளையை ஓரமாய் வைத்தவன், அவளை மேலிருந்து கீழே ஆராய்ச்சியாகப் பார்க்கவும், இவளுக்கு காதோரம் சிவந்து சூடானது.
“என்ன...எதுக்கு இப்படி ஆராய்ச்சி பண்றீங்க?” அதட்டலாய்க் கேட்க முயன்றாலும் குரலில் மெல்லிய சங்கோஜம் வந்து ஒட்டிக் கொண்டது.
“இன்னும் நான் என் ஆராய்ச்சியை ஸ்டார்ட் பண்ணவே இல்லை சுதி?” எனப் புருவத்தை உயர்த்தி நிவின் கேட்டதும், இவளுக்கு மனசுக்குள் டம்டமென மத்தளம் கொட்டத் தொடங்கியது.
“ச்சு... என்னங்க!” அவள் சிணுங்க, “இதெல்லாம் சேவ் பண்ணி வச்சுக்கோங்க. கொஞ்ச நேரத்துல யூஸ் ஆகும். இப்போ ஏதோ குறையுதேன்னு யோசிச்சேன்!” என்றவன் அவளருகே சென்று சேலையின் தலைப்பிலிருந்த ஊக்கை கழட்ட, “ஐயோ...” எனப் பெண் பதறினாள். அவளது குரலில் நிவினுக்கு முகம் முழுவதும் மலர்ந்தது.
“வெயிட்... வெயிட். ஒன்னும் பண்ணலை!” என்றவன் மடித்துவிட்டிருந்த சேலையை ஒற்றையாய்த் தொங்கவிட்டான். பின்னர் சில அடிகள் பின்னோக்கி நகர்ந்து, “இப்போதான் ஆல் பெர்பெக்ட்!” என்றான். நிவின் பார்வை ரசனையாய் மனைவி மீது கவிய, பெண் தலையைக் கவிழ்த்தாள். புதிதாய் உணர்ந்த உணர்வுகள் இருவருக்குள்ளும் ஏதோ செய்தது.
“எனக்கு இந்தப் பொண்ணை முழுசா தெரிஞ்சுக்கணும். வெட்கப்பட வைக்கணும், சிணுங்க வைக்கணும், கெஞ்ச வைக்கணும். கொஞ்ச வைக்கணும், சிவக்க வைக்கணும்!” என்றவன் குரலில் ஆசையும் மோகமும் கொட்டிக் கிடக்க, சுதி அவனை நிமிர்ந்து பார்த்தாள். கூச்சம் தடுத்தாலும் மனம் நிறைந்தவனாகிற்றே.
“அதெல்லாம் உங்களோட திறமை!” வெட்கத்தையும் மீறி பெண் உதடுகள் முணுமுணுக்க, “அப்போ என் திறமையை எக்ஸ்போஸ் பண்ண வேண்டியதுதான்!” என்றான் குறுஞ்சிரிப்புடன்.

சுதி புன்னகையுடன் பின்னே நகர, அவள் கையைப் பிடித்திழுத்து அணைத்தவன், “ஐ லவ் திஸ் கேர்ள் சுதிரமாலா அன்கண்டிஸ்னலி!” என்றான் ஆத்மார்த்தமான குரலில். சுதி ஆசையாய் அந்த அன்பை ஏற்றுக் கொண்டாள். கண்களில் பிரியத்தை தேக்கி அவனைப் பார்த்தவள், “எனக்கும் இந்த முசுட்டு நிவினை ரொம்ப பிடிக்கும்!” என்றாள் இளம் புன்னகையுடன்.
“ஓ...” என்றவன் குனிந்து அவளது நெற்றியில் உதடுகளைப் பதித்து முதல் முத்தத்தை அதற்கு வழங்கிப் பின் இமைகளின் மீது ஒற்றி எடுத்தான். சுதியின் கைகள் மெதுவாய் அன்னிச்சையாய் உயர்ந்து அவனது உடையை இறுக்கிப் பிடித்தன.
“ஃபர்ஸ்ட் லிப் லாக். முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பொண்டாட்டி!” என முணுமுணுப்புடன் மெதுவாய் தன் உதடுகளை அவள் உதட்டில் பொருத்தினான். உயிர் மொத்தத்தையும் அந்த முத்தத்தில் அவன் உறுஞ்சி எடுக்க, சுதியின் வயிற்றில் ஏதோ திகைக்க, கூசச் செய்தது. வெட்கமாய் வர, இறுக்கி விழிகளை மூடிக் கொண்டாள். நிவின் அப்படியே அவளது இடையோடு அணைத்துப் பிடித்ததும் சுதி பட்டென அவனை உதறிவிட்டு சுவரில் சாய்ந்திருந்தாள்.
நிவின் தொட்டதும் காலையிலிருந்து வலித்த இடுப்பு இப்போது அதிவேகத்தில் வலியை உணர, துடித்துப் போனாள். பின்னர் தன் செயலின் வீரியம் உரைக்க, “சாரிங்க... சாரி. சாரி. நான் வேணும்னு எதையும் பண்ணலை!” எனத் தவிப்புடன் கூறினாள்.

“ரிலாக்ஸ் சுதி... ரிலாக்ஸ். என்னாச்சு?” என அவன் அருகே வர, இரண்டடிகள் பின்னே நகர்ந்தவள், “இல்ல... ஒன்னும் இல்லங்க. லேசா இடுப்பு வலிக்குது!” என்றாள் கலங்கிய விழிகளை சிமிட்டி. வலி உயிர் போக, அழுகை வரத் துடித்தது.
“என்னாச்சு... ஏன் பேக் பெய்ன்?” என அவன் தொட, “இல்ல... வேணாம். நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவாங்க?” எனக் கேட்டாள் பல்லைக் கடித்து.
“யெஸ்... இதென்ன கேள்வி. நீ முதல்ல வந்து உட்காரு. ரிலாக்ஸ் பண்ணு!” என அவளை அழைத்துச் சென்று கட்டிலில் சாய்ந்தவாறு அமர வைத்தான்.
“இதுக்கு முன்னாடி இதுபோல உனக்கு பெய்ன் இருந்திருக்குல்ல சுதி? கிட்சன்ல உட்கார்ந்த இல்ல?” அவன் நினைவு வைத்துக் கேட்க, சுதி ஒரு நிமிடம் ஆச்சர்யமாய் அவனைப் பார்த்துவிட்டு தலையை அசைத்தாள்.
“ஹம்ம்... எப்போல இருந்து பெய்ன் இருக்கு. டாக்டரைக் கன்சல்ட் பண்ணியா?” என அவன் கேட்க, சுதி தயக்கமாய் இல்லையென தலையை அசைத்தாள்.
“தென், பெய்ன் வந்தா என்ன பண்ணுவ?” என அவன் கேட்க, “அது... மெடிக்கல் ஷாப்ல போய் மாத்திரை வாங்கிப் போடுவேன்!” என்றாள். நிவின் அவளை முறைத்தான்.
“டாக்டரைக் கன்சல்ட் பண்ணாம நீயே எப்படி டேப்லெட் எடுப்ப? என்ன ஹெல்த் இஷ்ஷூன்னு டயக்னைஸ் பண்ணாம இப்படி பண்றது தப்பு சுதி!” என அதட்டியவன் அவள் என்ன மாத்திரை சாப்பிடுகிறாள் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“ஹம்ம்... ரொம்ப வலிச்சா சொல்லு சுதி. டாக்ரைப் பார்க்கலாம்!” என கணவன் அக்கறையாகக் கூற,
“இல்லங்க... இந்த டைம்ல வேணாம். எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ற மாதிரி இருக்கும். கொஞ்ச நேரம் படுத்தா வலி சரியாகிடும். இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!” என்றாள்.
“ஹம்ம்... இந்த வீக் எண்ட் டாக்டர்கிட்டே அப்பாய்ன்மெண்ட் வாங்குறேன். என்னென்னுப் பார்த்துட்டு வரலாம்!” நிவின் கூற, சுதி தலையை அசைத்தாள்.
“இப்போ உனக்கு வேற எதுவும் வேணுமா சுதி?” அவன் கேட்டுக் கொண்டே எழுந்து சென்று வலி நிவாரணி தைலத்தை எடுத்து வந்தான். அவள் முன்பு பேசும்போது கூறியது நினைவு வந்தது. அப்படியே தன்னுடைய இரவு உடை ஒன்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தவன், “ட்ரெஸ் மாத்திட்டு வா சுதி. இந்த சேரி உனக்கு அன்கம்பர்டபிளா இருக்கும்!” என்றான்.
“பேண்ட் ஷர்ட் போட்டு பழக்கம் இல்லைங்க. நைட்டி மட்டும்தான் போடுவேன்!” சுதி தயங்க,
“இட்ஸ் ஓகே, இன்னைக்கு ஒருநாள் போட்டுக்கோ. உன் பேக் எல்லாம் அந்த ரூம்ல இருக்கு. எல்லாரும் தூங்கிட்டு இருப்பாங்க. டிஸ்டர்ப் பண்ண கூடாது!” என நிவின் யோசித்து கூற, சரியென்று ஏற்ற சுதிரமாலா கழிவறைக்குள் சென்று உடை மாற்றி வந்தாள். அதற்குள் நிவின் அலைபேசியை எடுத்து இரண்டு நாட்களுக்கு கழித்து மருத்துவரைப் பார்க்க இணையத்தில் முன்பதிவு செய்தான்.
சுதி மெதுவாய் வந்து அமர, “படுத்துக்கோ சுதி... நான் பாம் தேய்ச்சு விட்றேன்!” நிவின் அவளைப் படுக்க பணிக்க, “இல்லைங்க... நானே தேய்ச்சுக்கிறேன்...” என்றாள் கூச்சத்துடன். அவன் முறைக்கவும் சுதி மௌனமாய் படுக்க, மேலுடையைத் தளரத்தினான் அவன். இவள் கூச்சத்தில் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டாள். எங்கே வலிக்கிறது எனக் கேட்டு மென்மையாய் தைலத்தை தேய்த்துவிட்டான். சுதிக்கு கண்களில் மெல்ல ஈரம் கோர்க்கத் தொடங்கியது.
“வேற எங்கேயும் வலிக்குதா சுதி? கால்ல?” எனக் கேட்டு அவனே வீங்கியிருந்த காலை மென்மையாய் நீவிவிட, குபுகுபுவென கண்களில் வழிந்த உவர் நீர் அவளது தலையணை நனைத்தது.
“போதுங்க... நீங்க வந்து படுங்க!” என்ற குரலிலிருந்த மாற்றத்தை உணர்ந்த நிவின், “சுதி... ஆர் யூ க்ரையிங்? அழுத்தி தேய்ச்சுட்டேனா?” என அவன் முன்னே நகர்ந்து அவள் முகம் பார்க்க, அப்படியே அவன் மடியில் தலையை சாய்த்து முகம் புதைத்தாள் பெண்.
“சுதி... உன்கிட்டே தான் கேட்குறேன். இப்படியே அழுதா என்ன அர்த்தம்? வாயைத் தொறந்து சொல்லணும்!” அவன் அதட்டல் போட, தலையை உயர்த்தி அவனைப் பார்த்தவள், “இல்ல... டெய்லி நானேதான் தைலம் தேய்ச்சுட்டு, எனக்கு நானே காலை அமுக்கிவிட்டுட்டுப் படுப்பேன். திடீர்னு நீங்க செஞ்சு விடவும் அழுகை வருதுங்க!” என்றாள், விழிகள் தளும்பி நின்றன.
“ப்ம்ச்... சுதி!” என மென்மையாய் அதட்டி அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான். அவனை இடையோடு கட்டிக்கொண்டு சில நிமிடங்கள் படுத்திருந்தவள்,
“சாரிங்க... ரொம்ப சாரி!” என்றாள் உள்ளே சென்ற குரலில்.
“இடஸ் ஓகே சுதிரமாலா, விடுமா!” என்றான் அவள் தலைக்கோதி. அந்தக் கையைப் பிடித்துக் கொண்டவள், “ரொம்ப ஆசையா இருந்தீங்கல்லப்பா?” என்றாள் அவனுக்காக யோசித்து. நிவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.
“என் பொண்டாட்டி ஹெல்த்தை விட எதுவும் முக்கியம் இல்லை. இப்போ நீ நல்லா ரெஸ்ட் எடு. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு வட்டியோடு வாங்கிக்கிறேன்!” என அவன் இலகுவாகக் கூறவும், சுதியின் முகத்தில் வெட்கப்புன்னகை.
“நீங்களும் வந்து படுங்க!” எனத் தலையை அவன் மடியிலிருந்து தலையணைக்கு மாற்றினாள் பெண். நிவின் எழுந்து சென்று விளக்கை அணைத்துவிட்டு அவளுக்கு மறுபுறம் சென்று படுத்தான்.
“ரொம்ப வலிச்சா சொல்லு சுதி. யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம கூட டாக்டரைப் பார்த்துட்டு வரலாம்!” என நிவின் கூற, அவன் புறம் திரும்பி படுத்தவள் தலையை அசைத்துவிட்டு, “உங்க மேல கை காலைப் போட்டு படுத்துக்கவா?” எனத் தயங்கிக் கேட்டாள்.
“வொய் நாட்?” என அவன் கூற, மெதுவாய் நெருங்கிப் படுத்து அவன் மேல் கையையும் காலையும் போட்டு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
“சாரிங்க...” மீண்டும் குற்றவுணர்வுடன் அவள் மன்னிப்பை வேண்ட, “சுதிரமாலா!” என அவன் அதட்டல் வேலை செய்ய, “ஹம்ம்...” என்ற முனங்கலோடு பெண் அவனருகே முகத்தைப் புதைத்தாள். நிவின் அவளது மேலுடையைத் தளர்த்தி வலித்த இடத்தை கரம்கொண்டு நீவி விட, அவளுக்கு சுகமாய் இருந்தது.
“நல்லா இருக்கு... நான் பத்து நிமிஷத்துல தூங்கிடுவேன். இப்படியே தடவிக் கொடுங்க!” என சலுகையாய் அவன் தோளில் முகத்தை அங்கும் இங்கும் திருப்பிப் படுத்தவள், ஆசையாய் கணவனின் வாசத்தை தன்னுள் நிரப்பிக் கொண்டாள். நிவின் மென்மையாய் தலையை அசைத்தான்.
“அந்தப் பக்கம் டேபிள்ல என் போன் இருக்கு. அதுல சிக்ஸ் தேர்ட்டிக்கு அலாரம் செட் பண்ணி இருப்பேன்‌. அதை ஆஃப் பண்ணுங்களேன்!” சுதி விழிகளை மூடியபடியே கூற, நிவின் அலறியை அணைத்தான்.
“நீங்க ஆறுமணிக்கு எழுந்துக்கறதோட நிறுத்திக்கோங்க. என்னையும் அவ்வளோ சீக்கிரம் எழுப்பி விட்டுடாதீங்க!” முறைப்புடன் கூறியவளை நிவின் வாஞ்சையாகப் பார்த்தான். ஏதேதோ முனங்கிக் கொண்டே பெண் தூங்க, நிவினும் சிறிது நேரத்திலே கண்ணயர்ந்தான்.
தொடரும்...


யாருமே அப்டேட் கேட்கலை. நான் கோபமா போறேன் யா 😏😏😏 அடுத்த அப்டேட் பத்து நாள் கழிச்சுப் போட்றேன். போங்க 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️











































 
New member
Messages
15
Reaction score
16
Points
3
❤️❤️❤️❤️❤️🫰🏻
Aiyayo neenga vera sis
Apdilam panidadhinga
I was waiting eagerly🤩
Thirumba thirumba poi keta disturb panra mari irukumenu kekala..
Solitingala ini parunga update ketu torture panren.. adhan enaku vela ini😝🤩
 
Messages
57
Reaction score
37
Points
18
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
நாங்க கேட்டாலும்
கேட்கவில்லை என்றாலும்
நேர்மையாக தினம் போடும்
நியாயஸ்தர் நீங்க.... 🤩🤩🤩🤩.....
சூப்பர் சூப்பர்.....

சுதிர் வலியில் துடித்து
பேசிடும் போது
கண்களில் கண்ணீரை தடுக்க முடியவில்லை....
 
Messages
57
Reaction score
37
Points
18
சோகத்தை மட்டுமே கண்டவள்
சுகமான நேரங்கள்....

வலிக்கு இதமாக பிடித்து விடும் கரம் கிடைத்த
வரம் பெற்றவள்....

மயக்கம் கொண்டு
தயக்கம் இன்றி மனைவியின்
நடுக்கம் களைய

மோகம் அற்று
சோகம் காண

மனைவியின் மனதை புரிந்து
மடி தந்து அரவணைக்கும்
மன்னனின் அகம் சேர்ந்தாள் மங்கை....
 
Well-known member
Messages
882
Reaction score
653
Points
93
Neeye correcta pottuduviye ma, apdi illa na etho work nu ninachu disturb panna koodathu nu kekkaama irunthachu

Enna da takku takku nu marriage mudinjiduchu nu paatha, last la ipdi oru twistuuu

Perusa ethavathu sollidathamma sudhi ku, paavam
 
Well-known member
Messages
431
Reaction score
320
Points
63
சுதிய சீக்கிரம் சரி பண்ணிடூ மா,
நாங்க கேக்கலனாலும் ஒரு நாளுக்கு இரண்டு யூடி கூட குடுக்கலாம் தப்பில்ல 😜😜😜😜
 
Active member
Messages
179
Reaction score
120
Points
43
Ethe pathi nalla pichi pichi
Ithuku poi enga thalavaraa pazhivangalamaa
 
Top