- Messages
- 1,030
- Reaction score
- 2,923
- Points
- 113
பொழுது – 20
அக்ஷா கோபமாய் உள்ளே நுழைய, மகேந்திராதான் கூடத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும் இவளுக்கு அழுகைப் பொங்கியது.
“அட... அக்ஷா... வாம்மா... உள்ள வா. எப்படி இருக்க?” அவர் அக்கறையாகக் கேட்க,
“நான் நல்லாவே இல்லை அங்கிள்!” என அவரருகில் சென்று நீள்விருக்கையில் அமர்ந்தவள் தேம்பியழத் தொடங்க,
“என்னம்மா... என்னாச்சு. ஏன் இப்படி அழற? எதுவும் பிரச்சனையா?” என அவர் பதற, கூடத்தை எட்டிப் பார்த்த நிவின் தோளை அசட்டையாகக் குலுக்கிவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
“எல்லாம் உங்கப் பையனாலதான் அங்கிள். அவனை நான் லவ் பண்றேன்னு உங்களுக்குத் தெரியும் தானே? ஐ லவ் ஹிம் அ லாட். எனக்கு நிவின் வேணும் அங்கிள். டூ இயர்ஸா அவனுக்காக நான் வெயிட் பண்ண, இவன் நேத்து வந்த ஒருத்திக்கிட்டே போய் பிடிச்சிருக்குன்னு சொல்றான். நான் எந்த விதத்துல சுதியைவிடக் குறைஞ்சு போய்ட்டேன் அங்கிள்?” ஆதங்கமாய்க் கேட்டுக் கொண்டே கண்களில் வழியும் நீரைத் துடைத்தாள் பெண்.
“ம்மா... அக்ஷா, நான் என்ன சொல்றதுன்னு தெரியலை மா. நான் முன்னவே கூட கேட்டிருக்கேன். உன் மேல விருப்பம் எதுவும் இருக்கான்னு. அவன் அப்படியெதுவும் இல்லைப்பா, அக்ஷாவைப் ப்ரெண்டா தானே பார்க்குறேன்னு சொல்லிட்டான். அதுக்கு மேல என்னால எதுவும் செய்ய முடியலை மா. நீ முதல்ல அழறதை நிறுத்து!” என்ன சொல்வது எனத் தெரியாது தடுமாறினார் பெரியவர்.
“அதெப்படி அங்கிள்... உங்கப் பையனுக்கு ஏன் என்னைப் பிடிக்கலை. நான் நல்லா இல்லையா அங்கிள். உண்மையா அவனை லவ் பண்றேன் அங்கிள். எனக்கு நிவினைக் கல்யாணம் பண்ணி வைங்க. நான் அவனை நல்லா பார்த்துப்பேன். ப்ளீஸ் அங்கிள்!” முகத்தை மூடி இவள் தேம்ப, பார்த்திருந்தவருக்கு பாவமாய் போய்விட்டது.
“அக்ஷா... உன்னை மாதிரி ஒரு பொண்ணைக் கட்டிக்க அவனுக்குத்தான் கொடுத்து வைக்கலை மா. உன்னை யாருக்காவது பிடிக்காம போகுமா? குணமான பொண்ணு நீ. நல்ல படிச்சு டாக்டரா இருக்க. இந்தப் பையன் நான் சொல்றதை எங்க கேக்குறான். அவன் புடிச்ச முயலுக்கு மூனு கால்னு நிக்கிறான். சரின்னு வேற வழியில்லாம நான் சம்மதிச்சுட்டேன் மா!” என அவர் கூற,
“அப்போ நீங்க கூட அந்த வேலைக்காரியை வீட்டு மருமகளா ஏத்துக்கப் போறீங்களா? அவ எந்த வகையில நிவினுக்குப் பொருத்தமா இருப்பா? அழகா இருக்களா? படிச்சிருக்காளா? குணம் கூட அவ்வளோ சீப்பா இருக்கு. அவ வேணும்னேதான் உங்கப் பையனை மயக்கிட்டா!” அவள் பேசப் பேச நிவினின் பொறுமை நீர்த்துப் போனது.
“ஷட் அப் அக்ஷா...சுதி இஸ் மை ப்யூச்சர் வொய்ப். உனக்கும் எனக்கும் பிரச்சனைன்னா, என்னைப் பத்தி மட்டும்தான் பேச உனக்கு ரைட்ஸ் இருக்கு. அவளைப் பத்தி தப்பா பேச எந்த ஒரு உரிமையும் உனக்கில்லை. காட் இட்?” நிவின் கோபத்துடன் அவளை உறுத்து விழித்தான்.
“ஓஹோ... ரெண்டு வருஷமா உன் பின்னாடி நாய் மாறி அலையுறேன். என்னை உனக்குப் பிடிக்கலை. நேத்து வந்தவளுக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்டவே பேசுறல்ல நிவின்?” முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு கோபமாய்க் கேட்டாள் அக்ஷா.
“லுக் அக்ஷா... எந்த வகையிலயாவது உனக்கு நான் ஹோப் கொடுத்து இருக்கேனா? ஈவன் உன் நம்பரைக் கூட நான் ப்ளாக் பண்ணிட்டேன். உன்னை வீட்டுக்கு வரக் கூடாதுன்னு கூடத் திட்டி இருக்கேன். அப்படி இருக்கும்போது எப்படி நான் உன்னை என் வாழ்க்கைக்குள்ள அலோவ் பண்ணுவேன். நீ என்ன மோட்டீவோட என்கிட்ட பழகுறேன்னு தெரிஞ்சப்போ உன்னைக் கூப்பிட்டு வார்ன் பண்ணேனா இல்லையா?” என்றான் எரிச்சலான குரலில். இந்தப் பெண் பேசுவதைப் பார்த்தால் இவன் காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிட்டது போலிருக்கிறதே என அவனுக்கு கோபம் கனன்றது. எந்த வகையிலும் அவளுக்கு நம்பிக்கை அளித்திட கூடாதென மனம் நோகாதவாறு எத்தனையோ முறைக் கூறியும் இவள் கேட்காமல் அனைத்தையும் செய்துவிட்டு என் மீது பழி போடுகிறாளே என எரிச்சல் மண்டியது.
“ஆமா... நீ ஹோப் கொடுக்கலை நிவின். பட் ஐ லவ் யூ. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் டா. ஆரம்பத்துல இருந்தே நீதான்னு நான் மனசுல நினைச்சுட்டேன். அதை என்னால மாத்திக்க முடியாது நிவின். ஏன் என்னை உனக்குப் பிடிக்கலை?” என வேதனை ததும்பிய குரலில் கேட்டாள். அவள் கண்ணீரில் நிவின் கொஞ்சம் நிதானித்தான்.
“நீ உள்ள வா அக்ஷா!” என சமையலறைக்குள் அழைத்துச் சென்றவன், “இந்த தண்ணியைக் குடிச்சு ரிலாக்ஸ் பண்ணு. நான் பேசுறேன்!” என்றான் மூச்சை இழுத்துவிட்டு.
“ம்ஹூம்... நீ எனக்கு ஓகே சொல்லு. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நிவின். உனக்காக எல்லாத்தையும் சாக்ரிபைஸ் பண்ண ரெடியா இருக்கேன். பிகாஸ் தட் மச் ஐ லவ் யூ!” என்றாள் தேம்பியபடி.
“ச்சு... அக்ஷா. என்னை கோபப்படுத்தாத. முதல்ல முகத்தை கழுவிட்டு வா. அழாம பேசு. என்னனாலும் நான் கேட்குறேன்!” என அவன் அதட்ட, இவள் முறைப்புடன் முகத்தைக் கழுவி தன்னை ஆசுவாசம் செய்து வர, அதற்குள் நிவின் காலிஃப்ளவரை பொரித்தெடுத்திருந்தான். அப்படியே அவளுக்கொரு குளம்பியையும் தயாரித்து கையில் கொடுத்தவன் பால்கனிக்குச் சென்று நின்றான்.
“காஃபியைக் குடிச்சுட்டே நான் சொல்றதைக் கேளு!” என அவன் கூற, கலக்கம் சூழ்ந்த விழிகளுடன் தலையை அசைத்து மெதுவாய் குளம்பியைப் பருகினாள்.
“உன்னைப் பிடிக்காதுன்னு என்னைக்காவது நான் சொல்லி இருக்கேனா அக்ஷா?” அவன் கேட்டதும் அவளது விழிகள் மின்னின.
“அப்போ என்னைப் பிடிக்குமா நிவி?” அக்ஷா கேட்க,
“யெஸ்... பிடிக்கும். ரொம்ப பிடிக்கும் அது ஒரு ஃப்ரெண்டா மட்டும்தான். மத்தபடி லவ் அது இதுன்னு எதுவும் இல்ல. உன்னை வேற மாதிரி என்னால பார்க்க முடியாது. நந்து, பாலா, ஆரோன் எப்படியோ அப்படித்தான் நீயும் எனக்கு. யூ ஆர் அ குட் கேர்ள். நீ ரொம்ப நல்ல பொண்ணு. குட் லுக்கிங், டாக்டர் இன்னும் நிறைய இருக்கு. பட் இதெல்லாம் வாழ்க்கைக்குப் போதுமா என்ன? ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுக்குப் பிடிக்கணும். அப்போதானே நம்ப சந்தோஷமா வாழ முடியும். ஒரு ஃப்ரெண்டா பார்த்த உன்னை லைஃப் பாட்னரா என்னால ஏத்துக்க முடியாது. புரிஞ்சுக்கோ!” நிவின் பொறுமையாய் பேச, நின்றிருந்த அவளது விழிகள் உடைப்பெடுத்தன.
“எனக்கு உன்னை மட்டும்தான் பிடிக்கும் நிவின். நான் உன்னை லவ் பண்றேன். நம்ப சந்தோஷமா வாழலாம் டா!” என்றாள் அழுகையுடன்.
“உன் கூட நான் இருந்தா நீ சந்தோஷமா இருப்ப சரி. நான் சந்தோஷமா இருக்க வேணாமா? சொல்லு. இதான் உன் லவ்வா? என் சந்தோஷம் முக்கியமா? இல்லை உன் சந்தோஷம் முக்கியமா?” அவன் அழுத்தமாய்க் கேட்க, “உன்னோட சந்தோஷம்தான் முக்கியம் நிவின். ஆனால் உன்னை சட்டுன்னு தூக்கி கொடுக்க மனசில்லை டா. ஏன்னா, உன்னை எனக்கு அவ்வளோ பிடிக்கும். நீ என் கூட இருந்தா சந்தோஷமா இருப்ப நிவின். இப்போ இருக்கதை விட இன்னும் உன்னை நான் கேர் பண்ணிப்பேன்!” என்றவளைப் பார்த்து தலையை இடம் வலமாக அசைத்தவன், “இதுதான் வேணாம்னு சொல்றேன் அக்ஷா. நீ என் கூட இருக்கும்போது நீயா இருக்க மாட்ற. உன்னை நீ நிறைய மாத்த ட்ரை பண்ற. ஆக்சுவலி அது உன் கேரக்டருக்கு செட்டே ஆகலை. நீ எப்பவும் போல இருந்தா தான் அழகே. வாழ்க்கை ஃபுல்லா எனக்காக சாக்ரிபைஸ் பண்ணிட்டு உனக்காக நீ வாழாம இருப்பீயா?” எனக் கேட்டான்.
“லவ் இஸ் சாக்ரிபைஸ்!” அவள் வேகமாக உரைக்க,
“நோ... லவ் இஸ் நாட் சாக்ரிபைஸ். தியாகம் பண்றது காதலே இல்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்ன சின்ன விஷயத்துல விட்டுக் கொடுத்துப் போறது தப்பில்லை அக்ஷா. மொத்தமா லவ்ன்ற பேர்ல நம்ப செல்ஃப் கேரக்டரை மாத்திக்கிட்டு வாழ்றது வாழ்க்கை இல்லை. ஒரு கட்டதுல சலிச்சுப் போய்டும். நீ மட்டுமே என் மேல அக்கறையா இருந்தா போதாது. எல்லாம் முதல்ல நல்லா இருக்கும். அப்புறம் போகப் போக உனக்கு கோபம் வரும். நீ காட்டுற அன்பை நானும் கொடுக்கணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவ. அது ஒத்து வராது. சுதியோட வாழ்ந்தா நாங்க ரெண்டு பேருமே இயல்பை மாத்தாம நல்லா வாழ்வோம்னு என் மனசு சொல்லுது அக்ஷா. என்னை விட என் வாழ்க்கைக்கு யாரு பொருத்தமா இருப்பான்னு சரியா யாரலையும் டிசைட் பண்ண முடியாது. ஹோப் யூ அண்டர்ஸ்டான்ட்?” எனக் கூறி அக்ஷா முகம் பார்த்தான் நிவின்.
“அப்போ நான் வேணாம் உனக்கு. அதைத்தானே சொல்ற?” கைக்குட்டையை எடுத்து கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே அவள் காரமாய்க் கேட்டாள். இவன் மெதுவாய் தலையை அசைத்தான்.
“ஐ ஹேட் யூ நிவின். யூ டிடின்ட் டிசர்வ் மை லவ். கண்டிப்பா நான் வேற ஒரு நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணி உன் முன்னாடி வருவேன். நீ எனக்குப் பண்ணதை திருப்பி செய்வேன். உன்னை விட எல்லா வகையிலயும் பெட்டரான ஒருத்தனைக் காட் கொடுப்பாரு!” என்றாள் கோபமாய்.
“மை பெஸ்ட் விஷ்ஷஸ் அக்ஷா. அப்படி நடந்தா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்!” நிவின் மனதிலிருந்து கூற, “ஷட் அப்... உன்னோட விஷ் எனக்குத் தேவையில்லை. உன்னை மனசுல நினைச்ச பாவத்துக்குத் திட்ட கூட முடியலை. எங்க இருந்தாலும் நல்லா இருந்துட்டுப் போ!” என அவள் அழுகையுடன் விறுவிறுவென வெளியேற, நிவின் பெருமூச்சோடு அவளைப் பார்த்தான். அவர்கள் இருவரது பேச்சையும் அவதானித்த மகேந்திரா அமைதியாய் இருந்தார்.
அக்ஷா அழுதுக்கொண்டு செல்வதைப் பார்க்க அவருக்கு மனம் கனத்தது. “ஏன் டா நிவின்... ஒரு பொண்ணை அழ வைக்கிறது ரொம்ப தப்பு டா!” என்றார் ஆதங்கமாய்.
“என்னை என்ன செய்ய சொல்றீங்கப்பா... இப்படியெல்லாம் நடக்கக் கூடாதுன்னு தான் ஆரம்பித்துலயே நான் வேண்டாம்னு சொன்னேன். ஆனால் அக்ஷாதான் கேட்கலை. அவளோட குணம் ரொம்ப பிடிவாதம்பா. ஒரு ஃப்ரெண்டா என்னால எல்லாத்தையும் அக்செப்ட் பண்ண முடிஞ்சது. பட், வொய்ஃபா முடியாது பா. அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. நான் வேணும்னு அடமெண்ட். மத்தபடி அவளுக்கு காதல் எல்லாம் இல்லைப்பா... நான் பார்த்த வரைக்கும் அவ என்னை அனலைஸ் பண்ணி லைஃப்க்கு செட் ஆவேன்னு டிசைட் பண்ணிட்டுத்தான் ப்ரபோஸ் பண்ணா. எனக்கு அப்படியெல்லாம் லவ் பண்றது பிடிக்கலை பா!” என்றான் தன் பக்க நியாயத்துடன்.
“இந்தப் பொண்ணை ஏன் உனக்குப் பிடிக்கலை. அதை சொல்லு!”
“எனக்கு சுதியைத்தான் பிடிச்சிருக்குப்பா. நான், என் பணம், என் அப்பியரன்ஸ்னு எதையுமே அவ ஒரு பொருட்டா மதிச்சது இல்லைப்பா. அவ வேணாம்னுதான் சொன்னா. நான் தான் கம்பெல் பண்றேன். பிகாஸ் ஐ லவ் ஹெர். எனக்குப் பிடிச்சிருக்குன்றதை ஜென்யூனா நான் சொன்னேன். எத்தனையோ ரீசன் என்னை ஓகே பண்ண அவளுக்கு இருக்கு இன்பேக்ட் அவளோட சிட்சுவேஷன்ல யாரா இருந்தாலும் நோ சொல்ல மாட்டாங்க. பட் அவ நோ சொல்றா. அதுலயே தெரிய வேணாமாப்பா அவ குணத்தை. அக்ஷாவைப் பிடிக்கும். பட் சுதியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் பா. அவளோட வாழ்ந்தா உங்கப் பையனை உங்கப் பொண்டாட்டி மாதிரி பார்த்துப்பா!” என்றவனின் பேச்சில் பெரியவர் வாய் தானாய் அடைத்துக் கொண்டது. தங்களது வசதிக்கு சுதிரமாலா இல்லையென்பதைத் தவிர அவளது குணத்தின் மீது எவ்விதை குறையும் பெரியவருக்கு இல்லை. அவரே சில சமயம் அவளது குணத்தைக் கண்டு வியந்திருக்கிறார். கடவுள் இப்படி எழுதியிருந்தால் யாராலும் மாற்ற முடியாது. எது நடந்தாலும் என் மகன் நன்றாய் இருந்தால் போதுமென அவர் தலையை அசைத்தார்.
மாலை சூரியன் மெதுவாய் மறையத் தொடங்க, நிவினும் மகேந்திராவும் சுதி வீட்டிற்குச் சென்று இறங்கினர். சரியாய் அதே நேரம் வாகீஸ்வரி, முத்துவேல், நந்தனா, பாலாஜி என நால்வரும் சென்று இறங்கினர்.
நந்தனா இவனைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல, நிவினுக்குப் புன்னகை முளைத்தது. அக்ஷா அழைத்து இவளிடம் அழுது கரைய, தோழிக்காக நிவினிடம் முறைத்துக்கொண்டு சுற்றுகிறாள் பெண். என்ன இருந்தாலும் நிவினுக்கு முன்பே அவர்கள் இருவரும் இணைபிரியா தோழிகளாயிற்றே. அவளது வருத்தம் இவளுக்குள்ளும் குற்றவுணர்ச்சியைத் தூண்டி இருந்தது. தோழியாய் இதெல்லாம் சரி வராது என என்றுமே அக்ஷாவுக்கு நல்வழி காட்டாது அவளுடைய செயல்களை ஆதரித்த பங்கில் நந்தனாவினுடையது தான் அளப்பரியது. அதனாலே கோபமாய் சுற்றுகிறாள்.
“என்னவாம் டா அவளுக்கு?” பாலா தோளில் கைப் போட்டவாறே நிவின் வினவ,
“ஹம்ம்... எல்லாம் இந்த அக்ஷா லூசு பண்ண வேலை டா. அவ முக்கியம்னா இனிமே உன் கூட நந்துவைப் பேசக் கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கா டா. இதுவும் அவளை சமாதானம் பண்ண வழித் தெரியாம தலையை ஆட்டிடுச்சு. விடு, கொஞ்ச நாள்ல சமாதானம் ஆகிடுவாங்க. அப்புறம் பேச வரும்போது நீ பார்த்துக்க!” என அவன் குறும்பாய்க் கூற, நிவின் தலையை அசைத்தான்.
சௌம்யா பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள். சற்று முன்னர்தான் அது இதுவென பேசி மாமியாரின் மனதைக் கரைத்திருந்தாள். அவர்கள் வந்து பேசிவிட்டு செல்லட்டும். பொறுமையாய்க் கையாளலாம் என்றும் அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாமென அவரைப் பேசி சரிக்கட்டியிருந்தாள்.
ருத்ராவும் தவாவும் மாலை நேர வகுப்பிற்கு அன்றைக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிலே அங்குமிங்கும் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலை வரை அப்பளம் தேய்த்திருந்த சந்திரா அப்போதுதான் அனைத்தையும் எடுத்து ஓரமாய் வைத்தார். சௌம்யா கூடத்தை சுத்தம் செய்து நான்கைந்து நாற்காலிகளை இட்டு வீட்டை ஒதுங்க வைத்தாள். அன்றைக்குப் போல தவா சென்று குளிர்பானம் வாங்கி வந்தான். நேரம் ஐந்தை தொட, அவர்கள் வந்துவிட்டிருந்தார்கள்.
“வாங்க தம்பி... வாங்க, எல்லாரும் வாங்க!” சௌம்யா தான் அனைவரையும் வரவேற்று அமர்த்தினாள். சந்திரா புன்னகைத்தார் அவ்வளவே.
“நான் போய் ஜூஸ் எடுத்துட்டு வரேன் அத்தை. நீங்கப் பேசிட்டு இருங்க!” மாமியாரிடம் கண்ணை அசைத்துவிட்டு அவள் அகன்றாள். சந்திரா என்னப் பேசுவது எனத் தெரியாது தடுமாற, நிவின் புன்னகையுடன் எழுந்து நின்றான்.
“ஆன்ட்டி, இவர் என்னோட அப்பா. கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர், அப்புறம் இது என் ஆன்ட்டி, அங்கிள். அவங்களோட பசங்க ரெண்டு பேரு. இவ்வளோ தான் நம்ப ஃபேமிலி. நான் தனியா வந்தப்போ நீங்க ரொம்ப இன்செக்யூர்டா ஃபீல் பண்ணிங்க. அதான் பேமிலியோட வந்திருக்கேன்!” என சிரித்த முகமாய் அவன் கூறினான்.
“இல்ல தம்பி...யாரா இருந்தாலும் அப்படித்தான் நடந்துக்க முடியும். திடுதிப்புன்னு நீங்க வந்து பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லவும் என்னால வேற எதையும் யோசிக்க முடியலைப்பா!” சந்திரா தன்னிலையை விளக்கினார்.
“நீங்க சொல்லித்தான் தெரியணும்னு இல்லங்க. ஒரு பொண்ணைப் பெத்தவளா எனக்கும் நல்லா புரியுது. ஆம்பளை துணையில்லாம வாழும்போது நாலையும் யோசிச்சுத்தான் செய்யணும்!” வாகீஸ்வரி இடைபுக, நிவின் பெரியவர்கள் பேசட்டும் என அமைதி காத்தான்.
“ஏற்கனவே என் பையன் சொல்லி இருப்பான். இருந்தாலும் அவனுக்கு அப்பாவா முறையா கேட்குறேன். என் பையன் நிவினுக்கு உங்கப் பொண்ணு சுதிரமாலாவைக் கேட்டு வந்திருக்கோம். என் பையன் படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைல இருக்கான். கை நிறைய சம்பாரிக்குறான். எந்தக் கெட்டப் பழக்கமும் அவன்கிட்டே இல்லை. நல்ல பையன். சொந்தமா இங்க ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டான். அங்க விருதுநகர்ல வீடு, தோட்டம் தொரவுன்னு எல்லாம் இருக்கு. ஒரே பையன், என் பொண்டாட்டி மூனு வருஷத்துக்கு முன்னாடி தவறவிட்டாங்க. என் பையனை நம்பி உங்கப் பொண்ணைக் குடுங்க. நல்லா வச்சுப் பார்த்துப்பான்!” மகேந்திரா பேச,
கையில் பழச்சாறு குவளையோடு வந்த சௌம்யா, “அதுக்கென்னங்கப்பா... குடுத்துட்டா போச்சு. இருந்தாலும் பொண்ணு வீட்டுக்காரங்க நாங்க. பையனைப் பத்தி விசாரிச்சு எங்க மனசுக்குத் திருப்தியானதும் சொல்றோம்பா. அப்படியே உங்கப் பையன் ஜாதகத்தையும் குடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். நாங்க எங்க குடும்ப ஜோசியர்கிட்டே பேசிட்டு நல்ல முடிவா சொல்றோம்!” என்றவள், “ஜூஸ் குடிங்கப்பா...” எனவும் அவருக்கு சௌம்யாவை பிடித்துப் போனது.
பாசாங்கு எதுவும் இல்லாது உள்ளதை உள்ளபடியே அவள் கூற, “ரொம்ப சந்தோஷம்மா... எவ்வளோ நாள் வேணாலும் எடுத்து நல்லா விசாரிச்சுட்டு சொல்லுங்க. நிச்சயம், கல்யாணத்தை சிறப்பா செய்யலாம்!” என்றவர் பழச்சாறு குவளையைக் கையிலெடுத்தார்.
“அங்க இங்க விசாரிக்க வேணாம். என்கிட்டயே கேளுங்க. என் அண்ணன் பையன் தங்கம். பொறுப்பான பையன். என் பையனுக்கு கூட நான் நல்லவன் சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன். ஆனால் நிவினுக்கு கொடுப்பேன் மா. எந்தக் கெட்டப் பழக்கமும் இல்ல. நல்ல பையன். என் பொண்ணு நந்தனாவை அவனுக்கு கட்டி வைக்கத்தான் ஆசை பட்டேன். ஆனால் என் பொண்ணு அவனை நான் பாலா மாதிரி பார்க்குறேன்னு சொல்லிட்டா. அதனாலதான் நல்ல பையனை மிஸ் பண்ணிட்டோம்!” வாகீஸ்வரி கூறினார்.
“நம்ம கையில என்னம்மா இருக்கு. எல்லாம் கடவுள் போட்ட முடிச்சு. யாருக்கு யாருன்னு அவர் ஒரு கணக்கு வச்சிருப்பாரு. இல்லைன்னா எங்கப் பொண்ணை உங்கப் பையனுக்கு ஏன் பிடிக்கப் போகுது?” சௌம்யா கேட்க,
“ரொம்ப சரியா சொன்னம்மா. சுதி ரொம்ப நல்ல பொண்ணு. கடமைக்குன்னு வேலை பார்க்காம எல்லாத்தையும் பொறுப்பா செய்ற பொண்ணு. எங்க வீட்ல பொண்ணு இல்லாத குறையைத் தீர்க்கத்தான் உங்க மக வந்திருக்கா போல!” மகேந்திரா சிரிப்போடு கூற, சந்திராவிற்கு அவர்களைத் தவறாக எண்ணத் தோன்றவில்லை.
குழம்பிய மனதோடு, “ஜோசியர் கிட்டே பேசிட்டு நாங்க சொல்றோம்...” என்றவர் சில நொடிகள் தயங்க, அவரையே பார்த்திருந்த நிவினுக்குப் புரிந்தது.
“ஆன்ட்டி... நான் அப்பவே சொல்லிட்டேன். டவுரி எதுவும் வேணாம்னு. நீங்க உங்கப் பொண்ணுக்கு ஆசையா செய்யணும்னு ஒரு சின்ன பொருள் கொடுத்தா கூட அது அவளோட சந்தோஷத்துக்காத்தான் இருக்கணும். மத்தபடி எங்க சைட்ல இருந்து கோல்ட், மணின்னு எதையும் டிமாண்ட் பண்ண மாட்டோம்!” என்றான் உறுதியாய். அவர் முகம் தெளியவில்லை.
“ப்பா...” அவன் தந்தையைப் பார்க்க,
“தங்கமான பொண்ணை பெத்து வச்சிருக்கீங்க. இதுக்கும் மேல சீர் செனத்தியெல்லாம் எதுக்குமா? எங்க பக்கத்துல இருந்து எதுவும் கேட்க மாட்டோம். என் பையன் வரும் போதே சொல்லிதான் கூட்டீட்டு வந்தான். வாழப் போற மகருமக நல்ல குணமான பொண்ணா இருந்தா போதும். வேறெதுவும் வேணாம் மா!” மகேந்திரா கூற,
“இப்படி சொல்றது உங்கப் பெரிய மனச்சுங்கப்பா. ஆனால் எங்கப் பொண்ணை நாங்க எப்படி வெறுங்கையோட அனுப்புவோம். அதெல்லாம் எங்களுக்குத் தக்கன செஞ்சுதான் அனுப்புவோம். இல்லையா அத்தை?” அவரிடம் பேசியவாறே சௌம்யா மாமியாரிடம் திரும்ப,
“ஆமாங்க... என் பொண்ணுக்குன்னு கொஞ்சம் நகை சேர்த்து வச்சிருக்கேன். அது அவளுக்குத்தான். என் வீட்டுக்காரரு இருந்திருந்தா, என்ன செய்வாரோ, அதே அளவுக்கு நானும் செய்வேன்!” சந்திரா வாயைத் திறந்து கூறிவிட, நிவின் முகம் மலர்ந்தான். நேரடியாக இல்லையெனினும் மறைமுகமாக அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததை எண்ணி இவனுக்கு மனம் மகிழ்ந்து போனது.
“அப்போ சரிங்க... நீங்க பார்த்து முடிவு பண்ணிட்டு சொல்லி விடுங்க. நிச்சயம் வச்சுக்கலாம்!” மகேந்திரா எழுந்து நின்றார்.
“என்னப்பா... அதுக்குள்ளேயும் கிளம்புறீங்க. இருந்து சாப்ட்டு போங்கப்பா!” என சௌம்யா கூற,
“நம்ப வீடு தானேம்மா... இனி அடிக்கடி வருவோம். அப்போ சாப்பிட்றேன் மா!” என அவர் கூற, அனைவரும் எழுந்து நின்றனர்.
“நான் வரேன் ஆன்ட்டி... சிஸ்டர் வரேன்!” நிவின் விடைபெற, வாயில் வரை சென்று சௌம்யா அவர்களை விட்டுவிட்டு வந்தாள்.
“ஏன் பாலா...இந்த சீன்ல நம்ம மிக்சர் சாப்பிட வந்தோமா டா? எதுக்கு நம்பளையும் கூட்டீட்டு வந்தானாம்?” நந்தனா நிவினை முறைக்க, பாலாஜிக்கும் அதே கேள்வி தோன்றியது.
“எங்களை எதுக்கு மச்சான் கூப்ட்டு வந்த. இந்த சீன்ல ஒரு டயலாக் கூட எங்களுக்கு இல்லையே டா?” அவனும் நண்பனைக் கேட்க, அவர்கள் இருவரையும் பார்த்து உதட்டைக் கடித்து சிரித்தவன், “சும்மாடா... கிரவுடுக்குத்தான். சண்டே சாப்ட்டு குப்புற படுத்து தூங்கப் போறீங்க. அதுக்கு இங்க வந்தா கூட்டமாச்சும் இருக்குமில்ல?” என அவன் முன்னே நடந்தான்.
“திமிர்... திமிரு, ரொம்ப திமிராகிப் போச்சுடா இவனுக்கு. ராஸ்கல், பார்த்துக்கிறேன்!” நந்தனா பல்லைக் கடித்தாள்.
“ச்சு... அவன் உன்னை வெறுப்பேத்த சொல்றான் நந்து. நீ சீரியஸா எடுத்துக்காத!” பாலா கூற,
“நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணாத டா!” தமக்கை சடைத்துக் கொண்டு வாகனத்தில் ஏறினாள்.
“வாங்க முத்துப்பாண்டி, அப்படியே வீட்டுக்கு போகலாம். நைட்டு சாப்ட்டு கிளம்புவீங்க!” மகேந்திர அழைக்க, அவர்கள் மறுத்துவிட சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் விடை பெற்றனர்.
நிவின் மகிழுந்தை இயக்க, மகேந்திரா அவனருகே அமர்ந்து வந்தார். அவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவன், “தேங்க்ஸ் பா!” என்றான் உணர்ந்து.
“போடா... போடா. உங்கம்மா இருந்திருந்தா இதைத்தான் செஞ்சிருப்பா. என்ன அவளுக்கு பேரன் புள்ளைகளைப் பார்க்க கொடுத்து வைக்கலை!” என்றவரிடம் மெல்லிய துக்கப் பெருமூச்சு. இருவரும் வீடு சேர்ந்தனர்.
சுதி வேலையில் இருந்தாலும் சொல் செயல் சிந்தனை என முழுவதும் வீட்டைச் சுற்றித்தான் நகர்ந்தது. என்னதான் வேண்டாம் என வாய் வார்த்தையாக நிவினிடம் பொய்யுரைத்திருந்தாலும், சுதியின் மனது மட்டுமே அறிந்த ரகசியம், அவன் மீதான பிரியம். அவளுக்குமே மனம் முழுவதும் ஆசை இருந்தது. அது இதுவென எந்தக் குறையும் கூறாது தன்னை அப்படியே ஏற்றுக் கொள்ளும் ஒரு வாழ்க்கைத் துணையைத் தவிர அவளிடம் பெரிதாய் எந்தக் கோரிக்கையும் இல்லை. அப்படி இருக்கையில் அன்பின் மொத்த உருவமாக தன் முன்னே நின்றிருந்த நிவினை மனமுவந்து சர்வ நிச்சயமாய் அவளால் புறக்கணிக்க முடியவில்லை. தாய் என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டு எவ்வித முன்னெடுப்புகளையோ இல்லை நம்பிக்கை வார்த்தைகளையோ நிவினிடம் அவள் உரைக்கவில்லை.
விவேகா, சௌம்யாவிடம் சுதி கூறியதெல்லாம் பொய்யில்லை. அவள் மனதிலிருந்து வந்தவைதான். இத்தனை வேறுபாடுகள் இருந்ததால் அவளால் ஒரு அடி கூட அவனை நோக்கி முன்னேற முடியவில்லை. நிவினின் இரண்டு பக்கத்தையும் அறிந்திருந்தவளுக்கு அவன் தவறானவன் என்ற எண்ணம் உத்தமமாய் கரைந்திருந்தது. அவனுடைய அன்பை ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை என்பதே உண்மை. அதனாலே கோபமுகத்தை நிவின் முன்னே பூசினாள் பெண். ஆனாலும் அக்ஷாவின் குற்றச்சாட்டை ஏற்காத மனது காலையில் அவளது கட்டுப்பாட்டிலிருந்து நழுவியிருந்தது.
‘என்ன பண்ணி வச்சிருக்க சுதி. அம்மாவுக்குத் தெரிஞ்சா வருத்தப்படுவாங்க!’ என மனதிற்குள்ளே தன்னையே நிந்தித்துக் கொண்டாள்.
‘கன்சிடர் பண்றேன்னுதான் சொல்லி இருக்கேன். வேற எதையும் சொல்லலை. அதானலே பிரச்சனை இருக்காது!’ என அவளே சமாதானம் செய்தாலும் நிவினைப் பற்றி முற்றும் முழுதும் அறிந்து வைத்திருந்தாள் பெண். தன்னுடைய நிராகரிப்பையே அசிரத்தையாய் தோள் குலுக்கலில் தட்டிவிட்டவன் இன்றைக்கு மனதிலிருந்ததை உரைத்திருக்க, அவனுடைய மற்றொரு பரிமாணம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் இப்போதே வியாபித்தது.
மனது குழம்பிய குட்டையாகியிருந்தது. எந்தப் பக்கமும் செல்ல முடியாது நடுவில் நின்று கொண்டிருக்கிறாள். இது எங்கு சென்று முடியுமோ என மூளை பலவற்றை யோசித்தது. வேலை நேரம் முடிய, எதிர்பார்க்காதே என தட்டி அதட்டியபடியே இவள் வெளியே செல்ல, நிவின் நின்றிருந்தான்.
சரியாய் இவள் வேலை முடித்து வரம் நேரத்திற்கு வந்திருப்பான் போலும். இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றிருந்தவன் வாகனத்தின் திறப்பை ஒரு விரலில் சுழற்றியபடியே அசுவாரஸ்யமாய் பார்வையை படர விட்டிருந்தான். சுதியைப் பார்த்ததும் இத்தனை நேரமிருந்த மனநிலை மாறிப் போயிருந்தது. அகமும் முகமும் மலரப் புன்னகைத்தவனையே இவள் கண்ணெடுக்காமல் பார்க்க, “ஹாய் சுதி!” எனப் புருவத்தை தூக்கி ஒற்றைக் கண்ணை சிமிட்டியவனைப் பார்த்து உதட்டைச் சுழித்துவிட்டு அவனைக் கடந்து விறுவிறுவென நடந்தாள் பெண்.
“சும்மாவே ஆடுவான்... இதுல நானே சலங்கயை கட்டிவிட்டுட்டேன் போச்சு!” என அவள் முணுமுணுப்பு அவனுக்கும் கேட்டு விட்டது போல. மீசைக்கு கீழே புன்னகை நீண்டு கவிந்தது. அவளது ஒருமை விளிப்பிலும் மனம் லயித்துப் போனது.
“ஹக்கும்... ம்ஹூம்!” என நிவின் தன்னிருப்பை உறுதி செய்ய கனைக்க, அவன் செய்கையில் சுதியின் உதடுகளில் மெதுவாய் புன்னகை ஏறிமர்ந்தது. திரும்பி அவனை முறைத்து விட்டு நடந்தாள் பெண்.
தொடரும்...
அடுத்த அப்டேட் இன்னைக்கே வேணுமா டியர்ஸ். சீன் தாறுமாறா வருது. டைப்பிட்டு வரேன்