• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,030
Reaction score
2,923
Points
113
பொழுது – 21 💖
“முறைச்சுட்டுப் போனா என்ன அர்த்தம் மேடம்?” வளைத்த உதடுகளைப் பார்த்து புன்னகையுடன் கேட்டவாறே மெதுவாய் அவளது நடைக்கு ஈடு கொடுத்து நடந்தான் நிவின். சுதி பதிலளிக்கவில்லை.
வாகனம் வருகிறதா எனப் பார்த்துவிட்டு அவள் சாலையைக் கடக்க செல்ல, “ச்சு... சுதி... ரூல்ஸை ப்ரேக் பண்ண கூடாது, சீப்ரா க்ராசிங்லதான் பண்ணணும்!” என நடந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சற்றே நகர்ந்து வெள்ளைக் கோடிட்ட இடத்திற்குச் சென்று மறுபுற சாலைக்குச் சென்றாள்.
“அப்போ அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ உங்க மேல மிஸ்டேக் இல்லையா என்ன?” என யோசனையாகக் கேட்டாள் சுதி. சாலையைக் கடக்கும் போதே விதிகளை மீறாதவன் அன்றைக்கு எப்படி மீறியிருக்க முடியும் என மூளை விழித்துக் கேள்வி கேட்டது.
அந்தக் கேள்வியில் அவளைப் பார்த்து சிரித்தவன், “இப்போவாது கேட்க தோணுச்சே சுதி. அன்னைக்கு என் மேல எந்த மிஸ்டேக்கும் இல்ல. ஆப்போசிட்ல வந்த வெகிக்கிள்தான் தப்பான ரூட்ல வந்தாங்க!” என்றான் நக்கலாக.
அவன் சிரித்ததில், “ஓ...” என என்று முகத்தை ஒடித்து திருப்பினாள்.
“சிரிப்பை பாரு!” என உதட்டுக்குள் முணுமுணுத்தாள். கேட்டவனின் முகம் மலர்ந்தது.
சுதி பேருந்து நிலையத்தில் சென்று நிற்க, நிவின் அவளுக்குப் பின்னிருந்த இருக்கையில் ஏறியமர்ந்தான். அவள் அவனைக் கண்டு கொள்ளாது சாலையில் பேருந்து வருகிறதா எனப் பார்த்தாள்.
“ம்ஹக்கும்... மேடம் காலையில போன் பண்ணி ஏதோ கன்பர்மேஷன் எல்லாம் பண்ணீங்களே!” குறும்பாய் செவிக்குப் பின்னிருந்து ஒலித்தக் குரலில் அவனைத் திரும்பி முறைத்தவள், “ஜஸ்ட் கன்சிடர் ஒன்லி. நாட் அ கன்பர்மேஷன்!” என்றாள் காரமாய்.
“ஓகே... ஓகே. கன்சிடர் பண்ணலாம்னு முடிவெடுத்துருக்கீங்க போல. அப்படியே இந்தக் கன்பர்மேஷனையும் கொடுத்துட்டா நல்லா இருக்கும். நானும் நிம்மதியா இருப்பேன் இல்ல?” அவன் குரலில் மெலிதாய் கேலி இழையோடியது.
‘போயா...’ என மனதிற்குள் திட்டியவள் வாயைப் பூட்டிக் கொண்டாள்.
“பரவாயில்லை... வாயைத் திறந்து கூடத் திட்டலாம். பயப்பட வேணாம். பெர்மிஷன் கிராண்டட்!” சிரிப்புடன் பின்னே ஒலித்தக் குரலில் அவனைத் திரும்பிப் பார்த்தவள், “எனக்கொன்னும் பயமெல்லாம் இல்ல!” என்றாள் நொடிப்பாக.
அவளுக்குரிய பேருந்து வர, “பஸ் வந்துடுச்சு. நான் கிளம்புறேன்!” என சுதி முன்னே எட்டு வைக்க, “ஹே... சுதிரமாலா... ஸ்டாப், ஸ்டாப். ஐ நீட் டூ டாக் டூ யூ. அதான் வந்துருக்கேன்!” என்றான் அவசர அவசரமாக.
“நோ... டைமாகிடுச்சு. நாளைக்குப் பேசலாம். நான் வரேன்!” அவள் மறுத்து இரண்டு எட்டுகள் வைக்க,
“சுதி, ப்ளீஸ்‌ மா. எனக்காக!” என அவன் குரல் கொஞ்சம் சுதி இறங்கிவர, இவளது கால்கள் நின்றுவிட்டன. அப்படியே பின்னோக்கி எட்டு வைத்து அவனைப் பார்த்து திரும்பி நின்று கையைக் கட்டியவள், “டென் மினிட்ஸ்தான் உங்களுக்கு டைம். என்ன பேசணுமோ, பேசுங்க!” என்றாள் அதட்டலாய்.
“ஹம்ம்... பேசணும்னு இல்ல. எனக்கு உன்கிட்ட ஒன்னு சொல்லணும்!” என்ற குரல் கொஞ்சம் அடர்ந்து வர, சுதிக்கு அபாயமணி ஒலித்தது.
“என்ன... என்ன சொல்லணும்?” இவள் மெதுவாய் தயங்க,
“ஐ லவ் யூ சுதி. நான் உன்னைக் காதலிக்கிறேன். சிம்பிளா சொல்லணும்னா, ஐ ஜஸ்ட் வாட் டு லிவ் வித் யூ டில் மை லாஸ்ட் ப்ரீத்!” என்ற குரலில் சுதியின் விழிகள் விரிய, அவனது முகத்தையே பார்த்திருந்தாள். இத்தனை நாட்கள் மறைமுகமாகக் கூறிய வார்த்தைகள்தான். இன்றைக்கு உயிர்ப்புடன் நுரைத்து பொங்கி ததும்பிய உணர்வில் இவளது மனம் கனிந்து போனது. உதட்டைக் கடித்து தலையைக் குனிந்தவள் பார்வையை சுற்றிலும் படரவிட்டாள்.
“இந்தப் பொண்ணை ஏன் எனக்கு பிடிச்சதுன்னு சொல்லணும். எவ்வளோ பிடிச்சதுன்னு சொல்லணும். அவளோட ப்ரசென்ஸ் எனக்கு பளசென்டா பீல் ஆச்சு. அவளோட ஆப்சென்ஸ் என்னை எப்படி பீல் பண்ணுச்சுன்னு சொல்லணும். இன்னும் நிறையா எவ்வளோ என் சுதிக்கிட்ட ஷேர் பண்ணணும். காலையில வந்ததும் வீட்ல அங்க இங்கேயும் அலைஞ்சுட்டே இருக்க இந்த முகத்தைதான் கடைசிவரை பார்த்துட்டே இருக்கணும்னு ஆசை ஏன் வந்துச்சு சொல்லணும் சுதி. சிம்பிளா, வொய் ஐ லவ் திஸ் கேர்ள்னு சொல்ல இந்த டென் மினிட்ஸ் நோ சான்ஸ், பத்தவே பத்தாது கேர்ள்!” என்றவனின் வார்த்தைகளில் சுதி பேச்சிழந்து போயிருந்தாள். அவன் முகத்தைப் பார்க்கும் திராயற்றவளின் விழிகள் அலை பாய, செவி மட்டும் அவனது குரலை உள்வாங்க, மனம் அவனது இருப்பை சுமகமாய் உள்வாங்கியது. வாய் வார்த்தைகளாய் அல்லாது முகம் முழுவதும் மலர்ந்து சிரித்து தன் மீதான பிரியத்திற்கு பெயர் வைப்பவனைக் கண்டு சுதிக்கு நெஞ்சம் நனைந்திருந்தது. இந்நொடி அவள் மனம் மிகப் பரிபூரணமாய் அவனது அன்பில் சரணாகதி அடைந்தது.
“நான் காலையில முடிக்கும்போது பார்க்குற முகம் உன்னோடதா இருக்கணும்னு என் ஹார்ட் சொல்லுச்சு சுதி. யூ க்நோ மீ வெரி வெல். இது நானே இல்லை. நான் ரொம்ப ரிசர்வ்ட். என்னோட கம்பர்ட் சோன்குள்ள அவ்வளோ ஈஸியா யாரையும் அலோவ் பண்ணது இல்லை. இத்தனை மாசம் நீ பார்த்ததுதான் நான். இப்போ... இங்க நிக்கிறது ப்யூர்லி ஃபார் சுதிரமாலா. அதுக்காக ட்வென்டி போர் ஹவர்ஸூம் இப்படியே இருக்க மாட்டேன் நான். ரெண்டுமே நான்தான். இந்த ரெண்டு பக்கமும் என் சுதிக்கு மட்டும்தான் சொந்தம். யெஸ், ஐ வாஸ் ரூட் இன் ஸ்டார்டிங் ஸ்டேஜ். ஹம்ம்... அப்போ எங்கேயும் போகாம வீட்டுக்குள்ள அடைஞ்சு இருந்த டென்ஷன். ஹம்ம்... அம்மா இல்லாதப்போ நான் லோன்லியா பீல் பண்ணதால என்னால விருதுநகர் வீட்ல என்னால இருக்க முடியலை. சோ கிளம்பி வந்துட்டேன். ஏனோ நீ வந்தப்புறம் அந்த லோன்லினெஸ் எங்கப் போச்சுன்னு தெரியலை சுதி. ஃபர்ஸ்ட் டைம் நீ என்னை டச் பண்ணி தூக்குனப்போ ஐ வாஸ் கான்ஷியஸ்லெஸ். கொஞ்சமா ஞாபகம் இருந்தது. ஆனால், அந்த வாய்ஸ்... உன்னைத் தேட வச்சது. மயக்கத்துல கேட்ட வாய்ஸை எப்படி அகைன் ஒன் டைம் கேட்டதும் ரெகக்னைஸ் பண்ணேன்னு எனக்கே தெரியலை. அப்போ லவ்னு சொல்ல மாட்டேன். பட், நீ ஒருநாள் லீவ் போட்ட... உனக்கு ஞாபகம் இருக்கா. நீ வரலைன்னு நான் டீ போட போனா, அங்க நிக்கிற. சரின்னு ஹால் வந்தா, அங்க ரூம் க்ளீன் பண்ற. என்ன பண்ண சொல்ற நீ. எங்க பார்த்தாலும் நீதான் தெரிஞ்ச. லிட்ரலி ரொம்ப ட்ரமாட்டிக்கா இருந்தாலும், அப்போதான் நான் ரியலைஸ் பண்ணேன்!” என புன்னகைத்து நிவின் நிறுத்தவும், சுதி எதுவுமே பேசவில்லை. அவனையே பாத்திருந்தாள்.
“உன்னோட ஆப்சன்ஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணுதுன்னு புரிஞ்சுது‌. பெருசா எந்த எக்ஸ்பெக்டேஷனும் எனக்கு இல்லை சுதி. ஐ நீட் அ கேர்ள், ஹூ த்ரோஸ் மை லோன்லினெஸ். கண்ணை மூடுனா நீ வந்து நின்ன. அப்போ டிசைட் பண்ணேன். அப்புறம் ஏன் இத்தனை நாள் சொல்லலைன்னு கேட்க கூடாது. ஐ ஜஸ்ட் பெல்ட் தட் டேய்ஸ் டூ. உனக்கு ரொம்ப ரோஷம் அதிகம் இல்லை. ஐ லவ் தட் செல்ஃப் ரெஸ்பெக்ட். நான் ப்ரபோஸ் பண்ணதும் அக்செப்ட் பண்ண தௌசண்ட் ரீசன்ஸ் இருந்தும், நீ ரிஜெக்ட் பண்ண. அப்போதான் இன்னுமே இந்தப் பொண்ணு வேணும்னு தோணுச்சு. ஐ டோன்ட் வாண்ட் யூ. ஐ நீட் யூ டு பில்லப் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப். அப்பப்போ கோபம் வரும், திட்டுவேன். நானே சமாதானம் பண்ணி கொஞ்சுவேன், கெஞ்சுவேன். எல்லா நேரமும் சிரிச்சிட்டு இருக்க மாட்டேன். சிடுசிடுன்னு இருந்து வெறுப்பேத்துவேன். அப்புறம் முக்கியமான விஷயம். ரொம்ப சுத்தம் பார்ப்பேன். இன்னும் நிறையா.. இந்த நிவினை அப்படியே ஏத்துக்குறது சுதிக்கு விருப்பமா? அவனோட அன்புல வாழ அவளுக்கு ஆசையிருக்கா?” எனப் புன்னகையுடன் பேசிய நிவினைப் பார்த்து விழிகளை சிமிட்டிய சுதி குனிந்து அலைபேசியைப் பார்த்துவிட்டு,
“டென் மினிட்ஸ் ஓவர்... நான் கிளம்புறேன்!” என்றாள் அடைத்த தொண்டையை சரி செய்து.
“நோ சுதிரமாலா... ஐ நீட் யுவர் ஆன்சர். எனக்குத் தெரியணும். இல்லைன்னா என்னால நிம்மதியா தூங்க முடியாது!” என்றான் அவள் முகம் பார்த்து தயங்கி.
சில நொடிகள் தரையைப் பார்த்திருந்த சுதி நிமிர்ந்தாள். அவளது விழிகளில் ஈரம் கோர்த்திருந்தது. “எப்படி பிடிக்காம போகும் இந்த நிவினை. ஹம்ம்... என்னை மட்டுமே பிடிக்கும்னு சொல்ற. முக்கியமா இதோ இந்த மூஞ்சியைப் பார்த்து பிடிச்சிருக்குன்னு சொல்ற மனுஷனை எப்படி பிடிக்காமப் போகும்?” என ஒற்றை விரலைத் தன் முகத்துக்கு நேரே சுட்டிக் கேட்டவள் உதடுகளை அழுந்தக் கடித்தாள்.
“யூ க்னோ சுதி, இந்த செக்ண்ட் உன்னைத் தவிர வேற யாரும் என் கண்ணுக்கு அழகா தெரியலை. யூ ஆர் டிவைன் ப்யூட்டி!” என்றான் ஆத்மார்த்தமான குரலில். ஆசையாய் அதை உள்வாங்கியவள், “பொய் சொல்லலாம் சார். ஆனால், இவ்வளோ பெரிய பொய்யெல்லாம் சொல்லக் கூடாது!” என்றாள் சிரிப்புடன்.
“நோ... என் சுதிக்கிட்டே நான் பொய் சொன்னது இல்லை. இனிமேலும் இந்த மாதிரி ட்ரமாட்டிக் லைய்ஸ் எல்லாம் அலவுட் இல்ல. நான் பேசுறது எல்லாமே என் மனசுல இருந்து வர்றதுதான். அவகிட்டே, அவப் பக்கத்துல என்னால பொய்யா நடிக்க, பேச முடியாது!” என அவன் கூறவும், சுதி விழியை சிமிட்டி இமையை மீறும் துளிகளை அதட்டி நிவினைக் கண்களுக்குள் நிரப்பினாள்.
முகத்தைத் துடைத்து நிமிர்ந்தவள், “முன்னாடி எப்படின்னு தெரியலை. பட் இந்த நிவினை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. யெஸ், ஐ லைக் யூ. பட் லவ் இருக்கான்னு தெரியலை. காதலுக்கும் பிடித்ததுக்கும் வித்யாசம் எல்லாம் என மனசுக்குத் தெரியலை. ஒவ்வொரு டைம் கடவுள்கிட்டே வேண்டும்போது அம்மா, அன்பைதான் அனுபவிக்க கொடுத்து வைக்கலை. அழகான புருஷன் வேணாம். அவன் நெட்டையோ, குட்டையோ, கருப்போ, சிவப்போ... எப்படி இருந்தாலும் பரவாயில்லை. என் முகத்தைப் பார்த்து எந்தக் குறையும் சொல்லாத ஒருத்தனை, என்னை அன்பா பார்த்துக்கிற ஒருத்தனைக் குடுங்க காட்னு மட்டும்தான் வேண்டுனேன். ஆனா பாருங்க நான் ரொம்ப சுமாரா எனக்கேத்த பையனா கேட்டேன். அவர் காதுல அது விழலை போல. இப்படி சினிமா ஹீரோ மாதிரி ஒருத்தர் வந்து லவ் பண்றேன்னு சொன்னா, எப்படி என்னால நம்ப முடியும். முதல்ல பயம் வந்துச்சு. ஆனால், அந்தப் பயம் எப்போ எங்க போச்சு, எப்படி நம்பிக்கை வந்துச்சுன்னு எனக்கே தெரியலை. இதோ, இப்போ கூட யார் என்ன நினைப்பாங்கன்ற எண்ணமில்லாம நைட்ல உங்கக் கூட பேசிட்டு இருக்கேன். என்னமோ தெரியலை. நீங்க என்னை விட்ற மாட்டீங்கன்னு ஒரு எண்ணம். புடிச்சிருக்கா, பிடிச்சிருக்கான்னு எல்லாம் இனிமே கேட்காதீங்க. நான் முன்ன சொன்னதுதான். எந்த நிபந்தனையும் இல்லாம என் மேல காதலை, பாசத்தை வச்ச உங்களை எப்படி பிடிக்காம போகும். யெஸ், யூ ஆர் டூ ட்ரமாட்டிக். எனக்கு உங்களை மாதிரியெல்லாம் பேசத் தெரியாது. ஆனால் இவ்வளோ... ம்கூம்!” எனத் தலையை இடம் வலமாக அசைத்துக் கையை விரித்தவள், “இவ்வளோ ஆசை இருக்கு உங்களோட சேர்ந்து வாழ. எனக்கே எனக்கான்னு யார்கிட்டேயும் ஷேர் பண்ணிக்காம உங்க அன்பை அனுபவிக்கணும். இடுப்பு வலிக்குது, கால் வலிக்குதுன்னு தைலம் தேய்ச்சுட்டு தனியா படுத்து அழுத காலமெல்லாம் கரைஞ்சு போய்டுச்சு. இனிமே வலிச்சா உங்ககிட்டே சுகமா சலுகையா சொல்லி நீங்க எனக்கு காலை அமுக்கி விடணும். உங்க கையால ஒரு காஃபி குடிக்கணும். ரொம்ப இல்லைனாலும் ரெண்டே ரெண்டு புள்ளைங்களைப் பெத்து உங்களை மாதிரி மிஸ்டர் பெர்பெக்டா வளர்க்காம என் இஷ்டத்துக்கு வளர்க்கணும். அவங்க வீட்டை சுத்தமா வைக்காம‌ உங்களை டென்ஷன் பண்றதை பார்த்து சிரிக்கணும். கடைசி வரை உங்களோடயே வாழணும்னு மனசு முழுக்க ஆசை இருக்கு. வாய் வார்த்தையா சொல்ல முடியலை. என் அம்மா, அண்ணின்னு நினைப்பு வந்தாலே கில்டா இருக்கு!” என பெருமூச்சுவிட்டவள், “இதெல்லாம் நடக்கணும்னா என் அம்மாவோட பெர்மிஷன் வேணும். அவங்ககிட்ட பேசி சரி பண்ணுங்க. நீங்க சொல்றதைவிட நான் வாழ்ந்து பார்க்க எவ்வளோ ஆசைன்னு காட்டுறேன்!” என்றாள் விழிகளில் தேங்கிய நீருடன். நிவின் பதிலளிக்கவில்லை. ஆசையாய் அவளைப் பார்த்திருந்தான். முதன்முதலில் சுதியின் வாயிலிருந்து தன்னைப் பிடித்திருக்கிறது என்ற வார்த்தையை மனம் பிரியத்துடன் வாங்கி சுகித்தது.
“உங்க அம்மா பெர்மிஷன் கொடுத்துட்டாங்க சுதி!” நிவின் அதிராமல் கூற, அவனைப் பார்க்காது சுற்றியிருந்த பொருட்களில் விழிகளை மேய விட்டவள், சட்டென ஆசையாய் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள்.
“ப்ம்ச்... குழந்தையை ஆசைக் காட்டி மோசம் பண்ற மாதிரி பண்ணாதீங்க. பொய் தானே சொல்றீங்க?” என ஆர்வமாய்க் கேட்டாள் பெண்.
“உன் அண்ணிக்கு கால் பண்ணி கேளு!” அவன் தோளைக் குலுக்க, விழிகளில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டு அலைபேசியை எடுத்து சௌம்யாவுக்கு அழைத்தாள்.
“சொல்லு சுதி, எங்க வந்துட்டு இருக்க?” எனக் கேட்டாள்.
“பஸ் ஸ்டாண்ட்லதான் இருக்கேன். அப்புறம் என்னாச்சு அண்ணி?” எனத் தயங்கினாள்.
“என்ன என்னாச்சு சுதி?” வேண்டுமென்றே சௌம்யா கேட்க,
“அது... அதான் அண்ணி. அவரு வீட்லருந்து வந்தாங்களே. அம்மா என்ன சொன்னாங்க?” என்றாள் மெல்லிய குரலில்.
“என்ன... என்ன சொல்லணும் சுதி. அதான் காலையிலே நீ அந்தப் பையனைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டீயே‌. அதை நான் அத்தைகிட்ட சொல்லி, அவங்க வந்ததும் ஒத்து வராது. எங்கப் பொண்ணுக்கு வேற பையனைப் பார்த்துட்டோம்னு சொல்லிட்டோம். அவங்களும் சரி, வேற வழியில்லைன்னு கிளம்பி போய்ட்டாங்க. இப்போதான் அத்தை ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்குன்னு சொன்னாங்க சுதி!” அவள் பேசப் பேச சுதியின் முகம் மாறியது. சௌம்யா குரலில் சிறு பிசிறில்லை.
“ஓ... அப்படியா அண்ணி?” என்றாள் உள்ளடங்கிய குரலில். அடிவயிற்றிலிருந்து தொண்டையை ஏதோ அடைத்தது போல.
“என்ன ஓ அப்படியா... இப்போ கூட மகாராணி வாயைத் தொறந்து சொல்ல மாட்டாங்க. அம்மா முடிவுதான் என் கட்டளை, சாசனம்னு டையலாக் உட வேண்டியது. காலைல என்னமோ ஒன்னுமே இல்லைன்னு முகத்தைத் திருப்பிட்டு போக வேண்டியது. இப்போ ஃபோன் போட்டு என்னாச்சு... நொன்னாச்சு கேள்வி வேற? இவ போதைக்கு நான் ஊறுகாயாக முடியுமா என்ன?” என அவள் பொரிய,
“ச்சு... அண்ணி!” என சுதி சிணுங்கினாள்.
“அடியேய் யம்மா... இந்த சிணுங்கல் எல்லாம் என்கிட்ட வேணாம். அதான் பக்கத்துல நல்லவன் ஒருத்தன் இருக்கானில்ல, அவன் கிட்டே வச்சுக்கோ. நான் ஆளில்லை. அவன்கிட்டயே என்னாச்சுன்னு கேளு. விம் போட்டு விளக்குவான். சட்டு புட்டுன்னு உங்க கொஞ்சல், காதலை முடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியைப் பாரு. நேரமாச்சு. உங்கம்மாவை என்னால சமாளிக்க முடியாது!” என சௌம்யா கோபத்தில் அலைபேசியைப் பட்டென வைக்க, அவளது பேச்சில் சுதியின் முகம் சிவந்து போனது. அவளையே பார்த்திருந்த நிவின் உதடுகளில் புன்னகை ஜனித்தது.
“சுதி... யூ ஆர் ப்ளஷ்ஷிங். இட்ஸ் சோ க்யூட் டூ!” என்றவன் குரலில் மங்கத் தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்தவள், “அண்ணி எதுவுமே சொல்லலை!” என்றாள் தாயிடம் புகார் கூறும் குழந்தையாய்.
“நான்தான் சொல்ல வேணாம்னு சொன்னேன்!” எனக் கேலியாய்ப் புன்னகைத்தவனை சுதி யோசனையாகப் பார்த்தாள்.
“என்ன ஏன்‌.. நீங்க மட்டும் பிடிச்சிருக்குன்ற நாலு வேர்ட்ஸை சொல்றதுக்கு என்னை ஒரு வாரம் பின்னாடி அலைய விடுவீங்களாம். நாங்க மட்டும் ஈஸியா சொல்லணுமோ. முடியாது!” என அவன் கூற, மீசைக்கு கீழே சிரிப்பு உதித்தது.
“ஓஹோ... சொல்ல முடியாதா... பரவாயில்லை. அம்மா எப்படியும் என்கிட்ட தானே வந்து உங்களைப் பிடிச்சிருக்கான்னு கேட்பாங்க. அப்போ எனக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்றேன். போங்க!” என முன்னே நடந்தாள் பெண். பேசிக் கொண்டே இருக்க, நேரம் கடந்தது.
“ஓ... அப்படிங்களா மேடம். இதுவரைக்கும் சாக்லேட் பாயா இருக்க இந்த நிவின் அப்புறம் ஆன்ட்டி ஹீரோவா மாறி உங்களை கடத்திட்டுப் போய் கல்யாணம் பண்ணிடுவேன்!” என அவன் குறும்பாய் உரைக்க,
“கடத்துற மூஞ்சியைப் பாரு... போயா!” என உதட்டை சுழித்தவளின் முகம் மலர்ந்திருந்தது.
பேருந்தில் ஏறியமர்ந்தவள் பக்கவாட்டில் திரும்பாது நேரே பார்க்க, “சுதிரமாலா!” என நிவின் கத்தினான்.
“ஷ்... ஏன் கத்துறீங்க?” அவள் அதட்ட, “ஐ லவ் யூ!” என்றான் உதட்டை அசைத்து. இவள் ஆச்சர்யமும் கண்டனமுமாய்ப் பார்த்து வைத்தாள். பேருந்து நகர, ஓரக்கண்ணால் அவனைக் கண்களில் நிரப்பினாள்.
அலைபேசியை எடுத்தவள், “அப்படியே நிக்காம வீட்டுக்கு கிளம்புங்க. டைமாச்சு... மாமா வெயிட் பண்ணுவாரு!” என குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“மாமா... ஹூ இஸ் ஹீ?” அவன் சிரிக்கும் பொம்மையுடன் கேட்க, “போயா...போ. அம்மாகிட்ட பிடிக்கலைன்னு சொல்லுவேன்!” என்றாள் இவளும் வம்பிழுக்கும் பொருட்டு.
“உனக்கெல்லாம் சாஃப்ட் ஹீரோ ஒத்து வராது டி. ஆன்ட்டி ஹீரோதான் கரெக்ட்!” நம்பியார் புகைப்படத்துடன் அவன் அனுப்ப, இவளுக்கு சிரிப்பு பொங்கியது.
“ஓகே... அதை அப்போ பார்த்துக்குவோம். வீட்டுக்குப் போய் சாப்ட்டு நிம்மதியா தூங்குங்க!” என்றாள்.
“நீ கூட இருந்தா இன்னும் நிம்மதியா தூங்கலாம்!”
“பேராசை... போங்க... போங்க!” என சுதி பேச்சை முடித்துக் கொள்ள, இருவருக்கும் மனம் நிறைந்து போயிருந்தது.
சுதி வீட்டிற்குள் நுழைந்தவள் சௌம்யாவின் முகம் பார்க்காது குனிந்தடியே விறுவிறுவென அறைக்குள் நுழைந்து மூச்சை வெளிவிட்டாள். பின்னே அரவம் கேட்க, சௌம்யாதான் உள்ளே நுழைந்து கதவைப் பூட்டினாள்.
“என்னடி... என்ன டைம் இப்போ? ஏன் இவ்வளோ லேட்? அத்தை கேட்க சொன்னாங்க?” கையில் குச்சி இல்லாதது ஒன்றுதான் குறை. மற்றபடி அவள் அதட்ட,
“ப்ம்ச்... அண்ணி!” என சிணுங்கினாள் சின்னவள்.
“என்னடி... என்ன சிணுங்கல் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு. இதெல்லாம் நல்லதுக்கில்ல!” என சௌம்யா பேசிக் கொண்டிருக்கும் போதே சுதி அவளை இறுக அணைத்திருந்தாள்.
“அடிப்பாவி... நான் நிவின் இல்ல. உன் அண்ணி சுதிரமாலா டி!” நேசமணியின் குரலில் அவள் கூற, “போங்கண்ணி... தேங்க் யூ... தேங்க் யூ சோ மச் அண்ணி!” என்றாள் உணர்வுகள் ததும்பிய குரலில்.
“போடி இவளே... இவ தேங்க்ஸ் யாருக்கு வேணும். மனசுல ஒன்னை வச்சுக்குவாளாம். வெளில மூன்று முகம் கஜினி, ரெண்டு முகம் கமல்னு கதை விடுவாளாம்!” அவள் சடைக்க,
“நிஜமா சாரி அண்ணி!” என்றாள் சுதி அணைப்பைத் தளர்த்தியபடி.
“போடி... இது உனக்காக இல்ல. என் தம்பி நிவினுக்காக. அவன் ஆசைப்பட்ட பொண்ணைக் கட்டி வைக்கத்தான்!” என்றாள் மிதப்பான குரலில்.
“ஆமா... ஆமா. ரொம்பத்தான் போங்க!” என்றவள், “அம்மா என்ன சொன்னாங்க அண்ணி?” என்றாள் ஆர்வமும் ஆசையுமாய்.
“அதை ஏன் என்கிட்ட கேட்குற. போய் உங்கம்மா கிட்டயே கேளுடி!” சௌம்யா சடைக்க,
“என் செல்ல அண்ணி இல்ல. ப்ளீஸ், ப்ளீஸ்!” என அவள் தாடையைப் பிடித்துக் கெஞ்சினாள் சுதி.
“ஹம்ம்...‌என் தம்பி சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரே சுதி?” இவள் இழுக்க, “அண்ணி!” என தரையில் காலை உதைத்தாள் சுதிரமாலா.
“வீட்டைப் பேத்து எடுத்துடாத டி. ஓனர் வந்தா திட்டுவாரு!” என்ற சௌம்யா, “ஓகேன்ற ரெண்டு வார்த்தை மட்டும்தான் சொல்லலை. மத்தபடி எல்லாம் பாசிட்டிவ் ரிசல்ட்தான். ஜாதகம் பார்த்துட்டு வந்து ஓகே சொல்லிடுவாங்க!” என்றாள்.
“ஒருவேளை ஜாதகம் செட்டாகலைன்னா?” இவள் இழுக்க, “அதெல்லாம் செட் ஆகும். பத்துக்கு ஏழு பொருத்தம் இருந்தாலே போதும். அமோகமா வாழ்வாங்களாம். நீ அதைப் பத்தி கவலைப்படாத. செட்டாக வைக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றாள். சுதிக்கு விழிகளில் ஈரம் படர்ந்தது.
“தேங்க் யூ அண்ணி... தேங்க் யூ சோ மச். எனக்கு அவரைப் பிடிச்சிருக்குதான். பட் உங்களை எல்லாம் மீறி நான் போக மாட்டேன்னு தெரிஞ்சுதானே இப்படியெல்லாம் பண்றீங்க. அண்ணாவும் இப்படித்தான். எப்பவுமே அம்மாகிட்டே எனக்கு சப்போர்ட் பண்ணிப் பேசும்!” என்றாள் அழுகையுடன்.
“ப்ச்... இதென்ன நல்ல பேச்சு பேசும்போது அழுகை சுதி. கண்ணைத் துடை. உங்கண்ணன் இடத்தை நான்தான் இனிமே நிரப்புவேன். அவர் கிட்டே அது இதுன்னு மனசுல இருக்கதை சொல்வீயே. அதே மாதிரி என்கிட்டயும் சொல்லு. எந்தக் குறையும் இல்லாம கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். என் புருஷனோட ஆசை இது!” என்றாள் முறுவலித்தபடி. இருவருக்குமே அந்நொடி சரத்தின் இன்மை வலித்திருக்க வேண்டும்.
“சரி... சரி. போ, போய் சாப்ட்டு படுத்து கலர் கலரா டூயட் பாடு!” என சௌம்யா கேலியுடன் கூறி அகல, சுதியின் முகம் லேசாய் சிவந்தது.
தொடரும்...





































































 
Messages
57
Reaction score
37
Points
18
முதலும் உன் முகம் முடிவும் உன் முகமாக
இல்லாத நொடியில் தவித்து
இருக்கும் நொடியில் துடித்து
இதயத்துடிப்பில் என்றும் நீயாக
முற்றும் என் மனதில் உன்
ஆட்சி புரிய வேண்டும்....

வலிக்கு இதமாக
வாஞ்சையாக சாய்த்து
விழி சொல்லும் உன்
வர்ணனையில் மயங்கி
விழி வழியே காதல் கொண்டு
வாழ்க்கையை வாழ வேண்டும்.....

அன்பு நீயாக
ஆசை நானாக
ஆயுள் நம் வாழ்வாக
இணையாக தொடரலாம்
இனிமையாக
வாழ்ந்திடலாம்....

 
Well-known member
Messages
882
Reaction score
653
Points
93
Semmmmmmmaaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaa semmmmmmmaaaaa
 
Top