• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 9

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,013
Points
93
தவம் 9:

உன் பேரை சொன்னாலே

உள் நெஞ்சில் தித்திக்குமே…

“ம்மா கை வலிக்கிதும்மா” என்று வலியில் முகத்தை சுழித்தபடி ஜீவி மொழிய,

“கொஞ்சம் நேரத்தில சரியாகிடும் தங்கம்” என்றவளுக்கு விழிகள் கலங்கியது‌.

“இத தான் நேத்துல இருந்து சொல்லிட்டு இருக்க” என்று மகள் கூற,

“சீக்கிரம் சரியாகிடும் தங்கம். இதை போட்டாதான் உடம்பு நல்லாகும்” என்றவளது பார்வை மகளது கையில் குத்தப்பட்டிருந்த ஊசியில் படிந்தது.

துளித் துளியாக மருந்து ஏறி கொண்டு இருந்தது.

“டாக்டர் வந்தா இந்த ஊசியை மட்டும் எடுக்க சொல்றீயா?” என்று மகள் கெஞ்சலாக வினவ,

இவளுக்கு உருகி போனது.

“அதை எடுத்தா எப்படி சரியாகும்” என்றவள்,

“ஜீவி பெரிய பொண்ணு தான?” என்று வினவ,

“ஆமா” என்று தலையை அசைத்தாள்.

“அப்போ இதுக்கெல்லாம் அழுகலாமா?” என்று வினவ,

“கூடாது தான்” என்று இழுத்தவள்,

“ஆனா வலிக்குதே” என்றிட,

“அம்மா சாமிக்கிட்ட வேண்டி இருக்கேன். என் மகளோட வலி எல்லாம் என்கிட்டயே கொடுத்திடுன்னு. சீக்கிரம் உனக்கு வலி போய்டும்” என்றாள்.

“அப்போ உனக்கு வலி வந்திடுமே. வேணாம்மா நானே தாங்கிக்கிறேன். நீ பாவம்” என்று மகள் கூற,

அவளது அன்பில் உள்ளம் நெகிழ்ந்தது.

“எனக்கு உன்னைவிட வயசு கூட இருக்கதால வலிக்காது” என்று மகளுக்கு சமாதானம் கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து கேட்டு கொண்டாள்.

“ஜீஸ் குடிக்கிறியா ஜீவி?” என்று வினா தொடுக்க,

“வேணாம்மா எனக்கு பிடிக்கலை. வாயெல்லாம் கசக்குது”என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினாள்.

“வேணாம்னு சொல்ல கூடாது டா. ஜீஸ் குடிச்சா சீக்கிரமா சரியாகி வீட்டுக்கு போக முடியும்” என்க,

“ஜீஸ் குடிச்சா சீக்கிரம் வீட்டுக்கு போகலாமா?” என்று மகள் ஆர்வமாய் விழிகளை விரிக்க,

இவளுக்கு மென்னகை ஜனித்தது.

“ஹ்ம்ம் போகலாம். ஜீஸ் போட்டு தரவா?” என்று மீண்டும் வினவ,

“ஹ்ம்ம் ஓகே மா” என்க,

ஜீவி கையில் இருந்த சிறு பழச்சாறு பிழியும் இயந்திரத்தில் பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டாள்.

ஜீவிதாவிற்கு மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்திருக்க மருத்துவரிடம் சென்ற போது சாதாரண காய்ச்சல் தான் மருத்துவர் மருந்துகளை கொடுத்திருந்தார்.

ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சரியாத நிலையில் நேற்று முன்தினம் ரத்த பரிசோதனை செய்து பார்த்த போது டைபாய்டு காய்ச்சல் என்று அறிக்கை வர நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்க கூறினர்.

இரண்டு நாட்களாக மகளோடு மருத்துவமனையில் தான் வாசம் செய்கிறாள்.

ஒற்றை ஆளாக மாற்றிவிட கூட ஆளின்றி சற்று கஷ்டமாக தான் இருந்தது.

காலையில் குளிக்க செல்ல மாற்றிவிட ஆள் இல்லை. இரு தினங்களாக குளிக்காமல் தான் சுற்றுகிறாள்.

சௌமியாவிற்கும் விடுப்பு எடுத்துக் கொண்டு வர இயலாது. இன்று மாலை இரண்டு மணி நேரம் அனுமதி கேட்டு வருவதாக கூறி இருந்தாள்.

அப்போது தான் வீடு சென்று குளித்து மகளுக்கும் வேறு உடை எடுத்து வர வேண்டும் என்று எண்ணியிருந்தாள்.

சிந்தனையுடனே பழச்சாறை தயாரித்து மகளுக்கு புகட்டினாள்.

பிறகு செவிலியர் வந்து ஒரு முறை ஊசி போட்டுவிட்டு செல்ல பத்து மணிக்கு மருத்துவர் வந்து பார்ப்பதாக கூறி சென்றார்.

இடையில் ஜானவியும் உண்டு முடித்திருக்க பத்து மணிக்கு மருத்துவர் வந்தார்.

ஜீவிதாவை பரிசோதித்தவர், “இப்போ எப்படி இருக்கு கேர்ள்? வாமிட்டிங் இருக்கா?” என்று வினவ,

“இல்லை டாக்டர் ஆனா இந்த ஊசி மட்டும் வலிக்கிது.‌ அதை எடுத்து விட்றீங்களா?” என்று கேட்டிட,

மருத்துவர், “எடுக்கலாமே டூ டேஸ்ல எடுத்துடலாம். இப்போ கூடாது” என்று கூற,

“அப்போ வலிக்காம இருக்க எதாவது பண்ணுங்க” என்று ஏமாற்றம் தாங்கிய குரலில் வினவினாள்.

“நீ கையை அசைக்காம இருந்தாலே உனக்கு வலிக்காது” என்றவர் ஜானவியிடம்,

“டேப்லெட்ஸ் கரெக்டா கொடுக்கிறீங்களா?” என்று கேட்க,

“ஹ்ம்ம் கரெக்டா கொடுக்குறேன் சார்” என்றாள்.

“ஓகே நான் டோஸ் சேஞ் பண்றேன். அதை பாலோவ் பண்ணுங்க” என்று மருந்து சீட்டில் எழுதி கொடுக்க,

அதனை பெற்று கொண்டவள் சரி என்பதாய் தலையாட்டினாள்.

மருத்துவர் அகன்றதும் செவலியரிடம் மகளை பார்த்து கொள்ள கூறியவள் ஜீவியிடமும் சொல்லிவிட்டு மருந்தகத்தை நோக்கி சென்றாள்.

அங்கே ஏற்கனவே ஐந்தாறு ஆட்கள் நின்று கொண்டிருக்க பெருமூச்சுடன் இவளும் வரிசையில் நின்றாள்.

திடீரென மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சற்று கலங்கித்தான் போயிருந்தாள்.

“மாமா அது ஜானவி தான?” என்ற லவிவியின் கேள்வியில் திரும்பி பார்த்த ஜீவா,

“ஆமா அவங்க தான்” என்க,

“இங்க என்ன பண்றாங்க. பாக்க வேற ரொம்ப டயர்டா தெரியிறாங்க?” என்று வினவினாள்.

“பொண்ணுக்கு ஹெல்த் இஸ்ஸுஸ்னு சொல்லி லீவ் போட்டு இருக்காங்க. அதான்” என்றவன் மொழிய,

“அப்படியா? என்னாச்சு எதுவும் பெரிய பிராப்ளமா? பாக்க ஓய்ஞ்சு தெரியிறாங்க?” என்றாள்.

“தெரியலை. ஹெல்த் இஸ்ஸுஸ்னு மட்டும் தான் மென்சன் பண்ணி இருந்தாங்க” என்று ஜீவா சொல்ல,

“சரி வாங்க என்னன்னு கேட்போம்” என்றவள் ஜானவிவை நோக்கி மெதுவாக சென்றாள்.

அன்றைய தினத்திற்கு பிறகு மெதுவாக தான் நடக்கிறாள். அன்று பள்ளியில் சந்தித்த பிறகு இரண்டு மாதங்கள் கழித்து இன்று தான் ஜானவியை பார்க்கிறாள்.

ஜானவி மாத்திரைகளை வாங்கிவிட்டு திரும்ப,

“ஜானவி” என்ற லாவண்யாவின் குரல் அவளை திரும்பி பார்க்க வைத்தது.

“ரிலேடிவ் ஒருத்தவங்க அட்மிட் ஆகி இருக்காங்க அவங்களை பாக்க வந்தோம்” என்றவள்,

“இப்போதான் மாமா சொன்னாரு பாப்பாக்கு உடம்பு சரியில்லைன்னு என்னாச்சு?” என்று வினவிட,

“டைபாய்டு பீவர்” என்று ஜானவி கூற,

“எப்போலயிருந்து. இப்போ பரவாயில்லையா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம் இப்போ பெட்டர் தான். அட்மிட் பண்ணி டூ டேஸ் ஆச்சு” என்று கூற,

“ஓ… எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க?” என்று கேட்க,

“இன்னும் அது பத்தி சொல்லலை”

“நீங்க ஏன் ரொம்ப டையர்டா தெரியிறீங்க? பாப்பாவ பாத்திட்டு உங்களை பாத்துகாம விட்றாதீங்க” என்று கூற,

“அது டூ டேஸ் கண் முழிச்சு இருந்ததுனால அப்படி தெரியிறேன்” என்றவள் சோபையாய் புன்னைக்க,

சடுதியில் ஜீவாவிற்கு புகைப்படத்தில் பார்த்த அவளது சிறு வயது புகைப்படம் நினைவிற்கு வந்தது‌.

அதில் அவளது கணவனது முகம் தெரியவில்லை. வெயிலில் முகுகை காண்பித்தவாறு நின்றிருந்தான். ஜானவி சிரிப்புடன் அவனை பார்த்தபடி ஒரு புறமாக நின்றிருந்தால் பாதி முகமும் அவளது குதிரை வாலும் தான் தெரிந்தது.

இப்போது ஒரு மாதிரி சோர்ந்த தோற்றத்தில் இருந்தாள்.

அவள் கூறியதை கேட்டு இருவருக்குமே தனியாக வாழும் அவளது வாழ்வின் துன்பம் புரிந்தது.

“எந்த ரூம்ல இருக்கிங்க ஜானவி?” என்று லாவண்யா கேட்க,

“ஒன் நாட் த்ரீல இருக்கோம்” என்று பதில் அளித்தாள்.

“வாமிடிங் டையேரியா எதுவும் இருக்கா? டைபாய்டு வந்தா அதான் பெரிய பிராப்ளம்” என்று லாவண்யா வினவிட,

“முன்னாடி இருந்தது இப்போ பரவாயில்லை” என்று மொழிய,

“நாங்க பாப்பாவ பாக்கலாமா?” என்று லாவண்யா கேட்க,

“வாங்க இப்போதான் முழிச்சா” என்றவாறு ஜானவி நடக்க,

ஜீவா லாவண்யாவுடன் அவளை பின் தொடர்ந்தான்.

ஜானவி உள்ளே நுழைந்ததும்,

“ம்மா ஏன் இவ்ளோ நேரம் எனக்கு வாஷ் ரூம் போகணும்” என்று மகள் சுழித்த முகத்துடன் கூற,

“அங்க பார்மஸில க்யூல நின்னுட்டு இருந்தாங்கடா அதான்” என்றவள் செவிலியரிடம் வென்பிளானை கழட்ட கூறினாள்.

“பாப்பாவுக்கு பீவரா?” என்றபடி உள்ளே நுழைந்த லாவண்யாவை கண்டதும் முகம் மலர்ந்த ஜீவி,

“ஆன்ட்டி” என்று சிரிப்புடன் அழைக்க,

லாவண்யா பேசும் முன் ஜானவி, “வாஷ் ரூம் போகணுமாம் இவளுக்கு” என்று மகளை கையை பிடித்து தாங்கியவாறு கழிப்பறைக்கு அழைத்து சென்றாள்.

லாவண்யா அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள ஜீவா அருகில் நின்றான்.

ஜீவி, “போகலாம் மா” என்றதும் ஜானவி அவளை முன்னே அனுப்பி தான் பிடித்தபடி வெளியே வர,

ஜீவிதா சடுதியில் நிற்க இயலாது தடுமாறியிருந்தாள்.

ஜானவி பதறி பிடிக்க வர அதற்குள் ஜீவா இரண்டெட்டில் தாங்கியிருந்தான்.

அவனது கையை பிடித்து தன்னை நிலைப்படுத்தியவள்,

“தாங்க்ஸ் அங்கிள்” என்று சோர்வாய் புன்னைக்க,

“ஜீவி நடக்க முடியலைன்னா அம்மாக்கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தான நான் தூக்கிட்டு வந்து இருப்பேன்” என்றபடி மகளை தூக்க வர,

ஜீவா அதற்குள் கையில் ஏந்தியிருந்தான்.

நொடியில் நடந்துவிட்ட நிகழ்வை ஜானவி அதிர்வுடன் நோக்க,

ஜீவா ஜீவியை மெதுவாக தூக்கி வந்து கட்டிலில் படுக்க வைத்தான்.

லாவண்யா, “நானே சொல்லலாம்னு இருந்தேன். நீங்க தூக்கிட்டிங்க. ஜானவி ரொம்ப டையர்டா தெரியிறாங்க எப்படி தூக்க முடியும்னு நினைச்சேன்” என்று புன்னகைக்க,

ஜானவிக்கு என்ன எதிர்வினை ஆற்றுவதென்று தெரியவில்லை.

முதலாளி தொழிலாளி என்ற கோட்டிற்குள் தானே தான் இருக்கிறோம் இதுவரை அப்படி தானே இருந்து வந்தோம். இவர்களை எப்போது அந்த கோட்டை தாண்டி அனுமதித்தோம் என்று எண்ணம் வர,

இது அவசர காலத்தில் செய்த உதவி இதற்கு ஏன் இவ்வளவு சிந்திக்கிறாய் என்று மனதினை அடக்கியவள் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்று புரியாமல் அமைதியாக மகளருகே வந்து நிற்க,

செவிலியர் ஊசியை கையில் மாட்டினார்.

அதில் ஜீவி லேசாக முகத்தை சுழிக்க,

“ஜீவிக்கு வலிக்குதா?” என்று வினவினாள் லாவண்யா.

“ஆமா ஆன்ட்டி. ரொம்ப வலிக்கிது. இதை எடுத்துவிட மாட்றாங்க” என்று இதழை பிதுக்கி கூற,

“சீக்கிரமா எடுத்துவிட்ருவாங்க” என்று ஆறுதல் கூறியவள் கணவனிடம் திரும்பி,

“மாமா எதுவுமே வாங்காம வந்துட்டோம். பாப்பாக்கு ப்ரூட்ஸ் வாங்கிட்டு வாங்க” என்று கூற,

“அதெல்லாம் எதுக்குங்க. வேணாம்” என்று ஜானவி உடனடியாக மறுக்க,

“அவங்க அப்படிதான் சொல்லுவாங்க. நீங்க போய் வாங்கிட்டு வாங்க” என்று கணவனை அனுப்பினாள்.

ஜானவி, “ஆல்ரெடி நிறைய ப்ரூட்ஸ் இருக்கு” என்று மறுப்பாக காண,

“இருக்கட்டும் எல்லாத்தையும் ஜீஸ் போட்டு நீங்களும் குடிங்க பாப்பாவுக்கும் கொடுங்க” என்று லாவண்யா முடித்திட,

ஜானவிக்கு அதற்கு மேல் மறுக்க தெரியவில்லை.

ஜீவிதா, “ஆன்ட்டி பாப்பா வரும்னு சொல்லி ரொம்ப மந்த் ஆச்சு? ஏன் இன்னும் வரலை?” என்று லாவண்யாவிடம் கேட்க,

“இன்னும் த்ரீ மந்த்ஸ்ல வந்திடும்டா”என்று புன்னகையுடன் கூற,

“ஓ… பாப்பாவ என்கூட விளையாட விடுவிங்களா?” என்று ஆர்வமாக கேட்க,

“கண்டிப்பா பாப்பா வளர்ந்ததும் நீ பாப்பா அதி எல்லாம் சேர்ந்து விளையாடலாம்” என்று மொழிய,

“பாப்பா எப்போ வளரும்?” என்று ஜீவி அடுத்த கேள்வியை கேட்க,

லாவண்யா சிரிப்புடன் பதில் கூற துவங்கினாள்‌.

ஜானவி, “செக்கப்க்கு போய்ட்டு வந்துட்டிங்களா?” என லாவண்யாவிடம் வினவ,

“ஹ்ம்ம் அதெல்லாம் கரெக்டா உங்க சார் கூப்பிட்டு போய்டுவாரு” என்று சிரிப்புடன் கூறியவளது முகத்தில் நேசம் தந்த மலர்ச்சி.

“பாப்பா எப்படி இருக்கு? என்ன சொன்னாங்க டாக்டர்?” என்று ஜானவி கேட்க,

“பாப்பா ரொம்ப நல்லாயிருக்கு. செவென் மந்த்ஸ் க்ரோத் கரெக்டா இருக்குனு சொன்னாங்க. எல்லா ஆக்டிவிட்டிஸும் பண்ணலாம்னு சொன்னாங்க. ஆனால் இவர் தான் என்னை நிக்கவிட மாட்றாரு நடக்கவிட மாட்றாரு. ரொம்ப பண்றாரு”என்று சுகமாய் அலுத்து கொள்ள,

ஜானவியிடத்தில் புன்னகை பூத்தது.

தாய்மையும் நேசமும் தந்த மலர்வில் அத்தனை அழகாய் இருந்தாள் லாவண்யா.

“ரொம்ப அழகா இருக்கிங்க லாவண்யா” என்ற தோன்றியதை கூற,

“நானா? நீங்க தான் பத்து வயசு பாப்பாக்கு அம்மான்னு சொல்ல முடியாத அளவுக்கு யங்கா இருக்கிங்க”என்று சிரித்தவாறு சொல்ல,

கையில் பையுடன் உள்ளே நுழைந்தான் ஜீவா.

அந்த பையை அதிர்வுடன் நோக்கினாள் ஜானவி.

காரணம் அவ்வளவு வாங்கி வந்திருந்தான்.

“எதுக்கு சார் இவ்ளோ?” என்றவள் அதிர்வுடனே கேட்டிட,

“அவ்ளோ நிறைய எல்லாம் இல்லை. கொஞ்சமாதான இருக்கு ஜானவி” என்று லாவண்யா பதில் அளித்திருந்தாள்.

“இது கொஞ்சமா?” என்று திகைப்பாய் கேட்க,

“ஆமா கொஞ்சம் தான்” என்றவள் எழுந்து அதனை வாங்கி,

“இந்தாங்க” என்று ஜானவியின் கையில் வைத்திருந்தாள்.

ஜானவிக்கு தான் அதனை வாங்கி கொள்ள சிறிது சங்கடமாக இருந்தது.

மேலும் சில நிமிடங்கள் தொடர்ந்த உரையாடலை முடித்த லாவண்யா,

“சரிங்க ஜானவி நாங்க போய்ட்டு வர்றோம்” என்றவள்,

“ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க” என்று கூறிட,

“ஹ்ம்ம்” என்று தலையைசைத்தாள் ஜானவி.

கிளம்பும் முன் ஜீவிதாவின் அருகில் சென்ற ஜீவா அவளது தலையை கோதி, “கெட் வெல் சூன்” என்றிட,

ஜீவியிடத்தில் அழகான புன்னகை ஜனித்தது.

ஜானவியிடத்தில் தலையசைப்பை கொடுத்தவன் மனைவியுடன் வெளியேறினான்.

மகிழுந்தில் ஏறியதும் லாவண்யா,

“மாமா ஜானவி நான் அழகாகிட்டே வர்றேன்னு சொன்னாங்க” என்றிட,

தாய்மையின் பூரிப்பில் மினுமினுத்தவளை கண்டவன் தானும் புன்னகையுடன்,

“நீ எப்பவுமே அழகுதான்டி பொண்டாட்டி இப்போ இன்னும் அழகா தெரியிற” என்க,

இவளது முகம் மலர்ந்து விகசித்தது.

ரசனையுடன் பார்வையை அவளிடத்தில் வைத்தவன் வம்பிழுக்கும் நோக்கத்துடன்,

“எல்லாம் என் பொண்ணு வர போற நேரம்” என்றிட,

“ஆரம்பிச்சிட்டிங்களா?” என்று கணவனை முறைக்க,

இவனிடத்தில் மந்தகாச புன்னகை முகிழ்ந்தது.

பேச்சுக்கள் தொடர,

“ஏன் மாமா எனக்கு இந்த ஜானவியை பார்த்தா ஆச்சரியமா இருக்கு. எப்படி எல்லாத்தையும் தனியா சமாளிச்சு வாழ்றாங்க” என்று கூற,

“எனக்கும் தான்” என்றவன் ஒப்புக்கொள்ள,

“இவங்க ஹஸ்பண்ட் தான் உலகத்திலே மோஸ்ட் அன்லக்கி பர்சன். அவர் விட்டுட்டு போனதுக்கப்றமே இவ்ளோ லவ் பண்றாங்கன்னா. கூட இருந்தா எவ்ளோ லவ் கொடுத்து இருப்பாங்க?” என்றிட,

ஜீவாவிற்கும் அதே எண்ணம் தான் ஜனித்தது.

நாளுக்கு நாள் ஜானவியின் காதல் இருவரையும் வியப்பில் தான் ஆழ்த்தி கொண்டிருந்தது.

“ரெண்டு நாள் மாத்திவிட கூட ஆள் இல்லாம தூங்காம என்னவோ போல ஆகிட்டாங்கல்ல” என்று கேட்டிட,

சிந்தனையுடன் தலையசைத்தான்.

“நான்லாம் வீட்டுல அத்தனை பேர் இருந்தே அதியை சமாளிக்க கஷ்டப்பட்றேன். பட் ஷீ இஸ் க்ரேட்” என்றவள்,

“கடவுள் இவங்க காதலை சேர்த்து வச்சிருக்கலாம்” என்று ஜானகிக்காக வருந்தினாள்.

பதினைந்து நிமிடத்தில் வீட்டை அடைந்தவன் மனைவியை விட்டுவிட்டு விடுதியை நோக்கி சென்றான்.

ஜானவி இல்லாததால் அனைத்தையும் சென்று அவனே நேரில் கவனிக்கும் படி ஆகியது.

தம்பியை உடன் உதவிக்கு வைத்து கொண்டவன் அவனிடத்தில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்தை நோக்கி பயணமானான்.

தொழில் தொடர்பாக சந்திப்பிற்கு டெல்லி வரை செல்ல வேண்டும். தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் தானே செல்கிறான்.

விமான நிலையத்தை அடைய மனையாளிடமிருந்து அழைப்பு வந்தது.

அதனை கண்டதும் இதழ்களில் மென்னகை பிறக்க அழைப்பை ஏற்று,

“சொல்லு பொண்டாட்டி” என்க,

“கிள்ம்பிட்டிங்களா மாமா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம் ஏர்போர்ட் வந்துட்டேன்” என்று கூற,

“பாத்து போய்ட்டு வாங்க மாமா” என்றவள்,

“சாப்பாடு?” என்று கேட்க,

“அதெல்லாம் ஃப்ளைட்ல கொடுப்பாங்க” என்றான்.

“ஹ்ம்ம் ரீச் ஆகிட்டு மெசேஜ் போடுங்க”

“சரி சரி போட்றேன். நீ லேட் நைட் முழிக்காம சீக்கிரம் தூங்கு”

“ஹ்ம்ம் எனக்கு எதாவது வாங்கிட்டு வாங்க”

“ஹ்ம்ம் டைம் இருந்தா பாக்குறேன்” என்றவன் நிச்சயமாக வாங்கி வருவான் என்று அவளுக்கு தெரியும்.

“மிஸ் யூ மாமா” என்க,

“ஹ்ம்ம்” என்றான்.

“பதிலு
க்கு சொன்னா கொறைஞ்சு போய்டுவீங்களா?”

இவனிடத்தில் சிரிப்பு.

“வாங்க உங்களை வச்சிக்கிறேன்” என்றவள் விமானத்திற்கான அழைப்பு வரும் வரையுமே பேசிவிட்டு தான் துண்டித்தாள்.

அனைத்து செயல்முறைகளையும் முடித்தவன் தன்னுடைய இருக்கையை தேடி அமர்ந்து விழிகளை மூடி சாய்ந்துவிட்டான்.

இந்த பயணம் தன்னுடைய வாழ்வையே புரட்டி போட போகிறது என்று அறியாமலே உறங்கி போனான் ஜீவானந்தம்…
 
Top