தேனும் இனிப்பும்17
அவனும் நானும்
கதிரவனும் ஒளியும்…
“ம்மா எனக்கு தலை பின்னி விடுங்க மா” என்ற ஜீவியின் குரலில் எட்டி பார்த்தவள், “டென் மினிட்ஸ் ஜீவி. தம்பியை குளிக்க வச்சிட்டு வந்திட்றேன்” என்று பதிலளித்தாள்.
“சரிம்மா” என்றவள் நீள்விருக்கையில் அமர்ந்து தாயின் அலைபேசியை பார்க்க துவங்க, ஜானவி அதிரனுக்கு சோப்பை தேய்த்துவிட்டாள்.
“ம்மா போதும்” என்று அதி சிணுங்க, “இதோ அவ்ளோதான் டா தங்கம்” என்றவள் தண்ணீரை ஊற்றி சோப்பு நுரையை கழுவினாள்.
பக்கத்து அறையில் இருந்த குளியலறையில் குளித்துவிட்டு வந்த ஜீவா மகளை கண்டுவிட்டு, “ஜீவி ரெடியாகலையா? ஸ்கூலுக்கு டைம் ஆச்சுல?” என்று வினவினான்.
“அம்மா தம்பியை குளிக்க வச்சிட்டு இருக்காங்க. வந்து தலை பின்னி விட்றேன்னு சொன்னாங்க” என்று ஜீவி பதில் அளிக்க, “உனக்கு தலை பின்ன தெரியாதா?” என்றபடி அவளருகே அமர்ந்தான்.
“ம்ஹூம் இல்லைப்பா” என்று மகள் உதட்டை பிதுக்க, “சரி நான் பின்னி விடவா?” என்று ஜீவா கேட்டான்.
“உங்களுக்கு தெரியுமாப்பா” என்று மகள் விழிகளை விரிக்க, அந்த பாவனையில் ரசனை புன்னகை உதித்தவன், “ட்ரை பண்ணி பாக்குறேன் டா” என்றான்.
ஜீவிதா சீப்பை எடுத்து வந்து அவனிடம் நீட்டிவிட்டு திரும்பி அமர ஜீவாவும் மகளுக்கு தலையை வாரிவிட துவங்கினான்.
ஜீவாவிற்கு முன்ன பின்னே இது போல தலை பின்னி எந்த அனுபவமும் இல்லை. இருந்தும் மகளுக்கு தானே செய்ய ஆசைப்பட்டு ஏதோ முயற்சி செய்து கொண்டிருந்தான்.
வெகுநேரம் முயற்சித்தும் ஒரு பக்கம் கூட அவனால் பின்ன முடியவில்லை.
ஜீவி, “உங்களுக்கு பின்ன வரலையாப்பா?” என்று வினவ, “இல்லையில்லை பர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் தடுமாறுறேன்” என்று சமாளித்தவன் மீண்டும் முயற்சித்தான்.
மகனை குளிக்க வைத்து தூக்கி வந்த ஜானவி தான் கண்ட காட்சியில் சத்தமாக சிரித்துவிட்டிருந்தாள்.
ஜீவா திரும்பி மனைவியை போலியாக முறைக்க, “என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்” என்று சிரிப்பை கட்டுப்படுத்தி வினவினாள்.
“ம்மா நீ வர லேட் ஆனதால அப்பா எனக்கு தலை பின்னி விட்றாரு” என்று கூற, “ஹ்ம்ம் சரிதான். உச்சியே உங்கப்பா நேரா எடுக்கலை” என்று ஜானு சிரித்தாள்.
“அப்படியா?” என்ற ஜீவி கண்ணாடியில் பார்த்துவிட்டு, “அப்பா என்ன இப்படி பண்ணி வச்சிருக்கீங்க. இந்த உச்சியோட போனா என் ஃப்ரெண்ட்ஸ் என்னை பாத்து சிரிப்பாங்க” என்று சிணுங்கலுடன் கூற, ஜீவா பதில் இல்லாது விழித்தான்.
இருவரையும் கண்ட ஜானவி சத்தமாக சிரித்துவிட, தந்தையும் மகளும் ஒருசேர அவளை முறைத்தனர்.
“என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியலை” என்று சிரித்தபடி கூற, “எல்லாம் உங்களால தான் போங்கப்பா” என்று மகள் கோபித்து கொண்டாள்.
“அப்பாக்கு சரியா போட வரலைடா. சீக்கிரமா கத்துக்கிட்டு உனக்கு போட்டுவிட்றேன்” என்று ஜீவா சமாதானம் கூற, “ஒன்னும் வேணாம் போங்க. நான் அம்மாக்கிட்டயே போட்டுக்கிறேன்” என்று தாயருகே வந்தாள்.
ஜீவா பாவமாக ஜானுவை காண, “ஜீவி வா நாம ரெண்டு பேரும் அப்பாக்கு சொல்லி கொடுப்போம். அப்புறம் இன்னொரு நாள் அப்பா உனக்கு போட்டு விடுவாரு” என்று சமாளித்தவள் மகனை கணவனிடம் கொடுத்துவிட்டு கணவனுக்கு சொல்லி கொடுத்தபடி தலையை பின்னினாள்.
“நானும் இதான் பண்ணேன் எனக்கு ஏடாகூடமா வருது” என்று ஜீவா முனங்க, “பர்ஸ்ட் டைம் அப்படிதான் இருக்கும் ஜீவா. போக போக வந்திடும்” என்றவள் ஐந்து நிமிடத்தில் பின்னி முடித்திருந்தாள்.
கண்ணாடி முன் நின்று தலையை திருப்பி பார்த்த ஜீவி, “பாருங்கப்பா அம்மா எவ்ளோ அழகா பின்னிவிட்டு இருக்காங்கன்னு” என்று ஜீவாவிடன் கூற, “ஹ்ம்ம் இருந்தாலும் என் அளவுக்கு இல்லை” என்று அவன் சிரிக்காமல் கூற மகள் இடையில் கையூன்றி தந்தையை முறைத்தாள்.
“ஸ்கூலுக்கு டைம் ஆச்சு ஜீவி. பேக்ல நோட் எல்லாம் கரெக்டா இருக்கான்னு பாரு” என்று ஜானு கூற, “பர்ஸ்ட் டே தானமா. என்னென்ன வேணும்னு மிஸ்க்கிட்ட கேட்டு நாளைக்கு கொண்டு போகணும்” என்று மகள் முடித்தாள்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவள் மகனுக்கு உடை அணித்துவித்து அவனையும் கிளப்பினாள்.
நான்கு நாட்கள் விடுமுறையில் விளையாடிவிட்டு அதிக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லை. முகத்தை தூக்கி வைத்திருந்தான்.
“செல்லம்ல சமத்தா ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தா அம்மா உனக்கு பிடிச்ச சாக்லேட் வாங்கி தர்றேன்” என்று ஜானு சமாதானம் செய்ய, “நிஜமா?” என்று ஆர்ப்பரித்தான் அதி.
“நிஜம்மா” என்று ஜானு அழுத்தி கூறியதும் தனது பையை மாட்டி கொண்டவன், “அக்கா வா போகலாம்” என்றிட மூவரும் சிரித்துவிட்டனர்.
ஜீவா, “கேடி டா நீ” என்று மகனை கொஞ்சிவிட்டு கீழே செல்ல ஜானுவும் ஜீவியும் பின்னால் சென்றனர்.
ஜானுவை கண்டதும் பரமேஸ்வரியிடம் இருந்த அர்னவ், “ம்மா…” என்று அவளிடம் தாவினான். இந்த நான்கு நாட்களில் தன்னுடன் எப்போதும் உடன் இருந்து உணவு ஊட்டி இரவில் கதை கூறி உறங்க வைக்கும் ஜானுவை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
“சாப்பிட்றீங்களா தங்கம்” என்று இளையவனை இடுப்பில் வைத்து கொண்டவள் மற்றவர்களுக்கு பரிமாறினாள்.
வீட்டின் மற்ற உறுப்பினர்களும் வர ஜானுவே அனைவருக்கும் பரிமாறினாள்.
ஜானு பாகற்காய் கூட்டை கையில் எடுத்ததும் அதனை கண்ட ஜீவா மற்றும் ஜீவி இருவரும் ஒரே நேரத்தில், “பாவக்காயா உவேக்” என்று கூற, சடுதியில் அனைவரது பார்வையும் இருவரிடத்திலும் பதிந்தது.
இருவரிடத்திலும் அச்சு அசலாக ஒரே பாவனை செயல் பிரதிபலிக்க பரமேஸ்வரிக்கு ஜீவாவின் சிறுவயது செயல்கள் நினைவிற்கு வந்தது.
“அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி இருக்கீங்க” என்று பரமேஸ்வரி கூற, ஜீவாவிடம் புன்னகை மிளிர்ந்தது.
ஜானு, “பாவக்காய் உடம்புக்கு நல்லது சாப்பிடணும்” என்று அதட்டியவள் தட்டில் பரிமாற, “பாட்டி அம்மாக்கிட்ட சொல்லுங்க” பரமேஸ்வரியை துணைக்கு அழைத்தாள்.
“உங்கப்பாவும் சின்ன வயசுல பாவக்காய் சாப்பிட இப்படி தான் வம்பு பண்ணுவான்” என்று சிரித்தவர், “எல்லா காயும் சாப்பிடணும் பாப்பா. அப்போதான் உடம்பு நல்லா இருக்கும். அதுவும் இப்போதான் வயசுக்கு வந்திருக்க” என்று கூறினார்.
“போங்க பாட்டி” என்று சிணுங்கியவள் தந்தையை காண, “அங்க என்ன பார்வை சாப்பிடு. தம்பி சமத்தா சாப்பிட்றான் பாரு” என்று ஜானு அதட்டினாள்.
“எனக்கும் உன் நிலைமை தான்” என்று மகளிடம் ஜீவா கூற இருவரும் முகத்தை அஷ்டகோணலாக்கி உண்டு முடித்தனர்.
இடையில் ஜானு அர்னவ்க்கு ஊட்டி முடித்திருக்க அதியும் உண்டிருந்தான்.
“நீயும் எங்ககூட சாப்பிட்டு இருக்க வேண்டியது தான?” என்று கை கழுவி வந்த ஜீவா கேட்க, “நான் அத்தையோட சாப்பிட்டுக்கிறேன்” என்றுவிட்டு மகனுக்கு வாய் கழுவி வந்தாள்.
“அப்பா போகலாமா?” என்று ஜீவியும் அதியும் பையை மாட்டிகொண்டு கேட்க, “ஹ்ம்ம் கிளம்பலாம்” என்ற ஜீவாவும் எழுந்து கொண்டான்.
ஜானு அவர்களை வழியனுப்ப வர இளையவர்கள் முன்னே நடந்ததும் தனது நடையை தளர்த்தியவன் பின்னே திரும்பி மகனுக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுற்றி முற்றி பார்த்தான்.
ஜானு, “என்ன ஜீவா?” என்று வினவ, குனிந்து அவள் கன்னத்தில் இதழ்பதித்து மீண்டவன் எதுவும் நிகழாது போல பிள்ளைகளுடன் இணைந்து கொண்டான்.
இங்கு ஜானவி தான் ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள். அடுத்த கணம் விழிகள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்துவிட்டு நிம்மதி கொள்ள கணவனை நின்ற இடத்தில் இருந்தே முறைத்தாள்.
அவன் குறும்பு சிரிப்புடன் கண்ணடித்துவிட்டு மகிழுந்தினுள் ஏறி கொண்டான்.
இவளுக்கு தான் அவன் முத்தமிட்ட கன்னம் சிவந்து குறுகுறுத்தது.
அவனை அடிக்கண்ணில் முறைத்தபடி கன்னத்தை தேய்த்தவள், “பார்த்து போய்ட்டு வாங்க” என்க, “ஹ்ம்ம்…” என்று சிரிப்பு மாறாது தலையசைத்தவனது விழிகள் அவளது கன்னத்தில் தான்.
ஜீவி எக்கி தாயின் கன்னத்தில் இதழ் பதித்து, “பாய் மா” என்க, “நானும் நானும்” என்ற அதியும் தன் பங்கிற்கு இதழ் பதித்தான்.
புன்னகையுடன் அவர்களுக்கு பதிலுக்கு முத்தத்தை பரிசாக வழங்கியவள், “ரெண்டு பேரும் சமத்தா படிக்கணும். சேட்டை செய்ய கூடாது” என்று அறிவுரை வழங்கினாள்
“சரிம்மா” என்ற அதி, “சாக்லேட் மறந்திடாதீங்க” என்று நினைவுபடுத்த, “இதுல மட்டும் கரெக்டா இரு” என்று அவனது கன்னம் கிள்ளி முத்தம் வைக்க, “எனக்கு இல்லையா முத்தம்” என்ற பாவனையில் ஜீவா அவளை பார்த்திருந்தான்.
அவனது பாவனையை இனம்கண்டு கொண்டவள், “தனியா மாட்டுவேல உனக்கு இருக்கு” எனும் ரீதியில் முறைத்து வைக்க, பதிலுக்கு வசீகர புன்னகையை வீசினான்.
அந்த புன்னகையை புறந்தள்ள முடியாதவள் மென் சிரிப்புடன் தலையசைத்துவிட்டு, “சாப்பாடை வீணாக்காம புல்லா சாப்பிடணும்” என்று அறிவுறுத்திவிட்டு நகர்ந்தாள்.
ஜானுவின் இதழில் ஜீவா விட்டு சென்ற புன்னகையின் மிச்சம் உறைந்திருந்தது.
அப்போது தான் உணவை அரக்க பறக்க உண்டுவிட்டு வெளியே வந்த ஷியாமளா, “என்னண்ணி ஒரே சிரிப்போட வர்றீங்க?” என்று புருவம் தூக்க, “சும்மாதான்” என்று சிரிப்புடன் கூறினாள்.
“சும்மாலாம் சிரிப்பீங்களா?” என்று வம்பிழுத்தாள். இந்த நான்கு நாட்கள் நெருக்கம் கலாய்த்து கொள்ளும் அளவிற்கு வந்திருந்தது.
அருகில் வந்துவிட்டவள், “கன்னத்தில என்னாச்சு ண்ணி சிவந்திருக்கு” என்று உண்மையான அக்கறையுடன் வினவ, “அது ஒன்னுமில்லை ஷியாமா” என்று சங்கடத்துடன் மொழிந்தவள் ஜீவாவை மனதிற்குள் அர்சித்தாள்.
“பூச்சி எதுவும் கடிச்சிருச்சா. ஹாஸ்பிடல் போகலாமா?” என்று மீண்டும் கேட்க, “அது தானா சரியாகிடும். உனக்கு காலேஜ்க்கு டைம் ஆகலையா?” என்று பேச்சை மாற்றினாள்.
“ஐயோ ஆமா ண்ணி. ஈவ்னிங் பேசலாம் பாய் ண்ணி. இன்னைக்கு கண்டிப்பா உங்க லவ் ஸ்டோரிய நீங்க சொல்லியே ஆகணும்” என்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தை இயக்கினாள்.
“ஹ்ம்ம் பாத்து போ நீ” என்றுவிட்டு உள்ளே நுழைந்தவள் அறைக்கு வந்து கண்ணாடியில் தனது முகத்தை கண்டாள். அவனது மீசை அழுத்தி பதிந்ததில் வெண்மை நிற சருமம் லேசாக சிவந்திருந்தது. இதில் இவள் தேய்தத்தில் நன்றாக தெரிந்தது.
“எல்லாம் ஜீவாவால வந்தது” என்று கணவனை திட்டி கொண்டிருக்க அவனே அலைபேசியில் அழைத்திருந்தான்.
ஜானு அழைப்பை ஏற்றதும், “என்னடி என்னை திட்டிட்டு இருக்கீயா?” என்று சிரிப்புடன் கேட்க, “ஆமா கரெக்டா கேக்குற ஜீவா” என்றவள், “வெட்ட வெளியில வச்சு என்ன வேலை பண்ணியிருக்க ஜீவா. பசங்க பாத்தா என்ன ஆகுறது” என்று அதட்டினாள்.
“அதெல்லாம் பாக்க மாட்டாங்கடி”என்று கூற, “இனிமே வெளியில இருக்கும் போது பக்கத்துல வா உனக்கு இருக்கு” என்று இவள் பல்லை கடித்தாள்.
“என்ன இருக்கு ஜானு?” என்று அவனது ரகசிய குரல இவளது செவிக்குள் மெதுவாய் இறங்க காதை நன்றாக தேய்த்துவிட்டு கொண்டாள்.
“என்னடி பதிலயே காணோம்” என்று ஜீவா வம்பிழுக்க, “உன் மீசை குத்தி கன்னம் சிவந்து போச்சு ஜீவா” என்று லேசான சிணுங்கலுடன் இவள் பதிலளித்தாள்.
“அப்படியா? நான் பாக்கவே இல்லையே? இப்பவே காரை வீட்டுக்கு விடவா?” என்று கூறியவனது சிரிப்பு சத்தம் செவியை நிறைக்க, “உதை வாங்க போற ஜீவா” என்று திட்டினாள்.
“நேர்ல வந்து என்ன வேணா வாங்கிக்கிறேன்” என்க, “ஷியாமா பாத்திட்டு கன்னத்தில என்னாச்சு பூச்சி கடிச்சிடுச்சானு கேக்க அவளுக்கு பதில் சொல்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு” என்று லேசாக சிரிப்புடன் கூறினாள்.
“நான் லைட்டா தான் முத்தம் கொடுத்தேன் நீதான் தேச்சு தேச்சு சிவப்பாக்கிட்ட” என்று அவள் மீது திருப்ப, “ப்ச் போ ஜீவா” எ
ன்றவள் சிரிப்புடன் சலித்து கொள்ள, “நான் வந்து உன் கன்னத்தை சரி பண்றேன்” என்று மேலும் அவளை வம்பிழுத்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.