தேனும் இனிப்பும் 15
அவனும் நானும்
மேகமும் மழையும்…
எப்பொழுதும் விரைவாக எழுந்து பழகியதால் ஜானுவிற்கு ஐந்து மணிக்கே விழிப்பு தட்டியது.
விழிகளை லேசாக திறந்தவள் புரண்டு படுக்க முயற்சிக்க முடியவில்லை. அதில் லேசாக புன்னகை பிறக்க விழிகளை நன்றாக திறந்து பார்க்க ஜீவா இவளை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்தான்.
அதில் ஜானுவின் புன்னகை இமை நீண்டது. எத்தனை நாள் கனவு இது. தினமும் கற்பனையில் தான் வாழ்ந்த ஒன்று இப்போது கண்முன்னே நடக்கிறது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் கணவனின் முகத்தை ரசனையுடன் நோக்கினாள். ஜானுவின் அருகில் உறங்குவதாலோ என்னவோ அவனது முகத்தில் லேசான மென்னகை உறைந்திருந்தது.
ஒரு விரலால் அவனது நெற்றியில் கோடிழுத்தவள் மெதுவாக நாசி நுனியை வருடி மீசையில் வந்து நின்றாள். அதனை பிடித்திழுக்கும் எண்ணம் வந்தது.
இழுத்தால் நிச்சயமாக உறக்கம் கலைந்துவிடும் என்று தோன்றியது. வெகுநாட்கள் கழித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனை எழுப்ப மனது வரவில்லை.
மெதுவாக கன்னம் கிள்ளியவள், “அழகன்டா நீ” என்று மெதுவாக கொஞ்ச, “உன்னைவிட கம்மிதான்” என்று முணுமுணுத்துவிட்டு ஜீவா இன்னும் நெருங்கி படுத்தான்.
“ஜீவா நீ எழுந்திட்டியா?” என்று ஜானு விழிவிரிக்க, “ஹ்ம்ம் நீ நெத்தியில விரல் வச்சதுமே எழுந்துட்டேன்” என்றவன் அவளது கழுத்தில் முகத்தை புதைத்தான்.
அவனது மீசை குத்தலில் துள்ளியவள், “ஜீவா விடு” என்று விலக பார்த்தாள்.
“எழுந்து போய் என்னடி பண்ண போற. கொஞ்சம் நேரம் என்னை தூங்க விடு” என்று விழிகளை மூடியபடி கூற, “எனக்கு சீக்கிரம் எழுந்துக்கிறது தான் பழக்கம் ஜீவா. நீ தூங்கு” என்று அவனது தலையை திருப்பி தலையணையில் வைத்தாள்.
“ம்ஹூம் எனக்கு இந்த பில்லோ தான் பிடிச்சு இருக்கு” என்று மீண்டும் அவளது தோளில் முகம் பதித்தான். அதில் பெரிதாக புன்னகைத்தவள், “காலையிலே அலும்பு பண்ணாத ஜீவா. நான் லேட்டா எழுந்து போனா அத்தை என்ன நினைப்பாங்க” என்று எழ முற்ப்பட்டாள்.
“எங்கம்மா ஒன்னும் டிபிகல் மாமியார் இல்லை. எதுவும் நினைக்க மாட்டாங்க. அதனால இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போடி” என்க, “பசங்க எழுந்திட்டா பால் ஆத்தி கொடுக்கணும் ஜீவா” என்று இவள் பிள்ளைகளின் மீது பார்வையை பதித்தபடி கூறினாள்.
“அவங்க எல்லாம் லேட்டா தான் எழுவாங்க. ஜீவி சீக்கிரம் எழுவாளா?” என்று ஜீவா வினவ, “ம்ஹூம் நான் எழுப்பினாதான் எழுவா” என்று பதில் அளித்தாள்.
“ஹ்ம்ம் அப்போ இன்னொரு டைம் தூங்கலாம் வா” என்று அவளை கையணைப்பில் கொண்டு வர, “எல்லாமே கனவு மாதிரி இருக்கு ஜீவா” என்று சிரிப்புடன் கூறினாள்.
அதில் விழிகளை திறந்து அவளை கண்டவன், “என்ன கனவு?” என்று புருவம் உயர்த்த, “இதோ நீ நான் நம்ம பசங்க இது எல்லாமே. நான் காலையில கண் முழிச்சதும் என் பக்கத்துல என் கட்டிக்கிட்டு தூங்குற நீ” என்று ரசனையாக கூறினாள்.
“ஹ்ம்ம் நிஜம் தான் நம்பு. இனிமே உன் உலகத்தில நாங்கதான் நிறைஞ்சு இருப்போம்” என்று சிரிப்புடன் கூறியவன் அவளது கன்னத்தை வருடினான்.
அதில் கூசி சிலிர்த்தவள், “ஹ்ம்ம் இந்த நிஜம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த உலகம் எனக்கே எனக்கானது தான ஜீவா” என்று அவனது விழி பார்க்க, “யெஸ் அஃப்கோர்ஸ் நாங்க எல்லாரும் உனக்கானவங்க தான்” என்று இருவரையும் ஒரு போர்வைக்குள் சுருட்டினான்.
“யாருமே இல்லைன்னு பீல் பண்ணதுக்கு எனக்கு இவ்ளோ பெரிய பேமிலிய இந்த கடவுள் கொடுத்து இருக்காரு ஜீவா” என்றவள், “கோவிலுக்கு போய்ட்டு வருவோமா?” என்று வினவினான்.
“ஹ்ம்ம் போகலாமே” என்று பதில் மொழிகையில், “ம்மா…” என்ற சிணுங்கலுடன் புரண்டு படுத்தான் அர்னவ்.
அதில் நொடியில் எழுந்துவிட்டவள், “தூங்குடா தங்கம்” என்று தட்டி கொடுக்க அவன் உறக்கத்திற்கு சென்றான்.
கலைந்து கிடந்த தலையணையை மீண்டும் தடுப்பு சுவராக வைத்தாள்.
நேரத்தை பார்த்துவிட்டு, “நான் போய் குளிச்சிட்டு வர்றேன் ஜீவா. நீ தூங்கு” என்றவள் உடைகளை எடுத்து கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
பத்து நிமிடத்தில் குளித்து வந்தவள் கண்டது மீண்டும் உறக்கத்தில் இருந்த கணவனை தான்.
“அதுக்குள்ள தூங்கிட்டாரா” என்றுவிட்டு தலையை உலர்த்த துவங்கினாள். அந்த அறையெங்கும் வீசிய சீகைக்காயின் வாசனையில் லேசாக ஜீவாவிற்கு விழிப்பு வர விழிகளை திறந்து பார்த்தான்.
பால்கனியில் இருந்து கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தாள் ஜானு. ஆகாய வண்ண சேலையில் தேவதை போல நின்றிருந்தவளை கண்டதும் அவனது இதழ்களில் ரசனை புன்னகை பூத்தது.
ஆதவனின் வெளிச்ச கீற்றுகள் அவள் மீது பட்டு தெறிக்க தேசமெங்கும் பொன் கற்கள் தூவியது போல மின்னியது.
யார் கூறியது பருவ வயது பெண்கள் தான் அழகு என்று முப்பதுகளின் துவக்கத்தில் மனமுதிர்ச்சியோடு கூடிய அழகு அவளை பேரழகியாக காண்பித்தது.
தன் அலைபேசியை எடுத்து அவளது அழகை அதனுள் சிறைபிடித்து கொண்டான்.
தலையை உலர்த்தியவள் உள்ளே வந்து கணவனது பார்வையை கண்டு, “என்ன?” என்று சிரிப்புடன் புருவம் உயர்த்தினாள்.
அவளது விழிகளுக்கு ஒரு முறை பார்வை சென்று வர, “ம்ஹூம்” என்றவன் எழுந்து கொண்டான்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தான? ஏன் எழுந்துக்கிட்ட ஜீவா?” என்று கேட்க, “தூங்கலாம் தான்” என்றவாறு கையை உயர்த்தி சோம்பல் முறித்தவன், “ஒரு மோகினி அங்கயும் இங்கயும் நடந்து என் தூக்கத்தை கெடுக்குறாளே” என்று குறும்பு சிரிப்புடன் கூறினான்.
அவனை பொய்யாக முறைத்தவள், “நான் மோகினி பிசாசா?” என்று இடுப்பில் கை வைத்து கேட்க, “பிசாசு இல்லடி. அழகான மோகினி” என்று கண்ணடித்தான்.
“காலையிலே ஸ்டார்ட் பண்ணாதீங்க பாஸ்” என்று சிரித்தவள், “போய் குளிச்சிட்டு வா. நான் டீ போட போறேன்” என்று கூந்தலை ஒரு க்ளிப்பில் அடக்கிவிட்டு கீழே சென்றாள்.
அவள் சமையலறை நுழையும் நேரம் பரமேஸ்வரி அங்கே இருந்தார். அவரை கண்டதும் ஜானு தயங்கி நிற்க, “வாம்மா வந்து டீ எடுத்துக்கோ” என்று புன்னகையுடன் கூறினான்.
மகனின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி தான் பரமேஸ்வரியை ஜானுவிடம் சுமூகமாக நடக்க வைக்கிறது. பிள்ளைகளின் மகிழ்ச்சி தானே தங்கள் மகிழ்ச்சி என்று தேற்றி கொண்டார்.
“நான் டீ போட தான் வந்தேன் அத்தை” என்று தயங்கி கூற, “இதுலென்ன இருக்கு எடுத்துக்கோ. எப்பவும் நான் தான் போடுவேன் உனக்கும் சேர்த்து போட்றேன்” என்று புன்னகைத்தார்.
அதில் ஜானுவின் தயக்கம் தளர தனக்கு ஒரு தேநீரை எடுத்து பருக துவங்கினாள்.
நிமிடங்கள் அமைதியில் கழிய, “நானும் உங்ககூட சமைக்கவா அத்தை” என்று ஜானு கேட்டு விட்டாள்.
“ஹ்ம்ம் உனக்கு நல்லா சமைக்க வருமா?” என்று பரமேஸ்வரி வினவ, “ஓரளவுக்கு பண்ணுவேன்த்தை” என்று மொழிந்தாள்.
“இங்க எல்லா வேலைக்கும் ஆள் இருக்கு ஜானவி. சமையலுக்கும் ஒரு ஆள் உதவிக்கு வருவா. இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவா. காய் நறுக்கிறது எல்லாம் அவ பாத்துப்பா அடுப்புல ஏத்தி இறக்குறது மட்டும் தான் என் வேலை. என் கூட சேர்ந்து ஒத்தாசைக்கு சேந்துக்கோ” என்று பரமேஸ்வரி கூற, “சரிங்கத்தை” என்று தலயசைத்து கேட்டு கொண்டாள்.
சிவலிங்கம் குளித்துவிட்டு அறையில் இருந்து வெளியே வர பரமேஸ்வரி சென்று அவருக்கு தேநீர் கொடுத்து வந்தவர், “ஜீவாக்கு டீ கொண்டு போய் கொடு ஜானவி. பசங்களும் எழுந்துட்டா பால் ஆத்தி கொடு” என்றார்.
“சரிங்கத்தை” என்றவள் கணவனுக்கு தேநீரை கோப்பையில் ஊற்ற, “ஜானவி” என்று அழைத்தார் பரமேஸ்வரி.
“அத்தை” என்றவள் நிமிர்ந்து பார்க்க, “நீ ஜீவாவையும் படங்களையும் பாத்துக்கோ அதுவே எனக்கு போதும். மத்தவங்களை நான் பாத்துக்கிறேன்” என்று மொழிய, ஜானு அவரை அமைதியாக நோக்கினாள்.
அவளது எண்ணம் உணர்ந்தவள், “ஜெய்க்கும் கல்யாணம் ஆகிட்டா அவன் பொண்டாட்டிய பாத்துக்க சொல்லிடுவேன். அதுவரைக்கும் நான் தான் என் பிள்ளைங்களுக்கு எல்லாம் செய்வேன். ஒருவேளை எனக்கு முடியலைன்னா நானே உன்கிட்ட செய்ய சொல்லுவேன்” என்று விளக்க, அதில் முகம் தெளிந்தவள் சம்மதமாக தலையசைத்துவிட்டு அறைக்கு சென்றாள்.
ஜீவா அப்போது தான் குளித்துவிட்டு வெளியே வந்தான். ஜானு தேநீரை கொடுக்க, “உனக்கு?” என்று வினவியபடி எடுத்து கொண்டான்.
“நான் இப்போதான் அத்தையோட சேர்ந்து குடிச்சேன்” என்று ஜானு கூற, “பார்றா?” என்று புருவம் உயர்த்தினான்.
“நானும் என் மாமியாரும் பேசிட்டே டீ குடிச்சோம்” என்று சிரிப்புடன் ஜானு கூற, “அப்படி என்ன பேசுனீங்க?” என்று கேட்டான்.
“அதெல்லாம் சீக்கிரம் எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் சொல்ல முடியாது” என்று சிரிப்புடன் இதழை சுழித்தாள்.
“வந்த முதல் நாளே என்னை மயக்குன மாதிரி என் அம்மாவையும் மயக்கிட்டியா?” என்று குறும்பு புன்னகையுடன் ஜீவா வினவ, “நான் உன்னை மயக்குனேனா ஜீவா?” என்று செல்ல முறைத்தாள்.
தேநீரை ஒரு மிடறு பருகியவன், “இல்லையா பின்ன?” என்று புருவம் உயர்த்தினான்.
“இல்லைவே இல்லை” என்று சிரிப்புடன் கூறியவள் கூந்தலை பின்னலிட துவங்கினாள்.
ஜீவா பதில் பேசும் முன், “அம்மா” என்றபடி ஜீவி எழுந்து கொண்டாள்.
“தூக்கம் கலைஞ்சிடுச்சா தங்கத்துக்கு” என்று அருகில் வந்தவள் மகளது தலையை வருட, “ஆமம்மா” என்றவள் தாயை இடையோடு கட்டி கொண்டாள்.
ஜீவா அதனை ரசனையுடன் பார்த்தான். மகள் தன்னிடமும் நெருங்கி பழக வேண்டும் என்று மனதில் ஏக்கம் தோன்றியது.
“குட்மார்னிங் தங்கம்” என்று ஜானு மகளின் தலையை வருட, “குட்மார்னிங் மா” என்றவள் அப்போது தான் எதிரில் நின்றிருந்த ஜீவாவை கண்டாள்.
ஜீவா மகளை கண்டு புன்னகைக்க, “குட்மார்னிங் அங்…” என்றவள் பிறகு நிறுத்தி, “அப்பா” என்றிட, ஜானுவும் ஜீவாவும் ஒரு முறை பார்த்து கொண்டனர்.
ஜீவா, “குட் மார்னிங் ஜீவி” என்று பதிலளிக்க, ஜானு, “போய் ப்ரஷ் பண்ணிட்டு வாஷ்ரூம் போய்ட்டு வா” என்று மகளை அனுப்பிவிட்டு கணவன் அருகே வந்தாள்.
மகளின் வார்த்தையில் ஒரு நொடி அவனது வதனம் சுருங்கி விரிந்ததை கண்டவள், “ஜீவா இவ்வளோ நாள் அப்படியே கூப்பிட்டதால வாய்ல வந்திடுச்சு ஜீவா. போக போக மாத்திக்குவா. நீ இதுக்கெல்லாம் பீல் பண்ணாத” என்று கணவனுக்கு ஆறுதல் கூற, தலயசைத்து கேட்டு கொண்டான்.
பிறகு இளையவர்கள் இருவரும் எழ அவர்களை எழுப்பி பல் துலக்க வைத்து பால் கொடுத்தாள்.
பிறகு கணவன் உதவியோடு குளிக்க வைத்தவள் புது உடை உடுத்தி அழகாக கோவிலுக்கு செல்ல தயார் செய்திருந்தாள்.
ஜீவா நேரத்தை பார்த்துவிட்டு, “கிளம்பலாமா? சாப்பிட்டு போகணும் டைம் கரெக்டா இருக்கும்” என்க, “ஹ்ம்ம் டூ மினிட்ஸ்” என்றுவிட்டு தனது சேலையை சரிசெய்து கண்ணாடியில் ஒரு முறை பார்த்தாள்.
“அழகா தான் இருக்க” என்று பிள்ளைகளுடன் அமர்ந்து இருந்த ஜீவா கூற, அவனை கண்ணாடி வழியாக லேசாக முறைத்தவள் பொட்டை நெற்றியில் ஒட்டினாள்.
“நான் சொன்னதை நம்பலையா நீ” என்றவன் அருகில் இருந்த மகளிடம் திரும்பி ஜீவி அம்மா இந்த சாரில அழதான இருக்கா?” என்றிட, அவளும், “ஹ்ம்ம் ஆமாப்பா அழகா இருக்காங்க” என்று மகளும் ஒப்பு கொண்டாள்..
“அப்பாவும் மகளும் உண்மைய தான் பேசுவீங்க நம்பிட்டேன்” என்று சிரித்தவள், “வாங்க போகலாம்” என்று அர்னவ்வை தூக்கி கொண்டாள்.
ஐவரும் இறங்கி வர கணவனுக்கு பரிமாறி கொண்டிருந்த பரமேஸ்வரிக்கு மனம் நிறைந்து போனது.
பரமேஸ்வரி, “சாப்பிட வாங்க” என்று அவர்களை அழைக்க, சிவலிங்கமும் தலையசைத்தார்.
ஜீவா ஜீவி அதி என அடுத்தடுத்து அமர பரமேஸ்வரியே பரிமாறினார்.
ஜீவா, “நீயும் உட்காரு” என்க, “இவனுக்கு ஊட்டிட்டு நான் சாப்பிட்றேன்” என்றவள் மகனுக்கு உணவை கிண்ணத்தில் எடுத்து கொண்டாள். ஜீவா மகனையும் மகளையும் கவனித்தபடி உண்டான்.
அர்னவ் சேட்டை செய்யாமல் சமர்த்தாக உணவை உண்ண பத்து நிமிடத்தில் உண்டு முடித்திருக்க ஜானுவும் உண்டுவிட்டு எழுந்தாள்.
லிங்கம் கடைக்கு கிளம்பி இருக்க ஜீவா தாயிடம், “ம்மா கோவிலுக்கு போய்ட்டு வந்திட்றோம்” என்று மொழிந்தான்.
“பாத்து போய்ட்டு வாங்கப்பா” என்று அவர் கூற ஜீவா மகனை தூக்கி கொள்ள விழைந்தான்.
அர்னவ், “அம்மா” என்று ஜானுவிடம் கையை நீட்டி இருந்தான். ஜானு சிரிப்புடன் அவனை தூக்கி கொள்ள, ஜீவா, “பார்றா இவனையுமா?” என்று சிரிப்புடன் பார்த்தான்.
பதிலுக்கு ஜானு லேசான முறைப்புடன் திரும்ப திலகவதி நின்று இருந்தார்.
இங்கே நடந்த அனைத்தையும் கண்டவர் விடுவிடுவென வந்து அர்னவ்வை வாங்கி கொண்டார். அதில் ஜானு திகைத்து பார்க்
க, “அர்னவ் இவளை எதுக்குடா அம்மான்னு கூப்பிட்ற. லாவண்யா தான் உன் அம்மா. இவ உனக்கு சித்தி மட்டும் தான்” என்று கூற, எல்லோரும் அதிர்ந்து அவரை கண்டனர்…