• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 9

Administrator
Staff member
Messages
567
Reaction score
808
Points
93
தேனும் இனிப்பும் 9:

நானும் அவனும்
ஆறும் கரையும்…


“என்ன ஜானு இன்னைக்கு பெர்மிஷன்?” என்று அருகில் இருந்த தோழி ஷீலா கேட்க, “பாப்பா ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங்” என்று பதில் அளித்தவள் தனது பணியை துவங்கினாள்.

“கேக்கணும்னு நினைச்சேன்?” என்று ஷீலா மொழிய, “என்ன ஷீலா?” என்றபடி நிமிர்ந்தாள் ஜானு.

“டூ டேஸ்ஸா அழகாகிட்ட மாதிரி இருக்கு என்னவாம்?” என்று புருவம் உயர்த்த, “அப்படியா?” என்ற ஜானுவின் முகத்தில் புன்னகை படர்ந்தது.

ஜீவா வந்து சென்று இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. வந்தவன் இவளுக்கு ஜீவனை கொடுத்தல்லவா சென்றிருந்தான்.

இருவரது முடிவை அறிந்த தீபாவும் நரேனும் அகமகிழ்ந்து போயினர். தீபா தான் ஆனந்தத்தில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.

சும்மாவா ஜானுவின் பதிமூன்று வருட போராட்டம் ஒருவழியாய் முடிவுக்கு வர போகிறதே அதுவும் மிகமிக மகிழ்ச்சியான முடிவல்லவா?

அந்த குடியிருப்பு வளாகத்தையே கூட்டி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினாள். விடயம் அறிந்த அனைவரும் ஜானுவிற்காக மனம் நிறைந்து போயினர்.

ஆதவன் வந்து மகிழ்வுடன் இருவரையும் வாழ்த்தினான். ஜானுவிற்கு இத்தனை வருட போராட்டம் முடிந்து போனதில் அவ்வளவு மகிழ்ச்சி ஜீவாவின் அருகில் அவனுடன் வாழ போகிறோம் என்று நிம்மதி.

இத்தனை வருட தவத்திற்கான பலனை அருளிய கடவுளுக்கு மனதிற்குள் கோடி நன்றிகளை தெரிவித்தாள்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல இந்த இரண்டு நாட்களில் அத்தனை அழகாயிருந்தாள் ஜானவி. இதழ்களில் வேறு அழகான புன்னகை பூத்து அவளை பேரழகியாக காண்பித்தது.

ஷீலாவை தவிர இன்னும் இரண்டு நபர்கள் கூட இதே கேள்வியை கேட்டிருந்தனர்.

“அப்படியே தான்.‌ என்ன விஷயம்?” என்று கண்ணடித்து வினவ, “ஒன்னுமே இல்லையே” என்று உதடு பிதுக்கினாள்.

“இல்லையே…” என்று இழுத்த ஷீலாவின் விழிகள் சந்தேகமாய் உருள, “நிஜம்மா ஒன்னுமில்லை ஷீலா” என்று மாறாத புன்னகையுடன் கூறினாள்.

“சரிதான்” என்றவள், “எப்படியும் ஒரு நாள் தெரியத்தான போகுது. அப்போ பாத்துக்கிறேன்” என்க, “பாரு” என்றவள் திரும்பி கணினியை உயிர்ப்பித்தாள்.

ஜானுவின் இதழ்களில் இன்னும் வாடாத புன்னகை தங்கிவிட்டிருந்தது. அனைத்திற்கும் காரணம் ஜீவாவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
அவனை நினைத்ததும் மகளும் அவனும் பேசிய பொழுதுகள் நினைவுக்கு வந்தன.

ஜீவாவின் வரவால் மகிழ்ந்து போயிருந்த ஜானுவிற்கு ஜீவியை எண்ணித்தான் பயமாக இருந்தது. அவளிடம் ஜீவாவை பற்றி என்ன கூறுவது அவள் எப்படி எடுத்து கொள்வாள்‌ என்று பலவாறாக அச்சம் பிறந்தது‌.

அவளது உள்ளத்தை உணர்ந்த தீபா, “ஹேய் நீ எதுக்கு இவ்ளோ பயப்பட்ற. ஜீவி சொன்னா புரிஞ்சுப்பா. அவக்கிட்ட நான் சொல்றேன்” என்று ஆறுதல் கூற,

“இல்லைண்ணி அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு நினைச்சா பயமா இருக்கு” என்று மொழிய, “நான் பேசுறேன் என் பொண்ணுக்கிட்ட” என்று ஜானுவின் மனமறிந்து அவளது கரத்தை ஆறுதலாக பற்றி கொண்டான்.

“பார்றா சாருக்கு இப்போவாது பொறுப்பு வந்திருக்கு” என்று தீபா வம்பிழுக்க, “தீபா…” “அண்ணி” என்று இரு குரல்கள் வரிசையாக வந்தது.

“ஆஹான் சேத்து வைக்கிற வரைக்கும் வாயே திறக்கலை. இப்போ ஒன்னு கூடிட்டிங்களா?” என்று தீபா இடுப்பில் கை வைத்து முறைக்க,

“ஐயோ அண்ணி அப்படிலாம் இல்லை” என்று ஜானு பதறி தீபாவின் கையை பிடிக்க, “என்னடி ஆல்ரெடி நீ அவனை ரொம்ப பேசிட்ட அதான்” என்று நரேனும் சமாதானம் செய்ய வந்தான்.

“ரொம்பத்தான் ரெண்டு பேரும் பர்ஸ்ட் நகருங்க” என்று அவள் முறுக்கி கொள்ள, ஜீவா இதனை சிரிப்புடன் பார்த்திருந்தான்.

“ஹலோ என்ன சிரிப்பு உன்னை பேச போய் தான் நான் பேச்சு வாங்கிட்டு இருக்கேன்” என்று தீபா ஜீவாவை முறைக்க, “விடுங்க ரெண்டு பேரும் ஷீ இஸ் மை ப்ரெண்ட் அவளுக்கு என்ன பேச உரிமை இல்லையா?” என்று சிரிப்புடன் தீபாவிற்காக பேசினான்‌.

“அப்படி சொல்லு ஜீவா” என்றவள், “கேட்டிங்களா ரெண்டு பேரும் நான் என்ன வேணா பேசுவேன் நீங்க கேக்க கூடாது” என்று உதட்டை சுழிக்க, அண்ணன் தங்கை இருவருக்கும் புன்னகை ஜனித்தது.

“ம்மா…” என்றபடி ஜீவி உள்ளே வர அவளுடன் விதுரனும் வந்தான்.

“இதோ உன் பொண்ணு வந்துட்டா. போ போய் பேசு” என்று தீபா விரட்ட, “ஹ்ம்ம் பேசுறேன்” என்றவன் எழுந்து செல்ல, ஜானுவின் முகத்தில் புன்னகை மறைந்து லேசான கலவரம்.

“ப்ச் எதுக்குடி நீ இவ்ளோ பயப்பட்ற” என்றபடி தீபா அவளை பிடித்து கொண்டாள்‌.

நரேன், “ஜீவி” என்று அழைக்க, “மாமா” என்றபடி அருகே வந்தாள் ஜீவிதா.

“ஜீவா உன்கிட்ட பேசணுமாம்” என்று நரேன் கூற, “என்ன அங்கிள்?” என்று அவன் புறம் திரும்பினாள்.

அவளது அங்கிளில் ஜீவாவின் முகம் லேசாக கறுக்க, “அம்மாவுக்கு தெரிஞ்சவங்கள அங்கிள்னு தான் கூப்பிட முடியும். உடனே மூஞ்சிய தூக்காத பேசு” என்று தீபா அதட்டினாள்.

அதில் சற்று தெளிந்தவன், “நம்ம பால்கனில போய் பேசலாமா?” என்று ஜீவா மகளிடம் கேட்டான்.
ஜீவியின் பார்வை தாயிடத்தில் திரும்ப, அவள் தலையசைத்து சம்மதத்தை தெரிவித்தாள்.

பின், “போகலாம் அங்கிள்” என்றவள் முன்னே நடக்க, மகளின் செய்கையில் ஜீவாவின் இதழ்களில் புன்னகை இமை முகிழ்ந்தது. பால்கனியில் இருந்த நாற்காலியில் மகளை அமர வைத்து தானும் அமர்ந்தான்.

ஜீவிதா தந்தையின் முகத்தை காண, “ஜீவி உனக்கு அப்பா வேணும்னு தோணியிருக்கா?” என்று வினாவை கேட்டான். இது அபத்தமான ஒன்று என அவனுக்கே தெரிந்தது. நிச்சயம் மகள் தந்தை பாசத்திற்காக ஏங்கியிருப்பாள் என்று தெரியும். இருந்தாலும் இவ்விடயத்தை துவங்க வேண்டி கேள்வியை கேட்டான்.

பதில் கூறாதவள், “எதுக்கு அங்கிள் கேக்குறீங்க?” என்று பதிலுக்கு கேட்க, “நீ ஆன்ஸர் பண்ணு நான் சொல்றேன்” என்றான்.

“ஹ்ம்ம் தோணியிருக்கு அங்கிள் நிறைய டைம். எல்லா பசங்களும் அவங்க அப்பா கூட ஸ்கூலுக்கு பைக்ல வந்து இறங்கும் போது பேரண்ட்ஸ் மீட்டிங் அப்போ நிறைய டைம் தோணியிருக்கு அங்கிள். ஏன் விது அனியெல்லாம் அப்பா அம்மா ரெண்டு பேருக்கூடவும் இருக்கும் போது எனக்கு ஏன் இல்லைன்னு தோணியிருக்கு” என்று மகள் கூறியதும் இவனுக்கு விழிகள் கலங்கின. பெற்ற மகளை தந்தை பாசத்திற்கு ஏங்க வைத்துவிட்டேனே என்று.

“நான் ஒரு டைம் அம்மாக்கிட்ட கேட்டேன் ஏன் எனக்கு மட்டும் அப்பா இல்லைன்னு. அதுக்கு அம்மா உனக்கு அப்பா அம்மா எல்லாமே நான் தான் இனி இந்த கேள்வியை கேக்காதன்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் எனக்கு தோணினாலும் கேட்டது இல்லை” என்றவளது குரலில் நிச்சயம் வயதிற்கு மீறிய முதிர்ச்சி இருந்தது.

தனியாய் தாயிடம் வளர்ந்ததே இந்த முதிர்ச்சிக்கு காரணம் என்பதை உணர்ந்தவன், “இப்போ உனக்கு ஒரு அப்பா கிடைச்சா சந்தோஷப்படுவியா?” என்று வினவிட, “உண்மையாவா?” என்றவளது குரலில் நிச்சயமாக ஆர்வம்‌.

“ஆமாம்” என்று புன்னகையுடன் தலை அசைத்தான், “யாரு என்னோட அப்பா?” என்று ஜீவி ஆர்வமாக வினவினாள்.

“நான் தான்” என்றதும், “நீங்களா நீங்களும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?” என்று ஜீவி வினவியதும் ஜீவாவிற்கு மட்டுமல்ல உள்ளே இருந்து கேட்டபடி இருந்தவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.

தான் நினைத்ததை விட மகளுக்கு மனமுதிர்ச்சி நிறைய உள்ளதை உணர்ந்தவன், “ஆமா கல்யாணம் பண்ணிக்க போறோம்” என்று மொழிய,

“சூப்பர் அங்கிள். இனிமே எனக்கும் அப்பா கிடைக்க போறாங்க.‌ என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லுவேன் எனக்கும் அப்பா இருக்காங்கன்னு” என்று துள்ளி குதித்தவள் “இனிமேல் என்னை ஸ்கூலுக்கு அழைச்சிட்டு போவீங்களா?” என்று ஆர்வமாக கேட்க,

“ஹ்ம்ம் டெய்லி அழைச்சிட்டு போவேன்” என்று தானும் புன்னகையுடன் பதில் அளித்தான்.

“அப்புறம் பேரண்ட்ஸ் மீட்டிங் வருவீங்களா?” என்று வினவ, “ஒரு மீட்டிங் விடாம எல்லாத்துக்கும் வருவேன்” என்று பதில் அளித்தான்.

“அப்போ ஃபாதர்ஸ்டே பங்க்ஷனுக்கு?” என்று கேள்வி தொடுக்க, “கண்டிப்பா எல்லாத்துக்கும் வருவேன்” என்றவனுக்கு ஏக வருத்தம் எத்தனை விடயங்களில் தந்தை இல்லாது மகள் வருந்தி இருக்கிறாள் என.

“நான் ஆன்வல் டேல ப்ரைஸ் வாங்கும் போது வந்து போட்டோ எடுப்பிங்களா?” என்று விழிகள் விரிய கேட்க,

“போட்டோ எடுத்து நம்ம வீட்ல பெரிய ப்ரேம் போட்டு மாட்டலாம்” என்றவன், “நம்ம வீட்ல உனக்கு ரெண்டு தம்பிங்க கூட இருக்காங்க” என்றிட, “நிஜமாவா? அவங்க என்கூட விளையாட வருவாங்களா” என்று ஆர்வத்தில் விழிகள் மின்னியது.

“ஹ்ம்ம் வருவாங்க. உன் கூடவே இருப்பாங்க. நீ நம்ம வீட்டுக்கு வர்றீயா?” என்று ஜீவா வினவ,

“எனக்கு தம்பி தங்கச்சி எல்லாம் வேணும்னு ரொம்ப ஆசை சூப்பர். நான் அவங்களை பத்திரமா பாத்துப்பேன்” என்று குதூகலித்தவள் வேகமாக உள்ளே வந்து, “ம்மா நீ ஜீவா அங்கிளை கல்யாணம் பண்ணிக்க போறீயா?” என்று வினவிட,

இவ்வளவு நேரம் மகளது ஏக்கத்தை உணர்ந்து உள்ளம் கலங்கி அமர்ந்திருந்தவள், “ஹ்ம்ம்…” என்று தலையசைத்தாள்.

“சூப்பர்மா. எனக்கு தம்பி பாப்பா எல்லாம் வர போறாங்க” என்று தாயை கட்டி கொள்ள எல்லோரது முகத்திலும் புன்னகை பூத்தது.

“தம்பிங்க மட்டும் இல்லை சித்தப்பா சித்தி அத்தை மாமா தாத்தா பாட்டி எல்லாரும் கிடைக்க போறாங்க. இனிமேல் உனக்கு என்ன வேணும்னாலும் ஜீவாப்பாக்கிட்ட தான் கேக்கணும்” என்று தீபா கூற,
ஜீவியின் விழிகள் ஜீவாவிடம் திரும்பியது.

ஜீவா புன்னகையுடன் தலையசைக்க ஜீவியின் முகத்தில் மகிழ்ச்சி பெருகியது.
அதன் பிறகு தந்தையும் மகளும் நிறைய பேசினார்கள். ஜீவிக்கு உடனே அப்பா என அழைக்க வரவில்லை. போக போக தானாக வரும் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று ஜீவா கூறிவிட்டான்.

தன்னுடைய நினைவுகளில் மூழ்கி இருந்தவளை, “ஜானு” என்ற ஷீலாவின் குரல் கலைத்தது.

“என்ன?” என்றவள் கலைந்து திரும்ப, “உன்னை பாக்க யாரோ வந்து இருக்காங்களாம் பியூன் வந்து சொல்லிட்டு போறாரு. நீ எந்த உலகத்துல இருக்க” என்று வினவிட, “ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன். நான் போய் பாத்துட்டு வர்றேன்” என்று எழுந்து சென்றாள்.

மனதிற்குள் தன்னை யாரு சந்திக்க வந்திருப்பது என்று யோசனையுடன் செல்ல ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்.

ஜானவிக்கு அவளை எங்கோ பார்த்தது போல இருந்தது. எங்கே பார்த்துள்ளோம் என்று சிந்திக்க எதிரில் இருந்தவள், “ஜானவி” என்று நிறுத்த, “நான் தான், நீங்க?” என்று ஜானு பதில் வினவினாள்.

“நான் மஹிமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்க, புருவம் சுருங்கினாள் ஜானு.

“நான் லாவண்யா சிஸ்டர் மஹிமா” என்றதும் ஜானுவிற்கு அவளது முகம் நினைவிற்கு வந்தது. சடுதியில் இவளுக்கு உள்ளூர சிறிதான அச்சம் இவள் என்ன என்னிடம் பேச போகிறாள். ஜீவாவை திருமணம் செய்ய இவள் கேட்டதாக அண்ணி கூறினாரே என்று எண்ணியவள், “பேசலாம். வாங்க” என்றுவிட்டு கேண்டீனை நோக்கி நடந்தாள்.

உள்ளே நுழைந்து ஜானு அமர்ந்ததும், “என்ன குடிக்கிறீங்க டீ ஆர் காஃபி?” என்று வினவிட, “நோ தாங்க்ஸ்”என்று மறுத்தவள் எடுத்ததுமே, “உங்களுக்கு என்ன வேணும்?” என்றிட, ஜானு புரியாது பார்த்தாள்.

“உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்?” என்று வினவிட, “எதுக்கு?” என்ற ஜானுவிடம் புரியாத பாவனை.

“என் மாமாவ விட்றதுக்கு பணத்துக்காக தான அவரை மயக்கி வச்சிருக்கீங்க?” என்றதும், “வாட்?” என்ற ஜானுவிடத்தில் அதிர்ந்த பாவனை‌.

“சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க‌. நான் கூட என் அக்கா சொன்னதை வச்சு உன்னை நல்லவன்னு நினைச்சேன். ஆனால் இப்போதான தெரியிது என் அக்கா இடத்தை பிடிக்கதான் இவ்ளோ நாள் நல்லவ வேஷம் போட்டு இருக்கன்னு” என்று வார்த்தைகளில் விஷத்தை கக்க,

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் மிஸ் மிஹிமா” என்ற ஜானுவின் விழிகளில் கோபம் மின்னியது.

“என்ன மைண்ட் பண்ணணும். இன்னும் நாலு வருஷத்துல காலேஜ் போக போற வயசுல பொண்ணை வச்சிக்கிட்டு இந்த வயசுல நீ என் மாமாவை மயக்கி கல்யாணம் பண்ண பாக்குற உனக்கு எதுக்கு மரியாதை. என் மாமா பேக்ரவுண்டை பார்த்ததும் அப்படியே உன் பொண்ணோட செட்டில் ஆக பிளான் போட்டுட்டீயா?” என்று ஜானு குத்தி குதற,

“போதும் நிறுத்துங்க திஸ் இஸ் யுவர் லிமிட்” என்ற ஜானுவின் விழிகள் லேசாக கலங்கின.

“உனக்கு உன் தகுதி தெரியுமா? நீ என் லிமிட்ட பத்தி பேச வந்துட்ட. எங்ககிட்ட கை நீட்டி சம்பளம் வாங்கிட்டு இருந்த வேலைக்காரி நீ லிமிட் பத்தி பேசுறீயா? உனக்கு என் மாமா கேக்குதா? அவர் எங்க நீ எங்க. ஏணி வச்சாலும் நீ எங்க தகுதிக்கு ஈக்வலா வர முடியுமா? உன்கிட்ட என்ன இருக்குனு என் மாமா உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவ்ளோ ஸ்ட்ராங்கா சொல்றாரு. அவரையே சுத்தி வர்ற என்னை கண்டுக்காம ஆப்டர்ஆல் ஒரு பி.ஏ உன் பின்னாடி சுத்துறாரு” என்று முகத்தை சுளித்தவள்,

“இதோ பார் உங்கிட்ட எல்லாம் பேசி என் நேரத்தை வேஸ்ட் பண்ண முடியாது. உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லு தூக்கி போட்றேன் பொறுக்கிட்டு போய்டு. அதைவிட்டுட்டு நல்லவ மாதிரி நடிச்சு அழுது நாடகம் போட்ட என் அப்பாக்கிட்ட சொல்லி ரோட்ல பிச்சை எடுக்குற நிலைமைக்கு கொண்டு வந்திடுவேன். இந்த வேலை இல்லை இனி எந்த வேலைக்கும் போக முடியாதபடி பண்ணிடுவேன். ஸ்கூல் படிக்கிற பொண்ணு இருக்குல உனக்கு ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை தான் எடுக்கணும் அப்புறம். பாத்து நடந்துக்கோ” என்று நெருப்பை கக்கி ஜானுவை மொத்தமாய் காயப்படுத்தியிருந்தாள்.

ஜானு அவள் பேசிய பேச்சில் மொழியிழந்து கலங்கி போய் அமர்ந்திருக்க, ஒரு காசோலை எடுத்து அதில் இருபது லட்சத்தை நிரப்பியவள், “இந்தா உனக்கு பிச்சை போட்டதான் நினைச்சிக்கிறேன் பொறுக்கிட்டு போ. இதுக்கு மேல என் வழியிலயோ என் மாமா வாழ்க்கையிலோ குறுக்கீ
ட்ட உரு தெரியாம அழிச்சிடுவேன் மைண்ட் இட்” என்று ஜானுவை விழிகளால் எரித்தவள் அவளிடத்தில் அந்த காசோலையை வீசிவிட்டு விறுவிறுவென வெளியே நடந்தாள்.
 
Well-known member
Messages
480
Reaction score
346
Points
63
Lavanya ku ipadi oru thangachi ah iva pesunathu mattum Jeeva ku therinchi thu iva setha ah
 
Top