• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மௌன ரணங்கள் 2

New member
Messages
5
Reaction score
0
Points
1
அத்தியாயம்: 2

தங்கவேலுவின் குடும்பத்தில் அவரை தவிர மற்ற அனைவரும் ஹாலில் ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்து இருக்க ஈஸ்வரி மட்டும் எதையோ முனுமனுத்தபடியே இருந்தார்.

ஈஸ்வரியின் நேற்றைய செயலில் வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர் மீது கோபம் இருக்க, யார் அவரிடம் முதலில் பேசுவது என்பது தான் அங்கே அனைவருக்கும் யோசனையாக இருந்தது.

உஷா, சரவணன், கௌத்தம் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் 'நீங்க பேசுங்க' என்பது போல் பார்க்க,

அதுவரை அவர்கள் மூவரையும் பார்த்தபடி இருந்த வர்ஷினியோ 'இவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள்' என நினைத்தபடி "ஏன் அத்தை நீங்க பண்ணுனது சரியா? நம்ம வீட்டுல என்ன நடந்துனு உங்களுக்கு தெரியாத?" என்று விசாரனை தோரணையில் கேட்க,

"யார்டா அது...?" என்ற படி வர்ஷினி பக்கம் திரும்பிய கௌத்தம் "ஹே... நம்ம வக்கீலு.... இனிமேல் வீடு கோர்ட் ஆக போகுது. அம்மா குற்றவாளி, நான் ஜட்ச்" என நினைத்து குஷியானவன் அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்க,

"ஹப்பா என் மனசுல உள்ள பாரத்தையே குறைச்சிட்டியே வர்ஷூ" என்று சரவணனும் நினைக்க,

உஷாவோ 'பேசாமல் இரு...' என்பது போல் வர்ஷினியை முறைத்தார். ஆனால் வர்ஷினியோ யாரையும் கண்டு கொள்ளவில்லை. என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவள் தன் வாதாடலை தொடர்ந்தாள்.

வர்ஷினியின் கேள்விக்கு ஈஸ்வரி அமைதியாக இருக்க, "சொல்லுங்க அத்தை. நம்ம வீட்டுல நடந்தது உங்களுக்கு தெரியாதா... ? இல்லை இந்த ரெண்டு வருஷத்துல மறந்துட்டிங்களா?" என்று வர்ஷினி கேட்க,

"நான் எதையும் மறக்கல. ஆனா நீங்க எல்லாரும் தான் மறந்துட்டிங்க. வள்ளி இந்த வீட்டு மருமக. அவளுக்கு எப்படி நீங்க இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க முடியும்" என ஈஸ்வரியும் கோபமும், ஆதங்கமுமாய் கேட்க,

"எதை வச்சி அவங்க உங்க மருமகனு சொல்றிங்க?" என்றாள் வர்ஷினி அவரை ஆழ்ந்து பார்த்தபடி கேட்க.

"இது என்னடி கேள்வி? என் பையன் கல்யாணம் பன்ன பொண்ணு என் மருமக தானே!. உன் அண்ணன் அருண் ஊர் கூடி நின்ன சபையில வள்ளி கழுத்துல தாலி கட்டி இருக்கான்" என ஈஸ்வரி சொல்ல,

"ம்.... ஓகே. ஆனா... இதெல்லாம் நல்ல ஞாபகம் இருக்குற உங்களுக்கு... அதுக்கு அப்பறம் நடந்தது மட்டும் ஏன் நினைவுல இல்ல அத்தை? நினைவுல இல்லையா? இல்ல மறந்துட்டிங்களா?" என்று கேட்ட வரிஷினியின் பேச்சிலும் இப்போது கோபம் எட்டி பார்க்க,

அதில் லேசாக தடுமாறிய ஈஸ்வரி "அது... அது.... ஏதோ சூழ்நிலையால நடந்தது. அதுக்குனு நடந்த கல்யாணம் இல்லைனு ஆகிடுமா?" என்றார் ஈஸ்வரி.

"எதை அத்த சூல்நிலைனு சொல்றிங்க? கண்டுன தாலியோட ஈரம் காயுறதுக்கு முன்னாடி... அத்தனை பேர் மத்தில, "எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. தாலிய தலட்டி தான்னு" கேட்டு அருண் அண்ணன் வாங்குனதையா? ஏன் இப்படி மனசாட்சி இல்லாம பேசுறிங்க அத்தை" என்றாள் வர்ஷினி கோபத்துடன்.

"என்ன இவ்வளவு கேள்வி கேக்குறியே.... ஏன் அன்னைக்கு என்ன நடந்துனு உனக்கு தெரியாதா டி? அருண் வேணும்னா வள்ளி கழுத்துல கட்டுன தாலியை கலட்டி வாங்குனான்?" என்று ஈஸ்வரி கேட்க,

"ஆமா..." என்றாள் வர்ஷினி உறுதியாக. அதில் மற்ற மூவருமே சற்று ஆடி தான் போனார்கள்.

ஆனால் அது உண்மை கிடையாது. அருண் விருப்பத்தோடு அதை செய்யவில்லை என்பதை சரவணன் மட்டுமே உணர்வான். ஆனால் இப்போது அதை பேசினால் ஈஸ்வரிக்கு சர்போர்ட்டுக்கு ஆள் கிடைத்தது போல் ஆகும் என்பதால் சரவணனும் அமைதியாக வேடிக்கை பார்க்க,

கௌத்தமிற்கு ஓடி சென்று வர்ஷினிக்கு கை கொடுக்க வேண்டுமா போல் இருந்தது. ஆனால் 'டேய் திட்டு வாங்குறது உன் அம்மாடா' என்று மனசாட்சி குட்ட "போடா நான் எப்பவும் நியாயத்து பக்கம் தான்டா' என்று மனசாட்சியை தலையில் தட்டி அடக்கி விட்டான்.

ஆனால் உஷா மட்டும் உள்ளுக்குள் பதறியபடியே அமர்ந்து இருந்தார். ஈஸ்வரியின் உரிமை எதனால் என்று சரவணன், கௌத்தம், வர்ஷினிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் அவருக்கு தெரியுமே!

அண்ணன் வள்ளி வேண்டாம்னு தான் தாலியை கலட்டி வாங்கிச்சி. அப்படி இல்லைனு நீங்க வேணும்னா சொல்லலாம் நாங்க சொல்ல முடியாது அத்தை. அன்னைக்கு அங்க மண்டபத்துல இருந்த அத்தனை பேரும் அண்ணன் கிட்ட எடுத்து சொன்னிங்க தானே! அண்ணே கேட்டுச்சா? இல்லையே..."

"வேண்டாம். சரியா வராது... பிடிக்கலை. இப்படி சொல்லி தானே தாலியை கலட்டி வாங்கிட்டு போனாங்க... அதோட அண்ணனுக்கும் அவங்களுக்கும் உள்ள உறவு முடிஞ்சி போச்சி அத்தை. அப்படி இருக்கும் போது... வள்ளி அண்ணி அவங்க லைஃப் அ அவங்க டிசைட் பண்றது எந்த விதத்துல தப்பு? அதுக்கு ஏன் உங்களை கேட்கனும்?" என்றாள் வர்ஷினி.

அதில் பதறி போன உஷா "வர்ஷினி.." என்று அவளை அடக்க,

" அவளை பேச சொல்லி தூண்டி விட்டுட்டு இவ்வளவு நேரமும் அமைதியா இருந்துட்டு. இப்போ என்ன" என்று உஷாவை தீயாய் முறைத்த ஈஸ்வரி,

வர்ஷினி அழுத்தமாய் பார்த்தவர் "ஆமா வள்ளி என்ன செஞ்சாலும், அவ வாழ்க்கையில என்ன நடந்தாலும், என்ன கேட்டு தான் செய்யனும். ஏன்னா... " என்ற ஈஸ்வரி என்ன சொல்லி இருப்பாரோ "ஈஸ்வரி..." என்ற தங்கவேலுவின் அதட்டலில் அப்படியே பேச்சை நிறுத்தி விட்டார்.

தங்கவேலுவை அந்த நேரத்தில் எதிர் பார்த்திராத ஈஸ்வரி பயமும் பதட்டமுமாய் அவரை பார்க்க, "இன்னும் என்னடி சொல்லனும். எல்லாம் சொல்லேன்..." என்ற தங்கவேல் அடி குரலில் சீற,

"இல்லங்க இங்க என்ன நடக்குதுனு..." என்ற ஈஸ்வரியின் பேச்சை இடை நிறுத்தியவர்

"எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன். உன் பையனை நம்பி அந்த பொண்ணுக்கு நல்லது செய்ய போய்... அது நாசமா போனது தான் மிச்சம். இப்பவாது அந்த பொண்ணு நல்லா இருந்துட்டு போட்டுமே. உனக்கு என்னடி?" என்று அதட்டியவர்

தொடர்ந்து "நீயும் உன் மகனும் சேர்ந்து வேற வேலை ஏதும் பார்த்திங்கனு தெரிஞ்சிது தொலைச்சி கட்டிடுவேன் சொல்லிட்டேன்" என்று மிரட்டலாக சொல்ல,

ஈஸ்வரி அழுதபடி அவர் அறைக்கு சென்று விட, மற்ற அனைவரும் என்ன செய்வது என்று புரியாமல் நிற்க, இதற்கெல்லாம் காரணமான அருண் பிரபாகரனோ இங்கு நடக்கும் எதுவும் தெரியாமல் அவன் வேலையில் மூழ்கி இருந்தான்.
***
துபாய் நாட்டின் அபுதாபி மாநகரத்தில் உள்ள பாலைவன பகுதியில் ஓங்கி உயர்ந்த பெரிய பெரிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. வெளியே இருந்து பார்க்கும் போது அனைத்தும் வடிவேல் காமெடியில் வர செட்டப் வீடு போல் தான் இருந்தது. ஆனால் அது கேஸ் மற்றும் ஆயில் கம்பேனியில் வேலை செய்ய வரும் ஊழியர்களுக்காக கட்டப்பட்ட அறைகள்.

அந்த கட்டிடம் ஒன்றில் தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில், காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி முடித்துவிட்டு வந்த அருண் பிரபாகரன் வேலைக்கு செல்ல குளித்து கிளம்பினான்.

அருண் பிரபாகரன். தங்கவேல் ஈஸ்வரியின் மூத்த மகன். எம்இ முடித்து விட்டு அபுதாபியில் உள்ள கேஸ் மற்றும் ஆயில் கம்பேனியில் மெக்கானிக்கல் இஞ்சினியர் ஆக வேலை பார்க்கிறான். ஐந்தரை அடி உயரம். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு. எதற்கும் அலட்டி கொள்ளாத குணம். ரொம்மபும் அழுத்தக்காரன். அவன் நினைத்தால் தவிர ஒரு விஷயம் அவனிடமிருந்து வாங்க முடியாது.

யாரிடமும் அதிகம் பேசி பழக மாட்டான். ஆனால் கடந்த மூன்றரை வருடத்தில் இந்த வெளிநாட்டு வாழ்க்கை அவனை சற்றே மாற்றி இருந்தது. அவனாக போய் மற்றவரிடம் பேசா விட்டாலும், உதவி என்று வருபவர்களை உதாசினம் செய்ய மாட்டான். என்ன என்ற அளவிற்கு சிலரிடம் பேசியும் கொள்வான். அவ்வளவே.

வேலைக்கு செல்ல குளித்துவிட்டு வந்தவன் டீசட்டும் ஷாட்சும் அணிந்துவிட்டு அவன் குழதெய்வத்தை நினைத்து திருநீர் பூசி கொண்டவன், காலை உணவு சாப்பிட மெஸ் ஹால் நோக்கி நடந்தான்.

அருண் பிரபாகரனுக்கு பிடித்த செயலில் ஒன்று, இந்த உணவிற்கு முன்னும் பின்னுமான ஐந்து நிமிட நடை பயணம். அது எப்போதும் ஒரு ஆறுதலை தரும். இன்றும் இன்னும் விடியாத அந்த காலை பொழுதை ரசித்தபடி அருண் உணவு விடுதிக்கு செல்ல,

அருண் ப்ரோ... அருண் ப்ரோ என்று யாரோ அழைக்கும் குரலில் அருன் பிரபாகரன் திரும்பி பார்க்க,

அருண் பிரபாகரன் கம்பேனியிலேயே டெக்னிஷனாக வேலை செய்யும் திலீப் என்பவன் "வெயிட்.." என்பது போல் கை அசைத்தபடி வேகமாக அவனை நோக்கி வர,

"என்ன திலீப்?" என்றான் அருண் பிரபாகரன்

"ப்ரோ சம்பளம் போட்டுட்டாங்க. உங்க கிட்ட வாங்குன 100 கிராம்ஸ் போட்டுவிட்டுடேன். செக் பண்ணிக்கோங்க" என்ற திலீப் வேகமாக வந்ததால் மூச்சி வாங்கி கொண்டே பேச,

"ரிலாக்ஸ் திலீப். இதை சொல்லவா இவ்வளவு வேகமா வந்திங்க?" என்று அருண் கேட்க,

"ஆமா சார்... நேத்து நைட் தான் சேலரி க்ரிடிட் ஆச்சி. ஆதான் போட்டுவிட்டுட்டு சொல்லிட்டு போலாம்னு வந்தேன். ரொம்ப தேங்க்ஸ் சார். டியூட்டிக்கு லேட் ஆகிட்டு. நான் சாப்பிட்டுட்டு வந்து தான் கிளம்பனும். வரேன் சார்" என்று கூறி திலீப் சொல்ல போக,

"ஏன் இவ்வளவு அவசரம் திலீப். பஸ் ஏழு மணிக்கு தான். நானும் சாப்பிட தான் போறேன். வாங்க போவோம்" என்றான் அருண் நிதானமாய்.

அருண் யாரிடமும் அவ்வளவு எளிதில் பேசி விட மாட்டான். இயல்பிலேயே ரொம்ப அமைதியும் கோபமும் கொண்டவன். யாராவது எதுவும் கேட்டால் பதில் சொல்வானே தவிர, தானாக சென்றெல்லாம் பேச மாட்டான். அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருந்து கொல்வான்.

அதிலும் இஞ்சினியராக வேலைக்கு வந்திருக்க, சற்று கெத்துடன் தான் இருப்பான். அதற்காக திமிர் பிடித்தவனா? என்று கேட்டால் இல்லை என்று அடித்து சொல்லி விடலாம். வெளிநாடுகளில் தன் நாட்டு மக்கள் மீது தோன்றும் ஒரு தோழமை உணர்வு அங்கிருக்கும் அனைத்து தமிழர் மீது அருணுக்கு உண்டு. எனவே உதவி என்று யார் கேட்டாலும் செய்வான்.

திலீப் நல்ல வேலைக்காரன். அதை பார்த்து அவன் வேலை உயர்வுக்கும் சம்பள உயர்விற்கும் கம்பேனியில் பேசி ஏற்பாடு செய்து கொடுத்திருந்தான். ஆனால் நான் தான் செய்தேன் என்று அருண் ஒரு இடத்திலும் காட்டி கொண்டதே இல்லை.

அப்படி இருக்க இன்று அருணே அழைக்கவும் திலீபிற்கு மறுக்க தோன்றவில்லை. "சரி ப்ரோ... வாங்க போவோம்" என்ற திலீப் அருணுடன் சேர்ந்து நடந்தவன் "இந்த ப்ராஜெக்ட் எத்தனை நாள் ப்ரோ? எவ்வளவு மேன் பவர்? எப்போ சைட் ஹேன்ட்ஓவர் பண்ணனும்" என்று கேட்க,

"பிப்டி டேஸ் ஒர்க். இரண்டாயிரம் மேன் பவர். ஜனவரி ஃபஸ்ட் வீக் ஹேன்ட் ஒவர். டிசம்பர் லாஸ்ட் தான் எல்லாருக்கும் டிக்கெட் இருக்கும். ஏன் நீ ஊருக்கு போறியா?" என்று அருண் கேட்க, திலீப் முகத்தில் சந்தோஷத்தின் சாயல்.

பொதுவாக இங்கே எல்லாம் முப்பது நாட்களுக்கு மேல் வேலை இருப்பது ரொம்பவும் அபூர்வம். ஆயில் கேஸ் விற்பனையில் ஒரு நாளைக்கு கோடிகள் கொட்டும் என்பதால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்க தான் பார்ப்பார்கள். அதனால் இரவு பகல் என்று ஆட்கள் வேலை செய்வார்கள்.

அப்படி இருக்க ஐம்பது நாள் வேலை என்பது பெரிய ப்ராஜெக்ட் தான். இப்படி வேலை இருக்கும் மாதம் இரட்டிப்பு சம்பளம் என்பதால் திலீப் முகத்தில் மகிழ்ச்சி தெரிய,

"என்ன திலீப் ரொம்ப சந்தோஷம் போல! ஆனா நீங்க லாங் டைம் தானே? அப்பறம் என்ன?" என்றான் அருண்.

"ஆமா ப்ரோ. ஊர்ல வீடு கட்டிட்டு இருக்கேன். இரண்டு மாசம் வேலை இருந்தா... கனிசமா ஒரு தொகை கைக்கு வரும். கொஞ்சம் வேலை சீக்கரமா முடியும்" என்று திலீம் சொல்ல,

"ஹோ... இந்த மாச சம்பளம் ஊருக்கு அனுப்பிட்டிங்களா?" என அருண் அக்கரையுடன் கேட்க,

"இல்லை சார். நாளைக்கு எனக்கு லீவ். நாளைக்கு தான் அனுப்பி விடனும்" என்று திலீப் சொல்லவும் உணவு விடுதி வந்து விட "சரி ப்ரோ நீங்க போய் சாப்பிடுங்க. நான் என் மெஸ் ஹால் போறேன்" என்றபடி திலீபன் நகர போக,

"இன்னைக்கு என்னோட சாப்பிட வாங்களேன் திலீப் "என்றான் அருண்.

"சார்... சீனியர் மெஸ் ஹாலுக்கா! நான் வரலை ப்ரோ. நான் டெக்னிஷன்தான்னு தெரிஞ்சா திட்டுவானுங்க. அது எதற்கு?" என்றான் திலீப் சிறு கோபத்துடன்.

"யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. என்னோட தானே வரிங்க. வாங்க நான் அழைச்சிட்டு போறேன்..." என அருண் பிரபாகரன் சொல்லியும் திலீப் தயங்கி நின்றான்.

இங்கே எல்லாம் இது இயல்பான விஷயம் கிடையாது. கேஸ் ஆயில் கம்பேனியை பொறுத்தவரை சீனியர் ஜீனியர் என்று பிரித்து தனி தனியாக தான் சாப்பாடு. இஞ்சினியர்களுக்கு இருக்கும் மதிப்பும், சலுகையும் ஃபிட்டர், டெக்னிஷீயன், போர்மேன் போன்றவர்களுக்கு கிடையாது. உணவு முதல் அறை வரை பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். அப்படி இருக்க ஒரு டெக்னிஷுயன் சீனியர் மெஸ் ஹாலில் சாப்பிட்டு கம்பேனி ஆட்கள் பார்த்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் திலீப் தயங்க,

அவன் தயக்கத்தை பார்த்த பிரபாகரன் "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. வாங்க" என்று வழுகட்டாயமாக திலீபை அழைத்து சென்றான்.

திலீப் அவனுக்கு தேவையான உணவை எடுத்துவிட்டு வந்து அமர்ந்தவன், பிரபாகரன் இரண்டு இட்லி, ஒரு முட்டை, கொஞ்சம் வெஜ் சாலட் என எடுத்து வந்த உணவை பார்த்தவன் "என்ன சார் இப்படி சாப்பிடுறிங்க? இது போதுமா உங்களுக்கு?" என்று கேட்டான் திலீப்.

"ம்... போதும். இன்னைக்கு நீங்க வரவும் தான் இட்லி. இல்லைனா இரண்டு எஃக், கொஞ்சம் சாலட் அவ்வளவு தான் என் சாப்பாடு திலீப்" என்றான் அருண் சிறு புன்னகையுடன்.

அதன் பிறகு சற்று நேரம் இருவரும் அமைதியாக இருக்க "உங்ககிட்ட ஒன்னு கேட்கலாம் சார்?" என திலீப் தயக்கத்துடன் கேட்க,

"ம்... கேளுங்க திலீப். ஏதும் ஹெல்ப் வேணுமா?" என்று அருண் பிரபாகரன் அக்கரையுடன் கேட்க,

"ச்சே அதெல்லாம் இல்லை சார். நான் பார்த்தவரைக்கும் கிட்டதட்ட மூனு வருஷமா நீங்க ஊருக்கு போனதே இல்லை. உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா சார்? உங்க வீட்டுல உங்களை ஊருக்கு வர சொல்லி கூப்பிட மாட்டாங்களா?" என்று ஐயப்பன் கேட்க,

அருண் பிரபாகரனின் நினைவில் வந்தாள் செந்தூர வள்ளி. எங்கிருந்து, எப்படி வந்தாள் என்றெல்லாம் அருண் பிரபாகரனுக்கு தெரியாது. ஆனால் அவனின் இருபத்தி ஐந்தாவது வயதில் தங்கவேலுவின் நண்பரின் மகள், அவனுக்கு பார்த்த பெண், என்ற பல அடைமொழிகளுடன் அவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் அவனுக்கு அறிமுகமானாள்.

ஆனால் அன்று பார்த்த பூ முகம் இன்று வரை அவன் மனகண்ணை விட்டு அகழவில்லை.

அவன் வீட்டில் உள்ள மற்றவர்கள் கண்களுக்கு அவள் எப்படி தெளிந்தாளோ! தெரியாது. அவன் கண்களுக்கு அவள் பேரழகியாகதான் தெரிந்தாள். மஞ்சள் பூசாமலேயே மஞ்சள் பூசியது போன்ற அவளின் இளம் மஞ்சள் நிறமும். பெரிய முட்டை கண்களும், என்ன செய்தாலும் அடங்க மாட்டேன்... என்று சிலுப்பிட்டு நின்ற அவளின் சுருல் முடிகளும், சற்று பூசினார் போன்ற உடல் வாகு என்று அவளை மொத்தமாய் பிடித்திருந்தது அருண் பிரபாகரனுக்கு.

இன்றைய மாடன் பெயர்கள் பலவற்றை கேட்டு பழகியவனுக்கு செந்தூரவள்ளி என்ற அவளின் பேரை கூட ரொம்ப பிடித்தது. பலமுறை அவளின் பெயரை அவனுக்கு அவனே உச்சரித்து பார்த்து மனம் சிளிர்த்துள்ளான்.

இந்த காலந்து பெண்களின் பெயர் போல் மாடனாக இல்லாமல் கொஞ்சம் அந்த காலத்து பெயர் போல் அழகாக தோன்றியது.

ஆனால் அன்று அவர்கள் திருமணம் முடிந்து சில மணி நேரம் கழித்து நடந்ததை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் வலித்தது. அவன் மண்டபத்தை விட்டு கிளம்பு போது தேவியின் கண்களிலீ இருந்த கண்ணீரும் வாடிய முகமும் இப்போதும் அவனை கொன்று திங்கும். அதிலும் மணிமாறனின் இறப்பு முற்றிலும் அவன் எதிர் பார்க்காத ஒன்று.

அதை நினைத்த நொடி இதையத்தை யாரோ குத்தி கிழித்தது போல் வலித்தது. அதில் அவன் முகம் வாடி போக உணவும் உள்ளே செல்ல மறுத்தது. அவன் யோசனையில் இருப்பதை பார்த்த திலீப் "சார்..." என்று அவன் கையை தட்ட,

"ம்... கல்யாணம் ஆகிட்டு திலீப். ஆனா ஏதோ ஜாதகம் சரி இல்லனு பிரிஞ்சி வச்சி இருக்காங்க" என்ற அருண் பிரபாகரன் கை கழுவ எழுந்து சென்று விட்டான்.

அவன் பாதி உணவில் எழுத்து சென்றதில்லேயே அவன் சொல்வது உண்மை என்பது திலீப்பிற்கு புரிந்து விட்டது. ஆனால் அதற்கு மேல் அதை பற்றி பேச திலீப் நினைக்கவில்லை. அதே நேரம் பேச்சை வளர்க்க இருவருக்குமே நேரம் இல்லை.

பத்து நிமிடத்தில் சைட்டிற்கு செல்ல பஸ் வந்து விடும். ரூம் சென்று கிளம்பவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் அருணிடம் சொல்லி கொண்டு திலீப் சென்று விட அருண் பிரபாகரனும் அவன் அறைக்கு வந்து விட்டான்.

ஆனால் முன்பு இருந்த அவன் மனநிலை முற்றிலும் மாறி விட்டிருந்தது. வேலைக்கு செல்ல மனம் வரவில்லை. செந்தூரவள்ளியின் ஞாபகம் எப்போதும் அவனுக்கு வருவது இல்லை. ஆனால் யாரேனும் இப்படி திருமணம் குடும்பம் என்று கேட்டால் அவள் நினைவு வராமல் இருப்பது இல்லை.

அப்படி வந்து விட்டால் அன்று முழுவதும் அவள் நினைவும் அதை தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் தோன்றி அவனை வதைத்து விடும். இன்றும் கட்டி
லில் கண்ணை மூடி படுத்தவனின் நினைவில் செந்தூரவள்ளியின் அழுத முகமே வந்து நின்று அவனை வதைக்க தொடங்க, அதில் அமிழிந்து போய்விட்டான்.

ரணங்கள் தொடரும்....
 
Top