- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
நெஞ்சம் – 54 
ஆதிரை முறைக்கவும், “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைக்குறீங்க? சந்தேகம் கேட்டா எக்ஸ்ப்ளைன் பண்ணணும். முறைக்க கூடாது!” என முனங்கிய தர்ஷினி, “இல்ல... முதல்ல நீங்க ஒரு பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவீங்க. உங்க ஊட்டுக்காரரு, அதான் நம்ப பாஸ் வேற பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவாரு. ஆனால் இன்னைக்கு ரெண்டும் கலந்து கட்டி வாசனை வருதே. பெர்ஃப்யூமை மட்டும் கலந்து கட்டி அடிச்சீங்களா? அதான் என்ன மேட்டர்னு தெரிஞ்சுக்கலாமேன்னு!” என அவள் இழுத்த இழுவில் ஆதிரைக்கு சங்கடமாகப் போயிற்று.
தனக்கு அவன் கணவன். ஆனால் மற்றவர்களுக்கு அவன் முதலாளி. அப்படி இருக்கையில் அவர்கள் அவனைப் பார்க்கும் போது வேறு எந்தவித எண்ணமும் தோன்றக் கூடாது என கவனமாய் இருப்பாள் ஆதிரை. ஆனால் தர்ஷினி இப்படியொரு கேள்வியை கேட்டதும் சட்டென்று என்ன எதிர்வினையாற்றுவது எனத் தெரியாது அவளை முறைத்துப் பின்னர் சங்கடப்பட்டாள்.
‘எல்லாம் இந்த தேவாவை சொல்லணும். இந்த மனுஷன் இப்போ என்னை சமாதானம் செய்யலைன்னு யார் அழுதா?’ என முனங்கிக் கொண்டே வேலை பார்த்தாள். கோமதி வந்துவிட்டார். மூவரும் அலுவலைத் தொடர்ந்தனர்.
“என்ன தர்ஷூ, வாயை ஜிப் போட்டு பூட்டியிருக்க? என்னாச்சு?” எனக் கேட்டவாறே சுபாஷ் வந்து அமர்ந்தான்.
“ண்ணா... அது வந்து!” என அவள் இழுக்க, ஆதிரை அடிக்கண்ணால் அவளை முறைத்தாள். அந்தப் பார்வையை சுபாஷூம் கண்டு கொண்டான்.
“ஏய், என்ன ஓனரம்மா உன்னை முறைக்கிறாங்க. என்ன தப்பு பண்ண தர்ஷூ?” என தீவிரக் குரலில் கேட்டான்.
தர்ஷினி வாயைத் திறப்பதற்குள், “சுபாஷ், வொர்க்கிங் டைம்ல என்ன பேச்சு? போங்க... போய் வேலையைப் பாருங்க!” ஆதி அவனை விரட்ட முயன்றாள்.
“ம்ப்ச்... பாருங்க... பாருங்க. முழு ஓனரம்மாவா மாறி இருக்க நம்ப ஆதிரையைப் பாருங்க. ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ ஆதி. உன் ஹஸ்பண்ட் பாஸ்னா, நீ சின்ன பாஸ் இல்ல, நான் மறந்தே போய்ட்டேன். நீ சொன்னா சரியாத்தான் இருக்கும். கொடுக்குற சம்பளத்துக்கு வேலை பார்க்கணும் இல்ல. ரைட்டு விடு, நான் வேலையைப் பார்க்குறேன்!” போலிக் கோபத்தோடு அவன் எழ முயல,
“என்ன ஆதி? நீ சுபாஷ்கிட்டே இப்படியெல்லாம் பேசலாமா? டூ மச்!” கோமதி அக்கா அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.
“ண்ணா... நம்ப ஆதிக்கா இல்லாதப்போ அவங்களைப் பத்தி காசிப் பண்ணது உண்மையாகிடுச்சு பாருங்க. இந்தக் காலத்துல யாரை நம்புறதுன்னே தெரியலை. சட்டு சட்டுன்னு மாறிடுறாங்க!” தர்ஷினி போலியாய் வருந்த, ஆதிரை தலையில் கை வைத்தாள்.
‘போச்சு... இன்னைக்கு முழுசும் நானே இவனுங்களுக்கு கண்டென்ட் கொடுத்துட்டேனே!” என சிரிப்பும் முறைப்புமாய் அவர்களைப் பார்த்தாள்.
“அக்கா, ஏன் இப்படி க்ரூயலா இருக்கீங்க? பாவம் சுபாஷ்ண்ணா, நீங்க சொன்னதுக்காக கோபமா போறாரு. அவரை ஸ்டாப் பண்ணுங்க!” தர்ஷினி இவள் தோளைப் பிடித்து உலுக்கினாள். சுபாஷ் இரண்டு அடிகள் முன்னே வைப்பதும் பின்னர் காலை இழுப்பதுமாய் இரண்டு நிமிடத் தொலைவை போலியாக கடினப்பட்டு கடக்க முயன்றான்.
ஆதிரைக்கு சிரிப்பு வேறு வந்தது இவர்களது அலும்பில்.
“ப்ம்ச்... சுபாஷ், வந்து உக்காருங்க!” என்றாள் மென்முறைப்புடன்.
“ஆதி...இப்படிலாம் முறைச்சுட்டுக் கூப்ட்டா எப்படி சுபாஷ் வருவான்? சந்தோஷமாக சிரிச்சுட்டே கூப்பிடு!” கோமதி கூறவும், “யோவ் சுபாஷ்... வந்து உக்காரு!” என இவள் முயன்று பற்களை காண்பித்து சிரித்து வைத்தாள்.
“இது நல்ல புள்ளைக்கு அழகு. வெரி குட் தர்ஷூ. இப்போ நம்ப பாஸ் வந்து கேட்டா ஆதிதான் என்னை அரட்டை அடிக்க கூப்பிட்டான்னு போட்டுக் குடுத்துடலாம்!” என சுபாஷூம் தர்ஷினியும் கையை அடித்துக் கொள்ள, இவள் முறைத்தாள்.
“அட, தேவா சார் திட்டலாம் மாட்டாரு. ஏன்னா இப்போ ஆதிதானே அவருக்கு பாஸ். சோ, நம்ப அரட்டை அடிக்கலாம், வேலை செய்யாம ஓபி கூட அடிக்கலாம்!” கோமதி குதூகலத்துடன் கூற, ஆதிரை வாயை இறுகப் பூட்டிக்
கொண்டாள். எப்படியும் அவள் வாயிலிருந்து வார்த்தை வரும். அதை வைத்து அவளைக் கலாய்க்கலாம் என அவர்கள் திட்டம் இவளறிந்ததே.
“என்னமோ பண்ணுங்க!” என்றவள் கணினியில் முகம் புதைத்தாள்.
“சரி... சரி. ஆதியை அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ என்ன மேட்டர்னு சொல்லு தர்ஷினி!” சுபாஷ் தர்ஷினிக்கு அருகேயுள்ள நாற்காலியை இழுத்துப் போட்டு மேஜை மீது அமர்ந்து ஒரு காலை அதில் வைத்தான்.
ஆதிரை நங்கு நங்கென்று மடிக்கணினியைத் தட்டவும் தொண்டையைச் செருமிய தர்ஷினி, “அது ஒன்னும் இல்ல சுபாஷ் அண்ணா... கலந்து கட்டி!” என்றாள் மென்று முழுங்கி. ஆதிரைக்கு இருமல் வந்தது. மற்றவளை முறைத்துக் கொண்டே தண்ணீரை எடுத்துப் பருகினாள்.
“என்ன கலந்து கட்டி தர்ஷூ?” கோமதி புரியாது கேட்டார்.
“அது வந்து கோமுக்கா...” என ஆதியை ஓரக்கண்ணால் பார்த்த தர்ஷினி, “இப்போலாம் பால் வரத்து கம்மியா இருக்கு. பட் நிறைய சப்ளை பண்றோமே... உங்க ஊட்டுக்காரர் பால்ல தண்ணி கலக்குறாரா? இல்லை தண்ணில பாலைக் கலக்குறாரான்னு கேட்டேன். புருஷனை சொன்னதும் ஆதிக்காக்கு கோபம் வந்து என்னை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாங்க. அதான் நான் சோகமாகிட்டேன் சுபாஷ்ண்ணா!” எனப் போலியாய் கண்ணீர் வடித்தாள் இவள்.
“ஆதி... இதெல்லாம் அநியாயம். என் தங்கச்சியை எப்படி நீ திட்டலாம்?” என சுபாஷ் பொங்கியெழ, ஆதிரை உதட்டோரம் முறுவல் அரும்பிற்று.
தர்ஷினியை மென்மையாய் முறைத்துவிட்டு, “என் புருஷனைப் பேசுனா நான் கேட்காம யார் கேட்பா சுபாஷ். என்னதான் இருந்தாலும் என் ஆளுல்ல அவரு?” என இவள் நீட்டி முழக்கியதும் நால்வருக்கும் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. கலகலவென சிரிப்பொலி கேட்டதும் தேவா வந்துவிட்டான்.
‘ப்ம்ச... சாத்தானைப் பத்தி பேசுனா சாத்தானே வந்துடுமாம். இதோ எங்க தேவா சார் வந்துட்டாரு!’ தர்ஷினி மனதிற்குள் அங்கலாய்த்தாள்.
“என்ன சிரிப்பு சத்தம்? ஆதிரை இன்னைக்கு எவ்வளோ பால் வந்திருக்கு? லாக் புக் சப்மிட் பண்ணீங்களா? எக்சல் ஷீட்ல அப்டேட் பண்ணிட்டீங்களா?” எனக் கேட்டு அவளை முறைத்தவன்,
“தர்ஷினி, கோமதி... எத்தனை டெஸ்ட் போட்டு முடிச்சிருக்கீங்க?” என அவர்களிடம் கடிந்தான். சுபாஷ் திருதிருவென விழித்தான். அடுத்து அவன்தானே என மனம் பதறிற்று.
“வெல் சுபாஷ், இங்க என்ன உங்களுக்கு வேலைன்னு தெரிஞ்சுக்கலாமா?” என அழுத்தமாய்க் கேட்டான் தேவா.
அவன் ஒரு நொடி என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது நிற்க, “நான்தான் அவரைக் கூப்பிட்டேன் சார். கோல்ட் ரூம் டெம்ப்ரேச்சர் நார்மலா இருக்கான்னு செக் பண்ணி சொல்ல சொன்னேன்!” என்றாள் அவனைக் காப்பாற்றும் விதமாக.
அவளை முறைத்தவன், “கோ அண்ட் டு யுவர் வொர்க் சுபாஷ்!” என அவனை அனுப்பியவன், “கம் டூ மை கேபின் மிஸஸ் ஆதிரையாழ்!” என்றுவிட்டுப் போனான்.
“அக்கா, ஆல் தி பெஸ்ட். நீங்க மிரட்டுற மிரட்டல்ல அவர் இனிமே இங்க வந்து சிடுசிடுன்னு பேசவே கூடாது. சிரிச்சாப்புல இருக்கணும். ஆல் தி பெஸ்ட்!” என தர்ஷினி கூற, அவளை மென்மையாய் முறைத்த ஆதிரை தேவாவின் அறைக்குச் சென்றாள்.
உள்ளே நுழைந்தவளை முறைத்தவன், “வேலை பார்க்காம என்ன பண்ணீட்டு இருக்கீங்க மிஸஸ் ஆதிரையாழ்?” எனக் கேட்டவனை அசட்டை செய்தவள் அவன் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
“ஒருநாள் ஸ்டாப்ஸ் எல்லாம் சிரிச்சுப் பேசுனா இந்த பாஸ்க்கு எல்லாம் புகையுமா மிஸ்டர் தேவநந்தன்?” என வெகு சிரித்தையாக கேட்டாள் இவள்.
“ப்ம்ச்... ஆதி!” அவன் மிரட்ட, “பத்து நிமிஷம் கூட இருக்காது. கரெக்டா நாங்க சிரிச்சா மூக்கு வேர்த்துடுது உங்களுக்கு. வேலையெல்லாம் கரெக்டா நடக்கும். அதுக்கு நான் ரெஸ்பான்சிபிலிட்டி. இப்போ வேற எதுவும் பேசணுமா?” எனக் கேட்டவளை தேவா முறைத்துப் பார்த்தான்.
“காலைலயே கேட்டேனே... இங்க வந்தா அந்நியனா மாறிடுறீங்களே, அதெப்படி!” என சந்தேகம் கேட்டவள், “ஐ க்நோ, நீங்க சிரிச்சுப் பேசுனா எல்லாரும் அடவாண்டேஜ் எடுப்பாங்க. ஆனால் பாருங்க யூ டிட் அ பிக் மிஸ்டேக். உங்ககிட்டே வொர்க் பண்ண என்னைக் கல்யாணம் பண்ணது உங்களோட தப்பு மிஸ்டர் தேவநந்தன்!” என்றவளை அவன் கேள்வியாகப் பார்த்தான்.
“என்னை என்ன பண்ண சொல்றீங்க? என்னால ஹார்ஷா பேச முடியாது. ஏன்னா நான் அவங்களோட கோ வெர்க்கரா இத்தனை வருஷம் வேலை பார்த்துட்டேன். சட்டுன்னு உங்களை மாதிரி உர்ருன்னு மாற முடியாது!” என கடுகடுத்தாள் ஆதிரை.
“என்னாச்சு? பேசாம வேற ஒரு நியூ ப்ராஞ்ச் ஓபன் பண்ணிடலாம். நீ அதை டேக் ஓவர் பண்ணிக்கிறீயா?” தேவா யோசனையுடன் தாடியைத் தடவ, படக்கென்று அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவள் கையை தலைக்கு மேலே தூக்கி, “உங்களுக்கொரு கும்பிடு. உங்க நியூ பிராஞ்ச் ஐடியாவுக்கு ஒரு கும்பிடு!” என்றவளைப் பார்த்து தேவா வாய்விட்டு சிரித்திருந்தான். ஆதிரை அவனை முறைக்க முயன்றாலும் அவளுக்கும் சின்னதாய் சிரிப்பு உதட்டில் மலர்ந்தது.
“போடீ... போய் கதையடிக்காம வேலையைப் பாரு. இல்லைன்னா அந்நியனா மாறிடுவேன் நான்!” சிரிப்புடனே கூறினான்.
அந்த சிரிப்பை கண்களில் நிரப்பி பத்திரப்படுத்தியவள், “ரொம்பத்தான்...” என்றுவிட்டு நகர்ந்தாள்.
‘ஏதோ நல்ல மூட்ல இருந்ததால விட்டுட்டாரு. இல்லை மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிருப்பாரு!’ என முணுமுணுத்தவளுக்கு அவன் முன்பிற்கு இப்போது நிறைய மாறியிருப்பதாய் தோன்றிற்று.
‘பவர் ஆஃப் மேரேஜ். நோ... நோ பவர் ஆஃப் ஆதிரையா இருக்கும்!’ என நினைத்தவளின் உதட்டோரம் முறுவல் பிறந்தது.
தனியாய் சிரித்துக்கொண்டே வந்த ஆதிரையைப் பார்த்த தர்ஷினி, “ப்ளான் சக்ஸஸா கா? நல்லா மிரட்டி விட்டுடீங்களா?” என ஆர்வமாய்க் கேட்டாள்.
அவளை முறைத்த ஆதிரை, “ஏதோ நல்ல மூட்ல இருந்தாரு. அதனால நான் தப்பிச்சேன் தர்ஷூ. இனிமே ப்ரேக்ல, லஞ்ச் டைம்ல அரட்டையை வச்சுக்கோங்க. எப்போவாதுன்னா என்னால சமாளிக்க முடியும். அவரைப் பத்தி என்னைவிட உங்களுக்கே நல்லா தெரியும்!” என்றாள் கொஞ்சம் கறாரான குரலில்.
“அவரை மிரட்டீட்டு வர சொன்னா இந்தக்கா நம்பளை மிரட்டுது. அவ்வளோதான் இந்த ஆதிக்கா பவர்!” உதட்டை கோணிக் கொண்டு தர்ஷினி வேலையைத் தொடர, ஆதிரையும் உதட்டை இருபுறமும் கோணினாள்.
சரி அந்தப் பேச்சு அப்படியே முடிந்தது என அவள் எண்ணயிருக்க, மதிய உணவு நேரம் இன்னுமின்னும் அவளைக் கலாய்த்து தள்ளினர். ஆதிரை அவர்களை முறைத்தாலும் திட்டவில்லை. ஏனென்றால் வேலையெல்லாம் சரியாய் நடந்தது. அதனாலே என்னமும் செய்யுங்கள் என்றுவிட்டாள்.
மாலை வேலை முடிந்து கிளம்பும் போது, “அக்கா, ஆதிக்கா...” என தர்ஷினி இவளது தோளை சுரண்டினாள்.
“என்ன தர்ஷூ?” எனக் கேட்ட ஆதிரை தன்னுடைய இத்யாதிகளை எடுத்து கைப்பையில் வைத்தாள்.
“இல்ல... எனக்கு இன்னொரு டவுட்!” என்றாள் மெல்லிய குரலில். படக்கென்று அவளைத் திரும்பி பார்த்த ஆதிரை முறைத்தாள்.
“ப்ம்ச்... என்னக்கா... ஏன் முறைக்குறீங்க? சந்தேகம் கேட்டது ஒரு குத்தமா? தேவா சார் எந்த டவுட்னாலும் உங்ககிட்டே தானே கேட்க சொன்னாரு?” என அப்பாவியாய் முகத்தை வைத்தாள்.
“உனக்கென்ன இப்போ டவுட் கேட்கணும். அவ்வளோதானே தர்ஷூ?” இவள் வினவ, “யெஸ்! யெஸ்!” என்றாள் அவள் தலையாட்டலுடன்.
“வா...” என்று கூறி அவளது கையைப் பிடித்து தேவாவின் அறைக்கு இழுத்துச் சென்றவள், “சார், தர்ஷினிக்கு ஏதோ டவுட் கேட்கணுமா. நீங்க க்ளியர் பண்றீங்களா?” எனக் கேட்டாள்.
“என்ன டவுட் தர்ஷினி? சொல்லுங்க க்ளியர் பண்ணிடலாம்!” அவன் வெகு தீவிரப் பாவத்துடன் கேட்க, ‘இந்தாள்கிட்டே கோர்த்து விட்டிருச்சே இந்தக்கா!’ என ஆதிரையை மனதில் வறுத்தவள் என்ன கேட்பது எனத் தெரியாது விழித்தாள்.
“என்ன தர்ஷூ, எதுவா இருந்தாலும் நம்ப தேவா சார்கிட்டே கேளு. என்னைவிட அவருக்கு எல்லாம் தெரியும்!” ஆதிரை கேலியுடன் கூறி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட, சின்னவள் அவளை முறைத்தாள்.
தேவாவிற்கு அவர்கள் பேச்சை வைத்தே ஏதோ விளையாடுகிறார்கள் எனப் புரிய, “டைமாச்சுல்ல... வீட்டுக்கு கிளம்புங்க தர்ஷினி!” என அவளை அனுப்பினான். அவள் தப்பித்தால் போதுமென ஓடிவிட்டாள்.
“ப்ம்ச்... என்ன பழக்கம் ஆதி இது? என்ன விளையாட்டு உனக்கு?” மனைவியை முறைத்தான் அவன்.
“என்ன... என்ன விளையாட்டைப் பார்த்தீங்க? காலைல சும்மா இல்லாம சமாதானம் பண்றேன்னு வந்து கட்டிபிடிச்சுது நீங்க. அவ வந்து தேவா சாரோட பெர்ஃப்யூம் ஸ்மெல் எப்படி உங்க மேல வருதுன்னு கேட்டுட்டுப் போறா. என்னை என்ன பதில் சொல்ல சொல்றீங்க?” இவள் கடுகடுக்கவும், தேவாவின் முகம் சட்டென்று சங்கடத்தைப் பிரதிபலித்தது.
‘இப்படியெல்லாமா பெண்கள் பேசிக் கொள்வார்கள்? தர்ஷினி சின்ன பெண் வேறு? இனிமேல் தான் கவனமாய் இருக்க வேண்டும்!’ என நினைத்தவன், “சரி, சரி... நீ கிளம்பு ஆதி!” என்றான் சமாதானக் குரலில். அவனுக்குமே இந்தக் கேள்விக்கு என்ன பதிலுரைப்பது எனத் தெரியாது சங்கடத்துடன் பிடரியைக் கோதினான். அவன் செய்கையில் இவளுக்கு முறுவல் பிறந்தது.
“ஹம்ம்... ம்ம்!” மெல்லிய முனங்கலுடன் ஆதிரை வீட்டிற்கு கிளம்பினாள். காலையிலிருந்து ஒரு நல்ல மனநிலையிலே இருந்தாள். வீட்டிற்கு செல்லும்போது முகத்திலிருந்த புன்னகை வாடவேயில்லை.
உள்ளே நுழைந்ததும் உடை மாற்றி தேநீரை தயாரித்து எடுத்துக் கொண்டவள் அபியைக் காணவில்லை என்று ஜானுவின் அறைக்குள்ளே நுழைந்தாள்.
“அபிம்மா எங்க? என் தங்கப்புள்ளை என்ன பண்றான்?” என புன்னகையுடன் கேட்டவாறே ஆதிரை அவர்களை நோக்கி நடக்க, அபினவ் ஜானுவின் மடியில் படுத்திருந்தான்.
“என்னாச்சு அபி? ஏன் இந்த நேரத்துல படுத்திருக்க?” என யோசனையுடன் கேட்ட ஆதிரை கையிலிருந்த குவளையை மேஜை மீது வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.
“அபி, என்ன பண்ணுது?” என அவள் கேட்டும் மூவரிடமும் பதில் இல்லை. ஜானு பேயறைந்ததை போல அமர்ந்திருந்த விதத்தில் துணுக்குற்றவள், “அபி, எழுந்திரி!” எனக் கட்டாயப்படுத்தி மகனை நிமிர்த்தினாள். அவன் கண்கள் சிவந்திருக்க, தேம்பிக் கொண்டிருந்தான்.
“அபி... என்னாச்சு? ஏன் அழற? ஸ்கூல்ல மிஸ் திட்டீட்டாங்களா? கீழே விழுந்துட்டீயா?” எனக் கேட்டவளுக்கு நெஞ்சு பதறிப் போனது.
“அம்மா...” என்றவன் அழுகை பெரிதாக இன்னுமே தேம்பிக் கொண்டு தாயுடன் ஒன்ற, அவளுக்கு மேலும் பதற்றம் கூடியது.
“ஜானு... என்னாச்சுன்னு கேட்குறேன் இல்ல. வாயைத் தொறந்து சொல்லுங்க!” என இவள் அதட்டினாள்.
“அக்கா... நான் சொல்றேன். பட் பொறுமையா கேளுங்க!” எனத் தயங்கியவள், “எப்பவும் பசங்க ஸ்கூல்ல இருந்து வர்ற டைம்க்கு நான் ஹால் சோபாலதான் வெயிட் பண்ணுவேன். இன்னைக்கும் அப்படித்தான் உக்காந்து இருந்தேன். அபி சீக்கிரம் வந்துட்டான். என்னைப் பார்த்ததும் ஜானு சித்தின்னு ஓடி வரும்போது சோபா கால் தடுக்கி என் வயித்துல இடிக்கப் போய்ட்டான். என் பக்கத்துல உக்கார்ந்திருந்த அத்தை அவனைப் பிடிச்சு கீழே தள்ளி விட்டுட்டாங்க. அதுவும் இல்லாம கையில பழம் நறுக்குற கத்தி வச்சிருந்தாங்களா, அதைத் திருப்பி அபியை அடிச்சுட்டாங்க!” என அவள் பயத்துடன் கூறி முடித்ததும் ஆதிரை ருத்ரகாளியாக மாறி இருந்தாள்.
“அக்கா... ப்ளீஸ், கோபப்படாதீங்க. கோபால் மாமாவும் வீட்ல இல்லை. ஹரி வந்துட்டே இருக்கான்!” எனக் கூறி ஆதிரையின் கையை ஜானு பிடிக்க வெடுக்கென அவள் கையைத் தட்டிவிட்ட ஆதிரை எழுந்து நின்றாள். அவள் முகத்தில் அப்படியொரு கோபம் படர்ந்திருந்தது.
விறுவிறுவென பொன்வாணியிடம் சென்றவள், அவர் அறைக்குள் நுழையாது, “வெளிய வாங்க!” என்றாள் சீற்றத்துடன். எத்தனை தைரியம் இருந்தால் என் மகனை கை நீட்டி அடித்திருப்பார் இவர் என அவளுக்கு கட்டுக்கடங்காத கோபம் பெருகிற்று.
அவர் முகத்தில் தவறு செய்ததற்கு வருந்தி இருப்பது போல எந்த பாவமும் இல்லை. வெகுஅலட்சியமாக வந்தார்.
“என்ன... என்ன பேசணும் உனக்கு?” என அவர் கேட்டது இவளது கோப நரம்பை மேலும் சுண்டிவிட்டது.
“என் பையன் மேல கை வைக்கிற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? முதல்ல நீங்க யார் அவனுக்கு?” என அழுத்தமாய்க் கேட்டாள்.
“ஆமா... இவ பையன் பெரிய இளவரன். அப்பன் பேரை இதுவரைக்கும் சொல்லியிருக்கீயா டீ. பையன்னு சப்போர்ட்டுக்கு வர்ற? ஒண்ட வந்த பிடாரி என் வீட்டு வாரிசை கொல்லப் பார்த்தா சும்மா இருப்பேனா? அதான் டீ அடிச்சேன்!” என்றார் அவரும் கோபமாய்.
“வாயை மூடுங்க... வயசுக்கு மூத்தவங்கன்ற ஒரு காரணத்துக்காகத்தான் நான் இவ்வளோ தூரம் அமைதியா இருக்கேன். நீங்க என்கிட்டே எப்படி நடந்தாலும் பெரியவங்கன்னு பொறுத்துப் போனா, என் பையன் மேலயே கை வப்பீங்களா? ஹம்ம்...
சின்ன பையன் கால் தடுக்கி ஜானு மேல விழப் போனதுக்கு கத்தியால அடிப்பீங்களோ? இதுவே ராகினி பண்ணியிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க? அவளை அடிச்சிருப்பீங்களா?” எனக் காரமாய்க் கேட்டாள்.
“ஏய்... என் பேத்தியும் உன் மகனும் ஒன்னா? ஏதோ என் பையன் புத்திக் கெட்டுப் போய் உங்க ரெண்டு பேரையும் கூட்டீட்டு வந்து நடுவீட்ல வச்சிருக்கான். சீ, என்னைக்குப் புத்தி வந்து உங்களைத் தொரத்துவான்னு இருக்கு. எவனோ பெத்த நாயும் என் பேத்தியும் ஒன்னா?” என அவர் கேட்டதும் ஆதிரை அவரை அடிக்க கை ஓங்கிவிட்டாள்.
“வாயை மூடுங்க... என் பையனைப் பத்தி ஒரு வார்த்தைப் பேசுனா, என் வாய் பேசாது. கை தான் பேசும். வயசுக்கு மரியாதை குடுத்துதான் அமைதியா இருக்கேன்!” ஆதிரை பொறுமையை இழுத்துப் பிடித்தாள்.
“அத்தை... ஏன் இப்படிலாம் பேசுறீங்க?” எனப் பதறிய ஜானு, “அக்கா... அவங்க ஏதோ தெரியாம பேசுறாங்க!” என இவளிடம் இறைஞ்சினாள்.
“என் வீட்ல இருந்துட்டு என்னையவே கை நீட்டி அடிச்சுடுவீயா டீ நீ. இதுவரைக்கும் போனா போகுதுன்னு உன்னை வீட்ல விட்டு வச்சது என் தப்பு... இது என் புருஷனும் புள்ளைகளும் கட்டுன வீடு டீ. தெருவுல கிடக்குற அநாதைகளுக்கு எல்லாம் இங்க இடம் இல்லை. எல்லாம் இந்த தேவாவை சொல்லணும். இவளை எல்லாம் வைக்கிற இடத்துல வச்சிருக்கணும். இல்லைன்னா இப்படி பேசுவாளா? பெத்த அப்பன் ஆத்தா வேணாம்னு அநாதையா தூக்கி போட்டுட்டு போய்ட்டாங்க. கட்டுனவனும் வேணாம்னு உதறிட்டான். தரித்திரம் பிடிச்சவ. நம்ப வீட்ல இவ வந்தததுல இருந்தே நிம்மதி போச்சு!” என ஆங்காரமாய்க் கத்தியவர்,
“வெளிய போ டீ முதல்ல... உனக்கும் உன் புள்ளைக்கும் இந்த வீட்ல இனிமே இடம் கிடையாது. யார் வீட்ல யாரு ராஜியம் பண்றது? அடிச்சுடுவாளாமே!” என அவர் பேசவும், ஆதிரை அலட்சியமாய் பார்த்தாள்.
“இதோ...உங்க புள்ளை தானே என் கழுத்துல இந்த தாலியைக் கட்டுனாரு. அவர் வந்து சொல்லட்டும் வெளிய போன்னு. நீங்க சொல்றதெல்லாம் என்னால கேட்க முடியாது. இந்த வீடல்தான் நானும் என் புள்ளையும் இருப்போம். அப்படி இஷ்டமில்லன்னா நீங்க வெளியப் போய்க்கோங்க!” என்றாள் அவரைக் கோபப்படுத்தும் நோக்கோடு.
“ஏய்! யாரைப் பார்த்து டீ வெளிய போக சொல்ற? முதல்ல நீ போ...” என அவர் ஆதிரையின் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்து வாசலில் தள்ளிவிட, அபியும் அவரோடு இழுபட, இருவரையும் ஹரிதான் தாங்கி இருந்தான். உண்மையில் ஆதிரை பலமாய் ஓரிடத்தில் நின்றிருந்தால் வாணியால் அவளைப் பிடித்திழுத்து இருந்திருக்க முடியாது. அவர் அநாதை, அப்பன் பெயர் தெரியாதவன் எனப் பேச பேச இவளுக்கு வலித்தது. அழுகை வந்தாலும் அடக்கிக்கொண்டு தன்னைத் திடமாய் காண்பிக்க முயன்றாள். ஆனால் உடல் சதி செய்திருந்தது.
ஹரி பதறிப் போய் அவர்களைப் பிடித்து நிறுத்த ஆதிரை அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் உவர் நீர் பளபளத்தன. அழுகையை அடக்கிய முகம் சிவந்திருக்க, ஏனோ தன்னையே நிராதரவாக உணர்ந்தாள் ஆதிரை. அவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாய் இருக்க, தான் மட்டும் தனித்துவிடப்பட்டதாய் மனம் அழுதது.
“அம்மா... என்ன பண்றீங்க நீங்க? புத்தியோடதான் நடந்துக்குறீங்களா?” ஹரி கோபத்தோடு தாயிடம் செல்ல,
“டேய்... என்னை ஏன் டா கேட்குற. பெரிய மனுஷின்னு கூடப் பார்க்காம கையை நீட்டி அடிக்க வர்றா. என் புருஷன் புள்ளைங்க கட்டுன வீடு இது. நான் இருக்க கூடாதாம். முதியோர் இல்லம் போய் இருந்துக்கோன்னு சொல்றா டா. இதைக் கேட்க ஆள் இல்லை. என் புள்ளைங்க சரியா இருந்தா கண்ட தரித்திரம் எல்லாம் என்னைப் பேசுற அளவுக்கு வந்திருக்குமா? எல்லாம் என் தலையெழுத்து. கட்டுனவரும் சரியில்லை, புள்ளைகளும் சரியில்லை!” என அவர் கண்களில் கண்ணீர் வழிய துடைத்துக் கொண்டே இருக்கையில் அமர, ஹரி என்ன செய்வது எனத் தெரியாது ஸ்தம்பித்துப் போய் நின்றான்.
ஆதிரையைத் திரும்பிப் பார்த்தான். அழுகையை அடக்கிக்கொண்டு நிற்கிறாள் என அவள் முகத்தை வைத்தே அறிந்தான். ஹரியின் பரிதாப பார்வையில் தன்னையே கீழாக உணர்ந்தாள் ஆதிரை. என்னவோ இந்த சூழ்நிலையை மனம் வெறுத்தது.
“அண்ணி, நீங்க உள்ள வாங்க... வந்து உக்காருங்க. எதுவா இருந்தாலும் உள்ள வாங்க, பேசிக்கலாம்!” என அவள் கையைத் தொட முயன்றவனை கரத்தை நீட்டித் தடுத்தாள்.
“நான் உள்ள வர மாட்டேன் ஹரி. உங்க அண்ணன் வரட்டும்!” என்றவள் வரண்டாவில் நின்றாள். கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது. யாருமே இல்லாத போது கூட இத்தனை வலித்திருக்கவில்லை. இப்போது உறவுகள் என்று பெயருக்கு இருந்தும் கூட காயம்பட்டு வீட்டு வாசலில் அநாதை போல நிற்பதை எண்ணி இன்னும் அழுகை முட்டியது. வாணி முன்பு அழப் பிடிக்காது வாயிலில் மறைந்து கொண்டாள். நடந்த பிரச்சனையில் அபி பயந்து போயிருந்தான்.
“அம்மா... நம்ப ரெண்டு பேரும் அநாதையாம்மா... பாட்டி என்னை அடிக்கும் போது அனாதை நாயேன்னு சொல்லி அடிச்சுட்டாங்கம்மா!” என அவன் முழங்கையைக் காட்ட, அது வீங்கி சிவந்திருந்தது. அவன் தேம்பிக் கொண்டே கேட்டதில் இவள் அடக்க முயன்றும் கண்ணீர் பெருகிற்று.
“யார் சொன்னாலும் நீ அநாதை இல்லை டா. அம்மா இருக்கேன் உனக்கு. நான் சாகுறவரைக்கும் தனியாளா உன்னை நல்லா பார்த்துப்பேன் டா . உனக்கு நான் இருக்கேன். எனக்கு நீ இருக்க. நம்ப அநாதை இல்ல!” என்றவள் உருண்டு திரண்ட நீரை உதட்டைக் கடித்து உள்ளிழுத்தாள். தேவா வர நேரமெடுக்க, பக்கவாட்டிலிருந்த படியில் அமர்ந்தாள். அபி தாயின் மடியில் முகம் புதைத்தான்.
“அக்கா... ப்ளீஸ் கா, உள்ள வாங்க. நீங்க இங்க உக்கார்ந்திருக்கது ரொம்ப கஷ்டமா இருக்கு கா!” ஜனனி அழும் குரலில் அவளை அழைத்தாள். ஹரி என்ன செய்வது எனத் தெரியாது கையைப் பிசைந்துகொண்டு நின்றான்.
“இல்லை ஜனனி, இந்த வீட்ல எனக்கான இடம் என்னென்னு தெரிஞ்சுடுச்சு. தேவா வரட்டும், அவருக்குப் பொண்டாட்டி முக்கியம்னா என்கூட வருவார். இல்லை அம்மா முக்கியம்னா ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க எல்லாரும் நிம்மதியா இருங்க. என் புள்ளையை எனக்கு வளர்க்கத் தெரியும். நான் பார்த்துக்குறேன்!” என்றாள் விழியோரம் கசிந்த நீரை பெருவிரலால் துடைத்துக்கொண்டு.
“அண்ணி, என்ன பேச்சு இது? அம்மா... அம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அவங்க வேணும்னே பண்றாங்க!” ஹரி தாயின் மீதிருந்த கோபத்தை யார் மீது காண்பிக்க எனத் தெரியாது தவித்துப் போனான்.
“உங்க அண்ணன் எப்போ வருவார் ஹரி?” என அழுத்தமாய்க் கேட்டாள் இவள். அவன் பேசுவதை பொருட்படுத்தவில்லை.
“ஹம்ம்... இன்னும் டென் மினிட்ஸ்ல வந்துடுவான் அண்ணி!” என்றான் மூச்சை வெளிவிட்டு. ஆதிரை வாயிலையே வெறித்திருந்தாள்.
சில பல நிமிடங்களில் தேவாவின் மகிழுந்து உள்ளே வந்து நின்றது. அவன் வாகனச் சப்தம் கேட்டதும் உள்ளிருந்து ஓடி வந்த வாணி, “வா தேவா, உன் பொண்டாட்டி பெரிய மனுஷின்னு கூடப் பார்க்காம என்னைக் கை நீட்டி அடிக்க வர்றா டா. இந்த வீட்ல நான் இருக்க கூடாதுன்னு வெளிய தொரத்தி விட்றா டா!” என தேவா வந்ததும் நின்றிருந்த கண்ணீரை மீண்டும் உகுத்தார்.
அவன் பார்வை மனைவி மகனிடம் சென்றது. ஆதிரை செவ்வரியோடிய கண்களும் சிவந்த நாசியுமாய் எழுந்து நின்றாள். அவளும் அபியும் ஒரு ஓரமாய் நிராதரவாய் நின்றிருக்க, அதைப் பார்த்ததும் இவனுக்கு மனம் பிசைந்தது. அழுகையை அடக்கியதால் முகம் சிவந்து நின்றவளைப் பார்த்தவன் துடித்துப் போனான்.
“தேவா... என்னை இந்த வீட்ல இருக்க கூடாதுன்னு சொல்லிட்டா டா!” என வாணி அழுது கொண்டே மகனிடம் செல்ல, ஆதிரை அவன் முகத்தைதான் பார்த்திருந்தாள்.
“என்னாச்சு ஆதி?” எனக் கேட்டவன் நேரே மனைவியிடம் செல்ல, அந்த ஒரு வார்த்தையில் ஆதிரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் குபுகுபுவென கன்னத்தில் இறங்கியது. ஏனோ இத்தனை நேரம் அநாதையாய் நின்றிருந்த மனதிற்கு அந்த ஒரு வார்த்தையில் தைரியம் வரப் பெற்றது. உதட்டைக் கடித்து அழுகையை உள்ளிழுத்துக் கண்ணை சிமிட்டி அவனைப் பார்த்தாள்.
தேவா இருக்கிறான் அவளுக்கு என இந்நொடி மனம் ஆசுவாசம் அடைந்தது. பற்றுக் கோல் கிடைத்த நம்பிக்கையில் அவனுக்கு அருகே சென்று கையை இறுகப் பற்றினாள். அவனை அணைத்துக்கொண்டு அழ வேண்டும் என எண்ணம் தோன்றினாலும் சூழ்நிலை