- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
நெஞ்சம் – 53 
“என்னைக் கேட்கணும். என் பெர்மிஷன் இல்லாம ஏன் என் ஹேண்ட் பேக் எடுத்தீங்க?” எனக் காரமாய்க் கேட்டவள், அவன் கையிலிருந்த புகைபடத் தொகுப்பை வெடுக்கென பிடுங்கினாள். தேவா அவளுக்கு வெகு அருகே வந்து நின்ற போதும் ஆதிரை அதிரவில்லை. அவனை அலட்சியம் செய்தாள்.
“ஓஹோ... உன்னோட திங்க்ஸா ஆதி?” அவன் கேலியாய்க் கேட்க, “ஆமா...” என்றவள் கட்டிலிலிருந்த கைப்பையை எடுத்து அந்தப் புகைப்பட சட்டகத்தை அதில் வைத்து அலமாரியில் பத்திரப்படுத்தினாள்.
“ரைட்டு... உன்னோட திங்க்ஸ். பட் அதுல இருக்கது என் ஃபோட்டோவாச்சே டீ பொண்டாட்டி!” என்றவன் அவள் கையைப் பிடித்திழுத்தான்.
“கையை விடுங்க!” அவன் கேள்விக்குப் பதிலளிக்காது அவன் முகம் பார்க்கத் தயங்கி ஆதிரை தப்பிச் செல்ல முயன்றாள்.
“தப்பு பண்ணாதான் பதில் சொல்லாம ஓடணும் ஆதி. நீ எதுவும் தப்பு பண்ணீயா?” அவன் கேலியாய் கேட்டதும் ஆதிரை அவனை நிமிர்ந்து முறைத்தாள்.
“நான் எந்த தப்பும் பண்ணலை!” அவள் அழுத்தமாய்க் கூற,
“ரைட், அப்புறம் ஏன் எஸ்ஸாகுற?” எனக் கேலி இழையோட கேட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.
“ஹம்ம்...” என்றவன் தனக்குத் எதிரே இருந்த கண்ணாடியில் முகம் பார்த்து தாடையைத் தடவியவன், “அவ்வளோ நல்லாவா இருக்கு?” எனக் கேட்டான். ஆதிரை அவனைப் புரியாது பார்த்தாள்.
“இல்ல, சொத்தே எழுதி தர்ற அளவுக்கா என் சிரிப்பு நல்லா இருக்கு? அவ்வளோ வொர்த்தா டீ?” என்ன முயன்றும் தேவாவின் குரலிலிருந்த குறும்பை மறைக்க முடியவில்லை. ஆதிரையின் முகம் சிவக்க, அவனைப் பார்க்காது சுவரை வெறித்தாள்.
‘எல்லாத்தையும் படிச்சுட்டான்!’ இவள் மனம் சிணுங்கியது. உள்ளே வேறு ஏதேதோ கிறுக்கி வைத்திருந்தாள். கடைசி பக்கத்தையும் படித்திருப்பானோ என மனம் பதற்றப்பட்டது.
“சுவத்தையே பார்க்காம என் முகத்தையும் கொஞ்சம் பார்க்குறதுங்க பொண்டாட்டி! ஹம்ம்... புருஷன் வேலையைக் கரெக்டா பார்க்கலைன்னா பனிஷ்மெண்ட்னு போட்டிருதீங்களா... ஓஹோ... இப்படி பேசாம முகத்தை திருப்பிட்டு போறதுதான் உங்க பனிஷ்மெண்டா?” தேவா கேட்டதும், ஆதிரை அவனை முறைத்தாள்.
“என்ன... என்ன டீ முறைப்பு? போட்டோல என்னென்னவோ கிறுக்கி இருந்தீயே!” என உதட்டை வளைத்தவனை அவள் முறைத்துப் பார்த்தாள்.
“போட்டோவோட குடும்பம் நடத்துறதுக்கு எதுக்கு டீ என்னைக் கல்யாணம் பண்ண? பேசாம அதையே கல்யாணம் பண்ணி இருக்க வேண்டியது தானே?” மேலும் அவன் பேசும் முன்னே இடையிட்டாள் ஆதிரை.
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” சூடாய் கேட்டாள்.
“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” உதட்டோரம் நெளிந்த புன்னகையுடன் கேட்டவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள் ஆதிரை.
“எப்போ பார்த்தாலும் முறைச்சுட்டே இருக்காத டீ. கல்யாணத்துக்கு முன்னாடி தான் பாடாப்படுத்துன. இப்பவும் என்னை வச்சு செஞ்சுட்டு இருக்க டீ. என்னதான் உன் பிரச்சனை. வாயைத் தொறந்து சொல்லித் தொலையேன் டீ. பொண்ணுங்க விஷயத்துல அவ்வளோ பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை நான். ஒரு கல்யாணம் பண்ணவே எனக்கு முப்பத்து மூனு வயசாச்சு. அப்படி இருக்கப்போ உனக்கே என்னைப் பத்தி தெரிய வேணாமா? உன் புருஷன் ரிலேஷன்ஷிப் மெயிண்டெய்ன் பண்றதுல சரியான இடியட். இப்போ கூட நான் என்ன பண்ணேன்னு எனக்குத் தெரியலை. புருஷன்னு ஃபோட்டோல எழுதுனா மட்டும் போதாது டீ. சட்டையைப் பிடிச்சு ஏன் டா இப்படி பண்ணன்னு கேட்கணும்?” என்றான் ஆதங்கத்துடன். ஆதிரை அவன் பேசுவதை அமைதியாய் கேட்டாள். ஆனால் பதிலுரைக்கவில்லை.
“இப்போ இதை நான் சொன்னா கூட உனக்கு கோபம் வரும். சீரியஸா ஒரு பெர்த் டே விஷ் பண்ணாதது எல்லாம் இவ்வளோ பெரிய இஷ்ஷூவாகும்னு இப்பத்தான் எனக்குத் தெரியுது ஆதிரை. அது தான் உன் பிரச்சனைன்னா ஐ யம் ரியலி சாரி. இனிமே வருஷா வருஷம் மறக்காம விஷ் பண்ணிட்றேன் டீ. சண்டையை முடிச்சுக்கலாம். எனக்கு உன்னை இப்படி பார்க்க பிடிக்கலை. நீ என் கூடவே இருக்க ஆதி. பட் ஐ மிஸ் யூ. ஒரே ரூம்ல முகத்தை தூக்கிட்டு இருக்க வீ ஆர் நாட் ரூம் மேட்ஸ். சோ, கொஞ்சம் இறங்கி வர்றது தப்பில்லை ஆதி!” என்றான் ஆயாசத்துடன்.
“ப்ம்ச்... நீங்க எந்த தப்பும் பண்ணலைங்க. யூ ஆர் ரைட். ஒரு சின்ன விஷ் பண்ணாததுக்கு நான்தான் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன். நான்தான் சாரி கேட்கணும். உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும். என் பெர்த் டே ஞாபகம் வச்சு விஷ் பண்ணணும்னு அவசியம் என்ன இருக்கு. எனக்கு கோபம் எல்லாம் இல்லங்க!” என்றாள் அமைதியான குரலில். உதட்டோரம் சின்னதாய் அவள் முயன்று தருவித்த முறுவல் படர்ந்தது.
“ப்ம்ச்...” அவன் முறைக்க,
“அட நிஜமாங்க... நான்தான் லூசு... எனக்கு... ம்ப்ச் வேணாம் விடுங்க. பிரச்சனையை முடிச்சுக்கலாம்!” என்றாள் சம்பிரதாய புன்னகையுடன். தேவா அவளைத்தான் பார்த்தான். என்னவோ அவனுக்கு பழைய ஆதிரை வேண்டும் என மனம் ஏங்கிற்று.
எழுந்து வந்து மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். “கோபம் வந்தா திட்டு டீ. சண்டை போடு. உரிமையா எல்லாத்தையும் கேளு. உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு. பட் யாரோ மாதிரி பேசாத. எனக்கு ஹர்ட் ஆகுது. நீயும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்தாத ஆதி. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். நீ என்னை ரொம்ப ஏங்க வைக்கிற டீ!” என ஆற்றாமையுடன் அவள் தலையில் நாடியைப் பதித்தான். ஆதிரை அமைதியாய் நின்றாள்.
“வாயைத் தொறந்து பேசு ஆதி. நீ என்ன நினைக்கிறேன்னு நீயா வாயைத் தொறந்து சொல்லாத வரை என்னால கண்டு பிடிக்க முடியாது. எனக்கு கேர்ள்ஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது டீ. எனக்குப் பிடிச்ச, என்னைத் தெரிஞ்சுக்கிட்டே முதலும் கடைசியுமான பொண்ணு நீதான். எனக்குப் பொறுப்பா இருக்கத்தான் தெரியும் ஆதி. சின்ன வயசுல இருந்தே மூத்த பையன்னு ரெஸ்பான்சிபிலிட்டி, வொர்க்னு அது பின்னாடியே போய்ட்டேன். எனக்கு எப்படி கேர் பண்றதுன்னு தெரியாது ஆதி. என்னோட அன்பெல்லாம் அபிக்கு எந்தக் குறையும் வச்சிடக் கூடாதுன்ற வகையிலதான் இருக்கு. உன்னை நல்லா பார்த்துக்கணும்னு தான் இந்த மேரேஜ் பண்ணேன். பட் நான் எங்க மிஸ் பண்றேன்னு தெரியலை ஆதி. என்கிட்ட குறைகள் நிறையா இருக்கும். முன்ன பின்னே இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஆதி. பட் இப்படி பிஹேவ் பண்ணாத. அது நம்ப ரிலேஷன்ஷிப்பை உடைச்சுடும் ஆதி!” தேவா உணர்ந்து கூறவும், ஆதிரை கடந்த பத்து நிமிடத்தில் அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“அப்புறம் ஏன் மேரேஜ் முன்னாடி அவுட்டிங் கூட்டீட்டுப் போறேன்னு அக்கறையா நடந்துகிட்டீங்க? இப்படித்தான் நான்னு அப்பவே சொல்லி இருந்தா நான் உங்ககிட்டே எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணி இருக்க மாட்டேனே!” என்றாள் ஆற்றாமையான குரலில். தேவா பதிலளிக்காது மீண்டும் அவள் கையைப் பிடித்து அணைத்துக் கொள்ள முயல ஆதிரை தள்ளி நின்றாள்.
“உங்ககிட்டே ஒருநாள் நான் சொன்னேன் ஞாபகம் இருக்கா? நான் பெருசா யாரோடவும் எமோஷனலா அட்டாச் ஆக மாட்டேன்னு?” அவள் கேட்கவும், தேவா மெதுவாய் தலையை அசைத்தான். ஆனால் எப்போது கூறினாள், என்ன கூறினாள் என அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை. அவன் ஏதோ பேச வந்தான்.
“கிவ் மீ டூ மினிட்ஸ். நான் பேசி முடிச்சிட்றேன்ங்க...” என்றவள், “ஏன்னா யார்கிட்டேயாவது எமோஷனலா அட்டாச்சாகிட்டா சின்ன சின்ன உதாசீனத்தைக் கூட என்னால அக்செப்ட் பண்ண முடியாது. என் கேரக்டர் அப்படித்தான். இதுவே எனக்கு நீங்க பாஸா மட்டும் இருந்திருந்தா நான் இப்படியெல்லாம் பிஹேவ் பண்ணி இருக்க மாட்டேன். நமக்கு மேரேஜாவும் எங்க இருந்து இப்படிலாம் ஆசை வருதுன்னே தெரியலை!”
“ஒவ்வொரு வருஷமும் பெர்த் டே விஷ் பண்றதுக்குன்னு யாருமே என் கூட இருந்தது இல்லங்க. நான் மட்டுமே தனியா கொண்டாட்றதுக்குப் பேர் பெர்த் டேவான்னு நினைச்சு சிரிச்சுக் கூட இருக்கேன். அபி வந்தப்புறம் அவனும் நானும் ஊர் சுத்துவோம். என்னோட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் விஷ் என் பையன்கிட்டே இருந்து மட்டும்தான் வரும். மத்தபடி தர்ஷினி, கோமதிக்கான்னு அவங்களுக்கு கூட தெரியாது. நான் விஷ்ஷெல்லாம் பெருசா எக்ஸ்பெக்ட் பண்ண மாட்டேன்ங்க.”
“ஆனால் இந்த டைம் நீங்க கூட இருக்கவும் சின்னதா ஒரு ஆசை. ஒரே ஒரு விஷ் உங்ககிட்டே இருந்து வாங்கணும் நைட் வரை வெயிட் பண்ணேன். உங்களோட சேர்ந்து கோவிலுக்குப் போகணும்னு ஆசையா இருந்துச்சுன்னு கிளம்பி நின்னா வேலைக்குப் போன்னு தொரத்தி விட்டுட்டீங்க. என்னமோ என்னால அதையெல்லாம் அக்செப்ட் பண்ண முடியலை. கொஞ்ச நாள்னாலும் உங்களோட நான் எமோஷனலா அட்டாச்சாகிட்டேன். சோ, இந்த மாதிரி சின்னப் புள்ளைத் தனமா நடந்துக்குறேன்ங்க” என்றவள் குனிந்து விரல் நகத்திலிருந்த நகப்பூச்சைப் பார்த்தடியே தொடர்ந்தாள். என்னவோ அவன் முகம் பார்க்கும் போது சட்டென உணர்வுகள் கட்டவிழ்வதாய் ஓர் எண்ணம். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. பேசப் பேச கண் கலங்கின. சிமிட்டி அதை சரி செய்து கொண்டாள். தேவா என்ற மனிதன் முன் அவள் தடுமாறினாள். அரிதாரம் எல்லாம் மெதுவாய் உதிர்ந்தன.
“சரி, பெர்த் டே ஞாபகம் இல்ல. அதை ஞாபக வச்சுக்குற அளவுக்கு ஒன்னும் நான் பெருசா இல்லைதான். பட், மறந்துட்டேன்ன்னு சொல்லி ஒரு சாரியோட விஷ் பண்ணிருந்தீங்கன்னா, எனக்கு எதுவும் தெரிஞ்சு இருக்காது. நீ மெச்சூர்டான ஆளு, குழந்தை தனமா நடந்துக்க மாட்டேன்னு நீங்க சொல்லும் போது ஹர்ட் ஆகிடுச்சு.”
“உண்மையிலே நான் ஸ்ட்ராங்க் பெர்சன், மெச்சூர்ட் எல்லாம் இல்லங்க. என்னோட சிட்சுவேஷன் என்னை அப்படி மாத்திடுச்சு. வேற வழியே இல்லை, உன்னை நீதான் பார்த்துக்கணும்னு ஒரு சூழ்நிலை வந்ததா எல்லாரும் என்னை மாதிரிதானே இருப்பாங்க? இல்ல நான்தான் சின்ன விஷயத்தைப் பெருசாக்கி சைல்டிஷ்ஷா நடந்துக்குறேனா தேவா? நான்தான் தப்பா இருக்கேனா?” விழிகளை சிமிட்டி அணைபோட முயன்றாலும் சிவந்த நாசியும் சிமிட்டிய கண்களும் அவளது உள்ளத்தைக் காண்பித்துக் கொடுத்தன. இடறிய குரலை சரி செய்து அவனைப் பார்த்து முறுவலித்தாள். தேவாவிற்கு அந்த முகமும் அதிலிருந்த வேதனையும் பலமாய் தாக்கிற்று. பெண்கள் இத்தனை மெல்லிய உணர்வுகள் உடையவர்கள் என அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது. அவன் சின்னது என்றெண்ணி தட்டிவிட்ட விஷயத்தை மனைவி பெரிதாய் எண்ணுகிறாள். அவன் எதாவது பெரிதாய் எண்ணி எதிர்வினையாற்றினால் அவள் சர்வசாதாரணமாக தோளைக் குலுக்கிக் கொண்டு அதைக் கடக்கிறாள். ஒரு பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு யுகங்கள் தேவைப்படும் போல என எண்ணினான்.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை முரண்பாடுகள் என அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிலும் ஆதிரை என்ற பெண்ணுக்கு அவன் கொடுத்த வடிவமும் வரைமுறையும் வேறு. ஆனால் இப்போது அவள் வேடங்கள் எல்லாம் கலைந்து தன் மனைவியாக தன்னிடம் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிற சாதாரண பெண்ணாக தெரிந்தாள். திடமான பெண் என அவன் எண்ணியிருந்த ஆதிரை அல்ல இவள். இவள் முற்றிலும் அன்பிற்காக ஏங்கும் பெண் என இந்நொடி அவனுக்கு நன்று விளங்கிற்று.
இத்தனை நாட்கள் அவளாக தனிமையைத் தேடிச் செல்லவில்லை. அவளை அணைத்துக் கொண்ட தனிமைக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறாள் போல என்றெண்ணி பெருமூச்சு விட்டவனுக்குள்ளும் வருத்தம் படர்ந்தது.
“ப்ம்ச்... நீ தப்பு இல்ல ஆதி. நான் அதை வெறும் பெர்த் டே விஷ்ஷா பார்த்தேன். பட், நீ அதை உனக்கு கொடுக்குற இம்பார்டென்ஸா பார்த்திருக்க? அதுல எந்த தப்பும் இல்லைம்மா. நான்... நான் கொஞ்சம் எமோஷன்லெஸ். என்னால வொர்க்கையும் ரிலேஷன்ஷிப்பையும் பேலன்ஸ் பண்ண முடியலை ஆதி. இப்பதானே மேரேஜாகி இருக்கு. போகப் போக பழகிக்கிறேன்ம்மா. இப்போ சாரி ஃபார் எவ்ரிதிங்க்!” தேவா வருத்தக் குரலில் உரைத்தான்.
“பரவாயில்லங்க, என் மேலயும் தப்பி இருக்கு. நானும் சாரி!”
என்றாள் கண்களை எட்டாத புன்னகையுடன்.
“வாயைத் தொறந்து கேட்டிருக்கலாம்ல ஆதி. பொண்ணுங்க இவ்வளோ சென்சிடீவ்னு எனக்குத் தெரியாது டீ!” அவன் கூறவும், ஆதிரை உதட்டோரம் கசப்பான முறுவல் உதிர்ந்தது.
“எனக்கு யார்கிட்டேயும் எதையும் கேட்டுப் பழக்கம் இல்லங்க. கேட்குறதுக்கு கூட யாரும் இருந்ததும் இல்லையா, சோ எல்லாமே செல்ஃப் கேர்தான்!” என்றாள் இலகுவான குரலில். ஆனாலும் என்னவோ தாயிடம் குறைக் கூறி அவளிடமே தஞ்சம் புகும் குழந்தை போல மனம் கணவன் தோளில் சாய்ந்து கொள்ள உந்தியது. சட்டென உரிமை எடுக்க முயலாது அவனைப் பார்த்து உதட்டை விரித்துப் புன்னகைத்தாள். மிக மிக மெல்லியதாய் கண்களில் உவர் நீர் கசிந்தது.
“ப்ம்ச்... இப்போதான் நான் வந்துட்டேன்ல ஆதி. ஹண்ட்ரட் பெர்சன்ட் உன்னை நல்லா பார்த்துக்க முடியுமான்னு தெரியலை. பட் என்னால முடிஞ்ச அளவுக்கு உன்னை நல்லா பார்த்துப்பேன் ஆதி. நிஜமா சாரி, நான்... நான் இந்த மாதிரி ஆங்கிள்ல எல்லாம் யோசிக்கலை. ட்ரஸ்ட் மீ. இனிமே உன் விஷயம் எதையும் மிஸ் பண்ணாம இருக்க ட்ரை பண்றேன். நைண்டீஸ்ல பொறந்தால இப்படி இருக்கேன் போல. இனிமே தப்பு பண்ண மாட்டேன் டீ. என்னை நம்பி கிவ் மீ ஒன் மோர் சான்ஸ்!" முகத்தை சுருக்கி என்னை நம்பேன் என்ற பாவனையில் கூறியவனை ஆதுரமாய்ப் பார்த்தாள் ஆதிரை. இருந்த கொஞ்சமே கொஞ்சம் கோபமும் கணவனின் இத்தனை நேரப் பேச்சில் கரைந்து போயிருந்தது. வருத்தம் மட்டும் எஞ்சி நின்றது.
“உங்களை நம்பாம நான் இந்த மேரேஜ்க்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன் தேவா!” என்றாள் புன்னகையுடன். கண்களில் கண்ணீர் வடிந்து கன்னத்தை தொட்டது. ஆனாலும் உதட்டில் சிரிப்பு மலர்ந்தது. நீண்ட நாட்கள் கழித்தான அவளது தேவாவில் அவன் மனம் நிறைந்தது.
கழுத்தோடு கையைப் போட்டு பக்கவாட்டாய் மனைவியை அணைத்தவன், “ஐ மிஸ் யுவர் தேவா ஆதி!” என்றான் அடர்ந்தக் குரலில். அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் இப்போது புன்னகை பெரிதானது. அந்தக் குரலின் பின்னிருந்த உணர்வை சுகமாய் உணர்ந்தாள்.
என்னவோ இத்தனை நாட்கள் இருவருக்கும் இடையே இருந்த வேலி தகர்ந்ததை உணர்ந்தவளுக்கு மனம் ஆசுவாசமானது. கோபம் என்றாலும் கூட தேவாவை அவள் தேடினாள். சண்டையிடாமல் எப்போதும் போல பேசியிருந்தால் கூட மனம் அவன் அண்மைக்கு ஏங்கி இருக்காதோ என்னவோ? தூரம் அ
வர்களைப் பிரித்துப் போடுபவதற்கு பதில் இன்னும் இறுக்கி கட்டிப் போட்டது.