• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,205
Reaction score
3,520
Points
113
நெஞ்சம் – 51 💖

அந்த வாரம் முழுவதும் தேவாவும் ஆதிரையும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அவள் தன்னை உதாசீனம் செய்கிறாள் என்று கடுப்பான தேவா அவளாக வந்து பேசினால்தான் பேச வேண்டும் என்று தனக்குள்ளே தீர்க்கமான முடிவொன்றை எடுத்தான். அவர்கள் அளவில் இருவரும் தன்முனைப்பைத் தூக்கிக் பிடித்துக்கொண்டு உறவை நடு ஆற்றில் விட்டிருந்தனர். இருவரும் இறங்கி வரத் தயாராக இல்லை எனும் போது பிரச்சனையின் அடிநாதத்தை உணர்ந்து அதை தீர்த்து வைக்க நாதியற்றுப் போனது.

அந்த வார இறுதியை எட்டிவிட, ஆதிரை ஞாயிற்றுக்கிழமை எங்கேயும் செல்லக் கூடாது என போர்த்தி படுத்துக் கொண்டு நன்றாய் உறங்கினாள். தேவா காலையில் எழுந்து குளித்து வேலைக்கு கிளம்பியும் கூட மனைவி எழவில்லை என்றதும் அவளுக்கு உடல்நிலை சரியில்லையோ என தோன்றியது. கட்டிலில் அவளருகே அமர்ந்தவன் அவள் நெற்றி கன்னம் எனத் தொட்டுப் பார்க்க, ஆதிரை படக்கென கண்விழித்துவிட்டாள்.

என்னவோ மகனுடன் தனியாய் இருந்து பழக்கப்பட்டதால் எச்சரிக்கை உணர்வு எப்போதும் அவளை விழிப்புடன் வைத்திருக்கும். தன்னருகே அமர்ந்திருந்தவனை என்னவென்பதாய் பார்த்துவிட்டு அவள் எழுந்து அமர, “இல்ல, ஃபீவர் எதுவும் இருக்குமோன்னு பார்த்தேன்!” என முணுமுணுத்தவாறே அவன் அகன்றான்.

‘மானம் கெட்ட மனம். பேச வேண்டாம் என்று உறுதி எடுத்தாலும் அவளிடம் முதல் வேலையாய் சென்று பேசி வைக்கிறாய்!’ என தன்னையே திட்டிக் கொண்டு உண்ண அமர்ந்தான் தேவா. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் புதிதாய் ஒரு பெண்மணி சமையல் மற்றும் வீட்டு வேலைக்கென்று வந்திருந்தார். அவர் காலைக்கும் மதியத்திற்கும்‌ சமைத்துவிட்டு வீட்டு வேலையையும் முடித்துக் கொண்டு பன்னிரெண்டு மணியளவில் கிளம்பி விடுவார்.

இரவு உணவை வீட்டில் யாரேனும் ஒருவர் மாற்றி ஒருவர் சமைத்துக் கொள்ளலாம் என்றுவிட்டனர். இரவிற்கு அந்தப் பெண்மணி வர முடியாது என்றிருந்தார். ஏற்கனவே அவர் வேறு வீட்டில் இரவு உணவை சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபடியால் இங்கே வர முடியவில்லை.

தாயின் கை மணத்தில் ருசியாய் சாப்பிட்டவனுக்கு சமையல்காரப் பெண்மணியின் கைமனம் உவப்பாய் இல்லை. ஆதிரை கூட நன்றாய் சமைத்தாள். ஆனால் இவர் பரவாயில்லை என்ற ரீதியில் சமைத்து வைத்தார்.

வீட்டில் சண்டை வந்து அமைதியற்று இருப்பதற்கு இந்த உணவே மேல் என நினைத்து அனைவரும் உண்டனர். ஆதிரை சிறுவர்களுக்கு மட்டும் காலையில் அவர்களுக்கு பிடித்தது போல எதாவது எளிமையாய் செய்து கொடுத்தாள். அனைவரும் சாப்பிடும் மசாலா நிறைந்த உணவு அவர்களது விருப்ப பட்டியலின் விளிம்பில் கேட்பாரற்று கிடந்ததே அதற்கு முதற் காரணம்.

ஆதிரையின் உறக்கம் முற்றிலும் கலைந்திருந்தது. நேரம் ஒன்பதை தாண்டிவிட, இதற்கு மேலும் தூங்கினால் வாணி எதாவது ஜாடையாய் பேசுவார் எனத் தோன்ற, எரிச்சலானது. அவள் மட்டும் தனியாய் இருக்கும் போது சுதந்திரமாய் இருந்த உணர்வு. இங்கே அனைவருடனும் ஒன்றாய் வாழும் போது ஒரு சில சுதந்திரங்களை விட்டுக் கொடுக்க வேண்டியதாய் இருக்கிறதே என்று எண்ணியவாறு முகம் கழுவி வந்தவள், மகனைத் துழாவினாள்.

ஜானுவின் அறையில்தான் ராகினியோடு அமர்ந்து அப்பத்தை தேங்காய் பாலோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அபினவ். இவள் சின்ன சிரிப்புடன் அவளின் அறைக்குள் நுழைந்தாள்.

“வாங்க கா, நல்ல தூக்கமா?” ஜானு கேட்க, ஆதிரை ஆமாமென தலையை அசைத்து கட்டிலில் அமர்ந்தாள். பொதுவாய் பேச்சு சென்றது.

“என்ன ப்ளான் கா இன்னைக்கு?” சின்னவள் கேட்க, “பெருசா எந்த ப்ளானும் இல்ல ஜானு. லஞ்சை முடிச்சதும் பசங்களைக் ஸ்விம்மிங் க்ளாஸ் கூட்டீட்டுப் போகணும். அது முடிஞ்சதும் கொஞ்சம் ஷாப்பிங், அவ்ளோதான்!” என்றாள். ஜனனி தலையை அசைத்தாள்.

“ஒன்பது மாசம் முடிஞ்சு ஒன் வீக்காகிடுச்சா ஜானு?” என்ற ஆதிரை மென்மையாய் அவள் வயிற்றைத் தடவினாள்.

“ஆமாக்கா... இன்னும் டூ த்ரீ வீக்ஸ்தான். அப்புறம் நான் ரொம்ப பிசியாகிடுவேன். புள்ளை வளர்க்குறதுக்கு பயந்தே ரெண்டாவது பேபி வேணாம்னு நினைச்சேன். பட், ராகினி தனியாளா போய்டக் கூடாதுன்னு செகண்ட் பேபி ஓகே பண்ணோம். லாஸ்ட் டைம் வளைகாப்பு முடிஞ்சு அம்மா வீட்ல இருந்தேன். இந்த டைம் அவங்க சிம்பிளா வளைகாப்பு போட்டு கூட்டீட்டுப் போறேன்னு சொன்னாங்க. நான்தான் போகலை, டெலிவரிக்குப் போய்க்கலாம் விட்டுட்டேன் கா!” என்றவள் நகர்ந்து அமர்ந்து காலை வசதியாய் நீட்டினாள்.

“ஏன் ஜானு போகலை?” எனக் கேட்ட ஆதிரை அவள் காலுக்கு அணைவாக ஒரு தலையணையை வைத்தாள்.

“ஹம்ம்...‌போக பிடிக்கலை கா. அம்மா அப்பாவோட இருக்க ஆசைதான். பட், அந்த வீடு இப்போ நான் இருந்த மாதிரி இல்ல. என் அண்ணி வந்தப் பிறகு அவங்க வீடா மாறிடுச்சு. அதனாலே அங்க போகவே பிடிக்காது!” என்றாள் பெருமூச்சுடன்.

“அண்ணன் இருக்காங்களா உங்களுக்கு?” இவள் சின்னதாய் ஆச்சரியப்பட்டாள். ஜானு அவள் தமையனைப் பற்றி பெரிதாய் எதுவும் கூறியிருக்கவில்லை.

“ஆமா கா... அவன் மோஸ்ட்லி என் கூடவே இருந்தது இல்ல. எனக்கும் அவனுக்கும் டென் இயர்ஸ் கேப். படிச்சு முடிச்சதும் அப்ராட் போய்ட்டு அங்கே வேலை பார்த்தான். கல்யாணம் முடிஞ்சு புள்ளை குட்டின்னு அங்கதான் இருந்தான். இப்போ இங்க வந்து செட்டிலாகிட்டான். முன்னலாம் பாசமாதான் இருந்தான். எப்போ அவனுக்கு கல்யாணமாச்சோ, அப்பவே ஒரு டிஸ்டன்ஸ் வந்துடுச்சு. ஹம்ம்... ஹாய், ஹலோவோட நிறுத்திப்பேன். அண்ணிக்கு நான் அங்க வரது பிடிக்காது!” என்றவள்,

“எல்லாத்துக்கும் மேல என்னால என் புருஷனை விட்டுட்டு இருக்க முடியாது கா. ஹரியும் ராகினியும் என் கூடவே இருக்கணும். இதான் என் வீடு, என் புருஷன் புள்ளை இருக்க வீடுன்னு பிக்ஸாகிடுச்சு. வெளியே கட்டிக் குடுத்துப் போயிருந்தா எப்படியோ, பட் இது சொந்த மாமா வீடுதானே. பெருசா டிப்ரெண்ட்ஸ் தெரியலை. ஹரியோட சண்டை போடாம என் நாளே போகாது கா. அடிச்சுக்கிட்டு பிடிச்சுக்கிட்டு இருந்தாலுமே கூட என் புருஷனோட இருந்தாதான் எனக்கு நிம்மதியே!” என்றாள் சிரிப்புடன். ஆதிரை முறுவலுடன் அவளைப் பார்த்தாள்.

இவளுக்குமே தெரியும். இங்கு வந்ததிலிருந்து ஜனனி ஹரியை மிரட்டுவதை கண்டும் காணாமலும் கடந்திருக்கிறாள். அவன் பொய்யாகவேணும் மனைவியிடம் அடங்கி செல்வதையும் கண்டிருக்கிறாள். சின்னதாய் ஒரு பொறாமை அவர்களைக் கண்டு இவளுக்குள்ளும் துளிர்விட்டிருந்தது.

“லவ் மேரேஜ்தானே உங்களோடது ஜானு?” ஆதிரை கேட்க, “ஹாஹா... ஆமாகா. லவ் கம் அரேஞ்ச்ட் தான். என்னைத் தொரத்தி தொரத்தி லவ் பண்ணித்தான் இவங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணான்!” என ராகினியைக் கைகாட்டி அவள் குறும்பாய் உரைக்க, ஆதிரைக்கும் உதட்டில் சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது.

“சரி, என்னை விடுங்க. நீங்க சொல்லுங்க. எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு கா. உர்ருன்னு இருக்க மாமா எப்படிகா உங்ககிட்டே ப்ரபோஸ் பண்ணாரு? ரொமான்டிகா பண்ணாரா? பொக்கே குடுத்தாரா? டின்னர் கூட்டீட்டுப் போய் சர்ப்ரைஸ் கொடுத்தாரா? என்னதான் பண்ணாருன்னு சொல்லுங்க!” வெகு ஆர்வத்துடன் அவள் கேட்டாள். ஆதிரை சங்கடத்துடன் புன்னகைத்தாள்.

“ம்ஹூம்... நீங்க இன்னைக்கு எஸ்கேப் ஆக முடியாது. சொல்லியே ஆகணும்!” ஜனனி ஆதிரையின் கையைப் பிடித்துக்கொண்டு உரிமையாய்க் கேட்க, இவளால் மறுக்க முடியவில்லை.

“அன்னைக்கு ரொம்ப மழை பெய்ஞ்சது ஜானு!” இவள் தொடங்க, “வாவ்! மாமா செம்ம ரொமான்டிக்தான் போல. ரெயின்ல எங்க கூட்டீட்டுப் போனாரு? ரோஸ் பொக்கே ஆர் வேற என்ன குடுத்தாரு?” என முன்னே சற்று தள்ளியமர்ந்தாள்.

“உங்க மாமா எனக்கு லிஃப்ட் குடுத்தாரு!” ஆதிரை உதட்டோரம் வழிந்த சிரிப்போடு கூற, இவள் விழித்தாள்.

“லிஃப்டா?” ஜானு புரியாது பார்க்க, “ஆமா... என் ஸ்கூட்டீ ரிப்பேர். சோ, லிஃப்ட் குடுத்து வீடு வர இறக்கி விட்டவரு வாழ்க்கை ஃபுல்லா லிஃப்ட் குடுக்க நான் ரெடின்னு சொல்லி கேட்டாரு!” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில். ஜனனியின் முகம் அஷ்டக் கோணலானது.

“ஐயோ! பொய்... நீங்க என்கிட்ட பொய் சொல்றீங்க. இவ்வளோ பழைய டயலாக் எல்லாம் மாமா சொல்லி இருக்க மாட்டாரு!” அவள் முகத்தைக் கோணி சிணுங்கினாள்.

“நீங்க நம்பலைன்னா உங்க இஷ்டம் ஜானு. அன்னைக்கு இதான் நடந்துச்சு!” என்ற ஆதிரை சுருக்கமாய் அன்றைய நிகழ்வை விளக்கினாள்.

“ஹக்கும்... தேவா மாமாகிட்டே போய் ரொமான்டிக் சீன் எதிர்பார்த்தேன் இல்ல, அது என் தப்பு.‌ இவ்வளோ ஓல்டா இருக்காரேக்கா மாமா? பாவம் நீங்க. இவர் சரியான நைன்டீஸ் கிட்ஸ், மோசம்!” என அவள் மனம் பொறுக்காமல் கூற, ஆதிரை சிரித்துவிட்டாள்.

“அவர் வே ஆஃப் அப்ரோச்சிங் வேணா பழசா இருக்கலாம் ஜானு. பட் அவர் என் விஷயத்துல ரொம்ப உண்மையா இருந்தார். சச் அ சின்சியர் பெர்சன். சண்டே அவுடிங் போகலாம்னு மார்னிங் ஆறேழு மணிக்கெல்லாம் வீட்டுக் கதவை தட்டுவார். முன்னலாம் எங்கேயும் போனா நானும் அபியும் தனியா இருக்கோம்னு ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன் ஜானு. பட் தேவா கூட போனப்போ அவர் எல்லாத்தையும் பார்த்துப்பார்னு ஒரு எண்ணம் தானாவே வந்துடுச்சு. கூடவே ஒருத்தவங்க இருந்தா இவ்வளோ சேஃபா ஃபீல் வருமான்னு உங்க மாமா கூட இருக்கும்போது தான் எனக்கே தெரிஞ்சது.
அவருக்கு லவ்வை எக்ஸ்ப்ரஸ் பண்ணத் தெரியாம இருக்கலாம். ஆனால் ரொம்ப பொறுப்பானவர்...”

“என்ன கொஞ்சம் முசுடு. ரெண்டு பேரையும் எங்க கூட்டீட்டுப் போனாலும் நல்லா பத்திரமா பார்த்துப்பாரு. இவருக்கெல்லாம் சிரிக்க வருமான்னு யோசிச்சுருக்கேன் நான். பட், இந்த மனுஷனோட இன்னொரு முகம் எனக்கு மட்டும்தான் தெரியும். ஹி இஸ் நாட் தட் மச் ரொமான்டிக். பட் மோர் ரெஸ்பான்சிபிள் அண்ட் கேரிங்!” ஆதிரை சின்ன முறுவலுடன் தேவாவைப் பற்றிக் கூறினாள்.

“ஓஹோ... புருஷனை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டீங்களோ?” உதட்டை வளைத்துக் கேலியாய் கேட்டாள் ஜானு.

“பின்ன இல்லையா? என் புருஷனாச்சே! நான்தான் வேணும்னு என் பின்னாடியே வந்து கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணம் பண்ணவர். அப்படி இருக்கப்போ எப்படி விட்டுக் குடுக்க முடியும். எல்லாமே ஓகேதான். பட் கொஞ்சம் முசுடு, உம்முனா முஞ்சி. ஒரு சின்ன தப்பு பண்ணா கூட தாம் தூம்னு குதிக்கிறது. மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுறதுன்னு சம்டைம்ஸ் இர்ரிடேட் பண்ணுவாரு. இதெல்லாம் அவரோட‌ மைனஸ். பியாண்ட் தட் ஆல், எனக்கு உங்க மாமாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும்!” என்றாள் சிரிப்புடன்.

“ஏனாம் கா? இவ்வளோ சிடுசிடுன்னு இருக்காரே. வேணாம்னு ரிஜெக்ட் பண்ணி இருக்காலாமே கா!” அவள் குறும்புடன் கேட்டாள்.

“சே... பாவம் என்‌‌ புருஷன்.
எவ்வளோ சிடுசிடுன்னு இருந்தாலுமே அவருக்கு நான் சோ சொல்லும் போது முழு மனசா சொல்லி இருக்க மாட்டேன்!” என்றவள், “கொஞ்ச செண்டியா இருக்கும் நான் அடுத்துப் பேசுறது. உங்களுக்கு ஓகேவா?” எனத் தயங்கி கேட்டாள்.

“ப்ம்ச்... இதென்னகா கேள்வி, நமக்குள்ள என்ன? நீங்க என்ன வேணா பேசலாம். ஏன் அத்தையைக் கூட புறணி பேசலாம்!” கிசுகிசுப்பாக ஜானு கூற, ஆதிரை சிரித்துவிட்டிருந்தாள்.

“சரி, சரி. பேச்சைக் கண்டினியூ பண்ணுங்க!” சின்னவள் ஊக்க, இவள் தொடர்ந்தாள்.

“ஹம்ம்... நோ சொல்லும்போது கஷ்டமாதான் இருந்துச்சு ஜானு. முதல்ல நான் வேணாம்னுதான் சொன்னேன். இதெல்லாம் ஒத்து வராதுன்னு நினைச்சேன். உங்க வீட்ல அபியோட என்னை அக்செப்ட் பண்ண மாட்டாங்க. எதுக்கு தேவையில்லாத ப்ராப்ளம்னு எத்தனையோ தடவை சொன்னப்ப கூட, விக்ரமாதித்தனோட வேதாளம் மாதிரி மறுபடியும் மறுபடியும் வந்து என் முன்னாடி நின்னாரு...”

“நான் முதல்ல அவர் சும்மா விளையாட்டுக்கு சொல்றார்னுதான் நினைச்சேன். உங்க சிடுமூஞ்சி மாமா என்கிட்ட இப்படிலாம் பேசுவார்னு கனவுல கூட நினைச்சது இல்ல நான். அப்படி இருக்கப்போ இது ப்ராங்கோன்னு கூட யோசிச்சேன். பட், இவர் விடலை. ரொம்ப சீரியஸா இந்த ரிலேஷன்ஷிப்பை ஸ்டார்ட் பண்ணணும்னு நினைச்சாரு!” என்றவள் ஜனனி அருகே தானும் சாய்ந்தமர்ந்து ஒரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு தொடர்ந்தாள். உதட்டோரம் தேவாவை நினைத்ததும் சின்ன புன்னகை ஒட்டிக் கொண்டது.

“வேணாம்னு சொல்லியும் வந்துட்டே இருக்கார்னு முதல்ல ஒரு எரிச்சல். அப்புறம் இந்த மனுஷனுக்கு என் மேல அப்படியென்ன ஒரு இன்ட்ரெஸ்ட்னு தெரிஞ்சுக்குறதுக்காக ஆர்வமா அவரை வாட்ச் பண்ணேன்...”

“அவர் எனக்காகன்னு பார்த்து பார்த்து செய்யும் போது ரொம்ப பிடிச்சுப் போச்சு ஜானு. யூ க்நோ, என் அம்மா அப்பா என்னோட சின்ன வயசுலயே வேற வேற லைஃபை பார்த்துட்டுப் போய்ட்டாங்க. நான் தனியாதான் வளர்ந்தேன். எனக்காகன்னு என்னைக் கேர் பண்ணண்னு தனியா யாரும் இல்லை. சோ, எல்லாமே செல்ஃப் கேர்தான். அப்படி இருக்கப்போ ஒரு மனுஷன் வந்து வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல அன்பைக் கொட்டுனா எப்படி இருக்கும்னு நீங்களே சொல்லுங்க?” எனக் கேட்டாள் ஆதிரை. அவள் முகம் கணவன் நினைவில் கனிந்து போயிருந்தது.

“ஓஹோ...” ஜானு இழுக்க, இவளுக்கு சின்னதாய் வெட்கம் வந்தது.

“அதான் ஓகே சொன்னேன். என்னை மட்டுமே பிடிச்சுப் போய் வந்தாரு உங்க மாமா. அவரோட எக்ஸ்பெக்டேஷன் நான் மட்டும்தான். என்கிட்ட நிறைய நெகட்டீவ்ஸ் இருக்கு. கொஞ்சம் ஈகோ, அதிகமா செல்ஃப் ரெஸ்பெக்ட், அவர் அளவுக்கு இல்லைனாலும் கோபப்படுவேன். சண்டையும் போட்டிருக்கேன். அப்போலாம் அவர்தான் இறங்கி வந்திருக்காரு. நான் எமோஷனல் டைப் கிடையாது ஜானு. பட், அவர் விஷயத்துல கொஞ்சம் எமோஷனலா மாறிட்டேன். ஏன்னுத் தெரியலை. சின்ன விஷயத்துக்கு எல்லாம் சண்டை போட்றேன்!” என்றாள் மெல்லிய குரலில்.

“ப்ம்ச்... அதெல்லாம் மஞ்சக் கயிறு மேஜிக்கா இருக்கும் கா. ஏன் நான் கூட ஹரியோட எத்தனை தடவை சண்டை போட்டிருக்கேன். ஹைலைட்டான ஃபைட் ஒன்னு மேரேஜ்க்கு முன்னாடி. லெட்ஸ் ப்ரேக்கப்னு இரண்டு பேரும் சண்டை போட்டு எல்லாத்துலயும் ப்ளாக் பண்ணிட்டேன். ஏன் மெயில்ல கூட அவனைப் ப்ளாக் பண்ணி விட்டுட்டேன்...”

“ஒன் வீக்தான் என்னால அவனோட பேசாம இருக்க முடியலை. ஆனாலும் வீம்புக்கு அமைதியா இருந்தேன். கடைசியாக கால்ல விழுந்துட்டான். அப்புறம் நானும் சாரி கேட்டு பேட்ச் அப்-ஆகி இனிமே கல்யாணம் பண்ணிட்டு எவ்வளோ சண்டை வேணாலும் போடுவோம்னு டிசைட் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இப்பவும் பகல் முழுக்க சண்டைதான்...”

“பட், நைட்ல கண்ணுமணி, செல்லம், தங்கம்னு காலை அமுக்கிவிடுவான், கையைப் பிடிச்சு விடுவான்... ஹக்கும்... அப்படியே சமாதானமாகி லைஃபை லீட் பண்ணி ரெண்டாவது புள்ளையும் பெக்கப் போறேன் பாருங்க!” அவள் கூறிவிட்டு அசட்டுச் சிரிப்பை உதிர்க்க, இவள் முகத்திலும் புன்னகை வந்தது.

“ஆனாலும் எங்க மாமாவை நீங்க ரொம்ப அலைய விட்டிருக்கீங்க கா? அதுல சந்தோஷமா உங்களுக்கு?” ஜானு மூத்தவளை முறைத்தாள்.

ஆதிரை தலையை ஒருவாறு நான்கு புறமும் ஆட்டிச் சிரித்தவள், “எஃபெர்ட்ஸ் மேட்டர் ஜானு. எனக்காக அவர் எவ்வளோ தூரம் இறங்கி வர்றார்னு தெரிஞ்சுக்கணும் இல்ல. உங்க மாமா என் விஷயத்துல எவ்வளோ சீரியஸா இருக்கார்னு தெரிஞ்சுக்கத்தான் அப்படி பண்ணேன். ஜஸ்ட் லைக் தட்னு ஒரு ரிலேஷன்ஷிப்ல வந்துட முடியுமா என்ன?” என இவள் கேட்டாள்.

“அதுவும் சரிதான்... ஆமா, அப்போ மாமாவுக்காக நீங்க என்ன எஃபெர்ட் போட்டீங்க?” சின்னவள் மென்முறைப்புடன் கேட்க, “ஹக்கும்... உங்க மாமாவைக் கல்யாணம் பண்ணி உங்களுக்கு மத்தில வாழ்றதே பெரிய எஃபெர்ட்தான் ஜானு!” என ஆதிரை சிரிக்காமல் கூற, இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து பக்கென சிரித்துவிட்டிருந்தனர்.

“சண்டே கூட என்னைக் கொஞ்ச நேரம் ஃப்ரியா விடாம மண்டே எக்ஸாம் வச்சு படிக்க விட்றானுங்க. நீங்க மட்டும் ஜாலியா சிரிச்சு அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்க!” பிரதன்யா சிணுங்கிக் கொண்டே புத்தகத்துடன் உள்ளே வந்தாள்.

“ஏன்டி... நாங்களாம் உன் வயசுல கஷ்டப்பட்டு படிச்சிட்டு தாண்டித்தான் வந்து இருக்கோம்!” ஜானு சின்னவள் கன்னத்தைக் கிள்ளினாள்.

“தாண்டி வந்தேன்னு சொல்லுண்ணி, ஒத்துக்கிறேன். பட் படிச்சேன்னு சொல்லாத. நீயும் என் அண்ணனும் லவ் பண்ணத்தானே காலேஜ் போனீங்க!” சின்னவள் சிலிர்க்க,

“அதை உன் அண்ணனைக் கேளு டி. படிக்கிற புள்ளையை லவ் அது இதுன்னு சொல்லி மனசைக் கெடுத்தது அவன்தான்!” என்றாள் ஜானு.
பிரதன்யா பதிலுக்குப் பேச, ஆதிரை சிரிப்புடன் அவர்களைப் பார்த்தாள். பேச்சு மும்மரத்தில் அருகிலிருந்த சிறுவர்களை கவனித்திருக்கவில்லை.

‘அபியும் ராகியும் எங்கே?’ என இவள் யோசனையுடன் தங்களுடைய அறைக்குள் வர, இவளது அலைபேசியில் இருவரும் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.

இவள் வந்து அவர்களை முறைக்க, “பெரிம்மா, அபிதான் ஃபோன் குடுத்தான்!” என சின்னவள் பயத்துடன் கட்டிலிலிருந்து இறங்கி நின்றாள்.

“ம்மா... டென்மனிட்ஸ்தான் மா கேம் விளையாண்டோம்!” அபி உம்மென கூற, “போதும் ரெண்டு பேரும் கேம் விளையாடுனது. போங்க, போய் குளிங்க, ஸ்விம்மிங் க்ளாஸ் கிளம்பணும்!” என அவர்களை அனுப்பியவள், தானும் கிளம்பினாள். பேச்சு சுவாரஸ்யத்தில் காலை உணவை தவிர்த்திருந்தாள். மூவரும் உண்டு முடித்து நீச்சல் வகுப்பிற்கு கிளம்பினர்.

ஜானு ஒருமுறை தான் ஒலிப் பதிவு செய்தது சரியாய் பதிவாகி இருக்கிறதா எனப் பார்த்தாள். ஆதிரை பேசிய அனைத்தும் அழகாய் அதில் பதிவாகி இருந்தது. ‘நான் எதுக்கு ரெக்கார்ட் பண்ணா, இது எதுக்கோ யூஸ் ஆகுது. பட் நைஸ் இல்ல!’ என யோசித்த ஜனனிக்கு சந்தோஷமாய் இருந்தது.

அவள் ஆதிரை பேசும்போது அலைபேசியில் அனைத்தையும் பதிவு செய்துவிட்டாள். உண்மையில் பிரதன்யாவும் அவளும் அமர்ந்து பேசும்போது நிறைய நாட்கள் தேவா எப்படி ஆதிரையிடம் தன் பிடித்தத்தைப் பகிர்ந்து இருப்பான் எனத் தெரிந்து கொள்வதை பற்றி ஆர்வமாய் பேசுவார்கள். இன்றைக்கு ஆதிரை நல்ல மனநிலையில் இருக்கவும் நடந்ததை அவளாக கூறினாள்.

பிரதன்யாவிடம் தான் கூறுவதைவிட ஆதிரை பேசியதைக் கேட்டால் அவளுக்கும் நடந்த அனைத்தும் தெரியுமென எண்ணி இவள் அதை ஒலி பதிவு செய்தாள். ஆனால் இதை பிரதன்யாவிடம் பகிர்வதைக் காட்டிலும் தேவாவிற்கு அனுப்பவதே அவளுக்கு முதன்மைக் கடமையாகப்பட்டது. ஹரி பேசும்போது தேவாவிற்கும் ஆதிரைக்கும் இடையே ஏதோ உட்பூசல் எனக் கூறியிருந்தான்.

இப்போது ஆதிரை பேசியதை வைத்துப் பார்க்கும்போது சின்னதாய் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம் என தோன்றிற்று. அதை சரி செய்யலாம் என எண்ணி அவனுக்கு அந்தப் பதிவை அனுப்பி வைத்தாள். இரண்டு மணி நேரமாக தேவா அப்போது பார்ப்பான், இப்போது பார்ப்பான் என காத்திருந்தவள், அவன் இணையத்தை இணைக்கவே இல்லை என்பதை ஒற்றை குறியிடு காண்பித்துக் கொடுத்தது.

அவளுக்குப் பொறுமை குறைய, தேவாவிற்கு அழைத்துவிட்டாள். அப்போதுதான் அவன் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான். இவள் அழைக்கவும் அதை மகிழுந்தின் வானொலியிலிருந்த ஒலிப்பெருக்கியோடு இணைத்தவன், “சொல்லு ஜானு!” என்றான்.

“மாமா, என்ன பண்றீங்க? ரொம்ப பிஸியா?” எனக் கேட்டாள் அவள்.

“இல்லமா, எதாவது வாங்கிட்டு வரணுமா? வீட்டுக்குத்தான் கிளம்புறேன்!” என்றான்.

“அதெல்லாம் இல்ல, வாட்சப் வாங்க‌. நான் உங்களுக்கு ஒரு வாய்ஸ் நோட் அனுப்பி இருக்கேன். அதைக் கேளுங்க!” என்றவள் அழைப்பைத் துண்டிக்க, இவன் என்னவாய் இருக்குமென யோசனையுடன் அந்த செய்தியை ஒலிக்கவிட்டான்.

‘அன்னைக்கு ரொம்ப மழை பெய்ஞ்சது ஜானு!’ என்ற குரல் மகிழுந்து முழுவதும் ஒலித்தது. இவனுக்கு அது மனைவியின் குரல் எனப் புரிய உன்னிப்பாய்க் கேட்டான்.

‘எல்லாத்தையும் அவர் பார்த்துப்பார்!’ ஆதிரை பேசியதை வெகு அமைதியாய் கேட்டு அதன் சாராம்சத்தை உள்வாங்கி உணர்ந்தான்.

இவ்வளவு நேரம் வேலை பளு அது இதுவென மூளை சூடாகிப் போயிருந்தவனுக்கு மனைவியின் குரல் ஜில்லென உள்ளே இறங்கி சூட்டைத் தணித்தது. கடினமாய் இருந்த முகமும் மனமும் அவள் குரலில் மிக மிக மிருதுவாய் மாறியதை உணர்ந்தவனின் உடல் தளர்ந்தது.

மனைவியின் வார்த்தைகளுக்கு செவியை ஈன்றான். உச்சி வெயிலில் நின்றிருந்தவனின் தலையில் யாரோ பனிக்கடியை வைத்தது போலொரு ஆசுவாசம் பிறந்தது.

‘என் புருஷனாச்சே! அதெல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டேன்!’ அவள் வார்த்தை இவனுக்குப் புன்னகை முளைத்தது.

‘வார்த்தைக்கு நாலு புருஷன் போடுவா. ஆனால் பேசாம முகத்தை தூக்கி வச்சுப்பா!’ ஆதிரையின் நினைவில் இவனுக்கு முகம் மென்மையானது. அவள் முறைப்பு, சிரிப்பு, கோபம், அலட்சியம் எல்லாம் பாவனையாய் கண்முன்னே வந்து போனது. தலையை உலுக்கிக் கொண்டான். அவள் பேச்சு முழுவதையும் சிரிப்பும் முறைப்புமாய்க் கேட்டு முடித்தான்.

‘நல்லா பேசுவா! எஃபெர்ட்ஸ் மேட்டர். நாட் லைக் தட், நான் போட்ற எஃபெர்ட்ஸ் மட்டும்தான் அவளுக்கு மேட்டர். அவ எந்த எஃபெர்டும் போட மாட்டா. ஜானுகிட்டே வாய் கிழிய பேசுறவ என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டா. ஜிப் போட்டு வாயை மூடிக்க வேண்டியது!’ கோபமும் சிரிப்பும் கலந்தே வந்தது அவனுக்கு.

ஒரு வாரமாய் அவன் இழுத்துப் பிடித்த தன்முனைப்பும் கோபமும் மொத்தமாய் நீர்த்துப் போயின. என்னவோ ஆதிரை பேச பேச இவனுக்குள்ளே முணுமுணுவென்றிருந்த அவள் மீதான அதிருப்தி விலகி ஓடிப் போனது. கைகளால் தாளம் தட்டிக் கொண்டே வாகனத்தை இயக்கினான். மனம் ஒருமாதிரி நிறைவாய் உணர்ந்தது.

தான் மட்டுமே அவள் வேண்டுமென உறவை இழுத்துப் பிடிக்கிறோமோ என அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்ததில் ஆசுவாசமாக உணர்ந்தான். இதையெல்லாம் ஆதிரை அவன் முகத்திற்கு முன்னால் கூறியிருக்க வேண்டும் என்ன செய்திருப்பேன்? இறுக்கி அணைத்து முத்தமிட்டிருப்பேன் என எண்ணியதும் மனைவி கண்முன்னே வந்தாள்.

‘நல்லா இருக்கா சேரி?’ என சிலுப்பியவள் அவன் இதயத்தை இதமாய் சிலிர்க்க வைத்தாள். நேரே வாகனத்தை அபியின் நீச்சல் வகுப்பிற்கு அருகே இருந்த கடற்கரைக்குச் செலுத்தினான். இப்போதுதான் ஜானு அவர்கள் மூவரும் அந்தக் கடற்கரையில் இருப்பதாக செய்தி அனுப்பினாள். தேவாவிற்கு வீடு செல்ல விருப்பமில்லை. மனைவியை பார்த்தால் நன்றாய் இருக்குமென தோன்றிற்று.

‘மூஞ்சியைப் பார்த்து முறைச்சுட்டே இருப்பா. முகத்துக்கு முன்னாடி ஒரு வார்த்தை பேசுறது இல்ல. ஆனால் அடுத்தவங்ககிட்டே புருஷனை விட்டுக் குடுக்காம பேசுறது. பிடிக்கும்னு பக்கம் பக்கமா சொல்றது
!’ தேவா மெல்ல கோபமாய் ஆற்றாமையாய் கடுகடுப்பாய் முணுமுணுத்தாலும் கூட முகம் மலர்ந்தே கிடக்க, உடலில் புது உற்சாகம் ஒட்டிக் கொண்டது.

தொடரும்...

 
New member
Messages
9
Reaction score
5
Points
3
அருமை 👌👌👌👌👌👌👌இப்பவாது தேவா அதி பேசியதை கேட்ட பின்பு அவளை புரிந்துகொள்ள வானா 🤔🤔🤔🤔🌺🌺🌺🌺
 
Well-known member
Messages
516
Reaction score
384
Points
63
ஜானு உருப்படியா ஒரு காரியம் பண்ண
 
Well-known member
Messages
461
Reaction score
333
Points
63
Yen janu neyae straight ah serthu vaikama character janu ah va vachi move panna vachi irukiya ah ippo va chum indha fight ku oru end varutha ah nu parpom
 
Well-known member
Messages
1,010
Reaction score
745
Points
113
Epdiyooo jaanu thaan problem solve panni vakka pora , superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr

Remo Deva va paakka aarvama waiting maa
 
Active member
Messages
125
Reaction score
101
Points
43
Nice super interesting super 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
 
Top