- Messages
- 1,205
- Reaction score
- 3,520
- Points
- 113
ஆதிரை தேவா கான்வோ முன்னாடி எழுதி இருந்தது எனக்குத் திருப்தியா இல்லை மக்களே. அதான் அந்த சீனை டெலிட் பண்ணிட்டு புதுசா வேற ஆட் பண்ணி இருக்கேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதைப் படிச்சாதான் அடுத்த சீன் உங்களுக்குப் புரியும். ஆதிரையோட கேரக்டர்க்கு அவளை அழ வைக்கிறது நல்லா இல்லை. அவ எப்பவும் அவளா இருக்க மாதிரிதான் நல்லா இருக்கும். நீங்களும் சொல்லீட்டுப் போங்க 
நெஞ்சம் - 50.2
"ப்மச்... இப்போ எதுக்கு கத்துறீங்க? என்ன பிரச்சினை உங்களுக்கு?" எனக் கேட்டவள் கண் மையை எடுத்து கண்ணுக்கு கீழே வெகுகவனமாய் அப்பினாள். தேவா அவளைக் காட்டத்துடன் பார்த்தான்.
“என் முகத்தைப் பார்த்து பேசு டீ முதல்ல!” அவன் இரைய, இவள் பொறுமையாய் கண் மையை ஈட்டு முடித்து அவன் முகத்தைப் பார்த்தாள்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு? ஏன் இவ்வளோ டென்ஷன்?” எனக் கேட்டவளின் குரலில் சின்னதாய் ஓர் அலட்சியத்தை உணர்ந்தான் தேவா. அவன் பொறுமை மெல்ல மெல்ல கரையத் தொடங்கியது.
“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் நல்லா இருக்கேன். பட் நீ இப்படி இருக்கதுதான் என் பிரச்சனை. முன்ன மாதிரி நீ இல்லை!” என்றவன் தலையைக் கோதி பெருமூச்சுவிட்டு கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவளே இத்தனை நிதானமாகப் பேசும்போது தான் மட்டும் ஏன் உணர்ச்சிவசப் படுகிறோம் என மெதுவாய் உடலைத் தளர்த்தினான்.
“நான் எப்பவும் போலதான் இருக்கேன். உங்க கண்ணுக்கு டிப்ரெண்டா தெரிஞ்சா என்னால ஒன்னும் பண்ண முடியாது மிஸ்டர் தேவநந்தன்!” என்றாள் கேலியாய். தேவா அவளை உறுத்து விழித்தான். திருமணத்திற்கு முன்பும் சண்டை வரும்போது இவள் இப்படி தன்னைக் கண்டு கொள்ளாமல் கோபப்பட வைத்து நினைவிற்கு வந்தது. அதை நினைத்தே தன்னை நிதானித்தான். பொறுமையாய் பேச வேண்டும் என்று மூச்சை இழுத்துவிட்டவன்,
“ஆதி!” என மென் குரலில் அழைத்து அவள் கையைப் பற்றிக் கொள்ள, அந்தக் குரலில் அதிலிருந்த பாவனையில் சலனமில்லாமல் அவனைப் பார்த்தவள், “சொல்லுங்க!” என்றாள். அவன் கரத்தின் வெப்பம் அவளுள் மெதுவாய் இறங்கியது. இவ்வளவு நேரம் கத்திக் கொண்டிருந்த தேவநந்தனை அலட்சியம் செய்தவளால் பொறுமையுடன் தன் முகம் பார்ப்பவனை தவிர்க்க முடியவில்லை. அதனாலே அவன் வார்த்தைக்குத் தன் செவியை ஈந்தாள்.
“ஏன் ஒருமாதிரி இருக்க நீ? எக்ஸாட்டா எப்போதுல இருந்து நீ இப்படி இருக்கன்னு எனக்குத் தெரியலை. வொர்க் டென்ஷன்ல நான் உன்னைக் கவனிக்கலை. பட் இப்போ சொல்லு, உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. நீ சரியில்லை, உன் முகத்துல முன்ன மாதிரி அந்த சிரிப்பு இல்ல. எப்பவும் எதாவது வம்பிழுத்துட்டே இருப்பல்ல, ஐ மிஸ் தட் ஆதிரையாழ். உன் கூட இருக்க மாதிரியே இல்ல டீ. எனக்கு என் ஆதி வேணும்!” மெல்லிய குரலில் அவள் முகம் பார்த்துக் கேட்டவனைக் கண்ட ஆதிரை இமைகளை சிமிட்டிக் கொண்டாள்.
அலட்சியம் செய்துவிடு என உள்ளே உந்தி தள்ளினாலும் அவளால் அது முடியாமல் போயிற்று. “ஓ... உங்களுக்கு என்னை இந்தளவுக்குத் தெரியுமா?” எனக் கேட்டுப் புன்னகைத்தவள், கையை அவனிடமிருந்து மெதுவாய் உருவிக் கொண்டாள்.
“நீங்க நினைக்கிற அளவுக்கு எனக்கு எதுவும் இல்லங்க. ஐ யம் ஓகே, நான் ரொம்ப நார்மலா இருக்கேன். எதுவும் வியர்டா பிஹேவ் பண்றேனா என்ன?” சின்ன சிரிப்புடன் கேட்டாள். தேவா தலையை இடம் வலமாக அசைத்தான்.
“தென் அப்புறம் என்ன? ஏன் நீங்க இப்போ உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?” எனக் கேட்டவள் உதட்டுச் சாயத்தை எடுத்து கையில் தடவி அந்த நிறம் தனது உடைக்குப் பொருத்தமா எனப் பார்த்து உதட்டில் தடவினாள். தேவா இவளை என்ன செய்தால் தகும் எனப் பார்த்தான்.
“என்னையே பார்த்துட்டு இருக்காதீங்க. உங்களுக்கு டைமாகலையா? போய் சாப்பிடுங்க. கரெக்ட் டைம்க்கு போகலைன்னா வேலை சரியா நடக்காது. என்னையும் கிளம்ப விடுங்க. எனக்கு சம்பளம் கொடுக்குற முதலாளி நீங்க. லேட்டா வந்தா அட்வாண்டேஜ் எடுக்குறீயான்னு கேட்பீங்க. எனக்கு அப்படியெல்லாம் பேச்சு வாங்குறது சுத்தமா பிடிக்காது. வேலைலயும் சரி வீட்லயும் சரி நான் சரியா இருப்பேன்!” என்றவள் சிறிது யோசித்துவிட்டு,
“அண்ட் ஒன் மோர் திங்க், டிபிகல் இண்டியன் வொய்ப் மாதிரி என்னாலே கிச்சன்லயே அடைஞ்சு கிடக்க முடியாது. ஒன்னு ரெண்டு பேருன்னா கூட குக்கிங் பெருசா தெரியாது. ஒரு குடும்பத்துக்கே சமைச்சுப் போட்றது கஷ்டம். அதான் நான் நான் குக் பண்ணலை. அதுக்காக நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணணும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணலை. கலகம் பொறந்தாதான் நியாயம் கிடைக்கும். அதான் உங்கம்மாவைப் பேச வைக்கிறதுக்காக அப்படி பண்ணேன். மத்தபடி எனக்கு உங்களோட சப்போர்ட் பண்ண நோ நீட். எனக்கு என்னைப் பார்த்துக்கவும் தெரியும். உங்கம்மாவை எப்படி ஹேண்டில் பண்றதுன்னும் தெரியும். அவங்க வந்து என்னைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ணா மட்டும் என்கிட்ட வந்து கேளுங்க!” என்றாள் கேலியாய்.
“ஜஸ்ட் ஷட் யுவர் நான்சென்ஸ் டாக்கிங் ஆதி. நீ உன்னைப் பார்த்துப்ப, உனக்கு நீ இருக்கன்னா அப்புறம் எதுக்கு டீ இந்தக் கல்யாணம் பண்ணுனோம். தனியாவே இருந்து தொலைக்க வேண்டியதுதானே? நான் எதுக்கு கூட பொம்மை மாதிரி சும்மா இருக்கவா?” எனக் கடுப்புடன் கேட்டான். ஆதிரைக்கு அவன் பேச்சில் சிரிப்பு வந்தது. கட்டுப்படுத்த முனையாது சிரித்துவிட்டாள்.
அதில் மேலும் கோபமானவன், “எதுக்கு இப்போ இந்த சிரிப்பு?” எனப் பல்லைக் கடித்தான்.
“இதைத்தானே கல்யாணத்துக்கு முன்னாடி படிச்சு படிச்சு நான் சொன்னேன். சும்மா ஏதோ உங்களைப் பத்தி ஒரு அரைமணி நேரம் நான் புரிஞ்சு வச்சுட்டு பேசுனேன்னு நீங்கதான் தேவையில்லாம இந்த ரிலேஷன்ஷிப்குள்ள வந்து கஷ்டப்படுறீங்க மிஸ்டர் தேவநந்தன்?” என்றாள் உதட்டுக்குள் அடக்கிய கேலி சிரிப்புடன்.
“ம்ப்ச்... முதல்ல இருந்து ஆரம்பிக்காத ஆதி. மேரேஜ் எதுக்குப் பண்றோம். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும், அன்பா அனுசரணையா இருக்கணும். சப்போர்ட் பண்ணணும், கேர் பண்ணணும், லவ் பண்ணணும். இது எதுவுமே இல்லாம நீ விலகி விலகிப் போனா என்ன அர்த்தம். கல்யாணமான புதுசுல கூட ஐ பெல்ட் சம்திங்... எனக்கு சொல்லத் தெரியலை. பட் நீ என்கிட்ட பேசும்போது, பழகும்போது அதுல நிறைய சேஞ்சஸ் தெரிஞ்சது. பட் இப்போ ரொம்ப தூரமா போற ஆதி நீ!” சலிப்புடன் கட்டிலில் அமர்ந்து தலையைக் கைகளில் தாங்கினான்.
இன்னும் எவ்வளவு நாள்தான் இந்தப் பெண்ணிடம் ஒரு அன்பிற்காக மண்டியிட வேண்டும் என அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இவள்தான் வேண்டுமென இத்தனை தூரம் வந்துவிட்டான். ஆனாலும் இருவருக்கும் இடையில் எதுவோ சரியில்லாமல் போனது. அவன்தான் இழுத்துப் பிடிக்க வேண்டியதாய் இருந்தது.
‘சாத்தன் வேதம் ஓதுது!’ ஆதிரையால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. உண்மையில் அவன் பேசும்போது கொஞ்சம் இவளுக்கு மனதோரம் சின்னதாய் திருப்தி படர்ந்தது. இந்தளவிற்காவது இவனுக்குப் புரிகிறதே. இரண்டு நாளுக்கே இத்தனை சலித்துக் கொள்கிறானே. இரண்டு வாரம் எத்தனையோவற்றைத் தனக்குள் வைத்துப் புழுங்கி இருப்பாள். இன்னும் மனதின் காயம் அப்படியேதான் இருந்தது. அவனுடைய ஒரே ஒரு அலட்சியம் உதாசீனம் எல்லாம் தன்னுடைய உறுதியை உடைத்துப் போட்டதை அவள் உணர்ந்தே இருந்தாள். அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உணர்வு ரீதியாக தன்னைப் பலகீனப்படுத்தும் யாரிடமும் அவள் அதற்கு மேலும் ஒன்றக் கூடாது என நினைத்தாள்.
அதனாலே ஒரு வீம்பு.
‘இவனிடம் என்ன எனக்கு எதிர்பார்ப்பு? எல்லா ஆண்களைப் போலத்தான் இவனும். என்னைப் புரிந்து கொள் என மன்றாடவோ அல்லது அன்பை யாசமாகப் பெறவோ அவளுக்கு விருப்பம் இல்லை. பிறந்ததிலிருந்தே கிடைக்காத அன்புதானே? இப்போதும் என் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும் அனுபவிக்க முடியவில்லை. இருந்துவிட்டுப் போகட்டுமே! என் விதி அப்படி என்றால் நான் அதை பார்த்துக் கொள்கிறேன்!’ என அலட்சியபாவம் வந்ததும் கேலியாய் உதடு வளைந்தது. தேவா அவளைத்தான் வெறித்தான்.
“எப்படி இருக்கேன்ங்க நான்?” பளிச்சென புன்னகையுடன் கேட்டவிட்டு புடவையைக் சுற்றிக் காண்பித்தவளைக் கடுப்பாய் பார்த்தான்.
“இப்போ இது ரொம்ப முக்கியமா டீ?” எரிச்சலாக கேட்டான்.
“ப்ம்ச்... ட்வென்டி மினிட்ஸ் எக்ஸ்ட்ரா எடுத்துட்டு கிளம்பி இருக்கேன்ங்க. சொல்லுங்க, எல்லாம் ஓகே வா?” எனக் கேட்டாள் முந்தியை நீவிவிட்டவாறே. விருப்பமே இல்லையெனினும் தேவாவின் கண்கள் அவளை அளவெடுத்தன.
நெற்றியில் குட்டியாய் வட்டப் பொட்டு, முக்கில் ஒற்றைக் கல் முக்குத்தி, கண்ணை உறுத்தாத மெல்லிய வண்ணத்தில் உதட்டுச் சாயத்தில் இதழ்கள் பளபளத்தன. புடவையின் மடிப்பை கசங்காது எடுத்து பாந்தமாய் உடுத்தி இருந்தாள். வெண்ணிற சேலையில் ஆகாய நீல பூக்கள் பூத்திருந்தன. இன்னுமின்னும் பார்வையை இறக்கியவன் மேலும் முன்னேற விரும்பாது, “நல்லா இருக்கு!” என ஒற்றை வார்த்தையோடு முடித்தான். உண்மையில் பார்க்கும் அத்தனை உரிமையும் அவனிடம் இருந்தாலும், உரிமைக் கொடுக்க வேண்டியவள் அவனை எட்ட நிறுத்தி வைத்திருக்கிறாளே என மனம் புழுங்கிற்று.
“தேங்க் யூ!” மென்மையாய் புன்னகைத்தாள். இவன் அழுத்தமாய்ப் பார்த்தான்.
“எனக்கு டைம் ஆச்சு. சாப்பிட்டு கிளம்பலாமா?” என ஆதிரை கைப் பையை எடுக்க, இவனுக்கு மூளை சூடானது. அவள் செல்ல முடியாதவாறு மறைத்தபடி நின்றவன்,
“எனக்கு இப்பவே பதில் தெரிஞ்சாகணும் ஆதி. இதோட செகண்ட் டைம் உன்கிட்ட நான் கேட்குறேன். பட் நீ ப்ராப்பர் ரெஸ்பான்ஸ் பண்ண மாட்ற. உன்கிட்ட கெஞ்சிட்டே இருக்கது என் வேலை இல்ல. உயிர்த்தெழுதல் வேலை இருக்கு எனக்கு. இந்த இடத்துல நீன்ற ஒரே காரணத்துக்காகத்தான் நான் உன்கிட்ட இப்படி பொறுமையா பேசுறேன். இதுவே வேற யாராவதா இருந்தா, என் முகமே வேற. உன்கிட்ட ஈகோ பார்க்காம நான் கெஞ்சுறதால பின்னாடியே வர வைக்கலாம்னு நினைக்காத ஆதிரை. ஒரு சில விஷயம் எனக்குப் பிடிக்காது. சோ, இதுக்கு சொல்யூஷனை நீயே சொல்லிட்டுப் போய்டு. எனக்கு மண்டை காயுது டீ!” என்றான் அழுத்தமாய்.
“ஹம்ம்... சொல்யூஷன் உங்ககிட்டே தான் இருக்குங்க. முதல்ல யோசிங்க, என்னாச்சு, ஏன் சண்டைன்னு நல்லா அனலைஸ் பண்ணுங்க. என்மேலதான் தப்பு இருக்குன்னு தோணுச்சுன்னா என்கிட்ட வாங்க. ஐ வில் கிவ் யூ அ சொல்யூஷன். இல்ல, உங்கமேலதான் மிஸ்டேக்னா நீங்கதான் அதுக்கான பதிலை தரணும்!” என்றவள் எதுவுமே நடக்காகதது போல ஜனனியிடம் சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட, இவனுக்கு தலையே வலித்தது.
‘சே... திமிரெடுத்தவ!’ அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. எத்தனை அலட்சியம் எனக் கடுப்பானான்.
‘கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி. நான்தான் இவ பின்னாடி போய் சுத்தீட்டு இருக்கேன். கொஞ்சமாச்சும் ரெஸ்பான்ஸ் பண்றாளா? சைலண்டா இருந்து கண்டுக்காம என்னை இர்ரிடேட் பண்றதுதான் இவளோட வேலை!’ எனப் பொறுமிக் கொண்டே தேவா உணவை முடித்தான். அலுவலம் சென்றதும் ஆதிரை தன்னுடைய கலகலப்பை மீட்டபடி சிரிப்புடன் வேலை பார்த்தாள்.
மாலை வீட்டிற்கு வந்ததும் கூட அவள் வெகு இயல்பாய் இருந்தாள். குழந்தைகளுடன் விளையாடினாள். அவர்களுக்கு சமைத்துக் கொடுத்தாள். ஜனனியுடன் அமர்ந்து பேசினாள். பிரதன்யாவுக்குப் படிக்க உதவி செய்தாள். கோபால் கூட மருமளிடம் சிரித்துப் பேசினார். உண்மையில் தேவா மீதிருக்கும் அதிருப்தியில் ஆதங்கத்தில் ஆதிரை கடந்த சில நாட்களாக தனக்குள் ஒடுங்கிப் போயிருந்தாள்.
ஆனால் அவளுக்கு அவளையே பிடிக்காமல் போயிற்று. ஒரு சின்ன விஷயம் தன்னுடைய குணத்தை மாற்றுமா என யோசித்து தன்னை மீட்டாள். எந்தெந்த விஷங்களில் தனக்கு சந்தோஷம் கிடைக்குமோ அதையெல்லாம் ஈடுபாட்டுடன் செய்தாள். அழகாய் புடவை உடுத்தினாள். விரைவில் கிளம்பி கோவிலுக்குச் சென்றுவிட்டு உழவர் துணைக்குப் போனாள். தர்ஷினி சுபாஷூடன் பழைய ஆதிரையாக வலம் வந்தாள்.
சின்ன சின்னதாய் தன்னை உற்சாகப்படுத்தும் விஷயங்களில் கலந்து கொண்டாள். இத்தனை நாட்கள் விடுபட்டிருந்த அபியின் நீச்சல் வகுப்பைத் தொடர முடிவு செய்தவள், ராகினியையும் உடன் அழைத்துச் சென்றாள். ஜனனியும் ஹரியும் சரி என்றப் பின்னரே அவளையும் இவளே வகுப்பில் சேர்த்துவிட்டாள்.
ஆதிரையும் தேவாவும் ஒரே வீட்டில், ஒரே அறையில்தான் இருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு இடையே பேச்சு வார்த்தைக் குறைந்து போயிருந்தது. ஆதிரை குறைத்துக் கொண்டாள் என்று கூறினால் தகும். கணவனுக்காய் தன்னுடைய தவறு புரிந்து வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றுவிட்டாள்.
தேவா முதல் இரண்டு நாட்கள் ஆதிரையிடம் வலியச் சென்று பேசினான். இவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னாள் அவள். வேறு எதுவும் அவளாக முயற்சி எடுத்து அவனுடன் பேசவில்லை.
இவனுக்கு கடுப்பானது. சரிதான் போ என்று விட்டான். இவனுடைய பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையைத் தாண்டி சென்றவளை எரிச்சலாய்ப் பார்த்தான். உண்மையில் தேவாவிற்கு தான் தவறே செய்யவில்லை என்ற எண்ணம்தான். எல்லா வகையிலுமே அவன் சரியானவன். அப்படி இருக்கையில் எந்த விதத்தில் நான் தவறியிருக்கப் போகிறேன் என்ற இறுமாப்பு இன்னுமே உயர்ந்தது. அதனாலே அவனும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
ஆனாலுமே உள்ளுக்குள்ளே அவளிடம் பேசாதது இவனைக் குடைந்தது. ஆசையாய் திருமணம் செய்தான். இப்போது இருவரும் வடதுருவம் தென்துருவமாய் இருக்கிறோமே என மனதை அரித்தது.
தன்னை இந்தப் பெண் நிறைய பாதிக்கிறாள் என திருமணத்திற்கு முன்பே தேவா உணர்ந்திருந்தான். ஆனால் அவளைத், தான் எந்த வகையிலும் தான் பாதிக்கவில்லையோ என மனம் கனத்தது.
ஒரே அறையில் இருந்தும் என்னுடைய இருப்பும் இன்மையும் அவளைப் பாதிக்கவில்லையே என்ற ஆதங்கமே அவனை எதிலும் கவனம் செலுத்த விடாமல் செய்தது. வேலையில் கவனம் சிதறியது. சிறு சிறு தவறுகளுக்கெல்லாம் ஊழியர்களிடம் கடுகடுத்தான்.
தமையன் என்னவோ இழந்ததைப் போலவே முன்பைவிட இன்னுமே உர்ரென கடுமையான முகத்துடன் வலம் வருவதைக் கவனித்த ஹரி, “தேவா, என்னாச்சு? ஏன் நீ இப்படி இருக்க?” எனக் கேட்டுவிட்டான்.
“ஒன்னும் இல்ல டா!” தம்பியிடம் சொந்த மனைவியைப் பற்றி விமர்சிப்பதில், குறை கூறுவதில் அவனுக்கு சுத்தமாய் உடன்பாடில்லை. என்னதான் இருந்தாலும் அவள் அவனுடைய ஆதிரை. எத்தனைக் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் அவர்களுக்குள்ளே தொடங்கி முடிந்துவிட வேண்டும் என்று நினைத்தான்.
“அண்ணிக்கும் உனக்கும் சண்டையாடா? ஆனால் அப்படி தெரியலையே. அண்ணி ரொம்ப கேஸூவலா இருக்காங்க. நீதான் எப்பவும் இப்படி உர்ருன்னு இருக்க. கல்யாணமானப் பின்னாடியாவது நீ கொஞ்சம் சிரிப்பேன்னு நினைச்சேன் டா!” அவன் கேலி செய்ய, தேவா தம்பியை முறைத்தான்.
“சரி... சரி. லீவ் இட், ஜோக்ஸ் அபார்ட் என்னாச்சுன்னு கேட்டு உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வர விரும்பலை. பட், உன்மேலதான் தப்பு இருக்குன்னு தோணுச்சுன்னா நீயா போய் அண்ணியை சமாதானம் பண்ணிடு டா. தட்ஸ் குட் ஃபார் யுவர் ரிலேஷன்ஷிப்!” என்றான்.
“என் மேல தப்பு இல்லன்னா?” ஹரியைக் கேள்வியாகப் பார்த்தான் தேவா.
“அப்பவும் நீதான் டா இறங்கிப் போய் மன்னிப்பு கேட்கணும். தட்ஸ் ஆல்சோ வெரி வெரி குட் ஃபார் யுவர் ரிலேஷன்ஷிப்!” எனக் கேலியாய் சிரித்தான் ஹரி.
“இதென்ன டா லாஜிக்!” தேவா உர்ரென கேட்டான்.
“லாஜிகெல்லாம் மேரேஜ்க்கு முன்ன ப்ரோ. ஆஃப்டர் மேரேஜ் லாஜிக் இல்லா மேஜிக்தான். மேரேஜ்னாலே விட்டுக் கொடுத்துப் போறதுதான் ப்ரோ.
நீ என்ன பண்ற, அண்ணிக்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கிக் குடுத்து சமாதானம் பண்ணுற. அவங்க ஒன்னும் அவ்வளே டஃப் எல்லாம் இல்லை. நீதான் உம்முனா மூஞ்சி. அவங்க ஈஸிலி அப்ரோசபிள், ஜோவியல் பெர்சன்!” சின்னவன் யோசனையுடன் கூற, தேவாவிற்கு கடுப்பானது.
‘ஈஸிலி அப்ரோசபிள்? அந்த வார்த்தையே அவனுக்கு கசந்தது. ஒவ்வொரு முறையும் தலை கீழே நின்று இந்தப் பெண் தன்னைத் தண்ணீர் குடிக்க வைக்கிறாள் என்று அவனுக்கு மட்டும்தானே தெரியும். அவனிடம் மட்டும்தான் முகத்தை திருப்புவது, பேசாமல் போவது, அலைய வைப்பது, கெஞ்ச வைப்பது என்று அடுக்கியவன், ‘கொஞ்ச வைப்பது!’ என்ற வார்த்தையை இணைக்கவில்லை.
‘எங்கே கொஞ்ச விடுகிறாள். அதற்கும் தடா போட்டுவிட்டாள்!’ என முனங்கினான். முதல்நாள் ஹரியின் பேச்சை அசட்டை செய்தவன் சரியென்று ஆதிரைக்கு என்னப் பிடிக்கும் என யோசித்தான்.
விதவிதமாக அவள் அணியும் புடவை, முகப்பூச்சு எல்லாம்தான் நினைவிற்கு வந்தது. மாலை வேலை முடிந்ததும் கடைக்குச் சென்று அவளுக்காக பார்த்து இரண்டு புடவைகளை வாங்கினான். இரண்டுமே அரக்கு நிறம்தான். என்னவோ ஆதிரை என்றால் அரக்குதான் என மனதில் ஆணியடித்தது போல பதிந்து போயிற்று.
வீட்டிற்குள்ளே நுழைந்ததும் கையில் இருந்த பையைப் பற்றி யாரும் கேட்டு விடுவார்களே என அவனுக்கு சங்கடமாய் இருந்தது. யாரும் கூடத்தில் இருக்க கூடாது என எண்ணிக் கொண்டே வந்தான். அவன் நல்ல நேரம் யாரும் இல்லை. அப்படியே அறைக்குள் நுழைந்தவன் ஆதிரையின் பார்வை படும்படி அந்த நெகிழிப்பையை வைத்தான். அவள் பார்த்ததும் எப்படி எதிர்வினையாற்றுவாள், கொஞ்சமாவது இணங்கி வருவாளா என குழந்தை போன்றதொரு எதிர்பார்ப்பு இவனிடம் முளைத்து எட்டிப் பார்த்தது.
தேவா குளித்துவிட்டு வந்து மனைவிக்காக காத்திருக்க, வெகு தாமதமாகத்தான் அறைக்குள் வந்தாள். ஜனனியின் அறையில் இருந்திருப்பாள் என இவனால் யூகிக்க முடிந்தது.
கழிவறை சென்று வந்தாள். கண்ணாடி முன்பு நின்று பின்னலை அவிழ்த்துக் கொண்டவையாகத் தூக்கிப் போட்டாள். முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டாள். இவன் கடுப்புடன் அவளைப் பார்த்தான்.
சில பல நிமிடங்களில் அறைக்குள் வந்தவள் கொண்டை ஊசியைத் தேடியபடி மேஜையைத் துழாவ, அவள் கைப்பட்டு அந்த பை கீழே விழுந்தது.
‘என்ன இது?’ என ஆதிரை யோசனையுடன் அதைப் பிரிக்க, தேவா ஆர்வத்துடன் அவளைப் பார்த்தான். அவள் உள்ளே இருந்தப் புடவைகளை வெளியே எடுத்ததும் அதன் நிறமே கணவன் தான் எடுத்திருக்கிறான் எனக் கூறிற்று. இவள் நிமிர, படக்கென அவளிடமிருந்த பார்வையை வேறுபுறம் திருப்பினான் தேவா.
புடவையையும் அவனையும் சில நொடிகள் பார்த்தவள் அதை அப்படியே பத்திரமாய் எடுத்து அலமாரிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு தோள் குலுக்கலோடு வெளியே செல்ல, தேவாவின் முகம் மாறியது.
‘சின்னப் பையன் சொன்னதைக் கேட்டு நடந்தது என் தப்பு. திமிர் பிடிச்சவ!’ மனதிற்குள் நொந்தவன், இனிமேல் தானாக எங்கேயும் இறங்கி வரக் கூடாது என தீர்மானமாய் முடிவெடுத்தான். ஆனால் ஆதிரை மறுநாளே அவன் முடிவுகளைத் தவிடு பொடியாக்கி இருந்தாள்.
தொடரும்...