- Messages
- 1,194
- Reaction score
- 3,478
- Points
- 113
நெஞ்சம் – 38 
தேவா ஆதிரை மீதிருந்த மொத்தக் கோபத்தையும் வாகனத்தின் மீது காண்பித்து அதை இயக்க, “ண்ணா... அண்ணா, அப்பா உன்னைக் கூப்பிட்டாரு!” என பிரதன்யா அவன் மகிழுந்தை வழி மறித்தாள்.
“ஈவ்னிங் பேசிக்கலாம்னு சொல்லு பிரது. எனக்கு டைமாச்சு!” இவன் சிடுசிடுத்தான்.
“இல்ல, உன்னைக் கண்டிப்பா கூட்டீட்டு வர சொன்னாரு. ஃபைவ் மினிட்ஸ் வந்துட்டுப் போண்ணா!” அவள் வற்புறுத்தி அழைக்க, “சரி போ... வரேன்!” என சில நிமிடங்களில் கோபத்தை விடுத்து முகத்தை சீராக்கி உள்ளே நுழைந்தான். மனம் மட்டும் ஆதிரையின் மீது எக்கச்சக்க கடுப்பில் இருந்தது. அவள் மட்டும் மாட்டினால் வறுத்தெடுக்கும் அளவிற்கு கோபம் பெருகியது. ஆனால் அதை மற்றவர் முன்னே காண்பிக்க விருப்பமில்லை.
“வா தேவா... வந்து உக்காரு. உன்கிட்ட பேசணும்!” கோபால் மகனை அருகே அமர்த்தினார். பொன்வாணியும் கணவருக்கு பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தார்.
“இன்னும் இந்த வீட்ல நான் குடும்பத் தலைவரா இருக்கேன்னு நம்பி ஒரு முடிவெடுத்திருக்கேன்!” என்றவரை அனைவரும் யோசனையாகப் பார்த்தனர்.
“தேவாவுக்கும் அந்தப் பொண்ணு ஆதிரைக்கும் அடுத்த முகூர்த்ததுலயே கல்யாணம் பண்ணி வச்சுடலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்!” அவர் பேச, “ஏங்க!” என பொன்வாணி இடையிட்டார்.
“வாணி, நான் பேசும்போது குறுக்க பேசாத!” என கோபால் அதட்டவும், மனைவி கோபமான முகத்தோடு கூற வந்த வார்த்தைகளை விழுங்கிவிட்டு அமைதியானார்.
“என் பேச்சுக்கு மரியாதை இருக்குன்னு நம்பித்தான் என் பையன் வாழ்க்கையைப் பத்தி நல்லா தெளிவா யோசிச்சு இதை சொல்றேன். இல்ல, நான் ரிட்டையராகிட்டேன். வீட்ல தண்ட சோறு திங்கிறேன். என் பேச்சை மதிக்க முடியாது. இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு யாரும் நினைச்சா, என் முடிவை மறுத்தா இப்பவே சொல்லிடுங்க. நான் நல்ல முதியோர் இல்லமா பார்த்து போய் சேர்ந்துடுறேன்!” என அவர் கூற, “ப்பா... என்ன பேசுறீங்க நீங்க?” என தேவா அதட்டினான்.
“ப்பா... என்னப்பா?” ஹரி தவித்துப் போனான்.
“இல்ல தேவா, நான் சம்பாரிச்சேன், புள்ளைகளைப் படிக்க வச்சேன். அப்போலாம் என் பேச்சுக்கு மறுவார்த்தை இருந்தது இல்ல. இப்போ நான் சம்பாரிக்கலைன்னதும் என் பொண்டாட்டி கை ஓங்கிடுச்சு. நான் எது செஞ்சாலும் சரின்னு சொல்றவளுக்கு இப்போ வாயே தொறக்க முடியலை!” அவர் வருத்தமாய்க் கூறினார்.
“ப்பா... அம்மா ஏதோ கோபத்துல இருக்காங்க. அவங்க அப்படியெல்லாம் நினைக்கிற ஆளா. உங்களைத் தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டாங்க!” தேவா தாயைப் பார்த்துக் கொண்டே தந்தையிடம் வருத்தமாய்ப் பேசினான்.
“அந்தக் காலமெல்லாம் மலையேறி போச்சு தேவா. இப்போலாம் இந்த கிழவன் பேச்சு சபையேர்றது இல்ல!” கணவன் குரலிலிருந்த உணர்வு இத்தனை நேரம் கல்லாய் சமைந்திருந்த பொன்வாணியின் விழிகளைக் கலங்க செய்தது.
“ப்ம்ச்... இப்போ எதுக்காக இப்படியெல்லாம் பேசீட்டு இருக்கீங்க. கல்யாணமாகி இந்த முப்பதைஞ்சு வருஷத்துல நான் உங்கப் பேச்சை மீறி எதாவது செஞ்சு இருக்கேனா?” என அவர் ஆற்றாமையுடன் கேட்டார்.
“இதோ, இப்போ வீம்பு பிடிக்கிறீயே வாணி. வாழப் போற அவனுக்குப் பொண்ணைப் பிடிச்சா போதும். நீயும் நேர்ல பார்த்தல்ல, அந்தப் பொண்ணுகிட்டே என்ன குறையைக் கண்டுட்ட. கண்ணுக்கு லட்சணமா இருக்கா. எல்லாத்தையும் விட குணமான பொண்ணா தெரியுறா. நம்ப பார்த்தா கூட தேவாவைப் புரிஞ்சுக்கிற அணுசரிச்சுப் போற பொண்ணா பார்த்திருக்க மாட்டோம். இந்தக் கல்யாணம் நடந்தா தேவா நல்லா வாழ்வான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னோட வறட்டு பிடிவாதத்துக்காக என் பையனோட வாழ்க்கையை என்னால அழிக்க முடியாது!” என்றார் உறுதியாக.
“அவன் உங்களுக்கு மட்டும் இல்லங்க, எனக்கும் பையன்தான். இப்போ என்ன, நான் அவன் கல்யாணத்துக்கு சம்மதிக்கணும், அவ்வளோதானே. சரி விடுங்க, அவன் இஷ்டப்படி அவளையே கட்டிகிடட்டும். ஆனால், கல்யாணத்துல எந்த இடத்துலயும் என்ன எதிர்பார்க்காதீங்க. முகூர்த்தம் அன்னைக்கு பெத்த அம்மாவா வந்து வாழ்த்திட்டுப் போறேன். அவ்வளோதான், மனசு ஒப்பி என்னால எந்த வேலையும் செய்ய முடியாது!” திட்டவட்டமாக மறுத்த பொன்வாணி கலங்கிய கண்களுடன் அறைக்குள் நுழைய, தேவா தங்கையிடம் கண்களால் சைகை செய்து அவருடன் செல்லப் பணித்தான்.
“ம்மா... என்னம்மா நீ இப்படி சொல்ற? அண்ணன் கல்யாணத்தை எப்படி நடத்தணும்னு ஒரு லிஸ்டே போட்டு வச்சிருந்தீயேம்மா. இப்ப கல்யாணத்தன்னைக்கு வந்து விஷ் மட்டும் பண்ணுவேன்னு சொல்ற. அண்ணன் மனசுக் கஷ்டப்படாதாம்மா! மூத்த மகன்தான் உசத்தின்னு இந்த வாயாலதானேம்மா சொன்ன?” பிரதன்யா மனத்தாங்கலாக கேட்க, அதற்குப் பொன்வாணி என்னக் கூறினார் என இவர்களுக்குத் கேட்கவில்லை. இருவரும் உள்ளறைக்குச் சென்றிருந்தனர்.
“ப்பா... ஏன்பா இப்படியெல்லாம் பேசுறீங்க? என்னைப் பொறுமையா இருன்னு சொல்லீட்டு நீங்களே கோபப்படலாமா பா?” தேவா தந்தையின் கையை அழுத்திப் பிடித்தான். அவர் குரலிலிருந்த வேதனையில் இவனுக்குத் துடித்துப் போனது. பிள்ளைகளுக்காக ஓடித் தேய்ந்த மனிதனாகிற்றே. சிறுவயதில் எக்குறையும் வைக்காது நல்ல வழிகாட்டியாக திகழ்ந்த மனிதர். அவரைக் கடைசி காலத்தில் நன்றாய் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆண் பிள்ளைகள் இருவருக்கும் கடைமையும் பொறுப்பும் அதைவிட அக்கறையும் அதிகமாய் இருந்தது. அப்படி இருக்கையில் அவர் முதியோர் இல்லம், அது இதுவென ஒரு வார்த்தைக்காக கூறியது என்றாலும் கூட அது மனதை ரம்பமாய் அறுத்திருந்தது.
“இல்ல தேவா, பொறுமையா இருக்கத்தான் சொன்னேன். அதுக்காக எதுவுமே செய்யக் கூடாதுன்னு சொல்லலையே. உங்கம்மா வீம்புக்குன்னு பண்றா. அவளுக்காகப் பார்த்து உன் கல்யாணத்தை தள்ளி வைக்க வேணாம். அப்படியென்ன அவளுக்கு வரட்டுக் கௌரவம். அந்தப் பொண்ணைப் பார்த்த பின்னாடி கூட அவ மனசு இறங்கலை. பாவம், சின்ன வயசுலே அப்பா, அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு. இப்பவும் பையனோட தனியா இருக்கா. சும்மா இருந்தப் பொண்ணுகிட்டே நீயாதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வாக்கு கொடுத்த. பெண் பாவம் பொல்லாதது தேவா. சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிடலாம்!” என்றார் மகன் தோளில் தட்டி. அவன் அமைதியாய் தலையை அசைத்தான்.
“உங்கம்மாவைப் பத்திக் கவலைப்படாத தேவா. நாளைக்கு உனக்கு கல்யாணமாகி புள்ளைப் பொறந்தா அதை தூக்காமலா போய்வடுவா. அவளுக்கு கோபம்தான். கொஞ்ச நாள் போச்சுன்னா சரியாகிடும். அவளுக்காக பார்த்தா உனக்கும் வயசாகிட்டே போகுதுல்ல. எதுவா இருந்தாலும் கல்யாணத்தை முடிச்சிட்டுப் பார்த்துக்கலாம்!” என்றார் தீர்க்கமாய்.
“ப்பா... உங்களோட டிசிஷன் கரெக்ட்பா. மேரேஜ்க்கு என்னென்ன பண்ணணும்னு சொல்லுங்க. தேவா கல்யாணத்தை நல்லபடியா முடிச்சிடலாம்!” என ஹரி தனியாய் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து தந்தையருகே உட்கார்ந்தான்.
“ரொம்ப கிராண்டா பண்ண வேணாம் தேவா. இது அந்தப் பொண்ணுக்காக சொல்றேன். நம்ம வீட்ல இருக்கவ வாயே நம்மாளல அடைக்க முடியலை. ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ணா, ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு மாதிரி பேசுவான். நம்ப அதைப் பத்தி கவலைப்பட மாட்டோம். ஆனால், அந்தப் பொண்ணு மனசு கஷ்டப்படும். இன்னைக்கு உங்கம்மா ஒரு வார்த்தை சுள்ளுன்னு பேசுனதும் பாவம் முகமே வாடிப் போச்சு. அதனால சிம்பிளா கல்யாணத்தை கோவில்ல முடிச்சிட்டு மண்டபத்துல ஒரு வரவேற்பு வச்சுடலாம்பா. நீ என்ன சொல்ற தேவா?” என மகனின் முகம் பார்த்தார்.
“ப்பா... நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் பா. எல்லாத்தையும் யோசிச்சுதானே சொல்றீங்க. சிம்பிளா மேரேஜை வச்சுக்கலாம். எனக்கும் கிராண்டா பண்றதுல விருப்பம் இல்ல!” என்றான் தந்தையை வழி மொழிந்து.
“ரொம்ப சந்தோஷம் பா!” என மகன் கன்னத்தை தடவினார்.
இவன் புன்னகையுடன், “தேங்க்ஸ் பா!” என்றார் அவர் கையை கன்னத்தோடு அழுத்தி.
“போடா... போடா! போய் வேலைக்கு கிளம்பு!” என அவனிடம் போலியாய் அதட்டியவர், “உங்கம்மா எதுலயும் கலந்துக்கலைன்னு கவலைப்பாடாத டா. என் மருமக ஜனனி அவ இடத்துல இருந்து எல்லாத்தையும் பார்த்துப்பா!” சிரிப்புடன் ஜனனியைப் பார்த்துக் கூறினார்.
“இதை நீங்க சொல்லணுமா மாமா? அதெல்லாம் தேவா மாமா கல்யாணத்தை சூப்பரா பண்ணிடலாம்!” என அவள் பளிச்சென்று புன்னகைத்தாள். அவளுக்கு ஹரியை எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவிற்கு தேவாவின் மீது மரியாதையும் அன்பும் நிரம்ப இருந்தது.
“சரிம்மா... மாமாவுக்கு ஒரு காபி போட்டு கொண்டா!” என அவர் கூற, அவள் அகன்றாள். தேவாவும் உழவர் துணைக்கு கிளம்பினான். தாயை சமாதானம் செய்ய முயன்று தோற்ற பிரதன்யா அவரை ஓய்வெடுக்க கூறிவிட்டு வெளியே வந்தாள்.
“என்ன ஹரி, என்னாச்சு?” என ஆர்வமாய் கேட்டாள்.
“ப்ளான் சக்ஸஸ்தான் பிரது. எல்லாம் ஓகே. சீக்கிரம் நல்ல நாளா பார்க்கணும். எந்த ஜோசியர்கிட்டே அம்மா பார்ப்பாங்கன்னு உனக்குத் தெரியுமா?” என கேட்டான் அவன்.
“அப்பாவுக்குத் தெரியுமேண்ணா!” என்றவள், “ப்பா... ஜோசியரை உங்களுக்குத் தெரியும்தானே?” என அவர் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“ஆமா பிரது... நானும் சாயங்கலாம் ஜோசியரைப் பார்க்கலாம்னு யோசிச்சிருக்கேன். ஹரி, ஆறு மணிக்கு அவரைப் போய் பார்க்கலாம். அந்த நேரத்துல வேலை எதுவும் வச்சுக்காத!” என அவர் மகனிடம் கூற, அவன் தலையை அசைத்தான். மாலை ஜோசியரைப் பார்த்துவிட்டு வரலாம் என முடிவெடுத்தனர்.
தேவா ஆதிரையின் மீதிருந்த கோபத்தை இன்னுே அதிகமானது. அவள் வேறு எதுவும் கூறியிருந்தால் கூட அவனுக்கு வலித்திருக்காதோ என்னவோ? தன்னுடைய இருப்பும் இன்மையும் ஒன்றென அவள் கூறியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வெகுவாய் மனம் வலித்தது. அது மொத்தத்தையும் கோபமாய் மாற்றிக் கொண்டான். இவளுக்காகவென இவளிடம் போராடி, வீட்டில் சண்டையிட்டு திருமணத்திற்கு சம்மதம் வாங்கினால் இப்போது கூட வேண்டாம் என்று கூறினால் அது அவளைப் பாதிக்காதா? எனக் கடுப்பின் உச்சத்திற்குப் போனான். மறுநாள் ஆதிரையைக் காணும் போது அவையெல்லாம் வெடித்துச் சிதறக் காத்திருந்தது.
ஆதிரை பொன்வாணி பேச்சில் சுருண்ட மனதை ஒருவாறு சமாளித்து மீட்டுவிட்டாள். அபியுடன் நீச்சல் வகுப்பிற்கு சென்றாள். மாலை வணிக வளாகம் சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்தனர். படுக்கையில் விழுந்ததும் மீண்டும் பொன்வாணியின் பேச்சும் தேவாவின் முகமும் மாறி மாறி கண்முன்னே தோன்ற, இமையோரம் ஈரம் படர்வதை தடுக்க முடியவில்லை.
‘போ... என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்!’ என எண்ணியவாறே படுத்துறங்கிப் போனாள்.
அன்றைக்கே ஜோசியரை சந்தித்து வந்த கோபால் இன்னும் பதினேழு நாட்கள் கழித்து ஒரு முகூர்த்தம் இருப்பதாய் கூறி மகனிடம் விருப்பம் கேட்க, “எனக்கு டேட் ஓகேதான் பா!” என்றான் அவன்.
“சரிப்பா... ஹரியோட ஃப்ரெண்ட் கல்யாண மண்டபம் ஒன்னு இருக்காம். நீயும் அவனும் இந்த வாரத்துல போய் பார்த்திட்டு வந்துடுங்க. கோவில்ல கல்யாணம் பண்ணணும்னா ரெண்டு வாரம் முன்னாடியே தர்மகர்த்தாவைப் பார்த்துப் பேசணும். அதை நான் பார்த்துக்கிறேன்!” என அவர் கூற, ஹரியும் தேவாவும் அதை தலையை அசைத்து ஏற்றுக் கொண்டனர்.
அதற்கடுத்தாய் என்னென்ன வாங்க வேண்டும், திருமண சடங்குகள் எப்படி செய்ய வேண்டும் என ஜனனி தன் தாயிடம் கேட்டதை விவரித்து கூற, கோபால் மருமகளிடம் கலந்தாலோசித்து அவளது தாயிடமும் ஒரு வார்த்தைக் கேட்டுக் கொண்டார். தேவாவிற்கு திருமணம் என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்.
ஆனால் ஆதிரையைப் பற்றி அறிந்ததும் அவர்களது மகிழ்ச்சி அமிலம் ஊற்றப்பட்ட வேதிப் பொருளாய் பொசுங்கியது. ஜனனியிடம் அவள் தாய் ஏன் இப்படி திருமணம் செய்ய வேண்டும், வேறு பெண்ணைப் பார்க்கலாம், வாணி எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார் என திட்டித் தீர்க்க, “ம்மா... வாழப் போறது அவங்கதான். ரெண்டு பேருக்குமே இதுல விருப்பம். நீ இதுல மூக்கை நுழைக்காம கல்யாணத்தன்னைக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணிட்டுப் போ. உனக்குப் புண்ணியமா போகும்!” என அழைப்பைத் துண்டித்தாள். தேவாவின் திருமண விஷயம் காட்டுத்தீ போல உறவினர்களிடையே பரவியது.
சிலர் நேரடியாய் பொன்வாணியிடமே அழைத்துக் கேட்க, அதற்கும் சேர்த்து அவர் முகத்தை தூக்கி வைத்தார். ஆனால் அதைப் பற்றி வீட்டில் ஒருவரும் கவலைப்பட்டதாய் தெரியவில்லை. திருமணம் நல்லபடியாய் முடிந்தால் போதும் என்ற வகையில் நடந்து கொண்டனர்.
மறுநாள் திங்கட்கிழமை அவரவர் வேலைக்கு கிளம்பினாலும் ஆளுக்கு ஒன்றாய் திருமண வேலைகளைப் பிரித்துக் கொண்டனர். முடிந்தளவு ஹரியே அனைத்தையும் எடுத்து செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தான். தேவாவின் வாழ்க்கையில் ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று நீண்ட நாட்களாய் அவன் மனதிலிருந்த குற்றவுணர்ச்சி இப்போது மெல்ல நீர்த்துப் போனது.
அபியை பள்ளியில் விட்டுவிட்டு உழவர் துணைக்கு கிளம்பினாள் ஆதிரை. என்னதான் அவள் அரிதாரம் பூசினாலும் முகம் சோர்ந்து கிடந்தது. தர்ஷினி வந்ததுமே அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டு விட்டாள்.
“என்னக்கா... ஏன் மூஞ்சி இன்னைக்கு டல்லடிக்குது?” என வினவினாள்.
“இல்ல தர்ஷினி, நான் எப்பவும் போலதானே இருக்கேன்!” சம்பிரதாய புன்னகை இவளிடம்.
“இல்லையே... ஏதோ ஒன்னு குறையுதேக்கா!” என சந்தேகமாய்ப் பார்த்தவாறே பையை மேஜை மீது வைத்தாள் தர்ஷினி. அவர்கள் இருவர் மட்டும்தான் வந்திருந்தனர்.
தர்ஷினி ஆதிரையின் சோகமான முகத்தை மாற்றும் பொருட்டு அவளிடம் ஏதோ பேசி வம்பிழுக்க, இவளிடம் மெல்லிய சிரிப்பு வந்தது.
“அக்கா, உங்களை சிரிக்க வைக்க என்கிட்ட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு. இந்த ரீல்ஸைப் பாருங்க!” என்றாள் அலைபேசியில் ஏதோவொரு காணொளியை துழாவியபடிய.
“ப்ம்ச்... தர்ஷினி, இது வொர்க்கிங் டைம்!” சின்னவளை அதட்டியவாறே ஆதிரை தன் மடிக்கணினியை உயிர்ப்பித்தாள்.
“க்கா... நம்ப தேவா சார் இன்னும் வரலை. ஒரு நிமிஷம்தானே. இதைப் பாருங்க!” என அவள் அலைபேசியை ஆதிரை முகத்தருகேகொண்டு வர, இவள் மென்முறைப்புடன் பார்த்தாள். சில பல நிமிடங்களில் ஆதிரை பற்கள் தெரிய சத்தமாய் சிரித்து விட்டாள்.
“பாருங்க... பாருங்க. பவர் ஆஃப் திஸ் ரீல்ஸ்!” தர்ஷினி சிரிப்போடு அதை நகர்த்தி வேறொரு காணொளியை ஒலிக்கவிட, இருவரும் சிரித்தபடியே அதைப் பார்த்தனர்.
அன்றைக்கு எப்போதையும் விட விரைவாய் வந்துவிட்டான் தேவா. அவனோடு ஆதிரை மீதிருந்தக் கோபமும் உடன் வந்ததுதான் அன்றைய நாளின் வெகு சிறப்பு. ஆய்வு கூடத்தைக் கடக்கும் போது அவன் கண்கள் அன்னிச்சையாக அவளைக் காண, பற்கள் தெரிய சிரித்தபடியே இரண்டு பெண்களும் அலைபேசியில் மும்மரமாயிருந்தனர்.
ஆதிரையின் சிரிப்பை பார்த்ததும் தேவாவிற்கு சுர்ரென உச்சி மண்டை வரை கோபம் மின்னலென பாய்ந்தது. இரண்டு நாட்களாக இவள் பேசிய பேச்சின் காரம் துளி கூட குறையாது அவன் செவிகளில் எதிரொலித்து எரிச்சலையும் பொறுமலையும் உண்டு பண்ணியிருக்க, இவள் என்னவென்றால் நடந்த நிகழ்வின் சுவடைக் கூட சுமக்காமல் சிரித்துக் கொண்டிருக்கிறாளே என பொறாமையில் பொங்கினான்.
உண்மையில் அவன் விருப்பத்தின் பேரில்தான் ஆதிரை அவனிடம் நட்பு கரத்தை நீட்டினாள். ஆனால் அவனுடன் இருக்கும் நேரத்தில் அவள் தன்னுடைய கூட்டைவிட்டு வெளியே வந்ததைக் கவனித்திருக்கிறானே. அப்படி இருக்கையில் ஒரு சதவீதம் ஈர்ப்பு கூடவா என் மீது இவளுக்கு ஜனிக்கவில்லை என்ற எண்ணமே கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலை
உண்டு பண்ணியிருந்தது.
‘தேவா... வேணாம். லெட் ஹெர் ஹேப்பி!’ ஒரு மனமா அவனை தடுக்க, சத்தியமாய் அவனால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விறுவிறுவென சோதனைக் கூடத்திற்குள் நுழைந்தான். இரண்டு பெண்களும் இவனைக் கவனிக்கவில்லை.
“குட்... வெரி குட். ஃபோன் பார்த்து சிரிச்சு முடிச்சாச்சுன்னா வொர்க் ஸ்டார்ட் பண்ணலாமா மிஸ் ஆதிரையாழ் அண்ட் தர்ஷினி!” தேவாவின் குரலில் உட்சபட்ச கொதிப்பு. திடீரென்று கேட்ட சத்தத்தில் இருவருக்கும் மனம் திடுக்கென்றது.
‘கடவுளே... இன்னைக்கு சோதனை எனக்கா?’ தர்ஷினி பயத்தோடு எழுந்து நின்றாள். ஆதிரை பெரிதாய் எதிர்வினையாற்றவில்லை. அமைதியாய் அவனைப் பார்த்தாள்.
“வெல் டன் மிஸ் தர்ஷினி, நல்ல வொர்க் பண்றீங்க போல?” இவன் கோபத்தோடு நக்கலாய்க் கேட்கவும், அவள் பயத்தோடு விழித்தாள்.
“அறிவில்ல...வாட் இஸ் திஸ்? ஹம்ம்... டீச்சர் வராத க்ளாஸ்ல ஸ்டுடென்ண்ட் அரட்டை அடிக்கிற மாதிரி இரண்டு பேரும் சிரிச்சு ஓபி அடிச்சிட்டு இருக்கீங்க. இடியட்ஸ், இதுக்குத்தான் உங்களுக்கு நான் சம்பளம் குடுக்குறேனா?” அவன் பல்லிடுக்கில் வார்தைகள் வந்து விழுந்தன.
“சாரி சார்!” அவள் தலையைக் குனிய, “ஷட் அப் தர்ஷினி. ஐ டோன்ட் நீட் யுவர் சாரி. ஐ டோன்ட் நீட் யுவர் எக்ஸ்யூசஸ். திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங். வொர்க் பண்ண இஷ்டம் இருந்தா இருங்க. இல்லைன்னா வேலையை விட்டு நீங்க போய்ட்டே இருக்கலாம்!” அவன் குரல் சீற, “சாரி சார், இனிமே இப்படி பண்ண மாட்டேன்!” என்றாள் கடுப்புடன். காலையிலே இவனிடம் திட்டு வாங்கியதிலே இந்த நாள் எத்தனை சிறப்பாக செல்லும் என அவள் மனம் எள்ளி நகையாடியது.
ஆதிரையின் புறம் திரும்பியவன், “வெல் மிஸ் ஆதிரை யாழ், ஃபோன்ல என்ன பார்த்து சிரிச்சிட்டு இருந்தீங்க?” என அவளை உறுத்து விழித்தான். நிதானமாக அவன் பார்வையை எதிர் கொண்டாள்.
அவளிடம் பயமோ பதற்றமோ இல்லை. கண்டிப்பாய் தான் பேசிய பேச்சிற்கு மறுநாள் தேவா ஆடித் தீர்க்க கூடுமென அவளுக்கும் தெரிந்தது. ஆனால் இத்தனை காலையில் என யோசித்திருக்கவில்லை.
“மிஸ் ஆதிரை யாழ், நான் உங்ககிட்டே தான் கேட்டேன். ஆன்சர் மீ!” அவளின் நிதானப் பார்வையில் இவனுடைய கோபம் ஓரடுக்கு உயர்ந்தது.
“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸ்னஸ் தேவா சார்!” என்றாள் அழுத்தமாய். தர்ஷினி அதிர்ந்து அவளைப் பார்த்தாள்.
‘போச்சு... போச்சு... இத்தனை நாள் இல்லாம இன்னைக்குத்தான் இந்த அக்காவுக்கு வீரம் வரணுமா? இன்னும் அந்த மனுஷன் என்னெல்லாம் பேசப் போறாரோ? கடவுளே... காப்பாத்து!’ தர்ஷினி மனதிற்குள் அலறினாள்.
“பைன்... நீங்க என்ன பார்த்தீங்கன்றது எனக்குத் தேவையில்லாதது. பட், இது என்னோட ஃபர்ம். நீங்க இங்க வேலை பார்க்குறீங்க. சோ, வொர்கிங் டைம்ல வேலை பார்க்காம சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டு இருந்தா கேட்கலாம் இல்ல. ஆன்சர் மீ!” அழுத்தமாய்க் கேட்டான். ஆதிரைக்குப் புரிந்து போயிற்று. தான் சிரித்ததில் அவனுக்குப் பொறுக்கவில்லை என்றுணர்ந்தாள்.
“ஓ... ஒருவேளை நீங்க தான் இந்த ப்ராஞ்ச் ஓனரா மிஸ் ஆதிரையாழ்? அதான் ஓபி அடிச்சீங்களா? எனக்குத் தெரியாதே!” என நக்கலாய்க் கேட்டான்.
“சாரி சார், இட்ஸ் மை மிஸ்டேக்!” என்றாள். ஆனால் குரலில் துளியும் பணிவில்லை.
“யெஸ் அப்கோர்ஸ், இட்ஸ் யுவர் பிக்கஸ்ட் மிஸ்டேக்!” அவன் உறுத்துப் பார்த்தான். ஆதிரைக்கு அவன் எதைக் குறிப்பிடுகிறான் என் புரிந்தது. ஆனால் அலட்டிக்காது நின்றாள்.
“இதுதான் லாஸ்ட் ஆதிரை, இனிமே எதாவது இந்த மாதிரி நடந்தா, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். காட் இட்?” எனக் கேட்க, அவள் முகத்தில் எவ்வித பாவனையும் இல்லை. அதுவே இவனது கோபத்திற்கு தூபம் போட்டது.
“ட்வென்டி ட்வென்டியோட லாஸ் அண்ட் ப்ராபிட்டை தனியா ஒரு பேலன்ஸ் ஷீட்ல போட்டு இன்னும் தேர்டி மினிட்ஸ்ல என் ரூம்க்கு எடுத்துட்டு வாங்க. லாக் புக்கையும் சப்மிட் பண்ணணும். ஒரு நிமிஷம் கூட லேட்டாக கூடாது!” என சீறலாய் உரைத்து அவன் திரும்ப, கோமதி தயக்கத்துடன் வாசலில் நின்றிருந்தார்.
கை கடிகாரத்தை ஒரு முறை பார்த்தவன், “வாங்க மிஸ் கோமதி, இது உங்க ஃபர்ம் தானே. பிப்டீன் மினிட்ஸ் லேட்டா வர்றதுல தப்பென்ன இருக்கு?” என நக்கலாய்க் கேட்க, அவர் விழித்தார்.
“திஸ் இஸ் நாட் அ ஃபர்ஸ்ட் டைம். இந்த மந்த்லயே தேர்ட் டைம் நீங்க லேட்டா வரீங்க. இனிமே லேட்டாச்சுன்னா வீட்லயே இருந்துக்கோங்க!” என அவன் சீறிவிட்டுப் போனான்.
“சே... என்ன மனுஷனோ... காலங்காத்தால வந்து மூடே ஸ்பாயில் பண்ணிட்டு போறாரு. கடுப்பா வருது. பேசாம வேலையை விட்டுவிட்டு வீட்ல எங்கம்மாகிட்டயே இடிவாங்கிட்டு சோத்தை திண்ணலாம் போல!” தர்ஷினி எரிச்சலாய் முணுமுணுக்க, ஆதிரை லாக் புத்தகத்தை எடுத்து நிரப்ப தொடங்கினாள். அரை மணி நேரத்தில் ஒரு வருடத்திற்கான வரவு செலவை பார்ப்பதென்பது அத்தனை எளிதல்ல. ஒரு நாள் முழுவதும் தேவைப்படும் அந்த வேலைக்கு. ஆனால் முப்பது நிமிடத்தில் செய்யுமாறு மனசாட்சியே இல்லாமல் கேட்டுவிட்டு செல்கிறானே என ஆதிரைக்கு கோபமாய் வந்தது.
“க்கா... என்ன பண்றீங்க? பேலன்ஸ் ஷீட் ரெடி பண்ணப் போறீங்களா? ஹாஃப் அன் ஹவர்ல எப்படிக்கா ரெடி பண்றது? இந்த மனுஷனுக்கு மனசாட்சி இருக்கா இல்லையான்னு தெரியலை!” என்ற தர்ஷினி அவளிடமிருந்து லாக் புத்தகத்தை வாங்கி எழுதத் தொடங்க, ஆதிரை ஒரு வருடத்திற்கான வரவு செலவைப் பார்த்து தனியே பிரித்தெடுத்தாள். வேக வேகமாய் தட்டச்சு செய்தும் கூட நாற்பத்தைந்து நிமிடங்களை விழுங்கியது அவன் கொடுத்துவிட்டுச் சென்ற வேலை.
“சாரிக்கா... என்னாலதான் உங்களுக்கு கஷ்டம்!” தர்ஷினி இரண்டு முறை மன்னிப்பை கேட்டுவிட்டாள்.
“விடு தர்ஷினி, நம்ப ஃபோன் பார்க்கலைனாலும் அவர் எதாவது ரீசன் சொல்லி திட்டிதான் இருப்பாரு!” என்று சின்னவளை சமாதானம் செய்து தேவாவின் அறைக்கு மடிக்கணினியோடு சென்றாள்.
அவன் அனுமதியோடு உள்ளே நுழைந்து தரவுகளை அவனிடம் காண்பித்தாள். “ஹாஃப் அன் ஹவர்ல எடுத்துட்டு வர சொன்னா, ஓன் ஹவர்ல எடுத்துட்டு வரீங்க மிஸ் ஆதிரையாழ்!” என சிடுசிடுத்தவனை அமைதியாய் பார்த்தாள்.
‘கத்து... திட்டு. உன்னுடைய ரத்த அழுத்தம்தான் எகிரும். உன் மனநிலைதான் கெடும். திட்டு வாங்கி வாங்கி எனக்குப் பழகிவிட்டது. அது என்னைப் பாதிக்காது!’ என இவள் அசட்டையாய் அமர்ந்திருந்தாள். அவள் கொண்டு வந்த தரவை தொட்டுக் கூடப் பார்க்காதவன், பட்டென மடிக்கணினியை அணைத்துவிட்டு அவள் முன்னே தன் அலைபேசியை நகர்த்தினான்.
ஆதிரைக்கு இப்போது கோபம் வந்தது. கை வலிக்க வலிக்க தரவுகளை தட்டச்சு செய்து எடுத்து வந்தால், அதை அவன் ஒரு பொருட்டாய் மதிக்கவில்லையே என சினத்தோடு அவனை ஏறிட்டாள்.
எதை செய்தாலும் அசட்டையாய் இருந்தவளை வெறுப்பேற்ற அவனுக்குத் தெரியவில்லை. அதனால்தான் வேண்டுமென்றே அவள் வேலையை உதாசீனம் செய்தான். தன் முன்னிருந்த அலைபேசியை அவள் தொடவில்லை.
“அந்த ஃபோன்ல இருக்க டிசைன்ல எது ஓகேன்னு பாரு. இந்த மந்த் ட்வென்டி தேர்ட் மேரேஜை வச்சுக்கலாம்!” என்றான்.
ஆதிரை என்ன சொல்கிறான் இவன் எனப் புரியாது பார்த்தாள். “உங்கம்மா ஓகே சொல்லிட்டாங்களா?” அவளிடம் மெல்லிய அதிர்வு.
“யெஸ்!” அவன் பதிலை இவள் நம்பவில்லை.
“பொய் சொல்லணும்னு எனக்கு அவசியம் இல்லை ஆதிரை. இன்விடேஷன்ல உன் சைட் யார் யார் நேம் மென்ஷன் பண்ணணும்னு சொல்லு. அப்புறம் டிசைனையும் செலக்ட் பண்ணு!” என்றான் அமைதியாய். சற்று நேரத்திற்கு முன்னே இவர்களுக்கு இடையே எதுவுமே நடவாதது போலிருந்தது அவன் குரல். அலைபேசியை அவன்புறம் நகர்த்தினாள் ஆதிரை.
“எனக்கு எந்த டிசைனாலும் ஓகேதான் தேவா சார். அப்புறம் ரிலேட்டீவ்ஸ்னு பத்திரிகைல பேர் போட்ற அளவுக்கு யாரும் இல்லை. உங்களுக்கே தெரியுமே. கர்டசிக்காக கூட அம்மா, அப்பான்னு யார் பேரையும் போடணும்னு அவசியம் இல்லை. நீங்க உங்க ரிலேடீவ்ஸ் நேம் மட்டும் போடுங்க. தட்ஸ் எனாஃப்,
ஒரு பத்து பத்திரிகை எனக்கு போதும், என் சைட் அவ்வளோதான் வருவாங்க. கல்யாணம், எங்க, எப்போன்னு சொல்லுங்க. நான் வந்துட்றேன்!” என்றவள், “எனக்கு வேலை இருக்கு. வேற எதுவும்னா கூப்பிடுங்க!” என அவள் அகன்றாள். அவளிடம் மகிழ்ச்சி, பூரிப்பு, என எதுவுமே இல்லை.
உண்மையில் அவளுக்கு பொன்வாணி மனதார சம்மதித்து இருக்க மாட்டார்கள் எனப் புரிந்தது. இவர்கள் கட்டாயத்தின் பேரில் ஒப்புக் கொண்டிருக்க கூடுமென யோசித்துக் கொண்டே சென்றாள்.
தேவா அவளை ஏகக் கடுப்போடு முறைத்தான். ‘ஏதோ மூன்றாம் மனிதருக்கு திருமணம் என்பது போல தேதி, இடம் சொன்னால் சரியாய் வந்துவிடுவாளாம். சே! இவ வேணுமா தேவா உனக்கு? இதுதான் ஃபைனல், இதுக்கும் மேல சாய்ஸ் கூட கிடையாது, சொல்லு!’ சலிப்பாய் மனம் கேட்க, தலையைக் கோதி பெருமூச்சு விட்டவன், “யெ
ஸ், ஐ நீட் திஸ் கேர்ள்!” என்றாள் ரோஷ மானத்தையெல்லாம் தூரப் போட்டுவிட்டு.
‘திருமணம் முடியட்டும். அப்புறம் இவளைப் பார்த்துக்கலாம்!’ கோப மனம் சூளுரைத்தது.
தொடரும்...
எல்லாரும் மேரேஜ்க்கு வந்துடுங்க மக்களே
🫶 அட்லீஸ்ட் மேரேஜ் முடிஞ்சாவது இவங்க சமாதானமாகி இணக்கமா இருக்கணும்னு விஷ் பண்ணிட்டுப் போங்க. என்னால மிடிலை
ஒரே சண்டை! சண்டை! சண்டை! கல்யாணம் முடிஞ்சு மாமியார் மருமகள் சண்டை நடக்கும்.
இந்த வருஷத்துல என்னை வச்சு செய்ற கதை இது. எப்போ முடியும்னு தெரியாம கன்னித்தீவு மாதிரி போய்ட்டே இருக்கு 