• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவம் 8

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,013
Points
93
தவம் 8

வாடகைக்கு காதல்

வாங்கி வாழ்வில்லை
யாரும் என்னை மட்டும்
வாழ சொல்லாதே…!


“ஸ்கிரீனை பாருங்க மிஸ் ஜீவானந்தம் இது தான் உங்க பேபி” என்று மருத்துவர் கூற,

ஜீவாவின் விழிகள் திரையில் பதிந்தது. கருப்பு வெள்ளையில் அவர்களது உயிர் அழகாய் வீற்றிருந்தது.

பார்க்க பார்க்க தெவிட்டவில்லை ஜீவாவிற்கு. அதுவும் அவன் பார்க்கும் சமயம் அங்குமிங்கும் அசைந்தது.

அதில் ஜீவாவின் இதழ்களில் மென்னகை பிறந்தது.

லாவண்யா, “மாமா அங்க பாருங்க பாப்பா அசையுது” என்று ஆர்ப்பரிக்க,

“ஆமாம்”என்று தானும் தலை அசைத்தான்.

“உங்களை மாதிரியே அழகா இருக்குல” என்று சிரிக்க,

“உன்னை மாதிரி இருக்கு” என்றான் சிரிப்புடன்.

“பிறக்குறதுக்கு முன்னாடியே ஜாடைய தேட்றீங்களா?” என்று மருத்துவர் சிரிப்புடன் கேட்டு அவளது வயிற்றில் இருந்த ஜெல்லை துடைத்தார்.

இருவரது இதழ்களிலும் புன்னகை முகிழ்ந்தது.

மருத்துவர் எழுந்து கைகளை கழுவ செல்ல,

லாவண்யா “அதி மாதிரி இவளும் இப்பவோ ஆடியாடி சேட்டை பண்றா” கூற,

“ஆமா ரெண்டு பேரும் சேட்டை பண்றதுல அப்படியே உன்னை மாதிரி” என்று மனைவியை வம்பிழுத்தான்.

“ஏதே நான் சேட்டை பண்றேனா?”

“ஆமா சின்ன வயசுல நீ பண்ணாத சேட்டையா? ட்வெல்த் வரை மாமாவ ஸ்கூலுக்கு வர வச்சியே” என்க,

“அதெல்லாம் அறியாத வயசுல பண்றது” என்றவள் உதட்டை சுழிக்க,

“ட்வெல்த் அறியாத வயசா?” என்றவன் மேலே கூறும் முன் மருத்துவர் வர,

ஜீவா மனைவி எழ உதவி செய்தான்.

ஐந்து மாதங்கள் ஆகியிருக்க லாவண்யாவின் வயிறு சற்றே மேடிட்டிருந்தது.

இருவரும் வந்து மருத்துவர் எதிரில் அமர,

அவர் கையில் இருந்த கோப்புகளை புரட்டி பார்த்துவிட்டு,

“மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜீவா உங்க குழந்தை ரொம்ப ஆரோக்கியமா இருக்கு. பைவ் மந்த்ஸ்கான க்ரோத் கரெக்டா இருக்கு” என்று கூற,

இருவரிடத்திலும் நிம்மதி புன்னகை.

“டாக்டர் நான் நார்மல் ஆக்டிவிட்டிஸ் பண்ணலாம்தான?” என லாவண்யா வினவ,

“யா அஃப்கோர்ஸ் தாரளமா பண்ணலாம். எப்பவும் போல நார்மலா இருக்கலாம்” என்று பதில் வர,

“இவர்கிட்ட சொல்லுங்க டாக்டர் நின்னா நடந்தா ஏன் உட்கார்ந்தா கூட மெதுவா உட்காருன்னு கண்டிஷன் போட்றாரு” என்று சுகமாய் அலுத்து கொள்ள,

ஜீவா கோபமற்று மனைவியை முறைத்தான்.

மருத்துவர் புன்னகையுடன், “அவர் உங்க பர்ஸ்ட் ப்ரெக்னென்ஸி எக்ஸ்பீரியன்ஸ்ல பேசுறாரு” என்றவர்,

“இப்போ நீங்க ரொம்ப ஹெல்தியா இருக்கிங்க. எல்லா வொர்க்கும் பண்ணலாம். வாக்கிங் ரெகுலரா போங்க. அப்போ தான் நார்மல் டேலிவரி ஆகும்” என்று கூற,

இருவரும் கேட்டு கொண்டனர்.

பிறகு, “வாட்டர் லவெல் மட்டும் கம்மியா இருக்கு. நான் ஒரு பவுடர் ப்ரிஸ்க்ரைப் பண்றேன். அதை வாட்டர்ல மிக்ஸ் பண்ணி ரெகுலரா குடிங்க” என்று கூறியவர் மேலும் சில அறிவுரைகளை சொன்னார்.

ஜீவா மிக கவனமாக கேட்டு கொண்டான்.

அடுத்த மாதம் எப்போது வர வேண்டும் என்று கேட்டுவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“இங்கே உட்காரு. நான் பில் பே பண்ணிட்டு டாப்லெட்ஸ் வாங்கிட்டு வர்றேன்” என்று மனைவியை அமர கூறியவன் பத்து நிமிடங்கள் வரிசையில் நின்று பணத்தை செலுத்திவிட்டு வர இருவரும் புறப்பட்டனர்.

மகிழுந்து நகர்ந்ததும் லாவண்யா, “மாமா அந்த ரிசப்ஷன்ல சைடுல நின்னுட்டு இருந்த பொண்ணை பாத்திங்களா? அவ உங்களையே பாத்திட்டு இருந்தா” என்று கூற,

“அப்படியா? சே பார்க்காம விட்டுட்டேனே?”என்று வருத்தப்பட்டவன்,

“பாக்க எப்படி இருந்தா அழகா இருந்தாளா?” என்று ஆர்வமாக கேட்க,

கடுப்பான லாவண்யா, “ஏன் காரை வேணா திருப்பி போய் பாத்திட்டு வாங்களேன்” என்க,

“ஹ்ம்ம் நல்ல ஐடியாவா இருக்கே” என்றவன் இதழ்களில் கள்ள புன்னகை பூத்தது.

மனைவியின் கடுகடுத்த முகத்தை கவனித்தவன் மேலும் வம்பிழுக்கும் பொருட்டு,

“போகலாம்னு பாத்தா அதி ஸ்கூலுக்கு டைம் ஆச்சே லேட்டா போனா அவன் கோச்சுப்பானே” என்று வருத்தமாக கூற, மனைவி மலையேறிவிட்டாள்.

“போங்க போய் பாருங்க அதிய நான் பாத்துக்கிறேன்” என்று செந்தணலாய் முறைக்க,

இவ்விடத்தில் பெரியதான சிரிப்பு மின்னியது. கணவனது சிரிப்பை எப்போதும் ரசிப்பவள் கடுப்புடன் முறைக்க,

“ஹேய் பொண்டாட்டி நீ தானடி அந்த பொண்ணு பாத்துச்சுனு சொன்ன” என்று நகைப்புடனே கேட்க,

“நான் சொன்னா நீங்க பாக்கணும்னு கேப்பீங்களா?” என்று தொடையில் கிள்ளினாள்.

“ஆ… ராட்சஷி” என்று முணுமுணுத்தவன்,

“வேற என்ன பண்ணனும்?” என்று கேட்க,

“அப்படியா யார் பாத்தா எனக்கென்ன எனக்கு உன்னை தவிர யாரையும் பாக்க பிடிக்காதுனு சொல்லணும்” என்று கூற,

“ஓ… இதை நான் சொல்லித்தான் உனக்கு தெரியுமா?” என்று புருவம் உயர்த்தினான்.

“அப்படியில்லை” என்றவள் குரல் சுருதி குறைய,

“அப்புறம் என்ன? எப்போ பார்த்தாலும் நான் சொல்லிட்டே இருக்கணுமா?” என்று லேசாய் முறைக்க, அவளிடத்தில் பதில் இல்லை.

மனைவியின் முகத்தை கண்டவன்,

“ஹேய் லவி. இங்க பாரு”என்று அவளை தன்னை பார்க்க செய்தவன்,

“இந்த உலகத்திலே எனக்கு பிடிச்ச நான் விரும்புற ஒரே பொண்ணு நீ மட்டும் தான். இந்த ஜென்மத்தில நீ மட்டும் தான் எனக்கு” என்று அழுத்தம் திருத்தமாக கூற,

அவளது முகம் சூரியனை கண்ட தாமரையாய் மலர்ந்தது. அதனை கண்டவன்,

“இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தான் இப்படி இருக்கிங்களோ? அடிக்கடி நாங்க இதை சொல்லிட்டே இருக்கணுமா?” என்று சுகமாய் அலுத்து கொள்ள,

“ஆமா சொல்லணும் தான் என்னதான் எனக்கு தெரிஞ்சாலும் நீங்க உங்க வாயால சொல்றதை கேக்குறதுல இருக்க சந்தோஷம் வேற எதுலயுமே வராது” என்று அவனது தோளில் சாய்ந்து கொண்டவள்,

“எனக்கு இந்த உலகத்தில உங்க அளவுக்கு யாரையுமே பிடிச்சது இல்லை மாமா. நீங்க விளையாட்டுக்கு வேற பொண்ணை பத்தி பேசுனா கூட எனக்கு பிடிக்கலை. நீங்க எனக்கு மட்டும் தான் இந்த ஜென்மத்துல” என்று கூற,

இவனது இதழ்கள் மலர்ந்து முகம் விகசித்தது.

அவனது முகத்தை கண்டு தானும் மகிழ்ந்தவள்,

“மாமா டைம் ஆச்சு. சீக்கிரம் போகணும். லேட்டா போனா அதி கோச்சுப்பான்” என்று கூற,

“ஆமாம்” என்றவன் பாடலை ஒலிக்க விட்டு சாலையில் கவனத்தை வைத்தான்.

இன்று அதிரன் படிக்கும் பள்ளியில் ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு.

பனிரெண்டு மணியளவில் சரியாக அங்கே இருக்க வேண்டும்.

அடுத்த பத்து நிமிடத்தில் இருவரும் அந்த பெரிய பள்ளியின் வாகன நிறுத்துமிடத்தில் மகிழுந்தை நிறுத்திவிட்டு மனைவியை கைப்பிடித்து அழைத்து செல்ல,

ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் ஜானவி தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருந்தாள்.

ஜானவியும் இதே பள்ளியில் தான் ஜீவிதாவை கடந்த வருடம் சேர்த்து இருந்தாள்.

அந்த பள்ளியில் ஒரே நாளில் தான் எல்லா வகுப்பிற்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடக்கும்.

ஜானவி ஐந்தாம் வகுப்பை விசாரித்து வகுப்பிற்கு செல்ல,

ஜீவாவும் லாவண்யாவும் அதியின் வகுப்பை நோக்கி சென்றார்கள்.

ஜீவிதாவை பற்றி அவளது ஆசிரியர்கள் குறையாக எதுவும் கூறவில்லை. நன்றாக படிப்பதாக கூறினார்கள்.

அதில் ஜானவிக்கு சற்று மகிழ்ச்சி. ஜீவியை சற்று கண்டிப்புடன் தான் வளர்க்கிறாள் ஜானவி.

காரணம் ஒற்றை ஆளாக வளர்ப்பதால் எந்த இடத்திலும் தவறிவிட கூடாது என்பதில் அவ்வளவு கவனம்‌.

இங்கு அதியை பற்றி ஆசிரியர் அரை பக்கத்திற்கு புகார் வாசித்தனர்.

லாவண்யா மகனை முறைக்க,

“ப்பா” என்று தந்தையின் பின் ஒளிந்தான்.

“கொஞ்சம் கண்டிச்சு வைங்க மேம். ரொம்ப சேட்டை பண்றான். இந்த வயசுலயே ஒரு கேங்க் சேத்திட்டு க்ளாஸ்ல ரெண்டு க்ரூப்பா இருக்காங்க” என்று ஆசிரியர் கூற,

லாவண்யா பல்லை கடித்து மகனை மேலும் முறைத்தாள்.

ஜீவா, “ஒழுங்கா படிக்கிறானா மேம்?” என்று வினவ,

“படிப்புல எல்லாம் ரொம்ப நல்லா இருக்கான். எல்லா சப்ஜெட்லயும் பர்ஸ்ட் மார்க் வாங்குறான்” என்றவர்,

“படிப்பு மட்டும் போதுமா? டிசிப்ளின் வேணாமா சார்?” என்று கேட்டிட,

ஜீவாவும் இப்போது மகனை பார்த்தான்‌.

அதி முகத்தை பாவமாக வைத்து கொண்டு நிற்க,

ஜீவா, “நாங்க கண்டிச்சு வைக்கிறோம் மேம். இனிமேல் இப்படி பண்ண மாட்டான்” என்று உறுதியளிக்க,

ஆசிரியர் மேலும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு நகர,

இருவரும் அவரிடம் சொல்லிவிட்டு விடைபெற்றனர்.

லாவண்யா, “அதி வீட்டுக்கு வா உனக்கு இருக்கு” என்று மகனை முறைக்க,

“ப்பா…” என்று அதி தந்தையை பார்த்து உதட்டை பிதுக்க,

“லவி” என்று மனைவியை ஜீவா அதட்ட,

“நீங்க சும்மா இருங்க. நீங்க கொடுக்குற செல்லம் தான் இவனோட சேட்டைக்கு காரணம்” என்று கணவனையும் சேர்த்து தாளித்தாள்.

மனைவி கோபத்தின் உச்சியில் இருப்பதை உணர்ந்தவன்,

“சரி கோவப்படாத டி. டாக்டர் உன்னை கோபப்பட கூடாதுனு தான சொல்லி இருக்காங்க தான” என்று மனைவியை சமாதானம் செய்ய இயல,

“என்னை கோபப்படாம இருக்க சொல்லாம. இவனை சேட்டை பண்ணாம இருக்க சொல்லுங்க எனக்கு கோபமே வராது” காட்டத்துடன் அவள் கூற,

“சரி அதி ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பிறகு பேசிக்கலாம் ஸ்கூல்ல வச்சு இப்படி திட்டுனேனா. அவன் வீட்டுக்கு வர்ற வரை பயந்துட்டே இருப்பான் டி” என்று மகனை பார்த்துவிட்டு கூறினான்.

அவன் கூறுவதில் இருந்த நியாயம் புரிய அமைதியாக அந்த வராண்டாவில் நடக்க துவங்கினாள்.

ஜீவா மகனிடம் திரும்பி, “அதி சேட்டை பண்ணாம ஒழுங்கா இருக்கணும்” என்று மகனிடம் கூற,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவன் தாயின் கோபத்தை எண்ணி உதடு பிதுக்கி அழ தயாரானான்.

“ப்ச் அதி அழக்கூடாது. நீ குட் பாய் தான?” என்று வினவ,

“ஹ்ம்ம் ஆமா” என்று தலை அசைத்தான்.

“இனிமே சமத்தா இருக்கணும்” என்று கூற,

“அம்மா திட்டுவா” என்று அதி பயத்துடன் கூற,

அதில் உருகியவன் மகனை கையில் ஏந்தி,

“சேட்டை பண்ணா அம்மா திட்ட தான் செய்வா. நீ ஈவ்னிங் வந்ததும் நான் இனிமே இப்படி செய்ய மாட்டேன் சாரிமான்னு சொல்லிடு அம்மா திட்ட மாட்டா” என்று பொறுமையாக எடுத்து கூற,

“நிஜம்மா?” என்று விழிகளை விரித்து மகன் வினவினான்.

“நிஜம்மா திட்ட மாட்டா”என்றதும் அதியின் முகம் தெளிந்தது.

“அழாம க்ளாஸ்க்கு போ. அப்பா நாளைக்கு சாக்லேட் வாங்கி தர்றேன்” என்க,

முகம் மலர, “சரிப்பா” என்றான்.

மகனை சமாதானம் செய்தவன் அவனது கன்னத்தில் முத்தமிட்டு அவன் வகுப்பறை உள்ளே சென்று விட்டு வந்தான்.

அடுத்து மனைவியை சமாதானம் செய்ய வேண்டும் என்று எண்ணியபடி நடந்து செல்ல லாவண்யா அந்த கடைக்கோடிக்கு சென்றிருந்தாள்.

ஜீவா வேக எட்டுக்களில் மனைவியை அடைய முயல,

ஜானவி ஜீவிதாவை அவளது வகுப்பில் விட்டு வெளியே வந்தாள்.

நேராக வெளியேறும் பகுதியை நோக்கி நடக்க, அவளுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தாள் லாவண்யா.

பின் புறத்தில் இருந்தே அவள் தான் என அடையாளம் அறிந்தவள் ஏன் தனியாக வந்திருக்கிறாள் இந்த நேரத்தில் என்று சிந்தித்தபடியே அவளை நோக்கி வேகத்தை அதிகரிக்க,

சரியாக ஒரு பெரிய பந்து எதிரில் இருந்த மைதானத்தில் இருந்து லாவண்யாவை நோக்கி வர,

அதனை உணர்ந்த ஜானவி ஓடி சென்று லாவண்யாவை பின்னோக்கி இழுத்திட,

லாவண்யாவின் காலடியில் வந்து விழுந்தது பந்து.

நொடியில் நடக்க இருந்த அசம்பாவிதம் உணர்ந்தவளுக்கு இதயக்கூட்டில் ஒரு நடுக்கம் பிறந்தது.

வயிற்றில் கையை வைத்து பிடித்து கொண்டவளுக்கு படபடவென வேர்த்துவிட்டது.

தூரத்தில் இருந்தே நடந்ததை பார்த்த ஜீவா வேகமாய் மூச்சு வாங்க ஓடி வந்து,

“லவி உனக்கு ஒன்னுமில்லையே அடியெதும் படலையே…” என்று அதீத பதற்றத்துடன் கேட்க,

“ம்ஹூம் இல்லை மாமா” என்றவள் அவனது கையை அழுத்தி பிடித்து கொண்டாள்.

அதிலே அவளது பயத்தை உணர்ந்தவன்,

“பயப்படாதடி. எதுவும் ஆகலை” என்று சமாதானம் கூற,

“ஒரு செகெண்ட் மிஸ் ஆகி இருந்தாலும் பாப்பாக்கு” என்றவளுக்கு பதட்டத்தில் வார்த்தை வர மறுத்தது.

நொடியில் சிறிது நேரத்திற்கு முன்பு திரையில் பார்த்த சிசுவின் உருவம் மனதில் வந்து போனது.

“ஷ் அதான் ஒன்னும் ஆகலைல. நீ நெர்வெஸ் ஆகாத” என்று அவளது முகம் நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்துவிட்டவன் உதவி செய்தவளை நோக்கி திரும்ப,

“இந்தாங்க தண்ணீ குடிச்சு ரிலாக்ஸ் ஆகுங்க லாவண்யா” என்று ஜானவி தண்ணீரை பொத்தலை நீட்ட,

ஜீவா அதனை வாங்கி மனைவிக்கு அருந்த கொடுத்தவன் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டு அமர வைத்தான்.

இருந்தும் லாவண்யாவிற்கு தான் கடந்து சென்ற நொடி ஒருவித அச்சத்தை விதைத்திருந்தது.

ஜீவா, “தாங்க்ஸ் ஜானவி. நீங்க செஞ்சது ரொம்ப பெரிய உதவி” என்று நன்றியை நவில,

“இதுலென்ன இருக்கு சார். அவங்க ரொம்ப பயந்துட்டாங்க போல. சமாதானம் பண்ணுங்க” என்று லாவண்யாவை காட்ட,

தெளியாத முகத்துடன் இருந்தவள் ஜானவியின் கையை பிடித்து கொண்டாள்.

“என்னோட உயிரை காப்பாத்தி இருக்கிங்க ஜானவி” என்றவளுக்கு குரல் கலங்கியது.

“லாவண்யா இந்த மாதிரி டைம்ல எமோஷனல் ஆக கூடாது. இட்ஸ் அ இன்சிடென்ட். அதான் எதுவும் நடக்காம தடுத்தாச்சே” என்று அவளுக்கு ஆறுதல் கூற,

“ஆமா இனிமே கவனமா இருக்கணும் என்னோட மிஸ்டேக் தான் க்ரெவுண்ட் பக்கத்துல வரும் போது பாத்து வந்திருக்கணும்” என்று தன்னை தானே நிந்திக்க,

ஜீவா தான், “ரிலாக்ஸ் லவி” என்று மேலும் சில வார்த்தைகள் கூறி அமைதிபடுத்தினான்.

சில நிமிடங்கள் கடந்த பிறகு தான் லாவண்யா சாதாரணமாகினாள்.

ஜீவா, “ஆர் யூ ஓகே? இப்ப போகலாமா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்று தலையசைக்க,

ஜானவி, “நானும் போய்ட்டு வர்றேன்” என்று நகர முயற்சிக்க, அவளது கையில் இருந்த பர்ஸ் கீழே விழ,

ஜீவா குனிந்து அதனை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அதன் உள்ளே சிறியதாக தெரிந்த புகைப்படத்தை கண்டுவிட்ட லாவண்யா,

“அந்த போட்டோல இருக்கது நீங்களும் உங்க ஹெஸ்பண்ட்டுமா?” என்று லாவண்யா
வினவிட,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள் ஜானவி.

“கொடுங்க பாத்திட்டு தர்றேன்” என்று ஆர்வமாக லவி கேட்க,

ஜானவி, “க்ளியரா இருக்காது” என்று மறுக்க,

“அட பரவாயில்லை கொடுங்க”
லவி ஆர்வமாக அந்த புகைப்படத்தை வாங்கி பார்க்க அருகில் இருந்த ஜீவாவும் அந்த புகைப்படத்தை சிறிது அவாவுடன் நோக்கினான்.








 
Top