• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

தவமும் 6

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,013
Points
93
தவம் 6:

பிரிவே உறவாய்

கரைந்து போகிறேன்
உயிரின் உயிரை
பிரிந்து போகிறேன்…


“ம்மா வீட்டுக்கு போகும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர்றீயா?” என்று ஜீவி வினவ,

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கியவள் பொய்யாக முறைத்து பார்க்க,

“ம்மா பர்த்டே கேர்ள் விஷ்ஷ நிறைவேத்த மாட்டியா?” என்று விழிகளை சுருக்கி வினவ,

“காலையில இருந்து இதை வச்சே எவ்ளோ கேக்குற. பாக்குறேன்” என்று முறைத்தாள்.

“ஆமா இன்னைக்கு கேட்டா தான திட்டாம வாங்கி கொடுப்ப. அகெய்ன் அடுத்த பர்த்டே வர இன்னும் ஒன் இயர் வெயிட் பண்ணணுமே” என்று மகள் பாவனையாக கூறியதில் சிரித்தவள்,

“சரிதான் நல்லா பேச கத்துக்கிட்ட டி நீ” என்றுவிட்டு,

“சரி நீ குட் கேர்ளா அமைதியா இருந்தா வாங்கி தர்றேன்” என்க,

“வாவ் தாங்க் யூ மா” என்று சிரிப்புடன் தாயின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

பதிலுக்கு தானும் அவளுக்கு முத்தம் கொடுத்த ஜானவி மனதிற்குள் மகள் இந்த பிறந்தநாள் போல இனி வரும் அனைத்து பிறந்தநாளிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்தாள்.

பிறகு நேரமாவதை உணர்ந்து,

“டைம் ஆச்சு. வா போகலாம்” என்று மகளது கை பிடித்து அழைத்து செல்ல,

அவர்களோடே உள்ளே நுழைந்தான் ஜீவானந்தம்.

அவனை கண்டதும்,

“குட் மார்னிங் சார்” என்று வழக்கம் போல வாழ்த்த,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவனது பார்வை ஜீவியிடம் படிந்து மீண்டது.

கத்தரிப்பூ நிறத்தில் அழகான கவுன் அணிந்திருந்தாள். தலையிலும் அதே நிறத்தில் க்ளிப் என்று கண்ணை கவர்ந்தாள்.

ஜீவா மின்தூக்கியை நோக்கி செல்வதை கண்டவள் அடுத்த முறை போகலாம் என்று வெளியேவே தேங்கிவிட,

அது புரியாத மகள், “ம்மா லிஃப்ட் ஓபன் ஆகிடுச்சு வா போகலாம்” என்று கூற,

“நெக்ஸ்ட் டைம் போகலாம் ஜீவி” என்று மறுக்க, இயலாது

“ஏன் இந்த டைம் போனா என்ன? ப்ரீயா தான இருக்கு?” என மகள் ஐயம் கொண்டாள்.

“சார் போறாங்கள்ல அதான்” என்று விளக்க,

“ஓ அவங்க இருந்தா நாம போக கூடாதா?” என்று விழிகளை விரிக்க,

“ஹ்ம்ம் ஆமா” என்றாள்.

இவர்கள் சிறிய குரலில் பேசினாலும் ஜீவாவிற்கு கேட்டது.

ஜீவியின் வார்த்தையை கேட்டவன் மின்தூக்கி மூடும் சமயம் கையை வைத்து தடுத்து,

“கெட் இன் ஜானவி” என்றிட,

இவள் பதில் கூறும் முன், “ம்மா வாம்மா” என்று மகள் உள்ளே இழுத்துக் கொண்டாள்.

அது ஜீவாவிற்காக தனியாக வைக்கப்பட்டிருக்கும் மின் தூக்கி.

விடுதியில் தங்குபவர்களுக்கு தனியாக மின் தூக்கி இருந்தது.

ஜீவா ஏறக்கூடாது என்று கட்டளை விதிக்கவில்லை என்றாலும் அவன் ஏறும் சமயம் பணியாளர்கள் யாரும் ஏறுவதில்லை.

காரணம் ஜானவி தான் அவள் ஏதும் கூறவில்லை. அவளே ஏறாத போது தாங்கள் ஏறி முதலாளி ஏதாவது கூறிவிட்டால் என்ன செய்வது ஏறுவதில்லை.

அன்றைய நிகழ்வு நடந்து மாதங்கள் கடந்திருந்தது.

அடுத்த நாளே ஜீவா விடுதியில் பணிபுரியும் பெண்களை அழைத்து இது போல வேறு எவரும் தொந்திரவு செய்கின்றனரா? என்று கேட்டறிந்தான்.

அப்படி ஏதாவது நிகழ்ந்தால் முதல் வேலையாக ஜானவியிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினான்.

தங்களுக்கு தெரியவந்தால் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தான்.

மனோகர் மீது தானே புகாரளித்து அவனை கைது செய்ய வைத்திருந்தான்.

இதற்கு முன் இவ்வாறு நடந்திருந்தால் அதற்காக ஒரு வருத்தத்தை தெரிவித்திருந்தான்.

அதன் பிறகு தான் மனோகரது அட்டகாசத்தை ஒவ்வொருவராக தைரியமாக முன் வந்து கூறினர்.

தவறு செய்பவர் யாராக இருந்தாலும் எனது உறவினர் என்று எந்த பாராபட்சமும் பார்க்காமல் தண்டிக்கப்படுவார்கள் என்று மொழிந்தான்.

மேலும் ஆண் பணியாளர்களையும் அழைத்து ஒழுங்காக இருக்க வேண்டும் பெண்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் எச்சரித்திருந்தான்.

மேலும் இதுவரை கண்காணிப்பு கருவி இல்லாத அனைத்து இடங்களிலும் பொறுத்த செய்தான்.

தன்னால் முடிந்தளவு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தான்.

ஜானவி இவையனைத்தும் கண்டு தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்தாள்‌.

“ம்மா லிஃப்ட் நின்றுச்சு வா” என்ற மகளது குரலில் சுயநினைவை அடைந்தவள்,

“ஹ்ம்ம் வர்றேன்” என்று வெளியேறி தனது வருகையை பதிவு செய்தாள்.

பிறகு மகளை அழைத்து கொண்டு தோட்டத்திற்கு வந்து மேற்பார்வையை துவங்கினாள்.

ஜீவிதாவிற்கு பள்ளி விடுமுறை அன்று மட்டும் இங்கே அழைத்து வர ஜீவாவிடம் அனுமதி பெற்றிருந்தாள்.

அதுவும் தங்களால் இங்கு எந்த இடையூறும் நிகழாது என்று உறுதி கொடுத்திருக்க, அவனும் இவளது நிலையை கருத்தில் கொண்டு சம்மதம் கூறி இருந்தான்.


ஜீவி தோட்டத்தில் போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்து வருவோர் போவோரை வேடிக்கை பார்க்க ஜானவி மகள் மீது ஒரு கண்ணை வைத்து கொண்டு வேலை செய்தாள்.

பிறகு காலை உணவு மற்றும் சுத்தம் செய்யும் பணியை முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு போக விழைய,

அப்போது கையில் உணவு கூடையுடன் அந்த தளத்தில் நுழைந்தாள் லாவண்யா மகனை கையில் பிடித்து இருந்தாள்.

லாவண்யா ஜானவியை கண்டுவிட்டு புன்னகைக்க இவளும் பதிலுக்கு புன்னகையை கொடுத்தாள்.

அருகில் வந்துவிட்டவள், “எப்படி இருக்கிங்க ஜானவி?” என்று வினவிட,

“ஹ்ம்ம் நல்லா இருக்கேன்” என்று பதில் அளித்தாள்‌.

“பாப்பாவ அழைச்சிட்டு வந்திருக்கிங்களா?” என்றவள்,

“ஹாய் ஜீவி. என்ன இன்னைக்கு இவ்ளோ க்யூட்டா இருக்க?” என்று சிரிப்புடன் கேட்க,

அதில் விழி விரித்தவள், “நிஜமாவா ஆன்ட்டி?” என்று கேட்க,

“ஆமா டா செல்லம். இந்த ட்ரெஸ்ல பார்பீ டால் மாதிரியே இருக்க” என்றாள்.

“தாங்க்ஸ் ஆன்ட்டி. இன்னைக்கு எனக்கு பர்த்டே அதான் புது ட்ரெஸ்” என்று ஜீவி மொழிய,

“அப்படியா” என்றவள்,

“விஷ்ஷிங் யூ அ வெரி ஹாப்பி பர்த்டே” என்று வாழ்த்துக்களை தெரிவிக்க,

“தாங்க் யூ சோ மச் ஆன்ட்டி” என்று கன்னம் குழிய சிரித்தாள்.

“அவ்ளோ தானா? சாக்லேட் எதுவும் இல்லையா?”

“ஹ்ம்ம் வச்சு இருக்கேன் ஆன்ட்டி இருங்க எடுத்துட்டு வர்றேன்” என்று அறைக்குள் ஓட,

“மெதுவா போ ஜீவி” என்று ஜானவி பதறினாள்.

ஓடி சென்று மூச்சிரைக்க வந்தவள் ஒரு டப்பாவில் சாக்லேட்டை நீட்டினாள்.

“தாங்க் யூ” என்று புன்னகையுடன் பெற்று கொண்டவள் மகனிடம்,

“அதி ஜீவிதா அக்காக்கு இன்னைக்கு பர்த்டே விஷ் பண்ணு” என்று மொழிய,

“ஹாப்பி பத்டே கா” என்று அவனும் மழலை மொழியில் வாழ்த்தினான்.

“தாங்க் யூ” என்றவள், “இந்தா உனக்கு ரெண்டு சாக்லேட்” என்று கொடுக்க,

அதிரன் சிரிப்புடன் இரண்டு கைகளிலும் வாங்கி கொண்டான்.

ஜானவி, “சரிங்க நான் போய் வொர்க்கை பாக்குறேன்” என்று தலையசைக்க,

“ஹ்ம்ம்” என்றவள்,

“ஜீவி அங்கிளுக்கு சாக்லேட் கொடுக்கலையா?” என்று வினவிட,

“அங்கிள்கிட்ட பர்த்டேன்னு சொல்லவே இல்லையே” என்றவள் நிறுத்த,

“வா வந்து சொல்லி சாக்லேட் கொடு” என்று லாவண்யா கூற,
மகள் தாயை கண்டாள்.

ஜானவி சம்மதமாக தலையசைக்க லாவண்யாவுடன் ஜீவி ஜீவாவின் அறைக்கு சென்றாள்.

மகனையும் மனைவியையும் கண்டவன் முகம் மலர,

“சார் பிஸியா?” என்று சிரிப்புடன் கேட்டபடி வர,

“மத்தவங்களுக்கு பிஸி. உங்களுக்கு எப்பவும் ப்ரீ தான்” என்றவன் பதிலுக்கு சிரித்தான்.

“ஆஹான்” என்று இதழை சுழித்தவள்,

“மாமா இந்த பாப்பாக்கு இன்னைக்கு பர்த்டேவாம். உங்களுக்கு சாக்லேட் கொடுக்க வந்திருக்கா” என்று ஜீவிதாவை முன் நிறுத்த,

“ஓ…” என்றவன்,

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவிதா” என்று வாழ்த்த,

“தாங்க்ஸ் அங்கிள்” என்றவள் இனிப்பை நீட்ட,

“எதுவும் கிஃப்ட் கொடுக்காம சாக்லேட் எப்படி வாங்குறது” என்று பார்த்தவன் மேஜையின் மேல தேடி ஒரு பேனாவை கண்டெடுத்தான்.

“பர்த்டே கிஃப்ட் இது” என்று நீட்ட,

ஜீவி வாங்காது அவனை கண்டாள்.

“என்ன பாக்குற வாங்கிக்கோ ஜீவி” என்று லாவண்யா கூற,

“அது அம்மா அவங்ககிட்ட கேட்காம யார்க்கிட்டயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நான் போய் அம்மாக்கிட்ட கேட்டுட்டு வரவா?” என்று விழிகளில் அபிநயத்துடன் கேட்க,

இருவருக்கும் புன்னகை முகிழ்ந்தது.

“நல்ல பழக்கம் தான். பட் அங்கிள்கிட்ட வாங்குனா அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க வாங்கிக்கோ” என்று லாவண்யா கூற,

இருந்தும் ஜீவி தயங்கி நின்றாள்

ஜீவா, “சரி போ அம்மாக்கிட்ட கேட்டுட்டு வா” என்றதும் வேகமாக தலையசைத்தவள் திரும்ப,

“மே ஐ கம்மின் சார்” என்று அனுமதி வேண்டி உள்ளே நுழைந்தாள் ஜானவி‌.

ஜீவி தாயின் கரத்தை பிடித்து,

“ம்மா அங்கிள் எனக்கு ஒரு பென் பர்த்டே கிஃப்டா கொடுக்குறாங்க. அதை வாங்கிக்கவா?” என்று வழிகளில் ஆசையை தேக்கி வினவ,

ஜானவியால் மறுக்க இயலவில்லை. வழக்கமாக அவள் சௌம்யா மற்றும் நரேனது குடும்பத்தினரை தவிர்த்து யாரிடமும் எதுவும் வாங்க விடுவதில்லை.

அவள் தலையசைத்ததும் சிரிப்புடன் ஜீவாவிடம் ஓடி சென்றவள் கையை நீட்ட,

ஜீவா சிரிப்புடன் அவளிடத்தில் கொடுத்தான்.

அதனை வாங்கி திருப்பி பார்த்தவள்,

“தாங்க்ஸ் அங்கிள் இது அழகா இருக்கு” என்று புன்னகைத்தாள்.

ஜானவி வந்து, “சார் செக் இன் செக் அவட் ரிப்போர்ட்” என்று கொடுக்க,

அதனை வாங்கியவன், “நான் பாத்துட்டு கூப்பிட்றேன். நீங்க ஒர்க்க பாருங்க” என்றுவிட,

“ஓகே சார்” என்றவள் லாவண்யாவிடம் தலையசைத்துவிட்டு மகளது கையை பிடிக்க,

“ஜானவி ஜீவி இங்க இருக்கட்டுமே அதி கூட சேர்ந்து விளையாடுவாள்ல. அங்க தனியா என்ன பண்ணுவா” என்றிட,

ஜீவியும், “ஆமம்மா நானும் குட்டி பையன் கூட விளையாட்றேன்” என்று கேட்டாள்.

“சரி சேட்டை பண்ணாம எந்த பொருளையும் டச் பண்ணாம சமத்தா இருக்கணும்” என்று எச்சரித்துவிட்டே நகர்ந்தாள்.

ஜானவி மதிய உணவு மெனுவை சரி பார்க்க கீழே சென்றிட,

ஜீவி அதிரனுடன் அமர்ந்து கொண்டாள்.

ஜீவா லாவண்யாவிடம் தொழில் தொடர்பாக ஏதோ பேசி கொண்டு இருந்தான்.

லாவண்யா எம்.பி.ஏ வரை படித்திருக்கிறாள். திருமணத்திற்கு முன்பு தந்தையுடன் அலுவலகம் சென்று வந்தவள் தான். இப்போது மகனை வைத்து கொண்டு எங்கும் செல்ல இயலவில்லை.

அவ்வப்போது கணவனிடம் தொழிலை பற்றி பேசுவது ஏதேனும் ஆலோசனை கூறுவது என்று இருக்கிறாள்.

ஜீவி, “வா நாம ஸ்டோன் பேப்பர் சிஸ்ஸர் விளையாடலாமா?” என்று வினவ,

“அதெப்படி விளையாட்றது எனக்கு தெரியாது” என்று அதிரன் உதடு பிதுக்க,

“உனக்கு தெரியாதா? அப்போ நாம வேற எதாவது விளையாட்டாலாம்” என்று ஜீவி சிந்திக்க,

“அக்கா உன் பர்த்டேக்கு இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூப்டு கேக் கட் பண்ணுவீங்களா?” என்று அதி வினவினான்.

“இல்லையே நீங்க அதெல்லாம் பண்ணுவீங்களா?” என்று ஜீவி கேட்க,

“ஆமா என் பர்த்டேக்கு என் டாடி பிக் கேக் வாங்கிட்டு வந்தாங்க. அது எவ்ளோ பிக் தெரியுமா?” என்றவன் கைகளை பெரிதாய் விரித்து காண்பிக்க,

“அவ்ளோ பெருசாவா இருக்கும்” என்று விழிகளை விரித்தாள் ஜீவி.

“ஆமா” என்றவன் தாயிடம்,

“ம்மா என் பர்த்டேக்கு பிக் கேக் கட் பண்ணோம்ல” என்று தாயிடம் கேட்க,

அவள் சிரிப்புடன் தலையசைத்தாள்.

“நான் பிக் கேக் எல்லாம் பாத்ததே இல்லை” என்று ஜீவி கூற,

“ஏன் உன் டாடி உனக்கு அதெல்லாம் வாங்கி தரலையா? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கூட அவங்க பர்த்டேக்கு கேக் கட் பண்ணாங்க” என்று அதிரன் மொழிய,

“இல்லை எனக்கு தான் டாடியே இல்லையே? இருந்தா எனக்கும் பெரிய கேக் கிடைச்சிருக்கும்” என்றவளது குரலில் இருந்த ஏக்கம் லாவண்யாவை தாக்க,

கணவனை கண்டாள். அவனுக்கும் ஜீவியின் மனநிலை புரிந்தது.

ஆனால் அதற்கு தங்களால் என்ன செய்ய இயலும் என்று அவன் சிந்திக்க, “மாமா அந்த பாப்பாக்கு நாம கேக் கட் பண்ணுவோமா?” என்று மனைவி வினவினாள்.

“தேவையில்லாத வேலை லாவண்யா. இந்த டைம் நீ கட் பண்ணிட்டா நெக்ஸ்ட் டை அவ எக்ஸ்பெக்ட் பண்ணுவா‌. அது ஜானவிக்கு தான் கஷ்டம்” என்று மறுத்தவன்,

“மோர் ஓவர் ஜானவி இதுக்கு எப்பவுமே ஒத்துக்க மாட்டா”என்று அவளை நன்கு அறிந்தவனாக கூற,

“நெக்ஸ்ட் இயரை பத்தி அப்புறம் பாப்போம்” என்றவள்,

“நான் ஜானவிக்கிட்ட பேசுறேன்” என்க,

“உன் விருப்பம்” என்று கணவன் முடித்து கொண்டான்.

“ஜீவி உன் அம்மாக்கிட்ட கேட்டுட்டு ஆன்ட்டி உனக்கு கேக் வாங்கி தர்றேன். நீ கட் பண்ணு” என்க,

“நிஜமாவா?” என்று விழிகளை விரித்தவளது முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி.

“நிஜம்மா” என்று லாவண்யா அழுத்தி கூற,

“ஆனால் அம்மா ஓகே சொல்ல மாட்டாங்க” என்றவளது குரலில் சுருதி குறைந்தது.

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். டோன்ட் வொர்ரி” என்றாள்.

சரியாக அதே நேரம் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் ஜானவி.

வந்தவள், “பாப்பாவ சாப்பிட கூப்பிட வந்தேன்” என்று லாவண்யாவிடம் கூற,

“வாங்க ஜானவி உங்களை தான் கூப்பிட நினைச்சேன் நீங்களே வந்துட்டிங்க” என்றுவிட்டு,

“பாப்பா பர்த்டேக்கு கேக் கட் பண்ணாலாமா? நான் கேக் செய்ய சொல்றேன்” என்று வினவ,

“இல்லை வேணாம் அதெல்லாம் எதுக்கு” என்று உடனடியாக மறுத்தவள் மகளை முறைத்தாள்.

‘இதெல்லாம் உன் வேலையா?’ என்று.

ஜீவி, “ம்மா நான் எதுவும் கேக்கலை” என்று அழும் பாவனையில் கூற,

“குழந்தையை எதுக்கு முறைக்கீறிங்க. அவ எதுவும் கேக்கலை. நான் தான் கேக் கட் பண்ணைலாமான்னு கேட்டேன்” என்று லாவண்யா பதில் அளித்தாள்.

“இல்லைங்க வேணாம். இந்த டைம் பண்ணிட்டா ஒவ்வொரு டைமும் எக்ஸ்பெக்ட் பண்ணுவா. என்னால அப்போ இதை செய்ய முடியாம போய்ட்டா. என்னால செய்ய முடிஞ்சதை தான் அவளுக்கு பழகிவிடுவேன்” என்று மறுக்க,

‘அப்படியே கூறுகிறாளே’ என்று எண்ணி கணவனை காண,

‘நான் சொன்னன்னே’ என்ற பாவனை அவனது முகத்தில்.

“ஜானவி. அடுத்த வருஷத்தை அப்போ பார்ப்போம் குழந்தைகங்களுக்கு இதென்ன சின்ன சின்ன சந்தோஷம் இந்த வயசுல தான் அனுபவிக்க ஆசைப்படுவாங்க. கொஞ்சம் வளர்ந்து மெச்சுரிட்டி வந்ததும் அவங்களே மறுத்துடுவாங்க. அப்போ நாம என்ன செஞ்சாலும் இவ்ளோ சந்தோஷம் இருக்காது” என்று லாவண்யா எடுத்து கூற,

ஜானவி மகளை பார்த்தாள். தன்னுடைய நிலைமையால் அவளுக்கு சின்ன சின்ன சந்தோஷங்களை கூட மறுக்கிறேனோ? என்று எண்ணம் எழுந்தது.

அவள் சிந்திப்பதை கண்டு லாவண்யா கணவனிடம் நீங்களும் கூறுங்கள் என்று கண்ணை காண்பிக்க,

“சின்ன கேக் வாங்கி நம்ம ரூம்லயே கட் பண்ணிடலாம் ஜானவி” என்று மனையாள் விருப்பத்தை நிறைவேற்ற கூற,

அரை மனதுடன் தலையசைத்தவள்,

“ஓகே சார்” என்றுவிட்டவள்,

“பட் கேக்குக்கு நான் தான் பே பண்ணுவேன்” என்று கூற,

லாவண்யா மறுத்து பேச வந்தாள்.

“ப்ளீஸ் லாவண்யா அவளுக்கு பர்ஸ் டைம் கேக் கட் பண்ண போறோம். அது என்னோட பணத்திலே இருக்கட்டும்” என்று உறுதியாக கூறவிட,

லாவண்யாவிற்கும் அது சரியென பட சம்மதித்தாள்.

ஜீவா இதனை முன்பே எதிர்ப்பார்த்திருந்தான்.

“தாங்க்ஸ் மா” என்று ஜீவி தாயை அணைத்து கொண்டாள்.

ஜீவா கேக்கை எடுத்து வருமாறு பணியாளிடம் கூற,

அடுத்த பத்து நிமிடத்தில் ரெட்வெல்வெட் கேக் ஜீவிதாவின் பெயருடன் வந்தது‌.

அதனை கண்டதும் ஜீவியின் முகத்தில் தான் எவ்வளவு மகிழ்ச்சி. முதல் முறையாக கேக்கை வெட்ட போகிறாளே‌.

ஜீவி சிரிப்புடன் கேக்கை வெட்ட ஜானவி புன்னகையுடன் பார்த்திருந்தாள்.

வெட்டி முதலில் தாய்க்கு ஊட்டியவள் பிறகு அதி, லாவண்யா மற்றும் ஜீவாவிற்கும் ஊட்டிவிட்டாள்.

லாவண்யா அதனை அழகாக புகைப்படமாக அலைபேசியில் பதிவு செய்தாள்.

கொண்டாட்டம் முடிந்ததும் ஜானவி மகளை உண்ண அழைக்க,

“இல்லை இருக்கட்டும் நாங்க ரெண்டு பேரும் என் ரூம்ல சாப்பிட்டுக்கிறோம். நீங்க பேமிலியா சாப்பிட்றீங்க. நாங்க எதுக்கு” என்று நாசுக்காக மறுக்க,

“அட இதிலென்ன இருக்கு. ஒரு நாள் தான வாங்க” என்று லாவண்யா கூற,

“இல்லை” என்று ஜானவி மறுத்து ஏதோ கூற வர,

“பர்த்டே ஸ்பெஷல் எதுவும் செஞ்சு இருக்கிங்களா? எங்களுக்கு கொடுக்க கூடாதுனு தான் சாப்பிட வரமாட்றீங்களா?” என்று லாவண்யா சிரிப்புடன் கேட்க,

“அச்சச்சோ அப்படிலாம் இல்லை” என்று மறுத்தாள் ஜானவி‌.

“என்ன லஞ்ச் இன்றைக்கு” என்று வினவிட,

“சிக்கன் பிரியாணி” என்றாள்.

“ஓ… பிரியாணியா? அதான் சாப்பிட வர மாட்றீங்களா?” என்றிட,

“இல்லைங்க அப்படிலாம் இல்லை” என்று மறுத்தாள்.

“அப்போ எங்க கூட சாப்பிட வாங்க. அப்போதான் நம்புவேன்” என்றுவிட,

“சரி” என்று வேறு வழியின்றி ஒப்பு கொண்டாள்.

பிறகு ஜீவாவின் தனிப்பட்ட உணவு உண்ணும் அறையில் அவர்களது மதிய உணவு நேரம் கழிந்தது.

பாத்திரங்களை லாவண்யா கழுவி வைக்க ஜானவியும் உதவி புரிந்தாள்.

கடைசி பாத்திரத்தை கழுவும் நேரம் சடுதியில் லாவண்யாவிற்கு தலை சுற்றல் ஏற்பட,

கீழே விழப்போகிறோம் என்று உணர்ந்தவள் ஜானவியின் கையை பிடிக்க நிலைமை உணர்ந்த ஜானவி பாத்திரத்தை கீழே விட்டு லாவண்யாவை தாங்கி கொண்டாள்.

பாத்திரம் விழுந்த சத்தத்தில் ஜீவா வர,

“சார் இவங்க மயக்கம் போட்டுட்டாங்க” என்று பதற்றமாக கூற,

ஜீவா, “லவி” என்று பதட்டமாக மனைவியை தாங்கியவன் அங்கிருந்த நீள்விருக்கையில் படுக்க வைத்தான்.

ஜானவி தண்ணீரை எடுத்து வந்து கொடுத்தாள்.

ஜீவா நீரை முகத்தில் தெளித்து, “லவி எழுந்திருடி” என்று கன்னத்தை தட்ட,

இமைகளை மெதுவாக பிரித்த லாவண்யா தண்ணீரை அருந்தினாள்.

பிள்ளைகள் இருவரும் பயத்துடன் பார்க்க,

ஜீவா, “என்னாச்சு ஏன் திடீர்னு மயங்கிட்ட” என்று மனைவியிடம் விசாரிக்க,

“தெரியலைங்க. பிபி லோவாகி இருக்கும்னு நினைக்கிறேன்” என்று மொழிய,

“நான் டாக்டருக்கு கால் பண்ணி வர சொல்றேன்” என்றான்.

“சாதாரண மயக்கம் இதுக்கு எதுக்கு டாக்டர்” என்று லாவண்யா மறுக்க அதனை கண்டு கொள்ளாதவன் மருத்துவரை அழைத்தான்.

ஜானவி பிள்ளைகள் இருவருக்கும் ஒன்றுமில்லை என்று கூறி சரி செய்தாள்.

பத்து நிமிடத்தில் மருத்துவர் வந்தார்.

ஜீவா நடந்தவற்றை பதட்டத்துடன் கூற,

லாவண்யாவை பரிசோதித்தார்.

பிறகு சில விபரங்களை கேட்டறிய லாவண்யாவின் முகத்தில் ஒளிக்கீற்று.

“ சந்தோஷமான விஷயம் தான் உங்க வொய்ஃப் ப்ரெக்னன்ட்டா இருக்காங்க” என்று கூற,

ஜீவாவின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

“தாங்க் யூ சோ மச் டாக்டர்” என்று சிரிப்புடன் நன்றி கூறி அவரை வழியனுப்பி விட்டு வந்தவன் மனைவியை மகிழ்ச்சி தாளாது அணைத்து கொண்டான்.

லாவண்யா தான், “ஜானவி இருக்காங்க” என்று கூச்சத்துடன் கூறி விலக,

மகிழ்ச்சியில் அவளை மறந்துவிட்டவன் சடுதியில் சங்கடத்துடன் விலகினான்.

இருவரிடத்திலும் ஏக சந்தோஷம். இரண்டாவது குழந்தை வேண்டும் என்று ஒரு வருடமாகவே எதிர்பார்த்து இருந்தனர்.

லாவண்யாவிற்கு மாதவிலக்கு சரியாக வருவதில்லை ஆதலால் மூன்று மாதங்கள் வராததை அவள் பெரிதாக எண்ணயிருக்கவில்லை.

“காங்கிராசுலேஷன்ஸ் போத் ஆஃப் யூ” என்று ஜானவி மகிழ்வுடன் வாழ்த்த,

இருவரும் புன்னகையுடன் ஏற்று கொண்டனர்.

ஜீவி, “ம்மா ஆன்ட்டிக்கு என்னாச்சு?” என்று தாயிடம் வினவ,

“அவங்களும் பாப்பா பிறக்க போகுது ஜீவி” என்று ஜானவி கூற,

“அப்படியா ஆன்ட்டி” என்று கேட்க,

லாவண்யா புன்னகையுடன், “ஆமா அதிக்கு தங்கச்சி பாப்பா பிறக்க போகுது” என்று கூற,

“ஐய் எனக்கு தங்கச்சி பாப்பா. எப்போ வரும் எங்க இருக்கு?” என்று அவன் துள்ள,

“அம்மாவோட வயித்துல இருக்குடா” என்று
லாவண்யா மகனிடம் கூற,

அவளருகே வந்த ஜீவி, “உங்க வயித்துல குட்டி பாப்பா இருக்கா?” என்று வினவி அவளது வயிற்றை ஆசையுடன் தடவினாள்.

“ஆமா செவென் மந்த்ஸ்ல பிறந்திடும்” என்று லவி கூற,

“அது குட்டியா அழகா இருக்கும்ல ஆன்ட்டி?” என்று ஜீவி கேட்டாள்.

“ஆமா” என்று சிரிப்புடன் தலையசைத்தாள்.

அதி, “நான் குட்டி பாப்பாவோட விளையாடுவேன்” என்று மகிழ்வில் குதிக்க,

“ம்மா எனக்கு தங்கச்சி பாப்பா வேணும்” என்று கேட்ட ஜீவி மூவரையும் அதிர செய்திருந்தாள்…





 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Jeevi janu ku periya shock ah kuduthuta ah ava ipadi sattunu ketpa nu yarumae expect pannavae illa
 
Top