• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
தூறல் – 4

“மாமா... மாமா!” என்ற குழந்தைகளின் சத்தத்தில்தான் இளவேந்தன் கண்விழித்தான். இருக்கையில் அமர்ந்தவாக்கிலே உறங்கியதை உணர்ந்தவனின் கால்கள் லேசாய் மரத்துப் போயிருந்தன. அதை மெதுவாய் நகர்த்தி உள்ளறையைவிட்டு வெளியே வந்தவன், சாவியை வைத்துப் பூட்டிவிட்டான். ஏனோ அந்த அறை அவனுக்கு மட்டுமேயானது. தனது மனதைப் போல அத்தனைப் பத்திரமாகப் பூட்டி வைத்திருப்பான். குழந்தைகள் என்றாலும் கூட உள்ளே நுழைய விடமாட்டான். தன்னுடைய இசைக் கருவிகளை தன்னைத் தவிர ஒருவரையும் வாசிக்கவும் அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிப்பானா? என்ற கேள்விக்கு என்னவோ எப்போதும் விடை சுழியமாக இருக்கும். ஆனால் இன்று உதடுகள் துளசி என முணுமுணுக்க, முகத்தை அஷ்டக் கோணலாக மாற்றினான்.

தன்னை சுத்தம் செய்து வந்த இளவேந்தன் அவளது நினைவுகளை விரட்ட, குழந்தைகளோடு பேசச் சென்றான். அவர்கள் பேச்சோடு பேச்சாக மீண்டுமொரு பயணத்திற்கும் பனிக்கூழ் மற்றும் திண்பண்டங்களுக்கும் திட்டமிட்டனர்.

“க்ருத்தவ், அனு... இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க?” என்ற சாம்பவி அவர்களை முறைத்தாள்.

“மாமா, வீ நீட் லீவ் டூடே...” என குழந்தைகள் முகத்தைச் சுருக்கினர்.

“க்கா... இன்னைக்கு லீவ் போடட்டுமே. நாளைக்கு நீ கிளம்பு!” என்றான் இளவேந்தனும். அவனது இரண்டு கரங்களும் பிஞ்சுக் கைகளுக்குள் பொதிந்திருக்க, அவனுக்கும் குழந்தைகளுடன் இருக்க வேண்டும் என்றொரு எண்ணம் முகிழ்த்தது.

“அட! இப்பதான் என் தம்பி பிஸினஸ் மேன் ஆகிட்டான். ஆஃபிஸ் கிளம்பி போய்டுவானே. யார் கூட குழந்தைங்க விளையாடுவாங்க?” சிரிப்புடன் உரைத்த தமக்கையை முறைத்தான்.

“ப்ம்ச்... முறைக்காத டா. போ, போய் ஆபிஸ் கிளம்பு. நாங்களும் இவங்களுக்கு லீவ் கிடைக்கும்போது வர்றோம்...” என்றவள், குழந்தைகளை உணவுண்ண வைத்து அழைத்துச் சென்றுவிட்டாள். அவர்கள் குடும்பமாய் விடை பெற, மகிழ் அலுவலகம் கிளம்பிவிட, தீக்ஷி ஆரண்யாவுடன் போராடிக் கொண்டிருந்தாள்.

இளவேந்தன் அலுவலகம் செல்லத் தயாராகி உணவுண்ண அமர்ந்தான். சரியாய் அவனுக்கருகே அமர்ந்த சைந்தவி, “அண்ணா, நீ ஆபிஸ் போகும்போது அப்படியே என்னை காலேஜ்ல ட்ராப் பண்ணிட்றீயா. இன்னைக்கு காலேஜ் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்...” என்றாள் கெஞ்சலாய். அவள் வார்த்தைகளை இளவேந்தன் கவனித்ததாய் தெரியவில்லை. அமைதியாய் உண்டான்.

“டேய் வேந்தா, உன்கிட்டதான் அவ கேட்குறா. போகும்போது அப்படியே அவளை இறக்கிவிட்றா!” என்ற தாயை முறைத்தவன், “இன்னைக்கு ஏன் லேட்டு?” எனத் தங்கையிடம் வினவினான்‌.

“அது... அது ண்ணா, இன்டர்னெல் எக்ஸாம் இன்னைக்கு‌. அதான் மார்னிங் எழுந்து படிச்சுட்டே இருந்தேனா, டைம் பார்க்க மறந்துட்டேன்!” என்றவளின் வார்த்தைகளில் துளியும் மெய்யில்லை என்று உணர்ந்தவன் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, “போகலாம் வேந்தா...ரொம்ப பண்ற நீ...” என அவனை சமாதானம் செய்தாள் தங்கை. ஆனாலும் இவனது சந்தேகப் பார்வை அவளை மொய்த்தது.

சந்தனவேல் அரசியல் பின்புலத்தில் இருப்பதால் எப்போதும் பிள்ளைகளை தங்கள் கண்காணிப்பிலே வைத்திருப்பார். ஆனால் சைந்தவி அவரிடம் அடம்பிடித்து கல்லூரி பேருந்தில் செல்ல அனுமதி வாங்கி, அதில் தான் சென்று வருகிறாள். திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இளநிலை மருத்துவம் இறுதியாண்டில் இருக்கிறாள் அவள். இன்று வேண்டுமென்றே கல்லூரி பேருந்தை தவறவிட்டிருந்த தங்கையின் எண்ணம் இவனுக்கு நொடியில் புரிந்திருந்தது.

இருவரும் உண்டுவிட்டு கிளம்பினர். மகிழுந்து வீட்டின் வாயிலைக் கடந்ததும், தொண்டையைச் செருமிய சைந்தவி கல்லூரி பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்தாள்.

“வேந்தா, இது என்னென்னு தெரியுமா? உனக்காகத்தான் நோட்ஸ் எடுத்தேன்!” என்றவளின் உதடுகளில் குறும்பான புன்னகை. அவளைத் திரும்பிக் கேள்வியாய் நோக்கினான்.

“பிசியலாஜிக்கல் சைன்ஸ் அண்ட் சிம்ப்டம்ஸ் ஆஃப் லவ்... ஹம்ம், காதல் வந்துச்சுன்னா, இந்த அறிகுறியை வச்சு கன்பார்ம் பண்ணலாம்னு நிறைய ஜீனியஸ் சொல்லி இருக்காங்களாம்...” என இழுத்தவளை முறைத்தவன், “அமைதியா வா சைந்து...” என்றான் அதட்டலாய்.

“அட! இந்த அதட்டல் எல்லாம் இங்க வேணாம் பையா. நீ நேத்து வராத காலை எடுத்துப் பேசிட்டு நைட்டு எங்கப் போனேன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? ஆல் டீடெயில்ஸ் ஐ க்நோ...” என்றாள் மிதப்பாய். இளவேந்தன் நெற்றியை கோதியவாறே அவளைத் திரும்பி முறைக்க முயன்றாலும் முடியவில்லை. அகப்பட்டுக் கொண்ட திருடன் போல மனம்
பரபரத்தாலும் அதை கிடப்பில் போட்டவன், “உன்னை அமைதியா வர சொன்னேன் சைந்து...” என அழுத்தமாய் உரைத்தான்.

“ஆக... நீங்க அக்செப்ட் பண்ண மாட்டீங்க. அதானே ப்ரோ, சரி விடுங்க. உங்களுக்காக இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் கூட உண்டு!” என்றவளின் பேச்சில் வேந்தனின் நெற்றி கேள்வியாய் சுருங்கினாலும் பார்வையை பாதையிலிருந்து அகற்றவில்லை.

“என்னுயிரே என்னுயிரேன்னு நம்ம ஷாரூக்கான் பாடுவாரு இல்ல? அந்தப் பாட்டைக் கேளு வேந்தா. காதல்ல மொத்தம் ஏழு ஸ்டேஜ். இப்போ நீ இருக்குறது ஃபர்ஸ்ட் ஸ்டேஜ்... தட் இஸ் அட்ராக்சன். செகண்ட் ஸ்டேஜ் இன்பாக்சுவேஷன்... அப்புறம் மூனாவது ஸ்டேஜ் ரொம்ப இப்ம்பார்டென்ட் ஒன்னு. அதான் லவ்!” என்று சைந்தவி கூறியதும் இவனது கரங்களில் மெல்லிய நடுக்கம் பிறக்க, நேற்றைக்கு துளசியைக் கண்டதும் தோன்றிய உணர்வு இப்போதும் அவனை திகைக்க வைத்து, தடுமாறி சிந்தனையை சிறை செய்திருந்தது. வாகனத்தை நிறுத்திவிட்டான் வேந்தன். முகத்தில் கோப ரேகைகள் படரத் தொடங்கின.

பேசிக்கொண்டே சென்ற சைந்தவி அவனது முகத்தைப் பார்த்து வார்த்தையை விழுங்கிவிட்டாள். “சைந்து, ஷட் அப்! காலேஜ் படிக்கிற வயசுல இதெல்லாம் உனக்கு தேவையில்லாத பேச்சு. அமைதியா வர்றதா இருந்தா என் கூட வா. இல்லைன்னா கீழே இறங்கு...” என்றவன் வார்த்தைகளில் அனல் தெறிக்கவும், இவளுக்கு முனுக்கென்றுவிட்டது.

“ஏன், ஏன் என்னால தனியா போக முடியாதா என்ன? நான் பஸ்ல போய்க்கிறேன். உன்னோட உதவிக்கு நன்றி!” என்று பதிலுக்கு கோபமாய் இரைந்த சைந்தவி கதவில் கைவைத்து வெளியே இறங்கிவிட்டாள்.

“மகியும் அம்மா பார்க்குற பொண்ணைக் கட்டிக்கிட்டான். இந்த அக்காவும் அப்பா பார்த்து சொன்னதும் மாமாவைக் கண்ல பார்க்காமலே ஓகே சொல்லிட்டா. சரி இவனாவது லவ் பண்றானேன்னு ஹெல்ப் பண்ண போனா, ரொம்ப பண்றான் இந்த வேந்தா. போ டா... போ இப்ப என்கிட்ட கத்துன நீதான் ஒருநாள் அந்தப் பொண்ணு முன்னாடி பேச முடியாம திக்கித் திணறுவ. இது என் சாபம் ண்ணா!” எனத் தமையனை மனதில் திட்டிக்கொண்டே அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றாள்.

இளவேந்தன் சில நொடிகளில் தன்னை நிதானித்தவன், “சைந்து...” எனப் பல்லைக் கடித்தவாறு இறங்கி தங்கையை நோக்கி நகர்ந்தான்.

தன்னருகே வந்து நிற்பவனைப் பொருட்படுத்தாத சைந்தவி பேருந்து வருகிறதா என எட்டிப் பார்க்க, “சைந்து, வந்து கார்ல ஏறு!” என்றான் அதட்டலாய்.

“ஒன்னும் தேவையில்லை வேந்தா, நீ கிளம்பு. எனக்கு காலேஜ் போக வழித் தெரியும்!” என சடைத்தாள் இவள்.

“சைந்து, ரோடுன்னு பார்க்க மாட்டேன். அடிச்சுடுவேன், அடம்பிடிக்காம என் கூட வா‌. பஸ்ல போய் உனக்குப் பழக்கம் இல்ல...” என்றான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு.

“எல்லாரும் பழகிட்டா வர்றாங்க. ஐ வில் மேனேஜ்!” என்றவளின் வார்த்தைகள் பாதியில் நின்றிருந்தன.

“டிக்கெட் பின்னாடி எழுதியிருக்கேன் மா. அடுத்த பஸ்ல போங்க...இந்த பஸ் இதுக்கும் மேல மூவ் ஆகாது!” என்ற நடத்துநர் ஒவ்வொருவராய் பேருந்திலிருந்து இறக்கிவிட, துளசியும் அந்தப் பேருந்திலிருந்து இறங்கினாள்.

‘கடவுளே! இன்னைக்கும் லேட் தானா?’ மனம் பதற, விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தன. அடுத்த பேருந்து எப்போது வருமோ? என்ற எண்ணத்தில் கைக்கடிகாரத்தையும் சாலையும் மாற்றி மாற்றிப் பார்த்த வண்ணமிருந்தாள் துளசி.

“ண்ணா... உன் ஆளு!” தன்னுடைய கோபத்தை மறந்த சைந்தவி வேந்தனின் கைகளை சுரண்டினாள். அவளது குரலை அவதானித்தாலும் அவனுக்குப் புரியலை.

“ப்ம்ச்... வேந்தா, அந்தக் கூட்டத்துல பேபி பிங்க் கலர் சேரில நிக்கிறது உன் ஆளு. நல்லா பாருண்ணா!” என்றவள் வேந்தனது முகத்தைத் திருப்ப, அவனது பார்வையும் துளசியிடம் குவிந்தது. அவளைப் பார்த்ததும் இவனது புருவங்கள் இடுங்கின.
அவளது முகத்தில் பதற்றம் மேவியிருந்தது.

பேருந்து வருகிறதா என ஆராய்ச்சியிலிருந்த விழிகளின் மேல் இமைகள் நிமிடத்திற்கு பத்து முறையாவது அதன் இணையோடு சேர்ந்திருக்கும். இவனது பார்வை அங்கேயே தங்கிவிட, “அண்ணா, அவங்களும் நம்ப ஆபிஸ் தானே. பேசாம கூப்ட்டு போய் ட்ராப் பண்ணலாமா?” என்ற சைந்தவி சிரிப்புடன் தமையனது சிந்தனையைக் கலைத்தாள்.

அவளை முறைத்தவன், “பேசாம வா சைந்து...” எனத் தங்கையை இழுத்துச் சென்றுவிட்டான்.

சைந்தவியைக் கல்லூரியில் இறக்கிவிட்ட வேந்தனைப் பார்த்து நக்கலாய் சிரித்தவள், “பூனைக்குட்டி ஒருநாள் வெளிய வந்துதான் ஆகணும் ப்ரோ. அப்போ பார்த்துக்கிறேன்...” என எக்கி அவன் பையிலிருந்து ஐநூறு ரூபாய் தாளொன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்திருந்தாள். இவன் முகத்தை உர்ரென்று வைத்து அவளை முறைத்தான்.

நேரம் செல்வதை உணர்ந்து அலுவகலத்தை அடைந்தான். துளசி இன்னும் வந்திருக்கவில்லை என மனம் ஓரக்கண்ணால் அவளது இருக்கையைக் கண்டுவிட்டு உரைக்க, அதை கிடப்பில் போட்டுவிட்டு தனதறைக்குச் சென்றான்.

பேருந்திலேறி அலுவலகத்தை அடைய அரைமணி நேரத் தாமதமாகிவிட்டது துளசிக்கு. விரைவில் வந்துவிட வேண்டும் என்றுதான் அரைமணி நேரம் முன்பே கிளம்பினாள். ஆனாலும் விதி சதி செய்திருந்தது.
தாமதமான வருகைப் பதிவேட்டில் முகத்தையும் விரலையும் பதிந்தவள் தன்னிருகைக்கு வந்தாள்.

“என்ன டி, ஏன் இவ்வளோ லேட்?” தோழியொருத்தி வினவ, “பஸ்ல வந்தேன். அதான் லேட்டாகிடுச்சு!” என பதில் அளித்தவாறே கணினியை உயிர்ப்பித்தாள்.

வேந்தனும் அவளது தாமதான வருகையை கவனித்த வண்ணமிருந்தான். “இப்போ நம்ம பண்ணீட்டு இருக்க ப்ராஜெக்ட்ஸ் அண்ட் அதோட டிசைன் அண்ட் லே-அவுட் சார். சைட்ல இன்ஜினியர் பார்த்துப்பாரு. வொர்க்கர்ஸை அதி சார் கைட் பண்றாரு...” அஸீம் கூறியவற்றை தலையசைத்துக் கேட்டவன், ஒவ்வொரு கோப்பாகத் திறக்க, துளசி செய்திருந்த கட்டிட வடிவமைப்பு கண்களில்பட்டது.

“அஸீம், இதை யாரு டிசைன் பண்ணா... ஐ நீட் டீடெயில்ட் எக்ஸ்ப்ளனேஷன்!” என உதவியாளரிடம் கேட்டான்.

“இது... இந்த டிசைன் நம்ம ஷிவதுளசி பண்ணாங்க சார். நான் அவங்களை வர சொல்லவா?” எனக் கேட்டவரிடம் தலையை அசைக்க, அவளுக்கு அழைப்பு செல்லப்பட்டது.

தாமதமாக வந்ததற்குத்தான் கேட்கப் போகிறான் என்றெண்ணி உள்ளே நுழைந்தவளுக்கு அஸீமைக் கண்டதும் நிம்மதி பிறந்தது. அதைக் கண்டவன் இதழ் கடையோரம் புன்னகை முகிழ்க்க, “அஸீம், யூ மே கோ நவ்...” என்றான். அவள் நிமிர்ந்து அவனை கேள்வியாகப் பார்த்தாள்.

“ஹம்ம்... தேர்டி மினிட்ஸ் லேட்டா லாகின் பண்ணி இருக்கீங்க. வொய் திஸ் லேட்?” என இளவேந்தன் வினவ, சில நொடிகள் அவளிடம் அமைதி.

“பஸ் ப்ரேக் டவுன் ஆகிடுச்சு சார்!” என்றாள்.

“ஓஹோ‌... ஒவ்வொரு பஸ்ஸூம் இப்படி பிரேக் டவுன் ஆகி, ஒவ்வொரு ஸ்டாப்க்கும் ஹாஃப் அன் அவர் பெர்மிஷன் கொடுத்தா ஆஃபிஸ் என்னாகுறது மிஸ் துளசி?” என நக்கலாக வினவியவனை இவள் அமைதியாக நோக்கினாள்.

“வெல்... நீங்க லேட்டா வந்ததுக்கு பனிஷ்மெண்ட் என்னென்னா, ஆஃபிஸ் டைம் முடிஞ்சதும் நீங்க ஒரு எக்ஸ்ட்ரா ஹாஃப் அன் அவர் வொர்க் பண்ணுங்க...” என்றவனின் பதிலில் துளசியிடம் நொடி நேரம் திகைப்பு. இது போன்ற நடைமுறை இதற்கு முன்பு அலுவலகத்தில் இல்லையே என்றொரு பாவனை அவளது முகத்தில்.

“யெஸ்... இந்த பனிஷ்மெண்ட் இன்னைல இருந்து எக்ஸ்க்யூட் பண்றோம். அப்படி உங்களுக்கு எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்க்க விருப்பம் இல்லைன்னா, நோ இஷ்ஷூஸ். ஹாஃப் டே சேலரியைக் கட் பண்ணிடலாம். ரெண்டு சாய்ஸ் உங்களுக்கு, முடிவு உங்களோடது தான்!” என்றான். அவனுக்குத் தெரியும் அரைநாள் சம்பளத்தை இழக்க துளசி முன்வரமாட்டாள் என்று. அதனாலே வேண்டுமென்றே இப்படி பேசினான். இரண்டு தேர்வுகள் கொடுத்திருந்தவன், தன்னுடைய முடிவைத்தான் அவள் எடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் புன்னகைத்தான். அதன் அர்த்தத்தை அவனைத் தவிர ஒருவரும் அறியார்!

‘இவ்வளவுதானா நீ?’ என இன்றும் ஒரு பார்வையை வீசி அவனுக்குள்ளே இருக்கும் தன்னகங்காரத்திற்குத் தீனிப் போட்டவள், “ஹாஃப் அன் ஹவர் எக்ஸ்டரா வொர்க் பண்றேன் சார்!” என்றாள் அழுத்தமாய்.

அவளது பார்வையிலும் பேச்சிலும் சீண்டப்பட்டவன், “வெல், யுவர் விஷ். இப்போ இந்த டிசைன்ல எனக்கு சில டவுட்ஸ். அதை க்ளியர் பண்ணுங்க...” என்றவன் ஆதி முதல் அந்தம் வரை அத்தனை கேள்விகளை அவளிடம் கேட்டறிந்தான். வந்ததிலிருந்து துளசியை அமர சொல்லவே இல்லை. நிற்க வைத்தே கேள்வி கேட்டான். அனைத்திற்கும் பொறுமையாய் பதிலுரைத்தாள். அவளுக்கும் கோபம் வராமல் இல்லை‌. இருந்தும் அதை காண்பிக்க முடியாத இடத்தில் இருந்தாள். கோபம், ரோஷத்தைவிட இந்த வேலை அத்தனை முக்கி
யமாகப்பட்டது அவளுக்கு. குடும்பம் என்ற வார்த்தை அவளது கோபத்தை அர்த்தமில்லாமல் செய்திருந்தது.
 
Administrator
Staff member
Messages
1,104
Reaction score
3,173
Points
113
மதிய உணவு நேரம் கடந்ததும்தான் துளசியை விடுவித்தான். “ஓகே, நீங்க போங்க. எதுவும் டவுட்னா கூப்பிட்றேன்!” என்றவனுக்கு அதில் சந்தேகம் வேறு கேட்க எதுவுமில்லை என்பது புரிந்தது.

தலையை அசைத்து வெளியே வந்தவளுக்கு கால் வலித்து தொலைத்தது. “துளசி, லஞ்ச் சாப்பிட ஏன் வரலை. அவர்கிட்ட சொல்லீட்டு வந்து சாப்பிட்டு இருக்கலாம் இல்ல?” என்ற சந்தோஷ் அவளைக் கடிந்தான்.

“அவர் டவுட்ஸ் கேட்டாரு. அதை எக்ஸ்ப்ளைன் பண்ணீட்டு இருந்ததுல டைம் போய்டுச்சு சீனியர். நீங்க சாப்டீங்களா?” என வினவினாள்.

“நாங்க எல்லாரும் சாப்ட்டோம். சந்தோஷ் சார்தான் சாப்டலை. உனக்காக வெயிட் பண்ணாரு!” அவளின் தோழி தேனருவி கூறினாள்.

அவள் சந்தோஷை முறைத்தாள்.
“சீனியர், எனக்காக வெயிட் பண்ணது சரி. டைமாகும்னு தெரிஞ்சா சாப்பிட வேண்டியது தானே?” என மென்மையாய் கடிந்தாள்.

“ஹம்ம்... துளசி வராம நான் எப்போ சாப்பிட்டு இருக்கேன்!” சந்தோஷ் உதடுகளில் புன்னகை உதிர்ந்தன.

“வொர்க்கிங் டைம்... ஈவ்னிங் பார்த்துகலாமா சீனியர். எனக்குப் பசிக்கலை. என்னால நீங்களும் சாப்பிடலை!” என்றவளின் வார்த்தைகளில் வருத்தம் மேவியிருந்தது.

“ப்ம்ச்... ஒன் டே தானே? இனிமே இப்படி லஞ்ச் டைம் வந்தா, அவர்கிட்ட எக்ஸ்யூஸ் கேளு. ஏதோ புதுசா வந்த க்யூரியாசிட்டில அவர் வொர்க்ல மெர்ஜ் ஆகிட்டாரு போல!” என சந்தோஷ் யோசனையாய் உரைக்க, துளசிக்கு வேந்தனின் செயல்கள் புரிந்தாலும் அதை யாரிடமும் கூறவில்லை. இருவருமே அன்றைக்கு மதிய உணவுண்ணவில்லை.

மாலை வேலை நேரம் முடிந்து அனைவரும் நகர்ந்திருக்க, துளசி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறாகியிருந்தது. எப்போதும் போல இன்றும் கைப்பையைத் தேடி அதில் தன்னுடைய பொருட்களை எடுத்து அடுக்கியவளின் கரங்கள் காலையில் தனக்கு தண்டனை அளித்திருந்தவன் நினைவில் செயலிழந்து போயின. அரைமணி நேரம் மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அலுப்பாய் இருந்தது. மதியம் சாப்பிடாதது வேறு அடிவயிற்றில் அமிலம் சுரந்து கொண்டேயிருக்க, தண்ணீர் பொத்தலை எடுத்து வாயில் சரித்தாள்.

“துளசி, கிளம்பலாம்!” தன்னுடைய பையை வலது தோளில் மாட்டி இடதுபுறம் வழியே கைகளில் பிடித்திருந்த சந்தோஷ் அவள் முன்னே நின்றான்.

என்ன கூறுவது எனத் தெரியாது தயங்கியவள், “சீனியர் நீங்க கிளம்புங்க. எனக்குக் கொஞ்சம் பெண்டிங் வொர்க்ஸ் இருக்கு...” என்றாள்.

“எனக்குத் தெரியாம என்ன வொர்க் துளசி?” என முறைத்தான் சந்தோஷ். எட்டி அவளது கணினியை மூடச் சென்றவனின் கைகளைப் பற்றித் தடுத்தவள், “நோ, ஐ நீட் டூ வொர்க் ஹாஃப் அன் ஹவர் அஸ் அ பனிஷ்மெண்ட்!” என்றாள்.

“வாட்! என்ன பனிஷ்மெண்ட், எதுக்கு. யார் கொடுத்தாங்க?” என்று திகைத்தான். துளசி மெல்லிய குரலில் வேந்தன் கூறியதை விளக்கவும், சந்தோஷ்க்கு அவன்மீது கோபம் வந்தது.

“திஸ் இஸ் நாட் ஃபேர் துளசி...” என அவன் கூற, “ப்ம்ச்... தப்பு என் மேல்தான் சீனியர். ஃபைவ் மினிட்ஸ் லேட்டுனா பரவாயில்லை. ஹாஃப் அன் அவர் இல்ல, சோ நான் பஸ்ல போய்க்கிறேன். நீங்க கிளம்புங்க!” என்றாள்.

“இல்ல துளசி, வீட்ல எனக்கு எந்த வேலையும் இல்ல. ஐ கேன் வெயிட், நீ முடிச்சுட்டு வா!” என்றான் அழுத்தமாய்.

“சீனியர், அதெல்லாம் தேவையில்லை. உங்களுக்கு எதுக்கு சிரமம். நான் தனியா போய்க்கிறேன்!” துளசி மறுக்க, “ஹாஃப் அன் அவர் இல்ல துளசி, ஹாஃப் டேன்னாலும் நான் வெயிட் பண்றேன். உன்னை அப்படியெல்லாம் தனியா விட்டுட்டுப் போக முடியாது!” என்று அழுத்திக் கூறியவன் வெளியேற, இவள் அவனை வேதனையாய்ப் பார்த்தாள்.

இளவேந்தன் அறையைவிட்டு நகரவில்லை. அஸீமும் விடை பெற, அலுவலகத்தை அவர்கள் இருவர் மட்டுமே நிறைத்திருந்தனர். அவளுக்கு அழைத்து அறைக்கு வருமாறு பணித்தான்.

ஏற்கனவே கடந்த வாரம் அவர்கள் குழுமம் கட்டிக் கொடுத்த கட்டிடத்தின் வரைபடம் துளசிதான் வடிவமைத்திருக்க, அதன் உரிமையாளருக்கு ஆத்ம திருப்தி. இவனுக்கு அழைத்து அவர் புகழ்ந்திருந்தார். அதை எவ்வாறு வடிவமைத்தாள் என்பதை வேந்தன் கேட்க, துளசி விளக்கத் தொடங்க, இடையிடையே சந்தேகங்கள் கேட்டான்.

அரைமணி நேரத்தையும் கடந்துவிட, துளசியின் விழிகள் கடிகாரத்தில் படிந்தன. “சிக்ஸ் தேர்டி ஆகிடுச்சு. நான் கிளம்புறேன் சார்!” என்றாள். நீ கூறிய தண்டனை முடிந்துவிட்டது என்று விழிகள் அவனிடம் உரைத்தன.

“ப்ம்ச்..‌. ஒரு டென் மினிட்ஸ் துளசி. இதை ஃபுல்லா எக்ஸ்ப்ளைன் பண்ணீட்டு யு மே லீவ். இல்லைன்னா, நாளைக்கு நீங்க முதல்ல இருந்து சொல்லணும். சோ?” என்றவன் அவளைப் பார்க்க, கோபமாய் வந்து தொலைத்தது இவளுக்கு.
ஆனாலும் மறுக்காது வேலையைத் தொடர்ந்தாள். சந்தோஷ் நேரமாகிவிட்டது என இவளுக்கு மூன்று முறைக்கும் மேலே அழைத்துவிட, இளவேந்தன் முகத்தில் எரிச்சல்.

“பேசிட்டு வாங்க!” என்றான் சலிப்பாய். அலைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவள், “சீனியர், நீங்க கிளம்புங்க...” என்றாள்.

“ஏன் துளசி, டைம் இப்போ சிக்ஸ் பார்டி ஃபைவ். எப்போ உன்னை விட்றதா இருக்காரு அவரு...” என்று அவன் எரிச்சலாய்க் கேட்டான். அவன் முதன்மை பொறுப்பிலிருக்கும்போது மகிழ்வேந்தன் அவ்வப்போது வந்து கவனித்துக் கொண்டாலும் இவ்வளவு நேரம் யாரையும் வேலை வாங்க மாட்டான். இளவேந்தன் செயலில் இவனுக்கு ஏக எரிச்சல்.

“சீனியர்...” என துளசி பேச வரும் முன்னே சந்தோஷின் தாய் இரண்டு முறை அழைப்பில் வர, “ஒன் மினிட், அம்மா கூப்பிட்றாங்க. வெயிட் துளசி!” என அவருடைய அழைப்பை அப்படியே இணைத்தான்.

“சந்தோஷ், எங்கடா இருக்க. இன்னைக்கு அப்பாக்கு டாக்டர்கிட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்குனோம். உனக்கு ஞாபகம் இருக்கா?” என அவர் கேட்க, இவன் நெற்றியை சுருக்கினான்.

“அதும்மா... ஞாபகம் இருக்கு. வந்துட்றேன் மா!” என்றான்.

“சீக்கிரம் டா. டாக்டர் டைம்க்குத்தான் இருப்பாங்க.‌..” என அழைப்பைத் துண்டித்தார்.

“சந்தோஷ், இப்போ நீங்க வீட்டுக்கு கிளம்புறீங்க. இதுக்கும் மேல வெயிட் பண்றேன்னு நீங்க காத்துட்டு இருந்தாலும், நான் உங்கக் கூட வர்ற ஐடியால இல்லை. என்னை எனக்குப் பார்த்துக்கத் தெரியும். கிளம்புங்க!” என்றாள் அழுத்தமாய். அந்தக் குரலில் நீ செய்தே ஆக வேண்டும் என்ற காட்டாயம் இருக்க, இவன், “சரி துளசி, நான் கிளம்புறேன். நீ ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும்போது எனக்கு கால் பண்ணு. ரீச் ஆகிட்டதும் பிங் பண்ணு!” என்று கவலையாய் கூறவும், இவளுக்குத் தான், கோபமாய் பேசியதுதான் அவனுடைய இத்தகைய குரலுக்குக் காரணம் எனப் புரிந்தது. இருந்தாலும் இப்போதைக்கு வேறு வழி இல்லாததால் சரியென்று ஒப்புக்கொண்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு வேந்தன் அறைக்குள் நுழைந்தாள்.

சந்தோஷ் மகிழுந்து வெளியே சென்றதை கண்காணிப்பு கருவியில் பார்த்த வேந்தன், “ஹம்ம்... துளசி, நாளைக்குப் பார்த்துக்கலாம். இட்ஸ் கெட்டிங் லேட், உங்களுக்கும் டைம் ஆகுதுல்ல?” என்றான் போலியான அக்கறையைக் குரலில் தேக்கி. அதில் இவளது உதடுகளில் கசந்த முறுவல். அவன் முகத்தைப் பார்க்காது அப்படியே திரும்பி விறுவிறுவென தன்னிடத்திற்குச் சென்றவள், கைப் பையை எடுத்தாள். வேறு ஏதேனும் தவற விட்டிருக்கிறோமா? என சோதனை செய்தவளின் அருகே இளவேந்தன் வந்து நின்றான். அவனைக் கவனித்தாலும் தன் வேலையில் கருத்தாயிருந்தவள், கணினியை அணைத்து பூட்டினாள். இவன் அமைதியாய் அவளது செயல்களை அவதானித்தான். ஒரு கை கால்சராயிலிருந்த பையினுள்ளே விட்டிருக்க, மற்றக் கரத்தில் மகிழுந்து சாவி சிக்கியிருந்தது.

துளசி வெளியேற இவனும் அவள் பின்னே சென்றான். காவலாளி உள்ளே சென்று அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு யாரேனும் இருக்கிறார்களா? எனப் பார்த்துவிட்டு அலுவலகத்தைப் பூட்டினார்.

நேரம் கடப்பதை உணர்ந்தவள் விறுவிறுவென பேருந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தாள். பத்து நிமிடத் தொலைவில்தான் பேருந்து நிறுத்தம் இருந்தது. இளவேந்தன் மகிழுந்தை உயிர்ப்பித்தவன், துளசியை மறைப்பது போல வாகனத்தை நிறுத்தவும், ஒரு நொடி திடுக்கிட்டுப் போனாள் பெண். இவன் மகிழுந்தின் கண்ணாடியை இறக்கி, அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை உன்னை வீட்டிற்குச் சென்றுவிடுகிறேன் என்பது போலிருக்க, இவளது உதடுகளில் கேலிப் புன்னகை.

‘உன்னுடைய உதவி தேவையில்லை!’ என்பது போல ஒரு பார்வையை வீசியவள்,
ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காது அவனைக் கடந்து சென்று இவனது தன்முனைப்பைத் தூண்டிவிட்டாள். ‘ப்ளடி கேர்ள். ஐ டோண்ட் கேர் அபவுட் யூ!’ என மனதிற்குள் அரற்றியவன் மகிழுந்தின் வேகத்தில் தன் கோபத்தைக் காண்பித்தான்.

துளசி சென்று நிற்கவும் பேருந்து வரவும் சரியாய் இருந்தது. இரவு நேரம் என்பதால் கூட்டம் நிரம்பி வழிய, முன்புறம் நுழைந்து ஒரு கம்பியைப் பிடித்து நின்றாள். சுற்றிலும் ஆண்களும் பெண்களும் நெருக்கமாக இடித்துக்கொண்டிருந்தனர். கிடைத்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நின்றாள்.

மகளைக் காணவில்லை என வசுமதி பதற, சோனியா தமக்கைக்கு அழைத்துவிட்டாள்.
கைப்பையிலிருந்த அலைபேசியை அவளால் எடுக்க முடியவில்லை. இரண்டு முறைக்கும் மேலே அது அலற, தாயாகத்தான் இருக்கும் என கணித்தவளுக்கு, அவர்கள் தன்னைக் காணாது பதறிவிடுவார்கள் என்று புரிய, முழங்கையைத் தூக்கிப் பையிலிருந்த அலைபேசியை எடுக்க முனைந்தவள், பின்னிருந்த பெண்ணை இடித்துவிட்டாள்.

“ஏம்மா... விட்டா மூக்குல குத்திடுவ போல!” என அவர் கடிய, “சாரி... சாரி!” என்றாள் பதறியபடி. அலைபேசி வேறு தொடர்ந்து அலறியவண்ணமிருந்தது.

இருக்கையில் அமர்ந்திருந்த பெண்மணி ஒருவர், “எம்மா, பையைக் கொடு‌. நான் போனை எடுத்துத் தரேன்!” என அவளது பையை வாங்கி அலைபேசியை எடுத்துக் கொடுத்தார்.

“ஹலோ அக்கா, எங்க இருக்க கா. ஏன் லேட்டு?” சோனியா வினவினாள்.

“சோனி, பஸ்ல இருக்கேன். கொஞ்ச நேரத்துல வந்துட்றேன். வேலை முடிய நேரமாச்சு அதான்!” துளசி முடிந்தளவு குரலை உயர்த்திப் பேசினாள். இருந்தும் பேருந்திலிருந்த ஆட்களின் சத்தத்தில் சோனியாவின் செவியில் அது மெதுவாகத்தான் விழுந்தது.

“சரிக்கா... நான் பஸ் ஸ்டாண்ட் வரவா?” சோனியா வினவ, “இல்ல... இந்த நேரத்துல நீ தனியா வர வேணாம். நானே வந்துட்றேன்!” என்றாள்.

“சரிக்கா... பத்திரமா வா” என சின்னவள் அழைப்பைத் துண்டிக்க, அரைமணி நேரத்தில் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கினாள் துளசி. அந்தத் தெருவில் யார் கண்ணையும் உறுத்ததாத வகையில் மகிழுந்தை நிறுத்தியிருந்த இளவேந்தனுக்குத் தன் மீதே அத்தனைக் கோபம். வீட்டிற்குச் செல்லலாம் என நினைத்தாலும் சத்தியமாய் முடியவில்லை அவனால். இந்தப் பெண்ணின் பின்னே மனம் சென்று தொலைத்தது. அதைவிட துளசி வீட்டிற்குப் பத்திரமாக சென்றுவிட்டாளா? என மனதிற்குள் சிறு பரிதவிப்பு. என்னப் பெயர் வைப்பது எனத் தெரியாது திகைத்து திணறித்தான் போனான்.

துளசியின் கால்கள் வீட்டை நோக்கி நடக்க, ஆங்காங்கே வீட்டின் வெளியே விளக்குகள் மிளிர, தெருவோரம் மின்விளக்கும் எரிந்தது.

‘சீனியர் காலிங்!’ என அலைபேசி திரை மின்ன, அதை ஏற்றுக் காதில் பொருத்தினாள்.

“எங்க இருக்க துளசி. வீட்டுக்குப் போய்ட்டீயா?”

“ஹம்ம்... சீனியர். இதோ ஐஞ்சு நிமிஷத்துல போயிடுவேன்...”

“சாரி துளசி, இங்க நான் இருக்க வேண்டிய சிட்சுவேஷன்” சந்தோஷ் குரலில் ஏனோ வருத்தமும் குற்றவுணர்வும் இருந்தன.

“ப்ம்ச்... சீனியர். அதான் நீங்களே சொன்னீங்களே! உங்களோட ப்ரசென்ஸ் அங்க ரொம்ப இம்பார்டென்ட். அதனால சாரியெல்லாம் வேணாம்...” என்றவள், “நானும் சாரி. கொஞ்சம் கோபமா பேசிட்டேன்!” என்றாள். பின்னர் அவனது தந்தை உடல்நிலையைக் கேட்டறிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அவளுக்குப் பக்கவாட்டில் ஏதோ நிழல் தெரிய திரும்பிப் பார்த்தாள். அவர்கள் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய் ஒன்று அவளுடன் நடக்க, இவளது இதழ்களில் புன்னகை மிளிர்ந்தது. அப்போதுதான் மதிய உணவு உண்ணாது அப்படியே இருப்பது நினைவு வர, கைப்பையிலிருந்த உணவை எடுத்து நாய் உண்ண ஏதுவாக நெகிழியில் வைத்தாள்.

அவளையும் உணவையும் மாறி மாறி பார்த்த நாய் உண்ணத் தொடங்க, இவள் கையைக் கட்டி நின்று சின்ன சிரிப்புடன் அதைப் பார்க்க, இளவேந்தன் அவளைப் பார்த்தான்.

விளக்கொளியில் தெரிந்த அவளது நிழலில் பார்வைப் படர்ந்தன. முகத்திலே அத்தனை சிறியதாய் இருந்தன கண்கள். அதைத் தொடர்ந்து மூக்கு கொஞ்சம் கூர்மையாய் இருக்க, கன்னம் வற்றிப் போயிருந்தது. உப்பியிருந்தால் இன்னும் அழகாய் இருக்கும் என மனம் கூற, குவிந்து உயர்ந்திருந்த உதடுகளில் பார்வைப் பதிந்து நாசியில் இறங்கின.

நேரமாவதை உணர்ந்த துளசி நடக்கத் தொடங்க, இவனது ஆராய்ச்சி தடைபட்டிருந்தது. துளசி சில நிமிடங்களில் வீட்டை அடைய, சோனியா இவளுக்காகக் காத்திருந்தாள்.

“என்னக்கா நீ, எட்டரையாகிடுச்சு. என்ன வொர்க்னாலும் நாளைக்குப் பார்க்கக் கூடாதா?” என அவள் முறைக்க, இவள் பதிலுக்குப் புன்னகைத்தாள். வசுமதி மகளுக்கு குளம்பியைக் கொடுக்க, தன்னை சுத்தம் செய்து வந்து அதை வாங்கிப் பருகினாள்.

“க்கா சேலரி அதுக்குள்ளேயும் கிரெடிட் ஆகிடுச்சா?” என்ற சோனியாவின் கேள்வியில் அலைபேசியை வாங்கிப் பார்த்தாள் துளசி. காலையிலே அந்த மாத சம்பளம் வங்கிக் கணக்கில் ஏறியதற்கான குறுஞ்செய்தி வந்திருக்க, இவள் கவனிக்காது விட்டிருந்திருக்கிறாள். அதைப் பார்த்ததும் அவளறியாது நிம்மதி பிறந்தது. நாளை முதல் இருசக்கர வாகனத்திலே அலுவலகம் செல்லலாம் என்ற எண்ணம் சிறிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. அரைமணி நேரப் பேருந்து பயணத்திலே அத்தனையாய் அயர்ந்து போயிருந்தாள்.

***

“ஏன் டா ஆபிஸே ஆறுமணிக்கு முடிஞ்சிடும். நீ என்ன எட்டு மணிக்கு வர்ற?” மடிக்கணினியில் ஏதோ வேலையாய் இருந்த மகிழ், இளவேந்தன் உள்ளே நுழைய அவனை முறைத்தான்.

“ப்ம்ச்... முதல்ல ஆஃபிஸ்க்குப் போகலைன்னு குறை சொன்னீங்க. இப்போ ஆஃபிஸ் போய் ஒழுங்கா வேலை பார்க்குற பையனை ஏன் லேட்டுன்னு கேள்வி கேட்குறீங்க. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க?” தீக்ஷிதா கணவனிடம் இரைந்தாள்.

வேந்தன் அவர்களது சண்டையை சின்ன சிரிப்புடன் பார்த்து நீள்விருக்கையில் அமர்ந்தான். தீக்ஷிதா எப்போதும் அவனுக்கு ஆதரவாகத்தான் பேசுவாள். அவள் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே வேந்தன்தான் எங்கு சென்றாலும் அவளை அழைத்துச் சென்று வருவான். குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும்போது கூட இவன்தான் சென்றான். அவர்களுக்கு இடையில் நல்ல நட்பு மலர்ந்திருந்தது.

மகிழ் வேலையைக் காரணம் காட்டி வர மறுத்துவிடுவான். அதனாலே அவனது அண்ணாவிற்கும் அண்ணிக்கும் சின்ன சின்ன சண்டைகள் வரும். இவன் சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருப்பான்.

“வந்ததும் வராததுமா புள்ளையைத் திட்டாத டா!” நளினி பெரிய மகனை முறைத்தார். “வேந்தா, நீ போய் குளிச்சுட்டு வா டா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!” என்றவருக்குத் தலையை அசைத்துவிட்டு குளித்து வந்து உண்டான்.

அவனருகே அமர்ந்து பரிமாறியவர், “ஏன் வேந்தா இவ்வளோ நேரம், வேலை நிறையா இருக்கா?” என அக்கறையாய் வினவினார்.

கூடத்திலிருந்த பெரிய நீள்விருக்கையில் ஒருபுறம் தலையை வைத்து மறுபுறம் காலை நீட்டியபடி படுத்திருந்த சைந்தவியின் மேலே ஆரண்யா அமர்ந்திருந்தாள்‌. “ஹக்கும்.‌.. ம்மா உன் புள்ளைக்கு ஆறுமணிக்கு மேலே முக்கியமான வேலை எதுவும் வெளிய இருக்கும்மா. நீதான் கேட்கணும்!” என்றாள் கத்தியபடி. அதில் அனைவரது கவனமும் இவனிடம் குவிந்தது.

தங்கையை முறைத்தவன், “அவ ஏதோ சும்மா சொல்றா மா. நீ சாம்பாரை ஊத்து!” என்றான் பல்லைக் கடித்து.

அதில் நமட்டுச் சிரிப்பு சிரித்த சைந்தவி, “ஹக்கும்... அண்ணா, அந்த ஏழு ஸ்டெப்ஸ் என்னென்னுப் பார்த்தீயா. இன்னும் நீ ஃபர்ஸ்ட் ஸ்டெப்லயே இருக்க. தத்தியா வேந்தா நீ? இந்த உலகம் உன்னை அறிவாளின்னு நம்புது!” என்றவளின் நக்கலில் வேந்தனுக்கு கொஞ்சம் உள்ளே பரபரத்தது.

“ஏய், என்னடி ஏழு ஸ்டெப். நீ விளையாட்ற கேம் எதுவும் அவனுக்கு கத்துக் கொடுக்குறீயா?” நளினி மகளை முறைக்க, “ப்ம்ச்... இது நான் விளையாட்ற கேம் இல்லை மா. உன் மகன் மட்டும் தனியா விளையாட்றாப்புல. நான் ஐடியா கொடுக்கேன். அவ்வளோதான்!” என்றவள் பேச்சில் எரிச்சலான வேந்தவன், உணவு உண்டு எழுந்துவிட்டான்.

“அதென்ன டி அவன் மட்டும் விளையாட்றது?” நளினிவிடாது கேட்க, “நீ ஓல்ட் லேடி மா. நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட!” என்று சைந்தவி கூறவும், “அடிக் கழுதை...” எனப் பெரியவர் அவளை முறைத்தார்.

“அத்தை... அது என்ன கேம், நான் விளையாடலாம் இல்ல?” காதருகே கிசுகிசுத்த ஆராண்யாவைப் பார்த்து சிரிப்புப் பொங்கியது அவளுக்கு.

“கண்டிப்பா ஆரு. ஆனால் நீ பிக் கேர்ள் ஆகணும். ஹம்ம், வேணும்னா போய் உன் சித்தப்பாட்ட கேளு...” எனக் குழந்தையை அவனிடம் அனுப்பி வைத்தாள்.

இளவேந்தன் அறைக்குள் நுழைந்து அப்படியே பொத்தென அமர்ந்துவிட்டான். சைந்தவி பேச்சில் எரிச்சல் கோபம் வந்தாலும் மனதினோரம் மழைச்சாரல் வீசாமல் இல்ல. அது என்னவெனத் தெரியாது தடுமாறினான்.

“சித்தப்பா...” என உள்ளே வந்து அவனைக் கட்டிக்கொண்ட ஆரண்யா, “நானும் அந்த ஏழு ஸ்டெப்ஸ் கேம்க்கு வரேனே!” என்றாள் ஆசையாய்.

எல்லாம் சைந்தவி வேலை என்று புரிந்தவன், ‘அவளை!’ எனப் பல்லைக் கடித்தான். குழந்தையை ஏமாற்ற மனமில்லாதவன், “ஹம்ம்... ஆருமா, வீக்கெண்ட் நம்ம வெளிய போகலாமா? நீங்க கேட்ட பிளே ஸ்டேஷன் சித்தப்பா வாங்கித் தரேன். அதுல விளையாடுங்க!” என அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான்.

மனம் நிலையில்லாது தவிப்பது போலிருக்க, தலையைப் பரபரவென தேய்த்துக் கொண்டான். கைகள் தன்போல் உள்ளறைச் சாவியை கையிலெடுக்க, நேற்றுப் போல இன்று கைகளில் துளி நடுக்கம், திணறல், மனதின் வெறுமை என எந்தக் காரணிகளும் அவனைப் பாதிக்கவில்லை. விரல்கள் இயல்பாய் கிட்டாரில் என்னுயிரே பாடலை இசைக்கத் தொடங்கின. விழிகளை அணைத்தப் பெண்ணை உடலும் ஸ்பரிசிக்கத் தூண்ட, அவளுக்கான ஏக்கம் இப்போதே ஆடவனிடம் தொடங்கியிருந்தது.

“பிரியங்கள் எல்லாம்
உரியவரிடத்தில்
சேர்ந்துதானே
ஆகவேண்டும்,
காதலாகவோ?
இல்லை
கண்ணீராகவோ?”

“என்னுயிரே என்னுயிரே
என் ஆருயிரே,
என்னுயிரே என்னுயிரே
என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகதே
என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம்
ஏழு நிலை
இது எந்த நிலை என்று
தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை!
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு!”

தூறும்...
 
Top