• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by SHALU

  1. SHALU

    36. விலோசன விந்தைகள்

    அதற்குப் பிறகான நாட்களில், அற்புதன் மற்றும் யக்ஷித்ராவிற்கு இடையேயான புரிதல் இன்னும் அதிகமாகிக் கொண்டே போனது. சின்னச் சின்ன விஷயங்களைக் கூடத் தங்களது இணைகளுக்காகச் செய்வதில் பரவசம் அடைந்தனர் இருவரும். தன்னுடைய பணி நேரம் இரவில் இருந்தாலும் கூடத் தனது மனைவியை வண்டியில் ஏற்றிக் கொண்டு அவளது...
  2. SHALU

    35. விலோசன விந்தைகள்

    அவர்கள் இருவரும் தங்களது பள்ளிக்குச் சென்று விட்டால் தான் உலகத்தையே மறந்து விடுவார்களே? இப்போதும் அதைத் தான் செய்து கொண்டு இருக்கிறார்கள் யக்ஷித்ரா மற்றும் நிவேதிதா. பள்ளியினுள் நுழைந்ததும் தங்களுடைய வகுப்பிற்குத் தான் போனார்கள். அங்கே இவர்களுக்குப் பாவாடை, தாவணிக் கொடுத்த மாணவியோ,”ஹேய்...
  3. SHALU

    34. விலோசன விந்தைகள்

    “என்னங்க?” என்று அவரை அழைத்ததும், தலையைத் திருப்பித் தனது மனைவியைப் பார்த்து,”நீ சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்டுத் தான் இருந்தேன். அப்போ அந்த ஃபங்க்ஷன் முடிஞ்சதும் நான் போய் உன் பொண்ணைக் கூட்டிட்டு வரனும் அதான?” என்று அவரிடம் வினவினார் கிரிவாசன். “ஆமாம் ங்க” என்று அவருக்குப் பதிலளித்தார் மீனா...
  4. SHALU

    33. விலோசன விந்தைகள்

    “நீ இவ்வளவு சிரமப்பட்டு இந்த டிரெஸ்ஸை எனக்கு வாங்கித் தரக் காரணம் என்ன?” என்று அவளிடம் வினவியவளிடம், “உன்னோட சந்தோஷத்துக்காகத் தான்னு உங்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேனே!” என்று தன்னிடம் இயல்பாக கூறிய தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுக்கத் தொடங்கி விட்டாள் யக்ஷித்ரா. “அச்சோ! எதுக்கு...
  5. SHALU

    32. விலோசன விந்தைகள்

    அந்தப் புத்தர் சிலையை வாங்கிப் பார்த்த அவளது கணவனோ”ஓஹ்! உனக்குப் புத்தர் - ன்னா ரொம்ப பிடிக்குமோ?” என்று கேட்டு விட்டு அதை வாங்கிப் பார்த்தான். “ஆமாம் ங்க” என்றாள் யக்ஷித்ரா. “அழகாக இருக்கு” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தான் அற்புதன். “இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு ங்க. நாங்க ரெண்டு பேரும்...
  6. SHALU

    31. விலோசன விந்தைகள்

    உடனே,”இதைக் கேட்கவே எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்குடா! அந்தப் பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்ததில் இருந்து அவளோட கண்ணில் ஏதோ ஒரு சோகம் இருந்ததைப் பார்த்திருக்கேன். அதை உங்க அம்மாகிட்டே சொல்லவும் செஞ்சேன். ஆனால், இங்கே வந்தவுடனேயே அவகிட்டே கேட்க...
  7. SHALU

    30. விலோசன விந்தைகள்

    அவன் கிளம்பிச் சென்றவுடன், அவர்கள் மூவரும் அமர்ந்து பொதுவான விஷயங்களைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டனர். அதன்பின், அவர்களைத் தொந்தரவு செய்யாமல் மீனாவும், யாதவியும் தத்தமது வேலைகளைச் செய்யப் போக எத்தனித்த சமயத்தில், “நீங்களும் எங்க கூட உட்கார்ந்து பேசலாம்ல?” என்றாள் நிவேதிதா. “இல்லை ம்மா...
  8. SHALU

    29. விலோசன விந்தைகள்

    தனது புற அழகு மற்றும் உடல்வாகைப் பார்த்து நகைத்துக் கிண்டல் செய்பவர்களுக்கு மத்தியில் தன்னுடைய ஆரோக்கியமாக மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்த நிவேதிதாவை எண்ணிப் பார்த்தவளோ, தனக்கும் ஒரு ஆருயிர்த் தோழி கிடைத்து விட்டாள் என்று பெருமிதம் அடைந்தாள் யக்ஷித்ரா. இப்படியாக நாட்கள்...
  9. SHALU

    28. விலோசன விந்தைகள்

    அந்த அரை மணி நேரம் முழுமையாக முடிந்து விட்ட பிறகுத் தனது அலுவலகத்திற்குச் செல்லும் சமயம் வந்து விட்டதை உணர்ந்தவனோ, அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்தவனுக்கு, அதற்குப் பிறகுத் தான், தன்னுடைய மனைவிக்காக வாங்கிய பரிசுப் பொருளை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற விஷயம் ஞாபகம்...
  10. SHALU

    27. விலோசன விந்தைகள்

    அவனது கிண்டலை ரசித்தவளோ,”ஆமாங்க. நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போயிட்டு இருக்கோம். அப்போ லீவ் நாளில் தானே மீட்டிங்கை வச்சுக்க முடியும்?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா. “ஹேய்! நான் சும்மா தான் ம்மா அப்படி சொன்னேன்” என்று அவளிடம் சரணடைந்து விட்டான் அற்புதன். “நானும் நீங்கப் பேசினதை சீரியஸாக...
  11. SHALU

    26. விலோசன விந்தைகள்

    அதன் பின்னர், தனது அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் வீட்டிற்குப் போனவளோ, அங்கே தன்னுடைய கணவன் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு,”நான் வொர்க் முடிஞ்சு வர்றேன். நீங்க ஆஃபீஸூக்குக் கிளம்பிட்டு இருக்கீங்க!” என்று கூறித் தன் சோகத்தை அவனிடம் பகிர்ந்து...
  12. SHALU

    25. விலோசன விந்தைகள்

    இப்படியாக சில நாட்கள் கடந்த நிலையில், யக்ஷித்ராவிற்குப் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு வருவதற்கான நாள் கிட்டத்தட்ட அருகில் வந்து விட்டிருந்தது. அதனால், அவர்களது வகுப்பு ஆசிரியைகள் யாவரும் தங்களது மாணவிகளுக்குத் தேர்வின் மீதிருக்கும் பயத்தைப் போக்கும் வகையில் உரையாடிக் கொண்டு இருந்தனர்...
  13. SHALU

    24. விலோசன விந்தைகள்

    “உங்கப் பொண்ணோட முகத்தைப் பாருங்க” என்று தன் மாமியாரிடம் கூறினான் அற்புதன். அதைக் கேட்ட மீனாவோ, தன்னுடைய மகளைப் பார்க்க, அவளது கூம்பிப் போன முகம் காணக் கிடைத்தது. உடனே அவளருகே சென்று,”நம் இப்படி முகத்தை வச்சிட்டு இருந்தால் நாங்க எப்படி கிளம்பறது? அடிக்கடி வந்துட்டுப் போவோம்ன்னு சொன்னேன்ல...
  14. SHALU

    23. விலோசன விந்தைகள்

    தங்கள் வீட்டு வாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டதும், வெளியே வந்து, அங்கே தன்னுடைய தாயும், தங்கையும் ஆட்டோவில் இருந்து இறங்குவதைப் பார்த்தவுடன்,”ம்மா! யாது!” என்று குதூகலித்த மகளைக் கண்டதுமே, “யக்ஷிம்மா!” எனத் தன் மூத்த மகளை உச்சி முகர்ந்து கொண்டிருந்தார் மீனா. அந்தச் சமயத்தில், வீட்டினுள்...
  15. SHALU

    22. விலோசன விந்தைகள்

    “நாம அவங்களுக்கு ஏதாவது சாப்பிட ஸ்நாக்ஸ் செஞ்சி எடுத்துட்டுப் போகலாமா டி?” என்று தன் மகளிடம் கேட்டார் மீனா. “ம்ம். எடுத்துட்டுப் போகலாம் மா. அக்காவுக்குப் பிடிச்சது எல்லாம் நமக்குத் தெரியும். மாமாவுக்கும், அவங்க அப்பா, அம்மாவுக்கும் என்னென்ன பிடிக்கும்ன்னு அக்காவுக்குக் கால் செஞ்சுக் கேட்கவா?”...
Top