“அப்போ உனக்கு என்னைவிட ரெண்டு வயசு கூடவா? நீ எனக்கு அக்காவா?” என சினம் மிகுந்த குரலில் கேட்டான் பரிதி.
“கத்தாத பரிதி. ரெண்டு வயசு மூத்தவன்னா அக்காவாகிடுவேனா?” அவள் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை போல. கைகள் தன் போல வேலையைப் பார்த்தன.
அந்த அலட்சியத்தால் உசுப்பப்பட்டவன், “வயசுக்கு மூத்தவளை அக்கான்னு சொல்லாம வேற என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற? ஏன் நீ இந்த விஷத்தை முன்னாடியே என்கிட்ட சொல்லலை?” அழுத்திக் கேட்டான்.
“ஏன் சொன்னா மேரேஜ் வேணாம்னு சொல்லிருப்பீயா என்ன?” எனக் கேட்டு நேற்று தங்கள் உடுத்திய உடையை தனியே துவைக்க எடுத்து வைத்தாள்.
“ஆமா… எவ்ளோ பிரச்சனை வந்தாலும் வயசுக்கு மூத்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன்!” அவன் பதிலில் புரியாது நிமிர்ந்தாள்.
“அறிவில்லையா இசை வாணி உனக்கு? தம்பி மாதிரி பார்க்க வேண்டியவன் கையால தாலி வாங்கிட்டு என் வீட்டுல வந்து உக்கார்ந்திருக்க? உனக்கே இது கூசலையா? தப்பா தெரியலையா?” அவன் அருவருப்புடன் முகத்தை சுளித்ததும், இவள் முகம் அவமானத்தில் சிவந்தது.
“ஷட் அப் பரிதி. வார்த்தையை விடாத. இது ஒன்னும் ரியல் மேரேஜ் இல்ல. ஜஸ்ட் அக்ரீமெண்ட்தான்!” அழுத்தி அவனுக்குப் புரிய வைக்க முயன்றாலும் அவன் பேச்சில் நிறைய காயம்பட்டிருந்தாள் இசைவாணி.
“உன்னோட மோட்டீவ் என்ன இசைவாணி?” அழுத்திக் கேட்டவன், “நமக்கு வயசாகிட்டே போகுது. கல்யாணமே ஆகாதுன்னு சின்ன பையனை வளைச்சு போட்டுடீயா?” எனக் கேட்டவன், கன்னத்தில் அவளது ஐந்து விரல்களும் பதிந்தன.
ஒற்றை விரலை நீட்டியவள் கண்கள் சிவந்திருக்க, அணைக்கட்டி நீர் நின்றது. “இதுக்கு மேல ஒரு வார்த்தைப் பேசுன, நான் மனுஷியா இருக்க மாட்டேன்!” என்றாள் இடறிய குரலை சரிசெய்து. வேண்டாமென தடுத்தும் கன்னத்தில் குபுகுபுவென நீர் இறங்கிற்று.
“சீ… அழுது சீன் போடாத. நீ செஞ்ச தப்பை கேட்டதும் என்னை கை நீட்டி அடிக்கிற? என்ன பொண்ணு டீ நீ? நான் உன்னை வேற மாதிரி நினைச்சேன். ஆனால் நீ ப்ளான் பண்ணித்தான் இந்த வீட்டுக்குள் வந்துருக்க. யார், யாரை எப்படி எப்படி கவர் பண்றதுன்னு கரெக்டா தெரிஞ்சு வச்சிருக்க? பட் இந்த பரிதி அவ்வளோ ஈசி கிடையாது. உன்கிட்ட மயங்க மாட்டான்!” என வலித்த கன்னத்தை தேய்த்தவன்,
“நீயா வந்து அக்ரீமெண்ட் அது இதுன்னு கதை உடும்போதே நினைச்சிருக்கணும். சைக்… நான் ஒரு ஏமாளி. எவளோ என்னவோ சொல்றான்னு என் வாழ்க்கையை பாழாக்கிட்டேன். இந்த விஷயம் மட்டும் வெளிய தெரிஞ்சா எனக்குத்தானே அசிங்கம். அக்கா மாதிரி பார்க்க வேண்டியவளைக் கரெக்ட் பண்ணிக் கல்யாணம் பண்ணிட்டான்னு என்னைத்தான் டீ அசிங்கமா பேசுவாங்க. உனக்கு ஒன்னும் இல்ல?” என்றவன் பார்வையில் வெறுப்பு மண்டிக் கிடக்க, இசைவாணி அவனை வெறித்தாள். பதிலேதும் உரைக்கவில்லை.
அவளருகே சென்று நின்றவன், “விசா வந்த கையோட உனக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப்பைக் கட் பண்ணிடுவேன். ஏதாவது அழுது ட்ராமா போட்டு என் கூடவே இருக்கலாம்னு நினைக்காத. சும்மா விளையாட்டுத்தனமா இருக்கேன்னு என்னைப் பத்தி தப்பு கணக்கு போட்டுட்ட நீ. கோபம் வந்தா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!” என்றான் அவளை உறுத்துப் பார்த்து.
கண்களில் வழிந்த நீரை சுண்டிவிட்டு அவனை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள், “என்ன பண்ணுவ?” என எள்ளலாகக் கேட்டாள். அவள் குரலிலிருந்த அலட்சியத்தில் இவனுக்கு கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது.
அவள் கழுத்திலிருந்த தாலியை வெளியே இழுத்தவன், “தரதரன்னு உன்னை இழுத்துட்டு போய் உங்கம்மா கண்ணு முன்னாடியே இந்த தாலியை அத்து எறிஞ்சுடுவேன்!” என்றான் குரூரமாக. அவன் கூற்றில் இவள் தேகம் அதிர, மீண்டும் கண்ணில் நீர் துளிர்த்தது.
முழு கதையை ஆடியோவாக கேட்டு மகிழுங்கள். லிங்க் 👇,