காதல் 23:
மகியால் தான் கண்டதை நம்ப முடியவில்லை. தன்னுடைய அகிலனா தனது தமையனா இது என்று அதிர்ந்து பார்த்தாள்.
அந்த காணொளியில் அகிலனும் வர்ஷினியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டிருந்தனர்.
இருவரது முகமும் அத்தனை தெளிவாக தெரிந்தது.
“பார்த்தியா உன் தம்பி பண்ணி இருக்க வேலைய” என்ற குருவின் குரலில் திரும்பி அவனை கண்டவளிடம் பதில் இல்லை.
அவளே ஏகமாய் அதிர்ந்திருந்தாளே. அவளால் அந்த காணொளியை நம்ப முடியவில்லை.
இருந்தும் அகிலன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவன் படிப்பதை விட்டுவிட்டு இப்படி ஒரு செயலை எந்த நிலையிலும் செய்ய மாட்டான்.
இந்த சிறிய வயதிலே தன் தம்பி எவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே என்று நிறைய இடங்களில் மகியே பெருமையாக எண்ணி இருக்கிறாள்.
படிக்கும் போதே பகுதி நேர வேலை மகிக்கு வீட்டு வேலையில் உதவி செய்வது என்று எவ்வளவு பெறுப்பானவன். அவன் இந்த செயலை செய்திருப்பான் என்று கனவிலும் இவள் நம்ப மாட்டாள்.
மெல்ல விழிகளை துடைத்து கொண்டவள் நிமிர்ந்து,
“இந்த வீடியோல இருக்கது எல்லாம் பொய். எ… எனக்கு என் அகிலை பத்தி நல்லா தெரியும். அவன் எந்த காலத்திலயும் இப்படி ஒரு காரியத்தை பண்ண மாட்டான்” என்று அவனது முகம் பார்த்து கூறினாள்.
“லக்சரியஸ் லைஃப்க்கு ஆசைப்பட்டு ரெண்டு பேரும் பிளான் பண்ணி எல்லாத்தையும் செஞ்சிட்டு இப்போ எதுவும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்றிங்களா…? பிளான் போட்டு என் தங்கச்சியை ஏமாத்தி இருக்கிங்க. ட்ரெய்ட்டர்ஸ்…” என்று பல்லிடுக்கில் வார்த்தையை துப்பியவனது முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.
“நான் செஞ்ச எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி தான் இப்படி கேவலமா நடந்துக்க உங்களுக்கு மனசு வந்தது. இவ்ளோ சேஃபான ப்ளேஸோட இந்த சேலரில யார் உனக்கு வேலை கொடுப்பா. ஆனால் என் தாத்தா பாவம் பார்த்து கொடுத்தாரு. அதுக்கு தான் நல்லா திருப்பி கொடுத்திட்டிங்க….” அக்னியின் ஜுவாலையுடன் வார்த்தைகள் வெளியே வந்தது.
மகியால் இதயத்தை கூறு போடும் அவனுடைய வார்த்தைகளை அதற்கு மேல் தாள முடியவில்லை.
‘பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாயா…?’ என்று வார்த்தையிலே மரித்து போயிருந்தாள்.
“போதும் ப்ளீஸ் சார். என்னால முடியலை. ஏற்கனவே நீங்க பேசுன வார்த்தையிலே நான் செத்துட்டேன். இனியும் என்னை காயப்படுத்தாதிங்க. எல்லா விஷயத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கும். என் தம்பி நிச்சயமாக எந்த தப்பும் செஞ்சிருக்க…” என்றவளது பேச்சில் இடை நுழைந்தவன்,
“ஷட் அப் இடியட். இதுக்கு மேலேயும் நீ எதுவும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்ணிட்டு இருந்த நான் மனுஷனா இருக்க மாட்டேன். ப்ச் என் கண்ணுல படாத. ஆத்திரத்துல எதாவது பண்ணிட போறேன்” என்று நெருப்பு துண்டுகளாய் வார்த்தைகளை கக்கியவன் விறுவிறுவென எழுந்து உள்ளே நுழைந்தான்.
குருவை கண்டதும் அறைக்குள் விளையாடி கொண்டிருந்த கவினும் எழிலும் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து,
“ப்பா அவேஞ்சர்ஸ் பாக்க போலாம்” என்று இரண்டு கால்களையும் பிடித்து கொள்ள,
காலையில் இனித்தது போல இப்போது குருவிற்கு இனிக்கவில்லை.
தன்னை முயன்று கட்டுபடுத்தியவன்,
“இன்னொரு நாள் போகலாம். ரெண்டு பேரும் போய் விளையாடுங்க” என்றிட,
“ம்ஹூம் இப்பவே போகணும்” என்று இருவரும் கோரஸ் பாட,
இம்முறை பொறுமை இழந்துவிட்டவன்,
“ஒரு தடவை சொன்னா புரியாதா…? போங்க ரெண்டு பேரும்” என்று கத்திவிட,