• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மோதும் மேகங்கள்-2

Messages
39
Reaction score
34
Points
18
மோதும் மேகங்கள் -2
வேகமாக சென்ற அந்த கார் அரண்மனைப் போன்ற வீட்டின் முன் நின்றது. அவன் அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் மூவர் அவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர். அவன் யாரயும் கண்டுக்காமல் மேலே அவனது அறைக்கு செல்ல, ராகுல் கை நீட்டி அவனை நிறுத்தி, "நாங்களாம் இருக்குறது துரைக்கு கண்ணு தெரியலயா ?" என வினவினான். கண்ணு தெரியாதா என ராகுல் கேட்டவுடன் அவனுக்கு இசை நியாபகம் வந்து கோபத்தில் இருந்தவன் இன்னும் கோபமாகி அவனது கைகளை தட்டிவிட்டு மாடி ஏறி சென்றான்.
சென்ற அவன் பின்னால் செல்ல போன ராகுலை நிறுத்திய சாரா ராகுலிடம், "அவன் தான் ஒன்னும் பேசாம போறான்ல. அவன கொஞ்சம் நேரம் விடு” என்றாள்.
"நான் என்ன பண்ணேனு கோச்சிக்கிட்டு போறான்? நியாயமா நாம தான் கோச்சிக்கனும்” என்றான் ராகுல்.
"சரி சரி கோச்சிக்காத. நா போய் அவன கூப்டுட்டு வரேன்" என்று கூறிவிட்டு ராகுலையும் தருணையும் சோபாயில் அமர வைத்துவிட்டு மேலேறி அவனது அறைக்குச் சென்றாள். அங்கே அவன் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனருகில் சென்று அமர்ந்து சாரா, "ஆதி என்னாச்சு ? பார்ட்டிக்கு லேட் ஆய்டுச்சி. சீக்கிரம் ரெடியாகி வா" என்றாள்.
ஆதி "நா வரல சாரா. நீங்க போய்ட்டு வாங்க” என்றான். இதற்கு மேல் அவனை எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைத்த சாரா, "சரிடா ஆதி. நீ ரெஸ்ட் எடு. நாங்க போய்ட்டு வரோம்" எனக் கூறிச் சென்றுவிட்டாள். அவன் இப்போது எதுவும் கூறமாட்டான், பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நன்றாக அவளுக்கு தெரியும் . சாரா ஆதியுடன் சிறு வயதிலிருந்தே இருப்பவள் ஆயிற்றே. ஆதியை பற்றி அவள் அறியாததா.

கீழே வந்த சாரா ராகுலிடமும் தருணிடமும் "அவனுக்கு மூட் அவுட், நம்மல மட்டும் போக சொல்லிடான்.
வாங்க கிளம்பலாம்” எனக் கூறினாள்.
"அத முதலியே சொல்லிருந்த என்ன?” என ராகுல் கேட்டான்.
“சரி விடுடா. அவனுக்கு ஒசி சோறு சாப்ட குடுத்து வைக்கல. நாம போய் என்ஜாய் பண்ணி ஸ்டேடஸ் போட்டு அவன வெறுப்பேத்தலாம் வாடா மச்சான்" என அவன் கையை பிடித்து இழுத்துக் சென்றான் தருண்.
மறுநாள் காலையில் பகலவன் பாரினுள் தன் ஆட்சியைத் தொடங்கினான். இசையின் வீட்டில் அவளது அம்மா கவிதா சமையலறையிலிருந்தே "இசை நில்லு. சாப்ட்டு போ” என்று கத்திக்கொண்டே கையில் தோசையுடன் வந்து இசைக்கு ஊட்ட ஆரம்பித்தார்.

அங்கே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த இசையின் தம்பி முகிலன் "அம்மா சட்னி சட்னி" எனக் கேட்டுவிட்டு அங்கே நடக்கும் காட்சியைக் கண்டு 'விட்டா இவளுக்கே மொத்தத்தையும் கொட்டிடுவாங்க' என்று முணுமுணுத்துக் கொண்டே சட்னி கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டான். 'அட சட்னிக்கு பிறந்தவனே' என கவிதா தலையில் அடித்துக் கொள்ள, முகிலன் 'நா உனக்கு பிறந்தவன் தான்மா. எனக்கும் இந்த வீட்ல உரிமை இருக்கு. இந்த சட்னிலயையும் உரிமை இருக்கு " எனக் கூறிவிட்டு சட்னியைப் போட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.

"போதும்மா. எனக்கு இன்டர்வியூக்கு (நேர்காணல்) போகனும்" என கிளம்புவதிலியே குறியாக இருந்தாள்.
"முதல சாப்ட்டுட்டு எங்க வேணாலும் கிளம்பு" என ஏதேதோ பேசிக் கொண்டே உணவை ஊட்டி முடித்தாள்.

"பாய் மா. நா இன்டர்வியூ முடிச்சுட்டு நேத்து பஞ்சர் ஆன பைக்க எடுத்துத்து வேற வரனும். பாய் மா” என கூறிவிட்டு இசை சென்றுவிட்டாள்.

"ஆனாமா எல்லார் வீட்லயும் பையனுக்கு தான் அம்மாங்க செல்லம் குடுப்பாங்க. நம்ம வீட்ல தான் அப்படியே தலைகீழா நடக்குது" என தோசையை வாயில் வைத்துக் கொண்டே கூறினான் முகிலன்.
"அவள பாத்தியா? வேலைனு வந்த சாப்பாட கூட மறந்து ஓடுறா ஆனா நீ இருக்குற வேலைய எல்லாம் மறந்துத்து சாப்பாட பத்தியே நினைச்சிட்டு இருப்ப. அதான் அவள கவனிக்கிறேன்" எனத் தோளை குலுக்கி கூறினார் அவனது பாசமிகு தாயார்.
"நமக்கு சோறு தான் முக்கியம்" எனக் கூறிவிட்டு உணவருந்துவதை தொடர்ந்தான் முகிலன்.
மாலை நேரத்தில் சூரியன் மெல்ல மெல்ல மறையும் வேளையில் இசை நேற்று இன்டர்வியூ நடந்த இடத்திற்கு சென்று தனது வண்டியை எடுத்துச் கொண்டு கிளம்ப எத்தனிக்க அவளது கைப்பேசி சிணுங்கவே அதை எடுத்து பார்க்காது அப்படியே காதில் வைத்தவள், "வரேன்டி” என்று கூறி வைத்துவிட்டாள்.
சிறிது நேரத்தில் ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற இசை அங்கே படப்பிடிப்புற்காக அமைக்கப்பட்ட செட்டை பார்த்து வியந்தாள். ஸ்வேதாவுக்கு அழைத்து எங்கே இருக்கிறாள் என இசை தெரிவிக்க ஸ்வேதா வந்து அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ஸ்வேதா ஏதோ வேலையாக இருக்கவே, தான் வெளியில் இருப்பதாக கூறிவிட்டு வெளியே வந்தாள் இசை.
அப்போது அங்கே காபி கப்புடன் போனில் பேசிக் கொண்ட வந்த ஒருவன் அவள் மேல் மோதி காபியை கொட்டிவிட அவள் கவனிக்கால் வந்ததால் தன்மேலும் தவறு இருக்கு என எண்ணி ‘சாரி' என கேட்க வாயெடுத்து நிமிர அவள் கண்டது சாட்சாத் ஆதியை தான்.
நேற்று தன் மேல் சேற்றை அடித்து விட்டு இன்றும் காபியை கொட்டிவிட்டு ஒரு சாரி கூட கேட்காமல் நின்றவனை பார்த்த இசைக்க கோபம் தலைக்கு ஏறியது.
"உனக்கு கண்ணுல ஏதாச்சும்
கோளாறா?” என கண்ணில் சினம் மின்ன கேட்டவளைப் பார்த்து "ஹே.உனக்கு நா யாருனு தெரியுமா?" என வழக்கமான கேள்வியையே கேட்டான்.
‘ஒருவேள லூசா இருப்பானோ? சொன்னதையே திரும்பி திரும்பி தேஞ்சிப் போன தேப்ரெகார்டர் மாதிரி சொல்லிட்டு இருக்கான்' என மனதில் நினைத்துக் கொண்டே 'இங்க பாருபா தம்பி. நீ கண் டாக்டர மட்டும் இல்லாம ஒரு நல்ல மனநிலை நிபுனுரையும் போய் பாக்கனும் . நா நீ யாருனு தெரியாதுனு சொன்ன அப்புறமும் அதே கேள்வி கேட்டுட்டு இருக்க' என்றாள்.
படப்பிடிப்பிற்கு முடியும் நேரமும் ஆதியின் நல்ல நேரமோ என்னமோ அங்கு யாரும் இல்லை. "இந்த டைம் தப்பு உன்மேல தான்.." என இருவருக்குள்ளும் வாக்குவாதம் நீண்டுக் கொண்டே போனது. அப்போது அங்கே வந்த ஸ்வேதா இசை ஆதியுடன் சண்டையிடுவதைப் பார்த்து இசையை சிறிது நேரம் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு ஆதியிடம், “சார் இவ என் ப்ரெண்ட் நீங்க யாருனு தெரியாம பேசிட்டா.. அவளுக்காக நா சாரி கேக்குறேன் சார்” என என்ன நடந்தது என்று கூட விசாரிக்காமல் தன் மேல் பழியை சுமத்திய தோழியை திட்ட வரும் முன் கை பிடித்து இழுத்து சென்றாள் ஸ்வேதா. செல்லும் இசையையே முறைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தான் ஆதி.
 
Top