• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மோதல் 20

Well-known member
Messages
248
Reaction score
448
Points
63
மோதல் 20


கோவையின் மேல்தட்டு மக்கள் பலரும் வசிக்கும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழும்பி நின்ற பல வானுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பல நூறு ஏக்கர்களுக்கு பரந்து விரிந்து காட்சியளித்தது அந்த நீலநிற கெஸ்ட்ஹவுஸ் பங்களா.

முன்னாள் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான அந்த வீட்டில் பல மாதங்களாகவே கணக்கில் அடங்காத பலவித குற்றங்கள் நடப்பதாக உளவுத்துறை மூலம் செய்தி ஒன்று வந்திருக்க, அவைகளை நன்கு கண்காணித்து உண்மை நிலவரத்தை அறியும் படி தான் மூர்த்தி மற்றும் பாலாவிற்கு கட்டளைகள் பிறப்பித்து இருந்தான் சத்யதீரன்.

அவன் பேச்சை அப்படியே ஏற்று அப்பகுதியை கண்காணிப்பதற்காக மாற்று உடையில் வந்திருந்த பாலாவும் மூர்த்தியும் ஒரு ஆட்டோவில் நின்றும் இறங்க,
அந்த காலை வேலையில் கூட ஆள்நடமாட்டம் இன்றி வெறுமையாக காட்சி அளித்தது அந்தப் பகுதி.

கூடவே அந்தப் பகுதியில் இருந்த அதிகப்படி தூய்மையும், அமானுஷ்யமான அமைதியுமே பாலாவிற்கும் மூர்த்திக்கும் உள்ளத்தில் ஒரு கலக்கத்தை உண்டு பண்ண, "என்ன மூர்த்தி சார் இந்த ஏரியால ஒரு ஈ காக்காவைக் கூட காணோம்?" என்று கேட்டுக்கொண்டே தன் கைத்துப்பாக்கியை எடுத்து முதுகின் பின்னே சொருகிக் கொண்டான் பாலா.

"ம்ம்ம்... தப்பு தண்டா பண்றதுக்கு இப்டி ஏரியாதானே செட் ஆகும் பாலா" என்று அவனுக்கு பதிலிறுத்த மூர்த்தியும், "இங்க இருக்கவங்க எல்லாமே பண முதலைங்க. ஒரு வீட்டுல என்ன நடக்குதுன்னு இன்னொரு வீட்டுக்காரன் எட்டிக் கூட பாக்க மாட்டான். அப்டியே பாத்தாலும் கண்ணு தெரியாத போலவே அவனவன் வேலையை பாக்க போயிடுவானுக." என்றவன், "இந்த கெஸ்ட்ஹவுசுக்கு ரெண்டு கேட் இருக்கு பாலா. நீ பின் கேட் பக்கம் நில்லு. நான் முன் பக்கம் போறேன். ஏதாவது வித்தியாசமா பட்டா உடனே போட்டோஸ் வீடியோஸ் எடுத்துடு. யார் கண்ணுலயும் பட்டிராத. தேவைப்பட்டா கன்னும் யூஸ் பண்ணு. சைலன்சர் பொருத்திருக்குள்ள?" என்று சீனியராய் அவனுக்கு சில அறிவுரைகளும் கூறியவன் அந்தத் தெருவின் மறுபுறம் சென்று மறைந்தான் மூர்த்தி.

மூர்த்தி கூறியது போலவே அங்கிருந்த ஒரு சந்தில் மறைந்து கொண்ட பாலா, அவன் சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பெரிய வீட்டின் முன்னால் மட்டும் சில உயர்ரக கார்கள், ஆட்டோ போன்ற வாகனங்கள் வந்து நிற்பதும், அதிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள் போல தோற்றம் கொண்ட பலரும் இறங்கிச் செல்வதும், மீண்டும் வந்து கிளம்புவதுமாகவும் இருக்க, "கடவுளே இங்க என்ன நடக்குதுன்னே தெரியலயே. எல்லாரும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மாதிரில இருக்காங்க" என்று அனைத்தும் ஒன்று விடாது வீடியோவாக பதிவு செய்தவன், அந்த வாகனங்களின் எண்களையும் தன் குறிப்பேட்டில் பதிவு செய்து கொண்டிருந்தான் பாலா.

அச்சமயம் அவனுக்கு நேர் எதிரில் வந்து நின்ற ஆட்டோ ஒன்றில் இருந்து இறங்கினாள் ஆர்த்தி.
ஆம் அபிதாவின் தங்கை ஆர்த்தி தான்.

சற்றே தொலைவில் இருந்ததால் சற்று கூர்ந்து நோக்கியே பெண்ணவளைக் கண்டு கொண்டவனுக்கு, "இந்த பொண்ணு எப்டி இங்க?" என்று முகத்தோடு மனமும் கலவரமாய் மாறியது.

அதில் இன்னும் அவளை கவனித்துப் பார்த்தவன் கண்காணிப்பில் இருக்கும் பொழுது எப்படி அவளிடம் சென்று பேசுவது என்ற யோசனையில் இறங்க, ஆட்டோவில் இருந்த இறங்கிய ஆர்த்தியும் சுற்றியும் முற்றியும் பார்த்து எதையோ, அல்லது யாரையோ தேடியபடி நின்றாள்.

அதைக்கண்டு மேலும் குழம்பியவனுக்கு, "இங்க வந்து என்ன தேடிட்டு இருக்கா இந்த குள்ளக்கத்திரிக்கா? இப்டி ஒரு ஏரியாவுக்கெல்லாம் வரலாமா இவ?" என்று சிறிது சினமும் துளிர்க்க, அதற்குள் ஆர்த்தியோ அங்கிருந்த ஒரு வீட்டை நோக்கி எட்டு வைக்கவும் தொடங்கி இருந்தாள்.

அவள் சென்ற திசையைப் பார்த்தே பக்கென்று ஆனவன் அதற்குமேல் யோசியாது மின்னலென விரைந்து அவள் கரத்தைப் பற்றி இழுத்து தான் மறைந்திருந்த சந்திற்குள்ளும் நுழைந்து இருந்தான்.

திடீரென யாரோ கரத்தைப் பற்றி இழுத்ததில் அதிர்ந்து பதறியவள் கத்துவதற்காக வாயை துறக்கும் முன்னவே அங்கிருந்த சுவற்றில் அவளைச் சாற்றி கரம் கொண்டு அவள் வாயையும் அழுந்த மூடி இருந்தவன், "ஆர்த்தி பயப்படாத நான் தான் பாலா" என்று சொல்ல...

அந்தக் கூற்றில் தான் அவன் முகத்தையும் பார்த்து அது பாலா தான் என்று கண்டு கொண்டவளுக்கு, அத்துணை நேரம் இருந்த பதட்டத்தை விட அதிகமாகவே கை கால்கள் எல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கியது.

அதில் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தபடியே அவளை விட்டு விலகிக் கொண்டவன், "ஆர்த்தி... நான் தான் பாலா... என்னத் தெரியுது தானே" என்று கேட்டு, "இந்த ஏரியாவுல நீ என்ன செய்ற? கொஞ்சம் முன்ன யாரையோ தேடின போல பாத்தியே. யாரது. இப்போ காலேஜ் டைம் தான. காலேஜ் போகாம இங்க ஏன் வந்த?' என்று அடுத்தடுத்த கேள்விகளையும் கேட்கத் தொடங்கி இருந்தான்.

ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் கூற முடியாது அவனை அச்சப்பார்வை பார்த்து வைத்தவள், "அது வந்து வந்து பாலா அங்கிள்" என்று திணற...

அவனோ, "இவ இந்த அங்கிள மட்டும் விடவே மாட்டாளா?" என்று சலிப்பாக எண்ணியவன், "எம்மா தாயே என்ன இனிமேல், பாலா இல்ல, டேய் பாலான்னு கூட கூப்பிடு. ஆனா தயவு செஞ்சு அந்த அங்கிள மட்டும் விட்டுடுமா. உன்ன விட நான் ஆறு வருஷம் தான் மூத்தவன்" என்று கை எடுத்து கும்மிட்டு விட்டு, "ம்ம்ம் சொல்லு? இங்க எதுக்கு வந்த ஆர்த்தி?" என்றான் குரலை இன்னும் கொஞ்சம் உயர்த்தி.

எப்பொழுதும் அவனது இது போன்ற பேச்சில் வேண்டும் என்றே அவனை அங்கிள் அங்கிள் என்று சொல்லிச் சீண்டுபவள் இப்பொழுதோ உடனே, "சரிங்க பாலா. இனிமேல் அங்கிள்னு சொல்ல மாட்டேன்" என்று விட்டு, "அது அது எக்ஸாம்கு நோட்ஸ் வாங்க தான் இங்க பக்கத்துல ஒரு பிரண்ட் வீட்டுக்கு வந்தேன்." என...

"இந்த ஏரியாவுல உனக்கு பிரண்டா? நம்புறபோல இல்லியே" என்று அவளை மேலிருந்து கீழ் கூர்மையாகவே பார்த்தான் பாலா.
இதுவரை அவளை சந்தித்த பொழுதுகள் எல்லாம் அவனோடு சரிக்குச் சரியாய் வாயாடிப் பழகியவளின் இன்றைய திணறலான பேச்சு அவனுக்கு மிகவும் வித்தியாசமாகவே பட்டது.

எப்பொழுதும் சிரித்த முகமாக இருக்கும் பாலாவையே பார்த்து இருந்தவளுக்கும் துருவித் துருவி கேள்வி எழுப்பும் இந்த காவலன் பாலா மிகவும் புதிதாகத் தெரிய, கூடவே தான் செய்து கொண்டிருக்கும் தவறும் அவளை குற்ற உணர்ச்சி கொள்ளச் செய்தது.

ஆதலால் அவனுக்கு பதில் ஒன்றும் உரைக்காது தலை குனிந்து நின்றவளிடம், "சரி பிரண்டோட அட்ரஸ் இருந்தா குடு ஆர்த்தி. நானே கூட்டிட்டுப் போறேன். இந்த ஏரியா கொஞ்சம் டேஞ்சரான ஏரியா. இங்க எல்லாம் தனியா வரக்கூடாது" என்றான் பாலா அவள் மேல் அக்கறை கொண்ட ஆணாக.

அதில் கையிலிருந்த அலைபேசியை இறுக்கி தன் பின்னே மறைத்தவளும், "இல்ல இல்ல நான் அட்ரஸ் மிஸ் பண்ணிட்டேங்க பாலா. நான் நான் காலேஜ்லயே போய் நோட்ஸ் வாங்கிக்கறேன்." என்று பதட்டமாக உரைத்தவள் அவ்விடத்தை விட்டும் செல்லப்போக...

பெண்ணவளின் இன்றைய வித்தியாசப் பேச்சில் 'எப்பவும் காது வரைக்கும் வாய் அடிக்கிறவ இன்னைக்கு என்ன ஒரு டைப்பா இருக்கா' என்பது போல் அவளைப் பார்த்து விட்டு, "ஆர்த்தி இரு" என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தியவன், "நீ சின்னப்பொண்ணு. இந்த ஏரியாவுல பாதை மாறி போக வாய்ப்பு இருக்கு" என்று அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஒன்றையும் நிறுத்தி தான் காவல் அதிகாரி என்றும் உரைத்து அவளை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டே தன் பணிக்குத் திரும்பியவன் அவள் வாழ்க்கை என்னும் பாதையிலே வழி மாறிச் செல்லத் துவங்கி இருப்பதை இம்மியும் அறிந்திருக்கவில்லை.

அவள் ஆட்டோவில் ஏறி அமர்ந்து அந்த தெருவைக் கடந்த பொழுதிற்குள்ளாகவே ஆர்த்தியின் அலைபேசி ஏகத்துக்கும் அலறி அவளது முகநூல் தோழன் ராக்கியின் அழைப்பைக் காட்டியது.

அதில் இன்னும் பதட்டம் கூடிப் போனவளும், 'அய்யோ ராக்கி வேற போன் பண்றாரு" என்று ஆட்டோ ஓட்டுநரிடம் ஒரு நொடி நேரப் பார்வையை செலுத்தி விட்டு அலைபேசியை உயிர்பித்து செவியில் பொருத்த...

அந்தப்புறம் அவனோ, "ஹேய் ஸ்வீட்டி எங்கடா இருக்க? நான் சொன்ன இடத்துக்கு வந்துட்டியா பேபி?" என்றவன் குரலில் அப்படி ஒரு ஆர்வமும் குழைவும், இன்னும் ஏதேதோ சொல்ல முடியாத உணர்வுகளும் கொட்டிக் கிடந்தது.

அக்குரலை கேட்ட உடனே இத்துணை நேரம் இருந்த குற்ற உணர்வுகள் எல்லாம் மறைந்து, "நோ ராக்கி" என்று சிணுங்கியவள், "நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டிருந்தேன். ஆனா வழில பாலா தான் பாத்துட்டு இங்கல்லாம் வரக்கூடாதுன்னு என்ன ஆட்டோ ஏத்தி அனுப்பி வச்சுட்டாங்க. இப்போ வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்" என்று அழாத குறையாக சொல்ல, அதைக் கேட்டிருந்தவனின் முகமோ ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் ராட்சசனின் முகமாய் மாறி விட்டிருந்தது.

சில மாதங்கள் முன்னர் முகநூலில் பழகி இருந்தவனிடம் அன்று பேசுவதற்குக் கூடத் தயங்கியவளை காமம் கலந்த காதல் வசனங்கள் பேசியே இன்று அவன் சொல்லும் இடத்திற்கு தனியாக வரும் அளவிற்கு சிறியவளின் மனதில் பெரும் சஞ்சலத்தை உண்டு பண்ணியிருந்தான் அந்த ராக்கி.

இன்னும் வீடியோ காலில் கூட தன் முகத்தைக் காட்டி இராதவன், தான் அனைத்துப் பெண்களிடமும் பேசும் காதல் மொழிகளுக்கு சற்று அதிகமாகவே பேசி பெண்ணவளின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவன், கடந்த சில மாதங்களிலே உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று அவள் வாயாலே சொல்லவும் வைத்திருந்தான்.

அவன் திட்டமிட்டபடியே அவளும்
சில தினங்கள் முன்னர் அவன் உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்ததை நம்பி, "ராக்கி நான் உங்களை நேரில பாத்தே ஆகணும்" என்று அடம்பிடிக்கவும் அதற்காகவே காத்து இருந்தவனும் தன்னுடைய இடத்திற்கு அவளை வரக் கூறியிருந்தான்.

அவளும் இளமையின் துடிப்பிலும், இனக்கவர்ச்சியை காதல் என்று நம்பியதன் விளைவிலும் அவனுக்காக ஓடோடி வந்திருக்க,
அப்படி வந்தவளைத்தான் பாலா திருப்பி அனுப்பி இருக்க, உலகம் அறியா புள்ளிமானை வேட்டை ஆடக் காத்திருந்த ஓநாய் அதோ, "ஆர்த்தி ஏன் இப்டி பண்ண?" என்று ஏகத்துக்கும் அலறி இருந்தான்.

அவனிடமிருந்து இப்படி அலறலை எதிர்பாராதவளும், "ராக்கி என்னாச்சு உங்களுக்கு? ஏன் இப்டி கத்தறீங்க?" என்று பயந்து போய் வினவ...

அவளது பேச்சில் தன்னை நிதானமாக்கிக் கொண்டவனும்,
"ஹேய் ஹேய் பேபி கூல் டா கூல் டா. ஃபர்ஸ்ட் டைம் உன்னை நேரில் பார்க்க போறேன்னு ரொம்ப எக்சைட்மென்ட்டா இருந்தேன்டா. அதான் நீ வரலன்னு சொல்லவும் அப்செட் ஆகிட்டேன். ரொம்பவே ஏமாந்து போயிட்டேன் பேபி" என்று வருந்தும் குரலில் கூறியவன், "நீ வந்ததும் உன்ன எங்கெல்லாம் அழைச்சிட்டு போலாம்னு இருந்தேன் தெரியுமா? உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நீ ராக்கி னு சினுங்கற அழக அப்படியே பக்கத்துல இருந்து பாத்து ரசிச்சு, உன்ன ஏதேதோ செய்யணும்னு பெரிய லிஸ்ட்டே போட்டு வச்சிருந்தேன்" என்று மேலும் எழுத்தில் வடிக்க முடியாத கிறக்க வார்த்தைகளும் கூறி வரம்பை மீறி பேசிக் கொண்டிருக்க..

அவைகள் எல்லாம் கேட்டுக் கேட்டே அந்த கிறக்கத்திற்கு அடிமையாகி விட்டவளும், "ச்சீ நீங்க ரொம்ப மோசம் ராக்கி" என்று வெட்க குரலில் சினுங்கி, "வெரி வெரி சாரி ராக்கி... உங்களை ஏமாத்தணும்னு நான் எதுவும் பண்ணலை. பாலா தான் எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க" என்று கூறியவள்,
"இன்னொரு நாள் நாம கண்டிப்பா மீட் பண்ணலாம் ராக்கி. அன்னிக்கு உங்க பேரண்ட்ஸ் கிட்டயும் என்ன இண்டிடியூஸ் பண்ணி வைங்க. அப்றம் எங்க வீட்ல பேசிக்கலாம்" என்று அவள் பாட்டில் திட்டமும் கூறிக் கொண்டிருந்தவளிடம்,
"ம்ம்ம் ஓகே பேபி" என்று தலையை ஆட்டிக் கொண்டவன், "சரி அந்த பாலா யாரு பேபி?" என்று வினவிய நொடி, ஆர்த்தியின் அலைபேசி பாலாவின் அழைப்பைக் காட்டியது.

உடனே உடல் தூக்கிப் போட நிமிர்ந்து அமர்ந்தவள், "அய்யோ பாலா தான் லைன்ல வர்றாங்க. நான் அப்றம் பேசுறேன் ராக்கி.
ஒரு ஒன் வீக்குக்கு நீங்க என்ன கூப்பிடாதீங்க. இந்த செமஸ்டர் முடியவும் நானே உங்களுக்கு கூப்பிட்டு நெக்ஸ்ட் மீட் பத்தி பேசலாம். பை ராக்கி பை" என்று அவன் பேசுவதற்கு இடமே கொடாது அலைபேசியை அணைத்தவள் பாலாவின் அழைப்பையும் ஏற்றிருந்தாள்.

அந்தப்புறம் பாலாவும் அவள் பாதுகாப்பாக சென்று கொண்டிருக்கிறாளா எங்கு சென்று இருக்கிறாள் என்று கேட்டு வீட்டிற்குச் சென்றதும் தனக்கு அழைத்துக் கூறும் படியும் கூறி விட்டு இணைப்பைத் துண்டிக்க, நியாயமாக அவளுக்கு எரிச்சலைத் தரவேண்டிய இன்றைய பாலாவின் தலையீடு அவளுக்கு சிறுதான இதத்தைத்தான் கொடுத்தது

பெரிதான பழக்கம் இல்லாத தன்மீது அந்த ஆடவன் காட்டும் அக்கறையில் சிறு மகிழ்ச்சியும் கூட உள்ளுறப் பரவியது.

ஆனால் அவளுக்கு முற்றிலும் மாறாக அவளிடம் பேசி முடித்த ராக்கிக்கோ அவள் தன் கேள்விக்கு பதிலை கூட உரைக்காது அலைபேசியை அணைக்கவும் ஆத்திரம் மிகுந்து தன் அலைபேசியையும் அணைத்து, "டேமிட்..." என்று அங்கிருந்த சுற்றில் ஓங்கி அடித்தான் ராக்கி.

அதில் அலைபேசி சுக்கல் சுக்கலாக நொறுங்கி இருக்க, அதைப் பார்த்த படியே அவனை நெருங்கிய அவன் நண்பனோ, "என்ன மச்சி இவ்ளோ ஆத்தரம் எதுக்கு. அந்த புது பட்சி பறந்துருச்சா?" என...

அதற்கு அவனும், "அவ்ளோ சீக்கிரம் பறக்க விட்டுடுவேனா?." என்றவன்,
"ரொம்ப ப்ரஷ்டா. அதான் கொஞ்சம் அதிகமாவே ஆட்டம் காட்டுது." என்று பல்லைக் கடித்தான் ராக்கி.

அதைக்கேட்டு அவன் தோளைத் தட்டி கலகலவென்று நகைத்தவனும்,
"எப்படியும் நீ விடமாட்டான்னு தெரியுமே மச்சி" என்றவன், "அது வரும் போது வரட்டும். இப்போ வேற ரெண்டு வந்துருக்கு. அத வந்து என்னனு பாரு" என...

அவனோ, "இல்ல மச்சி. எனக்கு இப்போ மைண்டே சரி இல்ல. முடிஞ்சா நீயே மேனேஜ் பண்ணு" என்றான்.

அதில் அவனை புருவம் சுருக்கிப் பார்த்தவனும், "என்ன ராக்கி என்னிக்கும் இல்லாம இன்னிக்கு இவ்ளோ அப்செட்டா பேசுற" என்றவன், "பட்சி ரொம்ப அழகோ" என...

அதைக்கேட்டு கண்களில் காமம் மின்னச் சிரித்தவனும், "ரொம்ப ரொம்ப அழகுடா. பிரிஜ்ஜில வச்ச ஆப்பிள் போல" என்றான்.

அதில், "ம்ம்ம் அதான் இவ்ளோ பீலிங்கா?" என்று மீண்டும் அவன் தோளைத் தட்டியவன், "சரி அந்த ஆப்பிள நினைச்சுட்டே வாச்சும் இந்த மேங்கோஸ கவனிடா. டோஸ் கொடுத்தே அரை மணி நேரம் ஆகுது. நான் கையை வச்சா முழுசா முடிச்சுடுவேன்டா" என்று அவன் கையைப் பற்றி இழுக்க...

"ம்ம்ம்..." என்று தலையை ஆட்டிக் கொண்டவனும், "ரெண்டுமே ப்ரெஷ்ஷா?" என்று வினவியபடி அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்தான்.

அதற்கு, "ஆமாடா" என்று சொல்லிக் கொண்டவனும், "நம்ம விக்கி தான் கரெக்ட் பண்ணிருக்கான். ஆல்ரெடி டோஸ்கு அடிக்ட் ஆனதுக தான். உனக்கு எந்த கஷ்டமும் இருக்காது" என்று சொல்லிக் கொண்டே அவனை பின்தொடர்ந்து செல்ல, அந்த அறைக்குள்ளோ பதினெட்டு வயது மதிக்கத்தக்க இரு இளம் பெண்கள் படுக்கையில் அமர வைக்கப்பட்டு இருந்தார்கள்.

அறைகுறையாய் திறந்திருந்த
அவர்கள் கண்களில் இருந்த கிறக்கமும், நிலையில்லாது சுற்றி வந்த அவர்கள் தலையின் தள்ளாட்டமுமே அவர்கள் வீரியமிக்க போதை வசஸ்துவை உட்கொண்டிருப்பதை உணர்த்த, சுய நினைவு இல்லாது ஏதேதோ உளறிக் கொண்டிருந்த அந்தப் பெண்களைப் பார்த்து, "அவ அளவுக்கு இல்லன்னாலும் பட்சிக ப்ரெஷ்ஷாதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அவர்களை நெருங்கியவன் அந்தப் பெண்களின் உடையில் கையை வைத்த நொடி அந்த அறையில் இருந்த புகைப்பட கருவியோ அங்கு நடப்பவற்றை எல்லாம் படமெடுக்கத் துவங்கியது.

தலையைக் கூட நிமிர்த்த முடியாத போதையில் சுய நினைவுகள் இன்றிக் கிடந்தாலும் யாரோ ஒருவன் தங்கள் மீது கை வைக்கவும், "ஹேய்" என்று தட்டி விட முயன்றவர்களை, "பேபிஸ். இங்க பாருங்க இங்க பாருங்க. நான் உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன். ஒரு டென் மினிட்ஸ் மட்டும் நான் செய்றதுக்கெல்லாம் பேசாம இருந்தீங்கன்னா இதை விட பெரிய சொர்க்கத்துக்கு உங்களை கூட்டிட்டுப் போற டோஸ போட்டு விடுவேன்" என்று அங்கிருந்த மாத்திரை அட்டைகளையும் ஊசி மருந்துகளையும் காட்ட...

அதைப் பார்த்து கோணலாகச் சிரித்துக் கொண்டவர்களும் அடுத்து
வந்த நிமிடங்களில் அவன் அவர்களின் உடைகளை களைந்து துகிலுரித்த பொழுதும், தானும் உடையில்லாது அவர்களை அணைத்து முத்தமிட்டு தனக்கு வேண்டிய அளவு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து முடிக்கும் வரையிலும் கூட அவனுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவே இல்லை. அப்படி தெரிவிக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. உள்ளே சென்ற போதை வஸ்து அத்துணை ஆட்கொண்டிருந்தது அவர்களை.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்த பின்னரே தனக்கு வேண்டிய வேலையை முடித்துக் கொண்டு எழுந்தவன், "வீடியோஸ் எப்டி வந்திருக்கு?" என்று நண்பனிடம் கேட்டபடியே உடைகளை எடுத்து அணிந்து கொள்ள...

அத்துணை நேரமும் அங்கு நடந்தவற்றை வீடியோ எடுத்து முடித்தவனும், "செம்மையா வந்துருக்குடா. அது எப்படிடா பட்சிகளை ஒன்னும் பண்ணாமையே எல்லாம் முடிஞ்சமாறி பெர்பெக்ட்டா பண்ணிடுற. இவ்ளோ குளோசா இருந்துட்டு எப்பிடிடா உன்னால அவளுகளை விட்டு வைக்க முடியுது?" என்று அவனிடம் ஆச்சரியமாக வினவினான்.

"அது அப்டித்தான்டா பழகிடுச்சு. லட்சக்கணக்கில் பணம் வேணும்னா எல்லாத்தையும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணி தான்டா ஆகணும்" என்ற ராக்கி, "ஆனா அந்த ஆர்த்தி பட்சிக்கிட்ட இவ்ளோ கண்ட்ரோலா இருக்க முடியுமான்னு தான் தெரியலடா" என்றும் சேர்த்துச் சொல்ல...

அதைக்கேட்டு, "மச்சி..." என்று அவன் கையை பற்றிக் கொண்டவனும், "அவ்ளோ புடிச்சிருந்தா பேசாம அத கல்யாணம் பண்ணிக்கோயேன். உனக்கும் வயசு ஏறிட்டே போகுதுல்ல" என்றான் நண்பன்.

அதற்கு, "போடா இவனே" என்று திட்டிக் கொண்டவனும், "அவள்ளாம் கோடி கோடியா கொட்டிக் கொடுக்கப்போற பீஸ் மச்சி" என்று வக்கிரமாக சிரித்துக் கொண்டவன், "எடுத்த வீடியோவ கம்யூட்டர்ல சேவ் பண்ணிட்டு பட்சிகளோட போட்டோஸ மட்டும் அந்த எம் எல் ஏ க்கு அனுப்பி விடு. அந்த கிழடு தான் ப்ரெஷ் பீஸ் வேணும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கு. நான் குளிச்சிட்டு வந்து ரேட் பேசிக்கறேன்" என்று விட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவன் மீண்டும் ஆர்த்திக்கு அழைத்து காதல் மொழிகள் பேசிவிட்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

கோவையிலே ஒரு முக்கிய முன்னால் அமைச்சரின் அண்டர்கிரவுண்ட் கையாள் தான் ராக்கி. அமைச்சருடைய அனைத்து தில்லுமுல்லு தொழில்களுக்கும் வலது கையாய் இருப்பவன்.

அந்த அமைச்சருடைய பதவி வெறிக்காகவும், அவருடைய உறவினர் மற்றும் நண்பர்களின் தேவைக்காகவும், ஆசைக்காகவும் உலகம் அறியாத கன்னிப் பெண்களான பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் பலரை ஏமாற்றி, அவர்களை போதைக்கும் அடிமையாக்கி, உடலைத் தின்னும் பல காமக் கழுகுகளுக்கு அந்த பிஞ்சுப் பறவைகளை விருந்தாக்கிக் கொண்டிருக்கும் ராக்கியின் குழுவிற்கு முகநூல் இன்ஸ்டா போன்ற செயலிகளும், அவனது ஈனச் செயல்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

இளமையின் துடிப்பிலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமலும் கேட்பார் பேச்சை கேட்டும் யாரென்றே தெரியாத நபர்களுடன் பேச ஆரம்பித்து, பின் புகையிலை மது போதை மருந்துகள் போன்ற பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிப்போன பல இளம் பெண்களில் பலர் காதல் என்ற பெயரிலும் அவனிடம் ஏமாந்து விடுகின்றனர்.

அவர்கள் சுய நினைவில் இல்லாத பொழுது ராக்கி எடுத்து வைத்திருக்கும் வீடியோக்களைப் பார்த்தே தாங்கள் நாசமாக்கப்பட்டு விட்டோம் என்று மருகி, நெட்டில் போட்டு விடுவேன் என்ற அவனது மிரட்டலுக்கும் பயந்து தங்கள் சம்மதத்தோடே நாசப் பாதையை தேர்ந்தெடுத்து வாழ்க்கையும் சிதைத்து கொள்கின்றனர் எத்துணையோ பேதைப் பெண்கள்.

அப்படி நாசமாவதை விரும்பாது, வெளியில் சொல்லவும் தைரியம் இன்றி தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டவர்களும் ஏராளம் இருக்க...
அமைச்சரின் ஆதரவின் பேரிலே அனைத்தும் நடப்பதால் இதுவரை அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எதுவும் பெரிதாக காவலர்கள் பார்வைக்கும் வந்து சேரவில்லை.

ஆனால் சட்டம் ஒழுங்கைக் காக்கவென்றே பிறப்பு எடுத்திருக்கும் தீரன் அவனிற்கு எதுவும் தப்பாது இருக்க, கடந்த சில மாதங்களாகவே அவன் கவனித்து வந்த இளம் பெண்களின் தொடர் தற்கொலைகளும் சேர்ந்து அந்த கெஸ்ட்ஹவுஸ் பங்களாவின் மர்மங்களை கண்காணிக்க கட்டளைகள் விதித்திருந்தான் சத்யா.

இது எதுவுமே தெரியாத பேதை பெண்ணோ தான் எத்துணை பெரிய இக்கட்டில் மாட்டி இருக்கிறோம் என்றும் உணராது அந்த ராக்கியின் வார்த்தைகளை அசைபோட்டு கிறங்கியபடியே அந்த ராட்சச வேடனின் பொறியில் மாட்டும் பட்சியாய் மாற மற்றுமொரு சந்தர்ப்பம் தேடத் தொடங்கி இருந்தாள் ஆர்த்தி.
 
Well-known member
Messages
248
Reaction score
448
Points
63
அதேபோல திருமணம் முடிந்து பல மாதங்கள் கழிந்தே காதல் சுழலில் மாட்டிக் கொண்டு தங்களையே தொலைக்கத் தொடங்கி இருந்த சத்யாவும் அபிதாவும் கூட தங்கள் வீட்டு சின்னப்பெண் யாரோ ஒரு கயவனிடம் மாட்டியிருப்பதை அறியாமல் அவர்கள் உலகில் சஞ்சரித்து இருந்தவர்கள் அன்றைய நாளில் இருசக்கர வாகனத்தில் முழுக் கோவையையே நகர்வலம் செல்லத் தொடங்கி இருந்தனர்.

சற்று முன்னர் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு பைக்கா என்று கணவனிடம் அலறியவள் வாகனம் செல்லச் செல்ல, பிடிமானம் இல்லாமலோ அல்லது தன்னியல்பாகவோ கணவனை சற்றே நெருங்கி அமர்ந்து அவன் தோள்களையும் மெல்ல பற்றிக் கொண்டாள் அபிதா.

அதில் சித்தம் சிதறிப் போனவனும், "இன்னொரு கையும் எடுத்து இடுப்புல போட்டு பிடிச்சிக்கிட்டின்னா இன்னும் உக்கார கம்போர்ட்டா இருக்கும் குஜிலி" என்று வாகனத்தின் குவி ஆடியில் பெண்ணின் முகத்தை ரசித்தவாறே சொல்ல...

அவன் பார்வை தந்த குறுகுறுப்போடு வார்த்தைகளில் இருந்த குழைவும் சேர்ந்து கன்னங்கள் சிவப்பேறிப் போனவளும், "இல்ல பரவாயில்ல இதுவே கம்போர்ட்டா தான் இருக்கு" என்றவள், "ஏசிபி சார் ரோட்டை பாத்து வண்டியை ஓட்டுனா கொஞ்சம் நல்லா இருக்கும்" என்றும் உள்ளே போன குரலிலே சொன்னாள். கண்ணாடியூடே ஆனாலும் அவனின் ஆளை உண்ணும் பார்வையை தாள முடியாது.

பெண்ணின் அந்தக் குரலில் மேலும் குதூகலமாகிப் போனவன்,
"இப்டி ஒரு அழகுப் பொண்டாட்டி தோளை பிடிச்சி உக்காந்துருக்கும் போது ரோட்டை பாத்து மட்டும் வண்டி ஓட்டுனா என்ன கண்ணில்லாதவன்னு சொல்வாங்க பேபி" என்று ஒற்றை கண்ணை வேறு சிமிட்ட...

அதில் ஏகத்துக்கும் நாணம் கொண்டு தவித்தவளும், "சத்யன்... வர வர நீங்க ரொம்ப பேசறீங்க" என்று சிணுங்கியபடியே முகத்தை வேறு புறம் திருப்பி வெட்கச் சிரிப்பை மறைத்தவள் கணவன் தோளில் இருந்த கரத்தினை எடுத்து வண்டியின் கம்பியைப் பிடித்துக் கொண்டாள்.

பெண்ணின் அந்தச் செயலில் இப்பொழுது சிரிப்போடு முறைப்பும் கலக்க, "புருஷன் பேச்சு பிடிச்சிருந்தா நேரடியாகவே ரசிக்கலாம் குஜிலி தப்பில்லை" என்று முனுமுனுத்து விட்டு, "பேச்சு பேச்சா இருக்கும் போது கையை எடுக்குறது என்ன கெட்ட பழக்கம்" என்று இன்னும் கொஞ்சம் குழைய...

அதில் தலையை தரையில் புதைக்கும் அளவு நெளிந்தவள், "உங்களைப்போல கெட்ட பையன் கூட சேர்ந்தா கெட்ட பழக்கம் தான வரும் சத்யன்?" என்று மூக்கைச் சுழித்துக் காட்டி அவன் முதுகை விட்டு சற்று தள்ளியும் அமர்ந்து கொண்டாள்.

மனைவியின் அந்தப் பேச்சிலும் செயலிலும் இன்னும் இன்னும் பித்தாகிப் போனவனும், "யாரு... நான் கெட்ட பையனா?. அத நல்ல பொண்ணு நீங்க சொல்றீங்களா?" என்று சிறு பையன் போலவே சப்தமிட்டுச் சிரித்தவன், "பொண்டாட்டி வாயால கெட்ட பையன்னு பேரெடுத்த அப்புறமும் இனியும நல்லவனா இருந்து பிரயோஜனமே இல்ல தீரா" என்று தனக்குத்தானே கூறி ஆக்சிலேட்டரை உச்ச வேகத்தில் முறுக்க... அந்த இரு சக்கர வாகனமும் தறிகெட்டு ஓடியது.

அத்துணை நேரமும் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென வேகமெடுத்ததும் பிடிமானம் இல்லாது திண்டாடியவள்,
"சத்யன் என்ன செய்யறீங்க? கொஞ்சம் மெதுவாப் போங்க" என்று சப்தமாகவே கூற, அவளின் வார்த்தைகள் எதுவும் அவன் செவியைக் கூட எட்டாதது போல் இன்னும் வேகத்தைக் கூட்டினான் அவள் கணவன்.

அவள் இதுவரை பயணித்தே இராத அளவு உயர் வேகம் கண்ட பீதியில் விழிகளையும் இறுக்க மூடிக் கொண்டவள் "சத்யன்... எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. ஏன் இப்டி பண்றீங்க?" என்று வினவியும் எதிர்வினை ஆற்றாதவனின் செயலில், சற்று முன்னர் அவனிடம் முறுக்கிக் கொண்டதை எல்லாம் மறந்து, "தீரா ப்ளீஸ்..." என்று கத்தியபடி அவன் முதுகோடு கன்னம் பதித்து இரு கைகளையும் இடையூடு கொடுத்து அவன் நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள் அபிதா.

வழக்கமாக பெண்களுக்குத் தானே மனம் விரும்பும் ஆடவன் தீண்டினால் இதயம் படபடவென்று துடிக்கும், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளும் பறக்கும்.

ஆனால் பெண்ணவளின் அந்த அணைப்பிலும், அவளின் தீரா என்ற அழைப்பிலும் அந்த ஆறடி ஆண்மகனே நொடிநேரம் ஆட்டம் கண்டுதான் போனான்.

கூடவே தன் முதுகுப் பகுதியில் பதிந்திருந்த மனைவியின் முகமும், அதில் இருந்து வெளியேறிய சூடான மூச்சுக் காற்றும், அவிழ்ந்திருந்த மேற்பட்டன்களின் விளைவால் தன் இதயப் பகுதியின் சட்டையை ரோமத்தோடே பற்றி இழுத்திருந்த வெண்டைப் பிஞ்சு விரல்களும் அவனை சுவடறியா சொர்க்கம் நோக்கி இழுத்துச் செல்ல, அதில் தானாகவே குறைந்து போனது வாகனத்தின் வேகம்.

இப்பொழுது முன்பை விடவும் மெதுவாகவே சாலையில் ஊர்ந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் நிலையால் சாலையில் போவோர் வருவோர் கூட அவர்களை ஒரு மாதிரி பார்த்து விட்டுச் செல்ல, அவர்கள் இருவரின் பார்வைகள் மட்டும் வாகனத்தின் குவி ஆடியிலும் குழி ஆடியிலும் தான் மாறி மாறிப் படிந்து, மீள முடியாது தவித்தது.

வாகனத்தின் வேகம் சுத்தமாக குறைந்த பின்னும் கூட அவனை விட்டு அவளும் விலக நினைக்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பபைக் கூட அவளுக்குக் கொடுக்க விளையாதவன்,
"இதுவரை எத்துணையோ பேர் என்ன தீரன் தீரா னு கூப்பிட்டிருக்காங்க பேபி. ஆனா யூர்ஸ் தீரா மேக்ஸ் மீ மெல்ட்" என்று தன் இதயப் பகுதியில் இருந்த பெண்ணின் கரத்தின் மீது தன் கரத்தினை வைத்து அழுத்திக் கொடுத்தவன் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தில் வந்து வாகனத்தையும் நிறுத்தி இருந்தான்.

வாகனம் நின்றதின் பின்னரே சுற்றம் உணர்ந்து அவனை விட்டு விலகிக் கொண்டவள் அவன் அழைத்து வந்திருந்த இடத்தைக் கண்டு மென் மேலும் ஆச்சர்யம் கொண்டாள்.

திருமணத்திற்கு முன்பு அபிதா அடிக்கடி வந்து செல்லும் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு மதிய உணவகத்திற்கு தான் அவளை அழைத்து வந்திருந்தான் சத்யா.

காந்திபுரத்திலே மிகவும் பிரபலமான ஹைதராபாத் பிரியாணி கடை என்று சொல்லக்கூடிய உணவகத்திற்குள் அவளை கூட்டிச் சென்றவன் அவளுக்கு மிகவும் பிடித்தமான மட்டன் பிரியாணியையும் அவளுக்கென்று வரவழைக்க,
'என்ன பத்தி இவ்வளவு தெரியுமா இந்த காக்கிக்கு?' என்று மென்மேலும் ஆகாயமாய் விரிந்து கொண்டது பெண்ணவளின் ஆழி விழிகள்.

வெகு பிரயத்தனப்பட்டே அவனைச் சூழ விளைந்த விழிகளை உணவிற்கு மாற்றி உண்டு முடித்து எழும்புதற்குள் அவளுக்கு அக்கடையிலே மிகவும் விருப்பமான மதுரை ஜிகர்தண்டாவையும் வரவழைத்திருந்தான் அவள் கணவன்.

அதில் இன்னும் பரவசமாகிப் போனவளும் முகம் கொள்ளாப் பூரிப்புடனே பானத்தை மேசையில் வைத்தும் எடுத்தும் பருகிக் கொண்டிருக்க, இம்முறை எடுத்து வாயில் வைத்த பானத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் தட்டுபட்டது.

சற்று முன்னர் அவள் அவன் முதுகில் சாய்ந்து இருந்த பொழுது அவளை கிறக்கத்தில் ஆழ்த்தி இருந்த அவனின் பிரத்தியேக வாசமது இக்கணம் அந்த பானத்தை சமீபிக்கும் போதும் லேசாக நாசியில் மோத உடல் தூக்கிப் போட்டு நிமிர்ந்தவள் அப்பொழுது தான் பானங்கள் இடம் மாறிவிட்டதையும் கவனித்தாள்.

அவள் பாதிக்கும் மேல் குடித்திருந்த தம்ளர் அவன் கையிலும், அவன் சிறிதளவே அருந்தி இருந்த பானம் அவள் கரத்திலும் இருக்க,
'டம்ளர் எப்படி மாறுச்சு?' என்று அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் அபிதா.

இத்துணை நேரம் ஏதோ பெயருக்கு பானத்தை அருந்திக் கொண்டிருந்தவன் இக்கணம், "ஜிகர்தண்டா செம்ம டேஸ்ட்டுல பேபி" என்று சொல்லியபடியே ரசித்து ருசித்து பருகிக் கொண்டிருக்க, அதைக் கண்டு மேலும் கையை பிசைந்தவள், "அய்யோ அது அது நான் பாதி குடிச்சிட்டு வச்ச என்னோட கிளாஸ் சத்யன்" என்று உள்ளே போன குரலிலே அவசரமாகச் சொன்னாள்.

அதைக்கேட்டும் ஆற அமரவே அவளை ஏறிட்டுப் பார்த்தவன், "இவ்ளோ ஸ்வீட்டா இருக்கப்போவே நினைச்சேன் குஜிலி." என்று சொல்லி அவள் இதழ்களிலே பார்வையைப் பதித்தவன், "ஸ்வீட்ட நேரடியா சாப்பிடற வாய்ப்பு தான் அன்னிக்கு அப்றம் கிடைக்கவே இல்ல. இப்படியாவது சாப்பிட்டுக்கறேனே" என்று தன் இதழ்களை நாவால் வருடிக் கொண்டவன் மீதமிருந்த பானத்தையும் அவள் அருந்தி வைத்த அச்சிலே வாய் வைத்துக் குடித்து முடித்தே தம்ளரை கீழே வைத்தான் சத்யா.

ஆடவனின் பேச்சிலும் பார்வையிலும் அன்றைய நாளின் நினைவுகள் நெஞ்சில் எழுந்து அவள் மேனியையும் சிலிர்க்க வைக்க...
அவள் பற்களுக்கிடையிலே சிக்கி சின்னாபின்னமாகியது பாவையவளின் பனி இதழ்கள்.

அன்று அவன் நேரடியாக முத்தமிட்ட பொழுது கூட இத்துணை தவித்திருந்தாளோ என்னவோ அவளுக்கு சுத்தமாக ஞாபகம் இல்லை...

ஆனால் இன்றோ பேச்சினாலும் பார்வையாலுமே பாவையவளை பெரும் அவஸ்தைக்கு ஆளாக்கி இருந்தான் சத்யதீரன். அத்துணையும் இன்ப அவஸ்தை.

போதாதற்கு அவன் அருந்தி விட்டுக் கொடுத்த பானம் என்று தெரிந்த பின்னும் தான் அதை எப்படி அருந்துவது என்று கையிலிருந்த தம்ளரிலே பார்வை பதித்து அமர்ந்திருந்தவளைப் பார்த்து, "உன்னோடது அளவுக்கு இல்லாட்டியும் என்னோடதும் கொஞ்சம் ஸ்வீட்டா தான் இருக்கும் குஜிலி. சும்மா சாப்பிடு" என்றவன் பேச்சில் இவன் எதைச் சொல்கிறான் என்று அவன் இதழ்களைப் பார்த்தவளிடம், "ட்ரைலருக்கே இப்டி யோசிச்சா மெயின் பிக்கச்சர எப்போ பாக்குறது?" என்று அவன் மேலும் புருவத்தைத் தூக்க, கணவனின் உயிர் துளைக்கும் பார்வையை அதற்கு மேலும் தாள இயலாதவள் கையில் இருந்த பானத்தை மடமடவென்று வாயில் சரித்துக் கொண்டாள் அபிதா.

வெறுமனே தன் பேச்சிற்கும் பார்வைக்குமே கன்னங்கள் சிவந்து போகும் மனைவியின் தவிப்பைக் கண்டு இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவனும், "போலாம் குஜிலி" என்று இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவன் உணவுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டு மிக மிக உரிமையாகவே பெண்ணின் விரல்களையும் பற்றி வெளியே அழைத்து வந்து வாகனத்தில் அமர வைத்தான் சத்யா.

அவளை மிச்சமின்றிச் சாய்க்கும் ஆடவனின் அந்த அன்பில் உருகிக் கரைந்தபடியே அவன் பின்னோடு அமர்ந்து மீண்டும் அவன் தோள்மீது சாய்ந்து கொண்டவளுக்கு அவன் இறுதியாக அழைத்துச் சென்ற காவலர்கள் குடியிருப்பைப் பார்த்ததும் சற்று முன்னர் இருந்த இதம் எல்லாம் தொலைந்தது போன்ற உணர்வுதான்.

மனைவி தன்னிடம் காட்டும் இணக்கத்தையும் மீறி அவளிடம் உள்ள தயக்கத்தை உணர்ந்து, காவலர்கள் மீதான அவளின் வெறுப்பை போக்கும் பொருட்டே சத்யா அவளை அங்கு அழைத்து வந்திருந்தான்.

ஆனால் அது அவனுக்கு எதிராகவே திரும்பப் போவதை அவன் இம்மியும் அறிந்திருக்கவே இல்லை.

 
Active member
Messages
101
Reaction score
48
Points
28
ஆர்த்தியை எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து அவனுக்கே தெரியாம காப்பாத்தி இருக்கான் பாலா.... அவன் இன்னும் கொஞ்சம் அவளை கவனிச்சு விசாரிக்கலாம்.... 😔

ஆர்த்தி அழகான அன்பான குடும்பம் இருந்தும் இப்படி தெரியாத ஒருத்தனோட பழக்கம் தேவையா....😡 பாலா மட்டும் வரலைனா.... 😨

எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை அழிச்சுருக்காங்க பாவிங்க.... 🤬🤬🤬
தீரன் கையில மாட்டுறப்போ இருக்கு.... தீரன் என்கவுண்டர் க்காக வெயிட்டிங்..... 💥
 
Member
Messages
58
Reaction score
22
Points
8
Aarthi ya indha vatti bala kaapathitaan
Aana next time adhukulla
Sathyadheeran andha gang ah pidikanum
 
Top