• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 20

Administrator
Staff member
Messages
463
Reaction score
792
Points
93
மேகம் 20

பேரன்பின் ஆழம் எதுவென்று நீ நினைத்திருக்கறாய்எ
ன்று தெரியவில்லை...
எனக்கு சாலையை கடக்க கரம் கொடுத்த உன்னிடத்தில் தான் பேரன்பின் சாயல் தெரிகிறது…


சைத்துவின் அமைதியை கண்ட காயு,

“என்னடா அமைதியா இருக்க எதாவது சொல்லு” என்று வினவ,

“என்ன சொல்றது? எனக்கு தெரியலை அந்த பொண்ணு நான் அவகிட்ட அதிகமா பேசுனது கூட இல்லையே… அப்புறம் எப்படி?” என்றவனது குரலில் வியப்பு மீதமிருந்தது.

“எனக்கும் அதான் தெரியலை டா. அவ ஜெஸ்ட் உன்னை பாத்தா க்ரெஷ்ஷா வச்சி இருப்பான்னு நினைச்சேன். ஆனால் இவ்ளோ தூரம் உன்னை நினைச்சிட்டு கல்யாணம் பண்ணாம இருப்பான்னு நான் சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணலை”

“உனக்கு இந்த விஷயத்தை யார் சொன்னது?”

“சரண்யா தான் அவ மேகாவோட ப்ரெண்ட் அவளை நேத்து மால்ல பாத்தேன். அவ தான் சொன்னா. எனக்கும் கூட இதை கேட்டு ஷாக் தான். காலேஜ் முடிச்சதுல இருந்து அவ கூட பெருசா கான்டாக்ட் இல்லை. அது எதேச்சையா நடந்ததுனு நினைச்சிட்டு இருந்தேன்”

“...”

“ஆனா அவ வேணும்னே என் கான்டாக்ட கட் பண்ணி இருக்கா. காலேஜ் செகெண்ட் இயர் ஸ்டார்டிங்கல இருந்தே அவ நம்மகிட்ட இருந்து விலகி போக ஆரம்பிச்சிருக்கா நான் தான் அதை கவனிக்காம விட்டுருக்கேன். இதுனால தான் விலகி இருக்கா” என்க,

சைத்தன்யாவிற்கு முதல் முறையாக அந்த தேநீர் விடுதியின் கை கழுவும் இடத்தில் தோழியிடம் சிரிப்புடன் விழிமூடி தன்னை சிலாகித்தபடி நின்றவள் மனக்கண்ணில் மின்னி மறைந்தாள்.

“சைத்து நான் கேட்டு நீ இதுவரைக்கும் நீ மறுத்ததில்லை” என்று நிறுத்தி காயு சைத்துவை காண,

“ஸோ…” என்றவன் அவளது எண்ணத்தை யூகித்திருந்தான்.

“அவளை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்க,

“ஆர் யூ மேட்?” என்று தான் அடுத்த வினா ஜனித்தது சைத்துவிடம்.

“அவ ரொம்ப நல்ல பொண்ணு டா”

“நல்ல பொண்ணா இருந்தா கல்யாணம் பண்ணிக்கணுமா?”

“உனக்கு வேற யார் மேலயாவது இன்ட்ரஸ்ட் இருக்கா?” என்று பதில் தெரிந்திருந்தும் வினா தொடுக்க,

“உனக்கு தெரியாம எதாவது இருக்கா என் லைஃப்ல?”

“தென் வாட் இஸ் தி ப்ராப்ளம்?”

“காயு ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மீ. நான் ஆல்ரெடி சொல்லிட்டேன் எனக்கு தோணணும் எனக்கு யாரை பாத்து என்னோட லைஃப் பார்ட்னரா வந்தா நல்லா இருக்கும்னு தாட் வரலை. வந்தா நானே நெக்ஸ்ட் ஸ்டெப் எடுப்பேன்” என்று அழுத்தமாக கூறிட, காயத்ரியிடம் பதில் இல்லை.

இதற்கு மேலும் அவளால் வற்புறுத்த இயலாது. இது அவனுடைய வாழ்க்கை.

மேகா இவன் வாழ்வில் வந்தால் சைத்துவின் வாழ்வு நிச்சயமாக நன்றாக இருக்கும் தான். ஆனால் அதற்கு இவனுக்கும் விருப்பம் இருக்க வேண்டுமே‌…

மேகாவின் நேசம் கிடைக்க இவன் கொடுத்து வைக்கவில்லை என்று எண்ணியவளுக்கு மேகாவின் வாழ்க்கை என்ன ஆவது என்று கவலை பிறந்தது.

அதுவும் அவளது உடல்நிலை அதற்கு சைத்துதான் காரணம் என்று அறிந்த பிறகு உள்ளுக்குள் ஒருவித குற்றவுணர்வு வருத்தம் ஆட்டி படைக்கிறது.

அதனின்றும் தான் சைத்துவிடம் மேகாவை திருமணம் செய்ய கூறியது‌.

ஆனால் அவனிடம் இதனை கூறி கேட்க மனம் விரும்பவில்லை‌. இந்த விடயம் தெரிந்தால் நிச்சயம் அவன் சம்மதிக்க வாய்ப்புள்ளது தான்.

இருந்தும் பரிதாபத்தில் எதுவும் நிகழ கூடாது மேகாவுக்கான நேசம் பரிதாபத்தில் ஜனிக்க கூடாது.

அவ்வாறு நடந்துவிட்டால் மேகாவின் இத்தனை வருட நேசம் அர்த்தமற்றதாகிவிடும் என்று நினைத்தவள் எதுவும் கூறாது அமைதியாகிவிட்டாள்.

அவளது அமைதியை கண்டவன்,

“காயு…” என்று அழைக்க,

“என்ன?” என்று காயு கேட்க,

“முடிஞ்சா அந்த பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணு அவளுக்கான லைஃப அமைச்சுக்க சொல்லு” என்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளுக்கு மனதினுள் பெரும் பாரம் தொற்றிக் கொண்டது.

இத்தனை வருடமாய் அவனிடம் தெரிவிக்காது கூட எந்த நம்பிக்கையில் காத்திருந்தாளோ…?

இப்போது நான் கூறி மட்டும் மனதை சரி செய்து கொள்வாளா? என்று கேள்வி பிறந்தது.

ஆனால் பேசி தானே ஆக வேண்டும். இவன் தான் அவனுக்கு ஆத்மார்த்தமாக தோன்ற வேண்டும் என்கிறானே

ஒரு வேளை அப்படி மேகாவை கண்டதும் தோன்றிவிட்டால்?

ம்ஹூம் வாய்ப்பேயில்லை தோன்றுவது என்றால் கல்லூரியில் பார்த்த போது எண்ணம் வந்திருக்க வேண்டுமே என்று பலவாறாக தனக்குள் சிந்தித்து மேகாவிடம் பேசி பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

அவள் சிந்தையுடன் வானத்தை வெறிப்பதை கண்டவன்,

“காயு டைம் ஆச்சு போ போய் பசங்களை தூங்க வை” என்றிட,

ஒரு பெரு மூச்சுடன் தலையை அசைத்தவள்,

“ரெண்டு பேரும் வாங்க இட்ஸ் கெட்டிங் லேட்” என்று குழந்தைகளை அழைத்து கொண்டு கீழே சென்றாள்.

அவளை அனுப்பிவிட்டவன் தான் கீழே செல்லவில்லை. செல்ல மனம் வரவில்லை.

மனதிற்குள் கல்லூரி பிரிவு உபச்சார விழாவில் முகம் முழுவதும் பரிதவிப்புடன் கலங்கிய விழிகளுடன் தன்னையே பார்த்திருந்தவளது முகம் வந்து போனது.

அன்று அந்த தவிப்பு கண்ணீர் எல்லாம் காயத்ரிக்காக தான் என்று சர்வ நிச்சயமாய் நினைத்திருந்தான்.

ஆனால் அது அந்த அழுகை எல்லாம் தனக்காக தான் என்று கிஞ்சிற்றும் எண்ணியிருக்கவில்லை.

காயத்ரி கூறும் வரை மேக மொழியாள் என்பவள் அவனது நினைவடுக்கில் எங்குமே இல்லை.

ஆனால் இப்போது மனமெங்கும் அவளுடைய நினைவு மட்டும் தான்.

எப்படி? எப்படி? ஆறு வருடங்கள் எந்த முகாந்திரமும் அல்லாது எனக்காக காத்திருக்கிறாளா? எந்த நம்பிக்கையில் அவள் காத்திருக்கிறாள்.

இத்தனைக்கும் ஒரு ஐந்து நிமிடம் கூட அவளிடம் தான் பேசியது இல்லையே? என்று தான் எண்ணம் எழுந்தது.

ஒரு வித ஆச்சரியம் பிரம்மிப்பு மட்டும் விலாது இருந்தது.

அதனை ஒதுக்கிவிட்டு தனது பணியை கவனிப்போம் என்று அன்றாட அலுவல்களை தொடர்ந்தான்.

ஆனாலும் இத்தனை நாள் நினைவிலே இல்லாதவள் இப்போது வந்து அவனை அடிக்கடி இம்சித்தாள்.

ஒரு மனம் இது உண்மையாக இருக்க வாய்ப்பிருக்காது. ஆறு வருடங்கள் யாராலும் காத்திருக்க இயலாது.

அதுவும் நான் என்ன அவளிடம் திரும்பி வருவேன் என்றா கூறி சென்றிருந்தேன் என்னுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்க என்று தனது பங்கிற்கு கூறியது.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று தன்னை நச்சரித்ததில் தனக்கு தெரிந்த ஆட்கள் மூலம் அவளை பற்றி விசாரிக்க ஏற்பாடு செய்திருந்தான்.

அதுவும் யாருக்கும் தெரியாமல் அவளை பற்றி தெரிந்துகொள்ள முயற்சித்தான்.

காரணம் காயத்ரி தான். அவள் அன்று இரவு பேசிவிட்டு சென்ற பிறகு சைத்தன்யாவுக்கு அவள் தன்னிடம் ஏதோ ஒன்றை மறைத்தது போல தோன்றியது.

இத்தனை வருடங்களாய் அவளுடன் தோழமை கொண்டிருப்பவனுக்கு அவளது பாவனைகள் அத்துப்படி.

இரண்டு நாட்களில் அவனுக்கு தகவல் வந்தது மேகாவை பற்றியை அனைத்தும் வந்து சேர்ந்தது.

அவளது சிகிச்சை விபரமும் வந்து சேர்ந்தது.

அந்த இடம் தான் அவனுக்கு இடித்தது. அவளை பற்றி இவ்வளவு விடயத்தை கூறியவள் இதனை ஏன் கூறவில்லை.

ஒருவேளை தேவையில்லாத ஒன்று என்று எண்ணியிருந்தாளோ? ஆனால் அவளை திருமணம் செய்ய கூற கேட்டவள் இதனை‌ சொல்ல வேண்டாம் என்று எண்ணியிருப்பாளோ? என்று பலவாறாக எண்ணம் பிறந்தது.

இதற்கான விடை காயத்ரியிடம் தான் உள்ளது என்று நேரடியாக கேட்டிருந்தான்.

“ஏன் காயு அவளை கல்யாணம் பண்ணிக்க சொன்ன நீ அவளுக்கு டிஸ்க் கம்ப்ரஷன் இருக்குனு ஏன் சொல்லலை?” என்று வினவ,

காயுவின் முகத்தில் ஆயிரம் அதிர்ச்சி ரேகைகள் முளைத்தது.

இவனுக்கு எப்படி தெரிந்தது‌? தான் கூறியவற்றை அப்படியே விட்டிருப்பான் என்று எண்ணியிருந்தேனே ஆனால் நடந்தது வேறாக இருக்கிறதே

“உன்கிட்ட தான் கேக்குறேன் காயு ஆன்சர் மீ” என்று உறுத்து விழிக்க,

“அது எனக்கு தெரியாது” என்று காயு மொழிய,

“உனக்கு பொய் பேச வரலை காயு”

இனி மறைக்க இயலாது என்று எண்ணியவள்,

“தெரியும் சரண்யா சொன்னா நாம காலேஜ் முடிச்ச நெக்ஸ்ட் இயர் ‌அவளுக்கு சர்ஜரி பண்ணாங்களாம்”

“ஓ..‌. இதை நீ என்கிட்ட மறைக்க வேண்டிய அவசியம் என்ன?”

“ஏன்னா அவளுக்கு உன்னால தான் அடிப்பட்டுச்சு” என்றவளது பதிலில்,

“வாட்?” என்றவனது முகத்தில் இதுவரை அவள் கண்டிராத அதிர்ச்சி.

அவள் கூறாதததற்கு வேறெதுவும் காரணம் இருக்குமென எண்ணியிருந்தவன் துளியும் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.

“நானா?” என்று சைத்தன்யா அதிர்ச்சி விலகாது வினவ,

அவனது அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருந்தவள்,

“ஆமா உன்னால தான் உனக்கு ஞாபகம் இருக்கா ஒரு நாள் அவ கிரவுண்ட்க்கு என்ன பாக்க வரும் போது நீ போட்ட பால் அவ மேல பட்டு மயங்கி விழுந்து எமெர்ஜென்சி ரூம்க்கு அழைச்சிட்டு போனோமே” என்று கூற,

அந்த தினத்தை நினைவு கூர்ந்தவனுக்கு ஓரளவு நினைவிற்கு வந்தது.

“அந்த இன்சிடென்ட்னால தான் அவளுக்கு டிஸ்க் கம்ப்ரஷன் வந்திருக்கு‌. அவ இதை யார்க்கிட்டயும் சொல்ல விரும்பாம எங்க விழுந்தேன்னு சரியா ஞாபகம் இல்லைனு சொல்லிருக்கா. ஆனால் அவளோட ப்ரெண்ட்ஸ் அதை அவங்களே கண்டுபிடிச்சு கேக்கவும் தான் உண்மைய சொல்லி இருக்கா. இப்பவரை அவங்க அப்பா அம்மாட்ட கூட சொல்லலை” என்று நிறுத்த,

இங்கு சைத்தன்யாவிடம் பேரமைதி.

“இதெல்லாம் உனக்காக தான். அவளோட நிலைமைக்கு நீ தான் காரணம்னு உனக்கு எந்தவிதத்துலயும் கில்டி பீல் வந்திட கூடாதுனு தான் இதை மறைச்சிருக்கா. அவ ப்ரெண்ட்ஸ் கிட்ட இதை யார்ட்டயும் சொல்ல கூடாதுனு சத்தியம் வாங்கியிருக்கா. இருந்தும் சரண்யா மனசு கேக்காம இதை சொல்லிட்டா” என்றவள் நிறுத்தி பின்,

“இதை நான் உன்கிட்ட சொல்லாததுக்கு காரணம் இது தெரிஞ்சு உன்னோட கில்டி பீல்ல அவளை கல்யாணம் பண்ணிக்க நீ ஓகே சொல்லிட கூடாதுனு தான்” என்று முடித்திட்டாள்.

அவனது அமைதியில் அவனது நிலையை உணர்ந்து கொண்டவள் அவனது தோளில் ஆதரவாக கையை வைத்து,

“அவளோட எண்ணம் சரிதான். இதுக்கு நீ காரணம் இல்லை. இது ஏதேச்சையா நடந்தது” என்று மொழிய அவனிடம் இப்போதும் மௌனம் தான் பதிலாக இருந்தது.

அதற்கு மேல் என்ன கூறுவதென்று அவளுக்கும் தெரியாது போக அவனாக இதிலிருந்து வெளியே வர வேண்டும் அதற்கு சில நாட்கள் ஆகும் என்று அமைதியாக நகர்ந்துவிட்டாள்.

ஆனால் அடுத்த மூன்றாம் நாள்,

“நான் சென்னையில இருக்க எஸ்.கே டெக் சொல்யூசன்ஸ வாங்கி இருக்கேன்” என்று கூற,

அதனை கேட்ட காயத்ரி ஏகமாய் அதிர்ந்து,‌“சைத்து” என்று நம்பவியலாது நோக்கினாள்.

“நெக்ஸ்ட் வீக் சென்னை போறேன் அந்த கம்பெனிய நான் டேரெக்டா பாத்துக்க போறேன்” என்று அழுத்தமாக கூற,

“சைத்து வாட் ஆர் யூ டூயிங். மேகா அங்க வொர்க் பண்றது தெரிஞ்சு தான் இதை நீ வாங்கி இருக்கியா?” என்க,

அவனது மௌனம் உண்மையை எடுத்துரைத்தது.

அதில் இவளுக்கு அச்சம் பிறந்தது. அவள் எது நடக்க கூடாது என்று அஞ்சினாலோ அது நடக்க போகிறதா?

“என்ன பண்ண போற சைத்து” என்றவளது குரலில் பயம் வெளிப்படையாக தெரிந்தது.

“நீ இப்போ கில்டினெஸ்ல எதாவது முடிவெடுத்தா அது கண்டிப்பா தப்பாதான் இருக்கும். வேணாம் டா” என்று அவனது கையை பற்ற,

“நான் எந்த முடிவும் இன்னும் எடுக்கலை காயு”

“அப்போ எதுக்கு நீ அந்த கம்பெனிய வாங்கி இருக்க?”

“நான் அவளோட வாழ்க்கையை சரி பண்ண போறேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவளோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்‌”

“என்ன சரி பண்ண போற? வேணாம் எதுவும் வேணாம்‌. நான் அவக்கிட்ட பேசி இதை ஹாண்டில் பண்ணிக்கிறேன்.‌ அவ நினைக்கிறது நடக்க சான்ஸ் இல்லை உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு சொல்லி அவளோட லைஃபை பாத்துட்டு போக சொல்றேன்”

“நோ என்னால தான எல்லாம் நடந்திருக்கு. ஸோ நானே அதை சரி பண்றேன்”

“நோ சைத்து நீ அவ கண்முன்னாடி போய் நின்னா நிச்சயமாக அவ ப்ரேக் ஆகிடுவா. ப்ளீஸ் சைத்து”

காயுவின் புறம் திரும்பி விழிகளை நோக்கியவன்,

“ட்ரஸட் மீ ஐ கேன் ஹாண்டில் திஸ். அவ லைஃபை சரி பண்ணிட்டு தான் நான் வருவேன்” என்று அழுத்தமாக உறுதியாக கூறிவிட, இவள் மொழியற்று போனாள்.

அதன் பிறகு வீட்டினரிடம் நம்பும்படி பொய்யை கூறிவிட்டு அடுத்த வாரமே சென்னைக்கு புறப்பட்டு சென்றிருந்தான்.

அவன் அலுவலகம் வந்த அன்று எல்லோரும் அவனை வரேவேற்க வரிசையாக நிற்க,சைத்துவின் விழிகள் மேகாவை தான் தேடியது.

இருந்த கூட்டத்தில் அவள் இல்லாது போக வரவேற்பை தலையசைத்து ஏற்று கொண்டவன் அங்கிருந்த மேலாளரிடம்,

“எல்லாரும் வந்துட்டாங்களா மனோஜ்?” என்று கேட்க,

“இல்லை சார். ரெண்டு பேர் மட்டும் ஒன் ஹவர் பெர்மிஷன் வாங்கி இருக்காங்க” என்று மனோஜ் கூற,

“இன்னைக்கு நான் சார்ஜ் எடுக்க போறேன். ஸோ யாரும் ஆப்சென்ட் ஆக கூடாதுனு சொல்லி இருந்ததா ஞாபகம்” என்றவாறு தனது அறைக்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான்.

அவனது குரல் மாற்றத்தை உணர்ந்த மனோஜ்,

“சார் அவங்களுக்கு ஏதோ எமர்ஜென்சினு பெர்மிஷன் கேட்டாங்க சார் அதான்” என்று இழுக்க,

“அந்த ரெண்டு பேர் டீடெயில்ஸ் என் டேபிளுக்கு இப்போ வரணும்” என்று மொழிந்தான்.

“ஓகே சார்” என்ற மனோஜ் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் இருவரது விபர குறிப்புகளை கொண்டு வந்து கொடுத்தான்.

அதில் மேகா மற்றும் சற்று அதிகமான விடுமுறைகளை எடுத்து இருக்க அதனை கண்டவன்,

“மேக மொழியாள் வந்ததும் என்னோட கேபின்க்கு வர சொல்லுங்க” என்று உத்தரவிட்டான்.

மனோஜ், “சரிங்க சார்”என்று தலையசைக்க,

“யூ மே கோ நவ்” என்று அவனை அனுப்பியவனது பார்வை தனது
மேஜை மேல் இருந்த அவளது புகைப்படத்தில் பதிந்தது.

இங்கு மேகா தனது பெண் பார்க்கும் நிகழ்வை முடித்துவிட்டு அவசர அவசரமாக அலுவலகத்தை அடைந்து குழு தலைவரிடம் பேசிவிட்டு அவனது அறை வாசலில் நின்று,

“மே ஐ கம் இன் சார்”என்று வினவியிருந்தாள். முகம் முழுவதும் ஒருவித பதற்றம்.

வந்த முதல் நாளே முதலாளியிடம் எதாவது கெட்ட பெயர் வந்துவிடுமோ என்ற எண்ணம் அவளது முகத்தில் பிரதிபலித்தது.

தன்னுடைய அறையில் இருக்கும் கண்கானிப்பு கேமராவின் மூலம் அவளை பார்த்திருந்தவன்,

“எஸ் கம் இன்” என்று பதிலளித்தான்.

அவனது குரலை கேட்டதும் அவளிதழ்கள் ஏதோ புலம்ப துவங்க, அவளையே கவனித்திருத்தவனுக்கு அது தெளிவாக தெரிந்தது.

உள்ளே நுழைந்ததும், “கூப்பிட்டிங்களா சார் ஐ ஆம் மேக மொழியாள்” என்று கூறியவளது குரலில் சிறிதான பதற்றம் குடி கொண்டிருந்தது.

“எஸ் மிஸ் மேகா” என்று சாவகாசமாக கணினியில் இருந்து முகத்தை அவள் புறம் திருப்பினான்.

அவனை கண்டதும் அவளது முகத்தில் பூகம்பம் ஒன்று பூத்திட,

இதழ்கள் மெதுவாக, “க்யூட்டன்” என்று முணுமுணுத்ததும் தெளிவாக புரிந்தது.

என்னவோ அவளை தெரிந்த படி காண்பித்து கொள்ள அக்கணம் தோன்றாததால்.

ஒரு முதலாளியாக, “எனக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப இம்ப்பார்ட்டனட். அண்ட் மோர் ஓவர் நீங்க உங்க சி. எல்லை விட அதிகமா லீவ் எடுத்து இருக்கிங்க டோன்ட் ரிப்பீட் இட் அகெய்ன். அதர்வைஸ் யூ வில் பீ டெர்மினேட்டட்” என்று அழுத்தமான குரலில் கூற,

அவளிடம் மொழியில்லை. இன்னும் தன்னை கண்ட அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை என்று தெளிவாக தெரிந்தது.

விழிகள் அவளை தான் அளவிட்டபடி இருந்தது.

அரக்கு நிறத்தில் சல்வார் அணிந்திருந்தவளது ஒற்றை தோளில் நழுவி விழும் நிலையில் தழுவி கொண்டிருந்தது சந்தன நிற துப்பட்டா‌.

முகத்தில் பெரிதான ஒப்பனை ஏதுமில்லை. காதில் சிறிதான கல் தோடு கழுத்தில் மெல்லிய சங்கிலி போட்டிருந்தாள்‌. ஒரு கையில் ஒற்றை வளையலும் மற்றொரு கையில் கைக்கடிகாரமும் கட்டி இருந்தவள் அவ்வளவு எளிமையாக இருந்தாள்.

சடுதியில் தேநீர் விடுதியில் முகம் முழுவதும் சிரிப்புடன் தன்னை பற்றி சிலாகித்து கண் மூடி ரசித்து பேசியபடி நின்றிருந்த மேகாவின் முகம் நினைவில் ஆடியது.

அவன் கல்லூரியில் கண்ட மேகாவிற்கும் இவளுக்கும் ஆயிரம் வேறுபாடுகளை கண்டறியலாம். இவளது முகத்தில் அவ்வளவு முதிர்ச்சி வந்திருந்தது.

அதற்கு மேல் ஒரு வித அமைதி இவளிடம் குடி கொண்டிருப்பதாக அவனுக்கு பட்டது.

நொடி நேரத்தில் அவளை அவதானித்திருந்தவன்,

“மிஸ் மேகா ஆன்சர் மீ” என்று கூறியிருக்க,

அதில் தன்னிலை மீண்டவள் தட்டுத்தடுமாறி, “சா… சாரி சார். இனிமே லீவ் எடுக்க மாட்டேன்” என்று திணறலுடன் மொழிந்திட,

அந்த தடுமாற்றம் திணறல் யாவும் தனக்கானது என்று உள்மனம் எடுத்துரைத்தது‌.

ஒரு கையில் துப்பட்டாவை இறுகி பிடித்தபடி நின்றிருந்தவளது விழிகள் லேசாக கலங்கிட துவங்க மறுகையால் சடுதியில் பூத்துவிட்ட வியர்வையை துடைத்தபடி அவனை பார்த்திருந்தாள்.

ஒவ்வொரு அசைவிலும் தனக்கான நேசத்தை அவள் வெளிப்படுத்தி கொண்டிருப்பதை உணர்ந்தவன் அவளை அனுப்ப தோன்றாது,

“ஹ்ம்ம். உங்க டி.எல் ராமநாதன் தானே? கரண்ட் ப்ராஜெக்ட் என்ன ஸ்டேட்ஸ்ல இருக்கு” என்று கேட்க,

“ஓவர் ஆல் ஒர்க் ஓவர் சார். டெஸ்ட்டிங் மட்டும் தான் சார் பெண்டிங்க்ல இருக்கு” என்றவளது அதிர்ச்சியின் கணம் தாங்காது மூர்ச்சையாகி சரிய,

அவளையே படித்தபடி இருந்தவனுக்கு அவளது நிலை புரிய கண நேரத்தில் அவளை தாங்கி பிடித்திருந்தான்.

இடையோடு சேர்த்து பிடித்தவன் அவளது வாடிய முகத்தினை காண விழியோரம் லேசாக நீர் கசிந்தது.

அவனையறியாது ஒருவிரல் அதனை துடைத்திட அப்படியே கையில் ஏந்தியவன் தன்னுடைய ஓய்வறைக்கு சென்று மெத்தையில் படுக்க வைத்தான்.

இத்தனை நேரம் நொடிக்கு நொடி பரிதவிப்பு பதற்றம் அதிர்ச்சி என்று கண்ணாடியாய் அகத்தை பிரதிபலித்தவளது முகம் அத்தனை நிர்மலாய் இருந்தது.

நிமிடங்கள் கடந்து அவளை பார்த்திருந்தவன் பிறகு நி
லை உணர்ந்து தனது உதவியாளரை அழைத்து மருத்து உதவி அறைக்கு மாற்ற வைத்தவன் தனது அறையில் தலையை பிடித்து அமர்ந்துவிட்டான்.

இத்தனை நேரம் அவளது முகம் காண்பித்த பாவனைகளும் இறுதியில் தாங்கவியலாது மயங்கி விழுந்தது தான் நினைத்ததை செய்து முடிப்பதன் சாத்திய கூறுகளை காண்பிக்க இவனுக்கு ஆயாசமாக இருந்தது…
 
Active member
Messages
345
Reaction score
231
Points
43
Ippo varaikkum Megha oda ennam seri na alavuku than chaidhu oda action iruku but ithula oru vishyam enna na ivanuku aval mela love eppo vandhathu than
 
Top