மேகம் 19:
மேகாவை வார்த்தையால் குத்தி கிழித்தவள் அவளது அதிர்ச்சியை வேதனையை ஒருவித குரூர திருப்தியுடன் பார்த்துவிட்டு சென்றுவிட,
அவளது வார்த்தைகளின் விளைவால் சில்லு சில்லாக சிதறி போனவள் தான் வார்த்தைகளற்று சமைந்துவிட்டாள்.
அவளுக்கு நிஜமாய் புரியவில்லை.
சைத்தன்யாவிற்கு தன் மீது பரிதாபமா? இல்லை அவரால் தான் அடிப்பட்டுவிட்டது என்ற குற்றவுணர்வா?
அதனால் தான் தன்னை மணந்து கொள்ள முடிவெடுத்தாரா? அப்போது அவருக்கு தன் மேல் காதல் இல்லையா?
இது ஒரு பரிதாபத்தில் விளைந்த உறவா? என்று எண்ணமே எட்டிக்காயாய் கசந்தது.
‘இருக்காது… நிச்சயமாய் இருக்காது அவருக்கு என் மேல் நேசம் நிச்சயமாக உள்ளது’ என்று உள்ளம் கூக்குரல் இட,
மூளை, ‘திடீரென எப்படி அவருக்கு உன்மேல் காதல் வந்தது? அதுவும் இத்தனை வருடங்களுக்கு பிறகு தேடி வந்து காதலை தெரிவித்து திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார்? அவருக்கு கல்லூரி படிக்கும் போதே உன் மீது நேசம் இருந்ததா என்ன?’ என்று கேள்வியை சாட்டையாய் தொடுக்க, இவளிடம் பதிலே இல்லை.
இத்தனை நாட்களாக எப்படி திடீரென என் நினைவு வந்தது என் மீது நேசம் வந்தது என்று பலவாறாக பல முறை சைத்தன்யாவிடம் மேகா வினா தொடுத்திருக்கிறாள்.
ஆனால் சிறு புன்னகையுடன், ‘சீக்ரெட்’ என்றபடி கடந்துவிடுவான்.
எத்தனை முறை கேட்டும் பதில் இல்லாது போக இவள் சலிப்புடன் கடந்துவிட்டாள்.
ஆனால் அவன் கூறியது போல இதில் ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
மேகாவிற்கு சைத்தன்யாவால் தான் அடிப்பட்டது.
ஒரு முறை காயத்ரியை காண்பதற்காக விளையாட்டு மைதானத்திற்கு சென்ற போது சைத்தன்யா தெரியாமல் அவள் மீது பந்தை எறிந்திரிந்தான்.
அதில் மேகா மூர்ச்சையாகி விழ அவளை மருத்துவ உதவி அறைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
மருத்துவர் பரிசோதித்து விட்டு பயத்தில் தான் மயக்கம் என்று கூறிவிட சிறிது நேரத்தில் கண்விழித்துவிட்டாள்.
அப்போதைக்கு அவளுக்கு எந்தவித வலியும் இருந்திருக்கவில்லை.
ஆனால் சிறிது நாட்களுக்கு பிறகு மெதுவாக வலிக்க துவங்கிய வலது கால் நாளடைவில் நடக்கவியலாத அளவிற்கு கொண்டு சென்றிருந்தது.
விடயம் அறிந்து வந்த மேகாவின் பெற்றோர் வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர்.
காந்த அதிர்வு அலை வரைவு(எம்.ஆர்.ஐ) எடுத்து பார்த்துவிட்டு அவளுக்கு முதுகு தண்டு வடத்தில் டிஸ்க் கம்ப்ரஷன் என்று கூறிவிட,
மேகாவின் பெற்றோர் உடைந்து போயினர்.
ஆசையாய் பெற்று வளர்த்த ஒற்றை பிள்ளைக்கு இந்த நிலை வர வேண்டுமா? என்று வேதனை பட, மேகாவுக்கும் இது பேரதிர்ச்சி தான்.
கால் வலிக்கு வேறேதும் காரணமாக இருக்கும் என்று நினைத்தவளும் இதனை எதிர்பார்த்திருக்கவில்லை.
மருத்துவர் இவளுக்கு சூழ்நிலையை விளக்கி எங்காவது சமீபத்தில் கீழே விழுந்ததாயா? அல்லது அடிப்பட்டதா? என்று விசாரிக்க,
அவளுக்கு எவ்வளவு முயன்றும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக நினைவு வரவில்லை.
சில நிமிடங்கள் கழித்தே ஒரு நாள் சைத்தன்யா வீசிய பந்து தன் மீது பட்டு கீழே விழுந்தது நினைவிற்கு வந்தது.
அதன் பிறகு வலி மெதுவாக வர துவங்கியதும் புரிபட்டது.
ஆனால் அதனை யாரிடத்திலும் கூறியிருக்கவில்லை.
பெற்றோரிடமும் தனக்கு கீழே விழுந்ததாக எந்த நினைவும் இல்லை என்று பொய்யுரைத்திருந்தாள்.
பின்னர் மருத்துவர் இது அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை.
சிறிய அறுவை சிகிச்சை செய்தால் வலி இல்லாது வாழலாம்.
தொடர்ந்து மிக நீண்ட பயணம் செய்ய கூடாது படிகளில் அடிக்கடி ஏறி இறங்க கூடாது மிக கணமானவற்றை தூக்க கூடாது என சில பல அறிவுரைகளை கூறியிருந்தார்.
அறுவை சிகிச்சை என்றதும் பெரியவர்கள் பயந்து போக மேகா தான் தன்னுடைய நிலையை ஒருவாறாக ஏற்று கொண்டு பெற்றோரிடம் எடுத்து கூறினாள்.
அதன் பிறகு அறுவை சிகிச்சை நடக்க ஒரு மாத காலத்திற்கு பிறகு குணமடைந்து கல்லூரிக்கு திரும்பினாள்.
மருத்துவர் கூறிய அறிவுரைகளை தவறாது பின்பற்றினாள்.
திவ்யா மற்றும் சரண்யா இருவரை தவிர சைத்தன்யாவால் தான் அடிப்பட்டது என்று யாருக்கும் கூறியிருக்கவில்லை.
இவர்களிடம் மேகாவாக கூறவில்லை. அவர்கள் தான் உண்மையை கண்டறிந்திருந்தனர்.
யாரிடமும் கூற வேண்டாம் என்று மேகா சொல்லியிருக்க அவர்களும் கேட்டு கொண்டனர்.
அதன் பிறகு நாட்கள் நாட்கள் நகர மேகா தனக்கேற்றவாறு வாழ பழகி கொண்டிருந்தாள்.
அவளே தன்னுடைய நிலைக்கு சைத்தன்யா தான் காரணம் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.
ஏனெனில் அது ஒரு எதிர்பாராத விபத்து அவ்வளவு தான். தான் தான் மைதானத்தில் நடந்து செல்லும் போது கவனமாக சென்றிருக்க வேண்டும் என்பது தான் அவளது எண்ணமாக இருந்தது.
இந்த விடயம் தங்கள் மூவரை தவிர யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஆக அவர்கள் இருவரில் ஒருவர் தான் இதனை பற்றி சைத்தன்யாவிடம் கூறியிருக்க வேண்டும்
அதனை கேட்ட சைத்தன்யாவும் குற்றவுணர்விலும் என் மீதுள்ள பரிதாபத்திலும் அவருடைய நேசத்தை ஆம் நேசம் தான் அவள் கூறினாளே அவருக்கும் தன் மீது விருப்பம் இருந்தது என்று.
ஆக அவருடைய நேசத்தை விட்டுவிட்டு குற்றவுணர்வை சரி செய்ய பரிதாபத்தில் என்னை திருமணம் செய்ய வந்துவிட்டார்.
‘பரிதாபத்தில்’ என்ற வார்த்தையே அத்தனை கசப்பை விதைத்தது.
அவருக்கு பொருத்தமான பெண்ணை தான பார்த்திருக்கிறார் அவளையே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டியது தானே?
இந்த விடயம் திருமணத்திற்கு பிறகு தெரிந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்?
அது போல எண்ணி இதனை விட்டிருக்கலாமே…
அதை விடுத்து தெரியாது செய்துவிட்ட ஒன்றிற்காக வாழ்க்கையே பதிலாக கொடுக்க வேண்டுமா?
அதுவும் தகுதியே இல்லாத என்னிடத்தில் வாழ்க்கையை ஒப்படைக்க வேண்டுமா? என்று விழிகள் கலங்கியது.
அவள் கூறுவது சரிதான். யாராக இருந்தாலும் என்னுடன் சேர்த்து வைத்து அவரை பார்த்தால் அவள் கூறியது போல தான் நினைப்பார்கள்.
அவருடைய அழகுக்கும் தகுதிக்கும் வந்துவிட்டு போன அந்த பெண் தான் நிச்சயம் பொருத்தமாக இருப்பாள்.
அதுவும் அவள் மீது விருப்பத்தை வைத்துவிட்டு தன்னுடன் எப்படி வாழ முடியும்? அது அவருக்கு எத்தனை கொடுமையாக இருக்கும்?
எல்லாவற்றையும் விட அவர் ஆசைப்பட்ட வாழ்வை தன்னால் தான் வாழ்வில்லை என்று வாழ்க்கை முழுவதும் தான் குற்றவுணர்வில் தவிக்கவா?
இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்த திருமணத்தை நிறுத்துவது தான் தோன்ற உள்ளுக்குள் இதயத்தை ஊசியாய் துளைத்தது.
ஆனால் அதற்கு முன் இதனை சைத்தன்யாவிடம் தெரிவித்தது யார் என்று தெரிய வேண்டும்.
சரண்யா மற்றும் திவ்யா இருவரில் யார் கூறியிருப்பார்கள்.
திவ்யா வெளிநாட்டில் திருமணம் ஆகி புகுந்த வீட்டினருடன் குடியேறிவிட்டாள்.
அவள் கூறியிருக்க வாய்ப்பில்லை. சரண்யா தான் கூறியிருக்க முடியும்.
ஏன் திடீரென இவ்வாறு செய்தாள்? என்று வினா ஜனிக்க,
சடுதியில் பதில் புரிப்பட்டது.
சில மாதங்களுக்கு முன் வணிக வளாகத்தில் வைத்து தாயுடன் சரண்யாவை எதேச்சையாக சந்தித்தாள்.
அப்போது தமயந்தி வழக்கம் போல இவளது திருமணம் தள்ளி போவதையும் அதற்கு உடல்நிலை தான் காரணம் என்றும் புலம்பியது நினைவிற்கு வந்தது.
இறுதியாக விடைபெறும் சமயம் சரண்யா,
“ஏன் மேகா இன்னும் நீ சைத்து சீனியரை நினைச்சிட்டு இருக்கியா?” என்று வினவியதும்,
தான் ஒரு கணம் அதிர்ந்து நின்று பிறகு,
“இ…இல்லை அதெல்லாம் ஜெஸ்ட் காலேஜ் க்ரெஷ்” என்று தடுமாற்றத்துடன் சமாளித்ததும் நினைவில் நிழலாடியது.
ஆக யாவையும் சேர்த்து பார்த்து சரண்யா தான் இதனை செய்திருக்கிறாள் என்று உறுதியானது.
அப்போது கவி, “மேகா இந்த ப்ளாக் குர்தி அழகா இருக்கு பாரு” என்று ஒரு உடையை எடுத்து காண்பிக்க,
முகத்தை முயன்று சாதாரணமாக வைத்தவள்,
“ஹ்ம்ம் நல்லாயிருக்கு எடுத்துக்கலாம் டி. நீ பாத்திட்டு இரு எனக்கு கால் வருது பேசிட்டு வர்றேன்” என்று அலைபேசியை எடுத்தாள்.
“சரி டி சீக்கிரம் வா” என்ற கவி வேறு உடையை பார்க்க சென்றாள்.
‘சரி’ என்பதாய் தலை அசைத்தவள் ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு சரண்யாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
முழுமையாக அழைப்பு சென்று துண்டாகியது.
ஒரு பெருமூச்சுடன் மீண்டும் அழைப்பை விடுக்க அழைப்பு இறக்கும் தருவாயில் ஏற்றவள் மறுமுனையில்,
“என்னடி புது பொண்ணு கால் பண்ணி இருக்க? கல்யாண வொர்க் எல்லாம் எப்படி போகுது?” என்று வினவிட,
“ஹ்ம்ம் நல்லா போகுது டி” என்றாள்.
“என்னடி வாய்ஸ் சரியில்லை? எதுவும் பிராப்ளமா? சீனியர் எதுவும் சொல்லிட்டாரா?” என்று கேட்க,
“அதெல்லாம் எதுவுமில்லை டி” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.
“அப்புறம் ஏன் டி டல்லா பேசுற? டூ டேஸ் முன்ன கால் பண்ணி மேரேஜ்கு இன்வைட் பண்ணும் போது கூட வாய்ஸ்ல அவ்ளோ ஹாப்பினெஸ் இருந்துச்சே” என்று வினா எழுப்ப,
“டூ டேஸ் முன்னவரை அவருக்கு என்ன பிடிச்சிருக்கு என்னை மாதிரியே அவருக்கும் லவ் இருக்கு அதான் கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டாருன்னு நினைச்சிட்டு சந்தோஷமாக இருந்தேன்” என்றவளுக்கு தொண்டை அடைத்திட,
“ஹேய் மேகா என்னடி பேசுற?” என்று சரண்யா பதற,
“ஆனால் அவர் பரிதாபத்துல தான் என்னை கட்டிக்க சம்மதிச்சிருக்காருன்னு இப்போ தான் தெரிஞ்சது”என்று அழுகையை அடக்கினாள்.
“ஏய் என்னடி வார்த்தை அது பரிதாபம்” என்று மறுமுனையில் அவள் அதிர,
“ஆமா பரிதாபம் தான். கொஞ்சம் நாள் முன்ன என்னை பாத்த ப்ரெண்ட் ஒருத்தி என் மேல பாவப்பட்டு அவர்கிட்ட என்னோட நிலைமைக்கு அவர் தான் காரணம்னு சொல்லிட்டா போல. அதான் அவரும் பரிதாபப்பட்டு எனக்கு வாழ்க்கை கொடுக்குறாரு” என்றவள் விம்ம,
இங்கு சரண்யாவிடத்தில் பதிலே இல்லை.
“பதில் சொல்லு சரண்? நான் உன்கிட்ட கேட்டேனா? எனக்கு கல்யாணம் ஆகலை அவர்கிட்ட வாழ்க்கை பிச்சை போட சொல்லுனு கேட்டேனா?” என்று அழுகையுடன் கேட்க,
“ஹேய் மேகா பாவம் பரிதாபம்னு என் கஷ்டப்படுத்திட்டு இருக்க? நான் அப்படிலாம் நினைக்கிற ஆளா?” என்று பரிதவிப்புடன் கேட்க,
“அப்புறம் ஏன் சரண் அவர்கிட்ட நீ நடந்ததை சொன்ன? அவருக்கு வேற ஒரு பொண்ணை பிடிச்சிருந்திருக்கு இன்னும் கொஞ்ச நாள்ல மேரேஜ் பண்ற ஐடியால இருந்திருக்காரு நீ சொன்னதை கேட்டதும் அதெல்லாம் விட்டுட்டு கில்டினெஸ்ல இப்போ என்னை மேரேஜ் பண்ணிக்க போறாரு”
“...”
“வேறொரு பொண்ணை விரும்பினவருக்கு என் கூட எப்படி வாழ பிடிக்கும் பரிதாபத்தில கிடைச்ச வாழ்க்கையை நானும் எப்படி சந்தோஷமா வாழ முடியும் சரண்?”
“மேகா நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்க? அவருக்கு நிஜமாவே உன்னை பிடிச்சிருக்கு மேகா. அவர் வேற யாரையும் விரும்பலை. இது பரிதாபத்தில வந்த காதலும் இல்லை மேகா”
“...”
“மோர் ஓவர் நான் இன்டென்ஷனோட எதையும் சொல்லலை அதுவும் சீனியர்கிட்ட சொல்லலை. ஏதேச்சையா காயு சீனியரை மீட் பண்ணேன் அப்போ அவங்க உன்னை பத்தி விசாரிச்சாங்க நான் நடந்ததை சொன்னேன் மேகா நீ எல்லாத்தையும் தப்பா புரிஞ்சிட்டு இருக்க”
“இப்போ தான் சரண் எல்லாத்தையும் சரியா புரிஞ்சு இருக்கேன். நீ இதுவரைக்கும் எனக்கு பண்ண நல்லதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சரண். தயவு செய்து இனிமே இது மாதிரி எதுவுமே பண்ணாத? இந்த பரிதாபத்துல விளைஞ்ச வாழ்க்கை வேணாம் எனக்கு” என்று முடித்திட,
“மேகா என்ன பேசுற பைத்தியம் மாதிரி உளறாதே. நான் செஞ்சது தப்புன்னா என்னை திட்டு அடிக்க கூட செய் ஆனா சீனியர் அவர் உனக்காக என்னென்ன செஞ்சிருக்காருன்னு தெரியாம பேசாதே” என்று சற்று கோபத்தில் பேச,
“உங்களை திட்றதுக்கு நான் யாருங்க? எவ்ரிதிங்க் இஸ் ஓவர்” என்றவள்,
“அப்புறம் நான் எதையும் தெரிஞ்சிக்க விரும்பலை” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள்.
ஏனோ அழுகை பெருகியது. இப்போதைக்கு நிற்கும் என்று தோன்றவில்லை.
கவி வேறு வந்துவிடுவாள் முகத்தை பார்த்தாள் நிச்சயமாக கேள்வி கேட்பாள் என்று எண்ணம் வர எழுந்து சென்று தண்ணீரால் முகத்தை நன்கு கழுவியவள் துடைத்து ஓரளவிற்கு சமன்பட்டு வந்தாள்.
இவளை கண்டதும் கவி,
“ஏன்டி இவ்ளோ நேரம் உனக்காக நாலு ட்ரெஸ் செலெக்ட் பண்ணி இருக்கேன்” என்று எடுத்து காண்பிக்க,
“ஹ்ம்ம் நல்லாயிருக்கு டி இதையே பில் போட சொல்லலாம்” என்றவள்,
“டைம் ஆச்சு கிளம்பலாம்” என்க,
“என்னடி அவசரம்? டைம் இருக்கே நாலு ட்ரெஸ் தான எடுத்திருக்கோம்”
“மழை வர்ற மாதிரி இருக்கு டி அதான்” என்று இழுத்துவிட்டு,
“எனக்கு லைட்டா தலை வலிக்கிது இன்னொரு நாள் வந்து வாங்கிக்கலாம்” என்க,
“என்ன திடீர்னு தலைவலி காஃபி குடிக்கிறியா?” என்று அக்கறையாக வினவ,
“இல்லை வீட்டுல போய் ரெஸ்ட் எடுத்தா சரியா போகும்” என்று சமாளித்து பணத்தை கட்டிவிட்டு அவளையும் அனுப்பி வைத்து வீட்டிற்கு வந்து சேர்தவற்குள் மழை கொட்ட துவங்கிவிட்டது.
மழையில் அழுகையுடன் தான் வீட்டை அடைந்தாள்.
நடந்தவற்றை எண்ணியவளது விழிகள் நீரை சொரிந்தபடி இருக்க இரவின் நீளம் கூடி கொண்டே சென்றது…
இங்கு அவளுடைய மொத்தத்திற்கும் சொந்தமானவனோ இருளை வெறித்தபடி அமைதியாக பால்கனியில் நின்றிருந்தான்.
குளிர் காற்று உடலை ஊடுருவி செல்ல அவன் எதையும் கவனிக்கும் மனோபாவத்தில் இல்லை.
காரணம் எல்லாம் உடையவள் மேக மொழியாள்.
அவள் மீதான காதல் கோபம் வருத்தம் ஆதங்கம் யாவும் தான்.
எத்தனை சுலபமாக இந்த திருமணத்தை தன்னை வாழ்வில் இருந்து விலக்க கூறிவிட்டாள்.
அப்போது அவ்வளவு தானா? தான் அவளுக்கு தன்னுடைய நேசமும் அத்தனை சுலபமாக போய்விட்டதா?
இவள் ஒருத்தியை கரம் பிடிக்க தான் எத்தனை போராட்டம் செய்திருப்பேன்.
ஏன் அவளிடத்திலே நேசத்தை ஒப்பு கொள்ள வைக்க அவ்வளவு போராடினேனே?
அதற்கு மேல் வீட்டினரை சம்மதிக்க வைக்க யாவையும் உதறி தள்ளினேனே
எல்லாம் யாருக்காக? எதற்காக அவள் ஒருத்திக்காக தானே?
ஆனால் அவளுக்கு இது எதுவும் புரியவில்லை.
எத்தனை சுலபமாய் பரிதாபத்தில் விளைந்த வாழ்க்கை வேண்டாம் என்று கூறிவிட்டாளே.
எனது நேசம் ஓரிடத்தில் கூட அவளுக்கு புரியவில்லையா? அவள் உணரவில்லையா? இல்லை தான் தான் உணர்த்த தவறிவிட்டேனா? என்று இம்மையும் புரியவில்லை மறுமையும் புரியவில்லை.
மனது சில மாதங்களுக்கு முன்பு பயணித்து சென்றது.
அன்று சைத்தன்யாவின் பிறந்த நாள். சிறு வயதில் விமர்சையாக கொண்டாடியதோடு சரி வயது ஏற ஏற முதிர்ச்சி வந்துவிட்டதால் குடும்பத்தினரின் வாழ்த்துக்களோடு கடந்துவிடுவான்.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா” என்ற தாயின் வாழ்த்து முதன்மையாக வர,
“தாங்க்ஸ் மா” என்று புன்னகையுடன் பெற்று கொண்டவன் உணவுன்ன அமர,
“ஹாப்பி பர்த்டே ப்பா” இந்த கையில் இரண்டு பரிசுகளுடன் ஓடி வந்து அவனை அணைத்து கொண்டனர் அனிருத்தும் அக்ஷயாவும்.
“தாங்க்ஸ்டா செல்லம்ஸ்” என்று சிரிப்புடன் பெற்று கொண்டவன் தானும் உண்டவாறு அவர்களுக்கு ஊட்டிவிட,
அறையில் இருந்து வந்த காயு சிந்தையுடன் அமர்ந்துவிட்டாள்.
எப்போதும் முதன் முதலாக வாழ்த்துக்கள் கூறும் காயு அமைதியாக இருப்பதை கண்ட சைத்து அவள் முகத்தை யோசனையாக காண,
சைத்துவின் தாய்,
“என்னம்மா நீதான் எப்பவும் அவன் பிறந்தநாளுக்கு முதல் ஆளா விஷ் பண்ணுவ இன்னைக்கு அமைதியா இருக்க” என்று கேட்டுவிட,
“ஏதோ திங்கிங்க்ல இருந்துட்டேன்த்தை” என்றவள்,
“ஹாப்பி பர்த்டே டா” என்று சிரிப்புடன் மொழிய,
தலையசைத்து ஏற்றவனது பார்வை கேள்வியாய் அவள் மீது படிந்தது.
காயு எதுவும் கூறாது உண்டு முடித்தாள்.
பிறகு ஆதித்யா சதாசிவம் என்று வாழ்த்துக்களை தெரிவிக்க பெற்று கொண்டவன் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு இருப்பதால் கிளம்பிவிட்டான்.
ஆனால் இரவு உணவுக்கு பிறகு காயத்ரியை பிடித்து கொண்டான்.
“காயு வாட் இஸ் ஈட்டிங் யூ?” என்று கேட்டவன் மொட்டை மாடியில் சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க, மறுபுறத்தில் காயு நின்றிருந்தாள்.
சற்று தள்ளி குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர்.
இரண்டு நிமிடங்கள் அமைதியாக கழிய,
“காயு உன்கிட்ட தான் கேக்குறேன் ஆன்ஸர் மீ?”
“நீ ஏன் இன்னும் மேரேஜ் பண்ணிக்கலை?”
“வாட்?” என்றவன் புரியாத பார்வை பார்க்க,
“ஏன் மேரேஜ் பண்ணிக்கலைன்னு கேக்குறேன். ஸ்வஸ்தி உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பண்ணிட்டு இருக்கா”
“காயு நான் ஆல்ரெடி சொல்லிட்டேன் அவ எனக்கு செட் ஆக மாட்டான்னு அவளுக்கு என் மேல என்னோட பொஷிஷன் மேல சின்ன இன்பாக்சுவேஷன் தான் மோர் ஓவர் எனக்கு அவ மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை” என்று தெளிவாக உதித்திட,
“ஊஃப்” என்று பெரு மூச்சு பிறந்தது.
அதனை கண்டு புருவத்தை நெறித்தவன்,
“என்னாச்சு காயு? அம்மா எதுவும் கேட்க சொன்னாங்களா?”
“இல்லை சும்மா தான் கேட்டேன்” என்றவள்,
“லவ்வ பத்தி என்ன நினைக்கிற?” என்க,
“ஹேய் உனக்கு என்னதான் ஆச்சு? ஏன் இப்படி சம்மந்தமில்லாம பேசிட்டு இருக்க” என்றவனது குரலில் சிறிது சலிப்பு இருந்தது.
“ஏன் சைத்து இப்போ ஒரு பொண்ணு உன்னை விரும்பி உனக்காக கல்யாணமே பண்ணிக்காம ஆறு வருஷமா வெயிட் பண்றான்னு தெரிஞ்சா என்ன பண்ணுவ?” என்று வினவ,
“வாட்” என்றவனது குரலில் சிரிப்பும் திகைப்பும் இருந்தது.
“இம்பாசிபிள். சிக்ஷ் மந்த் கேப் விழுந்தாலே வேற ரிலேசன்ஷிப்க்கு மாற ரெடியா இருக்க இந்த காலத்துல ஒன் சைட் லவ்க்காக அதுவும் சிக்ஸ் இயர்ஸ் நோ வே. எதாவது மூவி பாத்திட்டு அந்த எஃபெக்ட்ல பேசுறியா?”
“நோ ஐ ஆம் சீரியஸ் சைத்து. உன்னை நினைச்சிட்டு வர அலையன்ஸ் எல்லாம் தட்டிவிட்டுட்டு ஆறு வருஷமா ஒருத்தி உனக்காக மட்டும் வாழ்ந்திட்டு இருக்கா. இட்ஸ் ட்ரூ” என்று தீர்க்கமாக உரைக்க,
இவன் தான் மொழியிழந்து அவளை கண்டான்.
சில கணங்களில் தன்னை மீட்டவன்,
“யாரு அந்த பொண்ணு?” என்று கேட்க,
“மேகா”
“மேகா?” என்றவன் யாரென தெரியாது சிந்திக்க,
இவனுடைய நினைவிலே அவள் இல்லை. ஆனால் இவனை நினைத்து கொண்டு ஆறு வருடத்தை வாழ்ந்திருக்கிறாள் ஒருத்தி என்று உள்ளே ஒன்று கசந்து வழிந்தது.
“மேக மொழியாள் நம்ம ஜூனியர்” என்று மீண்டும் கூற,
சடுதியில் மேகாவின் பரிதவித்த முகம் சைத்தன்யாவின் மனக்கண்ணில் நழுவியது.
இந்த ஆறு வருடங்களில் எந்தவித தொடர்பும் இல்லாத அவளை இவன் மறந்திருப்பதில் பெரிதான ஆச்சர்யம் இல்லை. மேகாவிற்கு தான் சைத்து யாதுமானவன்
ஆனால் சைத்துவிற்கு மேகா என்பவள் கல்லூரியில் தனக்கு இளைய வகுப்பு மாணவி அவ்வளவு தான்.
காயத்ரிக்கு அவளை மிகவும் பிடித்திருந்ததால் அவளை எங்கு சென்றாலும் அழைத்து வருவாள்.
அப்போது அவளை அடிக்கடி பா
ர்த்திருந்தாலும் கல்லூரி முடிந்த பிறகு வேலை தொழில் குடும்பம் என்ற வட்டத்தில் மேகா என்று ஒருத்தி தன் வாழ்வில் வந்து போனாள் என்பதை மறந்தே போயிருந்தான்.
“அவளா?” என்றவனது முகத்தில் வியப்பு அதிர்ச்சி எல்லாம் வியாபித்திருந்தது.
“ஆமா அவ தான்” என்று காயு அழுத்தி கூற,
சைத்தன்யாவிற்கு இதற்கு என்ன எதிர்வினை ஆற்றுதென தெரியவில்லை நிச்சயமாக…