• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 15

Administrator
Staff member
Messages
463
Reaction score
792
Points
93
மேகம் 15:

இறுக பற்றிக்கொள்ளும் தருணம் மிகவும் தனித்துவமானவை அங்கு பற்றுதலை தவிர வேறெதுவும் உணர்வதர்க்கில்லை…

“மேகா உனக்கு ப்ளாக் கர்ரன்ட் ஓகேவா…?” என்ற காயத்ரியின் குரலில் சிந்தையில் இருந்து விடுபட்டு

“ஹ்ம்ம் ஓகே தான் கா” என்று பதிலளித்தாள் மேகமொழியாள்.

கடந்த இரண்டு வாரங்களாக இப்படித்தான் மேகா எந்நேரமும் சிந்தனையுடனே இருக்கிறாள்.

காரணம் சைத்தன்யாவை அன்றி வேறென்ன இருந்துவிட முடியும்?

அன்று முகத்தில் அடித்தாற் போல வீணாக போக வேண்டாமே என்று தான் உனக்காக கொடுத்தேன் என்று கூறிவிட்டு சென்றவன் அதன் பிறகு அவளது பார்வையில் படவே இல்லை.

இவள் தான் அவனது பதிலில் விக்கித்து நின்றிருந்தாள். இருந்தும் கரங்கள் அவன் கொடுத்த புடவையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தது.

தந்தை வந்து, “என்னம்மா உள்ள வராம ஏன் நிக்கிற?” என்று கேட்கும் வரை அங்கேயே நின்றிருந்தவளுக்கு விழிகள் கலங்கி இருந்தது.

சடுதியில் சமாளித்தவள்,

“ஒன்னுமில்லை ஏதோ சத்தம் கேட்டுச்சு அதான் பாத்திட்டு இருந்தேன்” என்று பதில் அளித்துவிட்டு அறைக்குள் சென்று முடங்கியவளுக்கு அழுகை நின்றபாடில்லை.

துடைக்க துடைக்க கண்ணீர் பெருகியது. தனக்காக முதன் முதலாக வாங்கி வந்திருந்தான் என்று நொடி நேரம் கூட மகிழ்ந்திருக்கவில்லை.

அவனே அந்த மகிழ்ச்சியை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டானே என்று உள்ளுக்குள் ஒரு கதறல்.

ஆனால் இவை யாவும் தன்னால் தன்னுடைய கேள்வியால் விளைந்தது என்று அவளுக்கு புரியவில்லை.

புரிந்தாலும் ஏற்று கொள்ள மனது தயாராக இல்லை.

தான் கேட்டால் அவன் இத்தகைய பதிலை கூறுவானா? என்று உள்ளம் விம்மியது.

மற்றொரு மனது இந்த பதிலை கூறாது வேறு என்ன நீ எதிர்பார்த்தாய்?

உனக்காகத்தான் இதனை வாங்கி வந்தேன் உனக்கு கொடுக்கத்தான் அத்தனை வேலைகளையும் விட்டு ஓடி வந்தேன் என்று கூற வேண்டுமா?

அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மறந்துவிடாதே

உனக்கும் அவனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை அவன் உன்னுடைய முதலாளி நீ தொழிலாளி அவ்வளவு தான்.

இதனை தவிர்த்து வேறு எதையும் எதிர்ப்பார்த்து உன்னை நீயே வருத்தி கொள்ளாதே என்று இடித்துரைத்ததில் வெகுநேரம் அழுது தீர்த்தவள் தன்னை தானே தேற்றி கொண்டாள்.

இனி அவரை கண்டாலும் தனக்கு எந்த பாதிப்பும் வராது. முடிந்தவரை பார்ப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று தனக்கு தானே முடிவெடுத்து கொண்டாள்.

அப்படியே அந்த புடவையை பீரோவில் பத்திரப்படுத்தி கொண்டாள். பெற்றோரிடம் உடன் பணிபுரிபவர்கள் வாங்கி கொடுத்தது என்று கூறி வைத்திருந்தாள்.

மறுநாள் அவள் அலுவலகம் செல்ல அவளது வாகனம் அவனிடத்தில் நின்றிருந்தது வாயில் காவலாளி வந்து சாவியை கொடுத்து சென்றான்.

சாவியை வாங்கியவளது மனக்கண்ணில் சடுதியில் வந்து போனான் சைத்தன்யா.

வேணாம் எதுவும் வேண்டாம் என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் அலுவலகத்தில் பணியை கவனித்தாள்.

அவள் அஞ்சியது போல எதுவும் நிகழவில்லை. காரணம் அவன் அதன் பிறகு அலுவலகத்தின் பக்கமே வரவில்லை.

சைத்தன்யா பெங்களூரில் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கி இருப்பதாகவும் அதனால் ஒரு மாத காலத்திற்கு இங்கு வர இயலாது என்று மற்றவர்கள் பேசிக்கொள்ள காதில் விழுந்தது.

தெரிந்த செய்தியால் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் உள்ளுக்குள் ஏதோ ஒன்று அலைக்கழித்தது.

அதனை தட்டி திட்டி சமாளித்தவள் தன் வேலையை கவனிக்க முயற்சித்தாள்.

இருந்தாலும் அவன் கூறி சென்ற வார்த்தையும் அவனுடைய முகபாவமும் அவளை ஏதோ செய்து கொண்டு தான் இருந்தது.

“என்ன மேகா ஏதோ யோசனையா இருக்க?” என்ற காயுவிடம்,

“ஒன்னுமில்லைக்கா” என்று பதில் மொழிந்தவளது பார்வை அருகில் இருந்த இளையவர்களிடம் திரும்பியது

“ம்மா எனக்கு ப்ளூபெர்ரி” என்று அனிருத் கூற,

“ம்மா எனக்கு பட்டர் ஸ்காட்ச்” என்று அக்ஷயா மொழிந்தாள்.

“ஹ்ம்ம் சொல்றேன்” என்ற காயு சிப்பந்தியிடம் இயம்ப,

“ம்மா டூ” என்று அக்ஷி கையை காண்பிக்க,

“எனக்கும் டூ” என்று அனிருத் விரலை காட்டினான்.

சிப்பந்தியிடம் பேசிவிட்டு திரும்பியவள்,

“நோ ஒன் தான். இதுக்கே உங்களுக்கு கோல்ட் வந்திடும்” என்று கண்டிக்க,

“யூ ஆர் பேட் மா. சைத்துப்பா நாங்க கேக்காமலே டூ ஐஸ்கிரீம் வாங்கி தருவார்” என்று அக்ஷி முறைக்க,

“ஆமா நான் உங்களை சைத்துப்பாட்ட கம்பிளைண்ட் பண்றேன்” என்று அனிருத் இயம்பினான்.

“ஓஹோ சொல்லிக்கோங்க. உங்களோட சேர்த்து அவனுக்கும் ரெண்டு அடி போட்றேன். அவன் தான் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கான்” என்று காயுவும் அதட்டினாள்.

மேகா இளையவர்களின் முக பாவனையை தான் மென்னகையுடன் பார்த்திருந்தாள்.

அனிருத், “இப்போவே சைத்துப்பாட்ட சொல்றேன்” என்று அலைபேசியை எடுத்து காணொளி அழைப்பை விடுக்க,

“சொல்லுங்க நானும் உங்களை பத்தி கம்பிளைண்ட் பண்றேன்” என்று காயத்ரியும் சிரிப்புடன் கூற,

மறுமுனையில் அழைப்பு ஏற்க்கப்பட்டதும் வழக்கம் போல,

“சைத்துப்பா எப்போ வருவீங்க? மிஸ் யூ” என்க,

“சீக்கிரம் வரேன் செல்லங்களா? அப்பாக்கு இங்க கொஞ்சம் ஹெவி ஒர்க் அதான் வர முடியலை. மிஸ் யூ பேட்லி” என்று என்று மென்னகையுடன் கூறியவனது குரல் மேகாவின் செவியில் மோத,

பார்வையை சுற்றி இருப்பவர்களை பார்த்தவாறு அலையவிட்டாள்‌‌.

“சீக்கிரம் வாங்கப்பா அம்மா எங்களுக்கு டூ ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்றா” என்று அனிருத் கூற,

“ஆமா நீங்க வந்து வாங்கி கொடுங்க. ஆதிப்பாவும் வாங்கி தர மாட்றாங்க” என்று அக்ஷி உதடு பிதுக்க,

“நான் வந்து வாங்கி தர்றேன்டா பட்டு” என்று சைத்தன்யா மொழிய,

சிரிப்புடன் பேச்சு வார்த்தையை பார்த்திருந்த காயு, “நீங்க பேசிட்டு இருங்க நான் வாஷ் ரூம் போயிட்டு வர்றேன்” என்று சென்றாள்.

“அம்மா நீங்க திட்டுவிங்கன்னு பயந்து வாஷ் ரூம் போய்ட்டாங்கப்பா” என்று அனிருத் வாயை பொத்தி சிரிக்க,

“ஆமப்பா” என்று அக்ஷியும் நகைக்க,

“உங்களை தனியாவா விட்டுட்டு போயிருக்கா?” என்று சைத்து வினவ,

“இல்லை மேகா ஆன்ட்டி இருக்காங்களே” என்ற அனிருத் சடுதியில் அவள்புறம் அலைபேசியை திருப்பிவிட,

இதனை எதிர்பாராத மேகா அதிர்ந்து விழிக்க,

நொடி நேரத்தில் அனிருத் அலைபேசியை மீண்டும் தன்புறம் நகர்த்திவிட்டாலும் கண நேரத்தில் கண்டுவிட்ட அவனது வதனம் இவளை உள்ளுக்குள் என்னென்னவோ செய்ய துவங்கியது.

அதுவும் அவனது பார்வை இவளுக்குள் ஊடுருவிய பிரம்மையை தோற்றுவிக்க விழிகளை இறுக மூடி திறந்தாள்.

மீண்டும் மனது ஒரு நிலையில் இல்லாது அலைபாய துவங்கியது‌‌.

“என்ன கம்ப்ளைண்ட் பண்ணி முடிச்சாச்சா?” என்று சிரிப்புடன் காயு வந்து அமர,

“ஹ்ம்ம் பண்ணிட்டோம்” என்றவர்கள்,

“அம்மாவ திட்டுங்க பா” என்று அவளிடம் அலைபேசியை கொடுத்தார்கள்.

“என்னடா வொர்க் எப்படி போகுது?” என்று காயு வினா தொடுக்க,

“ஹ்ம்ம் நல்லா போகுது” என்றவன்,

“பசங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்டியாமே?” என்று போலியாக கோபப்பட,

“ஆமா சொன்னேன். ஒரு ஐஸ்கிரீம் பத்தாதுன்னு ரெண்டு கேக்குறாங்க. வாங்கி கொடுத்தா கோல்ட் வந்திடும் அப்புறம் வந்து இனிமேல் ஐஸ்கிரீம் வாங்கி தர கூடாதுனு சொல்லு அப்புறம் பாத்துக்கிறேன்” என்று அதட்டியவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள்‌‌.

அதன் பிறகு இளையவர்களை அழைத்து கொண்டு அந்த வணிக வளாகம் முழுவதும் சுற்றியவர்கள் மதிய உணவை முடித்துவிட்டு மாலை நெருங்கிய வேளையில் தான் வீட்டிற்க்கு புறப்பட்டனர்.

இளையவர்கள் காரில் ஏறியதும் உறங்கியிருக்க இவர்கள் பேசியபடி வந்தனர்.

மேகா, “அக்கா நான் கிளம்பட்டுமா? டைம் ஆச்சு” என்று கைக்கடிகாரத்தை பார்க்க,

“அதுக்குள்ளயா? வா நைட் சாப்பாட்டை முடிச்சிட்டு போகலாம்” என்றபடி இளையவர்களை மெத்தையில் படுக்க வைத்தாள்‌.

மேகாவும் மறுக்க இயலாது,
“சரிக்கா” என்றுவிட்டாள்‌.

இலகுவான உடைக்கு மாறி வந்து தேனீரை தயாரித்து மேகாவிடம் ஒன்று கொடுத்துவிட்டு மடிக்கணினியை எடுத்து கொண்டு அமர்ந்தாள் காயத்ரி‌.

மேகா தேநீரை அருந்தியபடி ஏதோ சிந்தனையில் இருக்க,

“மேகா” என்ற காயுவின் அழைப்பில் திரும்ப,

“நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?” என்றுவிட,

மேகா திகைத்து விழித்தாள்‌. அன்று கவியின் திருமணத்தில் சைத்துவும் இதனை கேட்டு தான் இவளை அதிர செய்திருந்தான்.

மேகா விழிப்பதை கண்ட காயு,

“என்ன முழிக்கிற? ஏதும் லவ்வா?” எனறு கேட்டிட,

அதில் அதிர்ந்தவளது மனக்கண்ணில் சைத்துவின் உருவம் வந்து போக,

“இல்லை அதெல்லாம் இல்லைக்கா. வீட்ல பாத்திட்டு இருக்காங்க” என்று மொழிந்தாள்.

“ஓ.‌.. ஓகே ஓகே. நான் கூட நீ ஷாக் ஆகுறதை பாத்து ஏதாவது லவ் இருக்குமோன்னு நினைச்சேன். அப்படி ஏதாவது இருந்தா சொல்லு மேகா நான் உங்க வீட்ல பேசுறேன்” என்க,

“அந்த மாதிரி எதுவுமே இல்லைக்கா” என்று மறுத்துவிட்டிருந்தாள் மேகா.

“சரி விடு வா எனக்கு வந்து ஹெல்ப் பண்ணு” என்க,

“சொல்லுங்கக்கா” என்று மேகா சற்று அவளை நெருங்கி அமர,

“இங்க பாரு இந்த பொண்ணு எப்படி இருக்கா?” என்று ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பிக்க,

மேகா அப்புகைப்படத்தை கவனித்தாள். இடைவரை வெட்டப்பட்ட கூந்தலுடன் படு ஸ்டைலாக நின்றிருந்த அப்பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

திரைப்பட நாயகி போல தோற்றம். நிச்சயமாக கடந்து செல்பவர்களை பலமுறை திரும்பி பார்க்க வைப்பாள் என்று தோன்ற,

“ரொம்ப அழகா இருக்காங்க கா” என்று மேகா கூற,

“பேரு சொனாக்ஷி டாக்டரா இருக்கா. அப்பா பிஸ்னெஸ் மேன்” என்க,

“ஓ…” என்றவளுக்கு இதில் தான் என்ன உதவுவது என்று புரியவில்லை.

இன்னொரு புகைப்படத்தை காண்பித்து,

“இந்த பொண்ணு எப்படி இருக்கா?” என்க,

அப்பெண் நன்றாக அழகாக இருந்தாள்.

மேகா, “இவங்களும் அழகா இருக்காங்க” என்று மொழிய,

அடுத்தடுத்தை காட்டி விவரத்தை கூற,

அதனை கேட்டுக்கொண்ட மேகா,

“இதுல நான் என்ன ஹெல்ப் பண்ணனும் கா” என்று வினவிட,

“இதெல்லாம் என் அத்தை அனுப்பி வச்சு இருக்காங்க‌ என் கொழுந்தனுக்கு பொண்ணு செலக்ட் பண்ணனும்” என்க,

“ஓ…” என்று மேகா பார்க்க,

“நீயே பாத்தல்ல எல்லா பொண்ணுங்களும் ரொம்ப அழகா இருக்காங்க‌‌. எனக்கு யாரை செலக்ட் பண்றதுனே தெரியலை கொஞ்சம் ஹெல்ப் பண்றியா?” என்று இயம்ப,

“நானா?” என்று மேகா திகைத்தாள்.

“நீதான்”

“எனக்கு இதை பத்தி எதுவும் தெரியாது கா”

“இதுல என்ன தெரியிறதுக்கு இருக்கு. ட்டெயில் எல்லாம் நமக்கு தெரியும் ஜெஸ்ட் செலக்ட் பண்ணனும் அவ்ளோ தான் வா” என்க,

“சரி” என்று தலை அசைத்தவள்,

மீண்டும் அனைத்து படங்களையும் பார்த்தாள்‌.

எல்லா பெண்களை விடவும் முதன் முதலாக பார்த்த சொனாக்ஷி நல்ல தேர்வாக தோன்ற,

“அக்கா இந்த பொண்ணு மத்தவங்களை விட நல்லா இருக்காங்க” என்க,

“சொனாக்ஷியா நானும் அவளதான் நினைச்சு வச்சு இருந்தேன். இவ தான் இருக்க பொண்ணுங்கள்ளயே அழகா இருக்கா” என்றவள்,

“சைத்துவுக்கும் ரொம்ப பொருத்தமா இருப்பாதான” என்றிட,

மேகா தான் செவிகளில் விழுந்த வார்த்தைகளின் ‌‍‍விளைவால் உட்சபட்சமாய் அதிர்ந்து பார்க்க,

“என்ன மேகா சைத்துவுக்கு பொருத்தமா தான இருப்பா?” என்று மீண்டும் கேட்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது இதயம் மொத்தமாய் உடைந்திருந்தது.

‘இன்னும் க்யூட்டனுக்கு திருமணம் ஆகவில்லையா?’ என்ற வினாவில் உள்ளே ஒன்று சொல்லாமல் கொள்ளாமல் நழுவி செல்ல,

தாங்க முடியாத உணர்வில் எழுந்து நின்றுவிட்டாள்‌.

“என்னாச்சு மேகா?” என காயு பார்க்க,

“வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்கா” என்று விறுவிறுவென குளியலறைக்குள் வந்தவளுக்கு அழுகை பெருகியது.

ஏனென்றே தெரியாமல் உள்ளுக்குள் ஒன்று பிரவாகமாக பொங்கியது‌.

‘அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது குழந்தை உள்ளது என்று வந்த செய்திகள் யாவும் வதந்தியா?’ என்று வினா ஜனித்தது‌.

இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை அவன் யாருக்கும் சொந்தமாகவில்லை என்று எண்ணம் பிறக்க அழுகையிலும் சிறு புன்னகை முகிழ்ந்தது‌.

ஆனால் அடுத்த கணமே தன்னுடைய நிலையையும் அவனையும் எண்ணி பார்க்க புன்னகை மறைந்து போனது‌.

இதனை எப்படி மறந்து போனேன் என்றவளது இதயத்தில் குத்தீட்டியை சொருகியது போன்ற வலி பரவியது‌.

சடுதியில் அந்த புகைப்படத்தில் பார்த்த பெண்ணின் முகமும் அவளது பின்புலமும் நினைவிற்கு வர அழுகை கூடியது‌.

விழிகளை இறுக மூடி திறந்தவளது தொண்டையில் துக்கம் இறங்கியது‌

இதுவரை எண்ணியிருந்தது போலவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாய் நினைத்து கொள்.

இதோ இப்போது பார்த்த அழகும் அறிவும் நல்ல பின்புலமும் அமைந்த பெண் தான் பொருத்தமாக இருப்பாள்‌.

திருமணம் ஆகாத ஒரே காரணத்திற்காக மட்டும் அவரை நினைக்கும் உரிமை உனக்கில்லை என்று மனசாட்சி இடித்துரைத்திட,

பெருகிய அழுகையை கட்டுப்படுத்தியவள் வெளியே வர,

சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த காயு,

“மேகா இந்த சப்பாத்தியை தேய்ச்சு தர்றீயா நான் போட்டுக்கிட்டே க்ரேவிக்கு ரெடி பண்றேன்” என்க,

“ஹ்ம்ம் கா” என்று தலையசைத்தவள் சம்பாதியை தேய்க்க துவங்கியவளுக்கு ஏனோ கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

எப்போதடா இங்கிருந்து கிளம்பி சென்று தனிமையில் அழுது துக்கத்தை தீர்ப்போம் என்று தான் எண்ணம் வந்தது.

வாசலில் ஒலித்த அழைப்பு மணி ஒலித்தது இவளது சிந்தையை கலைக்க,

“மேகா யாருன்னு பாரு?” என்று குரல் கொடுக்க,

தனது துப்பட்டாவில் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு எழுந்து சென்று கதவை திறந்தவள் வாசலில் நின்றிருந்த சைத்தன்யாவை கண்டு அதிர்ந்து விழித்தாள்.

அவளது அதிர்ந்த முகத்தை கண்ட சைத்து, ‘என்ன?’ என்பதாய் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கிட,

அதே சமயம், “யாரு மேகா?” என்று காயு குரல் கொடுக்க,

சடுதியில் பாவனையை மாற்றி அவனுக்கு வழியை விட்டு நகர்ந்து நின்றவளுக்கு பதில் மொழிய இயலவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது.

“நான் தான் காயு” என்று குரல் கொடுத்த படி உள்ளே வந்த சைத்து அவனை காப்பாற்ற,

“டேய் நீயா? வொர்க் இருக்கு வர்றதுக்கு பிப்டீன் டேஸ் ஆகும்னு சொன்ன? என்று வியப்புடன் வினவ,

“வொர்க் இருக்கு தான் ஆனால் வர வேண்டிய அவசியம் வந்திடுச்சே” என்று மொழிந்தவன்,

“டீ போடு நான் போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றேன்” என்று படியேறி செல்ல,

மேகா தான் தன்னை மீட்டு கொள்ள வெகுவாக போராடியபடி சப்பாத்தியை தேய்த்தாள்.

முன்பே சிதறி கொண்டிருந்தவள் முற்றிலுமாக உடைந்து போனாள்.

அதற்கு மேலும் தாள மாட்டாதவள் எழுந்து சென்று,

“அக்கா வீட்ல இருந்து கால் பண்ணிட்டாங்க. டைம் ஆச்சு நான் கிளம்ப வா?” என்று மெலிதான குரலில் வினவ,

“இதோ முடிஞ்சது சாப்பாட்டை எடுத்து வைக்கிறேன் சாப்பிட்டு போ” என்று பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்க,

“அக்கா” என்றவள் தயங்கி நிறுத்த,

“வீட்ல நான் பேசவா மேகா‌‌?” என்று காயு கேட்க,

“இல்லை வேணாம் கா” என்று மறுத்துவிட்டிருந்தாள்.

சைத்தன்யா இறங்கி வர அவனுக்கு தேநீரை கொடுத்தவள் மேகாவை அமர வைத்து தானும் உண்ண அமர்ந்தாள்.

கையில் கோப்பையுடன் உட்கார்ந்தவனிடம்,

“சைத்து என் லாப்ப ஆன் பண்ணு” என்று உணவை எடுத்து வைத்தாள்‌.

மேகாவிற்கு உணவு தொண்டையில் இறங்க மறுத்தது‌. கடினபட்டு விழுங்கி கொண்டிருந்தாள்‌.

“உன் நேம்ல ஒரு போல்டர் இருக்கும் அதை ஓபன் பண்ணு” என்க,

தேநீரை அருந்தியபடி அந்த கோப்பை திறந்து பார்த்தான் சைத்தன்யா.

“பொண்ணு எப்படி இருக்கா சைத்து?” என்று காயு கேட்க,

“ஹ்ம்ம் அழகா தான் இருக்கா”

“அழகா இருக்காலா? உனக்கு பிடிச்சிருக்கா? பேரு சொனாக்ஷி டாக்டர் தேவ் இன்டஸ்ட்ரீஸ் பொண்ணு. அத்தை நிறைய போட்டோ அனுப்புனாங்க. அதுல மேகா தான் இந்த பொண்ணு உனக்கு பொருத்தமா இருப்பான்னு செலக்ட் பண்ணா” என்றிட,

இப்போது அவனது பார்வை மேகாவின் மேல் நிதானமாக விழுந்தது‌‌.

அதில், ‘அப்படியா?’ என்பது போல ஒரு பாவனை,

அவனது பார்வையை எதிர் கொள்ள இயலாதவள் உண்ணும் சாக்கில் குனிந்து கொள்ள,

“என்ன மேகா சைலண்டா இருக்க சொல்லு. நீதான செலெக்ட் பண்ண” என்க,

இதயத்தை கல்லாக்கி கொண்டு நிமிர்ந்தவள்,

“ஆமா சார்‌. அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க. உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பாங்க” என்றுவிட்டு எழுந்து கைக்கழுவ செல்ல,

“மேகாவே சொல்லியாச்சே இந்த பொண்ணு எனக்கு ஓகேன்னு சொல்லிடு காயு” என்றவனும் எழுந்து கொண்டான்‌.

“அக்கா நான் போய்ட்டு வர்றேன்” என்று தனது கைப்பையை எடுக்க,

“வா நான் ட்ராப் பண்றேன்” என்று சைத்து முன் செல்ல,

“இ…இல்லை நானே போய்க்கிறேன்” என்று மேகா மறுத்தாள்‌.

“இருட்டிடுச்சு இந்த நேரத்தில தனியா போறது சேஃப் இல்லை” என்று காயு மொழிய,

மேகா தயங்கி நின்றாள்‌‌.

“போ மேகா” என்று காயு மீண்டும் கூற,

சைத்தன்யா மகிழுந்தை இயக்கி இருந்தான்.

வேறு வழியின்றி மேகா அவனருகே ஏறி அமர்ந்தாள்‌.

பயணம் மிக அமைதியாக சென்றது.

இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

மேகா சாளரத்தை பார்த்தவாறு முகத்தை திருப்பி அமர்ந்திருந்தா
ள்.

சென்னையின் போக்குவரத்தில் கலந்து சென்ற மகிழுந்து மேகாவின் வீட்டின் முன் நின்றது.

உள்ளுக்குள் பிறந்த ஆசுவாசத்துடன் மேகா கதவை திறக்க முயல இயலவில்லை‌. அது பூட்டி இருந்தது.

மேகா திரும்பி அவனை காண,

“எனக்கு கல்யாணம் ஆகும் போது கூட இப்படி அழுது சிவந்து முகத்தோட வேடிக்கை தான் பார்ப்பியா மேகா?” என்றவனது வினாவில் விக்கித்து பார்த்தாள் மேக மொழியாள்….






 
Well-known member
Messages
858
Reaction score
628
Points
93
Athaane, ivalukku enna than problem

Ethuvum health issues ah

Paavam aluthu aluthe oru vazhi aagiduvaa polaye 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Active member
Messages
345
Reaction score
231
Points
43
Megha mozhiyal nu than per aana per iruku ah mozhi mattum.chaidhu ah partha ipadi dumb language kooda vara maruthu avan um iva solluva nu wait pannan atleast saree kudutha ah va chum ethachum express pannuva nu partha aana iva keta kelvi ku adaponga ya than thoni iruku athu than ithu velaiku aavathu nu innaiku straight ah ketutan payapulla appo vum asusual shocking reaction than ah ya kudukira
 
Top