• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

முதல் காதல் ❤️

Administrator
Staff member
Messages
905
Reaction score
2,593
Points
93
"மாப்பிள்ளை ஓடிப் போய்ட்டாரு" என்று யாரோ ஒருவர் கத்த, நானும் என் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டோம்.

எல்லோரும் வந்தவுடன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டோம். அப்பத்தான் எனக்கு தெரிஞ்சது, நடிக்கிறது எவ்ளோ கஷ்டம்னு. நான் சோகமாக இருக்க மாதிரி நடிச்சேன். என் அப்பா எனக்கு ஆறுதல் சொன்ன மாதிரி நடிச்சாரு. நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு தனிமை வேண்டும் என்று ரூமுக்கு உள்ள போய் கதவைசாத்தி விட்டோம்.

உள்ளே போனவுடன் நானும் என் அப்பாவும் ஹைபை அடித்துக்
கொண்டோம். எனக்கு டான்ஸ் ஆடணும் போல இருந்துச்சு, அப்பாகிட்ட சொன்னேன். நானும் அப்பாவும் சேர்ந்து ஆடுனோம் சத்தம் இல்லாம. கல்யாணம் நின்னதுக்கு நாங்க ஏன் சந்தோஷபட்றோம்னு தெரிஞ்சுக்க ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக் போவோம்.

மேல பாருங்க எல்லோரும். கல்யாண மண்டபமே களைகட்டியிருந்தது. என் அப்பா வயசை மறந்துட்டு ஓடி ஓடி வேலை செஞ்சுட்டு இருந்தார். என் பேரு ஜோஷிதா. எனக்கு தான் இன்னைக்கு கல்யாணம். நான் மணமகள் அறையில் நல்ல மேக்கப் போட்டுட்டு இருந்தேன். அப்ப தான் அவன் உள்ளே வந்தான். அவனை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகி, பின் உள்ள வா விஷ்வா. எப்படி இருக்க? உன் வைஃப் வரலையா? என கேட்டேன். அவன் அதற்கு, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று சொன்னான். நான் அதிர்ச்சியாகி விட்டேன். நான் சந்தோஷப்படுறதா? இல்ல வருத்தப்படுவதா? என்றே தெரியல.

நடந்தது என் கண் முன்னாடி அப்படியே வந்து போச்சு. அப்போ நான் காலேஜ் படிச்சிட்டு இருந்தேன். நான் அவன காலேஜ்ல தான் பார்த்தேன். அவனை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஒரு ஆறு மாசம் அவனை ஃபாலோ பண்ணி நான் தெரிஞ்சுகிட்டது, அவன் கோபக்காரன், அவனுக்கு அவன் குடும்பம் ரொம்ப பிடிக்கும்னு.

நான் என் அப்பா கிட்ட இதை சொன்னேன். என் அப்பா எனக்கு ஃபிரண்ட் மாதிரி. நான் எல்லா விஷயத்தையும் அப்பா கிட்ட தான் ஷேர் பண்ணுவேன். என் அம்மா இறந்த பிறகு, என் அப்பாதான் எனக்கு எல்லாமுமாய் இருந்து வளர்த்தார்.

என் அப்பா என்னை, அவன்கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணு என்று சொன்னார். எந்த அப்பாவாவது இப்படி சொல்லுவாரா? ஆனால், என் அப்பா சொன்னாரு. நான் அவன் கிட்ட போய் ப்ரொபோஸ் பண்ணேன்.

அவன் சிரிச்சுக்கிட்டே இது இந்த வயசுல வர இன்பாக்சுவேஷன். கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும், நீ என்னை மறந்துடுவ, போன்னு சொன்னான்.

நான் சொன்னேன், இந்த வயசுல வந்தால்தான் இதுக்கு பேர் காதல். படிச்சு முடிச்சுட்டு நாம இவங்களும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுச்சுன்னா, அது பேரு நீ எடுக்குற முடிவு என்று சொன்னேன். அவன் சொன்னான், அது என்னமோ இருந்துட்டுப் போது. எனக்கு உன் மேல லவ் இல்ல, போன்னு சொன்னான். நான், உனக்கு லவ் வரப்ப சொல்லு, அதுவரைக்கும் நான் லவ் பண்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

அதுக்கப்புறம் நான் அவன் கிட்ட பேசவே இல்ல. என் அப்பாகிட்ட நடந்ததை சொன்னேன். அவர் சிரிச்சிக்கிட்டே எங்க தேடினாலும் இப்படி ஒரு பையன் கிடைக்கமாட்டான். அவன் தான் உனக்கு நல்ல பொருத்தம் என்று சொன்னாரு.

அப்புறம் நாள் வேகமாக போச்சு. நான் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போக ஆரம்பித்தேன். ஒரு நாள் எனக்கு ஒரு லெட்டர் வந்துச்சு. அது ஒரு மேரேஜ் இன்விடேஷன், அதில் விஸ்வஜித் வெட்ஸ் சுவாதி என்று எழுதி இருந்துச்சு. அதை பார்த்த உடனே எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அப்பா கிட்ட போய் சொன்னேன். அப்பா எனக்கு ஆறுதல் சொன்னார்.

அப்புறம் நானும் மனசைத் தேத்திக்கிட்டேன். கொஞ்ச நாளுக்கு அப்புறம், அப்பா எனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணாரு. நான் என் அப்பாவுக்காக சம்மதிச்சேன். ஜோஷி என்று அவன் கூப்பிட்ட பிறகு தான் நான் நினைவிற்கு வந்தேன்.
நான் எதையும் வெளிக்காட்டிக்காம அப்படியா? என்றேன். அப்போ அந்த இன்விடேஷன் என்று கேட்டேன்.

"அதுவா, நீ கல்யாணம் பண்ணாம இருக்க என்று கேள்விப்பட்டேன். அதான் அப்படி ஒரு பொய்யான இன்விடேஷன் அனுப்பினேன்" என்று சொன்னான்.

எனக்கு கோவம் வந்துச்சு. அதை வெளிக் காட்டாமல் அப்படியே, "உங்க அன்புக்கு ரொம்ப நன்றி. உங்களால தான் எனக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது." என்று சொன்னேன் சிரிச்சுக்கிட்டே. பேசிக்கொண்டே இருக்கும்போது அவன் என் கையைப் புடிச்சான். நான் கையை உதறிவிட்டு, "என்ன விஷ்வா?" என்று கேட்டேன்.

"நான் உன் கிட்ட தனியா பேசணும்." சொன்னான்.

நான் யோசிச்சிட்டு, சரின்னு சொன்னேன். என் ரூம்ல இருக்க என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கண்ண காமிச்சேன். எல்லோரும் வெளியே போய்ட்டாங்க. அவன் பேச ஆரம்பிச்சான். "நான் உன்கிட்ட இத இப்போ கேக்குறது தப்புதான்னு தெரியுது. ஆனாலும் கேட்கிறேன், வில் யு மேரி மீ?" என்று கேட்டான்.

நான் உடனே, "என்ன விளையாடுறியா விஷ்வா? இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு கல்யாணம். நேரம் கடந்து விட்டது. லூசு மாதிரி பேசாதே!" என்று சொன்னேன்.

அவன், "இல்ல ஜோஷி, நீ என்கிட்ட ப்ரபோஸ் பண்ணப்பக் கூட எனக்கு ஒன்னும் தோனல. ஆனால், உன் கல்யாண இன்விடேஷன் பார்த்ததும் தான், எனக்கு எதையோ மிஸ் பண்ண போற மாதிரி உணர்வு. அப்போ தான் தெரிஞ்சது, நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேன்னு. நானே இதை உன்கிட்ட சொல்ல கூடாதுன்னுதான் நெனச்சேன். நான் இங்க வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனால், மனசு கேட்காம வந்துட்டேன்னு" சொன்னான். எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியல

அப்போன்னு பார்த்து, என் அப்பா கரெக்டா வந்துட்டாரு. நான், நடந்ததை அவர்கிட்ட சொன்னேன். அவர், யோசிக்காம ஓடிப்போயிருன்னு சொன்னாரு. நான், "அப்பா, லூசாப்பா நீ? என்ன பேசுற. நான் ஓடிப் போயிட்டா, உன்னை எல்லாரும் கேவலமா பேசுவாங்கன்னு" சொன்னேன்.

என் அப்பா, "பேசுனா பேசட்டும். ஒரு நாளைக்கு அல்லது ரெண்டு நாளைக்கு பேசுவாங்களா? அப்புறம் எல்லாரும் மறந்துடுவாங்க" என்று சொன்னாரு. "எனக்கு தான் என் முதல் காதல் கிடைக்கல, நீயாவது உன் காதல்ல ஜெயிக்கணும்னு நான் ஆசைப்பட்றேன்" என்று சொன்னாரு.

அப்பா, "உன் காதல் கிடைக்காதுன்னு தெரிஞ்சு அப்புறம் நீ எவ்ளோ கஷ்டப்பட்ட என்று எனக்கு தெரியும்னு" சொன்னாரு. நான் ஒத்துக்கல, "என்னால உனக்கு எந்த அவமானமும் வரக்கூடாது" என்றேன்.

"அப்போ , உனக்கு விஷ்வா வேண்டாமா?" என்று அப்பா கேட்டார். அதுக்கும் என்கிட்ட பதில் இல்லை.

அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தேன். நான் போய் எனக்கு பார்த்த மாப்பிள்ளை கிட்ட பேசலாம்னு. அப்போ தான் இந்த சத்தம் வந்துச்சு, மாப்பிள்ளை ஓடிப் போய் விட்டார் என்று.

நீங்களே சொல்லுங்க, என்னால எப்படி சந்தோஷபடாமல் இருக்க முடியும்? அதான் நானும் என் அப்பாவும் டான்ஸ் ஆடுனோம். அப்புறம் எல்லாரும் ஒவ்வொருத்தரா வந்து ஆறுதல் சொன்னார்கள். நானும் சோகமா இருக்கிற மாதிரி நடிச்சேன்.

கொஞ்ச நேரத்தில எனக்கு ஆப்பு வைக்கணும்னு ஒருத்தன் வந்தான். அவன் என் அப்பாவோட பிரண்டோட பையனு சொன்னான். அவன் பெயர் சக்தி என்றும், படிச்சிட்டு நல்ல வேலையில இருக்கேன், அவன் என்ன கல்யாணம் பண்ணிக்க இன்ட்ரஸ்டா இருக்கேன்னு சொன்னான்.

விஷ்வா அவனை முறைச்சான். நான் கண்ணுல வராத தண்ணியே கஷ்டப்பட்டு வர வச்சு, அவன்கிட்ட நடிச்சு, எனக்கு யார் மேலயும் நம்பிக்கை இல்லாம போயிடுச்சு. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லி சமாளிச்சு அனுப்பிட்டேன்.

"இங்கேயே இருந்தா வேற எவனாவது திரும்பி வந்து இவன மாதிரியே பேசிக்கிட்டே வந்து நின்னா என்ன பண்றது?" என்று சொல்லி, நானும் என் அப்பாவும் மண்டபத்தில் இருந்து கிளம்பினோம். அங்க இருந்த எல்லாரும் என்ன பாவமா பார்த்தாங்க. எனக்கு தான் காமெடியா இருந்துச்சு. ஒரு வழியாக காரில் ஏறி கிளம்பிட்டோம். விஷ்வாவும் கூட வந்தான்.

இப்போ என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்துது, இது ஆனந்த கண்ணீர் சந்தோஷத்தில் வந்துச்சு. என் முதல் காதல் எனக்குக் கிடைச்சிருச்சு. எத்தனை பேருக்கு முதல் காதல் ஜெயிச்சிருக்கு. ஆனால் எனக்கு ஜெயிச்சுருச்சு. அந்த நேரத்தில்தான் தோணுச்சு எது வேணா எப்ப வேணா மாறலாம் என்று, எதுவுமே நிரந்தரமில்லை என்று.

சுபம் ❤️

எத்தனை பேருக்கு உங்க முதல் காதல் ஜெயிச்சது மறக்காம எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

 
Top