முகிலவனின் பெண்பனியே...29

Messages
45
Reaction score
5
Points
8
அத்தியாயம் 29


அன்று வெள்ளிக்கிழமை ஆதலால்
உடல் நிலை சரியில்லை என்று வீட்டில் இருக்கும் ராஹியை தொந்தரவு செய்ய விரும்பாமல் மதி மட்டும் கோவில் வரை சென்றிருக்க, வீட்டில் இருந்த பெரியவர்களும் அருகில் இருந்த பூங்காவிற்கு பணிப்பெண் செல்வியின் உதவியுடன் நடைப்பயிற்சிக்குக் கிளம்பியிருந்தனர்.

ஆதி வந்த சமயம் அவள் மட்டுமே வீட்டில் தனித்து இருந்த மனைவி பணிப்பெண்ணை அழைத்தபடி குளியலறைக்குள் தவிப்பாய் நின்றிருந்தவளிடம் அப்படி ஒரு பதிலை எதிர்பாராதவன் அதிர்ந்து நின்றது என்னவோ சில கணங்கள் தான்.

இக்கணம் மனைவியின் சூழலை தேவையை என்னவென்று உணர்ந்து கொண்டப் பின்னர் அவனையும் அறியாது மின்னலென அங்கிருந்து அகன்றவன் மின்தூக்கியை கூடத் தவிர்த்து புரவியாய் படிகளில் தடதடத்து இறங்கி, புயல் போல் பஹானிக்குள் பாய்ந்தவனோ, அடுத்த பத்து நிமிடங்களில் அவளுக்கு வேண்டியதை அளவில்லாது அள்ளிப் போட்டுக் கொண்டவன் சென்ற வேகத்திலே மீண்டும் தங்கள் அறைக்குள் நுழைந்து குளியலறைக் கதவைத் தட்டினான் ஆதி.

அதில் குளியலறைத் திண்டில் இருந்து எழுந்து நின்ற ராஹியும், 'கணவன் செல்வியை வரச் சொல்லியிருப்பான்' என்றே எண்ணிக் கொண்டு கதவைத் திறந்தவள் மீண்டும் அங்கு நின்ற கணவனைக் கண்டும், அதிலும் அவன் கரங்களில் இருந்த இரு பெரிய பைகளில் உள்ள பொருளையும் பார்த்ததுமே அவளுக்கோ மயக்கம் வராத குறைதான்.

காணும் காட்சியை நம்ப மறுத்து கணவன் மேல் படிந்த விழிகள் படிந்தபடியே நிற்க, அவள் அதிர்ச்சியை உணராதவனோ, "ஹேய் ராஹி இந்தா நீ கேட்ட நாப்கின்ஸ்" என்று இரு பையையும் அவளிடம் நீட்டியவன், "நீ நீ என்ன பிராண்ட் யூஸ் பண்ணுவன்னு தெரியல. சோ எல்லாத்தையும் வாங்கிட்டேன்." என்றும் இயல்பாகச் சொல்ல...

ஒரு மலைத்த பார்வையோடு
அவன் நீட்டியதைப் பெற்றுக் கொண்டவளுக்கோ, "ஆதிசார்
நீங்க நீங்களா இதெல்லாம் போய் வாங்குனீங்க? அதும் எனக்காகவா?" என்று தொண்டை அடைத்துக் கொண்டு வார்த்தைகளே வெளி வர மறுத்தது.

அதில் அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவனும், "உனக்காக நான் போகாம? இத வாங்குறதுக்கு பத்து பேர கூட கூட்டிட்டுப் போகச் சொல்றியா?" என்று ஹாஷ்யம் போல் கூறிச் சிரித்தவனும், "அப்றம் நாப்கின் வாங்குன பார்மசில 'பெயின் இருக்கா, டேப்லெட் வேணுமான்னும்' கேட்டான். கொஞ்சம் முன்ன உன் முகமும் டல்லா இருந்ததா அதான் டேப்லெட்டும் சேத்தே வாங்கிட்டேன். அங்க டேபில்ல வைக்கிறேன் பெயின் இருந்தா மட்டும் வந்து போட்டுக்கோ" என்றும் சொல்லியவன் பல வண்ண மாத்திரை அட்டைகள் அடங்கிய பையையும் அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டு அகல...

படுக்கையை நோக்கிச் செல்லும் கணவனின் முதுகையே வெறித்துக் கொண்டு நின்ற பாவைக்கோ, ஆணவனின் இன்றைய செயலில் அவளையும் அறியாமல் அவள் விழிகளில் இருந்து கண்ணீர்த் துளிகள் தான் கன்னங்களில் இறங்க ஆரம்பித்தது.

ஆண் பெண் உறவுகளைக் கூட பொது வெளியில் கடை பரப்பும் அயல் நாட்டு வாசம் அதிகம் கொண்ட ஆணவனுக்கு தற்சமயம் மனைவிக்குச் செய்த உதவி அவனளவில் மிகவும் சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால் அவள் வளர்ந்த சூழலில் மனைவியோடு ஈருடல் ஓருயிராக சந்தோச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பான்மை ஆண்களே, மனைவிக்காக மட்டுமல்ல தங்கள் வீட்டு பெண் மகவுகளுக்காகக் கூட சற்றே செய்யத் தயங்கும் ஒரு செயலை, "காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது." என்ற வள்ளுவரின் கூற்றுப் படி இன்று கணவன் தனக்குச் செய்திருக்கும் உதவி இமாலயப் பெரிதாகத்தான் தோன்றியது பெண்ணுக்கு.

இதுவரை தன் சொந்தத் தேவைகளுக்குக் கூட கடைத்தெருவை நாடியிராதவன் நினைத்திருந்தால் அவர்கள் வீட்டு வளாகத்திற்குள்ளேயே சற்று தொலைவில் குடி இருக்கும் தோட்டப்பணியாளை அழைத்து அப்பொருளை வாங்கி வரப் பணித்திருக்கலாம். அல்லது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் கடைகள் ஏதாவது ஒன்றில் வரவழைத்துக் கொடுத்திருக்கலாம். ஆனால் இவையெல்லாம் செய்தால் காலதாமதம் ஆகும் என்று நினைத்தானோ, அல்லது அவளுக்கு இனி எல்லாமே அவனே செய்யத் துடித்தானோ அவனே அறிவான்...

சற்று முன்னர் பெண்ணவளின் வார்த்தையில் இருந்த தவிப்பும், தன் முகம் பார்க்க மறுத்த பூவையின் வதனத்தில் இருந்த சோர்வும், அவனை நொடியும் நிற்க விடாது உந்தித் தள்ள, எப்பொழுதும் மூளை சொல்வதையே அதிகமாகக் கேட்பவன் இப்பொழுதெல்லாம் மனைவியின் விஷயத்தில் மனம் செல்லும் வழியில் தானே செல்ல விழைகிறான்.

மனைவியின் தேவைக்கு முன்னால் அவனது உடல் சோர்வெல்லாம் துச்சமென பின்னுக்குச் செல்ல, அவளுக்கு வேண்டியதை அவள் கரங்களில் சேர்ப்பித்தப் பின்னரே தலையைப் பற்றிக் கொண்டு தொய்ந்து போய் படுக்கையில் விழுந்தான் ஆதி.

அவன் மனையாளும் அவனது செயலை எண்ணி புல்லரித்துப் போனவளாய், "எனக்காக்கவா ஆதி?. எவ்ளோ பெரிய பிஸ்னஸ்மேன் நீங்க. நீங்களே போய் எனக்காக நாப் நாப் நாப்கின் வாங்கிட்டு வந்தீங்களா?" என்று உள்ளூறக் கேட்டு கேட்டு அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கண்ணீரும் ஒன்றாகப் பெறுக, அளவில்லா பரவசம் அடைந்தபடியே குளித்து முடித்து வெளியே வர...

அங்கே அவள் கணவனோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

ஏற்கனவே மிகுந்த சோர்வில் இருந்தவன் அணிந்திருந்த அலுவலக உடையைக் கூட கழற்ற விளையாது, கால்பூட்டனியோடும் படுக்கையில் தாறுமாறாய் விழுந்திருந்தவனின் உடைகளோடு தலைமுடியும் வெகுவாகக் கலைந்திருக்க, மல்லாந்து கிடந்து துஞ்சியிருந்தவனின்
நெற்றியிலும் வியர்வை அரும்புகள் பூத்து அவனவளை துடைக்கச் சொல்லி அழைத்தது.

குளியலறையில் இருந்து வெளியே வந்த ராஹியும் மெல்ல மெல்ல கணவனை நெருங்கி வந்தவள், 'நான் உங்கள என்னமோ நினைச்சேன் ஆதி. ஆனா நீங்க நீங்க இவ்ளோ இவ்ளோ நல்லவங்களா?' என்று எண்ணியபடியே பச்சைப் பாலகனாய் பள்ளிகொண்டிருக்கும் கணவனின் கம்பீர வதனத்தையே தனை மறந்து பார்த்துக் கொண்டிருந்தவள் அப்பொழுது தான் அவன் நெற்றியில் பூத்திருந்த வியர்வையும் கவனித்தாள்.

கணவன் நெற்றியில் வியர்வையைப் பார்த்ததும் விரைந்து சென்று ஏசியை உயிர்பித்தவள், சிறிதும் யோசனை இன்றி அவனின் அருகில் சென்றும் அமர்ந்து, தவமின்றி வரம் பெற்ற அந்த வியர்வைத் துளிகளை தன் புடவைத் தலைப்பாலே மென்மையாக ஒற்றி எடுத்தாள் மாது.

அவனின் கலைத்த தோற்றமே அவளை அத்தோடு நிற்க விடாமல் அவனுக்கு பணிவிடைகள் செய்யச் சொல்லியும் ஏவ, 'ரொம்ப டயர்டா இருப்பாங்க போலவே அதான் சூவக் கூட கலட்டாம அப்டியே தூங்கிட்டாங்க' என்று எண்ணியவளும் சிறிதும் யோசியாது மெல்ல கணவனை நகற்றி வாகாக படுக்க வைத்தவள், அவன் கால்பூட்டணி மட்டுமல்லாது வியர்வையில் நனைந்திருந்த அவனின் மேல் சட்டையின் பித்தான்களையும் மென்மையாகக் கழற்றி இருபுறமும் பக்கவாட்டில் சரித்து விட்டாள் ராஹி.

அவன் சற்று முன்னர் செய்த செயல் பெண்ணின் இளம் மனதை ஏகத்துக்கும் இளக்கியிருக்க, திருமணம் முடிந்து இத்துணை தினங்கள் ஒரு கட்டாயத்தின் பேரிலே ஆதியின் நடிப்புக்கு இசைந்து அவனோடு நெருக்கமாக இருந்தவள், இன்று இக்கணம் அவன் தன் கணவன் என்ற உரிமைக்கும் மேலான இனம் புரியாப் புது உணர்ச்சியில் அவன் மேல் அக்கறை கொண்டவளாய் அவன் உடையைத் தளர்த்தியவளின் விழிகள் எதற்ச்சையாக அவனது பரந்து விரிந்த மார்பிலும் பாய்ந்து விலகியது.

மேல் சட்டை விலகியதில் ஆர்ம் கட் பனியனோடு காட்சியளித்த ஆணவனின் சிவந்த நிற தேகக் கட்டும், அந்த ஆர்ம் கட்டின் அகன்ற கழுத்தின் வழியே பெண்ணவளின் கண்களுக்குப் புலப்பட்ட வேங்கையவனின் மயிரடர்ந்த நெஞ்சுரமும் தான் பெண் என்பதையும் மறந்து மீண்டும் மீண்டும் லஜ்ஜையின்றி உறங்கிக் கிடந்த ஆணவனைப் பார்க்கச் சொல்லித் தூண்டியது.

முன்பெல்லாம் தன்னிடம் கோபத்தில் மட்டுமே வெடிக்கும் ஆதியின் முரட்டு அதரங்கள், இக்கணம் இருக்கிறதா என்பது போல் அடர்ந்த மீசைக்கடியில் புதைந்து சிவந்திருக்கும் அழகையும், உறங்கும் பொழுதில் கூட லேசாகக் குழிந்து உள்வாங்கி இருக்கும் கன்னங்குழியின் வசீகரத்தையும், தனைத் தடுக்க யாருமில்லை என்கிற ரீதியில் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையோடு ரசித்திருந்தவளுக்கு இவன் தன்னவன் என்ற பெருமையும், கர்வமும் அவளுள்ளே பொங்கிப் பெறுக, அதில் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் ராஹித்தியா.

தன் பார்வை படியும் இடங்களையும், தன் சிந்தனை செல்லும் பாதையையும் எண்ணி திடுக்கிட்டு எழுந்து நின்றவளோ, 'எனக்கு எனக்கு என்னாச்சு? நான் என்ன பண்ணிட்டிருக்கேன்? நான் எப்டி ஆதிய என்னவன்னு நினைக்கிறேன்.? இந்தத் தாலி என் கழுத்துல இருக்காதாலயா? ஆனா ஆனா எனக்கும் இவருக்குமான உறவு நிரந்தரம் இல்லியே. என்ன அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்காதே. நான் இங்க இருக்கப் போறதே இன்னும் ரெண்டு மாசமோ மூனு மாசமோ. அப்டி இருக்கப்போ எனக்கு ஏன் இப்டிலாம் தோணுது. கடவுளே நான் என்ன செய்வேன்' என்று தன்னுள்ளே பலவாறு கலங்கிப் புலம்பியவளின் மெல்லிதான சப்தத்தில் "ம்ம்ம்ம்ம்மா" என்ற சிறு முனங்களோடு சிறிதே அசைந்து கொடுத்தான் அவள் கணவன்.

கணவனின் முனகலில் அவளது கலக்கமெல்லாம் பின்னுக்குச் சென்று, மீண்டும் அவனை நெருங்கி அமர்ந்தவளோ, "ஆதி ஆதிசார் என்னாச்சு ஆதிசார்?" என்று மெல்லிய குரலில் கேட்டபடியே அவனின் தலையைத் தடவினாள் ராஹித்தியா.

அதில், "மாம்" என்று அவள் புறம் சரிந்து விழிகளைத் திறவாமலே அவளை ஒட்டிப் படுத்துக் கொண்டவனோ அன்று போலவே சிகையில் இருந்த அவள் கரத்தினையும் எடுக்க விடாமல் பிடித்துக் கொண்டவன், "மாம்... ஒன் வீக்கா ரெஸ்ட்டே இல்ல. ஹெவி ஒர்க். ஈவ்னிங்ல இருந்தே ரொம்ப ஹெட் எய்டா இருக்கு. கொஞ்சம் மசாஜ் பண்ணிவிடுங்க மாம்" என்றும் சொல்ல...

அதைக் கேட்ட ராஹிக்கோ கணவன்
மேல் சற்று முன்னர் முளைத்த தன்னவன் என்ற எண்ணம் அவளது கட்டுப்பாட்டையும் மீறி நொடியில் பரந்து விரிந்து கிளைப்பரப்பத் தொடங்கியது.

ஆரம்பத்திலிருந்து ஆத்விக் போல ஆதியும் அவளிடம் நட்பு பாராட்டி வ
ந்திருந்தால் சற்று முன்னர் அவன் அவளுக்காக செய்த உதவி பத்தோடு பதினொன்றாக முடிந்திருக்குமோ என்னவோ...

இதுவரை வார்த்தையால் கூட தன்மேல் அக்கறை காட்டாதவன் சற்று முன்னர் செய்த செயலிலே பூரித்து இருப்பவள், அவன் தலைவலியும் பொருட்படுத்தாமல் தான், தனக்காக அதைச் செய்தான் என்றும் அவன் வாயாலே அறிந்து கொண்டவளின் கன்னி மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து போக...

என்றுமில்லா வாஞ்சையுடன் இன்னும் இன்னும் கணவனை ஒட்டி அமர்ந்து, அவன் அடர்கேசத்தில் தன் பிஞ்சு விரல்களை நுழைத்தவள், மசாஜ் செய்வதற்கென்றே ஏதும் படிப்பு படித்திருப்பாளோ???

பல மணித்துளிகள் கடந்தும் கொஞ்சமும் அசராது அத்துணை இதமாய் கணவனின் தேவையை நிறைவேற்றி அவன் சோர்வைப் போக்கியவள், அவன் தலைவலி என்று கூறியது நினைவில் வரவும், "ராப்பகலா ரெஸ்ட்டே இல்லாம வேலை பாத்தா இப்படித்தான் தலைவலி எல்லாம் வரும்" என்றும் சொல்லிக் கொண்டே எட்டி அங்கிருந்த தைல பாட்டிலையும் எடுக்க முயற்சி செய்தாள்.

அவளது முயற்சியில் அவளின் கார்மேகக் கூந்தல் சிவனின் சிகையில் இருந்து கங்கை பாய்வது போல் சட்டென்று சரிந்து ஆணவன் முகத்தில் வந்து படற, அக்கூந்தல் காட்டின் வாசம் அவளவனை அதற்கு மேல் உறங்க விடாது தட்டி எழுப்பியது.

அப்பொழுது தான் குளித்து விட்டு வந்ததால் லேசான ஈரப்பதம் கொண்டு சீயக்காயின் நறுமணத்தோடு தன் முகம் தீண்டிய மங்கையின் கூந்தல் வாசத்திலே அவளை உணர்ந்து கொண்டவன் போல் லேசாக கண்களை மலர்த்திப் பார்த்தவனோ, "ராஹி நீயா? நான் மாம்னு நினைச்சேன்" என்று இன்பமாய் அதிர்ந்தான் ஆதி.

கணவனின் கேள்விக்கு அவளும், "இல்லிங்க நீங்க தூக்கத்துல தலைவலின்னு சொல்லிட்டிருந்தீங்களா அதான் நான்" என்று தைல பாட்டிலைத் தூக்கிக் காட்டியவளின் கண்களில் இத்துணை தினங்கள் அவன் கண்டிராத ஒரு புதுமையான மொழி அகம் (ஆணவம்) கொண்ட ஆணை அடித்து வீழ்த்தி அவன் அகம் கொய்யும் வேலையை செவ்வனே செய்தது.

இத்துணை தினங்களில் எத்துணையோ தரம் ஏதாவது சாக்கிட்டு அவளை மணிக்கணக்கில் கூட தன் அருகாமையிலே வைத்திருக்கிறான் தான். ஆனால் அப்பொழுதெல்லாம் கடுப்பின் உச்சியிலோ, இல்லை கடமையாக மட்டுமோ உணர்ந்த நிமிடங்கள் எல்லாம் இக்கணம் பெண்ணின் நயனங்கள் அவளையும் அறியாது அவன் உள்ளத்துக்குக் கடத்திய நேசம் எனும் புது மொழியில் பேசும் மொழியற்றுப் போனவனோ, சட்டென்று அவள் மடியில் தலை வைத்துப் படுத்து, "தாங்க்ஸ் ஹனி" என்று அவள் இடையோடு அணைத்துக் கொண்டான் ஆதி.

திருமணம் முடிந்து இத்துணை தினங்களில் ஆதியின் நெருக்கத்தை தவிர்க்க முடியாமலும், மதிக்காகவும், அவனைத் தன் கணவன் என்ற வகையில் ஏற்றுக் கொண்ட பெண்ணுள்ளம், ஆடவனின் இன்றைய செயல்களில் இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து மேலும் மேலும் அவனோடு ஒன்ற ஆசை கொண்டது போல், "ரொம்ப தலை வலிக்குதாங்க? ஏன் ஆதி சார் ரெஸ்ட்டே இல்லாம வேலை பாத்து இப்டி உடம்ப கெடுத்துக்கறீங்க?. ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா வேலை பாத்தா என்னவாம்?" என்று முதன் முதலில் மனைவி என்ற அக்கறை மேலோங்கியவளாய் உரிமைக் குரலில் கடிந்தவள் அவன் பிடரி முடியையும் மென்மையாகக் கோதிக் கொடுக்க...

மனைவியின் அந்தக் கடிதலில் பல கோடிப் பூக்கள் கொண்டு மேனி வருடியதைப் போல் புல்லரித்துப் போனவனும், "இல்லை ஹனிமா இது முக்கியமான பிராஜக்ட். என்னோட ரொம்ப நாள் கனவுன்னு கூட சொல்லலாம். அதான் ரெஸ்ட் பத்திலாம் யோசிக்கவே இல்லை. இனிமேல் நீ சொல்ற போல கரெக்ட் டைமுக்கு எல்லாம் செய்யறேன். நோ கோபம் ஹனி" என்று பயப்படுவது போன்ற பாவத்தோடு அவள் மடியில் இருந்து லேசாக தலையைத் தூக்கியவன் அவளின் உரிமைக் குரலுக்கு சளைக்காத குரலிலே சமாதானம் சொன்னான் அவள் கணவன்.

ஆதியின் அந்த பாவத்தில் அடக்க முடியாத புன்னகை அரும்பினாலும்
அவன் பதிலில் திருப்தி அடையாதவள், "இல்ல நீங்க இனிமேல் இந்த அளவுக்கு ஓய்வில்லாம வேலை பாக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க" என்றும்
சிணுங்களாகக் கையை நீட்ட...

"என்ன ஹனி இது சின்னப்புள்ள மாதிரி" என்று இதழ் விரிந்த புன்னகையோடு கேட்டாலும், அவள் குரலில் இருந்த அக்கறையில் தயங்காது அவள் கரத்தில் தன் கரத்தை வைத்தணும், "அப்போ நீயும் இனிமேல் என் கூட டெய்லி ஆபிஸ்கு வர்றேன்னு சொல்லு தியா நீ இல்லாம அங்க வேலையே ஓடலடி" என்று குறைப்பட்டுக் கொண்டவனின் விழிகளோ, 'காலம் முழுதும் நீ என்னுடன் வேண்டுமடி' என்று நேசக்கணைகளையே அவளை நோக்கி வீசியது.

தற்சமயம் அவர்களுக்குள் இருக்கும் உரையாடலும், நெருக்கமும் அவர்களின் முந்தைய நிகழ்வுகள் எதையும் மாற்றி விட வில்லையானாலும் பெண்ணவளின் ஆழி மனதுக்குள் முன்பு தன் ஆத்திரத்தில் உண்டான பூசல்களை எல்லாம் பழையவையாக ஒதுக்கி, மிக அழகானதொரு மாற்றத்தை விதைக்கும் ஆரம்ப வித்தாய் இருந்தது ஆணவனின் இன்றைய செய்கை.


தொடர்ந்து கீழே வாசிக்கவும்
 
Messages
45
Reaction score
5
Points
8
கணவன் கண்ணால் பேசிய காதல் மொழியைப் புரியா விட்டாலும் ஆணவனின் புதிதான செல்ல விளிப்பிலே சில்லென்ற பனிப்பொழிவில் நனைந்து விட்டு வந்தவளோ, "ம்ம்ம் சரிங்க. நாளையிலிருந்து ஆபிஸ்கு வர்றேன்ங்க" என்று தலையை ஆட்டி காற்றுக் கூடக் கேளாது சொன்னவளின் குரலை அந்தக் காற்றின் தாலாட்டல் போல் சுகமாய் கேட்டு ரசித்தவன் திடீரென்று ஏதோ தோன்றியவனாய், "ஹேய் ஹேய் ஹனி கேக்க மறந்துட்டேன். நீ இப்போ ஓகே வா?. டேப்லெட் போட்டியா?. உனக்கு ஸ்டொமக் பெயின் எதுவும் இல்லதானே?" என்றும் வேகமாக வினவியவன் தன் தலையை ஒட்டியிருந்த பெண்ணவளின் ஆலிழை வயிற்றையும் புடவைக்கு மேலாலே லேசாகத் தடவ...

ஆணவனின் அந்தச் செயலில் அதிர்ந்து விழித்தவளோ...
"அ அ அதெல்லாம் இ இ இல்லிங்க. ஐம் ஐம் ஓகே" என்று திணறியபடியே அவன் அடர்சிகையை அழுந்தப் பற்றி தன்னை நிலைப்படுத்த முயன்றாள் பாவை.

அவள் பிடியின் அழுத்தத்தில் அவனோ, "ஆ வலிக்குதுடி" என்று கத்த, அதில் தன்னிலை அடைந்தவள் "அய்யோ சாரி சாரிங்க. சாரி ஆதிசார்" என்று பதறியவள் தன் பிடியை தளர்த்தி அவன் கேசத்தை மெல்ல வருடிக் கொடுத்தாள்.

அவள் பதற்றத்தில் அவளை நிமிர்ந்து பார்த்தவனோ மஞ்சளின் மினுமினுப்போடு சற்று முன்னர் அவன் செய்கையால் விளைந்த திகைப்பில் நாட்டியமாடும் நயனங்களையும் கண்டு ஏகத்துக்கும் கிறங்கியவனின் தலைவலி எல்லாம் பறந்தோடிப் போக, இன்னும் அவளை நன்கு பார்க்கும் படி மேலும் வாகாய் அவள் மடியில் பொருந்திக் கொண்டவனோ...

"ஹனி இது இது என்ன?" என்று கேட்டான். அவள் முகத்தின் முன்னே விரலால் வட்டம் போட்டுக் காட்டி.

அத்துணை நேரம் அவன் கேசத்திலே இருந்த கண்கள் கணவனின் கேள்வியில் "எது?" என்ற எதிர் கேள்வியோடு அவன் முகத்திற்குப் பயணித்து ஆணவனின் விழிகளை சந்தித்த நொடி அவன் பார்வை வீச்சைத் தாங்காது மீண்டும் அவள் விழிகளோ தரை நோக்கிக் கொள்ள, அவள் வதனமோ மென்மேலும் நாணச் சிவப்பைப் பூசிக் கொண்டது.

இத்துணை தினங்களில் அவள் தன்னருகினில் இருந்த பொழுதெல்லாம் கண்டிராத புது மாதிரியான வெட்கச் சிவப்பை நிமிடங்கள் பல ஆழ்ந்து ரசித்தவன்...

"ஹனி இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க. உன் கண்ணு இப்டி படபடன்னு அடிச்சிக்கிறது பேர்ட்ஸ் விங் பண்ற மாறி கியூட்டா இருக்கு. அப்றம் உன்னோட சின் அது எப்டி ஹனி சட்டுனு பிங்க் கலர்ல மாறிடுச்சு?" என்று கேட்டப்படியே அவள் கன்னங்களையும் மிருதுவாகத் தடவியவன்... "கிரீம் கூடத் தடவல நீ ஆனா எப்டி இவ்ளோ பிங்க்கா இருக்கு? அன்பிலீவபில்" என்றும் தன் உடமையானவளிடம் தன் உரிமைச் செயல்களால் வந்த அழகிய மாற்றத்தை சிலாகித்துக் கூறியவனின் பேச்சில் அவளோ மேலும் மேலும் வெட்கம் கொண்டு அவனை பித்தம் கொள்ளச் செய்தாலும், அவள் விழிகள் என்னவோ தழைந்தே இருக்க, அவள் கரங்களும் கூட அவன் சிகையை இறுக்கிப் பிடித்தபடியே இருந்தது.

மனைவியின் இந்தச் சிவப்பிற்கு தன் பார்வை தான் காரணமோ என்று சந்தேகம் கொண்டவனுக்கு அவள் தன் முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும் என்றும் பேராவல் கிளம்ப, தன் பார்வையை மாற்றினால் தான் அவள் தன்னைப் பார்ப்பாள் என்றுணர்ந்து மெல்ல அவள் வதனத்தில் நின்றும் விழிகளை நகர்த்த, இப்பொழுது அவன் விழிகளை நிறைத்தது என்னவோ பெண்ணவளின் மார்பு தொட்டு இறங்கி தன் மார்பு வரை படர்ந்திருந்த மனைவியின் கருப்பருவிக்காடுதான்.

பரந்து விரிந்திருந்த கார்மேக சிகையில் ஒன்றிரண்டு ஆணவனின் முகத்திலும் படர்ந்திருக்க, அதனின் இயற்கை வாசத்தை நுகர்ந்தபடியே, "ஆமா ரொம்ப நாளா கேக்கணும்னு நினைச்சேன். நீ என்ன சாம்பு யூஸ் பண்ற ஹனி? உன் ஹேர் ரொம்ப லெந்தி. ப்ளஸ் கார்ஜியஸ் ஸ்மெல்லும் கூட... ம்ம்ம்ம்ம்ம்... சான்ஸே இல்ல" என்றும் தன் முகம் மறைத்திருந்த கூந்தல் வாசத்தை உள்ளிழுத்தபடியே கேட்டவனுக்கு நிமிடத்திற்கு நிமிடம் இவள் என்னவள் என்ற உரிமையும், கர்வமும் போட்டி போட்டுக் கிளம்பியது.

கணவன் கேள்வியில் சற்றே இயல்பாகியவளும் "அது சாம்பு இல்லங்க சீகக்காய்" என்றவள், "அம்மாவே அவங்க கையால எல்லாம் அளவா எடுத்து காயவச்சு நம்ம பாக்டரில கொடுத்து அரைச்சு கொண்டு வந்தது. நேச்சுர் ப்ரோடக்ட். சாம்பு, கண்டிஷனர விட ஹேர்க்கு இது தாங்க பெஸ்ட்" என்றும் சேர்த்துச் சொன்னவளுக்கு அன்னை என்றவுடன் வீட்டினரின் ஞாபகமும் வர...

"அம்மா சின்ன புள்ளையிலிருந்தே இது தான் போடணும்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்காங்க. அதேபோல முகத்துக்கும் கடலமாவு, உடம்புக்கு ரோஜா ஆயில் கலந்த பயத்தம் பருப்புப் பொடி" என்று மேலும் ஏதேதோ வீட்டினரைப் பற்றி பேசிக் கொண்டே செல்ல, அவள் பேச்சிற்குத் தக்கபடி அவளின் வட்ட வடிவ முகமும் பலவித பாவனைகளைக் காட்டியது.

அவள் விழியின் ஒளிர்வில் இருந்தே அவள் தன் குடும்பத்தினரின் மேல் வைத்த அன்பை உணர்ந்து கொண்டவனும், "நீ உன் வீட்ட ரொம்ப மிஸ் பண்றியா ராஹி?" என்றும் கேட்க...

அதில் ஒரு நொடித் தயங்கி விட்டுத் தொடர்ந்தவளும், "ம்ம்ம் ரொம்ப ரொம்ப ஆதி சார். யுவிப்பாவோட நெற்றி முத்தம், விழிமாவோட அதட்டல், அப்பத்தாவோட செல்லம், சித்தூ நவீனோட வாரல், சுஜாக்கா, அவளோட குழந்த, அப்றம் குட்டி மீனு. எல்லாரையுமே ரொம்ப மிஸ் பண்றேன்" என்றும் சற்று உள்ளே போன குரலில் பெரிய பட்டியலே போட்டவளை ஆச்சரியமாக நோக்கியவனும்...

"எல்லாரும் ஓகே ராஹி. ஆனா இந்த மீனு யாரு? உன் அக்காவோட இன்னொரு குழந்தையா?" என்று புரியாது கேட்டான் ஆதி.

அதில், "குழந்தையா... அய்யோ இல்லிங்க" என்று முத்துப் பற்கள் மின்னச் சிரித்தவளும், "அது எங்க வீட்டு பூனைக்குட்டிங்க. பியூர் வைட்ல ரொம்ப கியூட்டா இருக்கும். என்ன பாத்த உடனே என் கால்கிட்ட வந்து நின்னு என்ன தூக்க சொல்லி சுரண்டும் தெரியுமா? அப்போ சின்னப்புள்ளயில மீனுக்கு ஐஸ்க்ரீம் கொடுக்க துரத்துனப்போதான் அத நான் உங்க மேல கொட்டிட்டேன். சாரிங்க" என்றும் என்றோ நடந்த நிகழ்வு இன்று தான் நடந்தது போல் சற்று வருத்தம் கலந்த குரலில் சொன்னவளையே இமைக்காமல் பார்த்திருந்தவனுக்கு, 'என்னப் பொண்ணுடா இவ?. எப்பவோ தெரியாம பண்ணதுக்கு இப்போ சாரி சொல்றாளே? இவளப் போயா இவ்ளோ நாள் நாள் நான் எனிமி மாதிரி ட்ரீட் பண்ணேன்? தப்பு பண்ணிட்டேனே' என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவனின் மனசாட்சியோ, "இவ்ளோ நாளா எனிமின்னா? இப்போ அவள என்னவா நினைக்கிற ஒயிப்பாவா?" என்று கேட்டு அவனுக்கு கிடுக்குப் பிடி போட்டது.

எப்பொழுதும் மனசாட்சியின் கேள்விகளுக்கு தலையை குலுக்கிக் கொள்பவன் இன்றோ, ஒரு மந்தகாசப் புன்னகையுடன், "சோ வாட்? அதுதானே நிஜம். அவ என்னோட ஒயிப்தானே" என்று அதை ஓட ஓட விரட்டிவிட்டு, கையையும் தலையையும் ஆட்டி ஆட்டி,
"ஆனா ஆன்டி அங்கிள் ஆது மாமான்னு இங்கயும் எல்லாரும் ரொம்ப பாசமா இருக்கதால நான் எங்க வீட்டுல இருக்க போல்தான் பீல் பண்றேங்க" என்றும்
அவள் பேசப் பேச மேலும் கீழும், முன்னும் பின்னும், திறந்தும் மூடியும், சுருங்கி விரிந்த சின்னஞ்சிறு அதரங்களையும் படுத்தவாக்கிலே விழி அசைக்காது ரசித்திருந்தவனின் பார்வை இப்பொழுது கணவன் பார்வையாக மாற...

"சரி ஹேர்கு சீகிக்கா பேஸ்ட். பேஸ்க்கு பீனட் ப்ளர். ஆனா இந்த லிப்ஸ்கு என்ன போடுவன்னு நீ சொல்லவே இல்லியே ஹனி?" என்று திடும்மென்று கேட்டவன் "ஹனி மாதிரி அன்னிக்கு அவ்ளோ ஸ்வீட்டா இருந்ததே உன் லிப்ஸ். அதான் கேட்டேன்" என்றும் அன்றைய நினைவில் நாவால் தன்னிதழ்களை வருடிக் கொள்ள, அவன் பேச்சில் அதிர்ந்து பேச்சை நிறுத்தியவளுக்கும் அன்றைய முதல் முதல் இதழ் முத்தத்தின் நினைவுகள் நெஞ்சிலாடி அவளை நிலை குழையச் செய்தது.

ஆணவனின் திடீர் பேச்சில் மட்டுமல்லாது அவன் செயலிலும் விக்கித்துப் போனவளோ தன் இதழ்களையும் மெல்ல துடைத்துக் கொண்டவள் பேசும் மொழி மறந்து அமர்ந்திருக்க, அவளைச் சொடுக்கிட்டு அழைத்தவனோ...

"அன்னிக்கு பாதில நின்னு போன
கிஸ் ரிகர்சல இப்போ கண்டினியூ பண்ணலாமா ஹனி?" என்று அவள் காதோரம் கிசுகிசுத்தவன் முத்தங்களின் வழியே காதல் யுத்தங்களைப் புரிய விளைந்தானோ???

அன்று அத்துணை கலக்கத்தை கொடுத்த ஒத்திகை என்ற வார்த்தை இன்றோ காதலின் மறை பொருளாய் மாறிப் போக, அவன் மேல் வருத்தங்கள் இருந்த பொழுதே அவன் நெருக்கத்தை மறுக்க இயலாதவள், இன்றோ அவன் பார்வையில், பேச்சில், செயலில் உருகிக் கரைந்து கொண்டு இருந்தவளுக்கு, "இல்ல, வேணா...." என்று தொடங்கிய வார்த்தைகள், "சால் வீ ஸ்டார்ட் தியா" என்ற ஆணின் வார்த்தையிலே அமிழ்ந்து போக அவள் தலை அவளையும் கேளாது அசைந்து அவனுக்கு வேண்டிய பதிலைக் கொடுத்தது.

அதைப் பார்த்து இதழ்களுக்குள்ளே
ஒரு மென் புன்னகையை உதிர்த்துக் கொண்டவனும் இன்னமும் படுத்தவாக்கிலே அவள் தலையின் பின்னே தன் இடக் கரத்தைக் கொடுத்து தன் முகம் நோக்கி அவள் முகத்தை இழுத்து வந்தவன்...

"இன்னிக்கு ரிகர்சல்ல எல்லாமே பிராக்டிக்கல் கிஸ் தான் ஓகே வா ஹனி?" என்றும் கேட்க...

அவனுக்கு பதில் கூற அவனவளோ இவ்வுலகில் இருந்தால் தானே.

அன்று அவனை அந்நியனாய் எண்ணிய பொழுதே அவன் கரத்தில் உருகிக் கரைந்தவள், இன்று இக்கணம் அவளையும் அறியாது தன்னுள்ளம் புகுந்தவனின் காந்த விழிகளுக்குள் கட்டுண்டு போனவளாய், 'என்னமும் செய்து கொள்' என்கிற ரீதியில் இமை மூடிக் காத்திருக்க, அவளின் இன்றைய தயாள அழகில், பெண்ணவள் சொல்லாது கொடுத்த உரிமையில் தன் வசம் இழந்தவனோ தன் முதல் நேச முத்தத்தை அவளின் தடித்த இமைகளின் மேல் மென்மையாகப் பதிக்க, அதில் மேனி சிலிர்த்து அடங்கினாள் பாவை.

அன்று உணர்ச்சிகளின் பிடியில் ஆணவன் வன்மையாகக் கொடுத்த இதழ் முத்தத்திற்குக் கூட அசராது நின்றவள், இன்று இமை மீதூர்ந்த அவன் இதழ்களின் உஷ்ணத்திற்கே துடித்தடங்கவும் அதைப் பார்த்தவனுக்கோ ஊனும், உள்ளமும் உன்மத்தம் கொண்டது.

அவளோ இனம் அறியா மாய பிடியில் இருக்க, அவனோ அவள் அருகினில் தன்னையே இழக்க, இருவருமே தங்களுக்கிடையில் இருக்கும் பிரிவுத் தழையையும் அகற்ற மறந்தவர்கள், இக்கணம் தங்களுக்குள் பூத்திருக்கும் புதுவித உணர்வுக்கும் பெயர் சூட்ட முயலாமலே முன்னேற முயன்றது தான் அவர்கள் செய்த தவறோ...

பெண்ணவளின் இன்றைய குழைவில் சித்தம் கலங்கிப் போனவனும் அவளை மேலும் மேலும் துவள வைக்கும் முயற்சியாய், கன்னம் தாங்கியிருந்த விரல்களால் நுனிமூக்கையும் பிடித்து ஆட்டியவன், "ரொம்ப சார்ப் நோஸ் ஹனி உனக்கு. அப்டியே நைப் போல இருக்கு" என்று மூக்கின் மீதும் அன்று கொடுக்காது விட்ட முத்தத்தைக் கொடுத்தவன் தொடர்ந்து இதழ் வடிவையும் விரல்களால் மெல்ல அளக்க, அதில் எச்சில் கூட்டி விழுங்கினாள் மாது.

மனைவியின் அந்தச் செயலில் லேசாக பிரிந்து மூடிய பெண்ணின் அதரங்கள் அன்று போலவே இன்றும் ஆணவனின் காதல் நரம்பு மொத்தம் மீட்டி எழுப்பியதில் இன்னும் கொஞ்சம் அவளை தன்னை நோக்கி இழுத்து தங்களுக்குள் எஞ்சியிருந்த சிறு இடைவெளியையும் குறைத்தவன், "யூ கில் மீ தியா" என்று சிறிதும் பொறுமையின்றி பெண்ணவளின் தடித்த இதழ்களை மொத்தம் தன் வசப்படுத்திக் கொள்ள...

கணவனின் அந்த வேகத்தில் அவன் மேல் நிலை குழைந்து விழுந்தவளோ மூச்சுக்கு மட்டுமே கிட்டிய இடைவெளியில், "ஆதீ..." என்ற கணவனின் நாமத்தை மும்மொழிந்து ஆதியோடு அந்தமாய் மாறியவள், ஆணவனின் இதழ் வதை தாளாது அவன் ஆம்கட்டின் கழுத்துப் பகுதியை மார்பு ரோமங்களோடு அழுத்தமாகப் பற்றி இழுத்த சமயம் அவர்களின் அறைக்கதவோ வேகமாகத் தட்டப்பட்டது.தொடரும்.
 
Last edited:
Top